திருவளளுவரின பெண்ணிய சிநத்னைகள ; சக்திபெருமாள பெண்களுடைய தேவைகளை நிறைவேற்ற, அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது என்பது பெண்ணியச் சிந்தனை (ஆக்ஸ்போர்டு அகராதி 1894). பெண்ணியம் என்பது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் பெண்களைப் பற்றிய ஒரு சமூக அறிவியல். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை, உலகநாடுகளின் பெரும் பாலானவற்றில் பெண்களின் நிலை தாழ்வுற்றே இருந்துவந்தது. பிரெஞ்சுப் புரட்சியின்போது தோன்றிய ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற முழக்கங்கள் படிப்படியாக உலகெங்கும் பரவிப் பெண்கள் வாழ்விலும் ஒரு புதிய
கண்ணோட்டத்தை உருவாக்கின. ‘இங்கிலாந்திலுள்ள அமெரிக்காவிலும் மேரி வின்சுடோன்கிராஃப்ட் (ஆயசல றுiளெவழநெஉசயகவ)இ அபிகுயெத் ஆடம்சு (டுயனல யுடிபைரயவiயுனயஅள)இ பெட்டி ஃப்ரைடன் (டீநவவல குசயனையn) போன்ற பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று எழுதினர். பெண் தன்னியல்பில் ஆடவனோடு உடல் நிலையில் வேறுபட்டு இருப்பினும் அவளும் ஆணுக்குச் சமமானவள் என்ற உண்மையை உலகம் ஏற்றுக் கொள்றுமாறு என்றார் அறிஞர் கார்டன். அவருடைய கருத்தே மேலை நாடுகளில் பெண்ணியவாதிகளின் வேதவாக்கு ஆகியது. தமிழ்நாட்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், பெண் விடுதலைக்காக் குரல் கொடுக்கப் பல சான்றோர்கள் முன்வந்தனர். மாய+ரம் வேதநாயகம் பிள்ளை, திரு.வி.க., தந்தை பெரியார், பாரதி, பாரதிதாசன் போன்றோர் தங்கள் எழுத்துக்களாலும் இயக்கங்களாலும் பெண்களைத் தட்டி எழுப்பினர். அன்னிபெசண்ட் அம்மையார், சகோதரி நிவேதிகா, டாக்டர் முத்துலட்சுமி போன்ற பெண்கள் அரசியல் விடுதலை இயக்கத்துடன் இணைத்துப் பெண்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டனர். இன்று முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ஆடவரும் மகளிருமாகப் பலர் பெண்கள் நலனுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்குச் சமவுரிமை, சமநீதி, கல்வியுரிமை, திருமணவுரிமை, மணவிலக்குரிமை, மறுமண உரிமை, சொத்துரிமை, குழந்தைமணக் கொடுமை ஒழிப்பு, உடன்கட்டை ஒழிப்பு போன்றவற்றிற்குச் சட்டங்களின் பாதுகாப்புக் கிடைத்துள்ளது. இருந்தாலும் நடைமுறையில் தமிழகத்தில் பெண்களின் நிலை முற்றிலுமாக உயர்ந்து விடவில்லை. இந்தச் சூழ்நிலையில், பெண்ணிய நோக்குடன் திருக்குறளை ஆராயும்போது பல உண்மைகள் நமக்குப் புலனாகின்றன. பெண்கணைத் தெய்வமென்று போற்றுவதும், பேய் என்று தூற்றுவதுமாக இருந்துவந்துள்ள தமிழச் சமுதாயத்தில் பெண்ணை முதன்முதலாக அறிவும் ஆற்றலும் உடைய மனித உயிராக ஏற்றுக்கொண்டவர் திருவள்ளுவர் என்று காண முடிகிறது. பிறப்பால் ஆணும், பெண்ணும் சமம்@ பெண் எவ்வகையிலும் தாழ்ந்தவள் அல்லள் என்று திருவள்ளுவர் ஓங்கிக் குரல் கொடுத்தள்ளார். ஆண், பெண் வேறுபாடின்றி, எல்லோருக்கும் சமநீதியும் சமவுரிமையும் வழங்குகிறார். கற்பெனும் ஒழுக்கத்தைப் பெண்ணுக்கு மட்டுமே உரியதாக வலியுறுத்திய ஆடவருலகம், கற்பின் பெயரால் பெண்களுக்கு இழைத்து வந்த கேடுகளைத் திருவள்ளுவர் துணிந்து கண்டிருக்கிறார். கற்பு நெறியை ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக்குகிறான். பரத்தையருடன் வாழ்வதைச் சமூகம் தனக்களித்த சலுகையாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஆடவரைக் கண்டித்தும் அறநெறி புகட்டியுள்ளார். அவர்காட்டும் மணவியலில் சடங்குகளுக்கு இடமில்லை. மணமுறிவுகளுக்கும் இடமில்லை. அன்பு கனிந்த இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் காதல்@ அந்தக் காதல் வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதைக் காமத்துப்பாலில் எடுத்துக் காட்டியுள்ளார். அத்தகைய அன்பும் அறனும் உடைய இல்லறத்திற்குப் பெண்ணின் இன்றியமையாமையையும் பெண்ணின் கடமைகளையும் எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர். இவ்வாறு பெண்ணின் பெருமையை எடுத்துக்காட்டியும் பெண்களுக்காக வாதாடியும் பெண்களுக்குச் சமவுரிமை, சமநீதி அளித்து அறங்கள் வகுத்துச் சிறந்த பெண்ணியவாதியாகத் திருவள்ளுவர் காட்சியளிக்கிறார். இடைக்காலத்தில் தமிழகத்தில் புகுந்த வேற்றுப் பண்பாட்டுக்கலப்பினாலும், ஆடவர்த்தம் தலைமைக்கு இடைய+று நேர்ந்துவிடும் என்ற அச்சத்தினாலும், பிற்கால அறிஞர்கள் திருக்குறளைப் பிறழ உணர்ந்தனர்@ பிறழ உணர்த்தவும் செய்தனர். அதன் விளைவாகத் தமிழகத்தின் பெண்களின் நிலை மேலும் மேலும் இழிவடைந்தது என்பது வரலாறு காட்டும் உண்மை. நாம் திருவள்ளுவரி;ன் பெண்ணியைச் சிந்தனைகளை விரிவாக ஆராயும் முன் அவருடைய காலத்தில் தமிழகப் பெண்களின் நிலை எவ்வாறிருந்தது என்பதைக் காணவேண்டும். தமிழில் எழுத்து வடிவில் கிடைத்துள்ள தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். அடுத்து வந்தவை சங்க இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் ஆண் என்பவன் ஆளப்பிறந்தவன்@ பெண் என்பவள் அவனையும், அவனுடைய வழித்தோன்றல்களையும் பேணப் பிறந்தவள் என்று காட்டுகின்றன. தமிழகம் தந்தைவழிச் சமுதாய அமைப்பினைக் கொண்டது. இச்சமுதாயத்தில் ஆண்களே பெண்களின் இயல்புகள் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென்று வகுத்தனர். சான்றாகத் தொல்காப்பியர் காலத்திலேயே, பெண்ணுக்குரிய இயல்புகள் அச்சம், நாணம், மடம். பயிர்ப்பு என ஆடவரே முடிவு செய்தனர். ஆடவர்களே பெருமையும், வலிமையும் உடையவர்கள் என்று சங்க இலக்கியங்களும் காட்டுகின்றன. சங்ககாலத்தில் பெண்களுக்குக் கவ்வியுரிமை, தொழிலுரிமை போன்றவை இருந்தன. ஆனாலும் பெண் தந்தை, கணவன், மகன் என்று ஆடவரைச் சார்ந்து வாழும் நிலைதான் இருந்தது. “வினையே ஆடவர்க் குயிரே மனையுறை மகளிர்க்கு ஆடவருயிரே” (குறுந்-135:1-2) என்ற நிலைதான் இருந்தது@ கணவணை இழந்த பெண் சிறுமையடைந்தாள். ஆகவே அவள் கைம்பெண் எனப்பட்டாள்@ அச்சிறுமை ஆடவருக்கில்லை. பலதார மணமும், பரத்தையிற் பிரிவும் ஆடவர்க்குரியனவாக இருந்தன. நாளடைவில் பெண்கள் கல்வியறிவற்று, பொருளாதாரச் சுதந்திரம் அற்றுச் சமுதாயத்தின் வலுவற்ற பகுதியாக வாழ்ந்து வந்தனர். பெண்ணுக்கென்று தனித்த வாழ்க்கையில்லை ஆடவர்கள் பெண்ணைத் துய்த்து மிகழும் துய்பபுப் பொருளாகவே கருதிவந்நதனர். ஆழ்கடல் வெண்முத்து அதை அணிபவர்களுக்குத் தான் மகிழ்வைத் தரும்@ மலையில் பிறக்கும் சந்தனம் அரைத்து மார்பில் ப+சுவோருக்கே மகிழ்வைத்தரும்@ யாழில் பிறக்கும் இன்னிசை அதனை மீட்டுவோருக்கே விருந்தாகும் (பாலைக் கலி) என்றவாறு பெண்ணை உவமைப் பொருள் கூறி உண்மை நிலையை எடுத்துக் காட்டினர். மண், பெண், பொன் என்ற மூன்று பொருளையும் ஒன்றாக்கிப் ப+ட்டி வைத்தனர். இந்தச் சூழலில் வாழ்ந்த திருவள்ளுவர், மானுடம் வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டத் திருக்குறளை இயற்றியுள்ளார். அவர் தம் நூலின் திட்பமும், நுட்பமும் செறிந்த குறட்பாக்களில், பெண்களுக்காக, வாதாடியுள்ளார். ஆணும், பெண்ணும் சமம் என்பதனையும் நிலை நாட்டியுள்ளார். தொல்காப்பியர், ஆடவர், மகளிர் இயல்புகளை விளக்கும்போது ~பெருமையு உரனும், ஆடூஉமேன~ என்றார். பெண்ணுக்குரிய பண்புகளாக அச்சம், நாணம் மடம், பயிர்ப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டார். திருவள்ளுவர் ஆண்,பெண் என்ற இருபாலாருக்கும் இடையே உயர்வு தாழ்வு இல்லை என்ற கருதியவர். ஆகவே இவ்வுண்மையை ~பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செயல்தொழில் வேற்றுமை யான்~ (குறள்.97:2) என்று தெளிவுறுத்தினார். மக்களாகப் பிறந்துள்ள எல்லோரும் தாய்வயிற்றில் பிறந்தவர்களே, இவர்களுள் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்பது இல்லை. பிறந்த அனைவரும் பிறப்பியல்பால் ஒத்தவர்களே@ ஆணோ, பெண்ணோ அவரவர் செய்யும் அருஞ்செயல்களால் புகழ் பெறுவார்கள் என்கிறார். தொல்காப்பியர் பொருமையும் உறுதியும் ஆடவருக்கு மட்டுமே சொந்தம் என்றால், பெண்ணுக்கு அவ்வியல்புகள் இல்லை என்றாகிறது. திருவள்ளுவர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. “பொருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” (குறள்.505) என்று தெரிந்து தெளிதல் என்ற அதிகாரத்தில் மீண்டும் கூறுகிறார். ஆடவரோ பெண்டிரோ அவரவர் செயல்களால் தாம் பெருமையோ, சிறுமையோ அடைவர் என்கிறார். தொல்காப்பியர் காலத்திலேயே. தரும சாத்திரங்கள், புராணங்கள் மனு நெறிக் கொள்கைகள் போன்றவை தமிழகத்தே நுழைந்துவிட்டன. நால்வகை வருணம், மேற்பால், கீழ்ப்பால் என்ற பாகுபாடு தோன்றிவிட்டது. பெண்ணியனம் வடீ டு; ககு; ளN; ள ஆடவனின ; உடைமையாக முடஙக் pவிடட் து. ஆகவே தொல்காப்பியம் ஆடவரை உயர்த்தியும் பெண்களைத் தாழ்த்தியும் கூறியதில் வியப்பிலலை. “மனிதர்களுள் சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள்@ அவர்களைக் காட்டிலும் பெண்கள் தாழ்ந்தவர்கள்” என்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய ஆபஸ்தம்பரின் தருமசூத்திரம் (1.8.9) காட்டுகிறது. “பிராமணன் சூத்திரப் பெண்ணைப் பார்த்துவிட்டாற் போதும், அவன் தீட்டு அடைந்துவிடுவான். அன்று அவன் வேதம் ஓதக்கூடாது அவர்களின் நன்மைக்காகவே புராணங்கள் படைக்கப்பட்டன” என்கிறது தேவிபாகவத புராணம். “பார்த்த, பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும், இவர்கள் போன்ற பிறவியில் தாழ்ந்தவர்களாக உள்ளவர்களும் கூட என்னை அடைக்கலம் என்று வந்து அடைந்தால் மேலான கதியை அடைவார்கள் என்கிறது பகவத் கீதை (9:32) இத்தைய சாதிச் சழக்ககள், நச்சுக் கருத்துக்கள் மண்டிக் கிடந்த இடை;காலத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் தம் காலக்கண்ணோட்டத்தோடு உரைவகுத்தனர். நால்வகை வருண வேறுபாடுகளை இக்குறள் குறிப்பிடுவதாகக் கொண்டனர். பரிதி, பரிமேலழகர் போன்றவர்கள் “நால்வகை வருணத்தாரும் பிறப்பினால் ஒத்தவவெரன்றாலும், பெருமை சிறுமைகளுக்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும், யாக்கை தோறும், வேறுபடுதலின் சிறப்பொவ்வர்” என்றனர். நால்வகை வருண வேறுபாடுகளை இவ்வுரையாசிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மற்றும் சிலர் வருண வேறுபாடுகளை சாடுவதாகவும் கொண்டு இக்குறளுக்கு உரையியற்றினர். ஆனால் அவர்கள் தம் காலச் சமுதாயத்தில் பெண்கள் இழிந்தவர்களிலும், இழிந்தவர்களாகக் கருதப்பட்ட நிலைபற்றி எவரும் கவலைப்படவில்லை. பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற கருத்துக்களைத் தாங்கி வந்த புராணங்கள் சாத்திரங்களைக் காட்டி பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீளாமல் காத்துக் கொண்டது அன்றைய ஆடவருலகம். பிற்காலத்து வந்த சமண பௌத்த அறநூல்கள் “தடமென் பணைத்தோள் தளிரியலாரை, விடமென்றுணர்தல் இனிது” என்று பேசின. ~பெண்டிர்க்கழகு எதிர் பேசாதிருத்தல்~ என்கிறது நறுந்தொகை. இத்தகைய சூழலில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர்கள் திருவள்ளுவரின் கருத்துக்களைப் பிறழ உணர்ந்து உரைகண்டதில் வியப்பில்லை. அவர்கள் சாதியினால் வந்த உயர்வு, தாழ்வு பற்றி மட்டுமே இத்திருக்குறள் விளக்குகிறது என்று கொண்டனர். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் இதே ஆண், பெண் சமத்துவக் கருத்தை உணர்ந்து விளக்கமாக எடுத்துரைக்கிறார் பாரதியார். “ஆணும், பெண்ணும் ஒரே இயல்புடையவர்கள். பெண்ணும் ஆணும் உயிருடைய செடி கொடிகள் போன்றவர்கள் அல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவே உள்ளவள்தான் பெண். புறவுறுப்புகளில்தான் மாறுதல், ஆத்மா ஒரே மாதிரி இதனை மறந்து அவர்களைச் செக்குமாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறந்தார்@ பஞ்சுத் தலையணிகளாக கருதுவோர் மற்றொரு திறத்தார்@ இரண்டுமே பிழை” என்கிறார் நத்தைப் புழுவைப்போல் ஆணும், பெண்ணும் கூடப் பிறக்கிறோம். உடன்பிறந்தான் ஆண்டான்@ உடன்பிறந்தவள் அடிமையா? என்று சாடுகிறார். இவ்வாறு ஆணும் பெண்ணும் சமம் என்று வலியுறுத்திய வள்ளுவரின் வாக்கை உணரத்தவறிய தமிழர்தம் போக்கினால் வந்த வீழ்ச்சி, தமிழகத்தைப் பல நூற்றாண்டுகள் தலைகுனிய வைத்துவிட்டது. தொல்காப்பியத்தைப் பின்பற்றிப் பின்வந்தோர் பெண்களுக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகள் வேண்டும் என்றனர். திருவள்ளுவர் எந்தவிடத்தும் பெண்களுக்குரிய பண்புகளாக இவற்றைக் குறிப்பிடவில்லை. அசச்ச் ம்:;: பழிபாவங்களுக்கு அஞ்சுதல்தான் இயல்பான அச்சம். அது இருசாராருக்கும் வேண்டுவது. “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (428) என்கிறார் திருவள்ளுவர். பழி, பாவம், பகை, அச்சம் என்ற நான்கும் நற்குடியிற் பிறந்தோரிடம் இருப்பதில்லை. பிறனுடைய மனைவியை நாடிச் செல்பவனிடம் இருக்கும் இயல்புகள் இவை (146) என்று அச்சத்தி;ன் இயல்பைக் காட்டியவர். ~அச்சம் கீழ்களது ஆசாரம்~ (1075) அது கயவர்களின் இயல்பு என்று சாடுகிறார். எந்த இடத்திலும்ப் பெண்ணின் இயல்பாக அச்சத்தை அவர் குறிப்பிடவில்லை. 2, அதேபோன்று ஆண், பெண், இருபாலருக்கும் வேண்டும் நாணத்தைப் பற்றியும் திருவள்ளுவர் விரிவாகப் பேசுகிறார். நாணம்: நாணம் என்பது இருவகைப்படும். காதல் கொண்ட நேரத்தில் பெண்கள் வெட்கப்படுவது ஒருவகை. அது ~மெல்லியலார் நாணம்~. மற்றொன்று ஆண், பெண் இருபாலாரும் மேற்கொள்ளும் பழிபாவங்களுக்கு நாணுதலாகும். “கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற” நாணுடைமை என்ற அதிகாரம் (102) வகுத்துப் பத்து குறட்பாக்களில் உயிரினும் நாணம் சிறந்ததென்றும், நாணமற்றவர் இயக்கம் மரப்பாவையின் இயக்கம் போன்றது என்றும் விளக்குகிறார். நாணம் என்பதனை ஆண் பெண் என்ற இருபாலாரும் சான்றோராக விளங்கத் தேவைப்படும் பண்பாகச் சான்றாண்மை என்ற அதிகாரத்தில் (அதி.99) விளக்குகிறார். திருவள்ளுவர் எந்த அதிகாரத்திலும் பெண்கள் அஞ்சி நாணி ஒளிந்து கொள்ள வேண்டும். உரன்:;: உரன் என்பது ஆடவனுக்கு உரியது என்றார் தொல்காப்பியர். திருவள்ளுவரோ ~உரம் என்பது ஊக்கம் மிகுதியாக உடைமை@ அதுவே ஒருவர்க்குச் செல்வம்@ அது எல்லோருக்கும் உரியது. அஃது இல்லாதவர்கள் மரத்திற்கு ஒப்பாவர் என்று ஆண் பெண் இருவருக்கும் பொதுவிதியாகக் கூறுகிறார். “உரம் ஒருவற்குள்ள வெறுக்கையஃ தில்லார் மரம் மக்க ளாதலே வேறு” என்பது அவரது வாக்கு, மடம், பயிர்ப்பு என்ற இரண்டு பற்றியும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அச்சம், நாணம் என்ற இயல்புகள் குறித்து விளக்கம் தந்த திருவள்ளுவர் பெண்மைக்குப் புதிய விளக்கம் தருகிறார் எனலாம். உள்ளத்தின் உறுதி என்னும் அங்குசத்தால் ஜம்புலன்களை அடக்குபவர்கள் வீடுபேறு அடைமுடியும் என்ற கருத்தை விளக்கவும் ~உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான், வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து~ என்கிறது திருக்குறள் (24) இவ்வாறு ~உரன்~ என்ற பண்பைக் குறிப்பிடும்போதும், திருவள்ளுவர் தொல்காப்பியர் கூறியதுபோல இஃது ஆடவர்க்கேயுரியது என்று கூறவில்லை. ~பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்~ என்று கூறி ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவர் தம் நூலில் இருவருக்கும் பொதுவான நீதிகளையே கூறியுள்ளார். திருக்குறளின் வைப்புமுறையை நோக்கினால் இவ்வுண்மை புலனாகும். அன்பு கனிந்த காதலர் தம் களவு, கற்பு வாழ்க்கையைக் காமத்துப் பாலின் கவிதை நாடகமாக இலக்கியச்சுவை மேலோங்க விரித்து வழங்கியுள்ளார். அறத்துப்பாலில், பெண்ணிற்கே சிறப்பாக வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார். அதுபோன்று ஆணுக்கு மட்டுமே உரித்தாக ~பிறனில் விழையாமை~, ~பெண் வழிச்சேறல்~, ~வரைவில் மகளிர்~ என்ற அதிகாரங்களை வகுத்துள்ளனர். ஏனைய அதிகாரங்கள் அனைத்திலும் வகுத்துள்ளார். ஏனைய அதிகாரங்கள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள அறங்கள் அனைத்துமே இருபாலாருக்கும் பொதுவானவை. ஆணுக்கு ஈடாகவே பெண்ணுக்கு உரிமைகளையும் கடமைகளையும் வலியுறுத்தியவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் வாழ்வியல் அறம் வகுத்தவர். வாழ்வியலை இல்லறம் துறவறம் என்று இரண்டு பகுதியாக்கி விளக்குகிறார். இல்லறத்தின் பின்னரே வரக்கூடிய துவரந் துறத்தலே தமிழர் தம் துறவறநெறி. துறவறத்திற் கெதிராக நின்று ஆடவனைக் கெடுக்கும் பெண் ~மாயப் பிசாசு~ என்று தூற்றும் இழிநிலை திருக்குறளில் இல்லை. மாறாக இல்லறத்தை நடத்தும் ஆற்றல் பெண்ணிடம் உள்ளது என்கிறார்.