New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்களிற் கூறப்படும் அக்னிஹோத்ரமும் யாகங்களும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்க நூல்களிற் கூறப்படும் அக்னிஹோத்ரமும் யாகங்களும்
Permalink  
 


( 3 ) அக்னிஹோத்ரமும் யாகங்களும்

அந்தணர் காலை மாலை ஆகிய ஸந்திகளில் கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்னி என்ற முத்தீக்களில் தேவர் கடனைத் தீர்க்க அக்னிஹோத்ரஞ் செய்தனர் என்பது புறநானூறு , பட்டினப்பாலை , கலித்தொகை , குறிஞ்சிப்பாட்டு முதலிய நூல்களிற் கூறப்பட்டது .

அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே . ( புறநா . 2 )

நின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே . ( புறநா . 122 , 3 )

அமரர்ப் பேணிய மாவுதி யருத்தியும் .( புறநா . 99 ; பட்டினப் . 200 )

அந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து
செந்தீச் செவ்வழ றொடங்க . ( கலித் . 119 )
அந்தி யந்தண ரயர . ( குறிஞ்சிப் . 225 )

வேள்விகளால் தேவர்களும் கடவுள் முதலியோரும் இன்புறுத்தப்பட்டனர் எனப் பல்லிடங்களிற் பதிற்றுப்பத்து கூறும் :

வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( 70 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப . ( 74 )
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி . ( 21 )

அந்தணர் மந்திரவிதிப்படி அவற்றைச் செய்தனர் எனத் திருமுருகாற்றுப்படை , கலித்தொகை , சிறுபஞ்சமூலம் இவை கூறும் :

ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே . ( திருமு . 94-6)
கேள்வி யந்தணர் கடவும்
வேள்வி யாவியின் . (கலித் . 36 )
வேட்பவன் பார்ப்பான் . (சிறுபஞ்.)
வேள்விகளில் தூணங்கள் இருந்தன என்பதும் , அவை முற்றிலும் கயிறுபோல் திரித்த துணிகளால் மூடப்பட்டன என்பதும் பெரும்பாணாற்றுப்படை , அகநானூறு இவை கூறும் :

கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசை இ . (பெரும் . 315-6)

வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல . ( அகநா . 220 )

வேள்வித்தூணில் துணி கயிறுபோல் திரிக்கப்பட்டு முழுதும் கட்டப் பட்டிருப்பினும் , உத்காதாவின் இடுப்பு அத்தூணைத் தொடுவதற்காக ஆங்குச் சிறிது அது நீக்கப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது .. தூணைத் தொட்டுக்கொண்டு உத்காதா ஸாம

கானம் செய்ய வேண்டும் என்பது சுருதிவாக்யமாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் என்பது ஸ்மிருதிவாக்கிய மாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் நியதி இல்லை என்பது பிற்காலத்தாரது கொள்கை . பூர்வமீமாம்ஸையில் ஸ்மிருத்ய திகரணத்திற் காணலாம் . ஆமை வேள்விக் குண்டத்தின் கீழே குழியில் வைக்கப்படுகின்றதை அகநானூற்று 361 - ஆம் செய்யுளிற் கூறினர் எயினந்தை மகனார் இளங்கீரனார் :

பெரியோ ரார
அழலெழு தித்திய மடுத்த யாமை .
(தித்தியம் = வேள்விக்குண்டம் )
சயனத்தில் ஆமையை வேள்விக்குண்டத்தின்கீழ் வைத்தலை

யஜ்ஜீவந்தங் கூர்மம் உபடியாதி ( 5 , 2 , 45 ) என்னுமிடத்து தைத்திரீயஸம்ஹிதை கூறும் .

வேள்வித்தீயை மின்னலிற்கு உவமானமாகக் கார்நாற் பதிற் கூறினர் மதுரைக்கண்ணங்கூத்தனார் .
என
இதனைப்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீபோல
எச்சாரு மின்னு மழை . ( 7 )

சோழநாட்டிற் பூஞ்சாற்றூரில் இருந்த பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயனைப்பற்றி ஆவூர் மூலங்கிழாரும் , பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியைப்பற்றி நெட்டிமையாரும் , சோழவரசர்களுள் கரிகாற்பெருவளத்தானைப் பற்றிக் கருங்குழலாதனாரும் , இராஜசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப்பற்றி ஒளவையாரும் , நலங்கிள்ளியைப்பற்றிக் கோவூர் கிழாரும் , சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கபிலரும் , அவரவர் இயற்றிய வேள்விகளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறியிருத்தல் கவனித்தற்கு உரியது.

கௌணியன் : சிவபிரானிடம் தோன்றித் தருமத்தை அறிவித்ததும் நான்கு பகுதியையும் ஆறு அங்கங்களையும் உடையதும் ஆன வேதத்தைக் கற்று , அவைதிகசமயங்களைக் கண்டித்து , ஏழு பாகயஞ்ஞங்களையும் ஏழு ஹவிர்யஞ்ஞங்களையும்

ஸோ மஸம்ஸ்தையையும் குறைவின்றிச் செய்து விளங்கிய குலத்திற் கௌணியன் பிறந்தனன் . தானும் மனமொத்த மனைவி யுடன் வேள்விகளில் நீர் நாணுமாறு நெய்யை வழங்கி , எண்ணிக்கையற்ற வேள்விகளைச் செய்து விருந்தினரை உபசரித்தான் . ச்செய்தி புறநானூற்றில் 166 - ஆவது செய்யுளில் உள்ளது .

பாகயஞ்ஞங்கள் , ஹவிர்யஞ்ஞங்கள் , ஸோமஸம்ஸ்தைகள் இவற்றைப்பற்றி விரிவாய் , கௌதமதர் மஸூத்ரம் முதலிய நூல்கள் கூறும் .

முதுகுடுமிப்பெருவழுதி : நாலு வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் கூறியவாறுச் சிறப்பாக அவிப்பொருள்களைச் சேகரித்து , அவற்றை மிகுந்த நெய்யுடன் கலந்து தேவதைகட்கு அளிக்குமாறு பல வேள்விகளை முதுகுடுமிப்பெருவழுதி இயற்றினன் . தனது புகழைப் பரப்பிப் பல்லிடங்களில் வெற்றித் தூண்களை நாட்டினன் . இச்செய்தி புறநானூற்றில் 15 - ஆம் செய்யுளிற் கூறப்பட்டது. ஆங்கு வேள்விகளை முடித்தபின்னர் யூபம் நட்டான் எனக் கூறப்பட்டிருத்தலான் , யூபம் என்பது வெற்றித் தூணைக் குறிக்குமே அன்றி வேள்வித்தூணைக் குறிக்காது .

அச்சொல்லை அப்பொருளில் காளிதாஸன் ரகுவம்சத்தில் ஆறாம் ஸர்க்கத்தில் கார்த்தவீரியார்ஜுனனைப்பற்றி வர்ணிக்குமிடத்து , அஷ்டாதசத்வீபநிவாதயூப்: என்ற தொடரில் வழங்கியுள்ளார் .

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறும்பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் ( 759-863 )
என்ற அடிகளை நோக்கின் பெருவழுதி வேள்வியனைத்தையும் நிஷ்காமமாகச் செய்து ஆத்மோபதேசம் பெறுவதற்கு இன்றி யமையாததான சித்தசுத்தியைப் பெற்றான் எனக் கூறின் மிகையாகாது . அவர் இறுதியிற் பிறப்பிறப்பின்றி சேவடியை அடைகின்றனர் என்பதைப் பகவத்கீதை ,

கர்மஜம் புத்தியுக்தா ஹி வலம் த்யக்த்வா மநீஷிண :
ஜந்மவந்யவிநிர்முக்தா: படிம் மச் மந்த்யநாமயம் | ( 2,51 ) என்றவிடத்துக் கூறும்
கரிகாற்பெருவளத்தான் : தர்மத்தை ஐயமற உணர்ந்த அந்தணரைக்கொண்ட ஸபையில் வேள்விமுறைகளை நன்கு அறிந்த ருத்விக்குக்கள் செய்ய வேண்டியவற்றை நன்கு செய்து காட்ட , கற்புடை மனைவியருடன் வேள்விச்சாலையில் இருந்து கருடசயனம் செய்து புகழைப் பெற்றான் பெருவளத்தான் . இச்செய்தி புறநானூற்றில் 224 ஆம் செய்யுளில் உள்ளது .

பெருநற்கிள்ளி இராஜஸுயயாகம் செய்தான் என்பதும் , நலங்கிள்ளி பல வேள்விகளைச் செய்தான் என்பதும் புறநானூற்றில் 363 , 400 - ஆம் செய்யுட்களிலிருந்து அறியப்படுகின்றன .

செல்வக்கடுங்கோவாழியாதன் : வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களைக் கொண்டு வேள்வியில் கடவுளையும் தேவர்களையும் இன்புறச்செய்து , அந்தணர்கட்கு ஏராளமாய் அருங்கலங்களை இவ்வரசன் வழங்கினன் எனப் பதிற்றுப்பத்து 64 , 70 செய்யுட்கள் கூறும் .



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: சங்க நூல்களிற் கூறப்படும் அக்னிஹோத்ரமும் யாகங்களும்
Permalink  
 


பாண்டியர்கள் பாண்டவ வமிசத்தினர் எனக் கருதப்பட்டனர் . ஆகலினன்றே அவர் கவுரியர் , பஞ்சவர் என்ற சொற்களால் அகநானூறு புறநானூறு முதலிய நூல்களிற் குறிக்கப் படுகின்றனர் .
தவிரா வீகைக் கவுரியர் மருக ( புறநா . 3 )
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி ( அகநா . 70)
தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை ( அகநா. 342)
செருமாண் பஞ்சவ ரேறே ( புறநா . 58 )
கவுரியர் என்பது கௌரவ்ய : என்பதன் தற்பவம் சொற்குக் குருவமிசத்திற் பிறந்தவர் என்பது பொருள் . அக்காரணம்பற்றி அச்சொல் துரியோதனன் முதலியோரைக்குறிக்க வழங்கப்பட்ட துபோல் தர்மபுத்திரர் முதலியோரையுங் குறிக்க வழங்கப்பட்டது . மஹாபாரதம் சல்யபர்வத்தில் தர்மபுத்திரன்
குருபுங்கவன் எனவும் குரூணாம் வ்ருஷ : எனவுங் குறிக்கப் படுகின்றனன் .

தஸ்மிந் மஹேஷ்வாஸயரே விசஸ்தே
ஸங்க்ராமமயயெ குருபுங்மவேந | ( 16 , 85 )
ஜவாத மத்ராபதிம் மஹாத்மா
முகம் ச லேலே வ்ருஷ: குரூணாம் | ( 16 , 11 )

பஞ்சவர் என்பது பஞ்ச என்ற தற்சமத்திற்கு அர் விகுதி கூட்டி வந்தது . அப்பாண்டவர் ஐவர் எனவும் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளிற் கூறப்படுகின்றனர் .

சோழர் சிபியின் வமிசத்தினர் எனப் புறநானூற்று 39 ,43 - ஆம் செய்யுட்கள் கூறும் .
புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக . ( 39 )

கொடுஞ் சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக . ( 43 )

இந்திரன் பருந்துவடிவமாகவும் அக்னி புறாவடிவமாகவும் சிபியைக் சோதிக்க வந்தனர் எனவும் , அவன் துலாக் கோலில் ஏறினன் எனவும் மகாபாரதம் வனபர்வம் 132 , 133 அத்யாயங்கள் கூறும். இதனாற் பாண்டியரும் , சோழரும் க்ஷத்திரியர்கள் அறியக்கிடக்கின்றது . அதனாலேயே அவர் வேள்விகளில் ஈடுபட்டனர் எனக் கூறல் தகும் . என



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard