New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்
Permalink  
 


குறளின் குரல், ஆத்ம ஞானம் – திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

வழங்கியவர்தயாள கோவிந்த தாஸ்

 
 

தமிழ் மொழியின் முக்கியமான நூல்களில் ஒன்றுதிருக்குறள்திருக்குறளின் நோக்கம்மனிதர்களை நன்னெறியிலே செலுத்தி இறையருள் பெற வைக்க வேண்டும் என்பதேதிருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தின் மூன்று குறள்களில் (1, 5, 6) இறைவனின் சிறப்பான நிலையையும் அவரை நாடும் சிறப்பையும் சொல்லிமீதி ஏழுகுறள்களிலே சரணாகதி தத்துவத்தைக் கூறுகிறார் வள்ளுவர்வைணவ இலக்கியங்களானநாலாயிர திவ்ய பிரபந்தம்பகவத் கீதைஸ்ரீமத் பாகவதம் ஆகியவை இந்த தத்துவத்தையேவலியுறுத்துகின்றனபகவான் ஸ்ரீ சைதன்யர் ஸ்ரீமத் பாகவத தர்மமாகிய சரணாகதியையும் இறைத்தொண்டையும் இந்தியா முழுவதும் பரப்பினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர்திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறைஅறநெறிஒழுக்கத்தின் உயர்வுதன்னுணர்வுஇறையுணர்வு ஆகியவற்றைவிளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்துஇறைத் தொண்டையும் பக்தியையும்விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும்பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்திருக்குறளின் மூலமாக இங்குவிளக்கப்பட உள்ளது.

 
 

இந்த இதழில்ஆத்ம தத்துவம் 

ஆத்மா உடல் விட்டு உடல் மாறுகிறது

 

நாம் என்பது இந்த உடம்பல்லஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம்விளக்குகின்றதுஆத்மா அழியாததுஉடல் விட்டு உடல் மாறக்கூடியது.

 

 

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய

நவானி க்ருஹ்ணாதி நரோ

ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்

யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றேபழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத்கீதை 2.22)

 

 

பகவத் கீதையின் இதே கருத்து வள்ளுவரால் நிலையாமை” என்னும் அதிகாரத்தில் உரைக்கப்படுகிறதுஉடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியேவிட்டு விட்டு வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு

(திருக்குறள் 338)

கீழ்காணும் குறளில்இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும்மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக்காட்டும் வள்ளுவர்துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள்இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு

(திருக்குறள் 340)

உடலைக் கண்டு வருத்தம் கூடாது

தான் ஓர் ஆத்மா என்பதை உணர்ந்து நிலையான இடம் தேடுதல் முக்கியம் என்றும்நிலையற்றஉடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது என்றும் வள்ளுவர் கீழ்காணும் குறளில் கூறுகிறார்:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்

(திருக்குறள் 627)

உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர்தன் உடலுக்கு ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் என்றுகூறுகின்றார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கருத்தை,

 

 

தேஹினோ யதா தேஹே

கௌமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹாந்தர ப்ராப்திர்

தீரஸ் தத்ர  முஹ்யதி

உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும்மாறுவதைப் போலவேமரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றதுதன்னைஉணர்ந்த ஆத்மா (தீரன்இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” (பகவத் கீதை 2.13)

 

 

உடல் முழுவதும் உணர்வு பரவியிருப்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்உடலின் ஒருபகுதியிலோ உடல் முழுவதுமோ ஏற்படும் இன்ப துன்பங்களை அனைவரும் உணர்கின்றனர்இவ்வாறு பரவியுள்ள உணர்வுஒருவரின் சொந்த சரீரம் என்ற வரம்பிற்கு உட்பட்டதுஓர் உடலின்இன்ப துன்பங்கள் மற்றவர்களுக்குத் தெரியாதுஎனவேஒவ்வோர் உடலும் தனி ஆத்மாவைஉடையதாகும்ஆத்மா உடலுள் உள்ளதால் தனிப்பட்ட உணர்வு உள்ளது.

ஆன்மீக அணுக்கள் எண்ணற்றவைஇந்த மிகச்சிறிய ஆன்மீகத் துகள் உணர்வுடையதாகஇருப்பதால்உடல் முழுவதும் உணர்வு பரவியுள்ளதுசக்தி வாய்ந்த மருந்தின் ஆதிக்கம் உடல்முழுவதும் பரவுவதைப் போலஆன்மீக ஆத்மாவின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவியுள்ளதுஉடலில் பரவியுள்ள உணர்வே ஆத்மா இருப்பதற்கு ஆதாரம்உணர்வற்ற ஜடவுடல் பிணம்என்பதைப் பாமரனும் அறிவான்எந்தவித பௌதிகவேதியியல் முறையினாலும் பிணத்தினுள்உணர்வை மீண்டும் புதுப்பிக்க முடியாதுஎனவேஉணர்வென்பது ஜடப் பொருட்களின்கலவையினால் தோன்றுவதல்லஆன்மீக ஆத்மாவினால் ஏற்படுகிறதுஆன்மீக ஆத்மாவின்நிலையினை எல்லா வேதங்களும் தெரிவிக்கின்றனமேலும் அறிவுள்ள எந்த மனிதனாலும்இதனை அனுபவபூர்வமாக அறிய முடியும்.

உடலின் இயக்க சக்திகள் யாவும் இதயத்திலிருந்து உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவர்ஆனால் அந்த சக்தியின் உற்பத்தி மூலம்ஆத்மாவே என்பதை இவ்விஞ்ஞானம் காண இயலாமல்இருக்கின்றதுஆத்மாவின் இயல்பான இடம் உடம்பினுள் இருக்கும் இதயம் என்றும்அங்கே அந்தஆத்மாவுடன் பரமாத்மாவாக இறைவனும் இருக்கிறார் என்றும் பகவத்கீதைபாகவதம் போன்றவேத நூல்கள் கூறுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.
வாழும் வழிமுறை, அறநெறி ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்பட உள்ளது.
இந்த இதழில்: பரமாத்மா தத்துவம்

பரமாத்மா

 

நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதிமூன்று, பதினைந்தாவது அத்தியாயங்கள் உறுதி செய்கின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
(திருக்குறள் 3)

“இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.”
எல்லா உலகங்களுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளாகிய ஆதிபகவன் இதயத்திலிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனை “பரமாத்மா” என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே “வீடு” என்பது நிலையான அழிவற்ற உலகமாகிய வைகுண்டத்தைக் குறிக்கிறது.

 

பகவத் கீதை (13.23) கூறுகிறது:

 

 

உபத்ரஷ்டானு மந்தா சபர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோதேஹே ’ஸ்மின் புருஷ: பர:

“இந்த உடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்கு பவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.”

 

ஜடத்தளையில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து பரமாத்மாவிடம் திரும்புவானாகில், அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார். தனிப்பட்ட ஜீவாத்மா மற்றோர் உடலுக்கு மாற்றமடைவது, அவனுடைய எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும், பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்காணும் ஸ்லோகம் அதனை உறுதி செய்கின்றது.

 

கர்மணா தைவ-நேத்ரேணஜந்துர் தேஹோபபத்தயே
ஸ்த்ரியா: ப்ரவிஷ்ட உதரம்பும்ஸோ-ரேத: கணாஷ்ரய:

“தன்னுடைய செயல்களின் விளைவினாலும் முழுமுதற் கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில் அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

 

ஒரு நண்பன் மற்றொரு நண்பனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைப் போல பரமாத்மா அணு ஆத்மாவின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறார். முண்டக உபநிஷத், ஷ்வேதாஷ்வதர உபநிஷத் போன்ற வேத நூல்கள், ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழமைப் பறவைகளுக்கு ஒப்பிடுகின்றன. அப்பறவைகளில் ஒன்று (தனி அணு ஆத்மா) மரத்தின் கனிகளை உண்கிறது, மற்றதோ (பரமாத்மாவான கிருஷ்ணர்) தனது தோழனை வெறுமனே நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தில் ஒரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை ஜடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது. மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமனே நோக்கிக் கொண்டுள்ளது. கிருஷ்ணர் சாட்சிப் பறவை, ஜீவன் உண்ணும் பறவை. இருவரும் நண்பர்களே என்றபோதிலும் ஒருவர் எஜமானர், மற்றவர் சேவகன். இந்த உறவை அணு ஆத்மா மறந்து விடுவதே, மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அவன் தனது நிலையை மாற்றிக்கொள்வதற்கு காரணமாகிறது. ஜீவ பறவை ஜடவுடல் என்னும் மரத்தில் கடினமாகப் போராடிக் கொண்டுள்ளான். எனினும், அறிவுரைகளைப் பெறும் நோக்கத்துடன் தானே முன்வந்து கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனனைப் போல, தொண்டனான ஜீவ பறவை தனக்கு அருகிலுள்ள பறவையை உன்னத ஆன்மீக குருவாக ஏற்கும்போது, உடனடியாக அவன் எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபடுகிறான். முண்டக உபநிஷத் (3.1.2), ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (4.7) இரண்டுமே இதை உறுதிப்படுத்துகின்றன.

தனது நித்திய நண்பனான கிருஷ்ணரை நோக்கி முகம் திருப்பிய அர்ஜுனன் அவரிடமிருந்து பகவத் கீதையைப் புரிந்து கொண்டு ஆன்மீக பலம் பெற்று தர்ம யுத்தம் செய்ததால், போரில் வெற்றி மட்டுமல்லாது உயர்ந்த ஆன்மீக நிலையையும் பெற்றான். அதுபோல எந்தவொரு ஜீவாத்மாவும் கிருஷ்ணரின் பகவத் கீதையை அறிந்து, உன்னத நிலையை அடைந்து கவலைகளிலிருந்து விடுபட முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 திருக்குறளின் வழியாக பகவத்கீதையின் ஞானம்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ

 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்பட உள்ளது.

 
 

இந்த இதழில்: ஆதிபகவன்
ஆதிபகவன் அல்லது முழுமுதற்கடவுள்

 

வேதாந்த சூத்திரத்தில் ஸ்ரீல வியாஸதேவர், ஜன்மாத்யஸ்ய யத:, எவரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ, அவரே முழுமுதற் கடவுள் என்று கூறுகிறார். மேலும் அதனை அவரே விளக்கமான முறையில் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் (1.1.1.), வஸுதேவரின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவர் தனது நிலையான உலகத்தில் வீற்றுள்ளார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் அவரை தான் தியானிக்கிறேன் என்றும் கூறுகின்றார்.

திருவள்ளுவர் தன்னுடைய முதல் குறளில்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(திருக்குறள் 1)

“எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதைப் போல், உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.”
செம்மொழி இலக்கியமாகிய திருக்குறளை இயற்றிய வள்ளுவர் முழுமுதற் கடவுளையே ஆதிபகவன் என்று குறிப்பிடுகிறார். குறைந்த கண்ணோட்டமுடைய சிலர் ஆதியை நூலாசிரியரின் தாயென்றும் பகவனைத் தந்தையென்றும் கூறுவர். இங்கு உலகு என்பது எல்லா உலகங்களையும் உயிர்களையும் குறிக்கும். பகவான் என்றால் எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளவர் என்று பொருள்.

எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்ட முதல்வனே ஆதிபகவன். இந்த ஆதிபகவன் எப்படிப்பட்டவன் என்பதை வள்ளுவர் ஏழாவது குறளில்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
(திருக்குறள் 7)

“தனக்கு நிகரில்லாதவனுடைய தாளைச் சேர்ந்தவருக் கல்லாது மற்ற எவருக்கும் மனத்தின்கண் உருவாகும் துன்பங்களை நீக்குதல் அரிது.” தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவருக்கு மேல் யாரும் இல்லை என்பதே இதன் பொருள். இதையே பகவத் கீதையில் (7.7) கிருஷ்ணர்,

 

மத்த: பரதரம் நான்யத்கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம்ஸூத்ரே மணி-கணா இவ

 

“செல்வத்தை வெல்வோனே, என்னை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.” என்று கூறுகிறார். கிருஷ்ணரின் இந்த ஸ்லோகத்தையும் வள்ளுவரின் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், வள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன் கிருஷ்ணரே.

 

 

மேலும், புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
(திருக்குறள் 1103)

“தாமரைக் கண்ணனுடைய உலகம், தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ?” வேறு எந்த தேவரையும் தேவ உலகத்தையும் வள்ளுவர் திருக்குறளில் குறிப்பிடவில்லை. எல்லாரையும்விட உயர்ந்தவரான தாமரைக் கண்களையுடைய கிருஷ்ணரே ஆதிபகவன் என்பதை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்த குறளைப் படைத்திருக்கின்றார். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஒருவருக்கே சரணடைய வேண்டும் என்பது பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கொள்கை. அந்தக் கொள்கையையே வள்ளுவர் முதல் அதிகாரத்தின் ஏழு குறள்களில் கூறுகின்றார். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், மற்றெல்லாரும் அவருடைய தொண்டர்கள் என்பது பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாக்கு.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

  • Kuralin Kural-2016-July

நிலையற்ற பௌதிக உலகம்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

 

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 

ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

 

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு

 

“நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே பெருமையாக உடையது இவ்வுலகம்.” (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

 

இதே நிலையாமையை நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (1.2.2) மிகவும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

 

மின்னின் நிலையில – மன்னுயிராக்கைகள்,

என்னுமிடத்து, இறை – உன்னுமின் நீரே

 

“உயிருடம்புகள் மின்னலைக் காட்டிலும் நிலையுடையவை அல்ல.”

 

உலக வாழ்வின் நிலையாத் தன்மையை வேத சாஸ்திரங்கள் பல இடங்களில் உரைத்துள்ளன. பகவத் கீதையில் (8.15) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

 

மாம் உபேத்ய புனர்ஜன்மது:காலயம் அஷாஷ்வதம்

நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:

 

இங்கே கிருஷ்ணர் பௌதிக உலகத்தை து:காலயம், அதாவது துன்பங்கள் நிறைந்த இடம் என்றும், அஷாஷ்வதம், அதாவது தற்காலிகமானது என்றும் குறிப்பிடுகிறார். இவ்வுலகம் ஒவ்வோர் அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையில் இருப்பவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே சிற்றறிவுடையோர், பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழுப் பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை.

 

பௌதிக உலகத்தில் யாராலும் தீர்வு காண முடியாத நான்கு வகையான நிரந்தர பிரச்சனைகளும் மூன்று விதமான துன்பங்களும் உள்ளன. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை நான்கு நிரந்தர பிரச்சனைகளாகும்.

 

மூன்று விதமான துன்பங்கள் என்னவென்றால்,

  1. ஆத்யாத்மிக க்லேஷா – மனம் மற்றும் உடலால் விளையும் துன்பங்கள் (எ.கா) மன உளைச்சல்.
  2. ஆதிதைவிக க்லேஷா – இயற்கையால் விளையும் துன்பங்கள் (எ.கா) சுனாமி.
  3. ஆதிபௌதிக க்லேஷா – பிற உயிரினங்களால் விளையும் துன்பங்கள் (எ.கா) கொசுக்கடி.

 

விமானத்தில் பறக்கும்போது மனிதன் பல்வேறு திட்டங்களிலும் கற்பனைகளிலும் மிதக்கிறான். ஏதாவது சிறு இடையூறால் விமானம் நொறுங்கி விழுந்தால், அவனுடைய எல்லாத் திட்டங்களும் பாழ். தன்மனதாலும், பிற உயிர்களாலும், இயற்கையின் சீற்றத்தாலும் உயிர்வாழிகளுக்குத் துன்பம் கொடுப்பதுதான் இவ்வுலகு. இதனை உணர்ந்து மறுவுலகிற்குச் செல்ல நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே சாஸ்திரங்களும் பெரியோர்களும் நமக்கு வழங்கியுள்ள அறிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குறளின் குரல், கர்மம்-ஊழ் : திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.
வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

வேத நூல்களில் கண்டுள்ளபடி, ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக இயற்றும் செயல்கள் கர்ம (நல்ல செயல்கள்) எனப்படும். தனக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் கீழான நிலைக்கு ஒருவனை இட்டுச்செல்லும் செயல்கள் விகர்ம (தீய செயல்கள்) எனப்படும். இந்த கர்மங்களால் ஏற்படும் வினைகள், கர்மவினை அல்லது ஊழ் எனப்படுகிறது.

வள்ளுவர் ஊழ் எனப்படும் அதிகாரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

“ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும். தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகாது.” (திருக்குறள் 376)

சாதாரண மனிதர்கள் கடவுளின் பாராட்டைப் பெற்று இவ்வுலகில் அல்லது சொர்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக நற்செயல்களைப் புரிய விரும்புகிறார்கள். நல்லவை, தீயவை ஆகிய இருவகையான செயல்களுமே பௌதிக இன்னல்களில் மனிதனை சிக்கவைக்கும் தன்மை உடையவை என்பதை அறிவாளிகள் நன்கறிவார்கள்.

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்

“ஊழைவிட மிக்க வலிமையுள்ளது வேறு என்ன இருக்க முடியும்? ஊழை விலக்கும்பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.” (திருக்குறள் 380)

ஸ்ரீமத் பாகவதத்திற்கான தனது பொருளுரைகளில் (7.2.40) ஸ்ரீலபிரபுபாதர் கூறியுள்ளபடி, பகவான் பாதுகாப்பு அளிக்காவிடில் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கும் பணம்கூடக் காணாமல் போய் விடுகிறது. மறுபுறம், ஒருவன் பொதுவீதியில் பணத்தைத் தொலைத்தாலும் அது விதியினால் பாதுகாக்கப்படுகிறது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

“ஒருவன் செய்ய வேண்டாதவற்றை செய்வதும் கேடாகும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுவதும் கேடாகும்.” (திருக்குறள் 466)

 

ந கர்மணாம் அனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோ ‘ஷ்னுதே

ந ச ஸன்ன்யஸனாத் ஏவ ஸித்திம் ஸமதிகச்சதி

செயலிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாதது.

(பகவத் கீதை 3.4)

அதனால், அறிவில் முதிர்ந்தவர்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நிற்க விரும்புகின்றனர். பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து ஒருவனை விடுவிக்கும் செயல்கள் அகர்ம எனப்படும். இந்த மூன்று வகையான செயல்களில், அறிவாளிகள், கர்ம பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்கும் செயல்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பகவத் கீதை 3.9 கூறுவதன்படி, “விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் (அகர்ம, உன்னதமான செயல்) நிறைவேற்றப்படலாம், மற்ற செயல்கள் (கர்ம, விகர்ம ஆகிய இரண்டும்) இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக, நீ எப்பொழுதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.”

மேலும், ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை (ஸ்லோகம் 54) கூறுகிறது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம், “பகவான் கோவிந்தர், தனது பக்தர்களின் கர்ம வினைகளைச் சுட்டெரித்து அழிக்கிறார். மற்றவர்கள் அனைவரையும் (அற்ப பூச்சியிலிருந்து இந்திரன் வரை) தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு செய்கிறார்.”

அடுத்த இதழில், வாழ்வின் குறிக்கோள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இறையருள்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 
 
 

இறையருள் அல்லது இறையன்பு என்பதுதான் மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

“செல்வங்களுள் சிறந்த செல்வம் அருளாகிய செல்வமே. பொருளாகிய செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன.” (திருக்குறள் 241)

அறம் அல்லது தர்மத்தின் வழி நின்றால்தான் இறையருள் அல்லது இறையன்பினைப் பெற முடியும். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளின் அடிப்படையில், வாழ்வின் நோக்கம்

முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துதல் மற்றும் அன்பைப் பெறுதல் என்று விளக்கியுள்ளார்.

முழுமுதற் கடவுளிடம் அன்பு செலுத்தும்போது, அவரின் படைப்பான பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல் தானாக அமையும். வேருக்கு நீரூற்றினால் மரத்தின் எல்லாப் பகுதிகளும் நலம் பெறும் என்பதுபோல.

அருளுடைமையின் முக்கியத்துவத்தை வள்ளுவர்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

“அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் வாழும் வாழ்க்கை அருள் பொருந்திய நெஞ்சம் உடையோருக்கு இல்லை.” (திருக்குறள் 243)

இங்கே, “துன்பமான இருள் பொருந்திய உலகம்” என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் காண்க. இதிலிருந்து ஒளிபொருந்திய இன்பமான உலகம் மற்றொன்று இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார். பகவான் சைதன்ய மஹாபிரபுவின் நோக்கமும் நம்மை ஒளி மிகுந்த இனிய உலகமான கிருஷ்ண உலகிற்கு அல்லது கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதுதான்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு

“பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு சிறப்பாகக் கருதப்படுகின்ற செம்பொருளாகிய உண்மைப் பொருளை (இறைவனை) காண்பதே அறிவாகும்.” (திருக்குறள் 358)

வள்ளுவரின் இந்தக் கூற்றினை, பகவத் கீதையின் (4.9) கீழ்க்காணும் கூற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

 

ஜன்ம கர்ம ச மே திவ்யம்  ஏவம் யோ வேத்தி தத்த்வத:

 

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம  நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன

 “எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.”

 

மேலும், அறிவு என்பது, இயற்கையையும் அதை அறிபவர்களான ஆத்மாவையும் இறைவனையும் அறிவதே என்று பகவத் கீதையில் (13.3) கிருஷ்ணர் கூறுகின்றார். இதுவே உண்மையான பகுத்தறிவாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  • kuralin-kural

வாழ்வின் குறிக்கோள்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 
 
 

வாழ்வின் குறிக்கோள் யாது என்று மக்களிடம் வினவினால், புலன்களால் இந்த உலகப் பொருட்களை அனுபவித்தல் என்றோ இந்த ஜடவுலகில் உயர்ந்த நிலைக்கு வருதல் என்றோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்தல் என்றோ பதில் வரும். இவையெல்லாம் தான் இந்த உடல் என்றும் தனக்கு சம்பந்தமானவற்றை தனது என்றும் நினைப்பதால் ஏற்படுபவை. வாழ்வின் நோக்கமின்றி வாழ்வதைச் சாடும் வகையில் வள்ளுவர், நிலையாமை என்ற அதிகாரத்தில்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல

“அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை, ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன.” (திருக்குறள் 337)

பகவத் கீதையில் (2.41) கிருஷ்ணர் இதே கருத்தைக் கூறுகிறார்:

 

வ்யவஸாயாத்மிகா புத்திர்ஏகேஹ குரு-நந்தன

பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் சபுத்தயோ

“இவ்வழியில் உள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.”

“இவ்வழி” என்று இங்கே குறிப்பிடப்படுவது கிருஷ்ண உணர்வு பாதை அல்லது புத்தி யோகம் என்று ஸ்ரீல பிரபுபாதர் தன் பொருளுரையில் விளக்குகிறார். 

கிருஷ்ண உணர்வின் உள்ளடக்கங்களாகிய இறைவனை அறிதல், அவரிடம் அன்பு செலுத்தப் பழகிக்கொள்ளுதல், அன்பைப் பெறுதல் இவையே வாழ்வின் குறிக்கோள் என்பது உறுதியாகிறது.

இந்த ஜடவுலகின் படைப்புகள் யாவும் நிலையற்றவை, அழியக்கூடியவை. தன் உடம்பே அழியக்கூடியது என்பதை மறந்து மனிதர்கள் அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் கோடிக்கணக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகின்றனர். பெரும்பாலானவை மனித குலத்திற்கே இடையூறு விளைவிப்பனவாக உள்ளன. இவற்றை அசுர வேலை என்று பகவத் கீதையின் 16ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறுகிறார். இந்த நிலையற்ற சிக்கலான வாழ்க்கை நமது வாழ்வின் குறிக்கோள் அல்ல.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு

“துச்சமான அறியாமையின் மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் வாழும் உயிருக்கு நிலையாக குடிகொள்வதற்கு இன்னும் ஒரு வீடு அமையவில்லையோ.” (திருக்குறள் 340) இங்கே பௌதிக உலகில் துன்புறும் ஆத்மாக்களின் மீதான தனது வருத்தத்தை திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். பகவத் கீதையில் (15.7) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதுபோலவே வருத்தப்படுகின்றார்:

 

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத ஸனாதன:

மன:-ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகிலிருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.”

 

நம்மைக் கடைத்தேற்றுவதற்காக கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக அவதாரம் செய்து போதனைகளைத் தொடர்ந்தார். பகவான் கிருஷ்ணர் இந்த மனித குலத்தின் மீது வைத்திருக்கும் கருணையை என்னவென்று கூறுவது? எல்லாவற்றிலும் உயர்ந்த இடமான முழுமுதற் கடவுளின் இருப்பிடத்தை அடைதல் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் வரையறுத்துக் காட்டியுள்ளார். மேலும், திருவாய்மொழியில் (1.2.1) நம்மாழ்வார் கூறுகிறார்:

வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே

“எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டுவிட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள்.” இறைவனிடம் சரணாகதி செய்து அன்புத் தொண்டாற்றுவதே எல்லா ஆழ்வார்களுடைய விருப்பமும் தவமும். எல்லா ஆழ்வார்களும் முழுமுதற் கடவுள் கண்ணனையும் அவனது திருஅவதாரங்களையும் கொண்டாடுவதை நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் காணலாம்.

தூய வைணவர்களின் விருப்பம் எங்கிருந்தாலும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு அன்புத் தொண்டாற்றுவதே. அவர்கள் எந்த வகையான முக்தியையும் எதிர்பார்ப்பதில்லை. இதை ஆஞ்சநேயரின் வாழ்விலிருந்தும் காணலாம். ஸ்ரீமத் பாகவதமும் இத்தகைய தூய பக்தியே சிறந்ததென்று குறிப்பிடுகிறது.

பகவான் ஸ்ரீ சைதன்யர் தனது சிக்ஷாஷ்டகம் நான்காவது பாடலில், “எனது ஜன்ம ஜன்மங்களில் கிருஷ்ணா, உனது அன்புத் தொண்டே எனக்குத் தேவை,” என்று கூறுகிறார். மேலும், ஜீவேர ஸ்வரூப ஹய, க்ரிஷ்ணேர நித்ய-தாஸ, “ஜீவனுடைய உண்மையான தன்மை கிருஷ்ணருடைய நித்திய அன்புத் தொண்டனாக இருப்பதே,” என்பதே பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாக்கியம். இதை மகா வாக்கியம் என்று சொன்னால் மிகையாகாது. எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை ஒருவன் கற்றுத் தேர்ந்தாலும், முழுமுதற் கடவுளான ஆதிபகவானுக்கு அன்புத் தொண்டாற்றவில்லை எனில், அவை எல்லாம் வீண் என்பதை இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும். இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  • tirukural

கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

 
 
 

சமீபத்தில் வாசகர் ஒருவர், “குறளின் குரல்” என்ற தலைப்பில், கீதையின் வரிகள் திருக்குறளின் மூலமாக விளக்கப்படும் பகுதியினை விமர்சித்து, எமக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திலிருந்து சில வரிகள்:

பகவத் கீதையை திருக்குறளுடன் ஒப்பிடுவதால், கீதையின் மதிப்பு குறைக்கப்படுகிறது. கீதையின் அறிவு திருக்குறளில் ஏற்கனவே உள்ளது என்று கூறுதல், திருக்குறளுக்கு தேவையற்ற உயர் மதிப்பினை வழங்குகிறது. இத்தகு ஒப்புமை முற்றிலும் தவறானது என்பதே எனது அபிப்பிராயம்.

இது பகவத் கீதையை அணுகுவதற்கான தவறான வழியாகும். இத்தகு ஒப்புமையினால், வருங்காலத்தில் பக்தர்கள் ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம் போன்ற அங்கீகாரம் பெற்ற சாஸ்திரங்களுக்கு ஆச்சாரியர்கள் கொடுத்த விளக்கங்களுக்கு மாறாக, திருக்குறளை மேற்கோள் காட்டத் தொடங்குவர். கிருஷ்ணரின் வார்த்தை எங்கே? யார் என்றே தெரியாத திருவள்ளுவரின் வார்த்தை எங்கே? இத்தகு ஒப்புமை நிச்சயம் குற்றமாகும். தயவுசெய்து இதனை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும்.

திருக்குறளின் ஒரு முக்கியமான பகுதி காமத்துப்பால். இதில் திருவள்ளுவர் இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரிமாற்றங்களையும் உணர்ச்சிகளையும் விவரித்துள்ளார். அத்தகு உணர்ச்சிகளை விவரிக்கும் நூலை எவ்வாறு நீதி நூலாக ஏற்க முடியும்?

இக்கடிதத்தினைத் தொடர்ந்து எங்களுக்கிடையில் பல கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இக்கடிதத்திற்கான எமது பதில் பகவத் தரிசன வாசகர்களுக்கும் இஸ்கான் பக்தர்களுக்கும் பொதுவான உதவியாக இருக்கலாம் என்பதால், அதன் சாரத்தை இங்கே வெளியிடுகிறோம்.

 

திருக்குறள்–சில அடிப்படை

 

திருக்குறளை அனைவரும் அறிவர், ஆயினும் பெரும்பாலானோர் அதனை முறையாக அறியார். எனவே, இந்த சிறிய அறிமுகம் இங்கே.

திருக்குறள் வேத கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல். இது மறுக்க முடியாத உண்மை. இதன் ஆசிரியர் யார், அவரது வரலாறு என்ன என்பதுகுறித்து நம்மிடம் துல்லியமான விவரங்கள் இல்லை என்றபோதிலும், அவரது நூலைப் படிக்கும்போது, அவர் நிச்சயமாக வேத தர்மத்தைப் பின்பற்றியவர் என்பதை அறியலாம். வேதங்களின்படி மனித வாழ்வின் பக்குவநிலையானது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்காக எடுத்துரைக்கப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்தே திருவள்ளுவர் தனது திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்றாகப் பிரித்துள்ளார். வீடுபேறு குறித்து திருக்குறளில் தனிப்பட்ட பகுதி இல்லை என்றாலும், அறத்துப்பாலில் இருக்கும் ஒரு பகுதி வீடுபேற்றினை எடுத்துரைக்கின்றது. எனவே, திருக்குறள் வேத நெறியான புருஷார்தத்தை (அறம், பொருள், இன்பம், வீடு) எடுத்துரைக்கும் நூல் என்பதில் ஐயமில்லை.

ஒரு சிலர், திருவள்ளுவர் ஜைன மதத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர்; ஆனால் திருக்குறளில் கூறப்பட்டுள்ள மறுபிறவி, வீடுபேறு அடைதல் முதலிய தத்துவங்கள் ஜைன மதத்தில் கிடையாது என்பது அவர்களுக்கு ஏனோ தெரியவில்லை.

முற்காலத்தில், பல்வேறு சைவர்களும் வைணவர்களும் திருக்குறளைப் பற்றி பேசியுள்ளனர், விளக்கமும் வழங்கியுள்ளனர். அவ்வெல்லா விளக்கங்களிலும் இன்றும்கூட மிகமிக பிரபலமானது பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பரிமேலழகர் வழங்கிய உரையாகும். அவர் காஞ்சிபுரத்தின் உலகளந்த பெருமாள் கோயிலைச் சார்ந்த அர்ச்சகர்களின் பரம்பரையைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும், திருக்குறளில் திருவள்ளுவர் இறைவனை தாமரைக் கண்களை உடையவர், தாமரையில் வீற்றிருப்பவர் என்றெல்லாம் புகழ்கிறார்–இப்புகழ்ச்சிகள் நிச்சயம் பகவான் விஷ்ணுவைக் குறிப்பவை. முதல் குறளானது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகமான ஜன்மாத்யஸ்ய யத: என்பதைத் தழுவி இயற்றப்பட்டுள்ளது. பல்வேறு வைஷ்ணவர்கள் திருவள்ளுவரை வைஷ்ணவர் என்றும், பல்வேறு சைவர்கள் அவரை சைவர் என்றும் வாதிடுகின்றனர். எனினும், அந்த வாதம் இங்கே அவசியமில்லை. அவருடைய நூலிலுள்ள வார்த்தைகள் எதைச் சொல்கின்றன என்பதை மட்டும் பார்ப்போம்.

 

வேத வழி வந்த திருக்குறள்

 

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம், ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன. இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது, அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

“என்பர்” என்று முடியும் குறள்கள் ஏராளம். அதாவது, வள்ளுவர் தனது பூர்விக மாமனிதர்களை இங்கே சுட்டிக்காட்டி, தனது நூல் அவர்களுடைய கூற்றுகளிலிருந்து பெறப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இதை அடிப்படையாக வைத்து, திருவையாறு கல்லூரியின் முன்னாள் தலைமை பேராசிரியரும் சமஸ்கிருதம், தமிழ் என இரு மொழியிலும் புலமை பெற்றவருமான திரு சுப்ரமணிய சாஸ்திரிகள், “பாலர் உரை” என்ற தலைப்பில் திருக்குறளின் அறத்துப்பாலிற்கு விளக்கமளித்துள்ளார். அங்கே அவர் ஒவ்வொரு குறளிற்கும், அதற்கு சமமான ஸ்லோகத்தினை மஹாபாரதம், உபநிஷதங்கள், மனு ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்து எடுத்துரைத்து திருக்குறளிற்கும் அதற்குமுள்ள சிறந்த ஒற்றுமைகளை பறைசாற்றியுள்ளார்.

திரு இராமசந்திர தீட்சிதர் அவர்கள் எல்லா குறளிற்கும் சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்கமளித்துள்ளார்: முதல் பகுதி (அறத்துப்பால்) ரிக் வேதம், இராமாயணம், மஹாபாரதம், பராசர சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும், இரண்டாம் பகுதி (பொருட்பால்) கமந்தக நீதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, போத்யாயன ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்தும், மூன்றாம் பகுதி (காமத்துப்பால்) காம சூத்திரத்திலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது.

திருவாய்மொழியையும் திருக்குறளையும் ஒப்பிட்டு பல நூல்களும் கட்டுரைகளும்கூட பலரால் வடிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் ஆழ்வார்களின் பாசுரங்களை உபயோகித்துள்ளார் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

எப்படிப் பார்த்தாலும், திருக்குறள் வேத எண்ணங்களைத் தழுவியது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

புலன்களைக் கட்டுப்படுத்தும் கிருஷ்ண உணர்வு

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 
 
 

கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றிகொள்ள முயல்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக்கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பௌதிகப் புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர்.

கடுமையான தவத்தையும் யோகப் பயிற்சியையும் மேற்கொண்டு புலன்களை அடக்க முயன்ற, பக்குவமான யோகியும் சிறந்த முனிவருமான விஸ்வாமித்திரர் மேனகையினால் பாலுறவு வாழ்விற்கு அழைத்துச் செல்லப்பட்டார். உலக சரித்திரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இருப்பது உண்மையே. வெளிப்புறமாக புலன்களைக் கட்டுப்படுத்துவோரை கிருஷ்ணர் கீதையில் (3.6) பின்வருமாறு கண்டிக்கிறார்:

 

கர்மேந்திரியாணி ஸம்யம்யய ஆஸ்தே மனஸா ஸ்மரன்

இந்த்ரியார்தான் விமூடாத்மாமித்யாசார: ஸ உச்யதே

புலன்களையும் புலனுறுப்புகளையும் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனுகர்ச்சிப் பொருட்களில் மனதைச் செலுத்திக் கொண்டிருப்பவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.” 

கிருஷ்ணரின் இதே கூற்றினை திருவள்ளுவர் தமது வார்த்தைகளில் பின்வருமாறு கூறுகிறார்:

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்

மனதில் ஆசைகளை நீக்காமல், ஆனால் ஆசைகளே இல்லாத துறவிகளைப் போல வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போல் கொடியவர்கள் வேறு யாரும் இல்லை.” (திருக்குறள் 276)

புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்துதல் மிகமிகக் கடினமாகும்; இருப்பினும், பூரண கிருஷ்ண உணர்வைப் பெற்றவர்கள் அதனை அடைய முடியும். மாயையை வெல்லுதல் கடினம் என்றும், தன்னிடம் சரணடைந்தோர் அதனை எளிதில் வெல்லலாம் என்றும் கிருஷ்ணர் கீதையில் (7.14) கூறுகிறார்.

பூரண கிருஷ்ண உணர்விற்கான வழிமுறையினை ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு வழிகாட்டியுள்ளார் (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258): கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன் அனைத்துப் பொருட்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் ஜடப் பொருட்களைத் தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, அருவவாதி நல்ல உணவுப் பொருட்களைத் தவிர்க்க விரும்புகிறான். ஆனால், கிருஷ்ணரே எல்லாவற்றையும் அனுபவிக்கக்கூடிய பரம ஆளுநர் என்பதையும், பக்தியுடன் அர்ப்பணிக்கப்படும் எல்லா உணவுப் பொருட்களையும் அவர் மகிழ்வுடன் ஏற்கிறார் என்பதையும் பக்தன் அறிவான். எனவே, பகவானுக்கு நல்ல உணவுப் பொருட்களைப் படைத்த பின், அதன் மீதியை பிரசாதமாக பக்தன் ஏற்றுக்கொள்கிறான். இவ்விதமாக, அனைத்தும் ஆன்மீகப்படுத்தப்படுவதால் வீழ்ச்சிக்கான அபாயம் இல்லை.

ஒருவன் தன் மனதில் மாசற்றவனாக இருக்க வேண்டும், அதுவே அறம். மனத் தூய்மை இல்லாதவை அனைத்தும் ஆரவாரத்தன்மை உடையவை என்ற பொருளில் வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற (திருக்குறள் 34)

மனமாசை அகற்றச் சிறந்த வழி தகுந்த பயிற்சியால் கிருஷ்ண உணர்வைப் பெறுவதே. கிருஷ்ண உணர்வைப் பெற்றவர்களுக்குப் புலனின்பம் துச்சம், இதற்கான நடைமுறை உதாரணம், மிகச்சிறந்த சாதுவும் கிருஷ்ண பக்தருமான ஸ்ரீயாமுனாசாரியர். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

 

யத்-அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே

நவ-நவ-ரஸ-தாமன்யுத்யதம் ரந்தும் ஆஸீத்

தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே

பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதக் கமலங்களின் தொண்டில் என் மனம் ஈடுபட்டிருப்பதால், என்றும் புதுமையாகத் திகழும் தெய்வீக இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன். பெண்களுடனான பாலுறவு வாழ்வினை நான் எப்போதாவது எண்ணினால், உடனே என் முகத்தை அதிலிருந்து திருப்பி, அவ்வெண்ணத்தின் மீது காறி உமிழ்கிறேன்!” எனவே, பௌதிக இன்பம் தானாகவே சுவையற்றுப் போகுமளவிற்கு கிருஷ்ண உணர்வு (பக்தி) உன்னத சுவையுடையதாகும்.

கிருஷ்ண உணர்வு எத்தகைய சுவையுடையது என்பதை தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனது திருமாலைத் தொகுப்பில் பின்வருமாறு கூறுகிறார்:

பச்சைமா மலைபோல் மேனிபவளவாய் கமலச் செங்கண்,

அச்சுதா! அமர ரேறே!ஆயர்தம் கொழுந்தே! என்னும்,

இச்சுவை தவிர யான்போய்இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகரு ளானே!

திருமங்கை ஆழ்வாரும் இதே போன்று கூறுகிறார், பெரும் உணர்வை நல்கும் நாராயண என்னும் நாமம் வேண்டும், இந்திர லோகமும் வேண்டாம், ரம்பை, ஊர்வசி இவர்களின் உறவும் வேண்டாம்.”

பக்தியின் இத்தகு நிலையினால் பெறப்படுவதே உண்மையான இன்பம் என்பதை வள்ளுவரும் பின்வருமாறு கூறுகிறார்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல (திருக்குறள் 39)

கிருஷ்ண உணர்வே எல்லையில்லா மகிழ்ச்சியை நல்கும் என்பது சாஸ்திரங்களின் கூற்றும் நடைமுறையில் அனுபவிப்பதுமாகும். இதற்காகவன்றோ பகவான் ஸ்ரீ சைதன்யரும் பின்வந்த ஆச்சாரியர்களும், குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதரும் அரும்பாடுபட்டு கிருஷ்ண உணர்வைப் பரப்பினார்கள். 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  • Kuralin Kural2

ஆன்மீக உலகை அடைதல்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 
 

பக்தனை சம்சாரக் கடலிலிருந்து கிருஷ்ணரே நேரில் விடுவிக்கிறார்.

 

ஆன்மீக உலகமானது அறிவு நிறைந்த, அழிவற்ற, நித்திய ஆனந்தமயமான இடமாகும், அங்கு செல்வதே வாழ்வின் குறிக்கோள் என்று வேத இலக்கியங்கள் பலவற்றிலும் குறிப்பாக பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது.

பிரம்ம சம்ஹிதை (56-57) அந்த தெய்வீக இடத்தினை பின்வருமாறு வர்ணிக்கின்றது: அங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டதைத் தரும் அதிசய மரம், அது சிந்தாமணிக் கற்களால் உருவான பூமி. அங்கே தண்ணீர் எல்லாம் அமிர்தம், ஒவ்வோர் அசைவும் அபிநயம், வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றன. காலம் அசையாமல் ஸ்தம்பித்து நிற்கின்றது, ஆகையால், எதிர்காலம் இல்லை. அரை நொடிகூட இங்கு கழிவதில்லை அந்த லோகம் கோலோகம்.

அந்த ஆன்மீக உலகைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் (10.14.58) பின்வருமாறு கூறுகின்றது:

 

ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம்

மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே:

பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம்

பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம்

முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின் பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில் தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிகத் துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) – ஒவ்வோர் அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இந்த உலகமல்ல. 

அங்கு எவ்வாறு செல்வது என்பதைப் பற்றி பகவத் கீதையில் (12.7) ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

 

தேஷாம் அஹம் ஸமுத்தர்தா

ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்

பவாமி ந சிராத் பார்த

மய்யாவேஷித-சேதஸாம்

மனதை என்னில் நிறுத்தி எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு, என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.” 

அந்த ஆன்மீக உலகத்தையும் பௌதிக உலகத்தையும் ஒப்பிட்டு கிருஷ்ணர் மேலும் கூறுகிறார் (பகவத் கீதை 8.16):

ஆப்ரஹ்ம புவனால் லோகா:புனர் ஆவர்தினோ

 

மாம் உபேத்ய து கௌந்தேயபுனர் ஜன்ம ந வித்யதே

ஜடவுலகின் மிகவுயர்ந்த பிரம்ம லோகத்திலிருந்து தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே, ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தையடைந்தவர் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை,”

 

அந்த மறுபிறவியில்லா உலகிற்குச் செல்வதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும், இதை மேலும் பற்பல இடங்களில் பகவத் கீதை எடுத்துரைக்கிறது.

இதே கருத்தினை திருவள்ளுவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளைப் அடைந்தவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும், மற்றவர்களால் அதனைக் கடக்க முடியாது.” (திருக்குறள் 10)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

வாழ்வின் நியமங்கள்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

 

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள்

 

வாழ்வின் உயர்ந்த இலக்கான கிருஷ்ணரின் அன்புத் தொண்டைப் பெறுவதற்கு, வரையறுக்கப்பட்ட விதிகளை (நியமங்களை) பின்பற்றுவதும் பற்றுதலற்ற வழிபாடும் அவசியம். நியமங்களைப் புலனடக்கத்தால் தான் கடைப்பிடிக்க முடியும்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது பக்தர்களுக்கு வழங்கியுள்ள நியமங்களை எமது பிரபுபாதர் நூற்றந்தாதி என்னும் பாடல் தொகுப்பில் (பாடல் 100) பின்வருமாறு வழங்கினோம்:

சுட்டும் நியமங்கள் சூதுபுலால் வேளாமை

நட்டுப்பிறன் மனையை நாடாமை – சொட்டும்கள்

உண்ணாமை நான்கொடும் உச்சாடனம் செய்தல்

கண்ணான் பெயரைக் கனிந்து

ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டும் நியமங்கள்– சூதாடாமை, மாமிசம் உண்ணாமை, தகாத பாலுறவில் ஈடுபடாமை மற்றும் மது அருந்தாமை. அவர் கூறும் தவம் கண்ணனுடைய பெயரைக் கனிவுடன் திரும்பத் திரும்பச் சொல்லுதலே.”

இந்த நான்கு நியமங்களும் தர்மத்தின் நான்கு தூண்களைக் காக்க உதவுகின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தமது ஸ்ரீமத் பாகவத பொருளுரையில் தர்மத்தின் நான்கு தூண்கள் குறித்தும், கலி புருஷனின் ஆதிக்கத்தால் அவை இழிவடைந்தது பற்றியும் விளக்குகிறார்.

எருதின் வடிவில் இருந்த தர்மத்தின் ஸ்வரூபம், பசுவின் வடிவிலிருந்த பூமித்தாயிடம் உரையாடிக் கொண்டிருந்தது. வாய்மை, தூய்மை, தயை, தவம் என்னும் நான்கு கொள்கைகளால் தர்மம் நிலைநாட்டப்படுகிறது. இவை தர்மத்தின் நான்கு தூண்களாக அல்லது கால்களாக கருதப்படுகின்றன. ஆனால் அரசனைப் போன்ற மாறுவேடத்தில் இருந்தவனும், மிகத்தாழ்ந்தவனுமான கலி புருஷன் அந்த எருதின் கால்களை சிதைத்து காயப்படுத்துகிறான்; அதைப் பார்த்து மிகுந்த வருத்தத்துடன் பசு அழுது கொண்டிருந்தது. அச்சமயத்தில் அங்கே மாமன்னர் பரீக்ஷித் வந்து சேர்ந்தார். அநீதியைக் கண்ட மாத்திரத்தில் கலி புருஷனை தண்டிப்பதற்காக அவர் தமது வாளை உயர்த்தினார்.

அப்போது மாமன்னரிடம் சரணடைந்த கலி புருஷன் தனக்கு தஞ்சமளிக்க வேண்டும் என்று வேண்டினான். அதன் பெயரில், சூது, குடி, விபச்சாரம், மிருகவதை ஆகியவை நடைபெறும் இடங்களில் மட்டும் வாழ்வதற்கு மாமன்னர் பரீக்ஷித் கலிக்கு அனுமதி வழங்கினார். இந்த நான்கும் எங்கே உள்ளதோ அங்கே தர்மத்தின் தூண்கள் அழிக்கப்படுகின்றன. இதனை இன்றும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

(1) மது அருந்துபவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான். அதாவது, புலன்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கின்றான்.

(2) சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஈடுபடுபவன் அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டையும் இழக்கிறான்.

(3) வயிற்றை நிரப்புவதற்காக அப்பாவி மிருகங்களைக் கொன்று உண்பவன் தயை (கருணை) என்னும் நற்குணத்தை இழந்துவிடுகிறான்.

(4) சூதாட்டத்தில் ஈடுபடுபவன் உண்மை என்னும் உயர்ந்த குணத்தைக் கைவிடுகிறான்.

இதனால் இந்த நான்கு தீய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது நியமமாக உள்ளது. இந்த நியமங்கள் ஒவ்வொன்றிற்கும் திருவள்ளுவர் ஒவ்வோர் அதிகாரமே படைத்துள்ளார். அவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நான்கு குறள்களை மட்டும் இங்கு வைக்கிறோம்.

 
 

நான்கு மிகப்பெரிய பாவங்களைக் கைவிடுதல் என்னும் நியமம் வாழ்விற்கு அவசியமானதாகும்.

 
 

கலி புருஷன் மாமன்னர் பரீக்ஷித்திடம் சரணடைதல்

 

பிறனில் விழையாமை

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்களுக்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.” (திருக்குறள் 148)

 

புலால் மறுத்தல்

 

துறவறவியலில், அருளுடைமையின் பின் இந்த அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்

தன் உடம்பைப் பெருக்குவதற்காக மற்றோர் உயிரின் உடம்பைத் திண்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?” (திருக்குறள் 251)

 

சூது

 

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது

சூது, உள்ள பொருளை அழித்து பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.” (திருக்குறள் 938)

 

கள்ளுண்ணாமை

 

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்

கள் (மது) அருந்துதல் கூடாது, சான்றோரிடம் நற்பெயர் பெற விரும்பாதவர் வேண்டுமானால் கள்ளை அருந்தலாம்.”(திருக்குறள் 922)

சான்றோர் என்பவர் அன்பு, நாணம், கண்ணோட்டம் (அருள்), ஒப்புரவு (உலக ஒழுக்கம்), வாய்மை ஆகிய ஐந்தையும் தாங்கியவர் என்று சான்றாண்மை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்.

இவற்றை ஆழமாகச் சிந்தித்து, ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு வழங்கியுள்ள இந்த நியமங்கள் நமது நன்மைக்கும் உயர்விற்கும் உரித்தானவை என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுதல் நன்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  • Kuralin Kural

மூவகைத் தவங்கள்

வழங்கியவர்: தயாள் கோவிந்த தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

தவம் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்காக ஒருவனால் விரும்பி ஏற்கப்படும் சில அசௌகரியங்களைக் குறிக்கும். பகவத் கீதையின் பதினேழாவது அத்தியாயத்தில், பேச்சின் தவங்கள், மனதின் தவங்கள், உடலின் தவங்கள் என்று மூன்று விதமான தவங்கள் கூறப்பட்டுள்ளன.

 

பேச்சின் தவங்கள்

 

அனுத்வேக-கரம் வாக்யம்ஸத்யம் ப்ரிய-ஹிதம் ச யத்

ஸ்வாத்யாயாப்யஸனம் சைவவாங்-மயம் தப உச்யதே

உண்மையான பேச்சு, இனிமையான பேச்சு, நன்மையளிக்கும் பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு, வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை பேச்சின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.15)

ஸ்ரீல பிரபுபாதர் இதனை மேலும் தமது உரையில் விளக்குகிறார்: மற்றவர்களது மனம் கிளர்ச்சியடையும்படி ஒருவன் பேசக் கூடாது. ஓர் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும்போது உண்மையைப் பேசலாம் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் அத்தகு ஆசிரியர் தனது மாணவர்கள் அல்லாத பிறரிடம் பேசும்போது அவர்களது மனதைத் துன்புறுத்தும்படி பேசக் கூடாது. இதுவே பேசுவதைப் பொருத்த தவமாகும். இது மட்டுமின்றி அபத்தமாகவும் பேசக் கூடாது. ஆன்மீக வட்டாரத்தில் பேசும்போது, அவனது உரைகள் சாஸ்திரங்களால் ஆதரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்… அத்தகு உரை கேட்பதற்கு இனிமையாகவும் இருக்க வேண்டும். அத்தகு உரையாடல்களால் ஒருவன் மிகச்சிறந்த நன்மையைப் பெற்று மனித சமுதாயத்தை உயர்த்த முடியும்.”

இதே போன்ற கருத்தினை வள்ளுவர் தமது குறளில் பின்வருமாறு விளக்குகிறார்:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.” (திருக்குறள் 97)

 

மனதின் தவங்கள்

 

மனதிற்குத் தேவையான தவங்களை கிருஷ்ணர் கீதையில் பின்வருமாறு கூறுகிறார்: திருப்தி, எளிமை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, தனது இருப்பின் தூய்மை ஆகியவை மனதின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.16)

மனம் பொறிவழி போகாது தடுத்து நிறுத்தி, உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்வது தவம். உயர்ந்த இலக்கு என்பது கிருஷ்ணரை அடைவதைத் தவிர வேறு ஏதும் கிடையாது. மனம், புலன்கள், செயல்களின் பலன்கள் முதலியவை தங்களை மகிழ்விக்கும் என்று கருதி சிற்றறிவுடையோர் பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரிசெய்ய முயல்கின்றனர். ஸ்வர்க லோகம் உட்பட பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலும், அங்கே பெறப்படும் உடல்கள் துயரில்லா வாழ்வைத் தராது என்பதை அவர்கள் அறிவதில்லை.

ஆயினும், தனது நிலை இறைவனுக்குத் தொண்டு புரிவது என்பதை உணர்பவன் வைகுண்ட லோகத்திற்குச் செல்லத் தகுதி பெறுகிறான். அவ்வாறு தொண்டாற்றுவதே புத்தியோகம் அல்லது எளிமையாகச் சொன்னால் பக்தித் தொண்டு எனப்படுகிறது.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு மனதின் பங்கு முக்கியமானது என்பதை வள்ளுவர், சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தி னேமாப் புடைத்து

மனதின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.” (திருக்குறள் 459)

 
 

ஒருவரின் பேச்சு நன்மையளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

 

உடலின் தவங்கள்

 

உடலின் தவங்களைப் பற்றி பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்: முழுமுதற் கடவுள், பிராமணர்கள், ஆன்மீக குரு, பெரியோர்களான தாய்தந்தையர் ஆகியோரை வழிபடுதல், தூய்மை, எளிமை, பிரம்மச்சரியம், அகிம்சை ஆகியவை உடலின் தவங்களாகக் கூறப்படுகின்றன.” (பகவத் கீதை 17.14)

முழுமுதற் கடவுளை வழிபடுவதே தவம் என்றும் அவருடைய நாமத்தைச் சொல்வதே தவம் என்றும் இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் கூறுகின்றார்:

உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்

உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால் – உறுங்கண்டாய்

ஏத்திப் பணிந்தவன் பேர்ஈரரைஞ்ஞா றெப்பொழுதும்

சாற்றி யுரைத்தல் தவம்

நல்ல மனமே! உனக்கு இதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய். எல்லாரையும் வசீகரிக்கும் சிறந்த குணம் வாய்ந்த புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு பிராப்தம் என்று எடுத்துக்கொள், அவரது அத்திருவடிகளைத் தாமரை மலர் முதலிய நன்மலர்களால் ஆராதிப்பதே ஸ்வரூப பிராப்தம் என்று கொள், அவனை வாயாரத் துதித்துத் தலையார வணங்கி அவனது திருப்பெயர்கள் ஆயிரத்தையும் எப்போதும் உரைப்பதே நமக்குத் தவம் என்று கொள்.” (நாலாயிர திவ்ய பிரபந்தம் 2258)

மேலும், கிருஷ்ணரின் நாமம் சொல்வதை மேற்கொண்டால் தன்னுணர்வு பெறுவது எளிது என்று ஸ்ரீல பிரபுபாதர் காட்டியுள்ளார். தன்னுணர்வென்பது தான் இந்த உடலல்ல, உணர்வுள்ள ஆத்மா என்பதை உணர்வதாகும். வள்ளுவர் இதனை அழகாக,

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் (உடல்) என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவருடைய பெருமையை உணர்ந்து தொழும்.” (திருக்குறள் 268)

தவத்தின் முக்கியத்துவம்

தவத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதை (2.58) கூறுகிறது, ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக்கொள்வதைப் போல, புலன்களை அவற்றின் நோக்கப் பொருட்களிலிருந்து விலக்கிக்கொள்பவனே உண்மையான அறிவில் நிலைபெற்றவன்.”

இதனை வள்ளுவரும் உணர்த்துகிறார்:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில் ஆமையைப் போல ஐந்து பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால், அஃது அவனுக்கு ஏழு பிறவிக்கும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.” (திருக்குறள் 126)

இத்தகைய தவங்களின் மகிமைகளை வள்ளுவர் மேலும் உணர்த்துகிறார்:

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் பொருள் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.” (திருக்குறள் 266)

ஸ்ரீல பிரபுபாதர் அமைத்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், நிலையான மறுவாழ்வின் பொருட்டு மனதைப் பக்குவப்படுத்துவதற்காகவே உள்ளது. தாமாக முயல்வதைவிட ஒத்த மனமுடைய சமுதாயத்தின் துணையுடன் முயல்வது சிறப்பான பலனை நல்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, உலகத்தார் இதனை உணர்ந்து இஸ்கான் இயக்கத்தில் ஈடுபட்டுப் பயன் பெற வேண்டும்.

 
 

கிருஷ்ணரை வழிபடுவதே உடலால் நாம் செய்ய வேண்டிய தவமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

கலி யுகமும் ஹரி நாமம் சொல்லுதலும்

வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

 
 
 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகின்றன.

 
 
 

கலி யுகத்தின் போக்கை ஸ்ரீமத் பாகவதம் பன்னிரண்டாம் ஸ்கந்தம் விளக்குகிறது. கலி யுகத்தில் மனத் தூய்மையும் கிடையாது, புறத் தூய்மையும் கிடையாது. கலி யுகத்தின் ஒவ்வொரு விஷயங்களும் பல்வேறு தோஷங்கள் நிறைந்தது. இருப்பினும். கலி யுகத்திற்கென்று இருக்கும் ஒரு மாபெரும் சிறந்த குணம் என்னவெனில், பகவானின் திருநாமத்தைச் சொல்வதாலேயே நாம் எளிதில் முக்தி பெற முடியும். கிருஷ்ண ஸங்கீர்த்தனத்தால் மட்டுமே மூன்று குணங்களின் சங்கத்திலிருந்து விடுபட்டு, உயர்ந்த இடமான கிருஷ்ண உலகத்தை அடைய முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகின்றது.

 

கலேர் தோஷ நிதே ராஜன்

அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:

கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய

முக்த ஸங்க: பரம் வ்ரஜேத் 

கிருஷ்ணருடைய நாமத்தையும் புகழையும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று, யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், அவர்களுக்கு பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்று விடுகிறது. ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலி யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள், ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள். ஆதலின், இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதுதான்.”

ஹரேர் நாம ஹரேர் நாம

 

ஹரேர் நாமைவ கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ

நாஸ்த்யேவ கதிர் அன்யதா

சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்த கலி யுகத்தில் முக்தியைப் பெற ஒரே வழி பகவான் ஹரியின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமே. இதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.”  

கலி யுக தர்மமே ஹரி நாமம் சொல்வதுதான், இது நாம் நம்மையும் இறைவனையும் உணர்வதற்கு வழி செய்யும். கிருஷ்ணருக்கும் அவருடைய நாமத்திற்கும் வேறுபாடு கிடையாது. நாமத்தைச் சொல்லும்பொழுது கிருஷ்ணர் நம்முடன் இருப்பதால், கலியின் தாக்கம் மறைந்து விடுகிறது. ஆத்மா மகிழ்ச்சியடைவதுடன் கிருஷ்ணருடைய திருநாட்டிற்குச் செல்வதற்கு வழிவகை செய்கிறது.

 

ஹரி நாம ஸங்கீர்த்தனம் செய்ய எளிய மந்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

 

இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பதற்காகவும் ஸங்கீர்த்தனமாக பாடுவதற்காகவும் மக்களுக்கு இதனை எடுத்துச் சொல்வதற்காகவும், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். ஜீவன்கள் மேலுள்ள அவரின் கருணை, முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் மூலமாக மேலும் விரிவடைந்தது. ஸ்ரீல பிரபுபாதர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்து உலகமெங்கும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதச் செய்திகளையும் பரப்பினார்.

இறைவனுடைய திருப்புகழைப் பாடுவதுகுறித்து வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்து, அறியாமையாகிய இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேராது.” (திருக்குறள் 5)

அதாவது, ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நாம் ஈடுபட்டால், நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளிலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இருவகையான வினைகளே அறியாமை என்னும் ஜட வாழ்வினை நமக்குக் கொடுக்கின்றன.

திருவள்ளுவரின் வாக்கு வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை இச்சிறு பகுதியில் தொடர் தலைப்புகளில் விளக்கிக் காட்டியுள்ளோம், இது படித்தவர்கள் அனைவருக்கும் பயனளித்திருக்கும் என நம்புகிறோம்.

(குறளின் குரல் முற்றும்)

 
 

ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபடும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது சகாக்களும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard