New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஹார்வர்டு தமிழிருக்கை - ராஜம் அம்மா


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ஹார்வர்டு தமிழிருக்கை - ராஜம் அம்மா
Permalink  
 


ஹார்வர்டு தமிழிருக்கை பற்றி மூத்த தமிழ் அறிஞர், ஆய்வாளர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ராஜம் அம்மா அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து.

மின்தமிழ் குழுமம் உட்பட தமிழ் குழுங்களிலே இருந்த உரையாடியிருக்கிறேன். அன்பிலும் பண்பிலும் சிறந்தவர்.

திரு ராஜம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் கீழே. சுட்டிக்காட்டிய நண்பர் Krishna Kumar அவர்களுக்கு நன்றி.

---

ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய அரசியல்.

மதிப்பிற்குரிய ராஜம் அம்மையார் அவர்கள் பெரும் தமிழறிஞர்கள் அவர்களிடம் பாடம் கற்றவர். தாம் ஈடுபடும் தமிழாராய்ச்சிக்காக உலகளாவி தமிழறிஞர்களால் வெகுவாக மதிக்கப்படுபவர். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை கிடைத்து விட்டதை எண்ணிப் பலரும் புளகாங்கிதம் அடைந்து வருகையில்...........ஹார்வர்ட் மற்றும் பெர்க்கிலி பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ் இருக்கை பற்றியும் அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றியும் ............. மிக அணுக்கமாக இவற்றை அணுகிய படிக்கு அம்மையார் அவர்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் வல்லமை குழுமத்தில்.

முழு இழையையும் https://groups.google.com/forum/#!topic/vallamai/x7c0wAY5J6Eவாசிக்கலாம்..

பின்னிட்டும் மிக முக்யமான கருத்துக்கள் அடுத்தடுத்த இரண்டு பதிவுகள் வாயிலாக அம்மையார் பகிர்ந்துள்ளார். அவை கீழே. 
பொறுமையிருப்பவர்கள் முழு இழையையும் நிச்சயம் வாசிக்கவும். ஸ்ரீமான் செல்வா அவர்கள் சில கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் வைத்துள்ளார். அதற்கும் அம்மையார் பதிலிறுத்திருக்கிறார்,.

தமிழ் இருக்கை அரசியல் எப்படியெல்லாம் செயல்படுகிறது. வாசித்துத் தெளிவடையவும்.

*******************************************************
BY RESPECTED RAJAM AMMAIYAR
ஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய என் கருத்தைப் பலரும் அறிவர். இங்கேயுள்ள சில உள்ளரசியலையும் இப்போது சொல்கிறேன். [நான் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்லப்போகிறார்!]
++++++++++
பின்னணி
------------
முதலில் … அதாவது இரண்டு ஆண்டுகளுக்குமுன் (2015-இல், ஃபெட்னாவில் இரண்டாம் முறையாக எனக்குச் சிறப்புச்செய்த ஆண்டு) ஃபெட்னா தொடர்பாக என்னுடன் உரையாடியவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்று உறவாடிய சிலரும் … என்னை ஹார்வர்ட் இருக்கைக்குழுவின் உள் ஆளாக வைத்துக்கொண்டது-போலப் பேசி, "உங்கள் வழிநடத்தலின்படித்தான் ஹார்வர்ட் தமிழிருக்கை அமைப்பதற்கான எல்லாம் நடக்கும்" என்று ‘ஆசை காட்டி’னார்கள்!

ஹார்வர்ட் மேலிடத்திலிருந்தும் “we’ll follow your lead” என்று மின்மடல் வந்தது! நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன் நம்பித் தொலைந்தேபோனேன்!

'அதுக்கென்ன, எனக்கு வயதானாலும் சில ஆண்டுகள் அங்கே தங்கியிருந்து இளையதலைமுறையினரைப் பயிற்றுவிப்பேன், என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்கிறேன்' என்று மிகவும் ஆவலுடனும் ஊக்கத்துடனும் சொன்னேன். ‘You’re a living treasure’ என்றெல்லாம் புகழப்பட்டேன்!!!

ஆனால் … பிறகு பாருங்கள் … சொல்லாமல் கொள்ளாமல் … என்னைத் ‘தொப்' என்று போட்டுவிட்டார்கள்!    தங்கள் முயற்சிகளைப் பற்றி எனக்குத் தெரிவிப்பதில்லை, அவ்வப்பொழுது மூன்றாங்கை நாலாங்கை வழியாகத் தகவல் வந்துசேரும்! சரி, நமக்கென்ன … 'மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம்' என்று நானும் ஒதுங்கிக்கொண்டேன்.

++++++++++
என் குழப்பத்துக்கு அடிப்படைக்கேள்விகள்
------------------------------------------------------

1. அமெரிக்காவில் ஒரு பணியிடம் அமைக்கத் தமிழகத்து மக்களிடம் ஏன் பணம் கேட்கவேண்டும்?

2. ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை?

3. ஏற்கனவே பொதுமக்களிடம் பணம் வாங்கி அமைக்கப்பட்ட பெர்க்கிலிப் பல்கலைக்கழகத் தமிழிருக்கையில் (Berkeley Tamil Chair) ஏன் ஒரு தமிழர் இல்லை?

3a. இந்தப் பெர்க்கிலி இருக்கை முயற்சிக்கு நானும் ஊக்கமளித்து உதவினேன். பணம் திரட்டியபின் அவர்கள் அந்த இருக்கையில் அமர்த்த open search செய்வார்கள் என்று நினைத்திருந்தேன், ஏமாந்துபோனேன். ஏற்கனவே இருந்த ஜார்ஜின் பதவியை நிலைப்படுத்தச் செய்த முயற்சி என்று பிறகுதான் தெரிந்தது.

3b. பெர்க்கிலி தமிழிருக்கையின் நோக்கம் முதலிய விவரங்களைப் பொதுமக்களுக்கு அறியத்தருமாறு கேட்டிருந்தேன். இன்னும் விவரம் கிடைக்கவில்லை.

4. What are the “terms of the gift?” நன்கொடையாளர்கள் இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கையை இப்படித்தான் அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தை வரையறுத்துச் சொன்னார்களா?

4a. நம் பண்டைய ஆவணங்களிலும் இந்நாளைய உயில் என்ற ஆவணங்களிலும் பார்க்கிறோம். இந்தக் குறிப்பிட்ட சொத்து இன்னின்னாருக்கு இப்படி இப்படிப் பங்கிடப்படவேண்டும் என்று வரையறுப்பதுவே மரபு.

++++++++++
என் பொதுக்கருத்து
-------------------------

அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் படித்தும் பணியாற்றியும் ஆழங்கால் பதித்த என் பட்டறிவின் அடிப்படையில் சொல்கிறேன்.

1. ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைக்கப் பணம் திரட்டும்போது அதன் நோக்கமும் பயனும் தெளிவாக விவரமாக அறிவிக்கப்படவேண்டும்.

1a. ச்சும்மா, ஆட்டபாட்டம், தமிழே உலகின் முதல் தாய்மொழி போன்ற ஆரவாரப் பேச்செல்லாம் தேவையில்லை. மக்களிடம் காசு கேட்கும்போது, இதனால் உனக்கு இன்ன பயன் என்று சொல்லிக் காசு வாங்கவேண்டும். ச்சும்மா … தமிழ் தமிழ் என்று உணர்ச்சிவேகத்தில் காசு வாங்குவதிலும் கொடுப்பதிலும் பொருளில்லை.

2. இந்த மாதிரி ஹார்வர்ட் இருக்கை போன்றவற்றில் தமிழரை அமர்த்தமாட்டார்கள். இது ஒரு வெள்ளைக்காரக் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல சொகுசான வாழ்க்கை அமையச்செய்யும், அவ்வளவே.

2a. தமிழருக்குச் சரியாக ஆங்கிலம் பேசவராது, ஆங்கிலத்தில் கற்பிக்க முடியாது … அது இது என்ற கருத்தெல்லாம் நிலவுகின்றன.

2b. அதே நேரம் … தமிழ்ப்பேராசிரியர் பதவியில் இருக்கிற எத்தனை அமெரிக்கருக்குத் தமிழில் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதத்தெரியும்? பலருக்கும் வாயில் தமிழ் விளங்காது, கடவுளே!

3. ஆராய்ச்சி, கீராய்ச்சி என்பதெல்லாம் interpretive/speculative social sciences முறையில் அமையும்.

3a. பெர்க்கிலித் தமிழிருக்கையிலிருந்து எத்தனை ஆய்வுக்கட்டுரைகள்/நூல்கள் வெளிவந்துள்ளன என்று யாராவது பட்டியலிட்டால் நலம்.

3b. அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்கள் என்ற பதவியிலிருந்த/இருக்கும் யாராவது தமிழ் இலக்கியத்தையும் தொல்காப்பியத்தில் காணும் இலக்கியக் கருத்துகளையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்களா? இவர்களுக்குத் தொல்காப்பியம் தெரியுமா?

3b1. ஒருமுறை சிக்காகோவில் தமிழ்ப்பேராசியர் பதவிக்காக ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தபோது அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்கலாமா என்று என் மாணவி ஒருத்தியிடம் கேட்டேன். அவள் கேட்டாள்: உனக்கு Foucault (https://en.wikipedia.org/wiki/Michel_Foucault) தெரியுமா அவன் தெரியுமா இவன் தெரியுமா … அவர்கள் வழியில் இலக்கியத்தைப் படிப்பிக்க முடியுமா என்று கேட்டு அசத்திவிட்டாள்! அவள் சிக்காகோ மாணவி. சரிதான் போ என்று அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை!

3b2. அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்களுக்குத் தொல்காப்பியம் தெரியுமா என்று கேட்க எந்தத் தமிழனுக்கும் துணிச்சல் இல்லையே, ஏன்?   

3b3. இப்போதிருக்கிற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்ப்பேராசிரியர்கள் எத்தனைப்பேர் என்னென்ன ஆய்வுநூல்கள் வெளியிட்டுளனர் என்ற பட்டியல் கிடைத்தாலும் மகிழலாம்.

3b4. ஆங்காங்கே மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடக்கின்றன. வெளிவந்த மொழிபெயர்ப்புகளையும் மூலநூலோடு ஒப்பிட்டுத் திறனாய்வு செய்ய எந்த முயற்சியும் இல்லை. மொழிபெயர்ப்புகளில் எத்தன ஓட்டைகள் என்று பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால் விருதுகள் மட்டும் குவியும்! காலக்கொடுமை! 

++++++++++

10-கோடி உரூபாய் … அம்மாடியோவ்! வேற எவ்வளவு வகையிலே அதெச் செலவு செய்யலாம் …

1. நம்ம உள்ளூர்களில் கழிப்பறை வசதி இல்லையாமே, இது தெரியாதா?

2. ஒடுக்கப்பட்டோர், பெண்பிள்ளைகள் நலத்துக்காக ஒரு கோடியாவது ஒதுக்கலாமே???

தமிழகமே … அமெரிக்கா நல்லாத்தான் போயிட்ருக்கு … ஒங்க வரிப்பணம் அதுக்குத் தேவையில்லெ.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒங்க ஊர்லே என்னென்ன செய்யணுமோ அதெச் செய்யுங்க. தமிழைப் பத்தி அப்புறமா ஆலாபனை செய்யலாம்.

இப்படிக்கு,
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆழங்கால் பதித்த ஒருத்தியின் பதிவு.
***************************************************************************************

சென்ற என் பதிவில் குறிப்பிட நினைத்து மறந்த கருத்து ஒன்று:

இப்போதைய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றிவரும் தமிழரின் நிலையைத் தமிழக அரசும் பிற நன்கொடையாளர்களும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இந்தத் தமிழாசிரியர்களின் நிலை அடிமாட்டுநிலை — அமெரிக்கப் பேராசிரியர்களுக்கான வருவாயும் சலுகையும் இவர்களுக்கு இல்லை. Kitchen Tamil, Street Tamil சொல்லிக்கொடுக்கும் "Native informant” என்ற நிலையில் வைத்தே இவர்களை மேலதிகாரிகள் பார்க்கிறார்கள். Pure colonial attitude! இவர்களுடைய சேவை இல்லாவிட்டால் … அமெரிக்கர்களால் 'டமில் சோலிக் கோடு(க்)க மோடியாது!’ கொடுமை’ப்பா. தமிழன்னைக்கு இது தேவையா?

[உண்மையிலேயே … வெள்ளந்தியாக … தெரியாமல் மாட்டிக்கொண்ட இந்த நிலையிலிருந்து தப்பி வெளியேறியவள் நான்.]

[ஒரு சிறு தனிக்குறிப்பு: சங்க இலக்கியத்துக்கான சான்றிலக்கணம் (A Reference Grammar of Classical Tamil Poetry) என்ற என் முதல் நூல் வெளிவந்ததும் … ஒரு சிறு பிள்ளை-போல அதைக் காட்டி மகிழவேண்டி ஒரு சக ஆசிரியரின் அலுவலகத்துக்கு ஓடினேன். அங்கே அவருடைய மனைவிதான் இருந்தார். அவரும் ஓர் ஆசிரியை. புத்தகத்தைப் புரட்டிக்கூடப் பார்க்காமல் … சொன்னது: "Even a civil servant in India can write a book like this, only here we make a big deal." சரியான colonial attitude. சனியன்கள். அப்படியா? என் புத்தகத்துக்கு முன்னும் பின்னும் அது-போலப் படைப்புகள் எவ்வளவு உருவாகிக் குவிந்திருக்கின்றன என்று தெரிவித்தால் மகிழ்வேன்.]

[இன்னொரு தனிக்குறிப்பு: என் நூல்களுக்கும் ஆய்வுக்கட்டுரைகளுக்கும் மதிப்புக்கொடுக்காமல் என்னை ஓரங்கட்டியே வைத்திருந்தபடியால் … மேலும் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது. என் நூல்களினால் என் பகைவரும் பயன்பெறுவது மட்டும் எனக்குத் தெரியும்! ஆனால் … என் ஆய்வினால் எனக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.]

பளபள ஜிகு ஜிகு ஜொலிஜொலி என ஒரு ஹார்வர்டு இருக்கை அமைக்குமுன் … இன்றையத் தமிழாசிரியர்களின் கீழான நிலையைச் சீராக்கி அமெரிக்கப் பேராசிரியர் நிலைக்குக் கொண்டுவந்தால் என்ன? ஒரு கோடி செலவாகுமா? நன்கொடையாளர்களே, நினைத்துப் பார்க்கவும்.

முதலில் நம்வீட்டுப் பிள்ளைகளை நன்றாக ஊட்டி வளர்ப்போம், பிறகு உலகத்தில் முத்திரை பதிக்கலாம், அவசரமில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

https://www.facebook.com/rajasankar/posts/10155381032843702

Dev Raj அயலகத்தில் வசிக்கும் ஒரு முதிய பெண்மணியை அவதூறு கூற மனமில்லை; என் மகள் இல்லத்தில் இருக்கும்போது பலமுறை இவருடன் பேசியுள்ளேன், தொ பே தொடர்புதான். ஃபெட்னா அமைப்பைப் பற்றி இவருக்குத் தெரியாதா? அதை ஏன் ஆதரிக்கிறார்? தமிழ் என்றாலே உள்ளரசியல்தான் என்றாகிவிட்டது வருந்தத்தக்க நிலை. டாக்0 ராஜம் தமிழ் இருக்கை பற்றிக் கூறிய கருத்துகளில் சற்றும் மறுப்பில்லை.

Krishna Kumar நன்றிகள் ஸ்ரீ ராஜ்சங்கர். தங்கள் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட படி அம்மையாரின் கருத்துக்கள் பரந்த வாசிப்பைப் பெறும். ஸ்ரீமான் செல்வா அவர்கள் கவனிக்க வேண்டிய சில மாற்றுக் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். விஷயத்தில் நாட்டமும் அக்கறையும் உள்ள அன்பர்கள் வல்லமைக்குழுமத்தின் முழு இழையையும் வாசிக்க ஒரு முழுமையான பார்வை கிடைக்கும். 

ஃபெட்னா என்ற அமைப்பில் எப்படி எப்படி ராஜம் அம்மையார் போன்ற தமிழறிஞருக்கு ஆசை காட்டி பின்னர் எப்படி ஓசைப்படாமல் அவரைக் கை கழுவியிருக்கின்றனர் போன்ற செய்திகளை வாசிக்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. வயோதிகத்திலும் இந்த அம்மையார் தமிழாராய்ச்சியில் நாட்டம் கொண்டு உழைக்க முற்படுகையில் ஃபெட்னா போன்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு புறம் அம்மையாருக்கு விருதளித்து விட்டு மறுபுறம் அவரைத் தவறாக வழிநடத்திப் போக்கு காட்டுவதை எப்படிச் சொல்லுவது.

Pilpi Naan முழுக்க முழுக்க சர்ச்சின் கைகள்.... நேட்டிவ் கலாச்சாரத்தை அழித்து கிறித்தவத்தை நிலைநாட்டும் வெறியன்றி வேறொன்றும் இல்லை..... நீங்க புடுங்கற ஆணியே போதும்...

Dev Raj கூகிள் தமிழ்க் குழுக்களின் உறுப்பினரில் பலர் ஃபெட்னா ஆதரவாளரே; ஓம் எனும் பிரணவம்கூட ஆதி தீர்த்தங்கரர் எழுதிக்காட்டியதே என ஆலாச்சி செய்பவர்கள்

Raja Sankar அதே தான். தமிழ் தமிழ் ன்னு கூவுறதோட சரி. அதுக்குமேலே ஒரு ஆணியும் புடுங்கறதே இல்லை. 

சங்கம் வைச்சு தமிழ் வளர்த்தவன் பார்ப்பான், தொல்காப்பியரிலே இருந்து உவேசா வரைக்கும் ஆரிய வந்தேறி பார்ப்பான் அப்போ தமிழே ஆரிய பார்ப்பானிய மொழி எனவே ஆங்கிலம் ஆக்கனும் என தமிழை கொத்து பரோட்டா போடுறது. 


அதை கேள்வி கேட்டா உடனே ஏ இந்திக்காரனே, ஏ பாயாச மோடியேன்னு கூவவேண்டியது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

http://www.aanthaireporter.com/what-is-the-benefit-of-the-people-of-tamil-nadu-from-harvard-tamils-chair-its-not-necessary/



__________________


Newbie

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

Tamil Kavithaigal About love failure



__________________
tamilk


Newbie

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

tamil quotes about love



__________________
tamilk
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard