New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி 9‑ம் கட்ட அகழாய்வு (ஏப்ரல்–செப்டம்பர் 2023)


Guru

Status: Offline
Posts: 25073
Date:
கீழடி 9‑ம் கட்ட அகழாய்வு (ஏப்ரல்–செப்டம்பர் 2023)
Permalink  
 


 

கீழடி 9‑ம் கட்ட அகழாய்வு (ஏப்ரல்செப்டம்பர் 2023)

🧪 கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள் & கட்டமைப்புகள்

·       14 அகழ்வேலிகுழிகள் (pits) அகழ்ந்தன, அதில் 183 தொல்பொருட்கள் (antiquities) கண்டுபிடிக்கப்பட்டனஇவை: தங்க அணிகலன்கள், மணிஞ்சி, பாட்டிக்கு சொந்த லீன் விளையாட்டு பற்கள், hopscotch game pieces, சுரப்பு ரகத்தின் கண்ணாடி மணிகள், antimony rod, தாமிர ஊசி, எலும்பு கருவிகள் மற்றும் இரும்பு நகங்கள் Daily ThanthiThe Hindu+1Daily Thanthi+1.

·       ஒரு தூக்கட்டினை (floor) அகழ்ந்த போது, 35 செ.மீ. ஆழத்தில் clay–lime கலவையால் கட்டிய 3 – 6 செ.மீ. தடிமனுடைய தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டது Daily Thanthi+1The Times of India+1.

·       மீன், ஏணிமற்றும்கட்டிடகுறியீடுகள் கொண்ட potsherds (graffiti-marked) floor‑க்கே கீழே நிற்கும் வரிசையில் காணப்பட்டன; இது fish‑ladder‑geometric வடிவங்களை உடையது Daily Thanthi.

·       Terracotta பாம்புபொம்மை (snake figurine) அகழ்ந்த XM19/3 குழியில், ஆழம் 190 செ.மீ (1.90 மீ) என்று உத்தரவாதமாகக் கூறப்பட்டது dtnext+1Daily Thanthi+1.

·       Crystal quartz weighing unit, gold wire, carnelian beads (கொந்தகையில் அடுக்கப்பட்ட குடுவையில்), மற்றும் ுளைஊசி போன்றவை பெற்றுப்பெற்றன The New Indian Express+1deccan-herald-web-desk.shorthandstories.com+1.

·       கொந்தகையில் 3 அடுக்குகளில் 26 புதையணிகுடுவைகள் (burial urns) உள்ளன; இதில் carnelian beads உட்பட வண்ண மற்றும் நீர் வடிபென்செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன .

📋 சுருக்கப்பட்ட சூத்திர படிவம்

கட்டமைப்பு / தொல்பொருள்

கண்டுபிடிக்கப்பட்டஇடம் (Quadrant / Pit)

ஆழநிலை

முக்கியதகவல்

Rammed clay–lime floor

முதலாம் 4 quadrants

~35 செ.மீ (0.35 மீ)

தரை தளத்தைக் காட்டும், அடுக்குகள் 3–6 செ.மீ

Potsherd with graffiti

floor கீழ்

~2 அடி (~60 செ.மீ)

fish, ladder, geometric சான்றுகள்

Terracotta snake figurine

XM19/3 trench

190 செ.மீ (1.90 மீ)

நேர்த்தியான உருவோபம், பொதுவில் floor‑மேல்

Crystal weighing unit, gold wire

உள்ள எந்த ஒரு pit

~1–2 மீ

வணிக நட்பு மற்றும் ಧாரம

Burial urn cluster

Konthagai pits

அதிகஆழமான strata

26 urns, carnelian beads

சரளப் புரவச்சித்திரங்கள்

பல quadrants

கிளையாக stratified layers

fish & ladder symbols

📘 இறுதிப் பார்வை

·       9‑ஆம் கட்ட அகழாய்வு சுற்றுநிலத்தில் (stratigraphy) அமைப்பு மற்றும் கலாச்சார அடுக்குகளை வெளிக்க் கொடுத்தது.

·       Terracotta snake figurine, quartz weighing unit, மற்றும் floor போன்ற கட்டமைப்புகள் நகரமைப்பு, கலை மற்றும் வர்த்தக பரிமாற்றக் குறித்து உறுதி செய்கின்றன.

·       அழுத்தமானதரைகோலங்கள் (piles of potsherds) ஒரு நீண்ட மற்றும் வளர்ச்சி அடைந்த குடுமளா சமூக கட்டமைப்பை சுட்டிக்காட்டுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 25073
Date:
RE: கீழடி 9‑ம் கட்ட அகழாய்வு (ஏப்ரல்–செப்டம்பர் 2023)
Permalink  
 


கீழடி 9-ம்கட்டஅகழாய்வுபணிதீவிரம்: தங்கஅணிகலன், சுடுமண்காளைஉட்பட 183 தொல்பொருட்கள்கண்டெடுப்பு  .ஜெகநாதன்

Last Updated : 09 Jul, 2023 02:50 AM https://www.hindutamil.in/news/tamilnadu/1041432-9th-phase-of-keezhadi-excavation-183-ancient-artifacts-discovered.html

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவம்.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல்துறை இணை ஆணையர் சிவானந்தம் மீண்டும் பொறுப்பேற்றதை அடுத்து, அகழாய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை தங்க அணிகலன், சுடுமண் காளை உட்பட 183 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் ஏற்கனவே 8- கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்தன. இதில் கண்டறியப்பட்ட பல ஆயிரம் தொல்பொருட்கள் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்.6-ம் தேதி கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணியை காணொலி மூலம் முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகழாய்வு பணி தொய்வாக நடந்து வந்ததால் குறைவான தொல்பொருட்களே கண்டறியப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் தொல்லியல்துறை இணை இயக்குநராக சிவானந்தம் பொறுப்பேற்றதை அடுத்து, அகழாய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன.
இதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடுமண்ணால் செய்யப்பட்ட காளை போன்ற விலங்கின உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பு ஆணிகள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டன.

மேலும் 9 குழிகளில் நான்கில் 35 செ.மீ., ஆழத்தில் களிமண், சுண்ணாம்பு கலவையால் அமைக்கப்பட்ட தரைத்தளம் கண்டறியப்பட்டன. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 செ.மீ., தடிமன் கொண்டதாக உள்ளன. மேலும் இந்த தரைத்தளத்துக்கு கீழே 2 அடி ஆழத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் குவியலாக கண்டறியப்பட்டன.

இதுதவிர துளையிடப்பட்ட பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் கெண்ட பானை ஓடுகள், பானை குறியீடுகள் கண்டறியப்பட்டன. இங்கு வெவ்வேறு நிலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. கொந்தகை அகழாய்வில் 10 மீ.க்கு 10 மீ என்ற அளவில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டு, இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 25073
Date:
Permalink  
 

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி: சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை கண்டெடுப்பு!

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ம் மற்றும் 3ம் கட்ட அகழாய்வு…  Web Editor August 9, 20237:45 am  https://news7tamil.live/phase-9-excavation-at-gizadi-snakes-head-made-of-fire-clay.html

 கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ம் மற்றும் 3ம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனை தொடர்ந்து 4 முதல் 7ம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர்.

கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7ம் கட்ட அகழாய்வு பணியானது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பணி நடைபெற்றது.

பல கட்டமாக தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழரின் தொண்மையான வரலாறு குறித்த பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.

கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது. மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம் 5.4 செ.மீ அகலம் 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது.

 

இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 25073
Date:
Permalink  
 

கீழடி 9ம் கட்ட அகழாய்வில் படிக எடை கல் கண்டெடுப்பு

ADDED : ஆக 08, 2023  https://www.dinamalar.com/news/tamil-nadu-news/discovery-of-crystalline-weight-stone-in-lower-phase-9-excavation/3398477 

கீழடி: கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் படிக எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் தொடங்கப்பட்டு இதுவரை ஒன்பது குழிகளில் தங்க அணிகலன், ஆட்டக்காய்கள், விலங்கின சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட 183 பொருட்கள் கண்டறியப்பட்டன.

தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்பதால் கட்ட அகழாய்வில் 175 செ.மீ., ஆழத்தில் எட்டு கிராம் எடையும் ஒன்றரை செ.மீ., உயரமும் கொண்ட கீழ்ப்பகுதி தட்டையான வடிவத்தில் படிக எடைக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த அகழாய்வில் பல்வேறு எடைகளில் எடைகற்கள் கண்டறியப்பட்ட நிலையில் முதல் முதலாக படிக எடைக்கல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வில் இரும்பு ஆணிகள், வட்டசில்லுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard