New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடியில் 4- 5ம் கட்ட அகழாய்வு


Guru

Status: Offline
Posts: 25073
Date:
கீழடியில் 4- 5ம் கட்ட அகழாய்வு
Permalink  
 


இந்து தமிழ்: 'கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு'

சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டதுஇதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டனஇவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டதுஇதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டதுஇந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றதுதொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்குகடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

நிதி ஒதுக்கீடு தாமதம்மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதுஇந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டுஜூன் 13-ல் பணிகள் தொடங்கினஇந்நிலை யில்கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள்பானைகள்அழகுப் பொருட்கள் கிடைத்தன.

முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டதுஅதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.

இந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம்ஒரு அடி அகலம், 10 செ.மீஉயரம் கொண்ட செங்கற்கள் இருந்தனகற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. 'இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியாகீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லைமுழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்டதோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-48767513

 



__________________


Guru

Status: Offline
Posts: 25073
Date:
RE: கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு
Permalink  
 


கீழடிஅகழாய்வில்மேலும்இரண்டாயிரத்திற்குமேற்பட்டபொருட்கள்கண்டெடுப்பு

சிவகங்கைமாவட்டம்கீழடிகிராமத்தில்நடந்ததொல்லியல்அகழாய்வில் 2,000க்கும்மேற்பட்டதொல்பொருட்கள்கிடைத்திருப்பதாகஆய்வைநடத்தியமாநிலதொல்லியல்துறைதெரிவித்திருக்கிறது. 

மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மூன்று தடவைகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதில் 7818 தொல் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது.

இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரியின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.இதற்குப் பிறகு, கீழடியில் மாநில அகழாய்வுத் துறையாவது தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், 2017-2018ல் பட்டறைப் பெரும்புதூரிலும் கீழடியிலும் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவிடம் விண்ணப்பித்தது. இதற்கென மாநில அரசு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

.



__________________


Guru

Status: Offline
Posts: 25073
Date:
Permalink  
 

இதில்கீழடியில் ஆய்வு நடத்த முதலில் அனுமதி கிடைத்ததுஇதன் பிறகு கீழடியில்மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய இடத்திற்கு அருகில் ஆய்வுப் பணிகள் இந்த ஆண்டில் துவங்கின. 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுஅதிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த ஜெகன்னாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது தவிரஉறைகிணறு ஒன்றின் கட்டுமானம் ஒன்றும் கிடைத்துள்ளதுஇந்த உறை கிணறு 93 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட ஆறு உறைகளைக் கொண்டிருக்கிறதுஇதற்கு முன்பாக கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்விலும் இதேபோல இரண்டு உறை கிணறுகள் கிடைத்தநதற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பும் முயற்சிகளும் தற்போது நடந்துவருவதாக ஜெகன்னாதன் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய காலங்களில் அகழாய்வு முடிந்த பிறகுஆய்வுக்கென தனியாக அரசிடம் நிதி கோரிஅதற்குப் பிறகுதான் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு பொருட்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. "ஆனால்இப்போது துவக்கத்தில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே ஆய்வுகளுக்கென நிதி தனியாக எடுத்துவைக்கப்பட்டுவிடுகிறதுஇதனால்கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுகளை உடனடியாகச் செய்ய முடியும்என்கிறார் ஜெகன்னாதன்



__________________


Guru

Status: Offline
Posts: 25073
Date:
RE: கீழடியில் 4- 5ம் கட்ட அகழாய்வு
Permalink  
 


கீழடியில்கண்டெடுக்கப்பட்டசங்ககாலதண்ணீர்த்தொட்டி!

கீழடியில் கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மண்பாண்டம் குடுவைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர் வழிப்பாதை போன்ற அமைப்பு என ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

சென்ற வாரம் மழை பெய்தாலும் அகழாய்வுப் பணியில் தொய்வு எதுவும் ஏற்படாமல் மிகத் துரிதமாக அகழாய்வுப் பணியானது நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

 

கீழடி அகழாய்வு

அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தற்போது நடைபெறும் ஆய்வின் முடிவில் மட்டுமே எதையும் கூறமுடியும். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி என்று தெரிகிறது. எங்களின் துறைத்தலைவர்கள்தான் வெளிப்படையாகக் கூற அதிகாரம் உள்ளது" என்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/sangam-era-water-tank-found-in-keezhadi-excavation



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard