New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் -அந்தணர் யார்?


Guru

Status: Online
Posts: 19539
Date:
திருக்குறள் -அந்தணர் யார்?
Permalink  
 


திருக்குறள் -அந்தணர் யார்?

 

திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.

 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாம் மேலே கண்ட குறட்பாக்களில் முதலாவது கடவுளையும் இரண்டாவ்து ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார். எனவே நாம் நேரடி அந்தணர் என்பது அன்றி பிற பெயர்களாலும் அந்தணர் - வேள்வி தொடர்பான விஷயங்களிலும் வள்ளுவர் கூறியுள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். இறுதியில் மேலே உள்ள இரு குறட்பாக்களையும் காண்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.

மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

 

நூறுக்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.

 

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

 

பரிபாடல்2:

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க, 
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
 


ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, 
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை 
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, 
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, 
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80 

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர், 
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, 
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் 
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் 
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85 

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர, 
வையை! நினக்கு மடை வாய்த்தன்று. 
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து, 
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர் 
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90 

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்? 
நீ உரைத்தி, வையை நதி!
 


மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர். 
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய். __________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது. 

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில் 
தலைவன் கூற்று 
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்

தணிவின்று, வையைப் புனல். 50


தலைவன் கூற்று

'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட

புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,

கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.

என ஆங்கு-


பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்

பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு.

'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'

ஐயர், வாய்பூசுறார், ஆறு.

-பா¢பாடல்-திரட்டு 2:50-63 
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது. 


மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

மதுரைக் காஞ்சி

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலமமர் வையத் தொருதா மாகி . . .470


உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480

``தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656

 

திருமுருகாற்றுப்படை

2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்
,

4. திரு ஏரகம்

அந்தணர்:
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180


மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் 
பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து 
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,

 

பெரும்பாணாற்றுப்படை

செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு 499

 

பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
 . . . .300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்

அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.

 

பதிற்றுப்பத்து

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்'' - 24)

 

பாட்டு - 74

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்

 

அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

 

அந்தணர் - பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.

நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

அனால் திருவள்ளுவரோ

குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வ உரை:

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

மு.வ உரை:

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார். ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல். ஒருவன் வேல்விகள் செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிர்றார்.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

வேள்விகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது

விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

விருந்தினரை உபசரித்தல் அதிதி யக்ஞம் எனப்படும் இது வேள்விக்கும் ஒப்பாகும், இவ்வேள்வி செய்வோர் வீட்டில் ல்க்ஷ்மி தேவீ வாசம் செய்வாள் என்கிறார்.

குறள் 413: கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது

வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.

வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன. முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:

பார்ப்பு என்றால் பறவைக் குஞ்சு. பிரக்கும் போது முட்டை உடலில் வந்தது பின் முட்டை உடைய புது பிறப்பு எடுப்பது போலே பூனல் எனப்படும் உபநயந்துக்குப்பின் வேதம் படிக்க ஆசிரியரிடம் செல்கிறான், எனவே பார்ப்பான் என்றால் இருபிறப்பாளன்தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான்.

அந்தணர்- அந்தம் + அணர். உலகின் உறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.

வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, 
நாகம் நாணா, மலை வில்லாக, 
மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, - 25 


மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் 
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் 

உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு - 30
(Paaaripādal, Chapter 5)

 

மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும் (Paripādal 8:1-5)__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

தொல்காப்பியம்-செய்யுளியல்480

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே 2மந்திரம் என்ப.

என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

 

உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது."புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்.

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தமிழகம் 3ம் நூற்றாண்டு முதல் 6. வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக்கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினென் கீழ்கணக்கு நூல்களாகும்

திருக்குறள் இக்காலத்தில் இயற்றப்பட்டதே- எனவே திருவள்ளுவர் தன் நூலை ஒரு பொது நூல் தோற்றம் தரும் வகையில் கடவுள் வாழ்த்தின் பத்து குறட்பாக்களில் ஒரு பெயர்சொல் கூட பயன்படுத்தவில்லை. இதை வெவெவேறு மதத்தினரும் தன் வகையில் பொருத்த முயற்சித்தல் இயல்பே. ஆனால் வள்ளுவர் மனதை அறிய நாம் மேலே கண்ட முறையில் அவர் சங்க கால நடைமுறையில் தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக உணறலாம்

சாங்கிய தரிசனத்தி ருந்து எழுந்த ஒரு தத்துவம் பின் பௌத்த சமண மதங்களாக மாறியது. இவ்விரு மதங்களும் பல வைதிக மதக் கோட்பாடுகளை சற்றே மாற்றி பயன்படுத்தியது மட்டுமின்றி இதிகாசங்கள் இரண்டையும் திரித்து தங்கள் மத நம்பிக்கைகேற்ப பிற்காலத்தில் புனைந்தனர். என்வே வள்ளுவர் காலத்திற்கு முன்பே இருந்த ஆதாரங்கள் வள்ளுவர் வைதீக நடைமுறையையெ கூறினார் எனத் தெளிவாக உண்மைகளை தெளிவாக்கும்.

Jainistm is a kind of religion based upon the acceptance of the Samkhya system, but venerating a limited group of noble selves, who have achieved perfection and bliss. ( p-10 Coparative Religion ; A.C.Bouquet)

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாமக்கல் கவிஞர் உரை

அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

Translation:

Where guardian guardeth not, udder of kine grows dry, 
And Brahmans' sacred lore will all forgotten lie.

Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

மு.வ உரை:

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

 

குறள் 1066:

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்த தில்.

 

மு.வ உரை:

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! 
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார்,முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல்நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......

என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார்.

திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 

மறை (37) in Sangam Liturature
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - திரு 186
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் - பெரும் 300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின் - பெரும் 301
மறை அலர் ஆகி மன்றத்தஃதே - குறு 97/4
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி - பரி 2/63
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை/ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் - பரி 3/14,15
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய - பரி 21/4
மறை ஆடுவாரை அறியார் மயங்கி - பரி 24/29
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப - பரி 25/1
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை - கலி 25/23
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை/பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் - கலி 25/23,24
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி - கலி 41/41
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் - கலி 42/28
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து - கலி 52/1
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட - கலி 84/10
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் - கலி 86/28
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி - கலி 103/38
பாட மறை நின்று கேட்டனன் நீடிய - கலி 131/42
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை - கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை - கலி 133/12
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் - அகம் 48/24
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி - அகம் 62/6
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை/அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று - அகம் 98/24,25
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென - அகம் 136/25
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே - அகம் 136/29
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து - அகம் 303/1
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய - புறம் 35/20
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் - புறம் 60/11
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை/நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் - புறம் 196/12,13
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு - புறம் 243/5


__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 

அந்தணர் (28)
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
அந்தணர் காணும் வரவு - பரி 2/68
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20
அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20

 மேல்
 
  அந்தணர்க்கு (3)
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5

 மேல்
 
  அந்தணரதுவே (1)
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே/வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/3,4

 மேல்
 
  அந்தணன் (8)
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி 38/1,2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7

 மேல்
 
  அந்தணாளர் (1)
ஆ குரல் காண்பின் அந்தணாளர்/நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9

 மேல்
 
  அந்தணாளன் (1)
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்/இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12

 மேல்
 
  அந்தணிர் (1)
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்/நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/1,2

 மேல்
 
  அந்தணீர் (2)
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்/வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி 9/4,5


__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 

கற்பின் (33)
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் - திரு 6
முல்லை சான்ற கற்பின் மெல் இயல் - சிறு 30
சிறு_மீன் புரையும் கற்பின் நறு நுதல் - பெரும் 303
மாசு இல் கற்பின் மடவோள் குழவி - நற் 15/7
முல்லை சான்ற கற்பின்/மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே - நற் 142/10,11
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4
விளங்கு நகர் அடங்கிய கற்பின்/நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே - குறு 338/7,8
அருந்ததி அனைய கற்பின்/குரும்பை மணி பூண் புதல்வன் தாயே - ஐங் 442/4,5
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் - பதி 16/10
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்/குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் - பதி 31/24,25
உலகம் தங்கிய மேம்படு கற்பின்/வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து - பதி 59/8,9
காமர் கடவுளும் ஆளும் கற்பின்/சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ - பதி 65/9,10
மீனொடு புரையும் கற்பின்/வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே - பதி 89/19,20
ஆறிய கற்பின் தேறிய நல் இசை - பதி 90/49
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் - பரி 5/46
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என - அகம் 6/13
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் - அகம் 9/24
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய - அகம் 33/2
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் - அகம் 106/11
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்/அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் - அகம் 114/13,14
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் - அகம் 198/12
முல்லை சான்ற கற்பின்/மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே - அகம் 274/13,14
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/5
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ - புறம் 3/6
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி - புறம் 122/8
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் - புறம் 163/2
மறம் கடிந்த அரும் கற்பின்/அறம் புகழ்ந்த வலை சூடி - புறம் 166/13,14
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்/மேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே - புறம் 183/9,10
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் - புறம் 196/13
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை - புறம் 249/10
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் - புறம் 361/14

 மேல்
 
  கற்பினாட்கு (1)
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் - கலி 9/22

 மேல்
 
  கற்பினாள் (3)
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் - கலி 2/13
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்/தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை - கலி 2/21,22
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்/நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என - கலி 16/20,21

 மேல்
 
  கற்பினின் (1)
கற்பினின் வழாஅ நன் பல உதவி - அகம் 86/13

 மேல்
 
  கற்பு (5)
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் - பதி 70/15
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை - பரி 9/81
காமம் கள விட்டு கை கொள் கற்பு_உற்று என - பரி 11/42
காணிய வம்மோ கற்பு மேம்படுவி - அகம் 323/7
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல - புறம் 383/13


__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

யுகமாயினி : டிசம்பர் 2007 இதழில் (பக்கங்கள் 20-24) வெளியான என் கட்டுரையின் சுருக்கப்படாத மூல வடிவம்
அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
"இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவகசிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம்.."
மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப்பூசி விட்டனர்' என்று கொள்கிறேன். திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் பொருத்தமாயிருக்கும்.
அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே!
இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண / தமிழ் அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.
1. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏற்காத சமணர்தம் அத்திநாத்தி வாதம் என்ற ('உளது இலது' என்று ஐயம் தொனிக்கும்) ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது.
2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சுட்டுவதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சி ஆங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவரே அல்ல என்பது தெளிவு.
3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.
4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மன்னன் முறை தவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.
6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:
பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி *அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன் உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள் செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533
கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்* நல்லான் அடக்கமுடையான் நடுச்செய வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554
இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன:
தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.
‘எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், ‘எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர். அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் இந்தக் பாவுக்கு (குறள்-9) உரையெழுதுகிறார்.
8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும்.
காட்டாய்: 'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245) என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை,
'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே' என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே, 'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு' என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.
9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற் சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* தொடர்புடைய குறள்: மெய்யுணர்தல் - 367
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் வேண்டின தொன்றுமே வேண்டுவது - வேண்டினது வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
* தொடர்புடைய குறள்: அவாவறுத்தல் - 362
சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும். இது மட்டுமின்றி சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடியதெனப் போற்றப்படும் 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:
'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)
10. இறுதியாய் ஒன்று. அகிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அகிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதும் விட்டேம் என் பார்க்கும் நிலை’ என்று சமணம் முதலிடத்தில் வைக்கும் துறவறத்தை தொழில் செய்வோர்க்குப் பின்னேயே வைக்கிறார்.
வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்லவில்லை.
புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?
'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே.
அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.
புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும்.
ஆயின் அவர் பெரும்பான்மையினரா?
என்றுமில்லை. அவரே சொல்கிறார்:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!
பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம். தமிழர் பரவிய பண்டைத் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அதன் தாக்கத்தை இன்றும் காண்கிறேன்; குறிப்பாய் உணவுப் பழக்கங்களில்.
காட்டாய் ஒன்று:
'சாடே' என்னும் பண்டம் நிணத்தைத் தீயில் வாட்டிச் செய்வது. தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் மிகப் பிரபலமானது. இதன் மூலம் தமிழ்தான்.
இதன் செய்முறையை சேக்கிழார் பெருமான் பாடுகிறார்:
வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து கொண்டு கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை பதத்தில் வேவ சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகிலை இணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவார் ஆனார்
இப்படி, ‘கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங்கு அழலுறு பதத்திற் காய்ச்சி’ ஆக்கும் இந்தப் பண்டம், இப்பகுதிகளில் பண்டைத் தமிழர் அறிமுகப்படுத்தியது என்பதற்குச் சான்றாய் 'சாடே' (மூலம் 'சதை' ) என்ற பெயரிலேயே இன்றும் வழங்கப் படுகிறது.
'சாடே' மட்டுமின்றி இன்னும் பல பண்டங்கள் இருக்கின்றன. நம்மூரில் கணபதிக்குப் படைக்கும் மோதகம் என்ற கொழுக்கட்டை கூட 'புகிஸ்' (Google: Kue bugis) என்ற பெயரில், மாவினில் தேங்காய், வெல்லம் கலந்து செய்த பூரணத்தை வாழையிலையில் சுருட்டி வேகவைத்து ஆக்கப்படும் பண்டம். இன்றும் பண்டிகைக் காலத்தில் ஜாவானியர் வைக்கும் படையலில் முதன்மைப் பண்டமிது.
திருக்குறளுக்குத் திரும்புவோம்.
ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, அதி அகிம்சை சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.
காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)
அன்புடன்,
ஜாவா குமார்


__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 

அந்தணர் (2)THOL KAAPPIYAM
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் - பொருள். கற்:5/15

 மேல்
 
  அந்தணர்க்கு (1)
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய - பொருள். மரபி:70/2

 மேல்
 
  அந்தணாளர்க்கு (2)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு - பொருள். மரபி:72/1
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே - பொருள். மரபி:82/1

 மேல்
 
  அந்தம் (5)
இ என அறியும் அந்தம் தமக்கு இலவே - சொல். கிளவி:4/4
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் - பொருள். கற்:5/16
அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் - பொருள். கற்:6/24
அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம் - பொருள். பொருளி:49/1
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே - பொருள். மரபி:3/4


__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

தமிழ்ச்சொல்

March 4, 2009

”நான்கு வேதங்களும் பத்து உபநிஷதங்களும்” என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது,வேதம் என்ற நேரடியான வார்த்தையைத் தவிர்த்து, இதே அர்த்தத்தில் உள்ள பிற சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட,தேடினேன்.சில சொற்கள் அகப்பட்டன. இச்சொற்கள், இச்சொற்களை உட்கொண்ட சில வரிகள், இவ்வரிகளின் மேலோட்டமான அர்த்தம்,இவற்றைப் பற்றியே இப்பத்தி.

”அந்தணரோத்துடைமை மிகவினிதே” என்று இனியவை நாற்பதில்,அந்தணர் வேதத்தை மறவாமை இனிது எனும் அர்த்தத்திலும்,

 “வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பானுரை” என்று இன்னா நாற்பதில், வேதம் ஓதுதல் இல்லாத அந்தணன் சொல் துன்பம் எனும் அர்த்தத்திலும்,

 ”ஒத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்” என்று பெருங்கதையிலும்,ஒத்து என்ற சொல் வேதம் என்ற பொருளில் வருகிறது.

”ஆரணத்தின் சிரம் மீது உறைசோதியை அந்தமிழால்” என்கிறார் கம்பர்.அதாவது,வேதத்தின் உச்சியில் விளங்கும் பரஞ்சோதியான நாராயணன் என்று சடகோபர் அந்தாதியில் ஆரணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 ”எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோர் இதுவே” என்ற குறுந்தொகைப்பாடலின் “உன் வேதத்தில் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மருந்து இருந்தால் சொல்” என்று அர்த்தம் தரும் இவ்வரிகளில் எழுதாக்கற்பு எனும் சொல் வேதத்தைக் குறிக்கிறது.

 ”அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தை செயந்தணர்” என்கிறார் திருமூலர், அதாவது, அந்தணர் வேதங்களை அணவுவர் என்ற பொருளிலும்,

“அருமறையின் நெறிகாட்ட,அயன் பயந்த நிலமகளை” என்ற கலிங்கத்துப்பரணியின் வரிகளில், “வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக, நான்முகன் படைத்த நிலமகளைக் கைப்பிடித்தவன்” என்று குலோத்துங்கச்சோழனைப் பாராட்டும் வரிகளிலும், அருமறை என்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது.

”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து” என்று சிலப்பதிகாரத்தில் வேதம் என்னும் பொருளில் மறைநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. ஆக,வேதம் என்ற பொருளில் ஒத்து,ஆரணம்,எழுதாக்கற்பு,அருமறை,மறைநூல் போன்ற சொற்கள் பிரயோகப்பட்டுள்ளன. இதே பொருளில் மேற்கூறிய சொற்களைத் தவிர்த்து, வேறு சொற்கள் உளவா எனத் தெரிந்துகொள்ள ஆசை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 நான் வள்ளுவன்பால்  ஈடுபாடு கொள்ள முக்கிய காரணங்கள், உயர் கருத்துக்களை ஏழே வார்த்தைகளில் சொல்ல முடிந்த Communication Skill மற்றும் மொழியின் ஆளுமை.

”ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு” (குறள் 190)
என்ற அறத்துப்பால் குறளிலும்

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு”  (குறள் 383)
என்ற பொருட்பால் குறளிலும்

“தஞ்சம் தமரல்லர் ஏதிலர் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி” (குறள் 1300)
என்ற இன்பத்துப்பால் குறளிலும் உள்ள கருத்து எந்நாட்டவர்க்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை வாய்ந்தவை.

வள்ளுவன் எந்த சமயத்தையும் தழுவாது எல்லா சமயத்துக்கும் பொருந்தும்படியே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், திருக்குறள் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

இதையே, மாமூலர் திருவள்ளுவமாலையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”.

அதாவது, திருக்குறள் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி உலக முழுமைக்கும் பொருந்தும் என்ற பொருளில் பாடுகிறார் மாமூலர்.

உலகில் எந்த சமயத்துக்கும்,எந்த நாட்டினர்க்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கிய நூலை வள்ளுவன் இயற்றிய காரணத்துக்காகவே, பாரதி ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்று மார்தட்டுகின்றான்.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 வாய்மொழி (23)

இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 774

வரை போல் யானை வாய்மொழி முடியன் - நற் 390/9

காலை அன்ன சீர் சால் வாய்மொழி/உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5

வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதி 37/2

நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் - பதி 55/12

வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68

மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11

வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12

வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93

வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது - பரி 9/13

வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி/இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி 15/63,64

வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25

வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16

கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/11

மாய பரத்தன் வாய்மொழி நம்பி - அகம் 146/9

நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி/நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய - அகம் 162/16,17

வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - அகம் 205/8

வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது - அகம் 262/5

வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10

வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன - புறம் 348/5

வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் - புறம் 388/9

வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம் 398/8

 

 வாய்மொழியால் (1)

 

பொய் அறியா வாய்மொழியால்/புகழ் நிறைந்த நன் மாந்தரொடு - மது 19,20__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

டெல்லி பல்கலைக்கழக முன்னாள்தமிழ்த்துறை தலைவர் முனைவர் டாக்டர் சிவப்பிரியா அம்மாவின் "நெற்றியடி" பதிவு

யார் தமிழர் ? யார் தமிழர் விரோதி ?

பார்ப்பன வாகை (தொல்காப்பியம்) என பார்ப்பனர்களது வெற்றியைப் பாடுவதற்கு என்றே தனித்துறை வைத்துப் பிராமணர்களைப் போற்றிப் பாடுபவர்தான் தமிழர். 
பார்ப்பனர்களைத் தூற்றுபவர் தமிழர் விரோதி.

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறிகிலையே (புற நானூறு) 
என்று பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்காதவர்தான் தமிழர். பார்ப்பனர்களைத் தாக்கிப் பழிப்பவர் தமிிழர் விரோதி.

கோயிலொடு நிறீஇ, 
நல்லானோடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசுபதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப்பாலை) .

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர் (புறநானூறு) .

என கோயில் கட்டியும் பசுக்களையும் காளைகளையும் பாதுகாத்தும் வேதம் ஓதும் வேதியர்களின் புகழ் பரவச் செய்தும் தான தர்மங்கள் செய்தும் இறந்த முன்னோர்க்கு திவசம் செய்தும் புண்ணியத்திலிருந்து தவறாத பக்தி வாழ்க்கை வாழும் தங்கமான மனிதர்தான் தமிழர்.

கோயிலையும் வேதம் ஓதும் வேதியர்களையும் தூய அர்ச்சகர்களையும் அடியார்களையும் மிகக் கீழ்த்தரமாகத் தாக்கிப் பழித்து சல்லிக்கட்டு நடத்திக் காளைகளைத் துன்புறுத்தி நாத்திகச் சாக்கடையில் மூழ்கிப் பாவ வாழ்வு வாழ்பவர் தமிழர் விரோதி.

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் (திருக்குறள்) 
என உலகத்தவர் உண்டு என்று சொல்லும் கடவுளை இல்லை என்று மறுப்பவர் தமிழர் அல்லர் மனிதர் அல்லர். 
தமிழரோடு மனிதர்களோடு வாழ முடியாத பேய்களே.

கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான் தாளை வணங்காத்தலை (திருக்குறள்)

என எட்டு சிறந்த குணம் உள்ள ஈசனை வணங்காத நாத்திகத் தலை கண் காது உள்ளிட்ட ஐம்பொறி உள்ள தமிழர்த் தலை அல்ல, இவை எதுவும் இல்லாத பொம்மைத் தலையே.

அம்பரமாகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் (சம்பந்தர்) .

செந்தீ முதல்வர் அற நினைந்து வாழ்தலும் --- திங்கள் மும்மாரிக்கு வித்து (திரிகடுகம்) .

என வேத மந்திரம் ஓதி யாகம் செய்து மழை பொழியச் செய்து உலகத்திற்கு நன்மை செய்யும் பார்ப்பனர்களின் அறச் செயலை எண்ணி வாழ்பவர் தமிழர். 
பார்ப்பனர்களைத் தூற்றுபவன் தமிழர் விரோதி நாட்டில் நல்லது செய்ய விடாமல், மழை பொழிய விடாமல் கெடுக்கும் தேசதுரோகி.

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி (சம்பந்தர்) ,

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தற்கு (சுந்தரர்),

தென் தழிழ் விளங்க வந்த திருக்கழுலத்தான் ( சேக்கிழார்) ,

என சம்பந்தர் என்ற கௌணிய கோத்திர பிராமணர் தோன்றி ஊர் ஊராக கிராமம் கிராமமாகச் சென்று இன்னிசை பாடித் தமிழ் வளர்க்கவில்லை என்றால் தமிழும் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சார மரபுகளும் என்றோ அழிந்திருக்கும்.

இன்று தமிழ் மொழியும் இருந்திருக்காது இசை நடனம் முதலிய தமிழர்ப் பண்பாட்டுக் கலாச்சாரமும் இருந்திருக்காது.

தமிழ் துரோகிகளெல்லாம் தமிழர் தமிழர் என்று வாய் கிழியப் பேசி அலற முடியாது.

இன்று தமிழ் மொழி வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் சம்பந்தர் மற்றும் மாணிக்க வாசகர் ,சுந்தரர் ஆகிய சிவாச்சாரிய குலத்தவர்களே. அர்ச்சகர் குலத்தவர்களே.

அன்றிலிருந்து இன்று வரை தழிழைக் காப்பவர் பிராமணரே.

பொதியில் முனிவன் தமிழ்ச்சங்கம் (கம்ப ராமாயணம்)
என அன்று மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்தவர் அகத்தியர் என்ற வட நாட்டு ஆரிய மொழிப் பிராமணரே.

சங்க நான்மறையவர் நிறை தர (சம்பந்தர்)
பொய்ம்மை இல்லாத் தமிழ்ச் சங்கம் அதில் கபிலர் பரணர் நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல் புலவோர் (நம்பியாண்டார் நம்பி) .
என சங்கத்தில் நிறைந்திருந்த கபிலர் முதலிய சங்கப் புவர்கள் அனைவரும் வேதம் ஓதும் பிராமண குலத்தவர்களே. சங்க காலத் தனிப்பாடல் தொகுப்பான பத்துப்பாடு எட்டுத்தொகையில் மிக அதிகமான கவிதைகளை இயற்றிய பாரி நண்பர் கபிலர் முதலியோரும் அந்தணர்களே.

சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே, 
சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே (திருமந்திரம்),

என தமிழில் வேத ஆகம நூலை எழுதிய திருமூலர் வடநாட்டிலிருந்து வந்த ஆரிய மொழிப் பிராமணரே.

தமிழும் தமிழர்ப் பண்பாடும் பாதுகாத்த வளர்த்த தேவாரத் திருமுறைகளைச் சமணர்கள் தேடித்தேடி அழித்தபோது அவற்றைப் பாதுகாத்தவர்கள் தில்லைவாழ் அந்தணர்களான அர்ச்சகர்களே.

தேவாரத் திருமுறைகளைத் தேடி எடுத்து உலகிற்கு அளித்தவர் நம்பியாண்டார் நம்பி என்ற அந்தணரே அர்ச்சகரே.

தமிழ்ச் சுவடிகளை யெல்லாம் தேடி எடுத்து அச்சேற்றியவர் உ.வே. சாமிநாத ஐயர் என்னும் பிராமணரே.

தமிழின் பெருமை பாடி தேச பக்தி வளர்த்த பாரதியாரும் பிராமணரே.

ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர் (சம்பந்தர்) 
என அன்றும் இன்றும் ஆரியம் மற்றும் தமிழின் பெருமை அறியாமல் அந்நியருக்கு அடிமையாகும் மொழிக் குருடர்கள் மொழி வெறியர்கள் தமிழ் விரோதிகள் கள்ள உறவு கொள்ளும் காமுகர்கள் வேசியர்கள்.

வேசியர்களுக்குப் பிறந்தவர்கள் வேசியருக்குப் பிறந்த அந்நிய மதத்தை போற்றிக் கொண்டாடுபவர்கள் முப்பது வயது வரையிலும் மூளை வளராமல் முதுமை சாவு முதலிய சர்வ சாதாரணச் செய்தியும் அறியாத பிறவிப் பைத்தியமான வட நாட்டு மதத்தை போற்றுபவர் ,

கிழ வயதில் இளம் பெண்ணை மணக்கும் சமூக விரோதியை மகா தேவ மொழியாகிய தழிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பழித்துத் தெய்வீகத் தமிழ் இலக்கியங்களையெல்லாம் குப்பை என்று தூற்றிய தமிழ்துரோகியை அவரைக் கொல் இதை இடி என்ற கொடிய பயங்கரவாதியைப் "தலைமேல் வைத்து " கொண்டாடும் கயவர்கள் எல்லாம் கொச்சைத் தமிழ் நூல்களைப் பாடமாக வைத்துத் தழிழை அழிக்கின்றனர்.

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கொலை செய்கின்றனர். தமிழ் துரோகிகளான இவர்கள் தங்களைத் தமிழர் தமிழர் என்று குடிகாரப் பைத்தியம் போல் பிதற்றித் தமிழர் அனைவரையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகின்றனர்.

சிவார்ப்பணம் .__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 யாரெல்லாம் பூணூல் அணியலாம் ?

.
.
.
.
கேள்வி-1: பூணூல் பிராமணர்கள் மட்டுமே அணிய வேண்டியதா?

பதில்: இல்லை. இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி அணியப்பட வேண்டியது பூணூல். வேத காலத்தில் அப்படியே அனைவரும்அணிந்திருந்தனர்.

கேள்வி-2: பூணூல் ஏன் பிராமணர்களிடையே மட்டுமே அணியும் வழக்கமாக இருக்கிறது?

பதில்: இது ஈவெரா ஏற்படுத்திய குழப்பத்தால் ஏற்பட்ட நிலை. பிராமணர்கள் ஆசிரியராகவும், இறைப்பணியிலும் இருந்த அந்தணர்கள் ஈவெராவினால் விழைந்த குழப்பத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நமது பாரம்பரியத்தை இன்னும் இறந்த பாரம்பரியமாக மியூசியம் சென்று விடாமல் காக்கின்றனர்.

செட்டியார், ஆசாரியார் என பிராமணரல்லாதவர்களும் பூணூல் அணிகின்றனர்..
.
கேள்வி-3: பூணூல் எனும் அடையாளம் சொல்வது என்ன?

பதில்: பூணுல் என்பது மூன்று நூல் ஒரு முடிப்பில் முடிந்தாக அமைப்பில் காணப்படுகிறது. இந்த முடிப்பு பிரம்ம முடி என்று அழைக்கப்படும். பிரிக்கவே முடியாத முடிப்பு எனச் சொல்லப்படும். முடிக்கப்பட்ட இந்த மூன்று நூல் கயிறுகள் உபநயனத்தின் போது அணிவிக்கப்படுபவருக்கு அவரால் தப்பிக்க முடியாத, மூன்று பிரிக்க முடியாத சமூக பந்தங்களையும், அதற்குச் செய்நன்றி காட்ட வேண்டிய கடமையையும் அந்த நபர்க்கு உணர்த்துவது.

பூணூலின் முதல் நூல் கயிறு: வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவது. குருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் இரண்டாம் நூல் கயிறு: தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனையும் நினைவு படுத்துவது. குலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் மூன்றாம் நூல் கயிறு: தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கை) நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகிய தேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

இந்த மூன்று விதமான நன்றிக் கடன்களை ஒருவன் எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும்?

குருபரம்பரைக்கான நன்றிக்கடனை அவர்கள் அருளிய வேதம், வாழ்வியல், உபநிடத்தத்துவங்களைக் கற்று அறிந்து சமூகத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்து கொண்டு வழி வழியாக இந்த நல்ல நெறிகள் தழைக்க தானும் இரு கருவியாகப் பயன்படுவதன் மூலம் குரு பரம்பரைக்கான நன்றி திருப்பிச்செலுத்தப்படுகிறது..
.
குலப் பரம்பரைக்கான நன்றிக்கடனை முன்னோர்கள், பெற்றோர் நற்சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலமும், முறையான வகையில் தன் சந்ததியைப் பெருக்குவதன் மூலமும் சமூகத்தில் நெறியான வாழ்வு வாழ்ந்து காட்டுதல் மூலமும் கருவியாக ஒருவன் செயல்படுவதன் மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது. மூன்றாவதான தேவதை (இயற்கை) களுக்கான நன்றிக்கடனை நதி, குளம், ஏரி என நீரை, ப்ராணவாயு நிறைந்த காற்றை, பூமியை, ஆகாசத்தை, நெருப்பு சக்தியை அசுத்தப்படுத்தாமல் பயன்படுத்தி அடுத்ததலைமுறைக்கு நீர், நில, காற்று, வெளி,வளங்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் வண்ணம் வனம் அழிக்காது மரம் வைத்து என பஞ்ச பூத தேவதைகளிடமிருந்து தான் பெற்று வாழ்ந்ததை தான் உருவாக்கிய அடுத்த தலைமுறை அதே செறிவோடு பயன்படுத்த தர ஒருவன் தன்னைக் கருவியாக்கிச் செயல்படுவதால் தேவதைகளுக்கான நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

ஆக பூணூல் அணிவது எனும் சடங்கு மூலம் பாலகனாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு அவனுக்கான கடமைகள் என்ன என்பதை எடுத்துரைக்கும் நிகழ்வான உபநயனத்தில் பாலகன் எனும் பிறப்பு முடிந்து இந்தச் சமூகக் கடமைகள் கற்பிக்கப்பட்டு ஒருவன் புதிய பிறப்பு எய்துகிறான்.

பூணூல் என்பது சாதி அடையாளம் என்று அறியப்பட்டிருப்பது கேவலமான திரிபு. மெய்யாகப் பூணூல் என்பது ஒரு நபரின் சமூகக் கடமையை தினமும் நினைவூட்டும் இந்து தருமப்படியிலான அணியக்கூடிய செயல்பாட்டு ரிமைண்டர். காயத்ரி மந்திரம் என்பது ஒருவனுக்கு சீர்தூக்கிப்பார்க்கும் சிந்தனையை, அறிவைத் தரும்படி சூரியக்கடவுளிடம் வேண்டும் மந்திரமே. சிந்தனை செறிவோடு இருந்தால் தான் கடமைகள் செவ்வனே சமுதாயத்தில் ஆற்ற முடியும்..
.
ஏழுமுதல் பதிமூன்று வயதுக்குள் உப நயனம் செய்யப்பட வேண்டும் ஒரு நபருக்கு. ஏழு வயதில் போட்ட பூணூல் அப்படியே இருந்துவிட முடியாது. உடல் வளர்ச்சியாலும், நூல் பழையதாவதாலும் உபநயனம் நடத்திப் போட்ட பூணூலைக் கழற்றி எறிந்து விட்டு பூணூல் அடையாளமாக நினைவூட்டும் கடமைகளை மறந்து விடக்கூடாது என்பதால் ஆவணி அவிட்டம் என்று வருடம் ஒருநாள் பூணூல் மாற்றி அதன் மூலம் ஒருவன் தனக்குப் புகட்டப்பட்ட கல்விவழி அறிந்த கடமைகள், நன்றிக்கடன் திருப்பிச் செய்தலை நினைவில் புதுப்பித்துக் கொள்கிறான்.

பூணூலின் மூன்றாம் நூல் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தல் என்பதில் ஓசோன் படல ஓட்டை, கியாட்டோ புரோட்டோகால், க்ரீன்ஹவுஸ் வாயுக்கள், க்ளோபல் வார்மிங், கூவம், அடையாறு நதிகள் சாக்கடை ஆக்கம், பொதுவில் எங்கும் சிறுநீர் கழிப்பது, ரயில்வே டிராக் பக்கம் எங்கும் மலம் கழிப்பது, சென்னைக் காற்றில் கார்பன் துகள்கள், முகமூடி, முழுநீளக்கையுறைத் தேவைகள் என பஞ்சபூதங்களை சுயநலமாக நசித்து அடுத்த தலைமுறைக்கு பஞ்சபூதங்களின் பஞ்சம் பூதாகாரமாக ஆக்கிய சுயநலமனிதச் செயல்பாடுகள் உள்ளடங்கி இருப்பது சனாதன தருமம் எவ்வளவுக்கு இயற்கையைத் துதித்துப் பாதுகாக்கச் சொல்லுகின்ற மிக உயர்ந்த சுற்றுச்சூழல் புரோட்டோகால் என்பதைத் தெளிவுபடுத்தும்.

ஆக பூணூல் என்பது இந்து தருமத்தைப் பின்பற்றும் எல்லோராலும் பாகுபேதமின்றி அணியப் படவேண்டியது. சனாதன தருமப் பாரம்பரியம் என்பது சரியாகப் புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் அவரால் ஆன முயற்சிகளைச் செய்ய வேண்டும்..
.
ஆக ஆவணி அவிட்டம் ஒரு பண்டிகையா? பூணூல் 8ம் நம்பர் நூலுக்கு இவ்வளவு மரியாதையா? என்றெல்லாம் சவுண்டு விடும் பகுத்தறிவுகளுக்கு : ஆவணி அவிட்டம் உண்மையில் உலக அளவில் கொண்டாடப்பட வேண்டிய சமூக வாக்குறுதி நினவூட்டல் திருவிழா!

எனவே அனைவரும் வாருங்கள்... இந்து தருமத்தில் இருப்போர் அனைவரும் பூணூல் அணிவோம்... புவனம் காப்போம்!இந்து தருமப்படி 🙏🙏

🤗🤗🤗ஆச்சாரியன் திருவடிகளே சரணம்__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

பழமொழி நானூற்றில் இடம் பெற்றுள்ள செய்திகள்:

* பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து 
(பா.258) - இராமாயணம்

* அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் 
(பா235) - பாரதம்

* பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா 
(பா.357) - பாரதம்

* ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் 
(பா.184) - மாவலி

* உலகந்தாவிய அண்ணலே 
(பா.178) - உலகம் அளந்த வாமனன்

[ஆதாரம்: தமிழ் விகி]

Gopinath R

பழமொழி நானூறு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. திருக்குறள், ஏலாதி, சிறுபஞ்ச மூலம், நாலடியார், நான்மணிக்கடிகை போல. பழமொழி நானூற்றை எழுதியவர் முன்றுறை அரையனார் என்பவர். கடைசி வரி பழமொழியாகக் கொண்ட நானூறு பாடல்களைக் கொண்டது. கிட்டத்தட்ட திருக்குறள் போலவே இருப்பதால் சமகாலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். பொயு 5ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள் எப்படியும் 1500 வருட பழமையானது தான், சங்கம் மருவிய காலத்தை சேர்ந்தது. அதில் வரும் இந்த 257 வது பாடல் இப்படிச் சொல்கிறது-
"பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்திறை யாயதூஉம் பெற்றான் 'பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்."

பொன்மயமான மாலையினையுடைய ராமனுக்கு துணையாக சென்ற இலங்கை அரசனான ராவணனின் தம்பியாகிய விபீஷணன் இலங்கைக்கே அரசனாகும் உரிமையை பெற்றான், அதனால் பெரியவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கு நிச்சயம் பயன் உண்டு அவர்களால் பயன் பெறாதவர் இல்லை என்கிறது. கம்பனுக்கு முன்பேயே ராமாயணக்கதை தமிழகம் எங்கும் பரவிச் சாமானியரும் அறிந்ததாகத்தான் இருந்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்று -
"பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோ(டு)
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலோ டாடார் கவறு."

மகாபாரதக் கதையில் பந்தயப்பொருளை வைத்து தாயமடி நூற்றுவரான கௌரவரும், ஐவரான பாண்டவர்களும் எதிரிகளாகிப் போர் செய்து மாண்டார்கள்; ஆதலால் அன்புடையவர்கள் இடையே விளையாட்டாகக்கூடச் சூதாடுதல் கூடாது என்று இன்னொரு பாடல் கூறுகிறது.

தேவைப்பட்ட இடத்தில் எல்லாம் சங்ககால, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் ராமாயண-பாரதக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. அது தேவாரம் முதற்கொண்டு பின்னாலும் தொடர்ந்திருக்கிறது.

பாண்டியர்களின் வேள்விக்குடி, சின்னமனூர் உள்ளிட்ட செப்பேடுகள் பாரதத்தை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததைப் பெருமையாகச் சொல்கின்றன, ’பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்று புலவர் ஒருவர் இருந்ததை நாம் அறிவோம். இந்தப் பரந்த நிலமெங்கும் இதிகாச புராணக் கதைகள் அனைத்து மாந்தரிடத்திலும் பரவி இருந்தன என்பதற்கு வேறென்ன ஆதாரங்கள் வேண்டும்?

Image may contain: indoor


__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

http://www.tamilvu.org/slet/l2800/l2800aru.jsp?song_no=7&book_id=37&head_id=37&sub_id=1015

7அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ; தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று) அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங் கருத்தாற் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"

(குறள் - 506)

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"

(குறள் - 834)

என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

 
 
21ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.            இன்னா நாற்பது

(ப-ரை.) ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவாதார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு கொடுத்தல், இன்னா துன்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா துன்பமாம் எ-று.

ஈந்த வென்பது வலித்தலாயிற்று. உவவாதார்க் கீப்பின்னா என்பதனை, ‘இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணுமளவு' என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ ஓத்து - ஓதப்படுவது; வேதம்.-- Edited by Admin on Friday 22nd of June 2018 09:33:50 AM

__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நல்நெஞ்சம்
சிந்திக்க, கேட்க செவி

”குறள் கூறுவது என்ன?”

சிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறினர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால் சமணத்தின் கோட்பாடுகளுக்குத் திருக்குறள் மாறாக இருப்பதாகவே தெரிகிறது.

சீவக சிந்தாமணி காட்டும் முதலும், மூப்புமற்ற உலகும் [மூவா முதலா உலகு], வள்ளுவம் காட்டும் முதல் கொண்ட உலகும் [ஆதிபகவன் முதற்று உலகு] அளவற்ற அடிப்படை முரணமைந்த துணிபுகள்.

சமணத்தின் மையமான கோட்பாடுகள் -

1) தீவிரமான இறை மறுப்பு
2) தீவிரமான இன்னா செய்யாமை
3) தீவிரமான துறவு

Life is spirit, not physical matter.
Jainism is life-affirming, but world-denying.
Jains reject a materialistic lifestyle.

In general, Jainism is a study in extremes:

1. extreme atheism
2. extreme ahimsa
3. extreme asceticism

இதற்கு முரணாக வள்ளுவம் இறையை ஒப்புக்கொள்கிறது. ஒறுத்தலை வற்புறுத்துகிறது.
”நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்” என்பதிலுள்ள உவமை சமணத்தின் தீவிரமான கொல்லாமை நெறிக்கு முரணானது.
சமணத்தின் அதீதமான உலகியல் மறுப்புக்கு மாறாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலை வள்ளுவம் சொல்கிறது.

மண்ணில் நல்லவண்ணம் வாழ்தலை, கொண்ட பெண்டிர் மக்கள் சுற்றத்தோடு நல்ல பதத்தால் மனைவாழ்தலைச் சொல்லும் சமயக் கருத்துகளுக்கு அணுக்கமாகத் திருக்குறள் விளங்குகிறது.

பஶ்யேம ஶரத³​: ஶதம்
ஜீவேம ஶரத³​: ஶதம்
ஶ்ருʼணுயாம ஶரத³​: ஶதம்
ப்ரப்³ரவாம ஶரத³​: ஶதம்

புலன்கள், மேலானவற்றில் ஈடுபட்டிருக்கும் நீடித்த, தரமான, வளமான உலக வாழ்க்கையைக் கோரும் மறை மொழிகளையும் பார்க்கிறோம்.

நெடுமால், தாமரையாள், தவ்வை, இந்திரன், உலகியற்றிய நான்முகன், அவியுணவு, அதை ஏற்கும் அமரர்கள், அதை அளிப்போர், மறை ஓத்து, திங்களைப் பாம்பு கொள்ளுதல் ஆகிய அனைத்தையும் சொல்லும் குறள் 63 சலாகா புருஷர்களில் ஒருவரைப் பற்றியும், ஒரு இடத்திலும் பேசவில்லை. 'என்பும் உரியர் பிறர்க்கு’ எனும் குறட்பா தொடர் ததீசி முனிவர் முதுகெலும்பை இந்திரனுக்கு அளித்ததைச் சொல்கிறது. புராண நிகழ்வுகளோடு ஒட்டியதாக அமையும் குறட்பாக்கள் பல.

சமணத்தின் தேவர்கள் புலன்களை வென்றதால் மேலுலகத்தில் வாழும் தகுதி பெறுகின்றனர்; சமணம் அவர்களைப் புலன்களை வென்றோராகவும் - முக்தி அடைந்தவர்களைப் போற்றி, தீர்த்தங்கரர்களுக்கான ஸமவசரணத்தை அமைக்கும் பணி செய்வோராகவும் காட்டுகிறது. அமரருலகில் முப்பது பகுப்புகள்; அமரர்கள் நான்கு வகையினர் என்று சமணம் சொல்கிறது.

வேத சமயத்தில் அமரர்கள் புண்ணியச் செயல்களால் தேவருலகை அடைந்தோராவர். அவர்களுக்கான பொறுப்புகள் வேறு; அவர்கள் போகத்தில் ஆழ்ந்திருப்பவர். அமுதம் பருகி, அவியுணவை ஏற்றுப் புண்ணிய பலன்களின் மிகுதியால் போகத்தில் ஆழ்ந்திருக்கும்
அவர்களுக்கு பிரமதேவர் ஒருமுறை புலனடக்கம் குறித்து அறிவுறுத்தியதாகவும் அறிகிறோம் [ப்ருஹதாரண்யக உபநிஷத்]. வள்ளுவம் ஓர் இடத்தில் புலனடக்கம் இல்லாத அமரர்களைச் சொல்கிறது.

மயிலையாரின் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பேயே இலங்கைப் பெரும்புலவரான 'புலோலி தில்லைநாத நாவலர்', வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

’மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்’ என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும், ‘ஏடாயாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், ‘போதகந்தோறும் புரிசடையானடி’ என்று திருமூலர் திருமந்திரத்தாலும்,‘மனனகமலமற மலர்மிசை யெழுதரும்’எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலாலும், இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகரைக் கூறினார் என்பது பொருந்துமா பார்க்க வேண்டும்.

"அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்.." என்று சூடாமணி நிகண்டும், "அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்" என்று பிங்கல நிகண்டும் பேசும்.

அருகக் கடவுளுக்கு ’அறவாழி வேந்தன்’ என்பதன்றி, ’அறவாழி அந்தணன்’ என்பது பெயரன்மையால் கடவுள் வாழ்த்து ஆதி தீர்த்தங்கர ஸ்வாமிக்கானது என்பதும் பொருந்தாது.

ஈசனின் எண்குணங்களை வாகீசர் வழுத்துகிறார்; பரிமேலழகரும் ஏற்கிறார்.

சமணத்தின் முக்தி கடுமையான உலகியல் மறுப்பால், புலனடக்கத்தால் விளைவது; அருகரைப் போற்றினால் முக்தி கிடைக்காது. பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு அருக வழிபாடு, பொருள்சேர் புகழ் புரிதல் விதிக்கப்படவில்லை தொன்மையான அருக நூல்களில். அருகர் என்பது வழிகாட்டும் அடையாளம் மட்டுமே.

சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் வள்ளுவத்தையும் ஒப்பு நோக்கினால் பல உண்மைகள் புலப்படும்.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கர்ம பலன்களைப் (வினைகளை) நுகர வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கர்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது.

ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால்தான் துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கர்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்’

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான் என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும், 
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் என்றே அவர் கூறுவதால், இங்கு ’வகுத்தான்’ என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இது அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் [ச்ரமண] என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பவுத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ஆய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார் எனினும் இல்லறத்தையே பெரிதும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் 
(குறள் – 46)

துறந்தான் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்
(குறள் – 159)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் 
(குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவை யாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை மட்டும் இரு அறத்தார்க்கும் பொதுவாகவும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உரியன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவரின் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
( குறள் 1121)

சமணருக்குத் தேன் விலக்கப்பட்ட உணவு; வள்ளுவப் பெருந்தகை சாவக நோன்பினராயினும் (அணுவிரதியாயினும்), மாவிரதியாயினும் தேனைச் சுவைத்திருக்க வாய்ப்பில்லை; எப்படி அதை உதாரணம் கூறுகிறார் ? சமணரில் சாவக நோன்பினர் மருந்துக்கும் தேனைச் சேர்த்துக் கொள்வதில்லை.

சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தர்மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் ’யதிதர்மம்’ என்பர். அவற்றை 
1. உலோசம், 
2. திகம்பரம். 
3. நீராடாமை, 
4. தரையிற் படுத்தல், 
5. பல் விளக்காமை, 
6. நின்று உண்ணல், 
7. ஏக புக்தம் என்பர். 
வள்ளுவம் இவற்றிற்கு மாறானது. காழிப் பிள்ளையாரும் இவற்றைக் கண்டிக்கக் காண்கிறோம்.

திகம்பரம் என்பது ஆடையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல’ (1012) என்றும், ‘உடுக்கை இழந்தவன் கைபோலும்’(788) என்றும் உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் ’புறந்தூய்மை நீரான் அமையும்’ (298) என்று கூறுவதையும், சமணம் கூறும் நீராடாமையும் ஒப்பிடுதல் வேண்டும்.

நின்றவாறே உணவேற்றல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்), புரண்டு படுக்காமல் ஒரே புறமாகத் துயிலும் நோன்பு இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். புறத்தூய்மையை வலியுறுத்தும் அவர், துறைகளில் ஆழ்ந்து அமிழ்ந்து நீராடுதலை மறுக்கும் சமணத்தைச் சொல்கிறார் என்பதை ஏற்க இயலுமா?

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
(குறள் 360)

ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்திய வள்ளுவர் சமணரின் முக்கியக் கோட்பாடான ரத்ந த்ரயத்தை விளக்கினார் அல்லர்; ‘ரத்ந த்ரயம்’ என்பது நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவையாகும். சமணரின் முக்கியக் கோட்பாடான அநேகாந்த வாதமும் குறளில் எங்கணும் காணப்படவில்லை.

சமணர் இன்னா செய்யாமையை எல்லை கடந்து வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உள்ளிழுத்தால் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதால் மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலையும், பூமியைத் தோண்டுவதால் உயிர்கள் மடியும் என்பதால் சுரங்கத் தொழிலையும் அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தொழிலுக்கும் சமணத்தில் இரண்டாம் நிலை இடமே அளிக்கப்படுகிறது. ஐம்பெரும் பூதங்களுக்கும் உயிர் உண்டு என்பது சமண நெறியின் நம்பிக்கை. அவை அனைத்துக்கும் தொடு உணர்ச்சி உண்டு
என்பர் சமணர்.

‘பஹ்வந்நம் குர்வீத’ என்று அருமறை, வேளாண்மையைச் சமூகக் கடமையாக்குகிறது, அதுவும் தூய ஆன்மிகம் பேசும் உபநிடதப் பகுதியில். மனுநூலும் உழுதொழிலின் உயர்வு கூறுகிறது.வள்ளுவம் மறை கூறியதற்கிணங்க உழு தொழிலையே உயர்ந்ததாகப் போற்றுகிறது -

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)

அறநுட்பங்களின் எல்லை உணர்ந்து பேசும் பொய்யாமொழிப் புலவர் வீடுபேற்றை விட்டு வைப்பாரா ? கீதை புநராவர்த்தி ரஹிதமான நிலையைச் சொல்லிற்று. திருவள்ளுவ தேவ நாயனார் மற்றீண்டு வாரா நெறியைச் சுட்டினார்.

வைதிக நூல்கள் பெரிதும் வலியுறுத்தும் ‘த்ரிவர்க’ கோட்பாடு [அறம், பொருள், இன்பம்] வள்ளுவத்தோடு மிகவியல்பாய் ஒட்டுகிறது. வைதிக அறநூல் பாக்களுக்கும், குறட்பாக்களுக்கும் சிறந்த ஒற்றுமை காண முடிகிறது. சமணரின் அண்டவியலில் [cosmology] அளறு உள்ளது; ஆனால் தென்புலத்தோர்க்காக வரையறை செய்யப்பட்ட உலகைக் காண இயலவில்லை என்பது மிக முக்கியமான குறிப்பு.

பின்வரும் குறட்பாவுக்குச் சமணர் என நம்பப்படும் மணக்குடவர் செய்த உரை சமணக் கோட்பாட்டுக்கே முரணாக அமைந்துள்ளது-

”வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”

மணக்குடவர் உரை:
விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை ஈட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

[விதி செய்யும் விதாதா சமணத்தில் இல்லை]

முடிவாகச் சில வினாக்கள்:

சமணர் அமரர்க்கு அவியுணவு அளிப்பார்களா?
சமண முனிவர் தென்புலத்தார் ஓம்பச் சொல்கின்றனரா?
சமணம் உழுதொழிலை வற்புறுத்தியுள்ளதா ?
சமணம் இல்லறத்தை வலியுறுத்துகிறதா?

[இதைச் சமண எதிர்ப்பாகக் கருத வேண்டா; தெளிவுதரும் நோக்கில் சமணக் கருத்துகள் வள்ளுவக் கருத்துகளோடு ஒப்பிடப் பட்டுள்ளன]__________________


Guru

Status: Online
Posts: 19539
Date:
Permalink  
 

புலப்படாததில் {பரம்பொருளில்} இருந்து தீர்மானிக்கப்பட்ட செயல்களால் புத்தி எழுகிறது. புத்தி நனவுநிலையை {அஹங்காரத்தை} உண்டாக்குகிறது. நனவுநிலையிலிருந்து {அஹங்காரத்திலிருந்து} ஆகாயம் உண்டாகிறது. ஆகாயம் காற்றை உண்டாக்குகிறது.(27)

காற்று வெப்பத்தை உண்டாக்குகிறது. வெப்பம் நீரை உண்டாக்குகிறது, நீரானது பூமியை {நிலத்தை} உண்டாக்குகிறது. இந்த எட்டும் தொடக்ககாலப் பிரகிருதியில் இருக்கின்றன. இந்த அண்டம் அவற்றையே சார்ந்திருக்கிறது.(28)

இந்த எட்டிலிருந்தே ஐந்து அறிவுப்புலன்களும் {ஞானேந்திரியங்களும்}, ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரியங்களும்}, (முதல் ஐந்து) புலன்களுக்குரிய புலன்நுகர் பொருட்களும் {விஷயங்களும்}, பதினாறாவதாக அவற்றின் மாற்றத்தின் விளைவால் உண்டான ஒரு மனமும் {சேர்ந்து பதினாறு காரியங்களாகத்} தோன்றுகின்றன.(29)

காது, தோல், இரு கண்கள், நாக்கு, மூக்கு ஆகியனவே ஐந்து அறிவுப்புலன்களாகும் {ஞானேந்திரியங்களாகும்}. இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {உபஸ்தம்}, இரு கரங்கள், வாக்கு ஆகியனவே ஐந்து செயற்புலன்களாகும் {கர்மேந்திரியங்களாகும்}.(30)

ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம் {ஒளி}, சுவை, மணம் ஆகியவையே அனைத்தையும் மறைத்திருப்பவையும், புலன்களுக்குரியவையுமான புலன் நுகர் பொருட்கள் {விஷயங்களாகும் [தன்மாத்திரைகள்]} ஆகும். மனமானது அனைத்துப் புலன்களிலும், அவற்றுக்குரிய பொருட்களிலும் {விஷயங்களிலும்} வசிக்கிறது.(31)

சுவை என்ற உணர்வில் மனமே நாவாக இருக்கிறது, வாக்கில் இந்த மனமே வார்த்தைகளாகிறது. பல்வேறு புலன்களுடன் கூடிய மனமே, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உணர்கிறது.(32)

தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் இருக்கும் இந்தப் பதினாறும் தேவர்களாக அறியப்பட வேண்டும். எவன் அறிவுகள் அனைத்தையும் படைத்தவனோ, எவன் உடலுக்குள் வசிக்கிறானோ அவனையே {பரமாத்மா / ஆத்மா} இவை வழிபடுகின்றன.(33)

- ஓர் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடல்

https://mahabharatham.arasan.info/…/Mahabharatha-Santi-Parv…

சாந்தி பர்வம் 210:27-33

#பீஷ்மர் #யோகம்__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard