வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்
தமிழ் மொழியின் முக்கியமான நூல்களில் ஒன்று: திருக்குறள். திருக்குறளின் நோக்கம்மனிதர்களை நன்னெறியிலே செலுத்தி இறையருள் பெற வைக்க வேண்டும் என்பதே. திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தின் மூன்று குறள்களில் (1, 5, 6) இறைவனின் சிறப்பான நிலையையும் அவரை நாடும் சிறப்பையும் சொல்லி, மீதி ஏழுகுறள்களிலே சரணாகதி தத்துவத்தைக் கூறுகிறார் வள்ளுவர். வைணவ இலக்கியங்களானநாலாயிர திவ்ய பிரபந்தம், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை இந்த தத்துவத்தையேவலியுறுத்துகின்றன. பகவான் ஸ்ரீ சைதன்யர் ஸ்ரீமத் பாகவத தர்மமாகிய சரணாகதியையும் இறைத்தொண்டையும் இந்தியா முழுவதும் பரப்பினார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர்திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.
வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றைவிளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும்விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் புதிய பகுதியாகும். பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்குவிளக்கப்பட உள்ளது.
இந்த இதழில்: ஆத்ம தத்துவம்
ஆத்மா உடல் விட்டு உடல் மாறுகிறது
நாம் என்பது இந்த உடம்பல்ல, ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம்விளக்குகின்றது. ஆத்மா அழியாதது, உடல் விட்டு உடல் மாறக்கூடியது.
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ
“பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத்கீதை 2.22)
பகவத் கீதையின் இதே கருத்து வள்ளுவரால் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் உரைக்கப்படுகிறது. உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியேவிட்டு விட்டு வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
(திருக்குறள் 338)
கீழ்காணும் குறளில், இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும்மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக்காட்டும் வள்ளுவர், துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள்இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
(திருக்குறள் 340)
உடலைக் கண்டு வருத்தம் கூடாது
தான் ஓர் ஆத்மா என்பதை உணர்ந்து நிலையான இடம் தேடுதல் முக்கியம் என்றும், நிலையற்றஉடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது என்றும் வள்ளுவர் கீழ்காணும் குறளில் கூறுகிறார்:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
(திருக்குறள் 627)
உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர்தன் உடலுக்கு ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் என்றுகூறுகின்றார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கருத்தை,
தேஹினோ யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
“உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும்மாறுவதைப் போலவே, மரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னைஉணர்ந்த ஆத்மா (தீரன்) இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” (பகவத் கீதை 2.13)
உடல் முழுவதும் உணர்வு பரவியிருப்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். உடலின் ஒருபகுதியிலோ உடல் முழுவதுமோ ஏற்படும் இன்ப துன்பங்களை அனைவரும் உணர்கின்றனர். இவ்வாறு பரவியுள்ள உணர்வு, ஒருவரின் சொந்த சரீரம் என்ற வரம்பிற்கு உட்பட்டது. ஓர் உடலின்இன்ப துன்பங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே, ஒவ்வோர் உடலும் தனி ஆத்மாவைஉடையதாகும். ஆத்மா உடலுள் உள்ளதால் தனிப்பட்ட உணர்வு உள்ளது.
ஆன்மீக அணுக்கள் எண்ணற்றவை. இந்த மிகச்சிறிய ஆன்மீகத் துகள் உணர்வுடையதாகஇருப்பதால், உடல் முழுவதும் உணர்வு பரவியுள்ளது. சக்தி வாய்ந்த மருந்தின் ஆதிக்கம் உடல்முழுவதும் பரவுவதைப் போல, ஆன்மீக ஆத்மாவின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவியுள்ளது. உடலில் பரவியுள்ள உணர்வே ஆத்மா இருப்பதற்கு ஆதாரம். உணர்வற்ற ஜடவுடல் பிணம்என்பதைப் பாமரனும் அறிவான். எந்தவித பௌதிக, வேதியியல் முறையினாலும் பிணத்தினுள்உணர்வை மீண்டும் புதுப்பிக்க முடியாது; எனவே, உணர்வென்பது ஜடப் பொருட்களின்கலவையினால் தோன்றுவதல்ல, ஆன்மீக ஆத்மாவினால் ஏற்படுகிறது. ஆன்மீக ஆத்மாவின்நிலையினை எல்லா வேதங்களும் தெரிவிக்கின்றன. மேலும் அறிவுள்ள எந்த மனிதனாலும்இதனை அனுபவபூர்வமாக அறிய முடியும்.
உடலின் இயக்க சக்திகள் யாவும் இதயத்திலிருந்து உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் அந்த சக்தியின் உற்பத்தி மூலம், ஆத்மாவே என்பதை இவ்விஞ்ஞானம் காண இயலாமல்இருக்கின்றது. ஆத்மாவின் இயல்பான இடம் உடம்பினுள் இருக்கும் இதயம் என்றும், அங்கே அந்தஆத்மாவுடன் பரமாத்மாவாக இறைவனும் இருக்கிறார் என்றும் பகவத்கீதை, பாகவதம் போன்றவேத நூல்கள் கூறுகின்றன.