New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளு;ளுவர் கண்ட நலம் நாடரசு திருமதி. ப. நாகபூஷணம்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
திருவள்ளு;ளுவர் கண்ட நலம் நாடரசு திருமதி. ப. நாகபூஷணம்
Permalink  
 


திருவள்ளுவர் கண்ட நலம் நாடரசு திருமதி. ப. நாகபூஷணம்
நலம் நாடரசு (றுநடகயசந ளவயவந) :
“நாடுஎன்ப்ப நாடா வளத்த்தன@ நாடுஅல்ல்ல
நாட வளம்த்தரும ; நாடு”1 (திருக்கு;குறள் 739)
திருவள்ளுவர் கண்ட நலம் நாடரசு, மக்களின் நலம் நாடும் அரசு, எவ்வாறு அமைய வேண்டும்என்றால் யாரும் எதையும் ஓடி ஓடித் தேடித் தேடி நாடி அலையாமல் எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய வளம்மிக்கதாய் அமைவதே “நாடு” என்று குறித்துக் கூறக் தக்கதாகும். ஓடி ஓடி அடிப்படைத் தேவைகளையும் நாடி நாடி அலைந்து திரிந்து ஓய்ந்துபோகச் செய்வது, நாடிச் சென்று தேடிக் கண்டு அறியும் வகையில் இருப்பது நாடே அல்ல என்று இலக்கணம் எழுதுகின்றார்.
தமிழின் தவப்பயன் திருவள்ளுவர் வகுத்தளித்த வாழ்விலக்கணம் திருக்குறள். இதில் இல்லாதது எதுவும் இல்லை என்றே கூறலாம். வாழ்வை அனைத்துக் கோணங்களிலும் நுணகி ஆய்ந்து ஒணுகும் முறை ஒதற்கு எளிது, இன்றுவரையும் உணர்தற்கு அரிது என்றமைந்தது. அறிவியல் வளர்ச்சி இன்றவு பல்கிப் பெருகாத காலகட்டத்திலேயே உலகியலைக் கருத்தில் கொண்டு காலம், இடம், மதம், இனம், மொழி எனும் எல்லைக் கோடுகளுக்கு அப்பாற்பட்டு காலத்தை வென்று இன்றளவும் நின்று நிலவுவது, வாழ்க்கைக்கு என்றென்றும் வழிகாட்டி ஒளியூட்டும் நந்தாவிளக்காகத் திகழ்வது திருக்குறள்.
இலக்கியத்தின் அமைப்பையொட்டி அதன்காலத்தை வரையறுப்பது ஒருவகை. அந்தவகையில் ஈரடியில் கூட இல்லை ஒன்றே முக்காலத்தில் ஏழு சீர்களில் ஏற்றமிகு கருத்துக்களைப் பொதிந்து வைத்துப் போந்தார் வள்ளுவப் பெருந்தகை. இந்த கால கட்டத்தில் ஏறத்தாழ உலக அரங்கில் வெளிப்போந்த இலக்கிய உத்தி கண்டால் ஈரடி.
(ஊழரடநவள) வடிவிலேயே இருக்கக் காணலாம். எடுத்துக்காட்டாக சமகாலப் புலவர்களாகக் கருதக்கூடிய வேமணர் தெலுங்கு மொழியிலும் சர்வக்ஞ (சர்வ ஞானம் படைத்தவர்) கன்னடத்திலும் ஈரடியில் ஆழ்ந்த வாழ்வியல் கருத்துக்களைப் பொதிந்து வைத்துப் போந்தனர் என்பர். என்றாலும் அவர்கள் வாழ்வின் ஏதோ ஒரு சில பகுதியை மட்டுமே தொட்டுக் காட்டிச் சென்றனர் எனலாம். வள்ளுவர் போல் வானமளந்ததனைத்தும் உலகியல் வாழ்வின் உன்னதங்கள் அனைத்தும் உள்ளடக்கியவை அல்ல என்றே கூறலாம்.
உலகின் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து மொழிபெயர்க்கப் பெற்று வரும் ஒரே இலக்கியம் எனும் சிறப்பிற்குரியது திருக்குறள் என்பர் ஆய்வாளர். உலகெங்கும் தங்கள் மதத்தைப் பரப்பிய கிருத்தவர்கள் வேத நூலுக்கு அடுத்தபடி உலகமொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது திருக்குறள். என்றாலும் உலகின் ஒப்பற்ற அறிஞர்கள் பெயர் வரிசையில் திருவள்ளுவர் பெயர் இடம்பெறவில்லையே என்று குறிப்பிடுவோரும் உளர்.
உலகில் தலைசிறந்தவர்கள் எனும் வரிசைப்படுத்துதல் வள்ளுவர் காலத்திற்குப் பன்னெடுங்காலம் பிறகு வந்த ஒரு நிலை. அதில் இடம்பெற்றவர்களும் தங்களுக்கென்று நேரடி மாணவர்கள், சீடர்கள், தங்களைத் தாங்கள் வாழும் நாளிலேயே பின்பற்றுவோரைக் கொண்டிருந்தனர். அவருள் பெரும்பாலானோர் பெயரால் பிறகு மதங்களும் உருவாயின.
அத்தகைய நேரடி சீடர்களைக் கொண்டிருக்காமல், எந்த மதத்தையும் உருவாக்காமல் உருவாகக் காரணமாகவும் இல்லாமல்,
“பழிதத்த் லும ; நடீடீ ;ட்டலும் வேண்ட்டா@ உலகம ;
பழித்த்தது ஒழிந்து;து விடின”; . (திருக்கு;குறள் 280)
என்றவர் வள்ளுவர்
இன்றுபோல் அன்று தொலைதொடர்புச் சாதனங்கள், கணினி, நினைத்த மாத்திரத்தில் நெடுந்தொலைவை எட்டக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி என்று ஏதுமில்லா காலகட்டத்தில் இயற்றிய குறட்பா என்றென்றும் நின்று நிலவுகிறதென்றால் வேறு என்ன வரிசைப்படுத்துதல், சிறப்புசெய்வித்தல் வேண்டும்? மகாத்மாகாந்தியடிகள் சாதனைக்கு நோபல் அமைதிப் பரிசு பரிந்துரை செய்யப்பட்டும் சிலர் தடைசெய்ததால் கிடைக்கவில்லை. அதனால் இழப்பு நோபல் பரிசுக்கேயன்றி அண்ணல் காந்திக்கு இல்லை. மகாத்மா என்று ஒருமனதாக எல்லோரும் ஏற்குமளவு பெற்ற பெரும் பேற்றிற்கு முன் மற்றவை ஏதுமில்லை. பொதுமறை உலகளாவிய உண்மைகள் பொதிந்த உயர்வுடைய ஒப்பற்ற இலக்கியம், உயர்வான வாழ்வுக்கு வழிவகுத்த வாழ்விலக்கணம் “அணுவை துளைத்தேள் ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்” என்பதற்குமேல் வேறு என்ன ஏற்றங்கள் இருக்க முடியும்? என்றாலும் இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ஆர்வலர்கள் முயன்றால், உலகளவில் உள்ள தமிழறிஞர்கள் ஒருகினைந்து முயன்றால், ஒருசிலருக்குத் தோன்றும் இந்த மனக்குரையும் அகற்றப் பெறலாம்.
இத்தகைய வான்புகழ் வள்ளுவர் வரையறுத்துக் காட்டிய நலம் நாடரசைக் குறித்துக் காண்பதற்கு முன்னால் நலம் நாடரசு என்ற கோட்பாடு எதைக்குறிக்கிறது என்பதையும் அண்மைக் காலத்தில் உருவான இக்கோட்பாடு அடைய முன் வைத்துள்ள குறிக்கோளையும் அறிவது தேவையாகிறது.
ஒவ்வொரு நாடும் தம்நாட்டு மக்கள் எல்லோரும் அடிப்படைத் தேவைகள் அமைத்தையும் பெற வேண:டும். அதற்கு ஆவன யாவும் அரசு ஏற்றுச் செய்ய வேண்டும்.
தனிமனித உரிமை, சமுதாயச் சமநீதி, பொருளாதாரத் தன்னிறைவு, ஏற்றத்தாழ்வுகளற்ற மனிதவளமேம்பாடு இவற்றை முன்னிருத்தியே தனிநாடுகளும், உலக நாடுகள் அவையும், அவைசார்ந்த பிற அமைப்புகளும் இன்று பல்வேறுவகையில் சட்டதிட்டங்கள் தீட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வழிவகை செய்கின்றன. இந்த அடிப்படையிலானது தான் மகா அட்டவணை ஆயபயெ ஊயசவய என இங்கிலாந்திலும் விடுதலை முழக்கமாக (னுநஉடயசயவழைn ழக
ஐனெநிநனெநnஉந) அமெரிக்காவிலும் கொண்டுவரப் பெற்றன. இதே முறையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் அடிப்படை உரிமை பகுதியும் அரசு நெறிசெய் சட்டப்பகுதியும் ஐஐஐ மற்றும் ஐஏஆம் பகுதிகளாக இடம்பெறக் காணலாம். இந்த இருபகுதிகளும் தன்னுரிமை பெற்ற நாட்டின் தனிமனித அடிப்படை உரிமைகள் காக்கப்பெறுதல், சமுதாயச் சமநீதி, பொருள் ஆதார ஏற்றத் தாழ்வகற்றல், இவற்றை அடையச் செய்ய இன்றியமையாத கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு வகைசெய்தல் ஆகிய இவற்றை இலக்காகக் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளன.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் பணியில் ஈடுபட்ட நிலை. அதில் சட்டமியற்றும் குழுவிற்குத் தலைமை யேற்று இருந்தவர் சட்ட வல்லுநர் டாக்டர் அம்பேத்கர். அந்த அவையில் அவர் விளக்கியவை நலம் நாடரசின் நோக்கங்களை முன் வைக்கின்றன.2
1. அரசியலில் தற்சார்பு வகுப்பது.
2. “நம்முடைய நோக்கம் பொருளாதார சுதந்திரத்தை அடைய வழிவகுப்பது.
எத்தனைய அரசு அதிகாரப் பொறுப்பு ஏற்றாலும் பொருளாதார சுதந்திரம் அடைவதை நோக்கமாகக் கொண்டே செயல்படவேண்டும்”3 என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
இந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 38 ஆவது பிரிவு. நலம் நாடரசு (றுநடகயசந ளுவயவந) என்பதற்கான குறிப்பு இடம் பெறும் பிரிவு இதுவே. நாடு என்பது மக்களுடைய சமுதாய அமைப்பில் பாதுகாப்பு நல்லமுறையில் செயல்படச் செய்ய வேண்டும். சமநீதி காக்கும் சமுதாய அமைப்பு வேண்டும். சமநீதி அமைய வேண்டும். கூடுமான வரையில் கல்வி, பணிபுரியும் வாய்ப்பு, இணையான வேலைக்கச் சமமான ஊதியம் ஆகிய இவற்றிற்கு வழி வகை செய்ய வேண்டும். தனிமனிதரிடையேயும் சமுதாய அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் அகற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.4
மேற்கண்டவற்றை அனைத்து மக்களிடமும் உருவாக்கி வளர்த்து தனிமனித மாண்பு மற்றும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு உறுதியளித்தல் ஆகிய இவற்றிற்கான நோக்கமே ஒரு நாட்டு அரசியல் அமைப்பின் குறிக்கோளாகும்.5
ஐ) நதீதீ p (துரளவiஉந)
நீதி எனும் போது சமுதாய, பொருளாதார, அரசியல் அளவிலான நீதி என்றே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நூன்முகத்தில் காணக் கிடைக்கின்றது. பிற நாட்டு அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் இதற்கிணையான கருத்துக்கள் அமைந்திருக்கக் காணலாம்.6
சமுதாய அமைப்பிலே ஏற்றத்தாழ்வகற்ற, பொருளாதார அளவிலும் அரசியல் அமைப்பிலும் யாரும் யாருக்கும் அடிமையல்லர் என்பதைப் பாட்டுக் கொருபுலவர் பாரதி “ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை” என்று முழக்கமிட்டார். பொருள் வசதி பெற்றோர் பொருள்வளம் குன்றியவரை அவர்தம் ஏழ்மையைப்பயன்படுத்தி அடிமைப் படுத்துதல், கட்டாயமாகப் பணிபுரியச் செய்தல், வேலைக்குரிய ஊதியம் மறுத்து ஒருதலைப்பட்சமான உடன் படிக்கை மேற்கொள்ளல், அடிமைச்சந்தையில் குழந்தைகள், மகளிர் முதலானவரை விற்றல், ஒருவர் விருப்புக்கு மாறாகக் கட்டாயமாகக் கட்டுப்படுத்திப் பணிபுரிய வைத்தல், பணியாற்றுதற்குரிய ஆரோக்கியமான சூழ்நிலை மறுத்தல் ஆகியவற்றை அடியோடு அகற்றவே இன்று அனைத்து நாடுகளும், நூற்றுக்கணக்கான நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் அவையும் அயராது பாடுபட்டு வருகின்றன.
ஏற்றத் தாழ்வற்ற சமநீதிச் சமுதாயம் சமைக்க வேண்டுவன :
1. சமுதாயச் சமநதீதீ p :
மதம், இனம், குலம், பால், பிறந்த இடம் ஆகிய எவற்றின் அடிப்படையிலும் எத்தகைய ஏற்றத்தாழ்வும் காண்பது கூடாது.7 இந்தக் கருத்தை வலியுறுத்த அரசியல் அமைப்புச் சட்டங்கள், நாட்டிடைச் சட்டம் ஆகியவை பலவாறு வகை செய்கின்றன.8 இவை அத்தனையும் இவற்றிற்கு மேலும் வள்ளுவரின் எழு சீரில் அடங்கக் காணலாம்.
“பிறப்n;பொக்கு;கும் எல்ல்லா உயிர்க்கு;கும் சிறப்n;பொவ்வ்வா
செய்n;தொழில் வேற்று;றுமை யான”; (திருக்கு;குறள் 972)
பிறப்பால் எல்லோரும் சமமானவர்களே. பிறகு ஏற்றத்தாழ்வு எவ்வாறு நேர்ந்தது என்றால், சிறப்பு நிலை வாய்ப்பது அவரவர் செயல் திறனால் மட்டுமே.
வேற்றுமை பாராட்டும் நிலையைச் சாடி பல ஆண்டுகள் பின்னர் மனோன்மணீயம் எனும் தலைசிறந்த நாடக நூல் இயற்றிய சுந்தரம் பிள்ளையவர்கள் தம் நூலில் வள்ளுவர் கருத்தை எதிரொலிக்கக் காணலாம்.
“வள்ளு;ளுவர் செய் திருக்கு;குறளை மருவற நன்கு;குணர்ந்N;தோர்கள்
உள்ளு;ளுவரோ மனுவாதி ஒருகுலத்த்திற் கொருநதீதீ p.”
குலத்தின் பெயரால் ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு நீதி வழங்கும் மனுநீதி.
பிறப்பால் வேற்றுமை இல்லை எனும் திருக்குறளை ஐயமற உணர்ந்தவர்கள் மனு முதலான குலத்தினடிப் படையிலான நூல்களை நினைத்தும் பாரார் என்று வள்ளுவர் கருத்தாழமிக்க சமுதாயச் சமநீதியை மனோன்மணீயம் ஆசிரியர் வலியுறுத்துகின்றார்.
2. பொருளாதராச் சமநதீதீ p :
பொருளாதாரச் சமநீதி காண நாடுகள் பின்பற்ற வேண்டிய கோட்டுபாடுகளில் சில உள.
அ. ஆண், பெண் ஆகிய இருபாலரும் மழலை முதல் முதியோர் வரை வாழ்வதற்குத் தேவையான உரிமை பெற்றிருத்தல் வேண்டும்.
ஆ. பொது நன்மையை உறுதி செய்யும் வண்ணம் பொருள் வளம், உடைமை ஆகியவற்றின் சமச்சீரான விநியோகமும் (உச்சவரம்பு) கட்டுப்பாடும் இருத்தல் வேண்டும்.
இ. பொருள் குவிப்பும், உற்பத்தித் திறனும் பொது நன்மைக்கு ஊறு
விளைவிக்கும் வகையில் முடக்கப்படுதல் கூடாது.
ஈ. சமமான வேலைக்குச் சமமான ஊதியம் வழங்கல் வேண்டும்.
உ. ஆண், பெண், சிறார் தம் உடல் நலம், உடலுறுதி ஆகியவை காக்கப்பெறல்
வேண்டும். பொருளதாரத் தேவையை முன்னிட்டுத் தங்கள் வயது, உடல் நலம் இவற்றிற்கு மீறிய பணிகளை மேற்கொள்ளும்படி யாரும் எவரையும் வற்புறுத்தக்கூடாது.9
இவற்றிற்கு இணையான கருத்துக்கள் கொண்ட குறட்பாக்களை நாடுவோருக்கு இவற்றைக் காட்டிலும் பன்மடங்கு மேலான கருத்துக்கள் பொதிந்த பாக்களே காணக்கிடைக்கும். அரசு இயற்றும் சட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதியேயாகும்.
அரசினை உருவாக்குவதும், அவ்வாறு தாங்கள் உருவாக்கிய அரசு தங்கள் நலனுக்காகச் சட்டமியற்றிச் செயல்படுத்தும் அதிகாரம் தருவதும் மக்களேயாவர். அந்த மக்களே தங்கள் உரிமை காத்து கடமையாற்றுவாராயின் சட்ட திட்டங்கள் தேவைப்படாதல்லவா? பொருட்குவித்துத் தானும் துய்க்காமல் பிறர்க்கும் கொடாமல் புதையல் காத்த பூதமாய் இருப்போனை,
“வைத்த்தான்வ்வாய் சான்ற்ற பெருமn;n; பாருள் அஃதுஉண்ண்ணான ;
செத்த்தான் செயக்க்கிடந்த்தது இல்.;.” (திருக்கு;குறள் 1001) என்கிறார் வள்ளுவர்
இத்தகையயோர் கையில் செல்வம் சேர்வது எதற்கு இணையானது என்றால்,
“நச்ச்சப் படாதவன் செல்வ்வம் நடுஊருள்
நச்சு;சு மரம்ப்பழுத ; தற்று;று” (திருக்கு;குறள் 1008)விரும்பத்தகாதவன் கையில் பொருள் குவிவது நட்ட நடு ஊரில் நஞ்சுத்தன்மை வாய்ந்த மரம் பழுப்பதற்கு நிகரானது. அறியாமல் அணுகுவோர்க்கு ஆபத்தை விளைவிக்கக்
கூடியது. அதோடு மட்டுமல்ல, பாத்திரத்தின் தூய்மைக் கேட்டால் நல்ல பால் திரிந்து பயனற்றுப் போவது போன்றே நற்பண்பிலாதவனிடம் செல்வம் சேர்வது என்கிறார்.
“பண்பு;புஇலான் பெற்ற்ற பெருஞ்n;செல்வ்வம் நன்ப்பால்
கலம்த்தiPiP ம யால்த்திரிந் தற்று;று.” (திருக்கு;குறள் 1000)
இவை மட்டுமல்ல,
“அளவளாவு இல்ல்லாதான் வாழ்க்i;கை குளவளாக்
கோடுஇன்ற்றி நர்Pர்P நிறைந் தற்று;று.” (திருக்கு;குறள் 523)
கரையில்லாத ஏரியில் நீர் நிறைந்தால் தேங்கி நின்று உரியவாறு பயனளிக்காது வீணாதல் போன்றே பயன்துய்த்துக் குலவி மகிழ உற்றார் இல்லாதவனுடைய வாழ்க்கையும் என்கிறார்.
பிறகு எப்போதுதான் செல்வம் பயன் அளிக்கும்?
“அறன்ஈ;ஈனும் இன்ப்பமும் ஈனும் திறன்அ;அறிந்து;து
ததுPதுP இன்ற்றி வந்த்த பொருள்.;.” (திருக்கு;குறள் 754)
அண்ணல் காந்தியடிகள் கூற்றுப்படி முடிபு நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. அதை அடையத் தேர்ந்தெடுக்கும் வழிவும் நல்லதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அச்சமின்றி பிறர் மெச்சும்படி வாழமுடியும். எனவே தீமையற்ற நல்வழியில் ஈட்டிய பொருளே அறம், இன்பம் ஆகியவற்றைத் தரவல்லது எனும் வள்ளுவர் வாக்கு என்றென்றும் ஏற்புடைய சத்தியவாக்கு.
சட்ட திட்டங்கள் எல்லாம் தனிமனிதர் நலம், சமுதாயம், நாடு ஆகியவற்றைக் காக்கவென்று இயற்றப் பெற்றவையே. இவை சமுதாயத்திற்காக சமுதாயத்தில் இருந்து உருவானவையே. அந்தச் சமுதாயமும் அதன் அங்கத்தினரும் தங்கள் கடமை உணர்ந்து, உரிமை காத்து, பிறர் உரிமையை மதித்து நடப்பர் என்றால் சட்ட திட்டங்களுக்கே அங்கு வேலை இருக்காது. சமுதாயச் சமநீதிக்கும் இது பொருந்தும். அந்த வகையில் இன்று பல அறிஞர்கள் அரிதில் முயன்று கண்ட வழிவகைகள் உருவாக்கிய சட்டதிட்டங்கள் அத்தனையும் யாரால் செயலாக்கம் பெருகின்றதென்றால் வசதியும் வாய்ப்பும் பெற்றிருந்து வருந்துவோர்க்கு உதவும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களாலேயே என்பது கண்கூடு.
எடுத்துக்காட்டாக உலகின் ஏதோ ஓரிடத்தில் நேரக்கூடிய விபத்துக்கள், இயற்கைச்சீற்றம் ஆகியவற்றால் உரியவற்றை இழந்து உற்றார், பெற்றோர், பிள்ளைகள் என பலரையும் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு பேர் ஊர் தெரியாத எத்தனையோ பேர் உதவிக்கரம் நீட்டக் காண்கிறோம். இந்த உடனடி உதவிக்குப் பிறகேதான் தங்களுக்கே உரிய சடங்குகள், சம்பிரதாயங்களோடு அரசு இயற்திரங்கள் களம் இறங்குகின்றன. அவை நல்லதொருதீர்வு காணும் முன்னரே எதிலும் அரசியல் ஆதாயம் தேடுவோர் இடையீட்டால் நிரந்தரத் தீர்வுகாண சில பல சந்தர்ப்பங்களில் இயலாமலே போய்விடலாம். “நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி.” பல புல்லுரிவிகள் வசமாவதையும் காண்கின்றோம். இந்த அவல நிலை மாறவேண்டும் என்றால் வள்ளுவர் அடையாளம் காட்டிய “ஒப்புரவு” அறிவோரும் “கண்ணோட்டம்” மிக்கோரும் கொண்ட சமுதாயத்தாலேயே அது சாத்தியமாகும் எனும் மிக உன்னதவழியே என்றென்றும் நாட்டு நலனுக்கு வேண்டியதாகும். ஒப்புரவறிதல் எனும் அதிகாரத்தில் முத்தான மூன்று குறட்பாக்களில் செல்வம் யாரிடம் இருந்தால் பயன்தரும் என்று சுட்டுகின்றார்10. ஊருணி நிரைந்ததற்கு ஒப்பாகும் உலகம் விரும்பக்கூடிய
பேரறிவாளனிடத்தே உள்ள செல்வம்.
“ஊருணி நர்Pர்P நிறைந் தற்N;றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (திருக்கு;குறள் 215)
அதுமட்டுமல்ல, அன்புடையவன் கையில் செல்வம் இருப்பது பயன்படும் பழங்களைத் தரும் மரம் எங்கேயோ காட்டிடையே பழுப்பதால் சிலநேரம் யாருக்குமே தெரியாமல் கூடப் போய்விடலாம். ஆனால் உள்ளுரில் பழுத்துப் பயன் தரும் மரம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியது.
“பயன்த்தரும் உள்ளு;ளுர்ப் பழுத்த்தற்ற்றால் செல்வ்வம்
நயன்உ;உடை யான்க்கண் படின்.;.;.” (திருக்கு;குறள் 216)
இன்னமும் சிறப்பானது மருந்துமரம். தன் ஒவ்வொரு பகுதியும் மருந்தாகப் பயன்படும் மரம் போன்று மீண்டும் மீண்டும் எல்லாவகையிலும் தம்மிடத்தே உதவி கேட்டுப் பெறுவோர்வரினும் சோர்ந்து போகாது உதவக்கூடிய உள்ள மிக்கோர் கையில் செல்வம் இருப்பது. ஏனெனில் இத்தகையோரே தாங்கள் செல்வம் பெற்றதன் பயனை நன்குணர்ந்தவர்கள் ஆவர்.
“மருந்த்தாகித் தப்ப்பா மரத்த்தற்ற்றால் செல்வ்வம்
பெருந்த்தகை யான்க்கண் படின்.;.” (திருக்கு;குறள் 217) - அடுத்து;து
“தாளாற்ற்றித் தந்த்த பொருள்எ;எல்ல்லாம் தக்க்கார்க்கு;கு
வேளாண்i;மை செய்த்தல் பொருட்டு;டு”. (திருக்கு;குறள் 212)
தாம் செல்வம் பெற்றதன் பயன் உதவி பெறத் தகுந்தவர்க்கு உரியவாறு
உதவுவதற்கே எனும் வள்ளுவர் கூற்று பன்னெடுங்காலத்திற்குப் பிறகு உருப்பெற்ற ஃ தாளாளர் ஃ புரவலர் எனும் கோட்பாட்டைக் காட்டிலும் தலைசிறந்தது.
தொழிலாளர் சட்டம், சமவேலைவாய்ப்புச் சட்டம், சமமான வேலைக்குச் சமமான ஊதியம் என்பவற்றோடு இருப்பவரிடமிருந்து பெற்று இல்லாதவர்க்குத் தரவகை செய்யும் உச்சவரம்புச் சட்டங்கள் ஆகிய பலவும் செல்வம் சிலரிடமே குவிவதைத் தவிர்க்கவும். சமமான பகிர்ந்தளிப்புக்கு வகை செய்யும் வகுக்கப்பெற்றவை. வள்ளுவர் வழி நடந்து,
“அற்ற்றார் அழிபசி தர்Pர்P த்த்தல் அஃதுஒருவன்
பெற்ற்றான் பொருள்i;வைப் புழி.” (திருககு;கு; றள ; 226)
என்பதுணர்ந்து நடந்தால் பொருள் சிலரிடமே குவிதல் தவிர்க்கப் பெறும். இல்லாமை, வறுமை என்பவை இல்லாமலே போய்விடும். இந்த உலகமும் கண்ணோட்டம் உள்ளவர்க்கே உரியதாகிவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: திருவள்ளு;ளுவர் கண்ட நலம் நாடரசு திருமதி. ப. நாகபூஷணம்
Permalink  
 


“கருமம் சிதையாமல் கண்N;ணோட வல்ல்லார்க்கு;கு
உரிமை உடைத்து;துஇவ் வுலகு.”11 (திருக்கு;குறள் 578)
இன்றைய நிலையில் தனிமனிதர், சமுதாயம், ஆட்சிப் பொறுப்பிலிருப்போர் ஆகிய அனைத்துத் திறத்தினரும் உணர்ந்து பின்பற்ற வேண்டிய மகத்தான பேருண்மை ஒப்புரவறிதல், கண்ணோட்டம் ஆகிய இரண்டு அதிகாரங்களிலும் பொதிந்திருக்கக் காணலாம்.
சமநீதி கிடைக்க வேண்டுமாயின் யாரும் யாருக்கும் அடிமையும் இல்லை. யாரும் யாரையும் அவரவர் பொருளாதார நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு அடிமைப்படுத்துவதும் கூடாது. இந்த உண்மை சமுதாயம், நாடு என்கிறன்ற அளவிலும் பொருந்தக்கூடியது. மனித உரிமை (ர்ரஅயn சுiபாவள), மனித மாண்பு (ர்ரஅயn ஏயடரஉள) ஆகியவை காக்கப்பெற வேண்டும்.
சமுதாய மற்றும் நாடுகளின் தனித்தன்மை, கலை, பண்பாடு, மனிதர்களின் மதிப்பு (னுபைnவைல) ஆகியவை சிறப்புற வேண்டும். தீண்டாமை முதலான விட்டொழிக்கப் படவேண்டிய கொடிய சமுதாயப் பழக்கங்கள் வேரோடு கல்லிக் களையப்படவேண்டும் ஆகிய இவையே நலம் நாடரசின் நோக்கங்களின் உள்ளடக்கம் எனலாம்12.
ஐஐ) இல்லாமை இல்லாத நிலை (நுஉழழெஅiஉ துரளவiஉந) :
அரசியல், பொருளாதார சமுதாய உரிமைப்பாடுகள் காக்கப்பெறும் போதே உரிமை பெற்ற மக்களைக் கொண்ட சமுதாயத்தை உள்ளடக்கி ஒருநாடு உண்மையாக முன்னேற முடியும். அடிப்படை உரிமை காக்கப்பெற வேண்டும், நுகரப்பெறவேண்டும் என்றால், பொருளாதார உரிமை இன்றியமையாதது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்த நாட்டின் பொருளாதார நிலை குறித்து சிந்தித்துச் சீர் தூக்கினார்13. ஒரு நாட்டில் செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையே இருக்கக்கூடிய எதிர்மறையான வருந்தந்தக்க நிலை நீடிக்கும் வரை அந்த நாட்டில் அமைதிச் சூழலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் எனும் வினாவினை எழுப்புகின்றார். அதற்கான விடை காணும் முயற்சியில் தீர்க்க வேண்டிய சிக்கல்களை அடையாளம் காட்டுகின்றார். நம் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை, நம் சமுதாயத்தில் நீங்காது நிலைத்துள்ள உண்மைத் தன்மையாவன “வறுமை, வேலையின்மை” ஆகியவையே. வேலையின்மை நடுத்தர மக்களையும், செயலிழக்கச் செய்யுமளவு வளர்ந்து கொண்டே போகிறது என்கின்றார்.14 எனவே மக்கள் நலம் நாடலே அவருடைய சிந்தையில் நிறைந்தது. மக்களின் வாழ்நிலையை உயர்த்தவும், தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பணிகளையே தம் தலையாய பணியாக மேற்கொண்டார்.15 இந்தநிலை வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலுமே காணப்படும் நிலையேயாகும். நாட்டுப்பற்றுடைய தலைவர்கள், மனித நேய மனம் கொண்டவர்கள் அனைவரும் நேரு அவர்களின் பொருளாதாரக் கொள்கையே வறுமையே ஒழிக்கவும்,
வளமையைக் கூட்டவும் தேவையாகும் என்று ஏற்றுக்கொள்வர். காரணம் தனி மனித உரிமை காக்கக் பெற வேண்டுமானால் சமுதாயம் முழுமையாக முன்னேறுவது மிகவும் இன்றியமையாதது. சமுதாய ஃ நாட்டு நலம் நாடாக அமைவது தேவையாகிறது.
இல்லாவிடில் தேக்கமுற்ற நிலையில் காணப்படும் தனி மனித உரிமைகள் பொருளற்று போய்விடும். பெரும்பாலான மக்கள் நடைமுறைப் படுத்தவியலான பொருளாதார
உரிமைகளால் அவர்களுக்கு என்ன பயன்? சமுதாய பொருளாதார நிலையை அரசின் நெறி செய் சட்டக்கோட்பாட்டிற்கேற்ப மாற்றியமைத்துப் பயன்பெறும் நிலையிலேயே நலம் நாடரசு அமைதல் இயலும்”.
இவற்றை ஆழ்ந்து சிந்தித்தால் கிடைக்கும் விடை வறுமை ஒழிதல் வேண்டும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். குறைந்த அளவு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கவேண்டும் என்பதே. வௌ;வேறு காலக்கட்டத்தில் அறிஞர்கள் இவற்றிற்கான வழிகாட்டுகின்றனர்.
“தனியொருவனுககு; ணவிலi; ல எனில ; ஜகதத் pனை அழிதத் pடுவோம”; 17 என்று பொங்கி எழுகின்றார் மகாகவி பாரதியார். எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதாக சுரளமin அவர்கள் “ருவெழ வாளை டயளவ” என்று கூறுகின்றார். “கத்தியின்றி ரத்தமின்றி” இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வழி வகுத்த அண்ணல் காந்தியடிகள் தமக்கு வழிகாட்டியாகக் கொண்ட திருவாசகங்களில் ஒன்றே இந்த “ரவெழ வாளை டயவந”. கடைமடைக்கும் நீர் நிரம்பச் செய்யும் வாழ்முறை இதுவே.
வள்ளுவர் இவர்கள் எல்லோரையும் மிஞ்சி விட்டார்.
“இரந்து;தும் உயிர்வாழ்த்தல் வேண்டி;டின் பரந்து;து
கெடுக உலகியற்ற்றி யான்!;!”18 (திருக்கு;குறள் 1062)
தனிமனிதன் உணவுக்கே பிறர் கையை எதிர்பார்க்கும் நிலை நேர்தல் கூடாது. அப்படி உலகைப் படைத்தவன் ஒருவன் உளனேல் அவன் எல்லாவகையிலும் கெடுவானாக என மிகவும் வன்மையாகச் சாடுகின்றார், சபிக்கின்றார். வள்ளவர் வெகுண்டெடும் மிகச் சில இடங்களில் மிகவும் வன்மையானது இதுவே எனலாம்.
“இன்று;றும் வருவது கொல்N;லோ நெருநலும்
கொன்ற்றது போலும் நிரப்பு;பு.”19 (திருக்கு;குறள் 1048)
என்று தினம் தினம் அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? அவ்வாறு மனிதர் நோக மனிதர் காணும் வழக்கம் அற்று சமுதாயம் சீர்பெற வேண்டும். அத்தகைய சமுதாயத்தைக் கொண்ட நாடே நாடாகும். அங்கே அலைகழிக்கும் பசி, ஓயாத பிணி, உள்ளும் வெளியம், பகை, பஞ்சம் எதுவுமே இல்லாதிருத்தாலே நாடு என்ற சொல்லுக்குப் பொருளாகத் திகழும்.
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வ்வது நாடு”20 (திருக்கு;குறள் 734)
நாடு நல்ல நிலையை அடைய நலம் சேர் நாடாகத் திகழ நாட்டுப் பணியாற்றுவோர் அல்லும் பகலும் அதே சிந்தனையில் ஈடுபட்டுச் செயல்பட வேண்டுவது அவசியம்.
“வாரி பெருக்க்கி வளம்ப்படுத்து;து ற்ற்றவை
ஆராய்வ்வான் செய்க்க வினை.”21 (திருககு;கு; றள ; 512)
என்று பொருள் முதலாம் நலம் எல்லாம் வரும் வழியை விரிவாக்கி, நாட்டிற்கு நலம் பயக்கும் வளம் கூட்டி, நாட்டு நலனுக்கு எதிரானவற்றை நீக்கிச் நலம் நாடரசின் இலக்கு மனித உரிமைகள் காக்கப் பெறவேயாகும். மனித உரிமை எனும்போது தலையாயது உயிர் வாழ்வதற்கான உரிமையே, உயிர்ப்பது மட்டுமே உயிர் வாழ்வதாகாது. அதற்குரிய பாதுகாப்பு உயிருக்கும், உடலுக்கும், உடைமைக்கும் ஆன உறுதிப்பாடு@ ஆண்டான், அடிமை, இருப்பவன், இல்லாதவன் என்பது போன்ற எத்தகைய ஏற்றத்தாழ்வுகளுமற்ற சமுதாயத் சமநீதி இவையனைத்தையும் உறுதி செய்யும் நாடே மக்கள் நலம் காண் நாடாகஃஅரசாக அமைய இயலும் இவற்றிக்கு உரிய சட்ட வழிமுறைகளை 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவைச்சட்ட முகப்புரை,22 1948 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளின் மனித உரிமைப் பிரகடனம்23 மற்றும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களில்24 வகைப்படுத்தியிருக்கக் காணலாம். மனித உரிமை காக்கப்பெற, மனித (ர்ரஅயn ஏயடரநள) அனைவராலும் உணரப்பெற வேண்டும். அதற்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பெற வேண்டும். அத்தகைய சமுதாயத்திலேயே சமுதாய ஏற்றத்தாழ்வு நீங்கி சமதர்மம் மலரும்.
இத்தகைய ‘பொருளைச் செய்க’ என்கிறார் வள்ளுவர். ஏன் என்றால் பகைவருடைய செருக்கினை அழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் பொருளேயாகும் என்பதால் ‘செய்க பொளை’ என்கிறார்.25
பொருள் செயல்வ்வகை :
தனி மனிதர் பொருள் வளம் குறித்துரைக்கும்போது,
“ஆகுஆறு அளவுஇட்டி;டிது ஆயினும் கேடுஇல்i;லை
போகுஆறு அகலாக் கடை.” (திருக்கு;குறள் 478)
(1) செலவு கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் குறைந்த வருhயிலும் நிறைந்து வாழலாம்.
“அளவுஅறிந்து; வாழாதான் வாழ்க் ;i;கை உளபோல
இலல்ல் hகித ; தோன்ற்றாக் கெடும.;.; ” (திருக்கு;குறள ; 479)
(3) தன்னுடைய வரவுக்கு மீறிச் செலவழிப்பவன் வாழ்க்கை வெறும் மாயத் தோற்றமே.
வளமான வாழ்வுபோல் தோற்றமளிப்பது செல்வம் தேய்ந்து இல்லாமலே போய்விடும்.
“உளவரை தூக்க்காத ஒப்பு;புரவு ஆண்i;மை
வளவரை வல்i;லைக் கெடும்.;.” (திருக்கு;குறள் 480)
(3) ஒப்புரவு காண்பவரும் தம்மிடத்தே உள்ள செல்வ நிலைக்கேற்பவே பிறருக்கு உதவவேண்டும். இல்லையென்றால் விரைவிலேயே பிறர் உதவியை இவர்கள் நாடவேண்டிய நிலை நேர்ந்து விடும் எனச் சொல்லாமல் சொல்கின்றார். தனி மனிதன் பொருளாதார மேம்பாடடைய
“கேடுஇல் விழுச்n;செல்வ்வம் கல்வ்வி ஒருவற்கு;கு@
மாடுஅல்ல்ல மற்i;றை யவை.” (திருக்கு;குறள் 400)
தனிமனித மேம்பாட்டிற்கு இன்றியமையாதது கல்வி. அரசுச் சடட்டத்திலும் ஐக்கிய நாடுகள் சட்டத்திலும் கட்டணம் இல்லாக் கட்டாயக்கல்வி பெற அனைவருக்கும் வகை செய்ய வற்புறுத்தக் காணலாம்.
நாட்டின் பொருள்வளம் எதைக் கொண்டு அமைவது எனின்
“உறுபொருளும் உல்கு;கு பொருளும்த்தன் ஒன்ன்னார்த்
தெறுபொருளும் வேந்த்தன் பொருள்.;.; ” (திருக்கு;குறள் 756)
அரக்கு உற்ற பொருளும், வரி விதித்துத் திரட்டும் பொருளும், தவறு செய்தோர்க்கு விதித்த தண்டப் பணமும், முரண்பட்டவர் பொருiளைப் பறிப்பதால் (ஊழகெளைஉயவழைn) கிடைக்கும் பணமும் ஆகிய இவை இல்லாம் அரசுக்குச் செல்வ வளம் சேர்ப்பதாகும்.
“பொருளில்லார்க் கிவ்வுலகமில்லை” என்ற வள்ளுவர்,
“பொருள்அ;அல் லவரைப் பொருளாகச் செய்யு;யும்
பொருள்அ;அல்ல்லது இல்i;லை பொருள்.;.” (திருககு;கு; றள ; 751)
மதிக்கத் தகுதியில்லாதவரையுயயம் மதிப்பு வாய்ந்தவராகச் செய்யும் பொருளாக இருப்பது பொருட் செல்வமே யாகும் என்ற சொல்லைப் பொருட்படுத்துதல், மதித்தல் என்ற பொரளிலும் (அர்த்தம்) செல்வம் என்று பொருட்படும்படியும், அழகுற எடுத்தாண்டு செல்வம் தேடவேண்டியதன் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார். பாடுபட்டுத் தேடிய செல்வத்தை முறையற்ற வகையில் பறிக்கும் ஆட்சியில் இயலாதார் வடிக்கும் கண்ணீரே அந்த ஆட்சியை அழிக்கும் படையாக, ஆயுதமாக ஆகிவிடும்.
“அல்ல்லற்ப்பட்டு;டு ஆற்ற்றாது அழுதகண் ணர்Pர்Pர்P அனN;N; ற
செல்வ்வத்i;தைத் தேய்க்கு;கும் படை.” (திருக்கு;குறள் 555)
இனறு;று; நாடுகள ; காண விழையும ; நலம் நாடரசு :
நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்? தனிமனித வாழ்க்கைத்தரம் உயர்வடைந்து, நாட்டுப் பொருளாதரம் தலைசிறந்து விளங்க வேண்டும் என்ற இலக்கினை எட்டவே எல்லா நாடுகளும் முயற்சி மேற்கொள்கின்றன. அதற்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்து, இருப்பவர் இல்லாதவர் என்ற சமுதாய ஏற்றத் தாழ்வகற்ற முனைகின்றன. எத்தனை வகையிலே முயன்றாலும் இறுதியில் பற்றாக்குறை பற்று வரவே எஞ்சி நிற்கும். பொருளாதார வளம் குன்றுவதும் மிகுவதும் எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் நேர்வதுதான். வள்ளுவர் கண்ட நலம் நாடரசு எத்தகையது என்றால்,
“தள்ள்ளா விளையுளும் தக்க்காரும் தாழ்வு;வுஇலாச்
செல்வ்வரும் சேர்வது நாடு.” (திருக்கு;குறள் 731)
என்ற விளக்கம் கிடைக்கும். வாழ்க்கைக்கு மிகவும் தேவையான உணவு முதலானவற்றை விளைவிக்கும் நிலங்கள், அவற்றில் உண்மையாய் உழைத்துப் பயன் அளிக்கும் உழைப்பாளிகள், தீதில்லாத குறைவில்லாத, தாழ்வு கற்பிக்க முடியாத வகையிலே செல்வத்தைப் பெருக்கும் வணிகர் ஆகிய இத்திறத்தினரைக் கொண்டதே நாடு என்று நலம் எல்லாம் சேர்க்கும் நாடாக நமக்குச் சித்தரித்துக் காட்டுகின்றார்.
சுருங்கச் சொல்வதென்றால், வள்ளுவர் கண்ட நலம் நாடரசு யாதெனின் பசி, பிணி, பஞ்சம் என்பவையே இல்லாதது. நல்குரவு, இரவு எனும் தீமை தீண்டாதது. தன்னலமற்ற செல்வந்தவர்கள் பிறர் துயர் துடைக்கம் தூநெறியாளர்களைக் கொண்டது. பொருளீட்டலின் தேவை உணர்ந்து பொருட்செல்வம் பெற வேண்டியது. எல்லாச் செல்வத்திலும் சிறந்த செல்வமான கல்விச் செல்வமே என்றுணர்ந்த மக்களைக் கொண்டது. வேறு வகையில் சொல்வதென்றால், ஒப்புரவு, கண்ணோட்டம் ஆகிய குணநலம் வாய்ந்த பண்பாளர்களைக் கொண்டது. தாம் செல்வம் படைத்திருப்பது பிறர் துயர் துடைக்கவே எனும் தாளாளர்களைக் கொண்டது. மக்களின் நலம் காக்கும் நல்ல அரசு அமையப் பெற்றது.
“இயறற்ற்றலும் ஈட்ட் லும் காத்த் லும் காத்த்த
வகுத்த்தலும் வல்ல்லத அரசு.” (திருக்கு;குறள் 385)
செல்வத்தை உருவாக்கல், ஈட்டல், அவ்வாறு அடைந்த செல்வத்தைப் பாதுகாத்தல், காத்த செல்வத்தைத் திட்டமிட்டுப் பகிர்ந்தளித்தல் ஆகிய இவற்றையெல்லாம் சிறப்புறச் செயல்படுத்தும் அரசே திறமை மிக்கது. மக்களின் நலம் நாடுவது.
வள்ளுவர் வகுத்தளித்த நலம் நாடரசு வழியைப் பின்பற்றினால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பது திண்ணம்.
குழழவ ழேவநள:
1. திருக்குறள் 74வது அதிகாரம் குறள் எண் 739
2. வுயமநn கசழஅ ஏ.னு. ஆயாயதயnஇ ஊழளெவவைரவழையெட டுயற ழக ஐனெயைஇ 1991இ நுயளவநசn டீழழம ஊழஅpயலெ. p.3368
3. ஊழளெவவைரநவெ யுளளநஅடிடல னுநடியவநளஇ ஏழட. ஐஐஐ P.494-95
4. ளுநஉ யுசவ. 38 ழக ஐனெயைn ஊழளெவவைரவழைn
5. ளுநஉ Pசநயஅடிடந ழக ஐனெயைn ஊழளெவவைரவழைn
6. ளுநஉ யுசவ. 2 யனெ யுசவ. 11 ழக வாந ஐவெநசயெவழையெட ஊழஎநயெவெ ழn நுஉழழெஅiஉ. ளுழஉயைட யனெ உரடவரசயட
சுiபாவளஇ 1966
7. ஐன. யுசவ 15 யனெ 16 ழக ஐனெயை ஊழளெவவைரவழைn
8. யுசவ. 7 ழக ஐவெநசயெவழையெட ஊழஎநயெவெ ழக நுஉழழெஅiஉ ளுழஉயைட யனெ ஊரடவரசயட சுiபாவளஇ 1966.
9. யுசவ. 39 ழக ஐனெயைn ஊழளெவவைரவழைn
10. திருக்குறள் 22வது அதிகாரம் ஒப்புரவறிதல்
11. ஐன. 58ஆவது அதிகாரம் கண்ணோட்டம்
12. குழச கரசவாநச னநவயடைள ளுநஉ யுசவ 17இ 38இ 39 ழக வுhந ஐனெயைn ஊழளெவவைரவழைn யனெ யுசவiஉடந 4 ழக
ருniஎநசளயட னுநஉடயசயவழைn ழக ர்ரஅயn சுiபாவள 1948.
13. வுயமநn கசழஅ “நோசர’ள ஊழnஉநிவ ழக ளுழஉயைட துரளவiஉந யனெ னுநஅழஉசயஉல” டில னுச.மு.P.முசiளாயெ ளூநவவலஇ “Pசநகநளளழச வு.மு. ஏநமெயவயசயஅயn’ள 81ளவ டீசைவானயல ஊழஅஅநஅழசயவழைn ஏழடரஅந”இ நுனவைழச னுச.ளு. யேபயசயதயnஇ ஆயனரசயi வுயஅடைழடழபல Pரடிடiளாநசளஇ 1981இ P. 102
14. ஐன P.103
15. ழுp. உவை.
16. வுயமநn கசழஅ மு.P. முசiளாயெ ளூநவவலஇஇ குரனெயஅநவெயட சுiபாவள யனெ ளுழஉழை-நுஉழழெஅiஉ துரளவiஉந in வாந ஐனெயைn ஊழளெவவைரவழைnஇ யுடடயாயடியன ஊhயவையலெய Pரடிடiளாiபெ ர்ழரளநஇ 1969இ P.12
17. ‘பாரத சமுதயாம்’ பாரதியார் பாடல்கள்
18. திருக்கறள் 107 ஆவது அதிகாரம் ‘இரவச்சம்’
19. ஐன ‘நல்குரவு’ 105ஆவது அதிகாரம்
20. ஐன ‘நாடு’ 74வது அதிகாரம்
21. ஐன ‘தெரிந்து வினையாடல்’, 52வது அதிகாரம்.
22. ளுநஉ Pசநயஅடிடந வழ ருnவைநன யேவழைn ஊhயசவநச
23. யுசவைiஉடந 3இ ர்ரஅயn சுiபாவள னுநஉடயசயவழைnஇ 1948.
24. குழச னுநவயடைள ளுநஉ ஐனெயைn ஊழளெவவைரவழைnஇ டீயளiஉ டுயறஇ புநசஅயலெ
25. திருக்குறள் 76வது அதிகாரம் குறள் எண். 759



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard