திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாம் மேலே கண்ட குறட்பாக்களில் முதலாவது கடவுளையும் இரண்டாவ்து ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார். எனவே நாம் நேரடி அந்தணர் என்பது அன்றி பிற பெயர்களாலும் அந்தணர் - வேள்வி தொடர்பான விஷயங்களிலும் வள்ளுவர் கூறியுள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். இறுதியில் மேலே உள்ள இரு குறட்பாக்களையும் காண்போம்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.
மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.
திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.
நூறுக்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.
ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்
பரிபாடல்2:
கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.