ஆடவர் ஒழுக்க்கமும் திருக்குறளும் (ஆயடந ஆழசயடவைல யனெ வுhசைரமமரசுயடு) மைகN; கல் ஆரோக் உலகப் பொதுமறையாம் திருக்குறள், வாழ்வில் இருவேறு அறங்களில், பல்வேறு நிலைகளில் முயல்பவருக்கு எக்காலத்துக்கும் ஏற்ற நன்னெறிகளை வரையறுத்து வழிகாட்டும் ஓர் அருமையான நூலாம். இந்நூல், ஒரு கருத்துக் கருவூலமாக விளங்குவதால், பல்துறை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கண்ணோட்டங்ளோடு ஆய்ந்து, வேண்டுவன பெற்று வருகின்றன. இந்நிலையில், திருக்குறள் காட்டும் ஆடவர் ஒழுக்கத்தை விரிவாக ஆய்ந்து, உலகுக்கு வெளிப்படுத்தி, அதன் மூலம் ஆண் குமுகாயம் நன்னெறிக் கோட்பாடு ஒன்றை வகுத்துக் கொண்டு, அதனை வாழ்வில் பின்பற்றி வளமுடன் வாழ, பிறர்க்கும் பயனள்ள முறையில் வாழ ஏதுவான நற்சிந்தனைகளை எழுப்புவதே இத்தலைப்பைத் தேர்ந்ததன் குறிக்கோள். வருங்கால இளைஞர் தலைமுறை சிறப்பாக வாழவேண்டின், உடனடியாக நடைமுறைக்குக் கொணர வேண்டிய இன்றியமையாக் கருத்த்தாகவும் இவ்வொழுக்கம் அமைந்துள்ளது. இன்i;றைய ஆடவரின் போக்கு;கு இன்றைய விரைவுலகத்தில், மாந்தர், தத்தம் துறைகளில் தொழில்நுட்பத் திறனை மேன்மேலும் பெருக்குதலில் அதிக முனைப்போடு செயல்படுகின்றனர்@ செயல்படவேண்டிய சூழ்நிலையில் வாழ்கின்றனர். அதற்கான காரணங்களை ஆராய முற்படின், மக்கள் தொகைப் பெருக்கம், அதன் தேவைகளின் பெருமை (எண்ணிக்கை மற்றும் அளவு), அவற்றை நிறைவு செய்யவேண்டியதில் உள்ள குறுகிகய காலக்கெடு, அதனடிப்படையில் தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறன் பெருக்கம், குறைந்த செலவில், இலகுவான முறையில் தரத்தில் குறைவின்றி மிகுந்த உற்பத்தி, வணிகக் களங்களில் போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம், இவையனைத்துக்கும் ஏதுவான தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி ஆகியன ஒன்றைத் தொட்டு ஒன்றாக தொடர்காரணங்களாக அமைகின்றன. ‘செய்வன திருந்தச் செய்’ என்ற அடிப்படையில் இம்முனைப்பு வரவேற்கத்தக்கலும், தவிர்க்க முடியாததும் என உணரப்படுகிறது. அதே சமயத்தில், அதிக வருவாய், குறைந்த உழைப்பு, குறுகிய காலச்செலவில் வசதி வாய்ப்புகளில் உன்னத நிலை ஆகியனவும் மறைமுக காரணிகாளாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இவற்றிற்காதாரமாக, பங்குச்சந்தை, நேரடிவிற்பனைமுறை (னுசைநஉவ ளுநடடiபெ ஃ ஆரடவi – டநஎநட ஆயசமநவiபெ) இன்றைய விளம்பரங்களின் தரம் ஆகியவற்றைக் குறித்துக் காட்டலாம். அமர்ந்த இடத்திலேயே பங்குகளை வாங்கியும் விற்றும் பொருளீட்டுதல், சூதாட்டத்தை ஒத்த முதலீடுகளில் பணத்தைப் பெருக்குதல், நேரடி விற்பனை முறை ஆகிய பொருளீட்டுதல், அவ்வுத்திகளையே தேர்ந்த விற்பனை உத்திகளென மாணவர்களுக்கு பாடமாக அமைத்தல், அதே வழியில் விளம்பரங்களை உருவாக்க ஊக்கப்படுத்துல் ஆகியன மேற்கூறிய மறைமுக நோக்கங்களை, ஊன்றிப் பார்ப்பவர்க்கு உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டித் கொடுக்கின்றன. ஆகவே, இன்றை ஆடவர் போக்கு, பொருளீட்டுதலில் எவ்வித அறமுறைமையையும் (நுவாiஉள) பின்பற்ற வேண்டியனவாகக் கருதுவாக அமையவில்லை. பெரும்பாலான ஆடவர்pன் குறிக்கோள் பொருள் பெறுதலும், அதற்காக கல்வி பெற்று, அறிவைக்கூர்மையாக்கி, அதன் மூலம் பொருள் பெற்று, இவ்வுலக வாழ்வின் அனைத்து இன்பங்களையும் கரைகாணும் கருத்துடன் துய்த்துணர்தலுமே. அவ்வப்போது, துன்பங்களைச் சந்திக்கும்போதும், கருணை உணர்வு மேலோங்கும்போதும், அயலார்க்கு பொருறுதவி செய்து, தாம் பிறந்த மதங்களுக்கும், அவை ஊட்டிய உணர்வுக்கும் நக்றி செலுத்திவிட்டதாக நிறைவு பெறுகின்றனர். இந்நிலையை பட்டினத்தார் ஏற்கனவே தௌ;ளத்தெளிவாகப் பின்வரும் பாடலில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். “நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடி பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வழியறியீர்@ கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்திட்ட குரங்குநிலை போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே!” மேற்குறித்துக் காட்டப்பட்ட தற்போதைய உலகியல் கொள்கைகளால் ஏற்படும் விளைவுகளைச் சற்று ஆராய்வோம். உழைப்பு குறைந்ததால் உடல்நலக் குறைவு, வலுவின்மை, விரைவான வாழ்க்கை முறையால் மன அழுத்தம் முதலான உளவியல் நோய்கள், முற்காலத்தில் கேட்டறியாத, அல்லது எண்ணிக்கையில் குறைவாக இருந்த பாலியல் நோய்கள் ஆகியனவற்றோடு வாழப்பழகிக் கொண்டிருக்கிற மக்கள், துன்பம் தவிர்த்த இன்பமான வாழ்க்கை வாழ விழைவதுமில்லை@ விழைந்தாலும் தேவையில்லாதனவற்றை இழக்கத் துணிவதுமில்லை. இன்றைய உலகியல் வாழ்க்கை, பின்விளைவு கருதாத வாழ்வாகவே பெரும்பாலும் அமைகிறது. பின்வரும் பாடல்களை நினைவில் நிறுத்தி சிந்தித்தால், ஆடவர்தம் இன்றைய நிலையை நன்கு உணரலாம். “அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்” (1) “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” (2) “நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.” (3) “இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” (4) மாந்தர், தத்தம் துறைகளில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும் சிறந்த செயல்பாடுகளாக (நுககiஉநைவெ யுஉவiஎவைநைள) (குறைந்த செலவில் அதிக வருவாய்) செய்து முடிக்க முயற்சிக்கின்ற வேளையில், வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்க வேண்டாமா என எண்ணிப் பார்க்க வேண்டும் (குறைந்த துன்பம் நிறைந்த இன்பம்). நாம் பிறந்ததின் நோக்கம், அதனை அடைய இவ்வுலகில் செய்ய வேண்டிய பணிகள் ஆகியனவற்றை பணிஓய்வு பெற்றபின் சிந்திக்க வேண்டிய கருத்துகளாக கருதாமல், பருவமெய்திக் காலந்தொட்டே நோக்கங்களைப் பற்றிச் சிந்தித்து, வாழ்க்கையையும் சிறப்பானதாக வாழ்ந்து முடிக்க முயற்சி மேற்கொள்ப்படல் வேண்டும் “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்” (5) “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்” (6) ஆகிய இருபாடல்களையம் கருத்தூன்றிச் சிந்தித்து அறிய வேண்டும். பண்ப்பாட்டு;டுப் பரிமாற்ற்றம்:;:;: மேலும், பிற நாட்டின் பண்பாட்டுத் தாக்கங்களுக்குக் கண்மூடித்தனமாக இணங்கி ஏற்றுப் பின்பற்றுவதலும் இன்றைய ஆடவர் போக்கில் உள்ள தலையாய நிலைகளில் ஒன்றாம். ஆங்கில ஆதிக்கம் தொட்டு பல்வேறு பழக்க வழக்கங்கள் நம் நாட்டின் பண்பாட்டில் ஊடுருவி வருகின்றன. குறிப்பாக, குழம்பி (ஊழககநந), தேநீர் மற்றும் மது அருந்துதல், உறங்குவதற்கு கட்டில் மற்றும் மெத்தை பயன்படுத்துதல், பெண்டிர் குறை ஆடையும், ஆடவர் உடலை முழுவதுமாக மறைப்பதும், இறுக்கமானதுமான ஆடையும் அணிதல் ஆகியன. இவை குளிர் பிரதேசங்களில் முறையே வெப்பத்தை உண்டுபண்ணவும், தரை குளிராக இருக்கும்போது, தரையினின்று சற்றே உயர்ந்த நிலையில் இருக்கவும், உடலுக்கு இதமான வெப்பத்தைக் கொடுக்கவும், அப்பிரதேசங்களில் இயல்பாக குறைந்து காணப்படும் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், குளிரிலிருந்து உடலைப் பாதுகாக்கவம் நடைமுறைப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களாகும். இவை வெப்ப பிரதேச நாடான நம் நாட்டிற்கு முற்றிலும் எதிர்மறையான விளைவுகளைத் தருவனவாகும். அதற்காக யாம் பண்பாட்டுப் பரிமாற்றம் கூடாது என்று வலியுறுத்தவில்லை. செய்தித் தொடர்ப துறையில் ஏறபட்டுவரும் துரித சொழில்நுட்ப வளர்ச்சியினால் உலகமே ஒரே குக்கிராமமாக மாறிவிட்டது. இந்நிலையில், பரிமாற்றம் தவிர்க்க இயலாத ஒன்று. எடுது;துக்காட்டாக, நம் நாட்டினின்றும் தியானம் பழகுதல், யோகாசனங்கள் பயிலுதல் ஆகியன பிறநாடுகளில் ஏற்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நாமும் ஏனைய நாடுகளில் உள்ள பெண் கல்வி, பெண் மதிப்பு, மனித உரிமை, குழந்தை வளர்ப்பு முறை ஆகியனவற்றை இங்கேயும் தருவிக்கச் சட்ட திருத்தங்கள் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் துய்த்துணர்தல் (அனுபோக) தொடர்பான, புலனின்பச் சார்பான பழக்க வழக்கங்களே எளிதில் தருவிக்கப்பட்டு பின்பற்றப்டுகின்றன. இதன் பின்னணியல், ஒழுக்கத்தின் வரையறை, அதனைக் கடைபிடிக்க வேண்டிய உடனடித்தேவை, நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஆகியன பற்றிப் பின்வரும் பகுதிகளில் ஆராயலாம். 2. ஒழுக்க்கமும் அதன் இன்ற்றியமையாத் தன்i;மையும்:;: ஒழுக்கம் எனும் சொல், இரு பொருள்களில் வள்ளுவரால் கையாளப்படுகிறது. நடத்தல் அல்லது பின்பற்றுதல் என்று ஒரு பொதுப்பொருளிலும், நன்னடத்தை என்று மற்றொரு தனிப் பொருளிலும் வழங்கப்படுகிறது. முதல் பொருளுக்கு ஆதாரமாக, “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” (7) ‘உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்”. (8) (இரண்டாம் பாடலில், நல்லொழுக்கம், தீயயொழுக்கம் என்று இருவகையாக ஒழுக்கத்தை வகுப்பதால், ‘ஒழுக்கம்’ என்கிற தனிச்சொல் எல்லா இடங்களிலும் நல்லொழுக்கத்தையே குறிக்க வேண்டியதில்லை என்க) ஆகிய பாடல்களையும் இரண்டாம் பொருளுக்கு ஆதாரமாக, பல பாடல்கள் இருப்பினும், ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” (9) “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.” (10) ஆகிய இருபாடல்களiயும் சுட்டலாம். ஒழுகத்தின் வரையறையைப் பொறுத்தவரையில் வள்ளுவர் நேரடியாக வாய்மையை வரையறுத்தாற்போல் வரையறுத்தாரில்லை: “வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.” (11) ஆதலின், பல பாடல்களின் பொருளை ஒன்றுதொட்டு ஒன்றாகப் பிணைந்து கொண்டுகூட்டி வரையறை செய்து பார்க்கலாம். அதன்முன்னர், தமிழ் நூல்களில் காணுஞ் சில வரையறைக்ளைக் காணலாம். பிற்கால நீதி நூல்களான, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் தொடங்கி நீதி வெண்பா வரையிலான நூல்களிலும் பன்னிலையினருக்குமான ஒழுக்கமே அறிவுறுத்தப்பட்டாலும், ஒரு பொதுவான வரையறையாக அளிக்கப்படவில்லை. “சீர்மை மறவேல்” “நேர்பட ஒழுகு” - என ஆத்திச்சூடியிலும் “ஆதலின் நன்றே ஒழுக்கம்”, “நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு” - என கொன்றை வேந்தனிலும் “வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்” “வழியே ஏகுக, வழியே மீளுக” - என வெற்றிவேற்கையிலும் காணப்படினும், இவையனைத்தும் ஒழுக்கத்தின் இன்றியமையாத்தன்மையைக் குறித்துக் காட்டுவனவேயின்றி, வரையறையாக அமையாதலைக் காண்கிறோம். பரிமேலழகர் உரையில், ஒழுக்கம் வருணத்திற்கான ஒழுக்கமாகவும், குலத்திற்கான ஒழுக்கமாகவம் வரையறை செய்யப்படுகிறது. அதற்கிடந் தரும்படி இருபாடல்கள் : “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.” (14) “மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (15) ஒழுக்கமுடைமை பிரிவில் உள்ளன. ஆனால், வருணமுறை தற்காலத்தில் வழக்கில் இல்லாமையினும், வள்ளல் பெருமான் வாக்கின்படி, எவ்வகைக் கூறலும் தீமைக்கும் துன்பத்திற்கும் இட்டுச் செல்லுதலானும் அவ்வகை வரையறை ஏற்புடையாதாகாது. மேலும், ‘குடிமை’ பிரிவில் உள்ள பாடல்களைக் கூர்ந்து ஆராய்ந்தால், ‘நற்குடி’ என்னும் பொருளே விஞ்சி நிற்கக் காணலாம். பொதுமக்களிடம் நிலவி வருகின்ற ஒழுக்கத்தின் வரையறை சற்று மாறுபட்டது. காலந்தவறாமை, பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடத்தல், உடற்கற்பு முதலான புற ஒழுங்கு முறைமைகளையே ஒழுக்கம் என்று கருதுவதாகத் தோன்றுகிறது. ஆனால், தற்காலத்தில் ‘பாமர மக்களின் தத்துவ ஞானி’ என்று அழைக்கப்படும் அருள்தந்தை வேதாத்திரி அவர்களின் விளக்கம், புற, அக மற்றும் ஆன்மிக வரையிலான அனைத்து ஒழுங்கு முறைமைகளுக்கும் அடிப்படையான விளக்கமாக அமைகிறது. “தனக்கோ, பிறர்க்கோ, உடலுக்கோ, மனம் மற்றும் அறிவிற்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ துன்பம் தராத எந்த செயலும் ஒழுக்கம், பிறவனைத்தும் இழுக்கம் ஆகும்”. “இயற்கை துன்பங்கள் எனும் வெப்ப தட்ப ஏற்றங்கள் பசி, உடலின் கழிவு உந்தல் முயற்சியால் காலா காலத்தில் தீர்க்க, முடையற்ற வாய்ப்புதான் சுதந்நதிரம் ஆம். செயற்கையில் ஒருவர் பிறர்சுதந் திரத்தை சீர்குலையச் செய்யாத முறையில் வாழும் பயிற்சியும் நன்னடத்தையும் ஒன்றிணைந்த பண்பாடே ஒழுக்கம், அறம்நீ தியாகும்” இவ்வரையறை, தீமைதரும் எந்த செயலும் ‘ஒழுக்கம்’ என்ற பெயருக்குக்கீழ் ஒளிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் நுண்ணியதாகவும், எளிமையாகப் புரிந்து கொள்ள தக்கதாகவும் அமைகிறது. இதில் மிகவும் வியக்கத்தக்க நிலை என்னவெனில், இதே கருத்தை வள்ளுவத்திலும் கொண்டுகூட்டி பெற இயலுகிறது. அது பின்வருமாறு: தீயொழுக்கம் என்றும் துன்பம் தரத்தக்கது என்றம், துன்பமி;லாமல் வாழ, அவாவின்மை அடைதல் வேண்டும் என்றும், அதற்கு வாய்மையுடையவராய் வாழ்தல் வேண்டும் என்றும் அவ்வாய்மை யாதொன்றும் தீமைஇலாத சொலல் என்றும், வள்ளுவத்தில், பல பாடல்களில் காணக்கிடக்கின்றன. இதனை, “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்@ தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” (7) “அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற் றவாஅது மேன்மேல் வரும்” (15) “தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்” (16) “வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்” (11) என்று குறிப்பிடக் காணலாம். இங்கு, ‘தீமை இலாத சொலல்’ எனப்படுவது, ‘தீமை இலாத செயல’; என்று கொள்ளப்பட்டால், மேற்கூறிய அதே கருத்து தருவிக்கப்படும். இவ்வொழுக்கம், இருபாலார்க்கும் கொதுவா அல்லது தனித்தனியே ஆடவரொழுக்கம் என்றும் பெண்டிரொழுக்கம் என்றம் அணுகத்தக்க இருவேறு கருத்தாவெனில், அஃது பொதுவேயாம். ஆயின், ஆடவரொழுக்கம் என, ஈண்டு, தனியே ஒருபாலார்க்கு மட்டும் எல்லைகட்டுதலில் உள்ள நோக்கங்கள், இதுகாறும் ஒழுக்கம் பெண்டிர்க்கே பெருமளவில் வலியுறுத்தப்பட்டு வந்தமையானும், நிரந்தர பெண் விடுதலைக்கு ஆடவரொழுக்கமே முதலில் நிறுவப்படவேண்டும் என உரைப்பட்டமையானமே. உலகில் தற்போது காணப்படும் தீமைகளான, தனிமனித அமைதியின்மை, குடும்பத்தில் கணவன் மனைவியிடையே முனைப்பின் (நுபழ) அடிப்படையில் எழும் மனத்தாங்கல்கள், பிள்ளை வளர்ப்பில் மெத்தனப் போக்கு, சாதி, சமய, இன, மொழிப் போர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு, அரசியல் போர்கள், ஏன், ஆன்மிகத்திலும் போலித்தன்மையால் மக்களுக்க அறநெறியிலும், இறையுணர்விலும் நம்பிக்கைத் தளர்வு ஆகியன மேலே வரையறுக்கப்பட்ட ஒழுக்கத்தின் இன்றியமையாத் தன்மையினை உணராததாலேயே தோன்றிச் சுற்றி வளைத்து வருகின்றன என்பது உணரப்படும். ஆகவே, உடனிடியாக, இவ்வொழுக்கத்தின் அவசியம் கல்வித்துறையின் மூலம் அனைவர்க்கும் உணர்த்தப்படல் வேண்டும்.
3. ஒழுக்க்கத்த்திற்கு;கும் கடமைக்கு;குமுள்ள்ள தொடர்பு;பு : தவறாது கடமை செய்ய விழைபவர் ஒழுக்கச் சீலராய் இருந்தாலன்றி அந்நிலையை அடைய இயலாதென்பதும், பிற நல்லொழுக்கங்களையெல்லாம் கடைப்பிடித்து, கடமையில் தவறிய ஒருவரை ஒழுக்கமானவர் எனல் இவ்வுலகில் நிகழாதென்பதும் அனைவராலும் ஏற்கத்தக்க பொது கருத்து. வள்ளுவரும், தவஞ்செய்பவரை கடைமையாற்றுபவராகவும், கடமையாற்றுபவரைத் தவஞ்செய்பவராகவும் கருதுவது பின்வரும் பாடல்களில் வெளிப்படுகிறது. “தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு” (18) ஆகவே, ஒவ்வொரு ஆடவனும், தாய்க்கு, தந்தைக்கு, இல்லாளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், பொருளீட்டுதலில் முறைமை, அதனைக் காத்தல், பிறர்க்கும் பயனள்ள முறையில் செலவழித்தல் ஆகிய முறைமைகள், இல்லற இன்ப முறைமை எனப் பன்னலை முறைமைகளைத் தெளிந்து வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஓர் ஆடவன் தந்தையாக, மகனுக்கு சான்றோர் சபையில் முதன்மையான இடம் பெறத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தலும், அதற்கு நன்றியாக, மகன், தந்தைக்கு ‘இவர் இம்மைந்தனைப் பெற என்ன தவஞ் செய்தாரோ’ எனக் கேட்குமளவுக்கு நற்புகழைப் பெற்றுத் தருதலும், சான்றோனாகத் திகழ்ந்து, பெற்றக் காலத்துக் கொண்ட மகிழ்ச்சியிலும் பெருமகிழ்ச்சியைத் தாய்க்கு ஏற்படுத்தலும், வள்ளுவர் வகுத்த கடமை அறங்களாகும். அவை கீழே காணும் குறள்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன: “தந்தைமகற் காற்றும் நன்றி அவையத்து முநத் p இருப்பச ; செயல”; (19) “மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்” (20) “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” (21) வினைக்கடமை: ‘வினைNயு ஆடவர்க்குயிரே’ என்ற சங்கக் காலப் பாடல்வரியிலிருந்து ஆடவர் உழைப்பின் மேன்மையை உணர்ந்து வினையாற்ற வேண்டிய நிலையை உணர்கிறோம். வள்ளுவரும், வினையாற்றும் முறையை ஆழமாக ஆராய்ந்து, பல பிரிவுகளில் தௌ;ளத் தெளிவாக விளக்கியிருக்கின்றார். வினையை, எண்ணித்துணிந்து, வலியறிந்து, காலம்,இடம் அறிந்து, தெரிந்து தெளிந்து, தக்காரைத் துணையாகத் தேர்ந்து செயல் வேண்டும் என்னுந் தேர்ந்த முறையை தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் ஆகிய பிரிவுகளில் வரைந்தளித்திருக்கிறார். இக்கருத்தினை, “எண்ணித் துணிக கருமத் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு” (22) “வினைவலியுந் தன்வலியு மாற்றானவலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல”; (23) “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” (24) “தொடங்கற்க வௌ;வினையு மௌ;ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது” (25) “குணநாடிக் குற்றமும் நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல”; (26) “இதனை இதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை அவன்கண் விடல்” (27) எனக் குறிப்பிடுகிறார். ஈண்டு, கடைசிப் பாடல் மேலாண்மை துறைச் சார்ந்தவர்க்கு பெரிதும் தொடர்புடையதாக அமைந்திருக்கக் காணலாம். அறவழி பொருளீட்டல்: வினையாற்றுதலின் பயன் பொருளீட்டல் ஆகும். அதன் தேவையையும், அதிலும் முறையாகப் பொருள் செயல் வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்துவதை இவ்வாறு குறித்துக் காட்டலாம். “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்” (28) “அறனீனு மின்பமு மீனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள”; (29) “கலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று” (30) அங்ஙனம், ஈட்டிய பொருளைக் காத்தலும், காத்த பொருளை இல்லற கடமைகளை ஈடேற்றவும், ஈந்து உவக்கவும் சில ஒழுங்குமுறைகளையும் வள்ளுவர் வரையறுத்திருக்கின்றார். “இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த வகுத்த வல்ல தரசு” (31) (ஈண்டு, அரசர்க்குச் சொல்லப்பட்டதாயினும், குடும்பத் தலைவனுக்கும் பொருந்தும் என்பது நோக்கத்தக்கது. “ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை போகா றகலாக் கடை” (32) “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி” (33) ஆகிய பொருளைக் காத்தலின் அவசியத்தையும், “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” (34) “துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை” (35) ஆகியன இல்லற கடமையாற்ற, காத்த பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், “ஈத்துவக்கும் இன்பம் அறியார்சொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்” (36) “தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” (37) ஆகிய ஈகையின் சிறப்பையும் எடுத்தியம்புகின்றன. இல்ல்லற இன்ப்ப முறைமை: இல்லற இன்பத்திலும், ஆடவர் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதனை வரைவின் மகளிர், பிறனில் விழையாமை ஆகிய பிரிவுகளில் உறுதிபடக் கூறுகிறார். சுருங்கக் கூறின், எல்லா செயல்பாடுகளிலும் அளவு மற்றும் முறை கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை, “அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” எனும் பாடலில் அறுதியிட்டுரைக்கின்றார். இவற்றிலிருந்து, தமிழர் பண்பாடாம், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் உயரிய இல்லற முறைமை வலியுறுத்தப்படுதலும், பரத்தைமை ஒழிக்கப்பட பரிந்துரைக்கப்படுதலும் வள்ளுவரால் உணர்த்தப்பட்டுள்ளது. இங்கு, பரத்தைமை பெண்டிரொழுக்கம் பாற்பட்டது என முற்றிலுமாக பெண்பாலார் மீது குறைகூறிவிட முடியாது. இதில், ஆடவரின் முறையற்ற வழியில் பொருளீட்டும் தன்மயும், பெரும்பங்காற்றுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இக்கருத்து, விவேக சிந்த்தாமணி நூலில் பின்வரும் பாடலில் பொதிந்துள்ளது. “பொம்மெனப் பணைத்து விம்மிப் போர்மதன் மயங்கி விழும் கொம்மை சேர் முலையினாளே! கூறுவேன் ஒன்று கேண்மோ: செம்மையில் அறஞ்செய்யாதாhர் திரவியம் சிதறவேண்டி நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே” எனவே, முறையற்ற வழயில் செல்வஞ் சேர்த்தலைத் தவிர்த்தால் பரத்தைமை பெரிதும் ஒழிக்கப்படும். ஆதலின், இதில் ஆடவர் பங்கு பெரிது. நல்வ்வழி நூலிலும் “ஆன முதலில் அதிகஞ் செலவானர் மான மிழந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்குந் தீயனாய் ஏழ்பிறப்பும் கள்ளனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” (39) எனும் பாடல் உயிர்ச்சக்தி வீணாவதைக் குறித்தே பேசுகிறது. ஆனால் பெரும்பாலானோர் பொருள் அழிவைக் குறிப்பதாகப் பொருள்கொள்வர். அங்ஙனம் ஆயின், மதிகெடலும், ஏழ்பிறப்பும் தீமையுண்டாதலும் பொருளழிவிற்கு ஏற்ற தண்டனை அளவைக் காட்டிலும் கூடுதலாக அமைதல் காண்க. ஆகவே, இவற்றையெல்லாங் கருத்தில் கொண்டு, ஆடவர் இல்லற இன்பத்திலும் ஒழுக்கங்கடைப்பிடித்தல் வேண்டும். இறுதியாக, வள்ளுவத்தில் சான்றாண்மை ஒழுக்கத்தின் உயர்நிலையாகவும், அதுவே இறுதிநிலையாகவும் அறிவுறுத்தப்படுகிறது. “கடனென்ப நல்லவை எல்லாம் @ கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு” (40) ஒழுக்கச் சீலர்களுக்குச் சான்றோர் எவ்வௌற்றையெல்லாம் நல்லவை என வரையறுத்திருக்கிறார்கள்ளோ, அவற்றையெல்லாம், கடமையாகச் சிரமேற்கொண்டு செய்து நிறைவெய்துவர் எனக் காட்டப்படுகிறது. இதே பொருளைத் தான் நாமும் பல பாடல்களிலிருந்து ஒழுக்கத்தின் வரையறையாகத் தொகுத்தளித்தோம். நடைமுறைப்ப்படுத்த்த செய்ய்ய வேண்டு;டுவன: மேலைநாட்டறிஞர் ஜேம்ஸ் ஆலன் என்பாரை ‘எண்ணங்கள் பற்றிய ஆய்வின் தந்தை” என்றழைப்பர். ஆனால், வெகுகாலத்திற்கு முன்தொட்டே தமிழர் எண்ணத்தின் வலிமையை உணர்ந்திருந்தனர் என்பதை ‘ஊக்கமுடைமை’ பிரிவில் வள்ளுவர் அறிவுறுத்துவதிலிருந்து அறியலாம். எண்ணம் எவ்வளவு வலிவுடையதாயின், பொருளாதாரத்தில் தாழ்நிலையில் இருப்பவர், உயர்நிலையில் உள்ளவரைப் பார்த்து ஏங்கினாலும், அழுக்காறு கொண்டாலும், அஃது அவ்வுயர் நிலையில் உள்ளவரை அமைதியாக வாழ விடாது. ஆதலின், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” (41) எனும் வாக்கிற்கேற்ப, அறஞ்சார்ந்த பொருளீட்ட முனைதல் வேண்டும். அதேபோல், மேலே கூறப்பட்டுள்ள அனைத்து ஒழுக்க முறைமைகளையும் இன்னும் ஆழமாய்ச் சி;ந்தித்து, அறிஞர் பெருமக்கள் கல்வித்துறை வழியாக, சிறுவர் சிறுமியர் முதற்கொண்டு அனைவரும் உய்த்துணர வகைவழி செய்தால், இருபத்தைந்தாண்டுகளில் தமிழர் சமுதாயம் ஓர் ஒப்பற்ற நிலைசெய்தி உலகுக்கு ஒளிகூட்டி வழிகாட்டும். தற்காலத்தில், இறைஞரிடையே பெரிதும் நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்தும் துறைத்தேர்தலில் வழிகாட்ட பின்வரும் குறளைப் பயன்படுத்தலாம். “உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்” (8) ஈண்டு, இயற்கையோடு ஒத்து வாழ்தல் (டுiஎiபெ in ர்யசஅழலெ றiவா யேவரசந) என்னும் பொருளியல் இக்குளளை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இயற்கை ஒவ்வொரு மனிதனைப் படைக்கும் போதும், ஒரு திறமையேனும் கொடுத்துத்தான் படைக்கிறான். அத்திறமையை அறிந்து, கூர்மையாக்கித் தானும் பிறரும் சமூகமும் சிறப்பாக வாழ உழகை;க வேண்டும். அதைவிடுத்து, அவ்வக்காலத்தில், எத்துறை புகழையும் பொருளையும் அள்ளத் தருகிறேதோ, அதைத் தேடி ஓடுதல் வேண்டா. எடுத்துக்காட்டாக. தற்காலத்தில் கணிணித் துறையை நோக்கி பெரும்பாலானோர் ஈர்க்கப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். அவ்வாறு எல்லாரும் ஒரு துறையையே தேர்ந்தால், மற்ற துறைகளில் பற்றாக்குறை ஏற்படும்: அல்லது தோல்வியுள்ள பின்னர், துறையை மாற்ற வேண்டி வரும். வீண்பொருள் மற்றும் காலச் செலவு தானே! இயற்கை அன்னையின் திட்டப்படி நடந்தாலே எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழலாம். இங்ஙனம், ஆடவரொழுக்கம் தனிமனித அமைதி, இல்லறத்தில் அமைதி மற்றும் உலக அமைதியைக் கொடுக்கவல்லது. இங்குச் சுட்டிக்காடட்டப்பட்டது போல், பெண்டிரொழுக்கத்திற்கும் அடிப்படையாகவும், துணையாகவும் நிற்பதால், அதனில், மிகுந்த கருத்தூன்றி, ஆடவர் செயலாற்றினால், “போரில்லா நல்லுலகம் பொருள்துறையில் சமநீதி நேர்மையான நீதிமுறை நிலவுலகுக் ஓராட்சி சீர்செய்த பண்பாடு சிந்தனையோர் வழிவாழ்வு சிறப்புணர்ந்த பெண்மதிப்பு தெய்வநீதி வழிவாழ்தல் தேர்த்திருவிழா தவிர்த்தல் சிறுவர்கட்கே விளையாட்டு செயல்விளை வுணர்கல்வி சீர்காந்த நிலைவிளக்கம் பார்முழுவதும் உணவுநீர் பொதுவாக்கல் @ பலகடவுள் பலமதங்கள் பழக்கமொழித்து உண்மையொன்றைத் தேந்திடுதல்” எனும் உன்னத நிலைகளை எய்தி, உலக அமைதியுடன் வாழலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நூற்கு;குறிப்பு;பு 01. குறள் எண் 427 02. 435 03. 320 04. 629 05. 362 06. 10 07. 138 08. 140 09. 131 10. 135 11. 291 12. பரிமேளழகர், பரிமேழகர் உரை, பக்கம் எண். 50. சைவ நூற்பதிப்பு கழகம் 13. பிறகால நீதி நூல்கள், 2004, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, தியாகராஜநாதர், சென்னை-17. 14. குறள் எண் 133 15. 134 16. 364 17. அருள்தந்தை வேதாத்திரி அவர்கள், “எனது வாழ்க்கை விளக்கம்” பக். 38, வேதாத்திரி பதிப்பகம், 156, காந்தி ரோடு, ஈரோடு -1. 18. குறள் எண். 266 19. 67 20. 70 21. 69 22. 467 23. 471 24. 490 25. 491 26. 504 27. 517 28. 751 29. 754 30. 660 31. 385 32. 478 33. 477 34. 41 35. 42 36. 228 37. 212 38. 429 39. பிற்கால நீதி நூல்கள், பக் 127, 2004 தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, தியாகராஜநாதர், சென்னை-17. 40. குறள் எண். 981 41. 322 எனது சிந்தனையை சீரமைத்து உய்விக்கம் குருக்களான வள்ளல் பெருமானார்க்கும், அருள்தந்தை வேதாத்திரி அவர்கட்கும் பாதமலர்க் காணிக்கை.