திருவஞ்சிக் களம் தலைநகராகக் (கொடுங்கல்லூர்) கொண்டு வாழ்ந்த சேரமான் பெருமாள் கேரள வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
1.கிறிஸ்துவர் 19ம் நூற்றாண்டில் பரப்பிய கதை, கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பலில் தோமா வந்து இறங்கி மதமாற்ற வர்த்தகம் செய்தார் எனும் கதை; 2.முகம்மதியர்கள் சேரமான் பெருமாள் என்ற ராஜா மதம் மாறி கொடுங்கல்லூரில் மசூதி கட்டினார் எனும் கதை ; 3. சங்க இலக்கியம் கூறும் முசிறி துறைமுகம்- கொடுங்கல்லூர் எனப் பரப்பிய கதையை வளர்க்க கிறிஸ்துவர் கீழ்த்தரமான தொல்லியல் பட்டணம் அகழாய்வு எனும் கூத்து.
ASI இந்திய தொல்லியல் துறை இரண்டு முறை மிகவும் பரந்த அளவில் செய்த அகழாய்வு முடிவுகள் முக்கியமானவை. தரவுகளோடு ஆராய்வோம்.
மார்ட்டிமர் வீலரோடு பணியாற்றிய அனு ஜான் அச்சன் நடத்திய அகழாய்வில் 14ம் நுற்றாண்டிற்கு முன்பான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என மிகத் தெளிவாக பேராசிரியர் கே.வி.ராமன் தன் "தொல்லியல் ஆய்வுகள்" நூலில் காட்டி உள்ளார்.
கொடுங்கல்லூர் இந்திய தொல்லியல் துறை(ASI Excavations1969-70)
கேரளா சர்ச்கள் மிகத் தீவீரமாக தோமா கிரங்கனூர் எனும் கொடுங்கல்லூர் துறைமுகத்தில் தான் வந்து இறங்கினார் என19ம் நூற்றாண்டு ரம்பன் பாட்டை நம்பிட- மீது மிகப் பெரும் அழுத்தம் தந்து - ஓரு மிகப் பெரிய அகழாய்வு நடந்தது, இதற்கு கோழிக்கோடு பல்கலைக் கழகம் சார்பாக பேராசிரியர். M.G.S.நாராயணன் பங்கேற்றார். ASI சார்ந்த ஆய்வை பேராசிரியர். சௌந்தரராஜன் & பேராசிரியர் கே.வி.ராமன் நடத்தினர்.
ASI இந்திய தொல்லியல் துறை மிகத் தீவிரமாக இந்த பகுதி முழுவதும் சல்லடையாக சலித்து சர்வே செய்து பிறகு அகழாய்வில் முடிவு- இந்தப் பகுதி முழுவதும் கடலுக்கு அடியில் இருந்து, மனிதக் குடியேறியதே பொஆ. 9ம் நூற்றாண்டில் தான் .
குலசேகர பெருமாள்- குலசேகர ஆழ்வார் கட்டிய கண்ணன் கோயில்