இந்தியாவில் யாருமே ஆரியர் கிடையாது.ஆரியர் என்றால் ஐரோப்பாவில் தங்க நிற தலைமுடி (பிளான்ட்), நீலகண், வெள்ளைதோல்...இவர்கள் தான் ஆரியர்கள்.ஹிட்லர் இவர்களை வைத்துதான் ஆரிய ஜெர்மனியை உருவாக்க முயன்றான்.நம் ஊரில் யாருக்கும் இந்த மாதிரி உடல் அமைப்பு இல்லை.
இரானியர்கள்,இலங்கையர்கள், வட இந்தியர்கள்,ஆப்கானியர்கள் ஆகியோர் தம்மை ஆரியர் என கருதுவதுண்டு.20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் காக்கேசியர்களுக்கும், கருப்பர்களுக்கும் இடையே கலப்பு நிகழாமல் இருக்க ஜிம்க்ரோ சட்டங்கள் போடப்பட்டன.கருப்பர்களுக்கு தனி கல்லூரி, உணவுவிடுதியில் தனி இடம், வெள்ளையர்களுக்கு தனி இடம் ஆகியவை ஒதுக்கபட்டன.அப்போது அங்கிருந்த இந்தியர்கள் "நாங்களும் காக்கேசியர்கள் (Caucasian) தான்,ஆரியர்கள் தான்" என சொல்லி வெள்ளையருக்கு சமமாக சலுகைகளை கேட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த காமடி கூத்தை நிராகரித்து இந்தியர்களை கருப்பர்களுடன் சேர்ந்து ஒரே ஜோதியில் ஐக்கியமாக சொல்லிவிட்டனர்.
பண்டைய இந்தியர்கள் தங்களை ஏன் ஆரியர்கள் என சொல்லிகொள்ள ஆரம்பித்தனர் என பார்த்தால் அதற்கான காரணத்தை மனித மனங்களில் தான் தேடவேண்டும்.எப்போதும் உயர்ந்த இனத்துடன் தன்னை சம்பதபடுத்திகொள்வது மனித இயல்பு.இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அரபி மொழி படித்து தங்களை அராபியர்கள் என சொல்லிகொண்டுள்ளனர்.அதேபோல் முஸ்லிம்களில் பலரும் நாங்கள் குறைஷி குலம், முகமதுநபி பரம்பரை என சொல்லி சையது என வம்சாவளி பெயரை போட்டு கொள்கிறார்கள்.அதேபோல் பண்டைய காலத்தில் ஐரோப்பிய ஆரியர்கள் சிறு குழுக்களாக இரான், வட இந்தியா வந்திருக்கலாம்.தனியாக ஆரிய வம்சாவளி என இல்லாமல் அவர்கள் லோக்கல் ஜனதொகையில் ஐக்கியமாகியிருக்கும் வாய்ப்புக்களே அதிகம். அதுபோக வணிக தொடர்புகள் மூலமும் ஆரியர்களை பற்றி அறிந்த இந்தோ-இரானிய மக்கள் தம்மை ஆரியர் என சொல்லிகொண்டு அதை பட்டமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம்.
காலபோக்கில் வருனங்கள் உருவானபோது தமிழ்நாட்டு லோக்கல் ஜாதிகள் "நானும் ரவுடிதான்,என்னையும் ஜீப்பில் ஏத்து" என சவுண்டு விட்டுகொண்டு வடிவேலு போலிஸ் ஜீப்பில் ஏறியது போல தம்மை க்ஷத்திரியர்,பிராமணர் என அடையாளபடுத்திகொண்டு ஆரியராகி விட்டார்கள்.மத்தபடி காஷ்மீர் பண்டிட்டுக்கும், தமிழ்நாட்டு ஐயர் ஐயங்காருக்கும், இரானியருக்கும், நார்டிக் ஆரியருக்கும் எந்த ஜெனடிக் ஒற்றுமையும் இருக்கமுடியாது. நளதமயந்தி எனும் படத்தில் பாலகாட்டு ஐயரான நடிகர் மாதவன் ஆஸ்திரேலியா போகும்போது அங்கிருக்கும் வெள்ளை இனவாதிகள் அவரை "நீ கருப்பன்" என சொல்லி அவமதிப்பார்கள்.அப்போது மாதவன் "நானா கருப்பு?நான் தான் என் ஊரிலேயே சிவப்பு" என அழுவார்.அந்த மாதிரி இந்தியாவில் தம்மை ஆரியன் என பிதற்றிதிரியும் ஆசாமிகள் ஐரோப்பாவுக்கு போய் தம்மை ஆரியன் என்றால் அங்கிருக்கும் நியோ நாஜி ஆரியர்கள் இவர்கள் நின்ற இடத்தை டெட்டால் போட்டு கழுவுவார்கள்.
ஆபிரிக்கர்களிடையெ வெள்லைதோல் கருப்பன், கருப்புதோல் கருப்பன் என இருவிதமான பிரிவுகள் உண்டு.அவர்களுக்குள் தோல் காரணமாகவே சண்டை வந்து அடித்துகொள்வார்கள்.அவர்களுக்குள் என்ன சண்டை பிடித்துகொண்டாலும் அவர்கள் கருப்பர்கள் தான்."தங்கம் வெச்சு தேய்ச்சா கூட எருமை நிறம் வெளுக்காது" என ஆச்சி மனோரமா சொல்லுவதுபோல் நாம் என்னதான் பேர் அன்ட் லவ்லி பூசிகொண்டு சிகப்பாக நடிக்க முயன்றாலும் இந்தியர்கள் யாரும் ஆரியராக மாட்டார்கள்.நிரத்தை பற்றிய தாழ்வு மனபான்மையையும், ஆரியன்,திராவிடன் வெள்ளைதோல் மயக்கத்தையும் உதறிதள்ளிவிட்டு நாம் நாமாக இருப்பதே நன்று.இரண்டாம் உலகபோரில் ஆரியர்களுக்கு உலகமே சேர்ந்து ஆப்படித்தது.அத்துடன் இந்த மாஸ்டர் ரேஸ்,தோல் நிறம் பற்றிய மனோபாவங்கள் மாறியிருக்கவேண்டும்.துரதிர்ஷடவசமாக மாறவில்லை.