திருவள்ளுவர் மிகத்தெளிவாக பனுவல் துணிவு என நீத்தார் பெருமை கூறும் போது முன்னோர் இந்திய மெய்யியல் மரபின் வழியில் திருக்குறளை இயற்றியுள்ளார்; வள்ளுவர் நூல் என 20க்கும் மேற்பட்ட குறட்பாக்களில் முந்தைய நூல்களை கூறுகின்றார். மேலும் சான்றோர்க்கு ஏற்றது, உலகத்தார் உலகு ஏற்பது, என்ப & என்மனார் என்பவை எல்லாமே முன்னோர் மரபினை கூறுவது என அறிஞர்கள் மிகத் தெளிவாக நமக்கு காட்டுகின்றனர்.
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான” - (தொல்:பொருள்:638) தொல்காப்பிர். உலகவழக்கு என்பது உயர்ர்ந்தோர் மேலேயே என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார் . நிகழ்வுகள் அவர்களால் நடைபெறுகின்றனவாம்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என கூறியவரே எனக் கூறியவரே அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து (501); அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை(441) என மீண்டும் கூறுவதால் வேதங்களும் அதன் சாரமாகிய தர்ம சாஸ்திரத்தின் வழிமுறையே உயர்ந்தோர், சான்றோர் & உலகு என திருவள்ளுவரே கூறுகின்றார்.
எல்லா காலங்களிலும் மெய்யறிவை ஏற்காது இறைவன் நம்பிக்கை இல்லாத முன்னோர் மரபினை ஏற்காதவரை முழுமையாக திருவள்ளுவர் நிராகரிக்கிறார் என்பதை கீழ் உள்ள குறட்பாக்கள் காண்கிறோம்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. மெய்யுணர்தல்: குறள் 358
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யறிவு.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426: அறிவுடைமை
மணக்குடவர் உரை:யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
திருக்குறளை ஆய்வு செய்வோர் 20ம் நூற்றாண்டில் வந்த எந்த ஒரு உரையையும் அடிப்படையில் செய்பவர்கள் பெரும்பாலும் திருவள்ளுவரின் அடிப்படைக் கருத்துக்கு விரோதமாக செல்பவர்களாக உள்ளார்கள். தமிழகத்தின் கல்வி என்பது கிறிஸ்தவ காலனி ஆதிக்க மதவாத சக்திகளால் கடந்த 200 ஆண்டுகளாக உள்ளமையால் தமிழ் மரபிற்கு மெய்யியல் விரோதமான சிந்தனையாளர்கள் பலரும் திருக்குறளை சிறுமை செய்து வருகின்றனர் ஆனால் அவர்கள் தமிழ்ப் பற்றாளர்கள் என்ற வேடம் போடுகின்றனர் இதைத் திருவள்ளுவர் மிகத் தெளிவாக நமக்கு காட்டியுள்ளார்