New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்களிற் கூறப்படும் இம்மையும் மறுமையும்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
சங்க நூல்களிற் கூறப்படும் இம்மையும் மறுமையும்
Permalink  
 


( 4 ) இம்மையும் மறுமையும்


இவ்வுலகிலுள்ள பிராணிகள் எல்லாம் உயிரையும் உடலைங் கொண்டன . உடலைச் சரீரம் என்பர் .


சரீரம் ஸ்தூல

சரீரம் ஸூக்ஷ்மசரீரம் என இருவகைப்படும் . உயிர் முக்தியை

அடையும் வரை , அதற்கு ஒரே ஸுக்ஷ்மசரீரமே உண்டு . ஸ்தூல

சரீரமோ, உயிர் இருக்கும் உலகத்திற்குத் தக்கவாறு மாறுபடும் .
ஆகலின் இவ்வுலகில் இருக்கும் எல்லாப்பிராணிகளின் உயிரும் ஒரு காலத்தில் ஸ்தூலசரீரத்தை விட்டு நீங்க நேரிடும் . ஆகலின்அவ்விரண்டற்கும் உள்ள ஸம்பந்தம் நிலைத்திராது . இக்கருத்தினை ,
வீயாது
உடம்பொடு நின்ற வுயரு மில்லை . ( புறநா . 363 , 8 )
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி ( பொருநர் . 176 ; பெரும்பாண். 466 ) முதலிய அடிகள் கூறும் .
ஒருகாலத்தில் உயிர் உடலைவிட்டு நீங்கும் என்பதை ,
யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினும் . ( அகநா . 52 , 13) என்ற அடிகள் உணர்த்தும் .

உயிரை உடலைவிட்டு நீங்குமாறு செய்பவனைக் கூற்றம், கூற்று என்ற சொற்களாற் குறித்தனர் :

உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன . ( மலைபடு . 209 )
உயிருண்ணுங் கூற்றுப் போன்றன . ( புறநா . 4 )
அவன் கடுஞ்சினத்தன் என்றும் , பக்ஷபாதமில்லாதவன் என்றும் ,
கால னனைய கடுஞ்சின முன்ப . ( பதிற் . 39 , 8)
திருந்துகோன் ஞமன் . ( பரிபா . 5 , 61 ) என்ற அடிகள் அறிவிக்கும் .

தீயாரைப் பாசத்தாற் கட்டி அவன் கொண்டுபோவான்எனவும் , அவனுடைய ஆயுதம் கணிச்சி எனவும்

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் . ( புறநா . 195) என்ற அடிகள் விளக்குகின்றன .

உடலை விட்டு நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல ஆண்மகன் ஈமச்சடங்கில் பிண்டம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும் . ஆண்மகன் இல்லையேல் மனைவியே பிண்டம் அளிப்பாள் :

நின் வெய்யோன் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென . ( புறநா . 222)

பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் . ( புறநா . 234 )

நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழ் பிண்டம் . ( புறநா . 246 )

இக்கருத்தையே ,
இச்அந்தி பிதர : புத்ராந் ஸ்வார்த்தறேதோர்வடோத்கச |
இஹ லோகாத் பரே லோகே தாரயிஷ்யந்தி யே ஹிதா : || (த்ரோண , 174 , 54 )
என்றவிடத்து மஹாபாரதம் கூறும் .

ஒருவர் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அனுபவிப்பர் என்பதை ,

இம்மைச் செய்தது மறுமைக் காம் . ( புறநா . 134 )
நல்லத னலனுந் தீயதன் றீமையும்
இல்லை யென்போர்க் கினனா கிலியர் . (புறநா . 29 )
தன்னொடு செல்வது வேண்டி னறஞ்செய்க . ( நான்மணி . 15 ) என்ற அடிகள் கூறுகின்றன .

நல்வினைப்பயனை ஸ்வர்க்கத்தில் அவர் அனுபவிப்பர் என்பதை ,

ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீ இயர்
உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன் . ( புறநா . 174 )

அறம்பெரி தாற்றி யதன் பயன் கொண்மார்
சிறந்தோ ருலகம் படருநர் போல . ( பரிபா . 19 )

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு . ( திருக் . 86 ) என்ற அடிகள் உணர்த்தும் .

தீவினைப்பயனை நரகத்தில் அனுபவிப்பர் என்பது ,

அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது . ( புறநா . 5 )
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிறையத்துச் செலீ இயரோ . ( குறுந் . 292 ) என்றவிடத்து உணர்த்தப் பட்டது .

இந்திரியங்களை அடக்காமை நரகத்திற் செலுத்திவிடும் என , அடங்காமை ஆரிரு ளுய்த்து விடும் . ( திருக் . 130 ) என்னுமிடத்து திருவள்ளுவர் கூறினர் .

பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என்பதை

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் .
அறவிலை வணிக னாயலன் . ( புறநா . 134 )

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே . ( புறநா . 182 )
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாள . ( அகநா . 54 )
பிறர்க்கென வாழ்திநீ . ( பதிற் . 38)
என்ற அடிகள் குறிக்கின்றன . இக்கருத்தினையே

தேந் க்யக்தேந் கஞ்ஜீயா : என ஈசாவாஸ்யோபநிஷத்தும் ,
கர்மண்யே வாயிகாரஸ்தே மா மலேஷ கடிாசந என பகவத்கீதையுங் கூறும் (2, 47)
கணவன் இறப்பின் , மனைவி உடன்கட்டையேறுதலும் உண்டு என்பது ,
பெண்டிரும்
பாச - கு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே . ( புறநா . 62 )

எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே . ( புறநா . 246 )என்ற அடிகளாற் குறிக்கப்பட்டது .

அவள் கைம்மைவிரதம் பூணுதலும் உண்டு என்பது ,
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் .(புறநா . 234 ) என்ற விடத்து உணர்த்தப்பட்டது .

போரில் இறந்த வீரர் ஸ்வர்க்கம் எய்தினர் என்பது

நீள்கழன் மறவர் செல்வழிச் செல்க . ( புறநா . 93 ) என்றவிடத்து குறிக்கப்பட்டது . இக்கருத்தினை ,

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்மம் . ( 2 , 37 ) என்ற பகவத்கீதையடி கூறும் .


ஸ்வர்க்கம் என்ற பொருளிற் பல சொற்கள் வழங்கப்பட்டுள்ளன : - தேவருலகம் ( புறநா . 228) , உயர்நிலையுலகம் ( புறநா . 287 ; பதிற் . 52, 54 ; மதுரைக் . 197 ) , மேலோருலகம் (புறநா . 229 ) , நாகம் ( புறநா . 367 ) , வச்சிரத்தடக்கை நெடியோன் கோயில் ( புறநா . 241 ), பெரும்பெயருலகம் (( குறுந் . 83 ), புத்தேணாடு ( குறுந் . 101 ; முதுமொழி . 71 ) ,துறக்கம் ( அகநா . 143 , 233 ) , சிறந்தோருலகம் ( பரிபா . 19 ) ,

இமையோர்தேம் ( தொல் . பொருளியல் 52). இமையார் என்பது செய்யுளில் இமையோர் என மாற்றப்பட்டது எனக் கொள்ளல் தகும் . ஸ்வர்க்கத்திற்குத் தலைவன் இந்திரன் . அவன் புரந்தரன் ( பரிபா . 5 , 56) , வேள்விமுதல்வன் ( பரிபா . 5 , 31 ) , ஐயிறு நூற்றுமெய்ந்நயனத்தவன் ( பரிபா . 9 , 8 ; திருமுருகு . 155 ) முதலிய சொற்களாற் குறிக்கப்படுகின்றான் . அவன் நூறு வேள்விகளைச் செய்தனன் என நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து என்ற திருமுருகாற்றுப்படையடிகள் கூறும் .

இவனது குற்றத்தால் அகலிகை கவுதமரது சாபத்தால் கல்லுரு ஆனாள் என்பதை ,

இந்திரன் பூசை யிவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
வொன்றிய படியிது ( பரிபா . 19 , 50-52 )
என்ற அடிகள் உணர்த்துகின்றன . அகலிகை கல்லுருவானாள்

வால்மீகிராமாயணத்திற் கூறாவிடினும் , காளிதாஸன் ரகுவம்சத்தில்

மளதமவய : சிலாமயீ ( 11 , 34 ) என்றவிடத்துக் கூறியுள்ளார் .

என அவன் தபஸ்விகளை அவமதித்தலாற் றுன்பம் எய்தினன் என்பது

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி ( திருக் . 25 )

என்ற குறளால் அறிவிக்கப்படுகின்றது . ஈண்டுக் குறிக்கப்பட்ட தபஸ்விகள் கௌதமர் , அகஸ்தியர் , ச்யவனர் , ஸம்வர்த்தர் ஆவர் என்பது வால்மீகிராமாயணம் வ்யாஸமஹாபாரதம் இவ்விரு நூல்களிலிருந்து அறியக்கிடக்கின்றது .


ஸ்வர்க்கத்திலுள்ளோர் தேவர் எனப்படுவர் . அவர்க்கு அமிழ்தமும் , பூமியில் மக்கள் இடும் அவியும் உணவு ஆகும் என்பதை ,

இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் ( புறநா . 182 )
அவியுணவினோர் புறங்காப்ப ( புறநா . 377 )
செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து (திருக் . 413 ) முதலிய அடிகளால் அறியப்படுகின்றது .
அவர் அமரர் ( பட்டினப் . 184 ; கலித் . 2 , 2 ) , புத்தேளிர் ( கலித் . 82 , 4) ,
உயர்ந்தோர் ( பதிஷ் . 74, 89 ), இமையார் ( அகநா . 136 ) முதலிய சொற்களாற் குறிக்கப்படுகின்றனர் .

முப்பத்து மூன்று தேவர்கள் எனப்பட்டவர் பன்னிரண்டு ஆதித்தியர்களும் , இரண்டு அச்வினர்களும் , எட்டு வஸுக்களும் பதினொன்று ருத்திரர்களும் ஆவர் என்பதை ஆசிரியனல்லந்துவனார் பரிபாடல் எட்டாம் பாடலிற் குறிக்கின்றனர் . இவரெல்லாம் மும்மூர்த்திகளுடனும் முருகனைக் காண வந்தனர் என்பதை ஆங்கே கூறுகின்றனர் .

தேவர்கட்குப் பகைவர் அவுணர் . அவருள் முப்புரத்தோனும் சூரபன்மாவுஞ் சிறந்தவர் ஆவர் . முப்புரத்தோனைச் சிவபிரான் அழித்ததாக ,

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல ( புறநா . 59 )

ஆதி யந்தண னறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை ஆரெயி லோரழ லம்பின் முளிய ( பரிபா . 5 ) -

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினை இ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கான் முகம்போல ( கலித் . பாலை . 1 ) என்ற அடிகளில் நன்கு வர்ணிக்கப்பட்டுளது .

சிவபிரான் ஒரே அம்பினால் மூவெயிலையும் அழித்தனர் என்பதை ,
ஏகவாணேந த தேவஸ் த்ரிபுரம் பரமேச்வர : |
நிஜவ்நே ஸாஸுரமணம் தேவதேவோ மஹேச்வர : || ( ம . பா . கர்ண . 27 , )
என்ற செய்யுள் கூறுகின்றது .

அப்போது பூமி தேராகவும் , வேதங்கள் குதிரையாகவும் , பிரும்மா தேர்ப்பாகனாகவும் இருந்தனர் என்பதை
ஏவம் ருரஸ்ய க்தேவாந் ஸாரயம் து பிதாமஹ : ( ம.பா. கர்ண . 27 , 42 )

தயைவ வேகாஸ் ஹயா ரயா யரா ஸசைலா
சாயோ மஹாத்மந: ( ம . பா . கர்ண . 27 , 8 )
என்ற அடிகள் கூறுகின்றன .



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: சங்க நூல்களிற் கூறப்படும் இம்மையும் மறுமையும்
Permalink  
 


தேவர்கள் பிரும்மாவை முன்னிட்டுச் சிவபிரானிடஞ் சென்று முப்புரத்தை அழிக்கவேண்டினர் என்பதை,

தே சேவாஸ்தேக வாக்யேக சோதா:
ப்ரணத : ஸ்யிதா : |
ஷஹ்மாணம் அக்ரத : க்ருத்வா சரண்யம் சரணாமதா : ( ம.பா. கர்ண . 24 )

ஸத்கிருத்ய சங்கரம் ப்ராஹ ஸரஹ்மா
லோகபிதாமஹ: |
இமாந்யஸுர சர்மாணி லோகாம்ஸ்த்ரீந்
ஆக்ரமந்தி ஹி ( ம . பா . கர்ண . 25 )
என்ற அடிகள் அறிவிக்கின்றன .

சூரபன்மாவை முருகக்கடவுள் அழித்ததாக

அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்
சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு ( பதிற் . 11 )
சூர் நவை முருகன் ( புறநா . 23 )
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல் ( திருமுருகு . 46 )
சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்
சினமிகு முருகன் ( அகநா . 59 )
சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே ( பரிபா . 14 ) முதலிய அடிகள் கூறும் .

அவுணரது கூட்டம் சூரியனைக் கவர்ந்து சென்ற காரணத்தால் உலகெல்லாம் இருள , அவனை அவரிடமிருந்து திருமால் திரும்பிக்கொண்டுவந்ததாக ,

அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவர நீரக் கடுந்திறல்
அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்கு ( புறநா . 174 ) என்ற அடிகளிற் கூறப்பட்டது .

அவுணரையும் கடவுளே படைத்தனர் என
அவுணர்க்கு முதல்வனீ ( பரிபா . 3) என்ற அடி கூறும் .

தேவர்களுள் பித்ருதேவர்கள் என்பவர் ஒரு வகையினர் . அவர் தெற்கு திசையில் உள்ளனர் . அவர்க்கு மக்கள் செய்ய வேண்டிய கடன் ஆண்மகவைப் பிறப்பித்தல் ஆகும் .

கருத்துக்கள்

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் ( புறநா . 9 ) என்றவிடத்து அமைந்து கிடக்கின்றன .

தென்புலத்தாரைப் போற்றுதல் தேவர்களைப் போற்றுதலைக் காட்டிலும் சிறந்தது என்பதை அறிவிக்கவே தென்புலத்தார் தெய்வம் .... என்ற குறளில் ஆசிரியர் திருவள்ளுவனர் தென்புலத்தாரை முன்னர்ப் படித்தனர் . அவர் கோபமற்றவர் என்றும் , பரமசுத்தர் என்றும் , எப்போதும் பிரும்மசாரிகள் என்றும்
அக்ரோயநா : சௌசபரா ; ஸததம் ப்ரம்ஹசாரிண : |
என்ற மநுஸ்மிருதியடி கூறும் .

வருணன் நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் எனத் தொல்காப்பியங் கூறும் : --
வருணன் மேய பெருமண லுலகம் ( தொல் . அகத் . 5 )

தேவர்களுள் மன்மதன் ஒருவன் என்றும் அவனுடைய மனைவி இரதி என்பதும் ,
இரதி காம னிவளிவ னெனாஅ ( பரிபா . 19 , 48 ) என்ற அடியாற் குறிக்கப்பட்டன .
மஹாப்பிரளயத்தில் ஜீவர்களனைவரும் கடவுளிடத்தில் லயிக்கின்றனர் என்பது
தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்
பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்
போல் ( கலித். 129 )

என்றவி .-- த்துக் கூறப்பட்டது . இக்கருத்தினை மஹாபாரதம்
நாராயணாஜ் ஜமத் ஸர்வம் ஸர் மகாலே ப்ரஜாயதே
தஸ்மிந்நேவ புநஸ்தச்ச ப்ரளயே ஸம்ப்ரலீயதே ||
ம.பா. அநுசா . 86 , 8 ) என்ற செய்யுளிற் கூறும் .



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

கூற்றம்
சங்கச் செய்யுட். களில் கூற்றுவளைக் குறிக்கும் பாடல்கள் மிகதியாக உள்ளன. காலன், மடங்கல், ஞமன், மறலி அ சய சொற்கள் கூற்றத் தக் குறித்து வழங்குகின்றன. உடம்பையம் உயிரையும் கூறுபடுத்துப் பிரித்துவைக்கும் தெய்வ ஆற்றல் கூற்றம் என்னும் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. இவ்வுலகில் உடம்பும் உயிரும் வேறு வேறு தன்மையன எனவும் ஐம்பெரும் பூதங்களாலாகிய இவ்வுலகத்துப் புல் முதல் மக்களீறாகவுள்ள பல்வேறு உயிர்த்தொகுதிகளும் யாக்கை, இளமை, நுகர்ச்சி முதலிய பல திறத்தானும் நிலையாமை உடையனவாக இவ்வுலகம் அமைந்துள்ளது எனவும் தமிழ் முன்னோர் தம் வாழ்வியல் அனுபவத்தில் கண்டுணர்ந்தனர். “பல்லாற்றானும் நில்லாவுலகம்' என்றார் தொல்காப்பியனார். அறழிதற் றன்மையும் நிலைபேறும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற உயிர்த் தொகுதியும் அவ்வுயிர்களின் நிலைக்களமாய் அறிவின்மையும் நிலையாமையும் உடையனவாகிய பல்வேறு உடம்புகஞும் தம்முள் வேறுபட்ட. இயல்பினவாகும். எல்லாக் காலத்தும் உயிர்கள்தாம் பெற்றுள்ள ஒரே உடம்புடன் தொட.ர்த் நிலைத்திருத்தல் இல்லை. உயிர்கள் தம் வாழ்க்கை நுகர்ச்சிக்கெளனப் பெற்றுள்ள உடம்புகளினின்றும் அவற்றின் நுகர்ச்சக்காலம் முடிந்த பின்னர் அவ்வுயிர்களைக் கூறுபடுத்துப் பிரிக்கும் தெய்வ ஆற்றலே கூற்றம் எனப்படும். இத்தகைய கூற்றத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையோர் மன்னுயிர்த் தொகுதியில் ஒருவரும் இலர். இதுபற்றியே “மாற்றருங் கூற்றம்' என அடை புணர்த்தினார் தொல்காப்பியர். மாற்றருங் கூற்றம் உயிர்கவருந்தனது தொழிலை யாவராலும் மாற்றுதற்கு அரிய ஆற்றலுடையது என்பதாம். உடம்பையும் உயிரையும் கூறு படுக் துதலால் கூற்றம் எனவும் உயிர்களது வினை நுகர்ச்சியின் முடிவாகிய காலம் அறிந்து செயல்படுதலால் காலன் எனவும் உடல் பொடு கூடி வாழ்வியலில் படரும் உயிரை அதன் ஆற்றல் ஒடுங்குமாறு உடம்பினின்றும் பிரித்துத் தொழிலின்றி மடங்கி யொடுங்கச் செய்தலால் மடங்கல் எனவும் உயிர்கள்பால் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தன் தொழிலைச் செய்தலால் ஞமன் எனவும் எத்தகைய ஆற்றல் உடையராயினும் அவர்களொடு முரண்பட்டு அவர் உயிரைப் பிரித்தலின் மறலி எனவும் சங்க இலக்கியங்காரில் கூற்றம் குறிக்கப்பெற்றுள்ளது.

உயிர் தான் பெற்றுள்ள உடம்பிலவின்றும் பிரியுங் காலத்தைச் சாதல் எனவும் மற்றோர் புது உடம்பிற் புகும் நிலையைப் பிறத்தல் எனவும் இங்ஙனம் சாறற்கும் பிறத்தற்கும் காரணமாயமைந்தது அவ்வுயிர்கள் உட.3அபாடு கூடி நின்ற காலத்துச் செய்த நல்லனவும் இயனவுமாகிய வினைத் தொகுதி எனவும் தமிழ் முன்னோர் உயிர்களின் வாழ்வியல் நுட்பங்களை நுனித்து உணர்ந் னர். அவ்வுணர்வின் பயனாக ஓர் உயிர் தான் பெற்றுன்ள உடம்போடு உலகம் உள்ளவரை நிலைத்திருத்தல் இயலாது என்பதும் வினைப்பயனுக்குத்தக அவ்வுயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் கூற்றம் உண்மை பொய்யன்று என்பதும் ஆதிய உண்மையினைத் தம் உள்ளத்துத் தெளிந்தனர். இவ்வுண்மை,
“வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.” (புறம். 363)
எனவரும் ஐயாஇிச் சிறுவெண் டேரையார் வாய்மொழியால் நன்குணரப்படும். 

இவ்வாறு உயிர்கள் செய்த வினையின் மேலிட்டு நடுநிலையில் நின்று அவ்வுயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றத்தின் செயலைத் தடுக்கவல்லார் எவரும் இலர் என்பது,
“மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்” (பதிற். 51)
“கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்” (புறம். 362)
எனவரும் தொடர்களால் வலியுறுத்தப்பெற்றமை காணலாம்.

மேற்குறித்த கூற்றத்தின் செயலை மாற்றுதற்குரிய மருந்து வேறில்லை என்பது,
“மருந்தில் கூற்றத்து அருந்தொழில்” (புறம். 3)
எனவரும் தொடரால் புலனாம்.
கணிச்சி என்னும் கூரிய மழுப்படை. கொண்டு உயிர்களைக் கவரும் இறத்தல் கண்ணோட்டமோ, நயமோ காட் டுதலின்றி வெம்மை மிக்க சினத்துடன் காலம் பார்த்துத் தன் தொழிலை நிறைவேற்றுதல் கூற்றத்தின் இயல்பு. இவ்வுண்மை,
“கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர்”” (புறம். 195)
“காலன் என்னும் கண்ணிலி” (புறம். 240)
“நயனில் கூற்றம்” (புறம். 227)
“வெந்திறற் கூற்றம்” (புறம். 238)
“காலனும் காலம் பார்க்கும்” (புறம். 41)
எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

உட.ம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் ஆற்றலைக் கூற்றம் என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். அவர் குறித்த கூற்றத்தை அவருக்குப் பின் வந்த சான்றோர், காலன், மடங்கல், ஞமன், மறலி எனப் பல்வேறு காரணப் பெயரிட்டு வழங்கினர். இங்ஙனம் கூற்றுக்குப் பல பெயர்கள் வழங்கிய நிலையில் தலைமையுடையதும் அதன் ஏவல் செய்வதும் எனக் கூற்றத்தின் ஆற்றலை இருவகையாகப் பகுத்துரைக்கும் மரபு இடம் பெறுவதாயிற்று.

“தாமா இருவரும் தருமனும் மடங்கலும்' எனவரும் பரிபாடல் (3) அடியில் குறிக்கப்பெற்ற தருமன் என்பானைத் தலைமையுடைய யமன் எனவும் மடங்கல் என்பதனை அவனது ஏவல் செய்யும் கூற்றம் எனவும் கொள்வர் பரிமேலழகர்.
“மடங்கல் போற் இனைஇ மாயஞ் செய்யவுணரை” எனவரும் தொடரில் உள்ள மடங்கல் என்னும் சொல்லுக்குக் கூற்று எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். ஒடுக்கம் என்ற பொருளில் உள்ள மடங்கல் என்னும் இச்சொல் யமனுக்கு ஏவல் செய்யும் கூற்றம் என்ற பொருளினும் கலித்தொகையில் (150 ஆம் பாடல்) ஆளப் பெற்றுள்ளது. தருமனாகிய இயமனுக்கும் அவனது ஏவல் செய்யும் கூற்றத்திற்கும் இடையேயுள்ள இத்தொடர்பினை,
“சாற்று நாளற்றதென்று தருமராசற்காய் வந்த
கூற்றினை” (4. 49,2)
எனவரும் இருநாவுக்கரசர் இருநேரிசைத் தொடரால் இனிதுணரலாம். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் கூற்று எனவும் காலத்தால் தூண்டப்பட்டுக் கூற்றுவனது ஏவல் செய்யும் துணையாற்றலைக் காலன் எனவும் கொள்ளுதல் தகும். இங்ஙனம் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தற்குத் துணை செய்வது, காலக் கடவுளாகிய இறைவன் கையின் கண்ணதாய் ஊழி முடிவின்௧ண் அவன் ஏவலால் உயிர்த்திறமேல் இரியும் கணிச்சியாகும். இந் நுட்_பம்,
“மடங்கலும் கணிச்சியும் காலனுங்கூற்றும்
தொடர்ந்து செல்லமையத்துத் துவன்றுயிருணீஇய
உட.ங்கு கொட்பனபோல்” (கலி. 105)
எனவரும் கலித்தொகைத் தொடராலும், “சால நிறைகின்ற பல்லுயிர்களை உண்ண வேண்டி ஊழித்தயும் கணிச்சியும் கலனும் கூற்றுவனும் ண்ட ல் விடாமற் செல்கின்ற ஊழி முடிவாகிய காலத்தே . அவை 2 ச சுழன்று திரியுமாறு போல: எனவும் “(ல் டு பவன்கையதாய் ஊழி பாடிவில்கண் அவள் எவலால் உ௰. த்திற மேற்செல்லும் கணிச்சி. காலன், கூற்றுவன் ர னரனான். எனவும் இத் . தொடர் .- ம. நக்சிவ:்க்கினியம் வ. ய உரை விளக்கத் தாலும் :; ஈகு புலன! தல் காணலாம்.

உயிர்கள் வினைப்பயன்கள ய இன்ப துன்பங்களைப் டொருந்துதல் முறைமையாஒய ஊாழின்வழி புறத்தே நின்று உப்ரைக் கொணடு போதல் கூற்றத்தன் செயலாகும். இச்செய்தி,
““உறுமுறை மரபிற் புறநின்றுய்க்கும்
கூற்றத் கணையை” (புறம். 98)
எனவரு!். ( றப்பாட.ற்றொடரால் உய்த்துணரப்படும். இதன்கண் “உறுமுறை மரபு” என்றது, உயிர்கள் தாம் செய்த நன்றும் ததுமாகிய இருவினை காரணமாக இன்பமும் துன்பமுமாகிய பயன்களை நுகர்ந்து கழிக்குமாறு செய்யும் முறைமையாகிய ஊழினை. இவ்வூழின் வழி நின்றே கூற்றம் தன் தொழிலை நிகழ்த்தும் என்பது “உறுமுறை மரபிற் புறனின் றுய்க்கும் கூற்றம் என அடை கொடுத்தோதிய அதனால் இனிது புலனாதல் காணலாம்.
உடம்பொடு கூடி வாழும் உயிர் தனக்கு நிலைக்களமா யிருந்த உடம்பைவிட்டு நீங்குமாறு செய்தல் கூற்றத்தின் தொழிலாகும். இவ்வுலகில் உடம்பைவிட்டு உயிர் நீங்குதலாகிய சாதலைக் காட்டிலும் உயிர்க்குத் துன்பந்தரும் நிகழ்ச்சி பிறிதொன்றில்லையென்பது “சாதலின் இன்னாதது இல்லை” எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். அத்தகைய பெருந்துன்பத்தை விளைவிப்பது கூற்றுவனின் தொழிலாதலின் உலகில் நல்லறஞ் செய்தோரது உயிரைக் கூற்றங்கவர்ந்த நிலையில் நல்லோர் பிரிவால் அல்லலுற்ற சான்றோர்கள் தம்முள்ளத்தெழுந்த துவ்ப மிகுதியால் “அறனில் கூற்றம்” (புறம். 237), “நனிபேதையே நயனில் கூற்றம்: (புறம். 227) என்றாங்குக் கூற்றத்தின் செயலை இகழ்ந் துரைத்தலும் உண்டு.

கூற்றத்தினைக் குறித்து வழங்கும் பெயர்களுள் ஒன்றாகிய மடங்கல் என்னுஞ் சொல் புறத்தே தோன்றிய பொருள் மீண்டும் அகத்தே ஒடுங்குதல் என்ற பொருளில் இறைவன் செய்யும் ஒடுக்கம் என்னும் தொழிலைச் சுட்டிய இயற்பெயராய் அவ்வொடுக்கத்தின் ஒரு பகுதியாய் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தொழிலை நிகழ்த்தும் கூற்றத்திற்கு ஆகுபெயராயிற்று. முதலாம் பரிபாடலில்,
“ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல்
மைந்துடை யொருவனுமடங்கலும் நீ்
எனவரும் தொடரில் “மடங்கல்' என்னும் சொல் எவபெருமான் செய்தருளும் தொழில்களுள் ஒடுக்கமாகிய அழித்தற்றொழிலைக் குறித்து நின்றது. இத்தொடரில் “ஐந்தலையுயரிய அணங்குடையருந்திறல் மைந்துடை - ஒருவன்” என்பதற்கு “ஐந்துதலையைத் தோற்றுவித்த அருந்திறலையுடைய ........-- ஈசன்” எனவும் “மடங்கல் என்பதற்கு *அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம்” எனவும் பரிமேலழகர், விளக்கம் தந்துள்ளார். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் மடங்கல் என்னும் சொல், உலகினைத் தோற்றுவித்துப் பல்லுயிர்க்கும் ஏற்ற உடம்பினைப் படைத்தளித்த இறைவன், உலகுயிர்களாகிய அவற்றை மீளவுந் தன்கண் ஒடுங்கச் செய்தலாகிய ஒடுக்கத்தைக் குறித்து நின்றதென்பது நன்கு விளங்கும். எனவே உலகுயிர்களை முற்ற ஒடுக்குதலாகிய மகா சங்காரத் தொழிலை நிகழ்த்து பவன் ஐம்முகக் கடவுளாகிய சிவபெருமானே என்னும் கொள்கை திருமாலடியார்களாலும் ஏற்றுக் கொள்ளப் பக ப அ ப பப துவ ட அணனிதவ் ககன அண்றதம பட பபப ப அததளத்தத வை அதனை ல படத் பெற்றுத் தமிழகத்தில் நிலவிய பொதுமையுடைய தென்பது நன்கு புலனாதல் காணலாம்.

கணிச்சியென்னும் மழுப்படை சவபெருமானுக் குரியது எனவும் அப்படையினால் நிகழ்த்தப்படும் ஒடுக்கத்தின் உயிர்களது வினைநுகர்ச்சி முடிவு பெறும் காலம் வந்துழி அம்முறையின் வழி நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் காலன் எனவும் முழுமுதற் கடவுளாகிய இறைவனுக்குரிய கணிச்சிப்படை காலனது தொழிற்கும் உறுதுணையாய் நிற்கும் எனவும் தமிழ் முன்னோர் கருதினர். உலகுயிர்கள் அனைத்தையும் பேரூழிக்
காலத்தில் தன்கண் ஒடுக்கிக் கொள்ளுதலால் மகா
சங்காரணன் எனப்படும் சவபெருமான் பஇற்றுப்பத்துக் -
கடவுள் வாழ்த்துப் பாடலிற் “காலக்கடவுள்” எனப் போற்றப்
பெற்றுள்ளமையும் இக்கருத்துப் பற்றியே யாகும்.

வினைக் கொள்கையும் மறுபிறப்பும்
உலகில் உடம்புடன் கூடிவாழும் உயிர்கள் கூற்றுவனால் உடம்பினின்றும் நீங்கிய நிலையில், அவ் வுயிர்கள் முன் உடம்பொடு கூடியிருந்த காலத்திற் செய்த, நன்றும் ததுமாகிய வினைகாரணமாகப் பிறிதோரு உடம்பினைப் பெற்று மீளவும் பிறக்கும் என்பது தென்குமரி வடவிமயமாகிய எல்லையுட்பட்ட பாரத நாட்டில் வாழும் அனைவரும் தொன்றுதொட்டு உடன்பட்டுத் தம் வாழ்வியலிற் கடைப்பிடித்து வரும் பொதுக் கருத்தாகும். உடம்பொடு கூடி வாழும் மக்கட். குலத்தார் தாம் பெற்ற மனவுணர்வின் பயனாக எல்லாவுயிர்க்கும் நல்லனவே - செய்தல் வேண்டும் என்பதும் எவ்வுயிர்க்குந் தங்கு செய்தல் ஆகாது என்பதும் இவ்வுலகில் நல்லன செய்தோர் அதன் பயனாக வானுலகில் இந்திரன் முதலிய இமயவர் பதங்களைப் பெற்று இன்பம் நுகர்வர் என்பதும் அல்லன செய்தோர் அதன் பயனாக மீளுதற்கரிய நரகமாகிய நிரயத்தினை யடைந்து துன்பம் நுகர்வர் என்பதும் வினைப்பயனாகிய அந்நுகர்ச்சி முடிந்தபின்னர் எஞ்சிய வினையின் காரணமாக உலகில் மீளப்பிறப்பர் என்பதும் சங்ககாலத் தமிழ் மக்கள் தெளிந்துணர்த்திய வாழ்வியற் கோட்பாடுகளாகும். உயிர்கள் இப்பிறப்பிற் செய்த நல்லதன் நலனும் தயதன் இமையும் ஆகிய வினைப் பயன்களை இப்பிறப்பில் நுகராது போனால் இனி ரும் பிறப்புக்களிலாயினும் நுகர்ந்தே கழித்தல் வேண்டும் என்னும் வினைக் கொள்கையினை அடிப்படையாகக். வெொண்டு தோன்றியதே மறுபிறப்புண்மை பென்னும் கோட்பாடாகும். இக்கொள்கை சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழக மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுக் கொள்கையாய் நிலவியது. எனினும் இக் கொள்கையினையுடன்படாது முரணிய கோட்பாடுடையார் சிலரும் அக்காலத்திருந்தனர். இங்ஙனம் மறுபிறப்புண்மையினை யுடன்படாமையிளைச் சங்ககாலச் சான்றோர்கள் ஒரு பெருங் குற்றமாகக் கருதவில்லை. ஆனால் உலக வாழ்க்கையில் ஒருவர்தாம் நல்வினைகாரணமாக இன்பத்தையும் தீவினை காரணமாகத் துன்பத்தையும் உறுதியாக நுகர்ந்தே தர்வர் என்னும் வாழ்க்கை நியதியாகிய வினைக் கொள்கையினை மறுத்துத் தம் மனம் போனவாறு விரும்பியன செய்து திரிவாராயின் அவரது ஒழுகலாற்றினால் மக்கள் வாழ்க்கையின் கட்டுக்கோப்புக் குலையும். அதனால் அரசியல் நெறிமுறையும் நாட்டு மக்களது நல்வாழ்வும் சிதைந்து கெடும். எனவே வினைக் கொள்கையாகிய வாழ்வியல் முறைமையினை மறுத்துத் தம் மனம்போனவாறு ஒழுகும் $யோராகிய இற்றிதைதாரைச் சேர்ந்தொழுகுதல் கூடாது எனவும் கதவினை புரிந்தோரை ஒறுத்தலும் நல்லறம் புரிவோரைப் பாதுகாத்தலும் ஆகிய நெறிமுறைமையிற் சோர்வுபடாது ஆட். புரிதல் வேண்டும் எனவும் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர் வேந்தர்க்கு அறிவுறுத்தி வந்தனர். இச்செய்தி,
“கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியாமுறைமையின் மடிவிலையாகி
நலலல் ஐலனுந் தீயதன் தீமையும்
இல்லையென் போர்க்கினனாகிலியர்.” (புறம். 29) எனச் சோழல் நலங்கிள்ளியை நோக்கி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடற் பகுதியில் இடம் பெற்றுள்ளமை காண்க.

உலக வாழ்க்கையினை வெறுத்து உயர்ந்த நற்பொருளையே இந்தித்து வடக்கிருந்த வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் தன் வாழ்க்கையின் பயனாகத் கெளிந்துணர்ந்த நற் பொருள்களை உலக மக்களுக்கு உணர்த்துவதாக அமைந்தது,
“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்தி சினோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனின்
மாறிப் பிறப்பினின்மையும் கூடும்
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே: (புறம். 214) எனவரும் புறப்பாடலாகும்.

உலகியல் வாழ்வில் சிறியனிந்தியாது உயர்ந்த குறிக்கோளுடையராய் நல்லறம் செய்தலே மனனுணர்விற் சிறந்த உயர்திணை மாந்தர்க்குரிய வாழ்வியல் நோக்கமாக வேண்டும் என வற்புறுத்தும் நிலையில் இப்புறப்பாடல் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும்.
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . 742 அழுக்குச் செறிந்த புல்லறிவு நீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாத மக்கள் அறவினையைச் செய்வோமோ அன்றிச் செய்யாது விடுவோமோ என்று கருதி அறத்தின் பயன் விளைவில் தாம் கொண்ட ஐயப்பாட்டின் நீங்காதவராய்க் குறிக்கோளின்றித் தம் வாழ்நாளை வீணாக்குவர். உயர்ந்த குறிக்கோளுடையனாய் யானை வேட்.டைக்குப் போவோன் யானையையும் எளிதாகப் பெறுவான். அங்ஙனம் வேட் டத்தில் உயர்ந்த நோக்கமின்றிக் காடை. வேட்டைக்குச் செல்வோன் அதனைப் பெறாது வறுங்கையினனாயும் திரும்புவான். அதனால் உயர்ந்த விருப்பத்தை உடைய பெரியோர்க்குத் தம்மாற் செய்யப்படும் நல்வினைப் பகுதியில் அதனை அனுபவித்தல் உண்டாயின் அவருக்கு இருவினையும் செய்யப்படாத தேவர் உலகத்தின் கண் இன்பம் நுகர்தலும் கூடும். அவ்வுலகத்தின்௧ண் நுகர வேண்டிய வினைப்பயன் தீர்ந்து இல்லாது ஒழியுமானால் அதனினும் மேலாக மீண்டும் பிறவாமையாகிய பேரின்பம் பெறுதலும் கூடும். உயிர்கள் இவ்வுலகில் எடுத்துள்ள இவ்வொரு பிறவியேயன்றி மீளப் பிறத்தல் இல்லை என மறுபிறப்பினை உடன்படாதவர் கூறினும் அன்னோர் அறத்தின்பயன் இதுவென்று நேரிற் கண்டுதெளியுமாறு இமயமலையின் சகரம் போன்ற தமது புகழை இவ்வுலகில் நிலைபெறுத்துப் பழியில்லா உடம்பொடு கூடிநின்று சாதல் மிகவும் சிறப்புடையதாகும். ஆகவே, எந்தவகையால் ஆராய்ந்து பார்ப்பினும் நல்லறங்களைச் செய்தல் ஒருவர்க்குப் .பொலிவினைத் தருதல் உறுதி என்பது துப்பறப்பாடடு பொதிந்துள்ள உண்மையாகும்.

இதனால் இவ்வுலகில் உயிர்கள் செய்த நல்வினை அவ்வுயிர்களைத் தொடர்ந்து மறபிறப்பினும் சென்று பயனளிக்கும் எனவும் மறுபிறவி இல்லையென்பார் உளராயினும் அவர்களும் அறத்தின் பயனை இப்பிறவி ஒன்றில் வைத்து அறத்தின் பயனை உணரும்படி அறவினை தன்னைச் செய்தோர்க்குப் பயன் அளிக்கும் எனவும் வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்குங்காலத்து உலக மக்களுக்கு அறிவுறுத்திய மெய்யுணர்வுத் திறம் சான்றோர்களால் வியந்து பாராட்டத் தகுவதாம்.

மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கை தமிழ் மக்களது மாறாத நம்பிக்கையாகும் என்பதனை வற்புறுத்தும்
சங்கப் பாடல்கள் பலவுள்ளன.
“இம்மைச் செய்தது மறுமைக்காம்'” (புறம். 134) எனவும்,
“சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவிற்
பிறப்புப் பிறிதாகுவதாயின்
மறக்கு வென்கொல் என் காதலன் எனவே” (நற். 397) எனவும்,
148 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியாரன். கணவனை
யானா கியர்நின் நெஞ்சநேர் பவளே” (குறு. 49) எனவும் வரும் சங்கப் பனுவற் பகுதிகள் மறுப்பிறப்பு உண்டு என்பதில் பண்டைத் தமிழ் மக்கள். கொண்டுள்ள நம்பிக்கையை நன்கு புலப்படுத்தல் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

 இலக்கியங்களில் மறுபிறப்பு 27 ஏப்ரல் 2019

முன்னுரை

மனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பிறர் போற்றும்படி  அறமாக இருக்க வேண்டும். பிற உயிர்களுக்கு துன்பம் விளைவித்தல்  கூடாது. ஆனால் மனிதன் இன்றைய நவீன வாழ்க்கையில் நிலைபேறில்லாத் தன்மையில் எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு பிற உயிர்களின்மீது போற்றுதலில்லாமல் சுயபோக்கோடு செயல்பட்டு வருகிறான். மனமும் அதனைச்சார்ந்து இயங்குகிறது. பண்பாடும் கலச்சாரமும் அதற்கு ஒத்திசைவு தருகிறது.

அதிலிருந்து மீளாக்கம் பெற்று புதியக் கலாச்சாரத்தைக் கையிலெடுக்கும் வன்மையும் ஒரு படி மக்களிடத்தில் எழுந்துள்ளது. மனித வாழ்வானது உயிர்களிடத்தில் இரக்கமும், அன்பும் கொள்ளும்போது மறுபிறப்பு எய்தாமல் இப்பிறப்பிலே இன்ப நிலையை அடைய முயற்சி செய்யும். இத்தகைய எண்ணப் போக்குகள் சங்ககாலத்திலிருந்து மக்களிடத்தில் நிலவி வந்தன. வருகின்றன. அதற்கு மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த அறங்கள் என்ன? அந்த அறத்தினால் மக்கள் அடைந்த இன்பப்பேறு என்ன? மறுபிறப்பின்மீது மக்கள் கொண்ட எண்ண வோட்டங்கள் எவ்வாறு இருந்தன. இருந்து வருகின்றன. இன்றைய நவீன வாழ்க்கையில் மனிதன் குடும்ப அமைப்பாக்கத்தில் பிறப்பு எய்தியும், மறுபிறப்பு எய்தாமல் இருக்கவும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க காலத்தில்  மறுபிறப்பு
உயிர்களின் இறப்பானது இந்ஞாலத்தில் மீண்டும் பிறப்பு எய்துவதற்கே படைக்கப்பட்டவையாகும். ஆகையால் உயிர்களின் கதிகளை நான்கு நிலைகளில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என உறுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நான்குவகைக் கதிகளும் இஞ்ஞாலத்தில் மீண்டும் மீண்டும் வினை புரிவதற்கே படைக்கப்பட்டவகையாகும். ஆனால் வாழும் வாழ்க்கையில் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்நிலை இல்லை என்கிறது.

அதாவது, ஒருவன் தன்னுடைய வாழ்வில் மறுமைப்பயன் (மறுபிறப்பு) அடைய எண்ணினால் அவன் அறப்பயன் செய்து ஒழுகுதல் சிறந்தன்று. அத்தகையோன் இப்பிறப்பில் நலம் செய்து மறுபிறப்பில் இன்பம் பெற முயற்சிப்பான். அத்தகையோனை அறவிலை வணிகன் என்றழைத்தனர். இதனைப் புறநானூறு தெளிவுபடுத்துகிறது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன்” (புறம்.134:1-2)

என்ற பாடல் வரிசுட்டுகிறது. சங்கப் பாடல்களில் மறுபிறப்பு பற்றி கூறுகின்ற இடங்களெல்லாம் அறத்தை மட்டும் வழியுறுத்தவில்லை. கொடைத்தன்மையையும், உணவுப் பங்கீடுமே முன்னிருத்திப் பேசுகின்றன. பாரி, ஆஆய், சான்றோர் பிறருக்குச் செய்த கொடையும் (பாரி- பாணர்களுக்கு) வறுமை நிலையில் கொடுத்த உணவே முதன்மையாகக் கொள்ளப்படுகிறது. இங்கு பாரி, ஆஆய் இருவரும் மறுமைப் பயனை நோக்கி கைங்காரியங்கள் செய்தாகச் சொல்லப்படவில்லை. மக்கள் வறுமையில் வாடும்போது நிவர்த்தி செய்து, கொடையளித்து சிறப்புற்றதே மறுபிறப்பு நிலையில் புலவர்கள் பேசியுள்ளனர். இவ்வாறு குடிமக்களுக்குச் செய்யும் கொடையளிப்பு சமணத் தத்துவத்தில் அறமாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்த கொடைகள் உயிர்களின் கதிகளை இப்பிறப்பிலே தெய்வநிலை அடையச்செய்கிறது. இவை ஒரு புறம் இருப்பினும், ஐந்து நில  மக்களிடத்திலும் இப்போக்கு நிலவியுள்ளன.

திணைச்சமூகத்தில்  மறுபிறப்பு
சங்க கால திணைச்சமூக மக்களிடமும் மறுபிறப்பு பற்றிய சிந்தனை நிலவியுள்ளன. புறவாழ்கையைத் தவித்து அகவாழ்வில் உள்ளம் மகிழ்ந்து உரிப்பொருள் தலைவி, தவைன் மீது நெருப்புற்று ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். இது தனியொரு பெண்ணிற்கான இயல்பு நிலையாகும். பெண்களின் கற்பினை வலியுறுத்திக் காட்டுவதற்காகப் புலவர்கள் பெண்களின் மனவெளிப்பாட்டை மறுபிறப்பு நிலைவரை கொண்டு சென்றுள்ளனர். இல்லத்துப் பெண்களும் தன்னுடைய காதலன், கணவன் மீது கொண்டுள்ள அன்பினாலும் அவரையே அடைந்து அடுத்த பிறப்புவரைக்கும் தொடர்பு கொள்ள வேண்டுமென்று பேசியுள்ளனர்.


குறுந்தொகையில் நெய்தல்நில தலைமகன் தலைவியை விட்டுப் பிறிந்து பரத்தையர் மாட்டு போகும் தன்மையில் அவனது ஆற்றாமை கண்டு தலைவி, இல்லக்கிழத்தி மனம் வருந்தி, தலைவனே இப்பிறப்பு மாறி மறுபிறப்பு வருவதாயினும் நீ என் கணவன் ஆகுக. நின் மனம் ஒத்தவள் யான் ஆவேன் என்று தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இதனை,

“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகிய எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே” (குறுந்.நெய்.49)

என்று கூறுகிறார். இங்கு மறுபிறப்பு சிந்தனை மனிதனின் ஆழ்மனதோடு பொருந்தியே வெளிப்பட்டுள்ளது. தன்னைச் சார்ந்துள்ள கணவன் பிரிந்து செல்லும் காலங்களில் அல்லது சந்தோசமான சூழல்களிலும் இத்தகைய எண்ணங்கள் எழுகிறது. தலைவியினுடைய ஆற்றாமையும் அதே நிலையில் தென்பட்டுள்ளது. பிறரை அடையும் எண்ண வோட்டத்தில் தன்னுடைய ஆழ்மனதின் தெரிவிப்பை மறுபிறவி வரையில் கொண்டு சென்றுள்ளதை சுட்டும்போது பெண்களிடத்தில் மறுபிறப்பு என்ற சொல்லாடல் வழக்கத்தில் இருந்து வந்தது தெரிய வருகிறது.

சங்க காலத்தில் ஆண்கள் பெண்களின் காமத்தை அடைவதற்கும் அடைந்த பின்பு அவை தொடந்து நிகழ்வதற்கும் சிற்சில நேரங்களில் தடைபடாமல் தொடர்வதற்காகவும் அப்பெண்ணுடைய காமஇன்பத்திலே திளைத்து உடல்புறத் தோற்றத்தை காமம் சார்ந்த நட்பை மறுபிறவியும் தொடரவேண்டும். அல்லது நிறைவுறச் செய்ய வேண்டும் என்று ஆண்களின் ஆழ்மனதிலும் இத்தகைய எண்ணங்கள் எழுந்துள்ளன.

குறுந்தொகை 199வது பாடலில், தலைவியின் இல்லில் அலர் எழுந்து இற்செரிக்கப்பட்டதால் தலைவனால் அவளைக்காண இயலவில்லை. இருப்பினும் காமவேட்கை மிகுதியால் தலைவியை இப்பிறவியில் அடையவில்லை என்றாலும் மறுபிறவியில் அடைவேன் என்று கூறுகிறான். உடலோடு கூடிய நோய் அழிந்தாலும் உயிரோடு கூடிய நட்பு அழியாது தொடரும். அன்பின் வெளிப்பாட்டை மறுபிறப்பு வரை வெளிக்கொண்டுள்ளனர்.

நிலப்பிரபுத்துவத்தில்  மறுபிறப்பு
மறுபிறப்பு குறித்த கருத்தாக்கம் நிலக்குடிகளிடமும் நிலவி வந்துள்ளன. சமூகத்தில் அங்கமாக இருப்பது குடும்பம். அக்குடும்பத்தில் புத்திரப்பாக்கியம் நிறைவு செய்யப் பெற்றோரை மறுமையிலும் வாழ்த்தியுள்ளனர். ஒரே குடிக்குள் உள்ள பகைவர்கள் பிறரைப்பழித்து எதிர்த்து அவர்களின் குடிப்பிறப்பைச் சுட்டிக்காட்டி இழிவு படுத்துவது பன்டையோரின் சொல்லாட்சி. இருப்பினும் ஒரே குடியில் பகைவராகத் திகழ்ந்து வரும் ஒருவன் தன்னை யொத்த ஆண் தனது வாழ்வில் குற்றமில்லாத அழகினையுடைய புதல்வனைப் பெற்று இருப்பாராயின் அவனது புகழை இப்பிறவியில் இவ்வுலகத்தே வாழ்ந்தும் மறுமை உலகில் குற்றமின்றி வாழக்கடவார் என்று வாழ்த்துவர். இச்சொல்லாச்சி சான்றோர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பழமொழிகளாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இதனை அகநாநூற்றுப்பாடல் ஒன்றில் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் கூறுகிறார்.

“ இம்மை உலகத்து இடையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவார்ப் பயந்த செம்மலோன் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயொடு ஆகுதல் வாய்த் தனம்” (அகம்.66.1-6) என்று சுட்டுகிறது.   

திருக்குறளில் மறுபிறப்பு
ஒருவன் தம்மோடு பழகியவரின் நட்பானலுஞ்சரி அல்லது ஒருவருக்கு ஏற்பட்ட துன்பத்தினை மனமுவந்து போக்கி உதவுகின்றவர்களுடைய நட்பானலுஞ்சரி ஏழேழு பிறவிக்கும் விட்டு நீங்காது நினைத்துக்  காத்தருள வேண்டும். வள்ளுவா் இதனை,

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கன்
விழுமந்த துடைந்தவர் நட்பு” (குறள்.செய்நன்றி.8) என்றும் கூறுகிறார்.

மறுபிறப்பை போக்கக் கூடியவன்
மறுபிறப்பை அறவே அறுத்து போக்கக் கூடியவன் இறைவன் ஒருவனே. இறைவனுடைய திருவடியை நினைப்பவர்க்கும், அதனை அடைபவர்க்கும் மறுபிறப்பு இல்லை. அவர்களே பிறவியாகிய பெருங்கடலை நீந்திக்கடவுவார். இதனை,

“பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தார்” (குறள்.2) என்று கூறுகிறார் வள்ளுவா். 

வள்ளுவா் பார்வையில் இறைவனுடைய திருப்பாதங்களில் சென்று சோ்வோர்க்கு மறுபிறப்பு மீண்டும் நிகழப் பெறாது.

காப்பியங்களில் மறுபிறப்பு
ஆண், பெண் வாழ்வில் அடுத்தடுத்து நிகழவிருக்கும் துன்பம் சார்ந்த இறப்பு அதனையொட்டிய கனவுகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அல்லது துன்பம் சார்ந்த கனவுகள் ஏற்பட்டு பின்பு நிகழ்வாழ்வில் இறப்புகள் ஏற்படவும் செய்யும். பெரும்பாலும் பெண்களுக்குக் கணவன் இறப்பு சார்ந்து ஏற்படும் கனவில் அதனை நிவர்த்தி செய்ய இறை வழிபாட்டை கடைபிடித்தால் சரியாகிவிடும் என்ற சிந்தனைப்போக்கு, நம்பிக்கை வழக்கத்தில் நிலவி வருகிறது. இருப்பினும் வினைப்பயன் தொடர்ந்து வெளிப்பட்டு கனவுகள் நிறைவேறும் தன்மையிலும் இருந்துள்ளது.

கண்ணகியும் கோவலனும் ஒரு பெரிய ஊரை அடைந்து அவ்வூரில் தகாததொரு பழியை அடைய நேரிட்டு பழிசுமத்தினர். கணவனுக்கு நேர்ந்த நீங்கு கேட்டு மன்னன் முன் சென்று வழக்குரைத்தேன். இதனால், மன்னன் ஊர் இரண்டுக்கும் தீங்கு நேரிட்டதைக் கண்ணகியே முன்கூட்டியே வெளிக்காட்டுவது வினைவிளைப் பயனாகும். இதனை,

“கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தனை;மேல்
கோவலாற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும் பொற்றொடீஇ (சிலம்பு.கனா.காதை.44-55)

என்று கூறுகிறாள். இங்கு இரண்டு வழிகளில் வினைப்பயன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. முற்பிறவியில் கணவனுக்கு செய்ய வேண்டிய நோன்பு ஒன்றினை கண்ணகி செய்யாதிருத்தல்.
2. கோவலன் சங்கமன் எனும் ஒருவனை கொன்ற காரணத்திற்காகவும் வினைவிளைப்பயன் மேற்கொள்கிறான்.

இதில் பெண்கள் கணவனோடு தொடர்புடைய தீவினையை சரிசெய்ய சில நம்பிக்கை சார்ந்த சடங்குகளைச் செய்வதன் மூலம் சொர்க்க நிலையை அடைந்து இறைவன் பாதங்களைத் திரும்ப பெற்று மறுமையில் பூமியில் மனிதனாகப் பிறக்கக் கடவார்கள் ஆவார். கண்ணகியும் முற்பிறப்பில் கணவன் பொருட்டுச் செய்ய வேண்டிய நோன்பு ஒன்றினை செய்யாமல் விட்டதால் தீ கனவு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய காவிரியாறு கடலொடு கலக்குமிடத்திற்குச் சென்று சோமக் குண்டம், சூரிய குண்டம் என்ற இரண்டு பொய்கையில் மூழ்கி காமவேள் கோட்டத்தை தொழும்போது மறுபிறவியில் சுவர்க்கம் அடையப் பெறுவர். இது வினைவிளைப் பயனாகப் பெண்களுக்கு ஏற்படும் கனவுகளாகும். (சிலப்ப.கனா.காதை.56-64) இவ்வழிபாட்டில் பெண்கள் அறுகு, சிறுபூளை, நெல் முதலியவைகளைத் தூவி நீர்த்துறையை வழிபாடு செய்கின்றனர்.

விலங்குகள் மனித மறுபிறப்பை எய்துதல்
சங்க காலத்தில் தானம் செய்தலில் பெண்களே அதிகமாக முன்னிருத்தப்பட்டனர். அவ்வாறு தானம் செய்யும்போது விலங்குகள் (குரங்கு) மறுபிறப்பு எடுத்து மீண்டும் மனிதனாக ஆக்கப்பட்டுள்ளது. மறுபிறப்பிற்கான செய்கைகளை பெண்கள் வாயிலாகவே நிறைவேற்றியுள்ளனர். அப்பெண்கள் தானம் இடும்போது விலங்காக இருந்துள்ள குரங்கு பின்பு மனிதனாக முற்பிறப்பு அடைந்துள்ளான்.

எட்டி என்ற பட்டத்தையும் சாயலன் என்ற பெயரையும் கொண்ட இல்லறத்தான் ஒருவன் பட்டினி நோன்பிருக்கும் பலருக்கும் உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தான். பலரும் புகுந்து உணவருந்து அம்மனையில், ஒரு நாள் சாயலன் மனைவி ஒரு மாதவனை வரவேற்று, தீவினை ஒழிய அருளுமாறு வேண்டி, உணவளித்தாள். அவ்வேளை அவ்வூரிலிருந்த சிறுகுரங்கு ஒன்று, அச்சத்தால் ஒதுங்கி அவ்வீட்டினுள் நுழைந்தது. அருளறம் பூண்ட மாதவனின் திருவடிகளை வணங்கி அக்குரங்கு, அவன் உண்டபின் எஞ்சிய சோற்றையும் ஊற்றிய நீரையும் நீங்காத விருப்பத்துடன் சிறிதளவு பருகித் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது. பசியாறிய குரங்கு அவன் முகத்தைப் பரிவுடன் நேராகப் பார்த்தது. விருப்பு வெறுப்பற்ற கொள்கையுடைய மாதவனும், குரங்கின் அன்பான பார்வையைக் கண்டு நெகிழ்ந்து இல்லறம் பேணும் நங்கையே இக்குரங்கினை உனது மக்களைப் போலப் வளர்ப்பாயக என்று கூறிச் சென்றான். அக்கருத்தைக்கேட்ட மங்கையும் அவன் சொல்படியே காப்பாற்றி வந்தாள்.

அக்குரங்கு இறந்த பின்னரும்,  தானம் செய்யும்போது, அதில் ஒரு பகுதியை அக்குரங்குக்கென ஒதுக்கி அதன் தீய பிறவி ஒழிக என்று கருதிக் கொடுத்து வந்தாள். அதனால் அது மறுபிறப்பில் மத்தியப் பிரதேசத்திலுள்ள வாரணாசி என்னும் நகரத்தில் உத்தர கௌத்தன் என்னும் ஒருவனுக்கு ஒப்பற்ற மகனாய்ப் பிறந்தது. அப்புதல்வன் அழகாலும் செல்வத்தாலும் அறிவாலும் மேம்பட்டுத் தோன்றி, பெருமைக்குரிய தானங்கள் பல செய்து, அப்பிறவியிலேயே முப்பத்திரண்டாவது வயதில் இறந்தபோது தேவ வடிவத்தினைப் பெற்றான். இவ்வாறு பெற்ற இந்த உயரிய பெருமை எல்லாம், தன்னைப் பாதுகாத்து வளர்த்த சாயலன் மனைவியின் தானப் பயனாலேயே என்பதை மனத்துள்கொண்டு,  முற்பிறவியில் தான் கொண்டிருந்த குரங்கு உருவின் சிறுகையை, தன் ஒரு பக்கக் கையாகக் கொண்டு திகழ்ந்தான்.(அடைக்காதை.151-200) இங்கு உயிர்களின் சாபத்திற்கு ஆளமுற்பட்ட நிலையில் அதனைக் காத்தல் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது.

சமணத்தில்  மறுபிறப்பு
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தையே முன்னிடுத்திப் பேசுகின்றன. ஐந்து காப்பியங்களும் சமணக்காப்பியங்கள் ஆகும். சமணத்தின் கொள்கையே உயிர் பலி கொடுத்தல் கூடாது. அவ்வாறு உயிர்களைக் கொலை செய்தால் மனித பிறப்பானது மீண்டும் மீண்டும் மறுபிறப்பு எய்தக் கூடும். யசோதர காவியத்தில், யசோதரன் அவனது தாய் (சந்திரமதி) ஆகிய இருவரும் செய்த மாக்கோழி உயிர்பலியால் யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன், ஆட்டுக்குட்டி (இரண்டுமுறை), கோழி என்று பிறப்பும், சந்திரமதி அவனது தாய்   நாய், பாம்பு, முதலை,ஆட்டுக்குட்டி, எருமை, கோழி என பல்வேறு பிறவிகள் எடுத்து வருந்தினா்.

உயிர்களின் இறப்பானது இந்ஞாலத்தில் மீண்டும் மறுபிறப்பு எய்துவதற்கே படைக்கப்பட்டவையாகும். இதனை,

“கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்த நாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன இறந்து போக எய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ வியல் பிற்றேயாம்” (ய.சோ.35)

பாடல் கூறுகிறது. உயிர்களானது மீண்டும் மறுபிறப்பு எடுக்கும் நிலைக்கு உரியனவாகும் என்று சமணத் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்நிலை இல்லையாகும்.
அறத்தைக் கடைப்பிடிப்பவர்க்கு உடம்பால் பிறப்பால் இல்லை

ஒருவன் தன்னுடைய வாழ்வில் முறையான அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து இறப்பானாயின்  மீண்டும் மறுபிறவியல்  அவனது பிறப்பு இராது. மாறாக அறவாழ்வை ஒழுகலாறுகளாகக் கொள்ளாமல் ஒருவனது வாழ்வு இருக்குமாயின் இறந்த பின்பு நிலைபெறாமால் உயிரானது இருக்கும். மீண்டும் பிறப்பெடுக்கச் செய்யும். இதனை,

“பிறந்தநாம் பிறவி தோறும் பெறுமுடம் பகைவள் பேனாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல” (யா.சோ.36)

என்று யசோதர காவியம்  கூறுகிறது. ஒருவன் தனது வாழ்வில் இறப்பு கதிவரை நிலையான அறத்தைக் கடைபிடிப்பானால் என்றால் இல்லை. குடும்பவாழ்விலிருந்து விலகி அறவாழ்க்கை, துறவுவாழ்க்கை வாழக்கூடியவர்களின் வாழ்விற்கு இத்தகைய வினை பொருந்தும். அதுவே நிலைபேறு உடைய வாழ்வாகும். அவனுக்கே மறுபிறப்பில் உடம்பால் பிறப்பு இல்லை என்று சமண மதத்தில் கூறவும் படுகிறது. அது போன்று பிற உயரிகளைத் துன்புறுத்திக் கொண்று அதன் உயிர்களை உடம்பிலிருந்து நீக்கி வாழ்பவர்கள் வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உலளக்கூடியவர்களாக இருப்பர். அவர்களுக்கே மறுபிறப்பு நிகழக்கூடும். இதனை, வள்ளுவர்

“உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்” (குறள்.கொல்.10) என்று கூறுகிறார்.

பௌத்தத்தில்  மறுபிறப்பு
துக்கத்தை நீக்கி இன்பத்தைப் பெறும் வழிகளைப் போதிப்பது பௌத்தக் கொள்கை. மணிமேகலை பல்வேறு அறங்களைக் கடைப்பிடித்து துறவு வாழ்வு நெறியை வெளிக்காட்டக்கூடியது. முற்பிறப்பு அடைவதற்கு தனிமனிதன் தனது வாழ்வில் முழுவதுமான அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனை,

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்... (மணி.25.228-231) என்றும்

“ மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே” (மணி.1.95-96)

இவ்வுலகில்  நிலைபெற்று வாழ்வதற்கு அறங்களை செய்து ஒழுகல் சிறந்தன்று பௌத்தக் கொள்கை கூறுகிறது.

இதை போன்று பக்தி இலக்கிய காலத்திலும் மறுபிறப்பு குறித்த செய்திகள் விரவிக் காணப்படுகிறது. சுந்தரா் முற்பிறப்பு இப்பிறப்பு என்ற நிலையிலே தனது வாழ்க்கை இறைவனது பாதக்கமலங்களை அடைந்து விட்டன. எனக்கு மறுபிறப்பு இல்லை என்றும் கூறுகிறார். ஆனால், மறுபிறப்பு ஏற்படாமலிருக்க இறைவனுக்கு தொண்டு புரியுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நேரடியாக தேவலோகம் சென்று இறைகதி அடையப் பெறலாம் என்றும் கூறுகிறார்.

முடிவாக
மறுபிறப்பு சங்ககால மக்களிடத்தில் இருவேறு தன்மையில் வெளிப்பட்டுள்ளன. புலவர் அரசர் உறவில் கொடையளித்தல், உணவுப்பங்கீடு செய்தல் என்ற தன்மையிலும் மக்கள் குடும்பம் என்ற தன்மையில் எதிர்பார்ப்பு என்ற நிலையிலும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் இவையிரண்டும் ஓர் உயிர் தன் வாழ்நாளில் இறைநிலையை அடையுமா என்ற கருத்தோட்டத்தில் செயல்படவில்லை. சமூகம் அதன் பிரதிபலிப்பு வாழ்வியலோடு தொடர்பு கொண்டு வினை புரிந்துள்ளது. திணைக்குடி மக்களிடத்தில் தனியொருவனுடைய வாழ்வியலோடு இயைபுற்று ஆழ்மனத்தோடு மறுபிறப்பு வெளிப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் குடும்பம், கொடை, பங்கீடு, ஆழ்மனச்சிதைவு என்ற பெயரில் தென்பட்ட மறுபிறப்பு சிந்தனைகள் இன்று சமயம், ஆன்மீகம் என்ற தன்மையில் கடவுளோடு இணைத்து பேசப்பட்டு வருகிறது. சங்க காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய மறுபிறப்பு பற்றிய கருத்தாடல்கள், திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் காலத்தில் சமணம், பௌத்தம், சைவம் என்ற தன்மையில் கடவுளோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இதில் பக்தி இலக்கிய காலத்தில் சைவ அடியார்கள் சிலரில் எனக்கு மறுபிறப்பு இல்லை என்றும் இப்பிறப்பிலே அனைத்தும் அடைந்து விட்டதாக கருதுகின்றனர். ஆனால் காப்பிய காலத்தில் மறுபிறப்பு செய்வினைப் பயனைக் கொண்டே மீண்டும் நிகழும் என்ற புரிதல்கள் மக்கள் மத்தியில் நிலவின. மாறாக உயிர்கொலை செய்வதன் மூலமும் இத்தகைய விளைவுகள் நிகழப்பெறும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது. சங்க காலத்தில் நினைத்தை அடைய மறுக்கும்போதும், இன்பத்தை மேலும் நிறைவு செய்ய மறுமையை நாடியுள்ளனர். ஆனால் பிற்காலங்களில் இதன் நாட்டம் இறைவன் மீது மாறியுள்ளது. அது குறித்து விரிவாக ஆராய்ந்தால் தனியொருவனுடைய ஆழ்மன எண்ணங்கள் வெளிப்படும். மறுபிறப்பின் தன்மையையும் இனங்கான முடியும்.

துணை நின்ற நூல்கள்

1.    புறம்.134:1-2
2.    குறுந்..49
3.    அகம்.66.1-6
4.    எஸ் குருபாதம் - மறுபிறப்பு பற்றிய ஆச்சரியத் தகவல்கள், மணிமேகலை பிரசுரம்,சென்னை-600 017
5. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (உரை) – யசோதர காவியம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. முதற்பதிப்பு -1970
6.உ.வே.சா (குறிப்புரை) –மணிமேகலை, உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம், சென்னை
7.நா.மு. வேங்கடசாமி நாட்டார் (உரை) – சிலப்பதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை.

* . முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -ramvini2009@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard