தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.
கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அரவிந்த் சந்தோஷ், நவீன், அரிஹரன், தீபன்குமார் ஆகியோர் மது போதையில் இருந்தனர்."ஏன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தீர்கள்' என கவிதா கேட்ட போது, "சும்மா தான்' என கூறி சமாளித்துள்ளனர்.சிறிது நேரத்தில் சிவானந்தமும் மது குடித்தார். போதை ஏறியதும், குளிர்பானத்தில் மதுவை கலந்து பெண்ணுக்கு கொடுத்தனர். அவர் மறுத்தும் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். போதை ஏறியதும், வாலிபர்கள் அனைவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
இரவு முழுவதும் ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததால், சுய நினைவு இழந்த பெண்ணை, பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் சரியாக நினைவு திரும்பவில்லை. பெண்ணின் தாய் சிவானந்தத்திடம் கேட்ட போது, "என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே நினைவு திரும்பிய பெண், "ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க' என முனகியதும், தாய் அதிர்ச்சியடைந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். டாக்டர்கள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர் விஷம் குடிப்பு:பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் . தலைமறைவாக இருந்த மாணவர் நவீன், விஷம் குடித்தது தற்போது தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் நவீன், வகுப்பில் இருந்து நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அங்கு ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற மாணவர்கள் அவரை, கட்டாங்கொளத்தூரில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்