கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ம் மற்றும் 3ம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனை தொடர்ந்து 4 முதல் 7ம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர்.
கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7ம் கட்ட அகழாய்வு பணியானது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பணி நடைபெற்றது.