திருவள்ளுவர் கூறும் பொருள் உலகமும் அருள் உலகமும ;ச. கங்காதரன
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு – 247 என்னும் குறளில் இவ்வுலக வாழ்வுக்குப் பொருள் தேவைப்படுவது போல அடுத்த உலக (அதாவது அவ்வுலக) வாழ்வுக்கு அருள் தேவைப்படுகிறது என்று திருவள்ளுவர் விளக்குகிறார். இவ்வுலகம் என்பதை வையம் என்றும் கூறுகிறார் (குறள் - 5). அருள் உலகம் அவ்வுலகம் என்பதை வானம் என்ற சொல்லாலும் குறிக்கிறார் (குறள் 353) இவ்வுலகம் என்பதை நாம் வாழும் பொருள்கள் நிறைந்த உலகம் என்றும். அவ்வுலகம் என்பதை அருள் உலகம் என்றும் கொண்டு. இவ்விரு உலகங்கள் பற்றி திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைச் சுருக்கமாக இயன்ற அளவு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். மக்கட் பிறப்பின் தேவைகளையெல்லாம் அவர்கள் பிறந்திருக்கும் உதவும் மண்ணுலகமே மக்கட்கு இல்லம். பள்ளி எல்லாம். “புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே” (திருப்பள்ளி எழுச்சி.10) என்று வான் உலகினர் ஏங்குவதாக மணிவாசகர் கூறுவர். இவ்வுலகத்தை அறிந்து தெளிந்து அடைவுகளைப் பெறும்பொருட்டே மக்கள் இவ்வுலகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். யார் யார் எந்த எந்த இடத்தில் விடப்பட்டிருக்கின்றனரோ அந்தந்த இடமே அவரவர்களுக்கு வாழ்வு நல்கும் இடம். இவ்வுலகை உரிய முறையில் பயன்படுத்தாமல் அவ்வுலகத்தில் நாம் நன்மை பெற முடியாது என்று திருவள்ளுவர் கருதுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கில் வீடு முடிந்த பயனாக உள்ளது@ அது அறத்தாற்றிற் பெறுதற்குரியது. இவ்விரண்டும் மனிதரில் சான்றோர் பெறும் பேறுகள்@ பொதுமக்கள் எனப்படும் மற்றோர்க்கு இன்பமும் பொருளுமே தொடக்க உணர்ச்சிகளாக உள்ளன. எல்லார்க்கும் பொதுவில் உரிய இவ்விரண்டும் இறைவிழைச்சையும் பசியையும் அறிகுறியாக்கிக் கொண்டு அகவுணர்ச்சியும் புற உணர்ச்சியும் நிகழ்கின்றன. இன்ப உணர்ச்சியும், அது காரணமாக நிகழும் பொருள் முயற்சியும் பொது நிலைகள்@ பிறரைப் பாதிக்காத வகையில், அவ்விரண்டையும் ஒழுங்காக நடத்தும் தொடக்க நிலையும், வீட்டு நோக்கத்துடன் முடிந்த பயனான வீடும் சிறப்பு நிலைகள். மனிதன் பெற வேண்டிய வான் உலகம் என்பது வையத்தில் வாழ்வாங்கு வாழும் முறையில் இங்கேயே பெறலாம் என்பதை “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 150) என்றும் கூறுகிறார். மக்கள் இவ்வுலக வாழ்க்கையை முறையாக வாழ்வதன் மூலம் வானுலக வாழ்க்கை பெறலாம் என்பது தமிழ் மரபு. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் புலவனை முருகப்பிரானிடம் ஆற்றுப்படுத்தும் போது, முருகப் பெருமான் “விழுமிய பெறலரும் பரிசில்” நல்குவான் என்று கூறுகிறார். ‘இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி. சீரிய பிறராற் பெறுவதற்கரிய வீடு பேற்றினைத் தருவன்’ என்று இப்பகுதிக்கு நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். இவ்வுலகில் வாழ வேண்டிய முறையில் வாழ்ந்தவர் மரணம் அடைவதில்லை@ பரிபூரணம் அடைகிறார்@ அவர் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்கிறார். நக்கீரர் சொல்கின்ற ‘விளிவு இன்றி ஒரு நீயாகத் தோன்ற’ என்று கூறும் நிலையும் அதுதான். இவ்வுடல் இருக்கும்போதே முத்திநிலை கூடும் என்பதைச் சங்க நூல்களிலும் காணலாம். “தவம்செய் மாக்கள் தம்உடம்பு இடாஅது அதன்பயம் எய்திய அளவைமான” என்று பொருநர் ஆற்றுப்படையில் வருகிறது. தவம் செய்யும் ஞானிகள் தம் உடம்பைப் கீழே போட்டு விடாமல் அந்தத் தவத்தின் பயனாகிய முத்தி இன்பத்தை அடைந்த முறையை ஒப்ப’ என்பது இதன் பொருள். மாங்குடி மருதனார் மதுரை மாநகரில் உள்ள மக்களின் இயல்புகளையும் அவர்கள் வாழும் மதுரையில் வாழும் இடங்களையும் பற்றி மதுரைக் காஞ்சியில் வருணிக்கிறார். “நிலம்அமர் வையத்து ஒருதாம் ஆகி உயர்நிலை உலகம் இவணின் றெய்தும் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற், பெரியோர்” என்று மதுரையில் வாழும் ஒருவகையினரைப் பற்றிக் கூறுகிறார். ‘நால்வகை நிலங்கள் அமர்ந்த உலகத்தே ஒன்றாகிய பிரமம் தாங்களே யாய், உயர்ந்த நிலமையையுடைய தேவருலகத்தை இவ்வுலகில் நின்று சேரும், தருமத்தின் வழி ஒருகாலும் தப்பாத பல்லுயிர்கட்கும் அன்புடைத்தாகிய நெஞ்சாலே, சவீவீவீ ன் முத்த்தரர் யிருப்பார் என்று நஞ்சினியார்க்கினியார் உரை வகுத்தார். ‘ஒருதாம் ஆகி உயர்நிலை உலகம் இவணின்றெய்தும் அறிநெறி பிழையா அன்புடை நெஞ்சிற் பெரியோர்’ என்னும் மதுரைக் காஞ்சிப் பகுதி ‘உலகத்து ஒரு நீ யாகித் தோன்ற’ என்று வரும் திருமுருகாற்றுப் படைப்பகுதியோடு சொல்நடையில் ஒத்திருப்பதை உணரலாம். உயர்நிலை உலகம் என்பதற்குத் தேவருலகம் என்று நச்சினியார்க்கினியர் பொருள் கொள்வதே சிறப்பு என்று அறிஞர் கி.வா. ஜகன்னாதன் கூறுவதே பொருத்தமானது. வீட்டுலகை “வரன் என்னும் வைப்பு” என்றும், “வானோர்க்குயர்ந்த உலகம்” என்றும் திருவள்ளுவர் கூறுவதையும் இங்கு உணரலாம். ‘இங்கே இருந்தபடியே உயர்நிலை உலகமாகிய முத்திய நுபவத்தை அடையும் பெரியோராகிய சீவன்முத்தர்’ என்று மதுரைக் காஞ்சியில் வரும் பகுதிக்குப் பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். பொருநர் ஆற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய சங்க இலக்கிங்களில் வரும் அறம், வீடு, பேறு, சீவன்முத்தர் பற்றிய கருத்துக்கள் திருவள்ளுவரால் திருக்குறளில் நுண்மையாகக் கையாளப்பட்டுள்ளன. “புக்கில் அமைந்தின்று கொல்லோ” (குறள் 340) என்று திருவள்ளுவர் ஆள்வதால் உடம்போடு எல்லாம் அழிந்து போய்விடுகிறது என்ற உலகாயத் கொள்கையைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது என்னும் குன்றக்குடி அடிகளாரின் கருத்து ஏற்புடையதே. திருவள்ளுவர் தமிழர் அனைவர்க்கும் தனது கொள்கை பயன்பட வேண்டும் என்னும் பெருவிருப்பினர். ஆகவே நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்னும் அதிகாரங்களில் தெளிவான ஆன்மிகக் கருத்துக்களைத் தெரிவித்தாலும் இதன் சமயக் கொள்கை தெரிந்தால் பிறசமயத்தினர் தம் கொள்கையைப் பயன்படுத்தத் தயங்குவார்களோ என்ற எண்ணத்தில் தம் சமய அடையாளத்தை வெளிக்காட்டவில்லை என்றே கொள்ள வேண்டி உள்ளது. சைவ, வைணவ சமயக் கருத்துக்கள் பக்திக் காலத்துக்குப் பிறகே தோன்றியவை என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ள முடியாதது. திருக்குறளில் காணப்படும் ஆன்மிகக் கருத்துக்கள் சங்க இலக்கியக் கருத்துக்களின் தொடர்ச்சியாக அமைவதை திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பொருநர் ஆற்றுப்படை முதலிய நூல்களில் கண்டு, இவையே திருக்குறளில் ஆன்மீகக் கருத்துக்களாக விரிவடைந்து, பின் சைவ வைணவ கருத்துக்களாகப் பரிணமிப்பதை நாம் அறியலாம். திருவள்ளுவரின் தனிச்சிறப்பு என்னவெனில் தமிழ்ப் பண்பாட்டில் குடும்பத்தின் இன்றியமையாமையை வற்புறுத்துவதேயாகும். வடமொழியில் கொள்ளப்படும் நான்கு ஆசிரயமங்களைக் கொள்ளாமல் குடும்ப வாழ்வில் நின்று வையத்துள்ள வாழ்வாங்கு வாழ்தலை அவர் கூறுகிறார். வள்ளுவர் கூறும் துறவு சமண, பௌத்தர், சனாதனக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் கொள்வதைப் போன்று குடும்பத்தைத் துறத்தல் இல்லை. சங்க இலக்கியத்தில் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவாக மலர்கிறது. குடும்பத்திலிருந்து காட்டுக்குச் செல்லும் நிலையைக் குறிக்காமல் திருவள்ளுவர் உள்ளத் துறவையே வற்புறுத்துகிறார் எனலாம். “அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு” என்னும் குறள் 757 அருளுக்கும் பொருளுக்கும் உள்ள உறவை விளக்குகிறது. அன்பு என்னும் தாய் ஈன்ற குழவி அருள். இந்த அருள் என்றும் தாய் செல்வச் செவிலியால் சிறந்த நிலை பெறும் என்கிறார். அறம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை இந்த அறத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள அறிவு வேண்டும். அன்பு செய்வது என்பதும் அறிவின் அடிப்படையிலே நிகழ்வதுதான். மக்கள் அன்பை இருவகையில் வெளிப்படுத்துவர். முதலில் அன்பின் முழுப்பரிணாமத்தை அறியாமல் இயல்பாக வெளிப்படுத்தல். சிலர்அன்பின் பரிணாமத்தை முழுமையாக அறிந்து வெளிப்படுத்துவர். இரண்டாவது வகையில் அன்பை வெளிப்படுத்துவதற்கு அறிவு தேவை. சிவஞான சித்தியார் ஆசிரியர் அருள்நந்திசிவம் வாதத்தின் மூலம் அன்பு செய்வதற்கான அறிவு அடிப்படையை விளக்குகிறார். ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கு அன்பில்லார். அடியவர்க்கு அன்பில்லர் எவ்வுயிர்க்கும் அன்பில்லார், எவ்வுயிர்க்கும் அன்பில்லர் முடிவில் தம்உயிர்க்கும் அறிவல்லார் என்று விளக்கிப் “பேசுவதன ; அறிவிலாப ; பிணஙக்க் ளை” என்று அவர்கள் பற்றிக் கூறுகிறார். அறிவிலாப் பிணம் தான் அன்பு செய்யாது என்று அடைமொழி கூறுவதன் மூலம் அறிவுடையவர் அன்பு செய்வர் என்பதை ஆசிரியர் குறிக்கிறார். இருவினையை ஒப்புக் கொள்ளும் திருவள்ளுவர் இருள் காரணமாகத் தோன்றும் இருவினை நீக்கத்துக்கு இறைவன் பொருள் சேர் புகழ்புரிதல் வேண்டும் என்று வழிகாட்டுகிறார். இறைவனின் உண்மையான புகழைக் கூறும் அருளாளர்களின் மொழிகளை நாம் விரும்பி ஓத வேண்டும். அருளாளர்களின் மொழியை ஓதுதல் நோய்க்கு மருந்து போன்றது. நோய் நீங்க மருந்து அருந்தினால் மட்டும் போதாது. மருந்து முழுமையாகப் பயன்தர உடன்கூறப் படும் பத்தியங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். மருந்துக்குப் பத்தியம் போன்றதுதான் ஒழுக்கத்தில் நிற்றல் என்று நாம் விளங்கிக் கொள்ளுமாறு பொருள்சேர் புகழ்சேர் என்னும் குறளுக்கு (5) அடுத்து “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” என்ற குறள் அமைகிறது. இறைவனால் அருளிச் செய்யப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பவரே பொருள்சேர் புகழ்புரிதலின் முழமையான பயனைப் பெறுபவர் என்று நமக்கு விளங்குகிறது. “பொய்தீர் ஒழுக்க நெறி” என்ற திருக்குறள் தொடரின் விளக்கமாக பின்வரும் சிவஞானசித்தி சுபக்கப்பாடல் (93) அமைகிறது. “ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கிலாத் தவந் தானங்கள் வந்தித்தல் வணங்கல்வாய்மை அழுக்கிலாத் துறவு அடக்கம் அறிவோடு அர்ச்சித்தல்ஆதி இழுக்கிலா அறங்களானால் இரங்குவான் பணி அறங்கள்” இப்பாடல் சைவர்கள்கூறும 16 பேறுகளைக் குறிப்பதையும் உணர்ந்து மகிழலாம். ஆகவே இறைவனின் புகழைப் பாடுவதுடன் இறைவன் நெறி நிற்றலே வாழ்வின் குறிக்கோளைப் பொருள் உலகத்திலும் அருள் உலகத்திலும் அடைவதற்குரிய வழியாக அமைகிறது. அருள் இல்லாமை பொருள் இல்லாமை குறித்து திருவள்ளுவர் எவ்வாறு கருதுகிறார் என்பதை பின்வரும் குறள் விளக்குகிறது. “பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது” (குறள் 248) பொருள் இல்லாதவர் ஒருகாலத்தில் வளம் பெற்று வாழ வழியுண்டு@ அருள் அற்றவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே@ அவர் ஒருகாலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. கல்லாதவரிடம் சேர்ந்த செல்வமானது கற்றறிந்தே நல்லவரிடம் உள்ள வறுமையை விட மிக்க துன்பம் செய்வதாகும். “நல்லார்கண்பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண்பட்ட திரு” (குறள் 408) பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன@ உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும் என்பது திருவள்ளுவர் கூறும் கருத்து (குறள் 241) தொடர்புடையாரிடத்துச் செய்யும் அன்பு முன்பின் தெரியாதவரிடத்தும் விரிந்து மலர்ந்தால் அது அருளாகும். அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வரும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்க்கு இல்லை. “அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகழ்” (குறள் 243) இதுவரை பார்த்த திருவள்ளுவரின் கருத்துக்களை மேற்போக்காகப் பார்த்தால் அருள் உலகம். இருள் உலகம் என்று இரு உலகங்கள் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆயினும் திருவள்ளுவரின் கருத்தைக் கூர்ந்து நோக்கினால் நாம் காணும் பொருள் உலகத்தைப் பற்றி மட்டுமே இலக்கண வகையாலும் கூற இயலும். அருள் உலகத்தைக் காரண வகையால் மட்டுமே - இவ்வாறு செய்தால் பெற இயலும் என்பதைப் பற்றி மட்டுமே கூற இயலும் இவ்வகையில் காண்ட் (முயவெ) என்னும் ஜெர்மானிய அறிஞரின் கருத்தும் திருவள்ளுவரை ஒட்டியே அமைவதைக் காணலாம். காண்ட் ஐரோப்பியத்த உலகில் பகுத்தறிவின் எல்லையைக் கண்டு, நம் மனித மனமானது பகுத்தறிவின் எல்லையைத் தாண்டிச் செல்லாத வகையில் அமைந்து உள்ளதை எடுத்துக் காட்டுகிறார். உண்மையில் உண்மை (ழேரஅநயெ) உள்ளது என்று மட்டும் அறிய முடியுமே அன்றி. அது எவ்வாறு உள்ளது என்பதைப் பகுத்தறிவு மூலம் அறிய இயலாது. ஆனால் அறவுணர்வால் மட்டும் உண்மையின் தன்மையை அறிய இயலும் என்று கூறுகிறார். திருவள்ளுவர் அருள் உலகம் நிச்சயம் உண்டு அதற்கு அறிவுத் தெளிவு தேவை என்று கூறுகின்றார். “ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து” (குறள் 353) இதுவோ அதுவோ எனும் ஐயம், ஒன்றைத் தவறாகக் கருதும் திரிபு என்னும் இரண்டிலிருந்தும் நீங்கிய தெளிந்த அறிவுடையவர் இருக்கும் இடத்தை விட அவர் அடைய வேண்டிய மோட்ச உலகம் அருகில் இருக்க இருக்கப் பெறுவர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றன் ஐந்தன் வகை தெளிவான காட்சியில் பொதுவாக உலகம் உள்ளது. அருள் உலகம் பொருள் உலகம் என்னும் இரு உலகங்கள் உள்ளன. ஆயினும் அருள் உலகத்தைக் காரண வகையால் மட்டுமே அறிய இயலும். இந்த இரு உலகங்களைப் பற்றி அறிவதற்கு அறிவு சித்தாந்த சாதனமாக உள்ளது. சமய உலகத்தில் ஞானம் என்ற (சிறப்பான அறிவு) சொல் பயன்படுத்தப்படும். திருவள்ளுவர் ஞானம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆயினும் அறிவு என்னும ஒரே சொல்லை இருவகை நிலைகளில் பயன்படுத்துகிறார். “சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு” (குறள் 422) மனத்தைச ; சென்ற விடதத் pல ; செலவிடாமல,; தiP மயானதிலிருநது; நீகக் pக ; காத்து நன்மையானதில் செல்ல விடுவதே அறிவாகும். இங்கு பொருள் உலகத்தை அறிய உதவும் அறிவே குறிக்கப்படுகிறது. “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” (குறள் 358) பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமாக செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. ஈண்டும் அறிவு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டாலும் சென்றவிடத்தால் செலவிடாது தீமையை நோக்கி நன்றின்பால் செலுத்தும் அறிவின் ஆரம்ப நிலைக்கு எதிர்வாக உள்ள அறிவு சிறப்பென்னும் செம்பொருள் காண்பதாக உள்ள அறிவு இருவகை உலகங்களை அறிவதற்கும் அறிவு என்னும் ஒரே சொல்லைப் பயன்படுத்துகிறார். இதனால் வாழ்வாங்கு வாழ்தல் என்னும் வழியே இவ்வுலகத்துக்குப் பிறகு வானுலகத்தையும் சிறந்த வாழக்கையைப் பெறுவதற்குரிய வழி என்று திருவள்ளுவர் நிலை நாட்டுகிறார். குடும்ப வாழ்வில் பொருளுலுள்ள வகையில் வாழ்வாரே திருவள்ளுவர் கருதும் சிறப்பென்னும் செம்பொருளையும் காணலாம்@ வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். அறமே அனைத்திற்கும் அடிப்படை.