New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்களிற் கூறப்படும் தெய்வங்கள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்க நூல்களிற் கூறப்படும் தெய்வங்கள்
Permalink  
 


(5 ) தெய்வங்கள்
பிரும்மா , திருமால் , சிவபிரான் , முருகன் இவர்களைப்பற்றி மிகுதியாகவும் , பலராமன் , கொற்றவை இவர்களைப்பற்றி ஆங்காங்கும் நூல்கள் வர்ணிக்கின்றன .

பிரும்மா
உலகம் தோன்றத் தொடங்கும்போது பிரும்மா முதலில் தோன்றினர் என்பதும் , அவர் தோன்றிய இடம் திருமாலின் கொப்பூழிற் றோன்றிய தாமரைப் பொகுட்டு என்பதும் ,அவர்க்கு முகம் நான்கு என்பதும் , அவரது வாஹனம் அன்னம் என்பதும் பின்னருள்ள அடிகள் கூறுகின்றன :

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் ( கலித். 2 )
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின் (பெரும்பாண் . 402-4)
தாமரை பயந்த தாவி லூழி
நான்முக வொருவன் (திருமுருகு . 164-5 )
மலர்மிசை முதல்வன் (பரிபா . 8 , 3)
முகநான்குடையானை ( இனியவை , 1 )
அன வூர்தியை ( இன்னா. 1 )

திருமால் உலகத்தைப் படைக்கவேண்டும் என நினைத்த போதே அவர் கொப்பூழிலிருந்து தாமரை தோன்ற , அதனில் நான் முகத்தைக் கொண்ட பிரும்மா தோன்றினர் என மஹாபாரதம் ,

ப்ரயாந ஸமகாலந்து ப்ரஜாஹேதோ : ஸநாதந : |
யாதமாத்ரே து உறவாந் நாஷ்டாம் படிம : ஸமுத்யித : 1
தத : சதுர்முவோ ஸ்ரஹ்மா நாவிபடிமா ;
விநிஸ்ஸ்ருத : || ( ம . பா . வந . 273 ) என்ற அடிகளிற் கூறுகின்றது .

திருமால்

திருமால் முல்லைநிலக்கடவுள் : -
மாயோன் மேய காடுறை யுலகமும் ( தொல் . அகத் . 5 ).

அவர் கைகளிற் சங்கையுஞ் சக்கரத்தையுங்கொண்டு மார்பில் இலக்குமியைத் தாங்கினர் :

நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் (முல்லைப் . 1-3 )

திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் ( பெரும்பாண் . 29-30 )
புகழ்நேமித் திருமறு மார்பன் ( கலித் . 104 )

வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல ( கலித். 105 )
மாயவன் மார்பிற் றிருப்போல் ( கலித் . 145 )
சக்கரத்தனை ( இனனா . 1 )

அவர் நீலநிறத்தவர் : --
அஞ்சன வுருவன் ( புறநா . 174 )
முந்நீர் வண்ணன் ( பெரும்பாண் . 30 )
பொருகடல் வண்ணன் ( கார் . 1 )
இருள் பரந் தாழியான் றன்னிறம் போல் ( திணைமாலை . 150 , 96 )

தாமரைக்கண்ணர் :
தாமரை புரையுங் கண்ணன் ( பரிபா , 15 , 49 )

பீதாம்பரத்தைத் தரித்தவர் :
மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற்று
அணிவனப் பமைந்த பூந்துகில் (பரிபா . 13 , 1-2 )

மார்பில் மாலையையும் திருத்துழாயினையும் அணிந்தவர் -
மண்மிசை யவிழ்த்துழாய் மலர்தரு செல்வத்து( பரிபா . 8 )
துழாய் மாலை யானை ( இனியவை . 1 )

கருடக்கொடியோன் :
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் ( புறநா . 56 , 6 )
புள்ளுப்பொறி புனைகொடி ( பரிபா . 13 , 4 )
புண்மிசைக் கொடியோனும் ( பரிபா . 82 )
செவ்வா யுவணத் துயர்கொடி யோயே ( பரிபா . 2,60 )

அவரது ஜன்மநட்சத்திரம் திருவோணம் :
மாயோன் மேய வோண நன்னாள் (மதுரைக் . 591 )

அவரே மூன்று ரூபங்களைக் கொண்ட பரம்பொருள் :
மூவுரு வாகிய தலைபிரி யொருவனை ( பரிபா . 13 , 37 )
பலிசக்கரவர்த்தியின் வலியைக் குறைக்க மூவுலகினையுங் காலால் அளந்தவர் :

ஞாலமூன் றடித்தாய் முதல்வர்க்கு ( கலித் . 124 , 1 )
பிரஹ்லாதனுக்காக அவனுடைய தந்தையைக் கொன்றனர் :

பிருங்க லாதன் பலபல பிணிபட
வலந்துழி , மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்
தவர்ந்த புகழோன் முதை யாகலி
னிகழ்வோன் , இகழா நெஞ்சின னாகநீ யிகழா
நன்றா நட்டவவ னன்மார்பு முயங்கி
வெடிபடா வொடிதூட் டடியொடு
தடிதடி பலபட வகிர்வாய்த்த வுகிரினை( பரிபா . 4 , 12-21 )

கேசி என்ற அஸுரனைக் கொன்றனர் :
வாய்பகுத் திட்டுப் புடைத்தஞான் றீனன்கொல்
மாயோன் ( கலித் . 103 , 53-55 )

அவுணர் சூர்யனைக் கொண்டு ஒளிக்கத் திருமால் அதனை மீட்டனர் .
அணங்குடை யவுணர் சணங்கொண் டொளித்தென( புறநா . 174 , 1-5 )

இச்செய்தி மஹாபாரதத்திற் சிறிது வேறுபட்டிருக்கின் றது . பாற்கடலிலிருந்து வந்த அமிழ்தத்தைத் திருமால் தேவர் களுக்கு அளிக்கும்போது அக்கூட்டத்தில் ராகு இருந்ததாகச் சூரியன் அவர்க்கு அறிவித்தான் . அதற்கு வெகுண்டு ராகு சூரியனை வருத்த , அதனை ஏனைய தேவர்கள் கவனிக்கவில்லை . அவர்பால் சூரியன் வெகுண்டு அஸ்தகிரியில் மறைய , தேவர்கள் இருளால் துன்புற்று , பிரும்மாவிடம் அறிவித்தனர் . அவர் சூரியனுக்குத் தீங்கு வாராதபடி தேவர்களை விட்டு அருணனைப் படைக்கச்செய்து சூரியனுக்கு அவனைத் தேரோட்டி ஆக்கினர் .அப்போது சூரியனது கோபம் தணிந்தது .

சந்தார்க்காவாம் யா ராஹுர் ஆவாதோ
ஹ்யம்ருதம் பிளந் |
வைராநுவந்யம் க்ருதவாந் சந்ராஜித்யௌ
தகாநவ |
வாய மாநம் ரஹேணாய ஹ்யாத்யம்
மந்யுராவிசத் |
தத : பிதாமஹாஜாத ஸர்வம் சக்ரே தசாருண : |
உ உதய்பசைவ ஸவிதா ஹ்யருணேந ஸமாவ்ருத : ||( ம.பா. ஆதி . 24, 6-19 )

திருமாலைப்பற்றி முன்னர்க் கூறப்பட்ட செய்திகள்

சங்வசக்ர மகாபாணி : பீதவாஸா ஜகத்பதி :( ராமா . 1 , 15 , 16 )
சங்வ சக்ர மகாபாணே வாரகாநிலயாச்யுத
மோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாமதாம் !!
( ம . பா . ஸபா . )
முதலிய செய்யுட்களில் இராமாயணம் , மஹாபாரதம் இவற்றுள் நன்கு உணர்த்தப்பட்டன .

மூன்று உலகங்களையும் மூன்று அடிகளால் அவர் அளந்தார் என்பதை மாத்திரம் ருக்வேதமே கூறும் .

யஸ்யோருக்ஷ த்ரிஷு விக்ரமணேஷு அயக்ஷியந்தி
ஓவநாநி விச்வா ( 1 , 155 , 2 )



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சிவபிரான்

சிவபிரானும் திருமாலும் இருபெருந்தெய்வம் என அகநானூறு
வெருவரு கடுந்திற லிருபெருந் தெய்வத்து ( 360 , 6 ) என்றவிடத்துக் கூறுகின்றது .
சிவபிரான் சடையிற் கங்கையைத் தரிக்கின்றனர் .
ஈர்ஞ்சடை யந்தணன் ( கலித் . 38 , 1 )
பிறங்குநீர் சடைக்கரந்தான் ( கலித் . 150 , 9 )

நெற்றியிற் பிறைச்சந்திரனைக் கொண்டார் .
பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி ( புறநா . 91 , 5 )
கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல் ( கலித் . 103 , 15 )

மூன்று கண்களை உடையவர் :
முக்கட் செல்வர் ( புறநா . 6 , 18 )
முக்கண்ணான் ( கலித் . 2 , 4 )
கண்மூன்றுடையான் ( இனியவை . 1 )
முக்கட்பகவன் ( இன்னா . 1 )

கையில் மழுவை ஏந்தியுள்ளார்.
மழுவாணெடியோன் ( அகநா . 220 , 5 )
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் ( புறநா . 56 , 2 )

விருஷபத்தை வாகனமாகக் கொண்டார் :
புங்கவமூர்வோன் ( பரிபா . 8 , 2 )

நஞ்சினை உண்டு நீலகண்டர் ஆனார் :
காரி யுண்டிக் கடவுள் ( மலைமடு . 83 )
நீல மணிமிடற் றொருவன் ( புறநா . 91 , 6 )
மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன்( கலித் . 142 )
மறுமிடற் றண்ணற்கு ( பரிபா . 8 , 127 ; 9 , 7 )

இக்கருத்துக்களெல்லாம்
திரோவாவயிதும் ஸுலிம் சக்ரே த்ரிநயனஸ் தயா |
( ராமா . 1 , 43 , 7 )
தோஷயஸ்வ மஹாதேவம் நீலகண்ம் உமாபதிம் |
( உத்தரரா. 16 , 32 )
நமோ தேவாதி உேவாய நம : சசிகலாயர |
நமோ ஹூதபதே சம்லோ ஜஹ் நுகந்யாம்ஸ் - சேவா
ஒறவந் ஸர்வஸுதேச சூலபாணே வ்ருஷபய்வஜ |
ஒமவந் உேவஉேவேச த்ரிநேத்ர வ்ருஷபயவஜ ||( ம . பா . அநுசா . 207 )

யஸ்மாத்து நீலதா கண் ேநீலகண்ஸ் தத : ஸ் 2 J த : | ( ம . பா . ஆதி . 18 , 26 )
முதலிய ராமாயணமஹா பாரதவாக்கியங்களிற் காணப்படுகின்றன .

அவர் திருவாதிரையிற் பிறந்தவர் என் பதை
அரும்பெற லா திரை யான் . ( 150 , 20 ) என்ற கலித்தொகையடி கூறும் .

அவர் ஆலமரத்தடியில் வீற்றிருப்பார் :
நான்மறை முது நூல் முக்கட் செல்வன்
ஆல முற்றங் கவின்பெறத் தைஇ . ( அகநா . 181 )
ஆல்கெழு கடவுட் புதல்வ . ( திருமுருகு . 256 ) *

உமையை மனைவியாகக் கொண்டனர் :

வெள்ளேறு
வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும் .( திருமுருகு . 151-4 )

பைங்கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள் ( பரிபா . 5 , 27-8 )

ஒட்டிய காத லுமையா ளொருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானுங்
கொண்டானே . ( பழமொழி , 124 )

அவர் ஐம்பெரும்பூதத்தைப் படைத்தனர் :
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் . ( மதுரைக் . 453-5 )

உரிய காலத்தில் உலகத்தை அழிப்பார் :




காய்கடவுள் ( பரிபா . 5 , 13 )

கொலைவன் ( கலித் . 103 , 15 )

அவர் கைலாயத்தில் உமாதேவியோடு உல்லாஸமாக இருக்கும்போது , அவரைத் துன்புறுத்த எண்ணி , இராவணன் அம்மலையைத் தூக்க, அப்போது அவர் கால்விரலால் அதனை அழுத்த , அவன் துன்புற்றுக் கதறினன் என்பதை ,

இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன்
உமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக
ஐயிரு தலையி னரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லா துழப்பவன் போல . ( 38 ) என்ற கலித்தொகையடிகள் கூறுகின்றன .

இக்கருத்தினையே உத்தரராமாயணத்திலுள்ள பின்வருஞ் செய்யுட்கள் கூறும் :

தத : பார்ச்வம் உபாமம்ய வைஸ்யா நுசரோஸ்ரவீத்
நிவர்த்தஸ்வ உசரீவ சைலே க்ரீமதி சங்கர : ||
தமிமம் சைலம் உந்மூலங் கரோமி தவ மோபதே |
....
இத்யுக்த்வா ததோ ராம ஹுஜாந்நிக்ஷிப்ய பர்வதே ||
தோலயாமாஸ தம் சீவ்ரம் ஸ சைலஸ் ஸமகம்பத |
சசால பார்வதீ சாபி தகாச்லிஷ்டா மஹேச்வரம் |
ததோ ராம மஹாதேவோ தேவாநாம் ப்ரவரோ ஹர : |
பா உங்க ஷ்நே தம் சைலம் பீலயாமாஸ லீலயா
பிதாஸ்து ததஸ்தஸ்ய சைலஸ்யாயோமதா ஜுஜா : !
ரக்ஷஸா தேந ரோஷாச்ச ஜூஜாநாம் பீலநாத் தகா |
முக்தோ விராவ : ஸஹஸா த்ரைலோக்யம் யோ கம்பிதம் ( 16 , 9-29 )

மூன்று கோட்டைகளை உடைய அவுணன் தேவர்களைத் துன்புறுத்தினன் . அவர்கள் பிரும்மாவை முன்னிட்டுச் சிவபிரானிடம் தமது துன்பத்தை அறிவித்தனர் . அவர் அவனைக் கொல்வதாக ஒத்துக்கொண்டனர் . அப்போது பூமி ரதமாக வும் , வேதங்கள் குதிரைகளாகவும் , பிரும்மா தேரோட்டியாக வும் , விஷ்ணு அம்பாகவும் , மேருமலை வில்லாகவும் , வாஸுகி நாண் ஆகவும் ஆய் அவர்க்கு உதவி புரிந்தனர் . சிவபிரான் ஒரே அம்பால் அம்மூன்று கோட்டைகளையும் அழித்து , அவுணனைத் தோல்வியுறச் செய்து தேவர்களை வெற்றிபெறச் செய்தனர் . இச்செய்தி பரிபாடல் , புறநானூறு , கலித்தொகை இவற்றிற் காணப்படுகின்றது : ---

ஆதி யந்தண னறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை
ஆரெயி லோரழ லம்பின் முளிய
மாதிர மழலவெய் தமரர் வேள்வி ( பரிபா . 5 , 22-6 )

ஓங்குமலைப் பெருவிற் பாம்பு ஞாண்கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் . (புறநா . 55 )

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினை இ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கான் முகம்போல . ( கலித் . 2 )

இக்கருத்து மாஹபாரதம் கர்ணபர்வத்தில் பல்லிடங்களில் உணர்த்தப் பட்டுள்ளது .
ஏவம் ருஸ்ய க்ருதவாங் ஸாரய்யந் து பிதாமஹ:( 27 , 42 )
தயைவ வேகா : ச ஹயா ரயா மர்ய
யரா ஸசைனா சரயோ மஹாத்மந : | ( 27 , 8 )
தே உேவாஸ் தேந வாக்யோ சோதா : ப்ரணத :
ஸ்யிதா : |
வரஹ்மாணம் அமரத : க்ருத்வா சரண்யம் சரணாமதா : ||
தேவதேவம் பரம் ஸ்யாணும் வரஉம் த்ர்யம்பகம் சிவம் ( 24 , 50-2 )

ஸத்க்ருத்ய சங்கரம் ப்ராஹ ஸ்ரஹ்மா லோகபிதாமஹ : 1
இமாந்யஸுரர்மாணி லோகாம்ஸ்த்ரீந் ஆக்ரமந்தி ஹி || ( 25 , 1-2 )

ஏகவாணேந தம் உேவாஸ் த்ரிபுரம் பரமேச்வர : |
நிஜவ்நே ஸாஸுர மணம் உேவதேவோ மஹேச்வர : || ( 27 , 35)

சிந்தயித்வா ஹரிம் விஷ்ணும் அவ்யயம் யஜ்ஞவாஹநம் |
சரம் ஸங்கல்பயாஞ்சக்ரே விச்வகர்மா மஹாமநா : || ( 30 , 31 )

கி . மு . இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே சிவபிரானுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன என்பதும் , அவற்றை மக்கள் வலம் வந்தனர் என்பதும் ,

பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே . (6 , 16-7 )

என்ற புறநானூற்றடிகளால் அறியக்கிடக்கின்றது . பாண்டி இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரைகணக்காரனார் மகனார் நக்கீரனார் , சிவபிரான் பலராமன் திருமால் முருகன் இந்நால்வருக்கும் புறநானூறு 56 ஆம் செய்யுளில் ஒப்பிடுகின்றனர் .



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முருகன்
குறிஞ்சிநிலக்கடவுள் எனத் தொல்காப்பியம் கூறும் .
சேயோன் மேய மைவரை யுலகமும் ( தொல் . அகத் . 5 ) .

மேலான கதியாகிய மோக்ஷம் வேண்டுமாயின் , முருகனை ஆறுபடை வீடுகளிலுஞ் சென்று தொழுதல் வேண்டும் எனனார் திருமுருகாற்றுப்படையிற் கூறினர் . பகவத்கீதையிற்கண்ணபிரான் ஆத்மவிபூதியைக் கூறுமிடத்து

ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த : ( 10 , 24 ) எனக் கூறுவதை நோக்கின் , முருகனைப் போர்வீரனாக உபாஸித்

தலே சிறந்ததோ எனத் தோன்றுகின்றது . இக்காரணம்பற்றியே திருவையாற்றில் ஐயாறப்பன் கோயிலில் முருகன் வில்லோடு இருத்தலைக் காண்க .

பின்வருமாறு
அவரது பிறப்பைப்பற்றிப் பரிபாடல் கூறும் : - ஒருபோது சிவபிரானும் உமாதேவியும் உல்லாஸமாய் இருந்தனர் . அப்போது அவர்க்கு ஆண்மகன் பிறப்பின், அவன் உலகிற் சிறந்தானாக விளங்குவான் என்றும் அதனாற் றனக்குத் தீங்கு நேரிடும் என இந்திரன் நினைத்தான் . உடனே தேவர்களுடன் சிவபிரானிடஞ் சென்று தனது விருப்பத்தை அறிவித்தனன் . அவர் அதற்கு உடன்பட்டனர் . ஆயினும் அவரது ரேதஸ் சிறிது கீழே விழ , அப்போது அங்கே வந்த அக்னி அதனைக் கொண்டனன் . அதனை ஹவிஸ்ஸாகக் கொண்டு ஏழு ருஷிகளும் யாகம் செய்தனர் . எஞ்சிய ஹவிஸ்ஸை அருந் ததியைத் தவிர்த்து ஆறு ருஷிபத்னிகளும் உண்டனர் . ஒவ்வொருவர்க்கும் ஒரு குழந்தை பிறந்தது . அவற்றைக் கங்கைக் கரையில் சரவணத்தில் விட்டனர் . பின்னர் ஆகாயமார்க்கமாய்ச் சிவபிரானும் உமாதேவியும் போகும்போது , தேவி அக்


குழந்தைகளைப் பார்த்து அவை யாருடையவை எனக் கேட்க ,
அவளுடையனவே என அவர் விடையளித்தனர் . உடனே அவ்விருவரும் அங்கே செல்ல , அவள் குழந்தைகளை மடியில் வைக்க ,அவை ஆறுமுகங்களை உடைய ஒரே குழந்தை ஆயிற்று . அக்குழ்ந்தையே முருகன் :
அமரர் வேள்விப்
பாக முண்ட பைங்கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி யமைய நெற்றி
இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
விரிகதிர் மணிப்பூணவற்குத்தா னீத்த
தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
எரிகனன் மானாக் குடாரிகொண் டவனுருவு
திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசே யாக்கை
நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
வசித்ததைக் கண்ட மாக மாதவர்
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பின்
சாலார் தானே தரிக்கென வவரவி
உடன்பெய் தோரே யழல்வேட் டவ்வவித்
தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவு ளொருமீன் சாலினி யொழிய
அறுவர் மற்றையோரு மந்நிலை பயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழா அது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயற்
பெரும்பெயர் முருக ( பரிபா . 5 , 26-50 )

இம்முருகன் பிறப்பினையே மஹாபாரதம் அநுசாஸநபர்வம் வம்பர்வம் முதலியவற்றில் சிற்சில மாறுபாட்டுடன் கூறும் . அநுசா ஸபேர்வத்தில் 130 , 133 அத்தியாயங்களும் வயர்வத்தில் 227 அத்தியாயமும் நோக்கத்தக்கன . வால்மீகிராமாயணத்திலும் பாலகாண்டம் 36,37 ஸர்க்கங்களில் இக்கருத்தே சுருக்கமாய் வர்ணிக்கப்பட்டது .

பிறந்த குழந்தையைப் பார்க்க மும்மூர்த்தியும் இந்திரனும் தேவர் முப்பத்து மூவரும் வந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலுங் கூறும் :

புள்ளணி நீள்கொடிச் செல்வனும்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து
எருத்த மேறித் திருக்கிளர் செல்வனும்
நான்முக வொருவற் சுட்டிக் காண்வர
...
நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு ( திருமுருகு . 151-173 )
மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி
உலகிருளகற்றிய பதின்மரு மிருவரும்
மருந்துரை யிருவருந் திருந்து நூ லெண்மரும்
மா திரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரும் ( பரிபா . 8 )

இக்கருத்தினையே மஹாபாரதம்
ததோ உேவாஸ் த்ரயஸ்த்ரிம்ச அம்ச ஸு
நீச்வரா : 1
ருரோ யாதா ச விஷ்ணு : ச யம : பூஷார்யமா ஊற : |
ப்ருயஹூதாநி சாந்யாதி யாநி உேவ மணாநி ச |
ஆஜம்முஸ் தேத்தா பஷ்டும் குமாரஞ்
ஜ்வலநாத்மஜம் || ( ம . பா . அநு . 133 , 15-17 ) என்றவிடத்து உணர்த்தும் .

வந்த தேவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டுக்கருவியைக் கந்தனுக்கு அளித்தனர் என்பதைப் பரிபாடல் கூறுகின்றது .

அனலன் றன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து
வழங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன்
திருந்துகோன் ஞமன் றன் மெய்யிற் பிரிவித்து
இருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன்
ஆஅங்கு
அவரும் பிறரு மமர்ந்துபடை யளித்த
மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரிச் சாபமு மானும் வாளும்
செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும் ( பரிபா . 5 , 57-70)

இதனையே மஹாபாரதம் அநுசாஸனபர்வம் கூறும் .ஆனாற் றிது மாறுபாடு உளது .

ததோ தேவா : ப்ரியாண்யஸ்ய ஸர்வ ஏவ ஸமாஹரந்
ஸுபர்ணோஸ்ய உஉ புத்ரம் மயூரம்
சித்ரவர்ஹிணம் |
....
குக்குடஞ் சா நிஸங்காசம் ப்ரகௌ அருண :
ஸ்வயம் | ( 133 , 20-25 )

பின்னர் இந்திரனுடைய தானைக்குத் தலைவனாகித் தாரகாஸுரனைக்
கொன்றனன் என்பது
வானோர் வணங்குவிற் றானைத் தலைவ .(திருமுருகு . 260 )
சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து . ( அகநா . 59 )
சூர்நவை முருகன் சுற்றத் தன்ன ( புறநா . 23 )
சூர்கொன்ற செவ்வேலால் ( கலித். 93 , 26 )
சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே . ( பரிபா . 14 , 18 )
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
கழறொடிச் சேஎய் குன்றம் ( குறுந்தொகை . 1 ) என்ற விடங்களிற் கூறப்பட்டது.

இதனையே மஹாபாரதம் அநுசாஸநபர்வம்
ஸைகாபத்யேந தம் தேவா : பூஜயித்வா ஹாலயம் |
ஸ விவ்ருலோ மஹாவீர்யோ உேவஸேநாபதி :
ப்ரஹு : |
ஜவாநாமோவயாய சக்த்யா நாநவம் தாரகம் மஹ: || ( 133 , 28-9 )
என்றவிடத்துக் கூறும் .
அவர் ஆயுதம் சக்தி எவ்வாறு என்பது எவ்வாறு மஹாபாரதத்திற் கூறப்பட்டதோ , அவ்வாறே இன்னா நாற்பது முதற்பாட்டிற் கூறப்பட்டது .

அவருடைய கொடியிற் கோழி பொறிக்கப்பட்டது என்பதை

மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி
பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ . ( பரிபா . 17 , 48-9 ) என்ற அடிகள் கூறுகின்றன .

போரில் வெற்றிபெற்ற பின்னர் அவர் தேவஸேனையையும் வள்ளியையும் மணந்தனர் என்பது

டை
மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண்
மணந்த ஞான்று
ஐயிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண்
மணிமழை தலை இயென ( பரிபா . 9 , 8-10 )

என்றவிடத்து உணர்த்தப்பட்டது . அவன் வள்ளியை மணந்ததை மஹாபாரதம் கூறியதாகத் தெரியவில்லை .



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பலராமன்
பலராமன் வெண்ணிறமுடையோன் , நீலவாடை அணிந்தவன் , கிருஷ்ணனுக்கு மூத்தோன் , பனைக்கொடியோன் , கலப்பையை ஆயுதமாக உடையோன் என்பதை
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் ( புறநா . 58 , 14 )
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் ( புறநா . 56 , 3-4)
பனைக்கொடிப் பானிற வண்ணன் போல் ( கலித் . 104 , 7-8 )
வளையொடு புரையும் வாலி யோற்கவன்
இளைய னென் போர்க் கிளையை யாதலும்
புதையிரு ளுடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு
முதியையென் போர்க்கு முதுமை தோன்றலும் ( பரிபா . 2 , 20-3 )
நாஞ்சில் வலவனிறம்போல் ( கார் . 19 )
பால்மேனியான் ( பழமொழி 37 , திணை 150 , 96 ) என்ற அடிகள் கூறும் .

கொற்றவை
போர் முதலியவற்றில் வெற்றி பெறுதற்கும் , நினைத்த காரியம் நிறைவேறுதற்கும் மக்கள் கொற்றவையைப் போற்றுதல் வழக்கம் என்பதை

வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ( திருமுருகு . 258)

புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்கு
இன்னா வரும்படர் தீர விறைந்து
இன்னே முடிகதில் லம்ம ( நெடுநல் . 166-8 )

என்ற அடிகள் கூறுகின்றன . கொற்றவை என்பதும் துர்க்கை என்பதும் ஒருபொருட்கிளவி . மஹாபாரதத்தில் விராடபர்வம்தொடங்குதற்கு முன்னர்த் தர்மபுத்திரனும் , போர் தொடங்குதற்கு முன்னர் அர்ஜுனனும் துர்க்கையைத் துதிக்கின்றனர் :

நமோஸ்து வரமே க்ருஷ்ணே குமாரி ப்ரஹ்மசாரிணி
சரணம் ஒவ மே ுர்தே சரண்யே உக்தவத்ஸலே ( ம . பா . விரா . 8 )

நமஸ்தே ஸிஸேநாநி ஆர்யே மந்உரவாஸிநி
யுதிர்ஹூதிமதாம் ஸங்வே ) வீக்ஷயஸே
ஸிசாரணை : ( ம.பா. பீஷ்ம . 23 )

( 6 ) ஊழ்

முற்பிறப்புக்களிற் செய்யப்பட்ட வினைகளின் பயனைப் பின்னர் ஒவ்வொருவரும் அனுபவிப்பர் . அதனை ஊழ் , தெய்வம் , வினை , பால் என்ற சொற்களாற் பெரியோர் குறிப்பர் :

வினையே பூதம் ( தொல் . கிளவி , 57 )
உடனுறை வாக்குக வுயர்ந்த பாலே ( புறநா . 236,12 )
பால்வரைந் தமைத்த லல்லது ( குறுந் . 366 )
யாஞ்செய் தொல்வினைக் கெவன்பே துற்றனை (நற்றிணை . 88 )
தொல்வினைப் பயன் றுய்ப்ப ( கலித் . 118 , 3 )

மக்கட்பிறப்பிற் பொருள் இன்பம் இவற்றை அனுபவிக்கப் பெரும்பாலும் உழே காரணமாயினும் , தர்மத்தைச் செய்தற்குத் தன் முயற்சியே சிறந்த காரணம் ஆகும் என்பதை விளக்கவேஆசிரியர் திருவள்ளுவனார் ஊழி என்ற அதிகாரத்தை அறத்துப் பாலின் பின்னரும் பொருட்பாலின் முன்னருங் கூறினர் . ஆயினும் ஒருவர் இன்ப துன்பங்களை நுகர ஊழ் , தன் முயற்சி இரண்டுங் காரணம் ஆகும் என்பதைக் குறிக்க இரண்டையுங் கூறுகின்றனர் :

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (திருக். 380 )

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (திருக் . 619 )
இக்கருத்தினையே மஹாபாரதம் பல்லிடங்களிற் கூறுகின்றது .
வியிஸ்து ஸ்வாந் ஸ்ரம் ஹந் உஸ்தரம் ஹி
புரா க்ருதம் | ( வன . 212 , 2 )

ஆவா மா நுஷா: ஸர்வே நிவா :
கர்மணோர் அயோ :
கைவே புருஷகாரே ச பரம் தாவாம் ந விஉ ) தே |
ந ஹி சைவேந ஸிய எந்தி கர்மாண்யேகேந ஸத்தம்
ந சாபி கர்மணைகோ அரவாம் ஸிஸ்து யோ மத ( ஸௌப்தி . 2 , 2-3 )
கைவே புருஷகாரே ச லோகோயம் ஸம்ப்ரதிஷ்த: | ( ஆதி . 132 , 2 )
சைவாயத்தமஹம் மந்யே ஜநம் ஸுவலிநாம்பி ( த்ரோண . 159 , 63 )
க்ஷேத்ரம் புருஷகாரஸ்து சைவம் ஸீஜம்
உஷாஹ்ருதம் ( அநுசா . 9 , 10 )

சில வினைகளின் பயனை எழு பிறப்புக்களிலும் அனுபவிப்பர்
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையு மேமாப் புடைத்து ( திருக் . 125 )

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிவிளங்காப்
பண்புடை மக்கட் பெறின் ( திருக் . 62 )

ஒருமைச் செயலாற்றுப் பேதை யெழுமையும்
தான்புக் கழுந்து மளறு ( திருக் . 835 )

ஒருமைக்கட் பின்கற்ற கல்வி யொருவற்கு
எழுமையு மேமாப் புடைத்து (திருக். 396 )

சில வினைகளின் பயனை இம்மையிலேயே அனுபவிப்பதும் உண்டு :
இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் திணைமாலை 150 , 123 )

இக்கருத்தினையே ஒரு வடமொழிச் செய்யுளடி கூறும் : --
அத்யுத்கடை : புண்யபாபைர் இஹைவ வலம்
அச் நுதே |

( 7 ) ஏனைய செய்திகள்

வால்மீகிராமாயணத்திற் கூறப்பட்ட செய்திகளுள் சில சங்க நூல்களுட் காணப்படுகின்றன cry.gif 1 ) இராவணன் ஸீதை யைத் தூக்கிப்போம்போது , அவள் கீழே எறிந்த அணிகளைக் குரங்குக்கூட்டம் கண்டது : --

கடுந்தெற லிராம னுடன் புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாங்கு(புறநா . 378 , 18-21 )

கடற்கரையில் இராமன் மந்திராலோசனை செய்தான் :

முழங்கிரும் பௌவ மிரங்கு முன்னுறை
வெல்போ ரிராம னருமறைக் கவிந்த
பல்வீழாலம் போல ( அகநா . 70 , 14-16 )

இராமனைத் துணையாகக்கொண்டு விபீஷணன் இலங்கைக்கு அரசன் ஆயினன் :
பொலந்தா ரிராமன் றுணையாகத் தான் போந்து
இலங்கைக் கிழவற் கிளையான் - இலங்கைக்கே
போந் திறை யாய தூஉம் பெற்றான் ( பழமொழி 257 )

வ்யாஸமஹாபாரதத்திற் கூறப்பட்ட சில செய்திகளுங் காணப்படுகின்றன :
பாண்டவரும் கௌரவரும் செய்த போரில் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் உணவு அளித்தனன் ; அப்போரிற் கவுரவர் மாண்டனர் :

அலங்குளைப் புரவி யைவரொடு சினை இ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்(புறநா . 2 , 13-16 )

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவி னைவர் போல (பெரும்பாண் , 415-7 )

நூற்றுவர் மடங்க
வரிபுனை வல்வி லைவ ரட்ட
பொருகளம் போலுந் தொழூஉ ( கலித் . 104, 57-9)

குருடனான திருதராஷ்டிரனின் மூத்த குமாரனின் சூழ்ச்சியால் பாண்டவர் ஐவரும் இருந்த அரக்குமாளிகை தீக்கு இரையாயிற்று : --

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுண் முதியவன் புணர்ப்பினால்
ஐவரென் றுலகேத்து மரசர்க ளகத்தராகக்
கைபுனை யரக்கில்லைக் கதழெரி சூழ்ந்தாங்கு ( கலித் . 25 , 104 )

பாண்டவர் குற்றமற்றவர் :
தீதுசீர் சிறப்பி னைவர்க ணிலைபோல ( கலித் . 26 , 6 )
துரியோதனன் தொடையிற் கொல்லப்பட்டான் : --
மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கறுத் திடுவான்போல் ( கலித் . 52 , 2-3 )

துரியோதனன் முதலியோர் பாண்டவரோடு சூதாடிப் பின்னர் அழிந்தனர் :

பாரதத் துள்ளும் பணையந்தந் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரொடு
ஏதில ராகி யிடைவிண்டா ராதலால்
காதலோ டாடா கவறு ( பழமொழி . 356 )

காண்டவவனத்தை அழித்த அருச்சுனற்குத் தமையனாகிய பீமஸேனன் அடிசிற்றொழிலிற் கைதேர்ந்தவன் :

காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழா அப் பல்வே றடிசில் (சிறுபாண் . 238-41 )

பலராமன் துரியோதனற்கு நண்பராயினும் போரில் அவற்கு உதவி புரியவில்லை .

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி யமருள் தலைப்பெய்யா - போக்கி
வழியராய் நட்டார்க்கு ( பழமொழி . 137 )

தெற்கில் பாணாசுரன் பெரிய நிதியை வைத்திருந்தான் :
தென்றல் மருங்கின விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும் (மதுரைக் . 202 , 3 )
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பதிவ்ரதையிற் சிறந்தவள் அருந்ததி :

வடமீன் புரையுங் கற்பின் மடமொழி ( புறநா . 122 , 8 )
விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த
செம்மீ னனை ( பதிற் . 31 , 27-8)
வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்கலித் . 2 , 21 )
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவு ளொருமீன் சாலினி யொழிய ( பரிபா . 5 , 43-4 )
சிறுமீன் புரையுங் கற்பி னறு நுதல் ( பெரும்பாண் , 303 )
கணவனிடத்து ஒத்த அன்பு கொண்டவருள் ரோகிணி

சிறந்தவள் :
உரோகிணி நினைவன நோக்கி ( நெடுநெல் . 163)
இராமாயணத்திலும்
ரோஹிணீ சசிநம் பயா என ஸுந்தர காண்டத்திற் கூறப்பட்டுளது .

ஒவ்வொருவரும் பிறர்க்காகவே வாழ்தல் சிறந்ததெனக் கருதப்பட்டது :

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுக ருண்டையானே ( புறநா . 183 , 8-10 )
பிறர்க்கென வாழ் திநீ ( பதிற் . 38 , 16 )

பிறப்பிற்குக் காரணம் ஸ்தூலசரீரமாகையாலும் , கல்வி ஸூக்ஷ்ம சரீரத்தைப் பற்றியதாகையாலும் , பிறப்பினுங் கல்வி சிறந்தது எனக் கருதப் பட்டது. அக்காரணம்பற்றியே மேற்பிறப்பிற் பிறந்தவனுங் கீழ்ப்பிறப்பிற் பிறந்தவனிடங் கல்வி கற்கலாம் எனக் கூறப்பட்டது :

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே ( புறநா . 183 )
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு ( திருக் . 409 )

இக்கருத்தினையே ஒருவாறு கௌதமதர்மஸுத்ரம்
ஆபத்கல்போ ஸ்ராம்ஹணஸ்ய அவ்ராம்ஹணாடி
விதோபயோக : ( 1,7,1 )
எனக் கூறும் .
அஷ்டமி , சதுர்த்தசி , பர்வாக்கள் முதலிய தினங்களில் வேதாத்தியயனம் செய்தல் தகாது .

அட்டமியு மேனை யுவாவும் பதினான்கும்
பார்ப்பார்
இலங்குநூ லோதா தநாள் ( ஆசார . 39 )

பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கியும்
மலங்கழித்தல் தகாது : --

பகற்றெற்கு நோக்கா ரிரா வடக்கு நோக்கார்( ஆசார . 29 )

இக்கருத்தினையே கௌதமதர்மஸூத்ரம்
உலே மூத்ரபுரீஷே து உவா குர்யாஉங்முவ :
ராத்ரௌ --V ணாமுவ : ( 1 , 9 , 41 & 43 ) என்றவிடத்துக் கூறும் .

விருந்தினர் , மூத்தோர் , இளையர் முதலியோர்க்கு உணவு அளித்தபின்னரே இல்லறத்தான் தான் உணவைக் கொள்ள வேண்டும் :


விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல் லா லூ னுண்ணா ரேயென்றும்
ஒழுக்கம் பிழையா தவர் ( ஆசார . 17 )

இதனையே கௌதமதர்மஸூத்ரம்
ஷோஜயேத் பூர்வம் அதியி - குமார வ்யாயித - மர்ஹிணீ - ஸ்வவா ஸிநீ ஸ்ய விராந் ஜவந்யாந் ச ( 1 , 5 , 13 )

என்றவிடத்துக் கூறும் .

சூரியனை உதிக்கும்போதும் அஸ்தமிக்கும் போதும் பார்த்தல் உரித்தன்று : --

நோக்கார்பகற் கிழவோன்
முன்னொளியும் பின்னொளியு மற்று ( ஆசார . 43 )

இதனையே மஹாபாரதம்
நேக்ஷேத உந்தம் ஆதித்யம் நாஸ்தம் யந்தம் காசந ( அநுசா . 161 , 17 )
என்றவிடத்துக் கூறும் .

வீட்டிற்கு வந்த ஸாதாரணமக்கட்கு உணவு, நீர், இடம், பாய், இன்சொல் இவற்றை வழங்கவேண்டும் :
முறுவ லினிதுரை கானீர் மணைபாய்
கிடைக்கை யோடிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யுஞ் சிறப்பு . ( ஆசார . 46 )

க்கருத்தினையே கௌதமதர்மஸூத்ரம்
விபரீதேஷு த்ருண - உஉக
ஹூமி - ஸ்வாமதம்
அந்தத : பூஜா அநத்யாபக்ச ( 1 , 5 , 33 ) என்ற ஸுத்ரத்திற் கூறும் .

இரு கையால் தண்ணீரைப் பருக லாகாது . --
இரு கையாற் றண்ணீர் பருகார் ( ஆசார . 24 )
நாஞ்ஜலிநா பிவேத் ( 1 , 9 , 10)
என்ற - கௌதமதர்மஸூத்ரத்து ஸுத்ரத்திற் கூறப்பட்டது .

காலைக் கழுவும்போது ஒரு காலால் மற்றொன்றைத் தேய்த்தல் தகாது :
காலொடு காறேயார் ( ஆசார . 35 )
........ பாடிபாடியாவா ........ வர்ஜயேத் ( 1 , 9 , 32 ) ன்றவிடத்துக் கூறும்.

பெரியோர்க்கு எதிரில் ஆடையைப் போர்த்திக்கொள்ளுதலும் , காலை நீட்டல் அசைத்தல் முதலியனவும் தகா : --
மோட்டுடைப் போர்வையோ ளேக்கழுத்தந் தானசைப்பு
காட்டுளே யானும் பழித்தார் ( ஆசார . 83 )
இதனையே கௌதமதர்மஸுத்ரம்

முருர்நே கண்ப்ராவ்ருத - அவஸக்யிக -அபாச்
ரயண - பாப்ரஸாரணாநி ( 1 , 2 , 20 )
என்ற ஸுத்ரத்திற் கூறுகின்றது .

சில பாவச்செயல்களின் பயனைப் போக்கப் பிராயச்சித்தம் உண்டு என்றும் , சிலவற்றிற்கு இல்லை என்றுங் கருதப்பட்டது .

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென ( புறநா . 34 )

மஹாபாதகங்களுக்குப் பிராயச்சித்தம் இல்லை என்றும் ஏனையவற்றிற்கு உண்டு என்றும் மஹாபாரதம்
மஹாபாதகவர்ஜம் து ப்ராயச்சித்தம் வியீயதே ( சாந்தி . 34 , 43 ) என்ற அடியிற் கூறும் .

போரிற் பெருஞ்சேரலாதன் புறப்புண்பட்டு ப்ராயோப வேசஞ் செய்தனன் :
தன்போல் வேந்தன் முன்பு குறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் ( புறநா . 65 , 9-11 )

கரிகால் வளவெனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் ணாணிய சேர லாதன்

அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்து ( அகநா . 55 , 10-12 )
முன்னோர் செய்த நல்வினைப்பயன் பின்னோரைக் காக்கும்

கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
சைவிளங்கு கவிகை நெடியோய் ( புறநா . 102 , 5--6 )

சனி புகையினும் , சுக்கிரன் தெற்கே போயினும் , உலகிற்குக் கேடு வரும் .
மைம்மீன் புகையினுந் தாமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் ( புறநா . 117 )
செவ்வாய் , புதன் முதலிய க்ரஹங்கள் கூறப்பட்டன : --

உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப்பா லெய்த விறையமன்
வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை
மதிய மறைய வருநாளில் ( பரிபா . 11 , 4-10 )
( வெள்ளி = சுக்கிரன் ; படிமகன் பூமிஸுதன் செவ்வாய் : புந்தி புதன் ; அந்தணன் = குரு ; பங்கு=சநி; இறையமன் = சனி : பாம்பு = இராகு .)
திருவாதிரையன்று விழா கொண்டாடப்பட்டது :

ஆதிரை
விரிநூ லந்தணர் விழவு தொடங்கப்
புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப ( பரிபா . 11 , 77-9 )

யாகஞ்செய்யாத பிராம்மணன் சங்கு அறுத்து ஜீவனஞ் செய்தனன் :
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன ( அகநா . 24 )
பிராம்மணன் அடிக்கடி தூதாக அனுப்பப்பட்டான் : --
தூதொய் பார்ப்பான் மடிவெண் சோலை ( அகநா . 337 , 7 )

( 8 ) முக்தி

முக்தி , விதேகமுக்தி ஜீவன் முக்தி என இருவகைப்படும். இவ்வுடலைவிட்டு ஜீவன் பிரும்மலோகத்திற்குச் சென்று பின்னர் அடையும் முக்தி விதேகமுக்தி ஆகும் . பிரும்மலோகத்திலிருப்பதை அபராமுக்தி என்றும் , பிரும்மத்தோடு ஒன்றுபட்ட நிலையைப் பராமுக்தி என்றுங் கூறுவர் . பராமுக்தியும் பிரும்மமும் ஒன்றே ஆகும் .

அபராமுக்தியை ஆசிரியர் திருவள்ளுவனார்

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (திருக் . 3 ) என்றவிடத்து நிலம் என்ற சொல்லாற் குறித்தனர் .

பராமுக்தியை ,
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு ( திருக் . 358 )
என்றவிடத்து சிறப்பென்னுஞ் செம்பொருள் என்ற தொடராற் குறித்தனர் .

இதனை ஒட்டியே சங்கராசாரியர் பிருஹதாரண்ய கோபநிஷத்தில் ஸ்ரஹ்மலோக : ( 4 , 4 , 23 ) என்ற தொகைச்சொல்லை ஸ்ரஹ்மணோ லோக : என்றும் , ஸ்ரஹ்மைவ லோக : என்றும் இருவகையாகப் பிரித்தனர் . முன்னருள்ளது அபராமுக்திக்கும் பின்னருள்ளது பராமுக்திக்கும் பொருந்தும் . சிறப்பு என்ற சொல்லைத் திருக்குறளாசிரியர் முக்தியைக் குறிக்க

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்கு
ஆக்க மெவனோ வுயிர்க்கு என்னுமிடத்துக் கூறினர் .

சிறப்பு , செல்வம் இவற்றிற்குப் பொருந்திய ச்ரேய :,
ப்ரேய : என்ற சொற்கள்
ச்ரேயர்ச ப்ரேயாச மநுஷ்யமேத :
தௌ ஸம்பரீத்ய விவிநக்தி யீர : |
ச்ரோயோ ஹி யீரோ ஹி ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயோ மந்தோ யோ மக்ஷேமாத் வ்ருணீதே || (2,2)
என்ற காேபநிஷத்துச்செய்யுளில் வழங்கப்பட்டது காண்க .

அம்முக்தியைப் பெற கடவுளின் ஒழுக்கநெறியில் நிற்க வேண்டும் . அப்போது அஞ்ஞானம் நீங்க மாசற்ற ஞானம் தோன்றும். இவற்றை
பொறிவா யிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ( திருக் . 6)
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு ( திருக் . 352 )
என்றவிடத்து ஆசிரியர் திருவள்ளுவனார் கூறினர் . இக்கருத்துக்களையே பகவத்கீதையில்

யகா ஸம்ஹரதே சாயம் கூர்மோங்மாநி ஸர்வச : |
இந்திரியாணீந்திரியார்மேலு ) : தஸ்ய ப்ரஜ்ஞா
ப்ரதிஷ்தா || ( 2 , 58 )

விஹாய காமாந்ய : ஸர்வாந் புமான் சரதி நிஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார : ஸ பலாந்திம் அயிறச்அதி !! ( 2,71 ) என்ற செய்யுட்களிற் கண்ணபிரான் கூறினர் .

பிராணிகளிடத்தில் அருளோடு கூடிய மனம் வீட்டினை அடையச்செய்யும் என நான்மணிக்கடிகையின் இறுதிச்செய்யுளிற் கூறினர் விளம்பிநாகனார் .

முக்தியைக் குறிக்கச் செலவு என்ற சொல்லை நக்கீரனார் திருமுருகாற்றுப்படைறில்
சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை யாயின் (62- 4 ) என்றவிடத்து வழங்கினர் .

அச்சொல்லும் கடோபநிஷத்தில்
ஸா காஷ்ா ஸா பராபதி : ( 3 , 11 ) என்றவிடத்துள்ள மதி : என்ற சொல்லும் ஒருபொருட்கிளவி ஆகும் .

அம்முக்தியைக் குறிக்கவே அந்நிலை என்ற சொல்லைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில்

நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை யணுக வேண்டி ( 466-7 )

என்றவிடத்து வழங்கினர் . ( அச்சொற்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள் நில்லா வுலகத்து என்ற அடியோடு பொருந்தாமை காண்க . )


அச்சொல்லும் கடோபநிஷத்தில்
தத்பகம் ஆப்நோதி யஸ்மாத் யோ ந ஜாயதே ( 3 , 8 )
என்றவிடத்துள்ள தத்பகம் என்பதும் ஒருபொருட்கிளவி .

இப்பிறப்பிலே ஆசை தன்னைவிட்டு ஒழியின், அக்காலத்திலேயே முக்தி வரும் என ஆசிரியர் திருவள்ளுவனார்
ஆரா வியற்கை ( திருக் . 370 )

என்னுமிடத்தும் , மாங்குடி மருதனார்
சிறந்த வேதம் விளங்கப் பாடி ( மதுரைக் , 468-471 )
என்னுமிடத்தும் , கடோபநிஷத்

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே ( 6 , 14)

என்னுமிடத்தும் , ப்ருஹதாரண்யகோபநிஷத்
யோ அ காம : ( 4 , 46 ) என்னுமிடத்தும் , மஹாபாரதம்
யோ ந காமயதே ( அச்வமே . 47 , 8 )
என் னுமிடத்துங் கூறும் முன்னரே காட்டப்பட்டது .

முக்தி ஞானத்தால் வரும் என
ஞானத்தால் வீடாக நாட்டு (சிறுபஞ்ச. 36 ) என்னுமிடத்துக் காரியாசான் கூறினர் .
...

என இவற்றால் , தற்போதுள்ள சங்க நூல்கள் பலவற்றுள் வைதிகமார்க்கமே உணர்த்தப்பட்டது என்பது அறியப்படும் .

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard