அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.