மனமாசுகள் - அவற்ற்றின் விளைவுகளும் மாசிலனாதலும்.திருக;கு; றளில் ஒரு கணN;N; ணாட்ட்டம ; இர. பாஸ்க்கரன்,;, மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுலநீர பிற. (குறள்-34) ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருப்பது தான் அறம்: மற்றனவெல்லாம் ஆடம்பர வகையைச் சேர்ந்தவை. இறைவன் புகழைப் பாடிப் பரவும் போது, மாணிக்கவாசகர், இறைவனை “மாசற்ற சோதி” என்றார். அவர் இறைவனின் மாசற்ற தன்மையை நினைந்து அவ்வாறு பாடுகிறார். வள்ளுவர் மனிதனுக்கு உணர்த்தியது இருபெரு நெறிகள் - இல்லறமும் துறவறமும். இவ்வுலகில் பெரும்பாலோர் மேற்கொள்வது இல்வாழ்க்கையே. அது நல்லறமாகும் போது, மனிதனும் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் அவர். அது அப்போது நல்லறமாகிறது? ஒருவன் மணவாழ்க்கையை மேற்கொண்டு நன்மக்களைப் பெற்று, தன்னைச் சார்ந்தோருக்கு நல்ல துணையாக இருந்து, தானும் அறவாழ்வு வாழ்ந்து, அவரையும் அறநெறியில் ஒழுகுமாறு உதவும் போது தான் அது நல்லறமாகிறது. அவன் தன் வாழ்வில் எல்லாரிடமும் அன்பைப் பெருக்கி, வந்த விருந்தினரைப்பேணி, அடக்கம், ஒழுக்கம், பொறையுடைமை, ஈகை, ஒப்புரவு போன்ற உயர் பண்புகளைப் போற்றி வாழ்ந்து புகழ் பெறும் போது அது நல்லறமாகிறது. அதுபோல, மனிதன் தன் வாழ்க்கையில், ஒரு காலகட்டத்தில் நிலையாமையை நன்குணர்ந்து பற்றற்றானாகிய இறைவனையே பற்றி பற்றுகளை அறவே ஒழித்து, ஐம்புலன்களை மனவலிமையால் முழுமையாக அடக்கி, தக்க நோன்புகள் நோற்று, விரதங்கள் காத்து, தவநெறியில் நின்று, மெய்யுணர்வு பெற்று, மற்றீண்டு வாராநெறியாகிய வீட்டுலகை முயன்று பெறுவது தான் மற்றைய துறவறமாகிய நல்லறம். வள்ளுவரின் கருத்துப்படி துறவறத்தைவிட இல்லறம் சிறந்தது என்பதை ஒருசில இடங்களில் வெளிப்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் முயல்வாருள் எல்லாம் தலை (குறள்-47) இருபெருநெறிகளுக்கும் மனத்தின்கண் மாசிலனாதல் என்பது ஒரு பொது நியதி. இவ்விரு வழிகளிலும் முயல்வாருக்குத் தங்கள் மனத்தில் பலகாரணங்களால் வந்து சாரும் மாசுக்கள் எவை, அவற்றின் விளைவுகள் யாவை, மாசிலனாதற்கு என்னென்ன வழிகள் என்பதை வள்ளுவர் கண்ணோட்டத்தின்படி ஆராய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்ற வள்ளுவர், இககருத்துக்கு விளக்கம் கூறும் வகையில், அடுத்த குறளில் முக்கியமான மாசுகளைப்பற்றிக் கூறுகிறார். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். (குறள்-35) இவை பற்றி இப்போது நோக்குவோம். மாசு – விளைவுகள் - அவை அகலும ; வழிகள் அழுக்காறு (பிறன் ஆக்கம் பொறாமை) அழுக்காறுடையார்க்கு ஆக்கம் இல்லை (கு-163) இருமையிலும் துன்பம் வரும் (குறள்-164) அழுக்காறு உடையார்க்கு பகைவர் வேண்டா: கேடு பயத்தற்கு அது ஒன்றே போதும் (குறள்-165) ஒருவன் பிறருக்கு கொடுப்பதைக் கண்டு அழுக்கறுப்பானும் அவன் சுற்றத்தாரும் உடையும் உணவும் இன்றிக் கெடுவர். (குறள்-166) அவனைத் திருமகளும் பொறாது தன் தவ்வையைக் காட்டி நீங்கும் (குறள்-167) அழுக்காறாகிய ஒப்பில்லாதபாவி, இம்மையுள் செல்வத்தைக் கெடுத்து மறுமையுள் நரகத்தில் செலுத்திவிடும் (குறள்-168) அழுக்க்காறாகிய மாசுஅகல வழி அழுக்காறாமையை ஒரு ஒழுக்கநெறியாகக் கொண்டு உயிரினும் மேலாக ஓம்புக. (குறள்-161) அவா (மனம் புலன்கள் மேல் சென்று பலவற்றை அடைய நினைக்கும் ஆசை) பிறவிக்கு வித்து (குறள் - 361) துறவு மேற்கொண்ட ஒருவனையும் வஞ்சித்து பிறவியில் தள்ளிவிடும் (குறள்-366) அவா இருப்பின் துன்பங்கள் மேலும் மேலும் வரும் (குறள்-368) அவாவாகிய மாசு அகல வழி பற்றுவிடற்கு பற்றற்றானாகிய இறைவன் பற்றினைப் பற்றுக (குறள்-350) வெகுளி (சினம்) தீய பிறத்தல் அதனால் வரும் (குறள்-303) ஒருவனுடைய நகையையும் உவகையையும் அழிக்கும் (குறள்-304) தன்னiயே அழிக்கும் (குறள்-305) சேர்ந்தாரைச் கொல்லி இனமென்னும் மெப்புனையைச் சுடும் (குறள்-306) வெகுளி காக்க்க வள்ளு;ளுவர் அறிவுரை கொடுந்துன்பத்தைச் செய்தவன் மீதும் பொறை காத்துக் கோபம் கொள்ளாமை நன்று (குறள் -308) இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? (குறள்-987) இன்ன்னாச்n;சொல் (இனிமையற்ற்ற சொல்) இன்சொல் என்பது நெஞ்சில் ஈரம் கலந்து வஞ்சனையற்ற சொற்களாக இருக்க வேண்டும். (குறள் -91) வடநூலோர் கூறும் அறுவகைக் குற்ற்றங்க்கள ; வடநூலோர் அறுவகை மனக்குற்றங்களைக் கூறுவர், அவை காமம் (பொருள் மதுP இன்பம்) குரோதம ; (வெகுளி) லோபம் (இவறல்) மோகம் (தீவிர, காம மயக்கம்) மதம் (செருககு; ), மாறச்ச் ரியம் (பொறாமை). திருவள்ளுவர் தமது நூலில ; இவையல்லாத பிறமாசுகளையும் குறிப்பிடுகிறார். • பிறன் மனை விழைதல் (இல்லறத்தான் சிற்றின்பம் நுகரும் ஆசையினால் பிறன் மனை விழைதல்:இது கேடுண்டுபண்ணும் என்பது!). எளிதென பிறனில் விழைபவன் எப்nhபழுதும் அழியாத பழியை அடைவான் (குறள்- 145) பிறன் மனைவியைச் சேர்வோனிடம் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு குற்றங்களும் நீங்காமல் நிற்கும் (குறள்-146) அறநெறி ஆகாது (குறள்-147) • இமம்ம் hசு அகல அறிவுரை பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனாகும் தலை சிறந்த ஒழுக்கமாகும் என்று அறிவுரையாகச் சொன்னார். (குறள்-148) • வரைவில் மகளிர் விழைதல ; வரைவில் மகளிர் மென்தோள்கள் பூரியர்கள் அழுந்தும் அளறு (குறள்.919) • லோபம் அலல்ல் து இவறல ; (கருமிதத்த் னம); குற்றத்தில் பெரிய குற்றம் (குறள்-438) ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் நிலக்குப் பொறை (குறள்-1003) • இம்ம்மாசகல அறிவுரை கருமித்தனத்தால் மாணாப் பிறப்பு வரும். (குறள்-1002) ஈத்துவக்கும் இன்பம்தான் இல்லறத்தில் நல்லறமென்றார். (குறள்-228) • மோகம் (நீக்க இயலா தீவிர ஆசை) இது மயக்கத்தின்பாற்பாடும். பிறவி நோயுண்டாகும், (குறள்-380) • மதம் (செருக்கு) செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருகக் ம ; பெருமிதம ; நர்P தது; , (குறள-; 431) செருக்கிருந்தால் பெருமிகதம் இல்லையென்றார் யான் எனது என்னு;னும் செருக்க்கறுபப்ப் hன ; வானோர்க்கு;கு உயர்ந்த உலகம் புகும். (குறள்-346) செருக்குடையோன் உயர்ந்த உலகம் புகமாட்டான் என்று எதிர்மறையாக உணர்த்துகிறது. • போலித்து;துறவிகளின் மனமாசுகள் துறவறம் பூண்டவர்களில் சிலர், மன வலிமையின்மையால், மனமாசுகளோடு போலித்துறவிகளாக உலகில் உலவுகிறார்கள். மனத்தின்கண் மாசுகள் பல வைத்துக் கொண்டு மாட்சிமைப்பட்டார் போலத் தம்மைக் காட்டிகn; காளவ் தற்காகப ; புனித தர்P தத் ஙக் ளில ; நீராடி, தாம் அவவ் hறற் ல் மறைந்தொழுகுவாரே, போலித் துறவறம் பூண்டோர் (குறள்-278). ஆகாதவை என்று உயர்ந்தோர் பழித்தனவற்றை நீக்கிவிடின் துறவிகட்கு மொட்டையடித்தலும் சடைவளர்த்தலுமாகிய வெளிவேடம் தேவையில்லை. (குறள்-280) வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். (குறள்-271) • இனி வள்ளு;ளுவர் கருத்து;துப்ப்படி மற்i;றைய மாசுகளையும் அவற்ற்றின் விளைவுகளையும் பார்ப்N;போம் அன்பிலதனை அறம் காயும். (குறள்-77) செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை. (குறள்-110) நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்லசெயின் கெடுவல் யான் என்பதறிக (குறள்-116) அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் (குறள்-121) ஒழுக்கமின்மை இழிந்த பிறப்பாய் விடும் (குறள்-133) இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி (குறள்-137) ஒழுக்கமிலான் கண் உயர்வு இல்லை (குறள்-135) தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் (குறள்-138) (வெஃகுதல்) நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் (குறள்-171) அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் வெஃகின் கெட்டபழிவான் (குறள்-176) எண்ணாது வெஃகின் - அழிவைத்தரும் (குறள்-180) • தவீவீ pனை அஞ்ச்சாமை மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள்-204) இலனென்று தீயவை செய்யின் - இலனாகும் மற்றும் பெயர்த்து (குறள்-205) தீயவை செய்தார் கெடுதல் - நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று (குறள்-208) மருங்கோடித் தீவினை செய்வான் எனின் - அருங்கேடன் என்பது அறிக (குறள்-210) • ஈத்து;துவக்கு;கும் இன்ப்பம் அறியாமை அத்தகையோர் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர் (குறள்-228) • அருளில்ல்லாமை அருளில்லார் வீட்டுலகை எய்தார் (குறள்-247) அருளில்லா நெஞ்சினர் இருள்சேர்ந்த இன்னா உலகம் புகுவார் (கு-243) • பொய்ம்i;மை தன்நெஞ்சு அறிந்து பொய் கூறின் “பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” (குறள்-293) • இகல் கூடி வாழாத்தன்மை - இது பகைமை வளர மூலகாரணம் இகல் என்பது ஓர் எவ்வநோய் - துன்பம் தரும்நோய் (குறள்-853) • மடி மடியென்னும் மாசுஊர குடியென்னும் குன்றாவிளக்கம் மாய்ந்து கெடும் (குறள்-601) நெடுநீர், மறவி, மடி, துயில், நான்கும், கெடுநீரார் காமக்கலன்கள் (குறள்-605) இனி மாசிலனாவதற்கு;கு துணை புரியும் வழிகள் பற்ற்றி நோக்கு;குவோம்.;. ஆன்றகுடிப்பிறத்தல் மனத்துக்கண் மாசிலனாதல் தன்முயற்சி இனநலம் இறைவழிபாடு ஆன்ற்ற குடிப்ப்பிறத்த்தல் ஒரு குழந்தை தன் பெற்றோரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. குடிப்பிறப்பு என்பது இயல்பாக அமைகிறது என்பர் ஒரு சாரர். விதியின் வசத்தால் அமைகிறது என்பர் மற்றொரு சாரார். இது எப்படி இருப்பினும், ஒரு குழந்தையின் அறிவுக் கூர்மை, ஒழுக்கம் ஆகியவற்றிற்கும் ஆன்ற குடிப்பிறப்பு ஒரு நல்ல ஆரம்பம் என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளத் தக்கதாகவே இருக்கிறது. சிற்சில சமயத்தில், நல்ல குடும்பத்தில் பிறந்தோரும் நெடுநீர், மறவி, மடி, துயில் போன்ற குணங்களை மேற்கொள்வதனால் வாழ்க்கையில் உயர்நிலை அடையாமல் போய்விடுகின்றனர். நற்குடியில் பிறந்த ஒரு சிலர் செம்மை நலம் அறியாத சிதடரொடு சேர்வதனால் நெறியல்லா நெறி பற்றி தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வதும் உண்டு. வள்ளுவர், ஆன்ற குடிச்சிறப்பைப் பற்றி குடிமை அதிகாரத்தில் விளக்கமாகச் சொல்கிறார். நற்குடியில் பிறந்தவர்களிடம் அன்புடைமை, நடுவு நிலைமை, நாணம், ஒழுக்கம், வாய்மை, ஈகை, இன்சொல்கூறல், பிறர் இகழாமை. வஞ்சனையின்மை ஆகிய நற்குணங்கள் அவர்களுக்கே உரியனவாகும் என்று எடுத்துரைக்கிறார். அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. (குறள்-992) அன்புள்ளவனாயிருப்பதும், சிறந்த குடியிலே பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும், பண்புடைமை என்று சொல்லப்படும் நல்வழியாகும், ஆன்றகுடிப்பெற்றோர் தன்மகனை ஓர் சான்றோனாக்க வேண்டிய முயற்சிகளை நிச்சயம் மேற்கொள்வர். இதனால், ஆன்றகுடிப்பிறப்பு, வாழ்க்கையில் உயர நினைப்போர்க்கு ஒரு நல்ல ஆரம்பம் என்பது வள்ளுவர் கருத்தாகும். தன் முயற்ச்சி “ஆரா இயற்கையுடைய” மனதை ஒருவன் தன் முயற்சியால் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவும், இதன் விளைவாகிய மாசுகள் நீங்குவதையும், அன்பு படிநிலை வளர்ச்சியால் அருளாக உருவாகுவதையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம். மன அடக்கமின்மையால், புலன்கள் மேல் செல்லும் ஆசையென்னும் மாசு உற்பத்தியாகிறது. இதுதான் துன்பத்தின் தொடக்கம். அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்@ அஃது உண்டேல் தவா அது மேன்மேல் வரும். (குறள்-368) இந்த அவா என்ற ஒரு பெரிய மாசு வேறு பல மாசுகளை உண்டு பண்ணுகிறது. வெகுளி, அழுக்காறு, இன்னாச்சொல், இன்னாச்செயல், பொய், களவு கொலை போன்ற பலமாசுகள் அவாவினால் தொடர்ந்து பிறக்கின்றன. இதனால் மனிதனுக்கு அவை மேலும் அறிவை மறைக்கின்றன. இவற்றால் மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள அன்பு வளரத்தடையாகின்றது. இம்மாசுகள் நீங்க ஒரேவழி நல்லறிவை வளர்த்துக் கொள்ளும் தன்முயற்சியே.
மனத்தை, அது செல்லும் வழியிலே போகவிடாமல் தீமையிலிருந்து நீக்கி, நன்மையினிடம் செலுத்துவது அவனுடைய அறிவாகும். சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள்-422) என்றார் திருவள்ளுவர். இவ்வைம்புலன்களை மேலும் நன்கு அடக்கி ஆளும் நல்லறிவின் உயர்வை மற்றுமொரு குறளில் அழகாகக் கூறுகிறார் அவர். உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர்வித்து. (குறள்-24) அறிவுத்திண்மை என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகள் ஐந்தையும். கண்டபடி புலன்கள் மேற்சென்று மேயாமல், அடக்கிக் காக்க வேண்டும். அங்ஙனம் காப்பவன் உயர்ந்த இடத்திற்கென்று விதைக்கப்பட்ட ஒரு வித்தாவான். இனி, இம்மனத்திண்மையை அடைவது எவ்வாறு என்பது பற்றி வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம். ஒரு குழந்தைக்கு அதன்தாய் முதல் குருவாக இருந்து, அதற்கு உணவு ஊட்டும் போதும், அதை உறங்க வைக்கும் போதும், நாளும் நல்லறிவு புகட்டும் நற்கதைகளைக் கூறுவதால், அவற்றுள் பொதிந்துள்ள அறிவு, ஒழுக்கம் பற்றிய கருத்துக்கள் குழந்தையின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிடுகின்றன. நல்லறிவின் தோற்றத்திற்கு இது ஒரு நல்ல ஆரம்பாக அமைகின்றது. இதைமேலும் வளர்த்துக் கொள்வதற்கு மனிதனின் தன் முயற்சி தேவைப்படுகிறது. பின்னர் கல்வி கற்கும் பருவத்தில், நல்லறிவைத் தூண்டும் நூல்களையே ஊன்றிக் கற்கவேண்டும். அதனால்தான் வள்ளுவர். “கற்க கசடறக் கற்பவை@ கற்றபின் நிற்க அதற்குத்தக” (குறள்-391) என்று கூறினார். ஒழுக்கநெறி நின்று வாழ்ந்து உயர்ந்த நல்லோர் வாழ்க்கை வரலாற்றைக் கருத்தொடு கற்றால், நாமும் அவ்வாறு வாழவேண்டும் என்ற மனஎழுச்சி ஒருவனுக்கு உண்டாகும். கேள்விச் செல்வத்தின் சிறப்பை உணர்த்தும் வகையால், திருவள்ளுவர், “எனைத்தானும் நல்லவை கேட்க@ அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” (குறள்-416) என்றார். ஒருவன் தான் பிறர்வாய்ச்சொற்களை கேட்டவாறே ஏற்காது, தம் அறிவால் ஆராய்ந்து, அதிலுள்ள மெய்ம்மைகளைப் பகுத்தறிந்தே ஏற்கவேண்டும். என்றார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்-423) இவ்வாறு கல்விகேள்விகளால் துலக்கப்பட்டு மனிதனின் இயல்பான அறிவு கூர்மையும் சீர்மையும் அடைகிறது. இத்தகைய நல்லறிவே மனதில் சூழ்ந்து கிடக்கும் மன இருளை நீக்கி, புலன்வழிச் செல்லும் அவாவினை அகற்றும். மனிதனுக்கு, தான் இந்த நல்லறிவை அடையவேண்டும் என்ற தணியாத வேட்கை அவன் மனதில் தோன்ற வேண்டும்@ அதை நாளும் வளர்த்துக் கொள்ளவேண்டும்@ அவன் மனதில் அந்த எண்ணத்தை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும்@ அவன் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருக்க வேண்டும். (குறள்-596) உள்ளற்க உள்ளம் சிறுகுவ என்றார் (குறள்-798). உள்ளியது எய்தல் எளிது மன், மற்றும் தான் உள்ளியது உள்ளப் பெறின். (குறள்-540) நல்ல எண்ணங்களை நாளும் மறவாது நினைக்க என்றார். இவ்வாறே இவ்றதை; திண்மையாக நினைத்து வந்தால் எண்ணியதை எண்ணியாங்கு அடையலாம் (குறள்–666). மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (குறள் -457). மனம் நல்லனவே எண்ணி மனநலத்தால் அறிவழி நிலைக்க, உயிர் ஆக்கம் பெறும். மனம் மனிதனை அறவழியில் செலுத்துவிக்கும். மனம் செம்மைப்பட மனிதன் அடையும் பல மேன்மைகளை நோக்குவோம். மனதில் அன்பு வளர்ந்து தழைக்கின்றது. மனிதன் அன்பை ஆர்வமுடன் வளர்க்க நல்ல நண்பர்களைப் பெறுகிறான் (குறள்-74). இல்லறத்தில் இருக்கும் போது தனதன்பை இல்லத்திற்குவரும் விருந்தினர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்கின்றான். இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்வதற்கே என்ற எண்ணம் (குறள்-81) உருவாகிறது. மேலும் உள்ளத்தில் பிறர் மாட்டு அன்பு செலுத்தும மனநிலை வளர்கின்றது. இதனால், அவனுக்கு இனியவை கூறல் செய்ந்நன்றி அறிதல் போன்ற பண்புகள் வளர்கின்றன. பின் பிறர் விழுமம் துடைக்கும் தூய உள்ளம் பிறக்கின்றது, அன்பின் முதி;ர்ச்சியால் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற (குறள்72) தியாக உள்ளம் உண்டாகிறது. இவ்வன்பு ஊற்று உள்ளத்தில் பெருக்ககெடுக்க “அன்பு ஈன் குழவியான்” அருள் குழந்தையை அவன் பெற்றெடுக்கின்றான் (குறள்-757). இதன் பயனாக அவனுக்குப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தலையாய பண்பு உதயமாகிறது (குறள்-322)@ எவ்வுயிர்க்கும் உறுகண் செய்யா மனமும் (குறள்261), பிறிதின் நோயைத் தந்நோய்போல் போற்றும் நல்லறிவும், (குறள்-315) இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சான்றாண்மைக் குணமும் (குறள்-987) உண்டாகின்றன. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற்கே (குறள்-212) என்ற ஒப்புரவுள்ளமும், ஈதல் இசை பட வாழ்தலே வாழ்வின் குறிக்கோள் என்ற எண்ணமும் பிறக்கின்றது (குறள்-231) மனிதனிடம் தோன்றும் மற்றொரு பெருமாசு செருக்கு ஆகும். யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள்-346) யான் என்று தன் உடலையும், எனது என்ற தன் உடைமைகளையும் கருதி அவற்றின் கண் பற்று வைக்கும் மனச்செருக்கை முற்றக் கெடுப்பவன் வானோர்க்கும் மேலான உயர்ந்த உலகத்தைச் சென்றடைவான் அறியாமையினால் தான் செருக்கு உண்டாகின்றது. செருக்குடையானுக்கு தற்பெருமை, பணிவின்மை, கடுஞ்சொல், பிறரை இகழ்தல், இகல், பகைமை போன்ற பண்பின்மை பாரிக்கும் நோய்கள் வளர்கின்றன. நல்லறிவின் துணைகொண்டு செருக்காகிய மனமாசை விலக்குவானும், வானோர்க்கும் மேலான உயர்ந்த உலகை அடைவான் என்றார் வள்ளுவர். திருவள்ளுவர், துறவற இயலில் கூறிய ஒழுக்கநெறிகளாகிய புலால் மறுத்தல், கள்ளாமை, பொய்ம்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை போன்ற நற்பண்புகள் இல்லறத்தானுக்கும் பொருந்தும். அதுபோல் இல்லறத்தானுக்குச் சொல்லப்பட்ட ஒழுக்கமுடைமை, அன்புடைமை தீவினையச்சம் போன்ற ஒழுக்கநெறிகள் துறவறத்தானுக்கும் இன்றியாமையாதனவாம். வள்ளுவர் கண்ணோட்டத்தில் மாந்தர்க்கு பொதுவாக மனதில் வந்து சாரும் மாசுகளையும் அவற்றைத் தன்முயற்சியால் விலக்கும் வழிமுறைகளையும் கண்டோம். இனநலம் மனமாசற்ற சான்றோனாக வளர்வதற்கும், வளர்ந்து சான்றோனாகிய பின்னரும் அவன் சாரும் இனம் தூயதாக இருத்தல் அவசியம் என்பதை வள்ளுவர் எச்சரிக்கிறார். நிலத்தியல் பான் நீர் திரிந்தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு (குறள்-452) தான் சேர்ந்த நிலத்தின் இயல்பாக நீர் திரிந்து அந்நிலத்தின் நிறமும் சுவையும் உடையதாய் மாறும். அதுபோல மாந்தர்க்கு தாம் சேர்ந்த இனத்தினது இயல்பால் தம் அறிவு திரிந்து அவ்வினத்துத் தன்மையதாகும். சிற்றினத்தைச் சார்ந்தால் சிறுமைப் பண்பே உண்டாகும். மனத்துளது போலக்காட்டி ஒருவற்கு இனத்தளது ஆகும் அறிவு (குறள்-454) அவரவர் மனித்திலிருந்துதான் அறிவு வெளிப்படுகின்றதென்பது உண்மையே. ஆனால் அவன் பலருடன் பழகப்பழக, அந்த இனத்துக்குளதாகிய அறிவே அவனது அறிவாகும். உன் “நண்பன் யாரென்று சொல்@ உன்னைப் பற்றித் தெரிந்து கொள்கின்றேன்”. என்ற ஆங்கிலப் பழமொழியைப் போல இனத்தறிவே இயல்பான அறிவாகிவிடும். நல்லவனும் கெட்டுப்போவான் என்பது கருத்து. மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவாவரும் (குறள்-455) மனம் நல்லதைச் சார்ந்தால் தூயதாகும். மனம் தூயதானால் செயல் தூயதாகும். மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப்புகழும் தரும் (குறள்-457) மனநலத்தோடு அறவழி நிலைக்க, உயிர் ஆக்கம் பெறும். இனலம் நற்பெயர் தருதலால், அதன்வழி புகழனைத்தும் வாய்க்கும். அறம் உயிருக்கு வலிமை, ஆக்கம் தரும் என்பது வள்ளுவம். நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை. தீயினத்தைப் போல் அல்லற்படுப்பது பிறிதொன்றில்லை என்றார் வள்ளுவர் (குறள்-460). மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து (குறள்-458) இயல்பாகவே மனநலம் கொண்டவராய் இருந்தாலும் சான்றோர்களுக்கு அவர்கள் சேர்ந்திருக்கும் இனத்தின் நன்மை மேலும் நல்ல பாதுகாப்பினைத் தரும். ஆன்றகுடிப்பிறப்பாலும், தன்முயற்சியினாலும், நல்லினச்சேர்க்கையினாலும் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள்கூட இழிவுபடுவதற்குக் காரணமான செயலை ஒரு குண்டுமணி அளவு செய்தாராயினும், அதனால் தாழ்வுபடுவர் என்றார் வள்ளுவர். குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் (குறள்-965) மேல்நிலைக்கு உயர்ந்தவர்களும் விழிப்பாக இருந்து எந்த மாசும் தம்மீது படராதவாறு நடந்து கொள்வது தான் பெருமை தரும் என்றார். இதனால் தனர் வள்ளுவர் மருவுக மாசற்றார் கேண்மை என்றார் (குறள்-800). இதனால் மனம் மாசிலனாதற்கும் மாசற்ற நிலை நிலைத்திருப்பதற்கும் இனநலம் தூயதாக இருத்தல் வேண்டும் என்பதை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார் என்பது தெளிவாகிறது. இறைவழிபாடு பொருள் மீதுள்ள பற்றுகளை விடுவதற்கு பற்றுகள் அற்றவனாகிய இறைவனைப்பற்ற வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள்-35)) இயல்பாகவே பற்றுகளின் நீங்கிய இறைவன் மீது கொள்ளும் பற்றினைப் பற்றிக் கொள்க@ எதற்காக என்றால், உலகப்பொருள் மீது கொண்ட பற்றினை விடுவதற்காக, அவ்விறைப்பற்றினைப் பற்றுக! திருவள்ளுவர் தமது இனநலம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி மனம், சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. இது எதையேனும் பற்றிக் கொண்டுதான் நிற்கும் எனவே, பற்றற்ற இறைவனைப் பற்றிக் கொள்ளுதல், ஏனைய உலகப்பற்றுகளை விடத்துணையாகும் என்பதாகும், பற்றுகளை விடவிட, மாசுகள் படியாது@ மனநலம் சிறக்கும். ஒழுக்கமும் பண்புகளும் செம்மைப்படும்@ அன்பு வளரும். அவர் இறைவன் பெருமைகளைக் கூறும் வகையான், அவனை வால் அறிவன் என்றும், (குறள்-2) வேண்டுதல் வேண்டாமை இலான் என்றும், (குறள்-4) அறவாழி அந்தணன் என்னும், (குறள்-8), எண்குணத்தான் (குறள்-9), என்றும் போற்றுகிறார். அவன் பெருமைகளைப் பாடி, அவன் தாளை வணங்கு என்றார். மேலும், திருவள்ளுவர் இறைவனைத் தனக்குவமையிலாதான் என்றும், அவன் தாள் சேர்ந்தார்களால் மட்டுமே மனக்கவலையை மாற்றிக் கொள்ளமுடியும் என்றும் வலியுறுத்துகிறார் (குறள்-7) மனதின் கவலைகள் நீங்கின், மனம் அமைதியுறுகின்றது. அப்போதுதான் அவன் இன்பவாழ்வு வாழமுடியும். தன்முயற்சிக்கு தெய்வத்தின் துணை மேலும் உதவும். முடிவுரை மனத்துக்கண் மாசிலனாதலே அறமென்றார் வள்ளுவப் பெருந்தகை. மனித வாழ்வு உயர, இல்லறம், துறவறம் என்று இருபெருநெறிகளை அவர் காட்டியுள்ளார். துறவறத்தைவிட இல்லறம் உயர்வுடையது என்பதை அவர் சில குறட்பாக்களில் வெளிப்படுத்துகிறார். இவ்விரு நெறிகளில் நின்று ஒழுகுவோர்க்கு பொது நியதி. முதற்கண் திருவள்ளுவர் மனமாசுகளாக அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவற்றைக் குறிப்பிடுகிறார். வடநூலோர் கூறும் அறுவகை மனக்குற்றங்களையும் கண்டோம். துறவிகளின் கூடாஒழுக்க நெறிகளைப் பார்த்தோம். பின்னர், மனதில் படியும் பல மாசுகளின் பட்டியலைப் பார்த்தோம். மனமாசுகள் யாவை, அவற்றால் விளையும் கேடுகள், மனிதன் மாசிலனாகிய அறவாழ்வு வாழும் வழிமுறைகளை ஆகியவைபற்றி வள்ளுவர் கண்ணோட்டத்தில் கண்டோம். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் மனம் புலன் வழிச் செல்வதனால் அவன் மனதில் எண்ணற்ற மாசுகள் படிக்கின்றன. அவற்றால் அவன் அறவாழ்வினின்றும் வழுவுகின்றான். ஆன்றகுடியில் பிறத்தல் ஒருவனுக்கு ஒரு நல் ஆரம்பமாக அமைகிறது. தங்கள் பெற்றோர் வாழும் நன்னெறிகளைப் காண்பதாலும், பெற்றோர் குழந்தையைச் சீரியமுறையில் வளர்ப்பதாலும், மாசற்ற வாழக்கைக்கு அது ஒரு அடித்தளமாக அமைகிறது. பின்னர், மனிதன் நல்ல அறிநெறி நூல்களைக் கற்று அதன்படித் தன் சொந்த வாழ்க்கையிலும் தானும் அறவாழ்வு வாழ வேண்டும் என்ற உறுதிப்பாடு கொள்ள வேண்டும். அம்முறையிலேயே நடந்தும் வரவேண்டும். ஒழுக்கநெறி நின்று வாழ்ந்து காட்டிய சான்றோர் வாழ்க்கை வரலாற்று நூல்களைக் கற்று அவர்களை உதாரண புருடர்களாக தங்கள் மனத்தில் கொண்டு, தாமும் அவர் வாழ்ந்தவாறு வாழ்வோம் என்று மனத்திட்பம் கொள்வது, மக்கள் மனமாசகல வழி செய்யும். ஒருவன் நாளும் மேற்கொள்ளும் இறைவழிபாடும் முழு இறை நம்பிக்கையும் அவனது வாழக்கையில் ஏற்ப்படும் இடர்ப்பாடுகளைக் கடந்து வெற்றியடைய துணைபுரியும்@ மனவலிமையைக் கொடுக்கும்@ அவன் ஒழுக்கம் செம்மையுறும்@ உள்ளத்pல் அன்பு வளரும்@ அருள் பெருகும்@ அவா குறையும்@ மனமும் அமைதியுறும்@ இன்ப வாழ்வும் அமையும். இவ்வழிகைள உறுதியாகக் கடைப்பிடித்து தன் வாழ்வை அமைத்துக் கொண்டவன் மாசிலன் ஆவான் என்பது திருவள்ளுவர் கண்ணோட்டத்தில் நாம் கண்டோம். துணைநூல்க்கள் 1. ஜகந்நாதன், கி.வா. திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 2004, ராமகிருஷ்ணா வித்யாலயம் 2. தண்டபாணிதேசிகர், ச’ திருக்கறள் உரைக்களஞ்சியம் 1990, மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை 3. இராமலிங்கன், வெ. திருக்கறள் நாமக்கல் கவிஞர் உரை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 14 4. வரதராஜன் ஜி. திருக்குறள் உரை விளக்கம் 1958 பழனியப்பா பிரதர்ஸ், சென்னை–5 5. தமிழண்ணல் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் 199, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை- 1 6. கலியாண சுந்தரனார் திரு.வி. திருக்குறள் விரிவரை 1951, பூம்புகார் பதிப்பகம் சென்னை 600 108.