New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்களிற் கூறப்படும் வைதிகமார்க்கம்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சங்க நூல்களிற் கூறப்படும் வைதிகமார்க்கம்
Permalink  
 


சங்க நூல்களிற் கூறப்படும் வைதிகமார்க்கம்

(1) வேதங்களும் அங்கங்களும் நக்கீரனார்

இயற்றிய திருமுருகாற்றுப்படையில் , இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக்
கொண்ட வேதங்களை நாற்பத்கெட்டு ஆண்டுகளிற் கற்றனர் என்பதை

அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிப வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல . ( 179-182 )

என்ற அடிகளாற் குறிக்கின்றனர். ஒருவன் உபநயனம் செய்விக்கப்பட்ட பின்னரே வேதங்களைக் கற்க உரியன் ஆவான்; உபநயனமே அவனுக்கு இரண்டாம் பிறப்பு; அப்போது, காயத்ரீ தாய், ஆசிரியன் தந்தை; நான்கு வேதங்களைக் கற்றல் வேண்டும்; இல்லையேல் மூன்று, இரண்டு வேதங்களையேனும், இல்லையேல் ஒன்றையேனுங் கற்றல் வேண்டும் ; ஒவ்வொரு வேதத்தையுங் கற்கப் பன்னிரண்டு ஆண்டே காலம் ; எனத் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன .

( Cf. கௌதமதர் மஸூத்திரம் 1 , 1 , 6 ; 1 , 1 , 9 ; 1,3,51 ; 1 , 3 , 52 )

மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு ,
அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை ,
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்று புரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுது நூல் . (1-4 )
என்ற அடிகளிற் கூறுகின்றனர் . உலகில் உள்ளனவெல்லாம் கடவுளிடமிருந்தே தோன்றின என்பது ‘ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே என்ற உபநிஷத்து வாக்கியத்திலும் , வேதங்களும் அவரிடமிருந்தே தோன்றின என்பது சாஸ்த்ரயோ நித்வாத் என்ற வ்யாஸஸுத்திரத்திலும் கூறப்பட்டன .

கடுவனிளவெயினனார் பரிபாடல் மூன்றாம் பாடவின்கண் இருபத்தோரு லகமும் , ஆங்குள்ள உயிர்களும் திருமாவிடமிருந்தே தோன்றின என மாயாவாய்மொழியாகிய வேதங் கூறும் என்பதை,

மூவே ழுலகமு முலகினுண் மன்பது
மாயோய் நின்றவயிற் பரந்தவை யுரைத்தே
மாயா வாய்மொழி . ( 9-11 )

என்ற அடிகளிற் கூறினர் . மாயாவாய்மொழி என்றவிடத்து மாயா என்ற அடைமொழி வேதம் நித்தியம் என்பதை அறவித்தலுங் காண்க . அவரே அப்பாடலிற் கடவுளை வேதத்து மறை நீ ( 66 ) என்பதும் , பகவத்கீதையில் ப்ரணவ : ஸர்வ உேவேஷ எனக் கண்ணபிரான் ஏழாவது அத்தியாயத்திற் கூறுவதும் ஒத்திருக்கின்றன . மறை என்பதற்கு உரைகாரர் உபநிடதம் எனப் பொருள் கூறியிருப்பனும் , அதற்குப் பிரணவம் என்ற பொருளுங் கொள்ளலாம் என்பதைப் பகவத்கீதை அறிவிக்கின்றது .

வேதங்களாற் கடவுள் அறியப்படுகிறார் என்பதைக் கீரந்தையார் பரிபாடலில் , நாவ லந்தண ரருமறைப் பொருளே . ( 2 , 57 ) என்றவிடத்து அருமறைப்பொருள் என்பதால் அறிவிக்கின்றனர்

இதனை , பகவத்கீதையில்

வேசை : ச ஸர்வைரஹமேவ வே .: ( 15 , 15 ) என்றதனாற் கண்ணபிரானும் , சாஸ்த்ரயோநித்வாத் வேதாந்தஸுத்திரத்தான் வியாஸரும் கூறுகின்றனர் .

வேதங்கள் எழுதப்படாமல் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன என்பதைக் குறுந்தொகையில் பாண்டியன் எழுதி நெடுங்கண்ணனார் ,
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ . ( 156) என்றவிடத்து எழுதாக்கற்பு என்ற சொல்லாற் குறித்தனர் .

இக்கருத்தினையே பதிற்றுப்பத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் வழங்கப்படும் கேள்வி என்ற சொல்லும் அறிவிக்கும் :

உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப . ( பதிற் . 64 , 4-5 )
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( பதிற் . 70 ; 18-9 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப ( பதிற் . 74 , 1-2 )
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு . ( புறநா . 361 , 3 - 4 )
அந்தணரே வேதங்களைச் சிறப்பாகக் கற்றுப் பாடினர் என
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறினர் :
சிறந்த வேதம் விளங்கப் பாடி
அந்தணர் பள்ளியும் ( 468-476 )
அந்தணர் வேதம் பாட (656 ) அவற்றின் கருத்தை விரித்து விளக்கியோரை வாய்மொழிப் புலவர் எனக் குன்றம்பூதனார் பரிபாடல் ஒன்பதாம் பாட்டிற் கூறினர் :

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் ( 12-13 )

வேதங்கள் தர்மத்தைப்பற்றிக் கூறுகின்றன என ஓதலாந்தையார் ஐங்குறுநூற்றில் உணர்த்தினர் . அறம்புரியருமறை ( 387 )

அந்தணரே வேதத்தைக் கற்பித்த காரணம்பற்றி வேதத்தை அந்தணர் மறை ( தொல் . எழுத் 102 ) எனத் தொல்காப்பியனாரும் , அந்தணரருமறை ( பரிபா. 2 , 57 ; 3 , 14 ) எனக் கீரந்தையாரும்

கடுவனிளவெயினனாரும் , அந்தணர் முதுமொழி ( கலித் . 126 , 4) என நல்லந்துவனாரும் , அந்தணர் நூல் ( திருக் . 543 ) எனத் திருவள்ளுவனாரும் கூறினர் .

வேதங்களைக் காக்கும் பிராம்மணர் வசிக்கும் இடத்திற் கிளிகளும் வேதவாக்கியங்களைக் கூறின என உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையிற் கூறினர் : -

வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதி (300-1)

வேதத்தில் உணர்த்தப்பட்ட வேள்விகளைப் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியும் சோழன் கரிகாற்பெருவளத்தானும் செய் ,ததாகப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறும் :

நற்பனுவ னால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிற்ப்பின் வேள்வி முற்றி ( 15 , 17-20 )

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் ( 224, 8-4 )

பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர்,
பா அல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .

பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .

வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ் செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ் செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர்



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

( 2 ) வர்ணங்களும் ஆச்ரமங்களும்
தமிழ்நாட்டு மக்கள் நால்வகைப்பட்டனர் எனவும் , அவர் பார்ப்பனர் , அரசர் , வணிகர் , வேளாளர் எனவும் , அவருள் பார்ப்பனர்க்கு அறுதொழில்களும் ,
அரசர்க்கு ஐந்து தொழில்களும் , ஏனையோர்க்கு அறுதொழில்களும் உள்ளன எனவுந் தொல்காப்பியனார் பொருளதிகாரத்திற் கூறினர் .
...
நூலே அந்தணர்க் குரிய ( மர . 71 )
படையும் அரசர்க் குரிய ( மர . 72 )
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை ( மர . 78 )
வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ( மர . 81 )
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும் ( புறத் . 16 )

பார்ப்பனர்க்குரிய அறுதொழில்கள் ஓதல் வேட்டல் அவற்றைப் பிறர்க்குச் செய்தல் ஈதல் ஏற்றல் என்பன எனப் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 24- ஆவது செய்யுள் 6-8 அடிகளில் உணர்த்தினர் . இவ்வர்ணப்பிரிவுகளையும் அவரவர்க்குரிய தொழில்களையும் கௌதமதர்மஸுத்திரம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன . ஆங்குப் பிராம்பணர்க்கு அறுதொழில்கள் கூறப்பட்டிருப்பினும் , எற்றலைத் தவிர்த்து ஏனைய வற்றை எல்லை கடந்து அவர் செய்யலாம் எனவும் , ஏற்றலை எவ்வளவு குறுக்கலாமோ அவ்வளவு குறுக்கவேண்டும் எனவும் வால்மீகிராமாயணமும் வ்யாஸமஹாபாரதமுங் கூறும் :

ஸ்வகர்மநிரதா : ஸம்யதா : ச ப்ரதி ரஹே ( பா . 6,13 )
பர்திரஹே ஸங்குசிதா ஆரஹஸ்யா: ( அச்வ . 102 , 81 )

ஓதல் ஓதுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கிப் பிராம்மணரைக் கவிஞர் தத்தம் நூல்களிற் பல்வகைச் சொற்களாற் குறித்தனர் : - நான்மறைமுனிவர் (புறநா . 6 ) , நான்மறை முதல்வர் ( புறநா . 26 ; 93 ) , நான்மறையாளர் ( ஆசரரக் . 53 ) , கேள்வி யுயர்ந்தோர் ( புறநா . 221 ) அருமறையந்தணர் ( சிறுபாண் . 204 ) , நான்மறையோர் ( பட்டினப் . 202) . அவற்றுடன் வேட்டல் வேட்டுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கி கேள்வி முற்றிய வேள்வியந்தணர் ( புறநா . 361 ) , வேள்வி முடித்த கேள்வி யந்தணர் ( பதிற் 64 ) என்ற சொற்களாற் குறித்தனர் . உண்மை யைக் கூறுக ( ஸத்யம் வடி ) என்ற மறைவிதி பிராம்மணர்க்கு நியமவிதியாதல்பற்றி மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் அவரைப் பொய்யறியா நன்மாந்தர் என்கின்றனர் . அவர் தர்மச்செயலிலே ஈடுபடுதல்பற்றி , பதிற்றுப்பத்தில்

அறம்புரி யந்தணர் ( 24 ) எனக் கூறப்படுகின்றார் . அவர்க்குள்ள அறுதொழில்களை நோக்கி அவரை அறுதொழிலோர் என்கின்றனர்

திருவள்ளுவனார் . ஆசறுகாட்சியவர் எனக் குறிஞ்சிப்பாட்டில் 17 - ஆம் அடியில் அவர் கூறப்படுகின்றனர் . அந்தணராய்ப் பிறத்தலே சிறந்தது என நான்மணிக்கடிகை 33 - ஆம் செய்யுளில் விளம்பி நாகனார் கூறினர் .

தோல்வேலை செய்பவன் இழிபிறப்பாளன் இழிசினன் எனப் புறநானூற்றில் 170 , 82 , 287 செய்யுட்களிற் கூறப்

பட்டான் . துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்தால் வரும் அந்நூலில் 335 - ஆம் செய்யுளிற் குறிக்கப்பட்டனர் .

ஒவ்வொரு வர்ணத்தாரும் தத்தமக்குரிய நிலையிலிருந்து தவறின் அவர் இழிந்தாராகக் கருதப்பட்டு அவரவர்க்குள்ள உரிமையைப் பெறவில்லை என்பதை

அன்னா ராயினு மிழிந்தோர்க் கில்லை ( மரபு . 85 ) என்ற சூத்திரத்தில் தொல்காப்பியனார் உணர்த்துகின்றார் .

ச்ரமங்கள் அல்லது நிலைகள் நான்கு வகைப்படும் ; அவை பிரும்மசாரிநிலை , ரூஹஸ்தநிலை , வானப்பிரஸ்தநிலை , ஸந்தியாஸிநிலை ஆகும் .

பிராம்பணப்பிரும்மசாரி குடுமி வைத்திருந்தான் எனக் கபிலர் ஐங்குறுநூற்றில் நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய ( 202 ) என்றவிடத்துக் கூறியுள்ளார் . அவன் ஒன்பது நூலால் ஆக்கிய மூன்று வடங்கொண் - பூணூலை அணிந்து நாற்பத்தெட்டு ஆண்டு

வேதாத்தியயநஞ் செய்தான் என நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில்

அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ ( 179 & 184 ) என்றவிடத்து உணர்த்தினர் . அவன் புரசதண்டத்தையும் தாழ்ந்த கமண்டலத்தையும் , விரதவுணவையுங் கொண்டனன்எனக் குறுந்தொகையுள் ஏனாதி நெடுங்கண்ணனார்

செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே ( 156 ) என்றவிடத்து விளம்பினர் .

பிரும்மசாரி வேதங் கற்றவுடன் கிருஹஸ்தாச்ரமத்தை அடைய விவாஹஞ் செய்துகொள்கிறான் . அவ்விவாஹம் எட்டு வகைப்படும் எனவும் , அவை பிராம்மம் , பிராஜாபத்யம் , ஆர்ஷம், தைவம் , காந்தர்வம் , ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் எனவும் கௌதமதர்மஸூத்ரம் ( 1, 4 , 4-11 ) முதலிய நூல்கள் கூறும் அவற்றுள் முன்னர் நான்கும் பெருந்திணைப்பாற்பட்டன ; காந்தர்வம் களவினை ஒத்தது ; ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் இம்மூன்றுங் கைக்கிளைப்பாற்பட்டன ; எனத் தொல்காப்பியனார் களவியல் 15 , 1 , 14 சூத்திரங்களிற் கூறினர் . விவாஹத்தில் மனைவியுடன் கணவன் அக்னியை வலம் வருதலை கலித்தொகையுள் மருதனிளநாகனார் ,

காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய
மாதர்கொண் மானோக்கின் மடந்தைதன் றுணையாக
ஓதுடை யந்தண னெரிவலஞ் செய்வான்போல் . (69) என்றவிடத்துக் கூறினர் .

ஒருவரை ஒருவர் ஏழடி பின்சென்றால் அவர் அவர்க்கு நண்பர் ஆவர் என்பதைப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் ,

காலி னேழடிப் பின் சென்று . ( 166 )
என்றவிடத்துக் குறித்தனர் . இதே கருத்தினை வேதவ்யாஸரும்
மஹாபாரதம் வனபர்வத்தில் ,
ஸதாம் ஸாப்தப்பம் மித்ரம் ஆஹு ; ஸந்த : குலோசிதா: என்றனர்
( 261 , 37 )

விவாஹத்தில் குழந்தைகளைப் பெற்ற சுமங்கலிகள் மணமகளை ஆசீர்வதித்தலை அகநானூற்றில் நல்லாவூர்கிழார் ,
புதல்வர் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழா அ நற்பல வுதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகுக . ( 86 ) என்றவிடத்து உணர்த்தினர் . இக்கருத்தினையே ,

ஸுமங்கலீ : இயம் வய : இமாம் ஸமேத பச்யத
ஸௌஜாடியம் அஸ்யை உத்வா பாயாஸ்தம் விபரேதா || என்று வைதிகமந்திரங் கொண்டது .

பெண்ணைத் தானஞ்செய்ய ஒருவரும் இல்லையேல் அவள் தானே தன்னைக் கணவற்குத் தானஞ் செய்து கொள்ளலாம் என்பதைத் தொல்காப்பியனார் ,

கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே. (கற்பு . 2 ) என்ற சூத்திரத்திற் கூறினர் . அக்கருத்தையே மஹாபாரதம் ஆதிபர்வத்தில் வ்யாஸர் ,

ஆத்மனோ வந்யு : ஆத்மைவ உதிராத்மைவ சாத்மன : |
ஆத்மனைவாத்பனோ உாநம் கர்த்துமர்ஹஸி யர்மத : || ( 94,13 ) என்றவிடத்துக் கூறுகின்றனர் .

மூவர்க்குரிய அக்னிஸாக்ஷிகமான கன்யகாதானம் வேளாளராலும் பின்னர்க் கொள்ளப்பட்டதெனத் தொல்காப்பியனார்

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமு முண்டே ( கற்பு . 3 ) என்ற சூத்திரத்திற் குறித்தனர் .

ருது காலத்திற் கணவன் மனைவியிடமிருந்து பிரிதல் தகாது என்பதைத் தொல்காப்பியனார்

பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுரையா ரென்மனார் புலவர் ( கற்பு . 46 )
என்றவிடத்துக் கூறினர் . இவ்வாறே திரிகடுகம் 17 - ஆம் செய்யுளுங் கூறும் .

8 தௌ

இக்கருத்தினையே கௌதமர் தனது தர்மஸுத்ரத்தில்

உபேயாத் ( 1-5-1 ) என்ற சூத்திரத்திற் கூறினர் .

அதனையே மனுதர்மசாஸ்திரமும்
இது : ஸ்வாவாவிக : ஸ்த்ரீணாம் ராத்ரய :
ஷோஃச ஸ்ம்ருதா :
சதுர்விரிதரை : ஸார்யம் அஹோஜி :
ஸவிமர்ஹிதை : || ( 113 , 46 ) என்றவிடத்துக் கூறும் .

கல்வியைக் குறித்து கணவன் மனைவியை விட்டுப் பிரிய நேரிடின் , அப்பிரிவு மூன்று ஆண்டுகட்கு மேற்படக்கூடாது எனத் தொல்காப்பியனார் கற்பியல் 47 - ஆம் சூத்திரத்தில் உணர்த்தியுள்ளார் . தேவதைகள் குறித்தும் , போர் குறித்தும், கணவன் பிரிதலும் உண்டு என்பதை அகத்திணையியலிற் கூறினர் .

கிருஹஸ்தர்க்கு மூன்று கடன்கள் உள என்பதை நல்லாத னார் திரிகடுகம் 34 - ஆஞ் செய்யுளிற் குறித்தனர் . அவை ருஷி கடனும் , தேவகடனும் , பிதிர் கடனும் ஆகும். ருஷிகடன் வேதாத்தியயநத்தாலும் , தேவகடன் தேவர்களைக் குறித்து

ஹோமஞ்செய்தலாலும் , பிதிர்கடன் ஆண்மகவைப் பெறுதலாலும் நீங்கும் என யஜுர்வேதத்துள்ள தைத்திரீயஸம்ஹிதை

ஜாயாநோ வை ப்ராம்ஹணோ த்ரிஷி : கணவா
ஜாயதே , ப்ரம்ஹசர்யேண ஷிய ) . , யஜ்ஞேரு
தேவேல .) : , ப்ரஜயா பி.துவ ) : ( 6 , 3 , 10 ) என்ற தொடர்கள் கூறுகின்றன .

தேவகடன் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளில்
அந்தி யந்தண ர்ருங்கட னிறுக்கும் என்றவிடத்தும் , நெய்தற்கலியில்

அந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து
செந்தீச் செவ்வழ றொடங்க ( 2 ) என்றவிடத்தும் , பெரும்பாணாற்றுப்படையில்

கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசைஇ ( 315-6 ) என்றவிடத்துங் குறிக்கப்பட்டது .

பிதிர்கடன் புறநானூற்று ஒன்பதாஞ் செய்யுளில்

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
என்றவிடத்துக் குறிக்கப்பட்டது . பிதிரர் தென்புறத்தில் வாழ்
கின்றனர் என்பதைத் தைத்திரீயஸம்ஹிதை

உ V ணா பிதர : ( 4 , 1 , 1 ) என்றவிடத்துக் கூறுகின்றது .
உ V ணஸ்யாம் சி சுவே ஸர்வே பித்ருமணா: ஸ்யிதா : ( அது. 238 , 44 ) என மஹாபாரதமுங் கூறும் .

வானப்பிரஸ்தர் நீண்ட சடையோடு உடலசையாது குன்றுகளில் தவஞ் செய்தனர் என நற்றிணையிற் சல்லியங்குமரனார்

நீடிய சடையோ டாடா மேனிக்
குன்றுறை தவசியர் ( 141 ) என்ற அடிகளிற் கூறினர் .

அவர் சடைவளர்த்தனர் என்பதை 280 - ஆம் குறளில் நீட்டலும் என்ற சொல்லாற் குறித்து , அருளுடைமை புலான் மறுத்தல் முதலிய குணங்களோடு வாய்ந்திருந்தனர் என்பதைக் கூறினர் திருவள்ளுவனார் .

ஸந்நியாஸத்தைத் தொல்காப்பியனார்

அருளொடு புணர்ந்த வகற்சி யானும் ( புறத். 17 ) என்றவிடத்துக் குறிக்கின்றனர் . ஸந்நியாஸிகள் காஷாயவஸ்தி ரத்தையும் முக்கோலையுங் கொண்டனர் என முல்லைப்பாட்டில் நப்பூதனார்

கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப ( 37-8) என்றவிடத்துக் கூறினர் .

ஸந்நியாஸிகளை இல்வாழ்வான் போற்றவேண்டும் எனத் திருக்குறள்
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை ( திருக் . 41 ) என்றவிடத்தும் , மஹாபாரதம்

ஏவம் மார்ஹஸ்யம் ஆச்ரித்ய வர்த்தந்தே
இதராச்ரமா : ( சாந் . 269 , 6 ) என்றவிடத்துங் கூறும் .

எந்நிலையிலிருப்பவனும் ஜீவன்முக்தியை அடையலாம். அதனைத் தொல்காப்பியனர் ,

காம நீத்த பாலி னானும் ( புறத் . 17 ) என்ற அடியிலும் , திருவள்ளுவனார் ,

ஆரா வியற்கை பவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும் ( 370) என்ற குறளிலும் , முடத்தாமக்கண்ணியார் ,
தவஞ்செய் மாக்க டம்முடம் பிடா அது
அதன்பய மெய்திய வளவை ( 91 , 2)

என்ற பொருநராற்றுப்படையடிகளிலும் , மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் ,

சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச் சீரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி
உயர் நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா வன்புடை நெஞ்சின்
பெரியோர் மேள யினிதி னுறையும்
குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் ( 463-474 ) என்றவிடத்தும் கூறியுள்ளனர் .

அக்கருத்தினையே கடோபநிஷத் ,
யா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய
ஹர ச்ரிதா : |
அய மர்த்யோ அம்ருதோ வைத்யத்ர ப்ரஹ் ஸமச்நுதே || ( 6 , 14 )
என்றவிடத்தும் ,

ப்ருஹதாரண்ய கோபநிஷத்
யோ அகாம் : ப்ரஹ்மைவ ஸந் ப்ரஹ்மாப் நோதி ( 4 , 46 )
என்றவிடத்தும் , மஹாபாரதம்

யோ ந காமயதே கிஞ்சிந்த கிஞ்சி உவமயதே !
இஹ லோகஸ்ய ஏவைஷ ப்ரஹ்மஸூயாய கல்பதே ||( அச்வமே . 47 ; 8 )
என்றவிடத்துங் கூறும் .



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

( 3 ) அக்னிஹோத்ரமும் யாகங்களும்

அந்தணர் காலை மாலை ஆகிய ஸந்திகளில் கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்னி என்ற முத்தீக்களில் தேவர் கடனைத் தீர்க்க அக்னிஹோத்ரஞ் செய்தனர் என்பது புறநானூறு , பட்டினப்பாலை , கலித்தொகை , குறிஞ்சிப்பாட்டு முதலிய நூல்களிற் கூறப்பட்டது .

அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே . ( புறநா . 2 )

நின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே . ( புறநா . 122 , 3 )

அமரர்ப் பேணிய மாவுதி யருத்தியும் .( புறநா . 99 ; பட்டினப் . 200 )

அந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து
செந்தீச் செவ்வழ றொடங்க . ( கலித் . 119 )
அந்தி யந்தண ரயர . ( குறிஞ்சிப் . 225 )

வேள்விகளால் தேவர்களும் கடவுள் முதலியோரும் இன்புறுத்தப்பட்டனர் எனப் பல்லிடங்களிற் பதிற்றுப்பத்து கூறும் :

வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( 70 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப . ( 74 )
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி . ( 21 )

அந்தணர் மந்திரவிதிப்படி அவற்றைச் செய்தனர் எனத் திருமுருகாற்றுப்படை , கலித்தொகை , சிறுபஞ்சமூலம் இவை கூறும் :

ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே . ( திருமு . 94-6)
கேள்வி யந்தணர் கடவும்
வேள்வி யாவியின் . (கலித் . 36 )
வேட்பவன் பார்ப்பான் . (சிறுபஞ்.)
வேள்விகளில் தூணங்கள் இருந்தன என்பதும் , அவை முற்றிலும் கயிறுபோல் திரித்த துணிகளால் மூடப்பட்டன என்பதும் பெரும்பாணாற்றுப்படை , அகநானூறு இவை கூறும் :

கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசை இ . (பெரும் . 315-6)

வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல . ( அகநா . 220 )

வேள்வித்தூணில் துணி கயிறுபோல் திரிக்கப்பட்டு முழுதும் கட்டப் பட்டிருப்பினும் , உத்காதாவின் இடுப்பு அத்தூணைத் தொடுவதற்காக ஆங்குச் சிறிது அது நீக்கப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது .. தூணைத் தொட்டுக்கொண்டு உத்காதா ஸாம

கானம் செய்ய வேண்டும் என்பது சுருதிவாக்யமாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் என்பது ஸ்மிருதிவாக்கிய மாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் நியதி இல்லை என்பது பிற்காலத்தாரது கொள்கை . பூர்வமீமாம்ஸையில் ஸ்மிருத்ய திகரணத்திற் காணலாம் . ஆமை வேள்விக் குண்டத்தின் கீழே குழியில் வைக்கப்படுகின்றதை அகநானூற்று 361 - ஆம் செய்யுளிற் கூறினர் எயினந்தை மகனார் இளங்கீரனார் :

பெரியோ ரார
அழலெழு தித்திய மடுத்த யாமை .
(தித்தியம் = வேள்விக்குண்டம் )
சயனத்தில் ஆமையை வேள்விக்குண்டத்தின்கீழ் வைத்தலை

யஜ்ஜீவந்தங் கூர்மம் உபடியாதி ( 5 , 2 , 45 ) என்னுமிடத்து தைத்திரீயஸம்ஹிதை கூறும் .

வேள்வித்தீயை மின்னலிற்கு உவமானமாகக் கார்நாற் பதிற் கூறினர் மதுரைக்கண்ணங்கூத்தனார் .
என
இதனைப்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீபோல
எச்சாரு மின்னு மழை . ( 7 )

சோழநாட்டிற் பூஞ்சாற்றூரில் இருந்த பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயனைப்பற்றி ஆவூர் மூலங்கிழாரும் , பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியைப்பற்றி நெட்டிமையாரும் , சோழவரசர்களுள் கரிகாற்பெருவளத்தானைப் பற்றிக் கருங்குழலாதனாரும் , இராஜசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப்பற்றி ஒளவையாரும் , நலங்கிள்ளியைப்பற்றிக் கோவூர் கிழாரும் , சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கபிலரும் , அவரவர் இயற்றிய வேள்விகளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறியிருத்தல் கவனித்தற்கு உரியது.

கௌணியன் : சிவபிரானிடம் தோன்றித் தருமத்தை அறிவித்ததும் நான்கு பகுதியையும் ஆறு அங்கங்களையும் உடையதும் ஆன வேதத்தைக் கற்று , அவைதிகசமயங்களைக் கண்டித்து , ஏழு பாகயஞ்ஞங்களையும் ஏழு ஹவிர்யஞ்ஞங்களையும்

ஸோ மஸம்ஸ்தையையும் குறைவின்றிச் செய்து விளங்கிய குலத்திற் கௌணியன் பிறந்தனன் . தானும் மனமொத்த மனைவி யுடன் வேள்விகளில் நீர் நாணுமாறு நெய்யை வழங்கி , எண்ணிக்கையற்ற வேள்விகளைச் செய்து விருந்தினரை உபசரித்தான் . ச்செய்தி புறநானூற்றில் 166 - ஆவது செய்யுளில் உள்ளது .

பாகயஞ்ஞங்கள் , ஹவிர்யஞ்ஞங்கள் , ஸோமஸம்ஸ்தைகள் இவற்றைப்பற்றி விரிவாய் , கௌதமதர் மஸூத்ரம் முதலிய நூல்கள் கூறும் .

முதுகுடுமிப்பெருவழுதி : நாலு வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் கூறியவாறுச் சிறப்பாக அவிப்பொருள்களைச் சேகரித்து , அவற்றை மிகுந்த நெய்யுடன் கலந்து தேவதைகட்கு அளிக்குமாறு பல வேள்விகளை முதுகுடுமிப்பெருவழுதி இயற்றினன் . தனது புகழைப் பரப்பிப் பல்லிடங்களில் வெற்றித் தூண்களை நாட்டினன் . இச்செய்தி புறநானூற்றில் 15 - ஆம் செய்யுளிற் கூறப்பட்டது. ஆங்கு வேள்விகளை முடித்தபின்னர் யூபம் நட்டான் எனக் கூறப்பட்டிருத்தலான் , யூபம் என்பது வெற்றித் தூணைக் குறிக்குமே அன்றி வேள்வித்தூணைக் குறிக்காது .

அச்சொல்லை அப்பொருளில் காளிதாஸன் ரகுவம்சத்தில் ஆறாம் ஸர்க்கத்தில் கார்த்தவீரியார்ஜுனனைப்பற்றி வர்ணிக்குமிடத்து , அஷ்டாதசத்வீபநிவாதயூப்: என்ற தொடரில் வழங்கியுள்ளார் .

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறும்பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் ( 759-863 )
என்ற அடிகளை நோக்கின் பெருவழுதி வேள்வியனைத்தையும் நிஷ்காமமாகச் செய்து ஆத்மோபதேசம் பெறுவதற்கு இன்றி யமையாததான சித்தசுத்தியைப் பெற்றான் எனக் கூறின் மிகையாகாது . அவர் இறுதியிற் பிறப்பிறப்பின்றி சேவடியை அடைகின்றனர் என்பதைப் பகவத்கீதை ,

கர்மஜம் புத்தியுக்தா ஹி வலம் த்யக்த்வா மநீஷிண :
ஜந்மவந்யவிநிர்முக்தா: படிம் மச் மந்த்யநாமயம் | ( 2,51 ) என்றவிடத்துக் கூறும்
கரிகாற்பெருவளத்தான் : தர்மத்தை ஐயமற உணர்ந்த அந்தணரைக்கொண்ட ஸபையில் வேள்விமுறைகளை நன்கு அறிந்த ருத்விக்குக்கள் செய்ய வேண்டியவற்றை நன்கு செய்து காட்ட , கற்புடை மனைவியருடன் வேள்விச்சாலையில் இருந்து கருடசயனம் செய்து புகழைப் பெற்றான் பெருவளத்தான் . இச்செய்தி புறநானூற்றில் 224 ஆம் செய்யுளில் உள்ளது .

பெருநற்கிள்ளி இராஜஸுயயாகம் செய்தான் என்பதும் , நலங்கிள்ளி பல வேள்விகளைச் செய்தான் என்பதும் புறநானூற்றில் 363 , 400 - ஆம் செய்யுட்களிலிருந்து அறியப்படுகின்றன .

செல்வக்கடுங்கோவாழியாதன் : வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களைக் கொண்டு வேள்வியில் கடவுளையும் தேவர்களையும் இன்புறச்செய்து , அந்தணர்கட்கு ஏராளமாய் அருங்கலங்களை இவ்வரசன் வழங்கினன் எனப் பதிற்றுப்பத்து 64 , 70 செய்யுட்கள் கூறும் .

பாண்டியர்கள் பாண்டவவமிசத்தினர் எனக் கருதப்பட்ட னர் . ஆகலினன்றே அவர் கவுரியர் , பஞ்சவர் என்ற சொற்களால் அகநானூறு புறநானூறு முதலிய நூல்களிற் குறிக்கப் படுகின்றனர் .
தவிரா வீகைக் கவுரியர் மருக ( புறநா . 3 )
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி ( அகநா . 70)
தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை ( அகநா. 342)
செருமாண் பஞ்சவ ரேறே ( புறநா . 58 )
கவுரியர் என்பது கௌரவ்ய : என்பதன் தற்பவம் சொற்குக் குருவமிசத்திற் பிறந்தவர் என்பது பொருள் . அக்காரணம்பற்றி அச்சொல் துரியோதனன் முதலியோரைக்குறிக்க வழங்கப்பட்ட துபோல் தர்மபுத்திரர் முதலியோரையுங் குறிக்க வழங்கப்பட்டது . மஹாபாரதம் சல்யபர்வத்தில் தர்மபுத்திரன்
குருபுங்கவன் எனவும் குரூணாம் வ்ருஷ : எனவுங் குறிக்கப் படுகின்றனன் .

தஸ்மிந் மஹேஷ்வாஸயரே விசஸ்தே
ஸங்க்ராமமயயெ குருபுங்மவேந | ( 16 , 85 )
ஜவாத மத்ராபதிம் மஹாத்மா
முகம் ச லேலே வ்ருஷ: குரூணாம் | ( 16 , 11 )

பஞ்சவர் என்பது பஞ்ச என்ற தற்சமத்திற்கு அர் விகுதி கூட்டி வந்தது . அப்பாண்டவர் ஐவர் எனவும் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளிற் கூறப்படுகின்றனர் .

சோழர் சிபியின் வமிசத்தினர் எனப் புறநானூற்று 39 ,43 - ஆம் செய்யுட்கள் கூறும் .
புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக . ( 39 )

கொடுஞ் சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக . ( 43 )

இந்திரன் பருந்துவடிவமாகவும் அக்னி புறாவடிவமாகவும் சிபியைக் சோதிக்க வந்தனர் எனவும் , அவன் துலாக் கோலில் ஏறினன் எனவும் மகாபாரதம் வனபர்வம் 132 , 133 அத்யாயங்கள் கூறும். இதனாற் பாண்டியரும் , சோழரும் க்ஷத்திரியர்கள் அறியக்கிடக்கின்றது . அதனாலேயே அவர் வேள்விகளில் ஈடுபட்டனர் எனக் கூறல் தகும் . என


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

( 4 ) இம்மையும் மறுமையும்

இவ்வுலகிலுள்ள பிராணிகள் எல்லாம் உயிரையும் உடலை

யுங் கொண்டன . உடலைச் சரீரம் என்பர் .




சரீரம் ஸ்தூல

சரீரம் ஸூக்ஷ்மசரீரம் என இருவகைப்படும் . உயிர் முக்தியை

அடையும் வரை , அதற்கு ஒரே ஸுக்ஷ்மசரீரமே உண்டு . ஸ்தூல

சரீரமோ, உயிர் இருக்கும் உலகத்திற்குத் தக்கவாறு மாறுபடும் .
ஆகலின் இவ்வுலகில் இருக்கும் எல்லாப்பிராணிகளின் உயிரும் ஒரு காலத்தில் ஸ்தூலசரீரத்தை விட்டு நீங்க நேரிடும் . ஆகலின்அவ்விரண்டற்கும் உள்ள ஸம்பந்தம் நிலைத்திராது . இக்கருத்தினை ,
வீயாது
உடம்பொடு நின்ற வுயரு மில்லை . ( புறநா . 363 , 8 )
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி ( பொருநர் . 176 ; பெரும்பாண். 466 ) முதலிய அடிகள் கூறும் .
ஒருகாலத்தில் உயிர் உடலைவிட்டு நீங்கும் என்பதை ,
யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினும் . ( அகநா . 52 , 13) என்ற அடிகள் உணர்த்தும் .

உயிரை உடலைவிட்டு நீங்குமாறு செய்பவனைக் கூற்றம், கூற்று என்ற சொற்களாற் குறித்தனர் :

உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன . ( மலைபடு . 209 )
உயிருண்ணுங் கூற்றுப் போன்றன . ( புறநா . 4 )
அவன் கடுஞ்சினத்தன் என்றும் , பக்ஷபாதமில்லாதவன் என்றும் ,
கால னனைய கடுஞ்சின முன்ப . ( பதிற் . 39 , 8)
திருந்துகோன் ஞமன் . ( பரிபா . 5 , 61 ) என்ற அடிகள் அறிவிக்கும் .

தீயாரைப் பாசத்தாற் கட்டி அவன் கொண்டுபோவான்எனவும் , அவனுடைய ஆயுதம் கணிச்சி எனவும்

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் . ( புறநா . 195) என்ற அடிகள் விளக்குகின்றன .

உடலை விட்டு நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல ஆண்மகன் ஈமச்சடங்கில் பிண்டம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும் . ஆண்மகன் இல்லையேல் மனைவியே பிண்டம் அளிப்பாள் :

நின் வெய்யோன் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென . ( புறநா . 222)

பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் . ( புறநா . 234 )

நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழ் பிண்டம் . ( புறநா . 246 )

இக்கருத்தையே ,
இச்அந்தி பிதர : புத்ராந் ஸ்வார்த்தறேதோர்வடோத்கச |
இஹ லோகாத் பரே லோகே தாரயிஷ்யந்தி யே ஹிதா : ||    (த்ரோண , 174 , 54 )
என்றவிடத்து மஹாபாரதம் கூறும் .

ஒருவர் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அனுபவிப்பர் என்பதை ,

இம்மைச் செய்தது மறுமைக் காம் . ( புறநா . 134 )
நல்லத னலனுந் தீயதன் றீமையும்
இல்லை யென்போர்க் கினனா கிலியர் . (புறநா . 29 )
தன்னொடு செல்வது வேண்டி னறஞ்செய்க . ( நான்மணி . 15 )  என்ற அடிகள் கூறுகின்றன .

நல்வினைப்பயனை ஸ்வர்க்கத்தில் அவர் அனுபவிப்பர் என்பதை ,

ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீ இயர்
உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன் . ( புறநா . 174 )

அறம்பெரி தாற்றி யதன் பயன் கொண்மார்
சிறந்தோ ருலகம் படருநர் போல . ( பரிபா . 19 )

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு . ( திருக் . 86 )  என்ற அடிகள் உணர்த்தும் .

தீவினைப்பயனை நரகத்தில் அனுபவிப்பர் என்பது ,

அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது . ( புறநா . 5 )
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிறையத்துச் செலீ இயரோ . ( குறுந் . 292 ) என்றவிடத்து உணர்த்தப் பட்டது .

இந்திரியங்களை அடக்காமை நரகத்திற் செலுத்திவிடும் என ,  அடங்காமை ஆரிரு ளுய்த்து விடும் . ( திருக் . 130 )   என்னுமிடத்து திருவள்ளுவர் கூறினர் .

பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என்பதை

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் .
அறவிலை வணிக னாயலன் . ( புறநா . 134 )

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே . ( புறநா . 182 )
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாள . ( அகநா . 54 )
பிறர்க்கென வாழ்திநீ . ( பதிற் . 38)
என்ற அடிகள் குறிக்கின்றன . இக்கருத்தினையே

தேந் க்யக்தேந் கஞ்ஜீயா :  என ஈசாவாஸ்யோபநிஷத்தும் ,
கர்மண்யே வாயிகாரஸ்தே மா மலேஷ கடிாசந என பகவத்கீதையுங் கூறும்  (2, 47)
கணவன் இறப்பின் , மனைவி உடன்கட்டையேறுதலும் உண்டு என்பது ,
பெண்டிரும்
பாச - கு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே . ( புறநா . 62 )

எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே . ( புறநா . 246 )என்ற அடிகளாற் குறிக்கப்பட்டது .

அவள் கைம்மைவிரதம் பூணுதலும் உண்டு என்பது ,
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் .(புறநா . 234 )  என்ற விடத்து உணர்த்தப்பட்டது .

போரில் இறந்த வீரர் ஸ்வர்க்கம் எய்தினர் என்பது

நீள்கழன் மறவர் செல்வழிச் செல்க . ( புறநா . 93 )  என்றவிடத்து குறிக்கப்பட்டது . இக்கருத்தினை ,

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்மம் . ( 2 , 37 )  என்ற பகவத்கீதையடி கூறும் .


ஸ்வர்க்கம் என்ற பொருளிற் பல சொற்கள் வழங்கப்பட்டுள்ளன : - தேவருலகம் ( புறநா . 228) , உயர்நிலையுலகம் ( புறநா . 287 ; பதிற் . 52, 54 ; மதுரைக் . 197 ) , மேலோருலகம் (புறநா . 229 ) , நாகம் ( புறநா . 367 ) , வச்சிரத்தடக்கை  நெடியோன் கோயில் ( புறநா . 241 ), பெரும்பெயருலகம் (( குறுந் . 83 ), புத்தேணாடு ( குறுந் . 101 ; முதுமொழி . 71 ) ,துறக்கம் ( அகநா . 143 , 233 ) , சிறந்தோருலகம் ( பரிபா . 19 ) ,

இமையோர்தேம் ( தொல் . பொருளியல் 52). இமையார் என்பது செய்யுளில் இமையோர் என மாற்றப்பட்டது எனக் கொள்ளல் தகும் . ஸ்வர்க்கத்திற்குத் தலைவன் இந்திரன் . அவன் புரந்தரன் ( பரிபா . 5 , 56) , வேள்விமுதல்வன் ( பரிபா . 5 , 31 ) , ஐயிறு நூற்றுமெய்ந்நயனத்தவன் ( பரிபா . 9 , 8 ; திருமுருகு . 155 ) முதலிய சொற்களாற் குறிக்கப்படுகின்றான் . அவன் நூறு வேள்விகளைச் செய்தனன் என நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து என்ற திருமுருகாற்றுப்படையடிகள் கூறும் .

இவனது குற்றத்தால் அகலிகை கவுதமரது சாபத்தால் கல்லுரு ஆனாள் என்பதை ,

இந்திரன் பூசை யிவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
வொன்றிய படியிது ( பரிபா . 19 , 50-52 )
என்ற அடிகள் உணர்த்துகின்றன . அகலிகை கல்லுருவானாள்

வால்மீகிராமாயணத்திற் கூறாவிடினும் , காளிதாஸன்  ரகுவம்சத்தில்

மளதமவய : சிலாமயீ ( 11 , 34 )  என்றவிடத்துக் கூறியுள்ளார் .

என அவன் தபஸ்விகளை அவமதித்தலாற் றுன்பம் எய்தினன் என்பது

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி ( திருக் . 25 )

என்ற குறளால் அறிவிக்கப்படுகின்றது . ஈண்டுக் குறிக்கப்பட்ட தபஸ்விகள் கௌதமர் , அகஸ்தியர் , ச்யவனர் , ஸம்வர்த்தர் ஆவர் என்பது வால்மீகிராமாயணம் வ்யாஸமஹாபாரதம் இவ்விரு நூல்களிலிருந்து அறியக்கிடக்கின்றது .


ஸ்வர்க்கத்திலுள்ளோர் தேவர் எனப்படுவர் . அவர்க்கு அமிழ்தமும் , பூமியில் மக்கள் இடும் அவியும் உணவு ஆகும் என்பதை ,

இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் ( புறநா . 182 )
அவியுணவினோர் புறங்காப்ப ( புறநா . 377 )
செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து (திருக் . 413 )   முதலிய அடிகளால் அறியப்படுகின்றது . 
அவர் அமரர்  ( பட்டினப் . 184 ; கலித் . 2 , 2 ) , புத்தேளிர் ( கலித் . 82 , 4) , 
உயர்ந்தோர் ( பதிஷ் . 74, 89 ), இமையார் ( அகநா . 136 ) முதலிய சொற்களாற் குறிக்கப்படுகின்றனர் .

முப்பத்து மூன்று தேவர்கள் எனப்பட்டவர் பன்னிரண்டு ஆதித்தியர்களும் , இரண்டு அச்வினர்களும் , எட்டு வஸுக்களும் பதினொன்று ருத்திரர்களும் ஆவர் என்பதை ஆசிரியனல்லந்துவனார் பரிபாடல் எட்டாம் பாடலிற் குறிக்கின்றனர் . இவரெல்லாம் மும்மூர்த்திகளுடனும் முருகனைக் காண வந்தனர் என்பதை ஆங்கே கூறுகின்றனர் .

தேவர்கட்குப் பகைவர் அவுணர் . அவருள் முப்புரத்தோனும் சூரபன்மாவுஞ் சிறந்தவர் ஆவர் . முப்புரத்தோனைச் சிவபிரான் அழித்ததாக , 

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல ( புறநா . 59 )

ஆதி யந்தண னறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை ஆரெயி லோரழ லம்பின் முளிய ( பரிபா . 5 ) -

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினை இ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கான் முகம்போல ( கலித் . பாலை . 1 )  என்ற அடிகளில் நன்கு வர்ணிக்கப்பட்டுளது .

சிவபிரான் ஒரே அம்பினால் மூவெயிலையும் அழித்தனர் என்பதை ,
ஏகவாணேந த தேவஸ் த்ரிபுரம் பரமேச்வர : |
நிஜவ்நே ஸாஸுரமணம் தேவதேவோ மஹேச்வர : || ( ம . பா . கர்ண . 27 , )
என்ற செய்யுள் கூறுகின்றது .

அப்போது பூமி தேராகவும் , வேதங்கள் குதிரையாகவும் ,  பிரும்மா தேர்ப்பாகனாகவும் இருந்தனர் என்பதை 
ஏவம் ருரஸ்ய க்தேவாந் ஸாரயம் து பிதாமஹ :  ( ம.பா. கர்ண . 27 , 42 )

தயைவ வேகாஸ் ஹயா ரயா யரா ஸசைலா
சாயோ மஹாத்மந: ( ம . பா . கர்ண . 27 , 8 )
என்ற அடிகள் கூறுகின்றன .

தேவர்கள் பிரும்மாவை முன்னிட்டுச் சிவபிரானிடஞ் சென்று முப்புரத்தை அழிக்கவேண்டினர் என்பதை,

44 சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்
தே சேவாஸ்தேக வாக்யேக சோதா:
ப்ரணத : ஸ்யிதா : |
ஷஹ்மாணம் அக்ரத : க்ருத்வா சரண்யம் சரணாமதா : ( ம.பா. கர்ண . 24 )

ஸத்கிருத்ய சங்கரம் ப்ராஹ ஸரஹ்மா
லோகபிதாமஹ: |
இமாந்யஸுர சர்மாணி லோகாம்ஸ்த்ரீந்
ஆக்ரமந்தி ஹி ( ம . பா . கர்ண . 25 )
என்ற அடிகள் அறிவிக்கின்றன .

சூரபன்மாவை முருகக்கடவுள் அழித்ததாக

அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்
சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு ( பதிற் . 11 )
சூர் நவை முருகன் ( புறநா . 23 )
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல் ( திருமுருகு . 46 )
சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்
சினமிகு முருகன் ( அகநா . 59 )
சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே ( பரிபா . 14 )  முதலிய அடிகள் கூறும் .

அவுணரது கூட்டம் சூரியனைக் கவர்ந்து சென்ற காரணத்தால் உலகெல்லாம் இருள , அவனை அவரிடமிருந்து திருமால் திரும்பிக்கொண்டுவந்ததாக ,

அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவர நீரக் கடுந்திறல்
அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்கு ( புறநா . 174 )  என்ற அடிகளிற் கூறப்பட்டது .

அவுணரையும் கடவுளே படைத்தனர் என
அவுணர்க்கு முதல்வனீ ( பரிபா . 3)  என்ற அடி கூறும் .

தேவர்களுள் பித்ருதேவர்கள் என்பவர் ஒரு வகையினர் . அவர் தெற்கு திசையில் உள்ளனர் . அவர்க்கு மக்கள் செய்ய வேண்டிய கடன் ஆண்மகவைப் பிறப்பித்தல் ஆகும் .


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard