New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் -அந்தணர் யார்?


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: திருக்குறள் -அந்தணர் யார்?
Permalink  
 


திருக்குறளில் அந்தணரும் வேதமும்! (Post No.3296)

img_8188

Written by S. NAGARAJAN Contact :– swami_48@yahoo.com

 Date: 28 October 2016  Time uploaded in London: 5-38 AM Post No.3296

 Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 1

 திருக்குறளில் அந்தணரும் வேதமும் !                      ச.நாகராஜன்  

இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : –      எட்டுத் தொகை நூல்கள்,

பத்துப்பாட்டு  நூல்கள்,

பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.

 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்    

செந்தண்மை பூண்டொழுகலான்   (குறள் 30)

 எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.

இனிய நீர்மையும் கருணையும் கொண்டவர் ஆதலின் அந்தணர் அறவோர் ஆவர்.

ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது

அறவாழி அந்தணன் (குறள் 8)

இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.

 மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்   (குறள் 134)

ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.

ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.

மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..

மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.

ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.

பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்    (குறள் 28)

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.

தவமும் தெய்வத்திருவருளும் அறிவும் உடையோரின் சொல்லே மந்திரம் ஆகிறது. அதையே மறைமொழி என்று இங்குக் காண்கிறோம்.

 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    

நின்றது மன்னவன் கோல்         (குறள் 543)

அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல்.

ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          

பெருமிறை தானே தனக்கு        (குறள் 847)

 

அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.

இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               

ஆன்றாரோ டொப்பர் நிலத்து   (குறள் 413)

செவியுணவு என்பது கேள்வி.

வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு.  செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று  (குறள் 259)

இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.

ஆக, –

அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.

மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.

வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.

மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.

இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!

பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.

******

சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)

பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1# 387
அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை
இன் துணை இனிது பாராட்ட 5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே

அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று
ஒளிரும் தோள்வளைகளை அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே!
கண்டோம், வரும் வழியிடையே அவளை,
தனது இனிய துணையானவன் இனிமையுடன் பாராட்ட,
குன்றுகள் உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள்.

ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி
திரு நய_தக்க வயல்
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி 20
அறத்தின் திரியா பதி
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் 25
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை
திரிந்துகொண்டிருப்போரும், குரவை பாடி நாற்றுநடுவோரும் எழுப்பும் ஒலியும் ஆகிய இவை ஒன்றாகச் சேர்ந்தொலிக்க
திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் வயல்கள்;
வேறோர் பக்கம், அறநெறியும், வேதங்களும் சேர்ந்த தவ ஒழுக்கத்தில் முதிர்வெய்தி,
மிகச் சிறந்த புகழ் நிலைத்து நிற்க, உயர்வான கேள்வித்
திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்
அறவொழுக்கத்தில் பிறழாத நகரம்;
அந்த நகரத்தில், ஒருபக்கம், உண்ணக்குடியவை, பூசிக்கொள்பவை, அணிந்துகொள்பவை, உடுத்திக்கொள்பவை
மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
கிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம் செய்யும்
அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்
விளையும் பொருளை விளைத்துத் தரும் தொழிலையுடைய, நன்செய், புன்செய் ஆகிய நிலங்களில்
தொழில்செய்வோர், வேளாளர் ஆகியோர் வாழும் காவலையுடைய தெருக்கள்; வேறு பக்கங்களில்
அவ்வாறே; இவ்வாறு அனைவரும் வாழ்வதால் நல்லனவாக நன்றாகப் பொருந்துகின்ற இன்பம் பலவும்
இயல்பாகவே பொருந்தியிருப்பன:

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

# 93 ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ 5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என 10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே
# 93 ஔவையார்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட முரசம் ‘திடும்' என முழங்கப்
புறப்பட்டுப்போய் போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது? உன்னை எதிர்த்து வந்தவர்கள்
உனது முன்னணிப்படையினையும் தாங்கமாட்டாதவராய், சிதறி
ஓடத்தொடங்கிய பெருமை இல்லாத மன்னர்கள்,
நோயினால் இறக்கும் உடம்பைப் பெற்று
தமது ஆசையை மறந்து, அவர்கள் வாளால் மடியாத குற்றம் அவர்களை விட்டு நீங்குமாறு
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த
சிறந்த வீரக்கழலை அணிந்த மறவர் செல்லும் உலகத்திற்குச் செல்க என்று
வாளால் அறுக்கப்பட்டு அடக்கம்செய்யப்படுவதிலிருந்து தப்பித்தனர்,
வரியையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாய்க்குள் வந்து புகுகின்ற மதத்தினையுடைய
தலைமை பொருந்திய யானை போர்க்களத்தில் மடிய
தாங்குவதற்கு அரிய போரில் சிதறி ஓடும்படி வெட்டிக்கொன்று நீ
பெருந்தகையே! விழுப்புண் பட்டு நின்றதால் - (போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது?)



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

# 24 பாட்டு 24
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ 5
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை 10
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ
குலை இழிபு அறியா சாபத்து வயவர்
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில்
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் 15
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் 20
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப 25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே 30
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் -
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் - குறையாத சோறு -
ஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
சிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
ஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் -
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய - பதி 64/3

64 பாட்டு 64
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு 5
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என 10
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் 15
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால்
பசி உடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே 20
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையும், குறி தப்பாமல் வாய்க்கின்ற வாளினால் பெறும் அரசாண்மையையும்
பொன்னாற் செய்த பூண்களையும் உடைய வேந்தர் பலர் இருக்கின்றனர்;
அறநூல்களை ஓதியதால் தெளிவான நாவினையுடைய, உயர்ந்த
புகழ் நிறைந்த வேள்விகள் செய்து முடித்த கேள்வியறிவையுடைய
அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்க்க ஏற்றுக்கொள்வதால், நீர் ஒழுகி ஏற்பட்ட
மிகுந்த சேற்றினில் கால்பதித்த, மணல் நிறைந்த முற்றத்தில்,
களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது, விரைந்து
வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்
குறைவுபடாத கொள்கையை உடையவனாதலின், அவ்விடத்தில் -
கரிய பெரிய ஆகாயத்தில் பல விண்மீன்களின் ஒளி குன்றும்படி,
ஞாயிறு உதிப்பதைப்போல், பகைவரின்
மிகுந்த பகையைச் சிதைத்த உன் வலிய கால்களை வாழ்த்திக்
- காண்பதற்கு வந்திருக்கிறேன் - காலில் கழலையும், தோளில் தொடியையும் அணிந்திருக்கும் அண்ணலே!
கரிய நிறம் உண்டாகின்ற மலர்களையுடைய கழியில் மலர்ந்த நெய்தல் பூவின்
இதழின் வனப்பைக் கொண்ட தோற்றத்தோடு, உயர்ந்த
மழையைக் காட்டிலும் பெரிதான பயனைப் பொழிகிறாய், அதனால்
பசித்திருக்கும் சுற்றத்தாரை அப் பசி நீங்கும்படி செய்ய
புகழ் மேம்பட்ட தோன்றலே! உன் பாசறையினில் -



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard