New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-


Guru

Status: Offline
Posts: 24614
Date:
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
Permalink  
 


https://truetamilans.blogspot.com/2011/03/blog-post_29.html

------------------------------
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-


தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று –

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.


அரசு மாறியவுடன் இப்படியான விளம்பர யுக்திகள் ஜெயா டீவிக்கும், கேப்டன் டீவிக்கும் போகும்.. அதையும் இதே சந்தானம் சொல்ல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

நம் மக்களின் இந்தத்தேர்தல் மடமை
என்றும் அவர்க்கது பொதுவுடமை! என்றுதான் தீருமோ இந்தத் தீமை! அன்றுதான் களைவோம் நம் மனச் சுமை!



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
Permalink  
 


 

"போப் ஆண்டவருக்கு முன்னாடி நீங்க எல்லாம் கால் தூசி".. மோடி, அமித் ஷாவை கிழித்த ஆ. ராசா

Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 6 Sep 2023, 8:50 am
 
Subscribe
 

"நாங்க சனாதனத்தை ஒழித்ததால் தான் இன்று அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கிறார். நாங்க சனாதனத்தை ஒழித்ததால் தான் அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐஏஸ் ஆயிருக்காரு" என்று திமுக எம்.பி. ஆ. ராசா பேசினார்.

dmk mp a raja says modi amit shah are nothing in front of pope"போப் ஆண்டவருக்கு முன்னாடி நீங்க எல்லாம் கால் தூசி".. மோடி, அமித் ஷாவை கிழித்த ஆ. ராசா
சென்னை: போப் ஆண்டவருக்கு முன்னாடி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா எல்லாம் கால் தூசி என்று திமுக எம்.பி. ஆ. ராசா கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ஆ. ராசா ஆவேசம்:

​ஆ. ராசா ஆவேசம்:

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரித்து திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி. ஆ. ராசா நேற்று ஆவேசமாக உரையாற்றினார். அப்போது அவர் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை நேரடியாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது:

​அமித் ஷாவுக்கு சவால்:

​அமித் ஷாவுக்கு சவால்:

நான் அமித் ஷாவிடம் நேருக்கு நேராக கேட்கிறேன். பாஜகவில் எவ்வளவு பெரிய ஆளை வேண்டுமானாலும் இங்கு கூட்டி வாருங்கள். இல்லையா டெல்லியிலேயே வைத்துக் கொள்வோம். ஒரு சபை கூடட்டும். சனாதனத்தை பற்றி நீயும் பேசு, நானும் பேசுகிறேன். இதில் யார் பேசுவது சரி என்று இந்த தேசம் தீர்மானிக்கட்டும். நான் தயார்.. நீங்கள் தயாரா..? உதயநிதி சொன்னது இருக்கட்டும். இப்போது நான் சொல்கிறேன். சனாதனத்தை நாங்க அழித்த காரணத்தால் தான் அமித் ஷா இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார். இல்லைனா நீ வேற வேலை பாத்துட்டு இருந்துருப்ப.

​விலங்கை விட கொடியவர்கள்:

​விலங்கை விட கொடியவர்கள்:

படித்தவனின் அறிவு இந்த சமூகத்திற்கு எதிராக இருக்குமானால், அவன் விலங்கை விட கொடியவன் என அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். அம்பேத்கரே சொல்லிருக்காரு. நான் சொன்னா கோபப்படுவீங்க. அமித் ஷா அவர்களே, மோடி அவர்களே, தமிழிசை அவர்களே உங்கள் அறிவு இந்த சமூகத்திற்கு எதிராக போகக்கூடாது. அப்படி உங்க அறிவு, சமூகத்திற்கு எதிராக தான் போகும் என்றால் அம்பேத்கர் சொன்னதுதான் உங்களுக்கு பொருந்தும்.

​வெட்கமா இல்ல உங்களுக்கு?

​வெட்கமா இல்ல உங்களுக்கு?

நாங்க சனாதனத்தை அழித்ததால் தான் தமிழிசை இன்னைக்கு கவர்னர். இல்லைனா வேற வேலைக்கு போயிருக்கணும். நாங்க சனாதனத்தை அழித்ததால்தான் இன்னைக்கு வானதி சீனிவாசன் வக்கீல். நாங்க சனாதனத்தை அழித்ததால் தான் அண்ணாமலை இன்னைக்கு ஆடு மேய்க்காமல் ஐபிஎஸ் ஆயிருக்காரு. நாங்க ஒழிச்ச ஒரு விஷயத்தால் இன்னைக்கு பதவிகளில் அமர்ந்து கொண்டு சனாதனம், சனாதனம்னு கத்துறீங்களே.. வெக்கமா இல்ல உங்களுக்கு? நீங்கள் எல்லாம் படித்தவர்கள்தானே..

annamalai speech

annamalai speech

amit sha shout

amit sha shout

​மோடியை விட யோக்கியன்:

​மோடியை விட யோக்கியன்:

வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்திட்டான், கொடுமைப்படுத்திட்டான்னு இவங்க சொல்றாங்க. நான் சொல்கிறேன். இந்த திறந்தவெளியில் வைத்து சொல்கிறேன். முடிஞ்சா என் மேலே கேஸ் போடு.. மோடியை விட, அமித் ஷாவை விட, பாஜகவில் உள்ள அமைச்சர்களை விட வெள்ளைக்காரன் நாணயமானவன். யோக்கியன். ஏன் சொல்றேனு கேளுங்க. ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் டயர் என்ற வெள்ளைக்காரன், சுதந்திரத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கானோரை ஒரு மைதானத்தில் வைத்து சுட்டுத் தள்ளினான்.

​மன்னிப்பு கேட்ட வெள்ளைக்காரன்:

​மன்னிப்பு கேட்ட வெள்ளைக்காரன்:

இந்தியாவில் நடந்த மிகப்பெரிய படுகொலை அதுதான். இது நடந்தது 1919-ம் வருடம். அதற்கு பிறகு கிட்டத்தட்ட 100 வருஷம் கழிச்சு 2013-இல் பிரிட்டன் பிரதமர் இந்தியாவுக்கு வருகிறார். ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது, எங்களை மன்னித்துவிடுங்கள் நாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். நூறு வருஷம் ஆயிருச்சு. ஆனாலும், தன் இனம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிற மனம் வெள்ளைக்காரனிடம் இருந்தது.

​மன்னிப்பு கேட்ட போப்: ​

​மன்னிப்பு கேட்ட போப்: ​

இன்னொரு சம்பவத்தை சொல்லுகிறேன். ஒருகாலத்துல இந்த பூமியை தான் சூரியன் சுற்றி வந்துச்சுனு நம்பிட்டு இருந்தாங்க. பைபிளையும் அப்படித்தான் சொல்லப்பட்டு இருந்தது. அப்போது புருனோ என்ற விஞ்ஞானி, "இல்ல நீங்க சொல்றது தப்பு. சூரியனைதான் பூமி சுத்தி வருதுனு சொன்னான். அவனை அன்றைக்கு அடித்து இழுத்துட்டு போயி ஒரு தேவாலயத்துல வெச்சு உயிரோட எரிச்சு கொன்னாங்க. 600 ஆண்டுகளுக்கு பிறகு போப் ஆண்டவர், புருனோவை எந்த இடத்தில் எரித்தார்களோ, அங்கே சென்று சிலுவையை ஏந்தி உங்களுக்கு இப்படி நடந்தது தவறுதான் என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.

​மணிப்பூர் சம்பவம்:

​மணிப்பூர் சம்பவம்:


100 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததற்கு வெள்ளைக்காரன் மன்னிப்பு கேட்கிறான். 600 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததற்கு போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், 200 பேரை கொன்னுட்டு ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நிர்வாணமாக்கி, தொடக்கூடாத இடத்தில் கை வைத்து ஊர்வலமாக நடத்திச் சென்ற சம்பவத்தை நியாயப்படுத்தும் முதலமைச்சர் மணிப்பூரில் இருக்கிறார்.

​நீங்க எல்லாம் கால்தூசி:

​நீங்க எல்லாம் கால்தூசி:

ஒரு மிருகத்தனமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிற மாநிலத்தின் முதலமைச்சரை அமித் ஷா நாடாளுமன்றத்தில் பாராட்டுகிறார், மோடி பாரட்டுகிறார். மனிதனுக்கு தவறிழைத்து விட்டோமே என வருந்தி பல ஆண்டுகள் கடந்த பிறகும் வந்து மன்னிப்பு கேட்ட வெள்ளைக்காரனா இருக்கட்டும், போப் ஆண்டவரா இருக்கட்டும். அவங்க முன்னாடி நீங்க எல்லாம் கால் தூசி. இவ்வாறு ஆ. ராசா பேசினார்.

ஜே. ஜாக்சன் சிங் கட்டுரையாளரை பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
ஜே. ஜாக்சன் சிங்டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard