New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வளளுவர் பார்வையில ஊழ் சா.சம்பத்து


Guru

Status: Offline
Posts: 24769
Date:
வளளுவர் பார்வையில ஊழ் சா.சம்பத்து
Permalink  
 


 வளளுவர் பார்வையில ஊழ் சா.சம்பத்து

1. கடடு;டு; ரை நோகக்க் ம்:;:;: எங்கே, எப்போது மனிதருக்குள் மூட நம்பிக்கைகள் துளிர்த்தன
என்பதும், நம் கண்ணெதிரில் நித்தமும் நடந்துகொண்டிருக்கும் விஞ்ஞான
ஆராய்ச்சிகள் யாவும் நம்மை எங்கே அழைத்துக் கொண்டு போகும் என்பதும்
அறியமுடியாத ஒன்றாகவே இதுவரையில் இருந்து வருகின்றன. வாழ்க்கைச்
சக்கரத்தில் தோன்றலும் மறைதலும் இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
தோன்றலுக்கும் மறைதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் சந்திக்கும் இன்ப
துன்பங்களுக்கெல்லாம் வேதங்களும் மதங்களும், நம்பிக்கையின் அடிப்படையில்.
யாரும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைக் காரணங்காட்டி அறியாமையால் அறிவை
மறைப்பது விந்தையான ஒன்றாகும். பொதுமக்கள் மட்டுமன்றிப் புலவர்கள் உட்பட
தத்தம் வாழ்க்கையில் கடைபிடித்து வந்த பல பழக்க வழக்கங்கள் சான்றோர்களால்
விரும்பத்தக்கன அல்ல என்பதை உணர்ந்து அவற்றைக் களைவதற்காகவே
திருக்குறள் எழுதப்பட்டது என்று துணிந்து கூறலாம் வழிவழியாக
நடந்துகொண்டிருக்கும் இந்த உலக நிகழ்வுகளுக்கெல்லாம் வள்ளுவர் யாரையும்,
எதையும் காரணங் காட்டவில்லை. அந்நிகழ்வுகள் யாவும் இயற்கையாகவே ஒழுங்கான்
முறையில் நடந்து வருகின்றன என்கிறார். வாழ்வியல் நெறிகளை முறையாக ஒழுகி,
இனிதாக வாழ்வு காண்பதே நோக்கமாகக் கருதி, அதற்கான வழிமுறைகளை மக்கள்
அறியவே பகுத்தறிவு சிந்தனையைத் தோற்றுவித்தாரேயன்றி, மாற்றுக் கருத்து
கொண்டோர்கள் உரைக்கின்றபடி வானுலக வாழ்வு என்பது உண்டு என்றோ அது
சொர்க்கம் நரகம் என இருவேறாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றோ கூறவில்லை.
பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை ஆய்ந்து, என் திறனுக்கேற்ப, நான்
குறளை அறிந்த மட்டில் வள்ளுவர் பார்வையில் ஊழ் என்பது என்ன என்பதை
விளக்குவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
2. ஊழ் என்ற்றால் என்ன்ன? உயர்ந்த வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கிய
திருக்குறளை நாம் அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் ஊழ் என்பதன்
உண்மைப் பொருள் விளங்கும். மக்கள் அறியாமையிலிருந்து விலகி வாழும் வழி
புலப்படும். திருவள்ளுவர் வரையறுத்த ஊழும், சமயவாதிகள் உரைத்த ஊழும்,
உலகில் எதுவுமே கோள்களால் இயங்குகிறது என்று உரைக்கும் மேனாட்டு
அறிஞர்களின் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
பழங்கால உரையாசிரியர்களாலும் சமயவாதிகளாலும் மக்கள் மனதிலே “ஊழ்”
என்பதற்கு அது பழவினை என்றும், ஒருவர் முற்பிறவியில் செய்த வினையால்
விளையும் பலன் என்றும், இப்பிறவியிலும் அவர் மேலோங்கிய நிலையில்
வாழ்வதற்கும், தாழ்ந்த நிலையில் உழல்வதற்கும் அவர் முன்பு செய்த நல்வினை
தீவினை காரணம் என்றும் கருத்து நிலவியிருந்த காலத்தில் தான் முயற்சிக்கு
முன்னால் ஊழ் ஒன்றும் செய்திலது எனும் புரட்சிகரமான கருத்தைக் கூறியுள்ளார்
வள்ளுவர்.
அப்படியானால் ஊழ் என்றால் என்ன? அதன் நிலைப்பாடுகள் யாவை? எனும்
கேள்விகள் எழும். பலரும் பல காலங்கில் ஊழை ஒரே மாதிரியாக
உணர்ந்திருந்தாலும் அவரவர் திறமைக்கேற்ப ஊழிற்கு விளக்கம்
தந்திருக்கின்றனர்.பழமையாளர்களும், தற்கால அறிஞர்களும், மேனாட்டவரும் எவ்வாறு
ஊழ் என்பதற்கு விளக்கம் தந்தனர் என்றும் அவர்களின் நம்பிக்கையும் கருத்தும்
என்னவாக இருந்தது என்றும் அறிவோம்.
3. ஊழ் பற்ற்றிய பழமையாளர்களின் கருத்து;து என்ன்ன?
3.1 பரிமேலழகர்: ஊழ் என்பதற்கு அது இருவினைப் பயன். செய்தவனையே
சென்றடைவதற்கு ஏதுவாகிய நியதி என்கிறார்.
3.2 மணக்கு;குடவர் (காலத்த்தால் முந்த்திய உரை): முன்பு செய்த வினையின்
பயன் பின்பு விளையும் முறையே ஊழ் எனப்படும். கல்விச் செல்வமாயினும்
பொரட்செல்வமாயினும் யாவற்றிற்கும் ஊழே காரணம். ஒருவன் தன் முயற்சியினால்
ஆக்கம் பெறுதலும், முயலாமையினால் கேடுறுவதற்கும் அதுவே காரணம் என்கிறார்.
3.3 பரிதியார்: ஊழ் என்பது போன சென்மத்தில் மனிதன் செய்த வினையின்
பயன் என்கிறார். அஃது வகைப்படும். அறிவு சோம்பல் ஆகியவற்றிற்கு அவ்விரு
ஊழும் காரணமாக அமையும் என்கிறார்.
3.4 காலிங்க் ர்:முன் செய்தமைந்த இருவினைகள் நகீ ;க முடியாமை என்கிறார்.
“முன்னர் செய்தார் செய்த வினை வகையால் துய்த்த்ல்லது மற்றுக் கோடிப்nhபருள்
ஈட்டினார்க்கும் அது கொண்டு துய்த்தல் அரிது” என்றார்.
3.5 மனு தர்ம நியதி: மானுடப் பிறவியில ; நலவ் pனை ஆறற் pனால,; மறு
உலகில் சொர்க்கமும், தீவினை ஆற்றினால் நரகமும் துய்க்கும் என்கிறது மனு
தர்மம்.
4. ஊழ் பற்ற்றி தற்க்கால அறிஞர்களின் கருத்து;து:4.1. புலவர் குழந்i;தை: புலவர் குழந்தை அவர்கள் ஊழ் என்பது உலகியல்பு என்கிறார். அவர் பரிமேலழகர் கூறும் பழவினைக் கொள்கையினை ஏற்கவில்லை. மாறாக பொருளும் காலமும் செயற்படும் தகுதியும், சுற்றுச் சார்பின் தகுதியும், நமது எண்ணத்தின் முயற்சியின் செயலின் தகுதிக்கு ஒத்து வருதலும் ஒவ்வாது வருதலுமாம் என்கிறார். (திருக்குறளும் பரிமேலழகரும்-பக்.146)
4.2. தவதத்த் pரு குனற்ற் ககு;கு;குடி அடிகளார்:மனிதன ; தான ; எடுதது; கn; காணட் நோகக் ம,;
தன்னுள் உதிக்கும் சிந்தனை, ஆற்றும் செயல் ஆகியவற்றைக் பொறுத்தே ஊழின்
நிலை அமையும். ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களால் விளையும்
விளைவுகளுக்கேற்ப பயனை அனுபவிக்கிறார்கள். எந்த வினையை, எந்த
அடிப்படையில், எந்த நோக்கத்தில் செய்வதென்பது ஆய்வுக்கு உரியது. இது இன்பம்
விளைவிக்கும் என எதிர்பார்த்து மேற்கொள்ளும் வினையே சில சமயங்களில் துன்பம்
விளைவிக்கும். இது இயற்கையின் நிலை. அது ஒரு படிப்பினை. ஒருவன் தன்
செயலால் துன்பப்பட நேர்ந்தால் அந்த துன்பத்தை நீக்கிக் கொள்வதற்காக பிற
உபாயங்களைக் கையாண்டாலும் அந்தச் செயலுக்குரிய பயன் முன் நிற்கும். தாழாது
உஞற்றுபவர் ஊழை உப்பக்கம் காண்பாரென்பது அந்தச் செயலால் ஏற்படும்
துன்பத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளலாமல் முடிந்த அளவு நீக்கிக் கொள்வர் என்பதே.
உயிர். பொறி புலன்களால் செய்யம் செயல், செயல்களின் விளைவாகிய ஊழ்,
அவரவர் செயலின் பயனை அனுபவிக்க வேண்டுமென்ற நியதி, எல்லாவற்றையும்
ஆட்டுவிக்கும் இறைவன், இந்த நான்கினையும் ஆராய்தலே தெளிவு என்கிறார்
அடிகளார். மனிதன் ஊழினை தன் முயற்சியால் வெற்றிகொள்ள முடியும். ஆனால்
அம்முயற்சிக்கு நம்மினும் வலிமையுடைய இறைவனின் திருவருள் துணையாக நிற்க வேண்டும் என்றே தவத்திரு குன்றக்குடி அடிகளார் இயம்புகிறார்.குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை தொகுதி – 2.
4.3 முனைவர் மு.வ: முனைவர் மு.வரதராசனார் அவர்கள் இயற்கையின்
படைப்பால் மண்ணிலும், விண்ணிலும் ஒருவகை ஒழுங்கிற்கும் உட்பட்டு நிகரும்
நிகழ்வுகளே ஊழ் என்கிறார். ஓரறிவுயிர்கள் முதல் மக்கள் வரையில்
பலவகை உயிர்களும் உடம்பெடுத்துப் பிறப்பது முதல் சாவது வரையில்
எல்லாம் ஒரு வகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன.
மக்கள் மனங்கொண்டு வாழும் வாழ்க்கையில் நிகழும் எழுச்சி, வீழ்ச்சி,
உயர்வு, தாழ்வு, ஆக்கம், கேடு, நன்மை, தீமை, உடைமை, வறுமை, இன்பம்,
துன்பம் முதலிய பலவும் இவ்வாறே ஒழுங்கான முறையில் அமைந்து
வருகின்றன என்கிறார் டாக்டர்.மு.வ.- வள்ளுவம் அல்லது வாழ்வியல் விளக்கம்
டாக்டர்.மு.வ.
4.4. சிந்த்தனைச்n;செம்ம்மல் கு.ச. ஆனந்த்தன்: விதிக்கொள்கைக்கு எதிராக
எழுந்ததே வள்ளுவத்தின் ஊழ்கோட்பாடு, நடப்பு நிலையில் இருக்கும் இந்தப்
பிறவியிலேயே ஒருவனின் வினைக்குரிய விளைவுகள் நிகழ்ந்தே தீரும் என்பதே
வள்ளுவரின் முடிவு. குறளியச் சிந்தனைகள் (பக்கம் 149-185)
மக்களின் எண்ணம், செயல் குறியீடு முதலியவற்றுள் அடங்காமல் அவற்றிற்கும்
அப்பாற்பட்டு இயற்கையாக நிகழும் முறைமையே ‘ஊழ்’ எனப்படும். “உலகத்து
இயற்கை” என்கிற ஊழ் ஓர் ஒழுங்கினூடே நிகழ்கிறது.திருக்குறள் உண்மைப்பொருள்
பக். 442.
5. மூடநமப்ப் pகi;i; ககள ; பறற்ற் p மேனாட்டு;டு அறிஞர்களின் கருதது;து; : 5.1. கன்பு;பூசியஸ்
கி.மு. 551 – 478 மனிதன் எம்முறையில் வாழவேண்டும், மனிதச் சமுதாயம் எந்த
முறையில் வளர்ந்தோங்க வேண்டும் என்பதைப் பற்றிNயு நன்றாகச் சிந்தித்து
அச்சிந்தனையை நெறிப்படுத்த விரும்பிய சீன நாட்டின் மாபெரும் ஞானியான
கன்பூசியஸ் மனித வாழ்விற்குரிய கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் வானகமே
உண்டாக்குகிறது என்கிறார்.வானகத்து நியதியும், மனித ஒழுக்கத்தின் நெறியும்
ஒன்றோடொன்று இசையும் நோக்குள்ளவை என்று கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்
வாழ்வும், மரணமும் விதியால் நிர்வகிக்கப்படுவது. செல்வமும், பெருமைகளும்
வானகத்தைப் பொறுத்தது. விதியின் நியதியை உணரத் தவறுகிறவன் பெரியோனாக
முடியாது என்பது கன்பூசியஸ் கருத்தாகும். சிந்தனையாளர் கன்ப+சியல் -
கோமேதகவேலு
5.2. இங்க்கர்சால் கி.பி. 1833 – 1899 உலகெங்கும் மதவெறி மிகுந்திருந்த
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் தோன்றிய
பேரறிஞன் இங்கர்சால் மனித இனம் மூட நம்பிக்கைகளிலிருந்தும், மோட்சம் நரகம்
என்னும் பித்தலாட்டத்திலிருந்தும் விடுதலை பெற அறிவியல் வாதத்தை மக்கள் முன்
அஞ்சாது எடுத்து வைத்தார். மனிதன் பகுத்தறிவு படைத்தவனாக உருவாக
வேண்டும் என்று புரட்சி முழக்கமிட்டார். அறிவு வளர்ச்சியினால் இயற்கையினிடமிருந்து
நன்மைகளைப் பெறலாம். கேடுகளையும் ஆபத்துகளையும் தவிர்க்கலாம். அறியாமை
இருளை அறிவொளியால் அகற்ற பாடுபடுவோம், ஒன்று சேர்வோம் என்றார்.
- சிந்தனையாளர் இங்கர்சால் - இராதாமணாளன்
5.3 வால்N;டேர் 1694 – 1778
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரிலே மத்தியதரக் குடும்பம் ஒன்றில் ஒரு சட்ட
நிபுணனுக்கு மகனாகப் பிறந்து சீர்திருத்த மனப்போக்கில் வளர்ந்த வால்டேர்
இரக்கமற்ற செயல்களைக் கண்டு எதிர்ப்பாளனாக மாறினார். மனித உள்ளத்திற்கு
மாபெரும் உணர்ச்சிக் கனல் மூட்டிய அவனது சொற்கள் மன்னராட்சியை மண்ணோடு
மண்ணாக்கியது. அவரோ தன் தத்துவ அகராதியில் எதுவும் மாற்றவொண்ணா
விதியின் (னுநளவiலெ) படியே நடக்கிறது. எதுவும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தப் பிரபஞ்சம் இயற்கை நியதிகளுக்கும், பௌதிக விதிகளுக்கும் ஏற்ப நிலைத்து
நிற்பதாக இருக்க வேண்டம். அல்லது எல்லாவற்றிற்கும் மேலான பரம்பொருள்
ஒருவனின் அதி உன்னதமான விதிகளுக்கு ஏற்ப இயங்கி வருகிறது என்கிறார்.--
சிந்தனை வால்டேர் – கே. சாவித்திரி
5.4.சாக்ர்ரடீஸ:;முன்னோர்கள் சொன்னதையெல்லாம் அவர்கள் சொன்னார்கள்
என்பதற்காகவே நம்பிவிடக்கூடாது என்றார். ஏன்? எதற்கு? எப்படி? எனும் கேள்விகளை
எழுப்பி பொருத்தமான விடை கிடைத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்றார்.
6. 'ஊழ்';' – சொல்ல்லாய்வு;வு: ஊழ் எனும் சொல்லுக்கு முரணின்றிப் பொருள்
காண வேண்டுமானால் “ஊழ்” எனும் சொல்லைக் கையாண்ட நூற்கள் எக்காலத்தவை
என்பதையும் மொழியில் ஆய்வால் அறியவேண்டும் என்கிறார் முனைவர்
வ.சுப.மாணிக்கனார். ஆங்கில அறியுரான டி.எஸ்.எலியட் அவர்களின் கூற்றும் இதுவே.
திருக்குறள் ஆய்வு ஆ. இரத்தினம்
சங்க இலக்கியங்களில் “ஊழ்” எனும் சொல், பழந்தமிழ் நூற் சொல்லடைவின்
படி தொல்காப்பியத்திலும். திருக்குறளிலும், தொகை நூல்களிலும் ஆளப்பட்டுள்ளது.
“ஊழ் வினை” என்னும் ஆட்சி, பாட்டு தொகை தொல்காப்பிய நூல்களில் இல்லாமல்
இருந்தும், திருக்குறளில் இடம் பெறாமல் இருந்தும் உரையாசிரியர்கள் “ஊழ்”
என்பதற்கு “ஊழ்வினை” எனப் பொருள் காண்பானேன்? இலக்கியத்தில் “ஊழ்”
என்பதற்கு முறைமை, மலர்தல், அலர்தல், முதிர்தல், முற்றல், உதிர்தல், பதனழிதல்,
பொருந்துதல், என்னும் பொருள்கள் உள்ளமை அறிய வாய்க்கின்றன.
“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்”
எனும் குறளில் வரும் இணரூழ்த்தும் என்பது மலர்தலை உணர்த்துகிறது.
ஊழ் - மதுரை இளங்குமரனார் – பக்கம் 4,5,12
‘ஊழ்’ என்பதை முறைமை என்று கண்டோம். ஊழ் மலர் ஒழிமுகை (130) எனும்
மலைபடுகடாம் பாடல் வரி முறைப்பட மலர்தலை ஒழிந்த முகை’ எனும் பொருளில்
அமைந்துள்ளது. ‘கிளிகடி மரபின ஊமூழ் வங்கி (44) எனும் குறிஞ்சிப்பாட்டுத்
தொடருக்குத் ‘தழலும் தட்டையும்’ குளிரும் பிறவுமாகிய கிளியோட்டும்
முறைமையினை உடையவற்றை முறையே கையிலே வாங்கி என்பது பொருளாகும்..
-குறள் வழிச் சிந்தனைகள் - ப.முருகன் - பக்கம் 133
சங்ககாலச் சொல்லாட்சியில் காணப்படாத திருக்குறளில் பயிலப்படாத எந்தச்
சமயக் குறிப்புளாளும் ஏற்றுக்கொள்ளப்படாத – தனித்த, வேறுபட்ட பொருள்களைத்
தரும் பல்வேறு கலைச் சொற்களை ‘ஊழ்’ என்பதற்கு இணைச் சொற்களாகத் தந்து
திருக்குறள் கூறும் ஊழைத் திரிபுபடுத்துவது முறையன்று. கடும் முயற்சியினால்
உலகப் பேரழிவினையும் வென்று முன்னேற வேண்டும். அதற்கான உள்ளத்
திண்மையும் வேண்டும் என ஊக்கப்படுத்துவதே குறிக்கோளாயக் கொண்ட
வள்ளுவரின் உலகளாவிய சிந்தனை அடிகளின்படி ‘ஊழ்’ எனும் சொல் வள்ளுவத்தில்
பழவினைப் பொருளில் கையாளப்படவில்லை.
7. இலக்க்கியங்க்களில் ஊழ:;:;: உயர்ந்தோர் இயற்றிய இலக்கியம். யாவும் மனித
வாழ்க்கை செம்மைபட வேண்டும் என்பதற்காகவே. இலக்கியம் கூறும் எந்தக்
கொள்கையாக இருந்தாலும் அது மனித முயற்சிக்கு ஊக்கம் அளிக்கவேண்டியதாக
இருக்க வேண்டுமே அல்லாது முயற்சிக்கு ஊறு செய்வதாக வாய்க்கக் கூடாது.
சங்க இலக்கியங்களில் சில நூற்பாக்களில் ‘ஊழ்’ எனும் சொல் எவ்வாறு
பயன்படுத்தப்பட்டது என்றும் எவ்வகைகளில் அச்சொல் ஆளப்பட்டது என்றும்
அறியலாம்.
7.1 புறநானூறு
“தீதும் நன்றும் பிறர்தர வாரா
… … … … …
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்”
எனும் கணியன் பூங்குன்றனார் பாடல் யாவும் ஊழின் வழியே நிகழ்வன என்பதைத்
தெளிவுறுத்துகிறது. ஆதலால் ஒரு பொருளிடத்து வெறுப்பும் விருப்பும் கொள்ள
வேண்டியதில்லை. உயிர் வாழ்க்கையானது ஊழ்வினையின் வழியே செல்லும்.
ஒருவன் செய்யும் நன்மையும் தீமையும் மறுபிறவியில் அவனைத் தொடர்கின்றன
என்கிறார் ப+ங்குன்றனார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

7.2. நாலடியார்
“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்”
எனும் நாலடியார் பாடல், சிறந்த முறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வோனும்,
தான் முன்பிருந்த நிலையைவிடத் தன்னைத் தான் தாழ்த்திக் கொள்வோனும்,
முந்தைய சிறப்பு நிலையிலிருந்து மேலும் மேலும் தன்னை அனைவரினும் மே;படுத்திக்
கொள்வோனும் தானேயாவான் என்பதை உரைக்கிறது.
7.3. பிற்க்கால ஓளவையார் நல்வ்வழிப் பாடல ;
“வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்து ஆய நூலகத்தும் இல்லை. நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால், கவலை படேல், - நெஞ்சே ! – மெய்
விண் உறுவார்க்கு இல்லை, விதி” (37)
இப்பாடலில் அமையப்பெற்றுள்ள, ஒருவர் இப்பிறப்பில் ஆற்றும் வினையின் பயன்
அடுத்த பிறவியிலும் அவனைத் தொடரும் என்ற கருத்து, ஒருவரின் நல்வினைக்கு
ஆதாரமாகவும் தீவினைக்குத் தடையாகவும் அமையும் என சான்றோர்கள் நம்பினார்கள்
என்பதையே வலியுறுத்துகிறது. மேற்கொள்ளும் செயல் யாவும் நல்லவனவாகவே
அமையும்படி எண்ணம் கொள்வதே அன்றி வாய்த்த பயன் கருதி வருந்துவானேன்?
என்பதே பொருளாகக் கொண்டுள்ளது.
8. “ஊழ்”; பற்ற்றி வள்ளு;ளுவர் கூறும் கருத்து;து என்ன்ன? உரையின்றி, விளக்கமின்றி
திருக்குறளின் மூலங்களை அறிந்து கொள்ள இயலாது என்ற ஒரு பெருந் தவறான
கருத்து மக்களிடையே நிலவியதாலும், உரைப்பன்மை மற்றும் உரைவேற்றுமை
போன்ற காரணங்களால் கொள்கை வேறுபாடு, கருத்துப் பிளவுகள் திருகுறட்பாட்டால்
ஏற்பட்டுவிட்டதாலும், குறள் கூறும் உண்மைப்பொருள் என்ன என்பதை அறிய மக்கள்
மனதிலே கருத்து மயக்கம் ஏற்பட்டு விட்டது. பல்வேறு உரையாசிரியர்களின்
உரைநூல்களைப் படித்து ஒரு முடிவுக்கு வருவது வழக்கமாயிருந்தாலும், குறளை
ஆழமாகவும், நுட்பமாகவும் ஆராய்ந்தால் மனதில் எழும் ஐயப்பாடுகள் யாவும் விலகும்.
திருக்குறளுக்கு உள்ள தனிச் சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்று, படிப்பவர்
அறிய முடியாத பல உயர்ந்த கருத்துக்களை அது சிந்திப்பவருக்கு
வழங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாகும்.
இதைத்தான், ஊழின் தோற்றத்திற்கு காரணம் பலப்பல இடத்தானும்
காலத்தானும் அரசானும் சமூகத்தானும் சுற்றுப்புற மக்களானும் வரும் புறநிலைப்
பாங்கனைத்தும் முடிவில் ஞாலத்தியற்கையாய் ஊழாய் மாறி நிற்கும் காரணப் பன்மை
சான்ற ஊழ் நுண்ணிய பல விரிவுகளாய்க் கிடைப்பது, தூய பேரறிவு இல்லா மக்கள்
பலரின் கணிப்பிற்கு அப்பாற்பட்டது என்கிறார் முனைவர் வ.சுப.மாணிக்கனார்
(வள்ளுவம் பக்கம் 321) திருக்குறளில் அமைந்துள்ள வாழ்க்கைப் பயன்பாட்டுத்
தத்துவங்களையும் (ருவடைவையசயைn Phடைழளழிhல), மறுமலர்ச்சிக் கருத்துக்களையும் நாம்
அறிவுக் கண் கொண்டு ஆராய்ந்து தெளிதல் வேண்டும். ஊழ் என்பதற்கு
கடவுளின் கட்டளை என்றும், அதன் விளைவால் தான் நாம் நம் வாழ்க்கையில்
நன்மை, தீமையைப் பெறுகிறோம் என்றும் எண்ணுவது தவறு. பல நேரங்களில்
நம்முடைய வாழ்க்கைப் போராட்டங்களுக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படாமல் போவதும்,
தொல்லைகளுக்கு நடுவே மன அமைதியும், நம்பிக்கையும் இழந்து தவிப்பதும்
அன்றாடம் நிலவும் நிலையே அதற்கு ஊழ் வினையோ அல்லது பழவினையோ
காரணமாகாது. நமது கணிப்பிற்கு அப்பாற்பட்டு, மனித எண்ணங்களின்
எல்லைக்கு அப்பாற்பட்டு பல்வேறு காரண காரியங்களால் உலக இயல் நிகழ்ச்சிகள்
அமைந்து விடுகின்றன. இதைத் தான் “ஊழிற் பெருவலி யாஉள” என்கிறது
வள்ளுவம். மேலும்,
“இரு வேறு உலகத் தியற்கை திருவேறு
தௌ;ளிய ராதலும் வேறு”
எனும் குறளின் வாயிலாக ஒருவர் வழிவழியாகத் தன்னை வந்தடைந்த பொருளால்
செல்வம் உடையவராக வாழ்வதும், அறிவுச் செல்வம் அமைந்தவராய்த் திகழ்வதும்
இருவேறு உலக நிலையே என சுட்டிக்காட்டுகிறார். இவ்விரு நிலையும் முறையே
இயற்கையாகவும், பண்பறிவாலும் நிகழ்பவையே. இதைத்தான் ஆய்வாளர்கள் உலக
இயல் நிகழ்ச்சிகள் (யேவரசயட Phநழெஅநழெn) என்கின்றனர்.
ஒருவன் வழி வழிச் செல்வம் பெறுதற்குரிய அமைப்பும் வாய்ப்பும் வேறு. அது
புற வாழ்க்கை நிலை. மனிதன் முயன்று பெறும் அறிவும் ஒழுக்கமும் வேறு. புற
வாழ்வில் ஊழ் என்பது செயலால் விளைபவையே. செயலால் அமையும் உண்மை
நிலையே. நற்செயல்களால் விளைவது நன்மை பயக்கும்படியாக அமையும். அது
ஆகூழ் என்றும், தீயச்செயல்களால் விளைவது துன்பம் தருவதாகவும் அமையும், அது
போகூழ் என்றும் உணர்த்துகிறார்.
விதி வலியது. விதியின் வழியே வாழ்வு அமையும் என மக்கள்
நம்பிக்கொண்டிருந்த காலத்தில் அக்கருத்தை முற்றிலும் மாற்றியமைக்க முடியும்
என்று மக்களின் மனதிலே அறிவு தீபம் ஏற்றி வைத்த முதல் சிந்தனையாளன்
வள்ளுவனே. ஊழ் என்பது உலக இயல்பென்றும், உலக நிலையென்றும்
கொண்டோமானால், உலக இயல்பால், மாற்றங்களுக்கு உட்படும் உலக நிலையினால்
தோன்றும் இடர்ப்பாடுகளை மனிதன் தன் முயற்சியால் வெற்றி கொள்ள இயலும்
என்கிறார் ஆள்வினையுடைமை எனும் அதிகாலத்தில் காணும்
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்” (குறள்: 620)
எனும் குறளின் வாயிலாக அவ்வாறின்றி பழவினைக் கொள்கையை வள்ளுவர்
ஏற்றுக்கொண்டிருப்பாரேயானால் எதுவும் பழவினையின் பயனாகவே வந்தமையும் @
அதை மனிதன் ஏற்பதே நியதி என்றல்லவா உரைத்திருப்பார். மாறாக மனதில்
தளர்வின்றி முயன்றால் ஊழையும் வெற்றி கொள்ள முடியும் என்றல்லவா
உரைக்கின்றார்.
இல்லாத ஒன்றினைக் கற்பனை செய்து வாழ்தலிலும், கண்முன்
நிகழ்வனவற்றை ஆய்ந்து தெளிவதே அறமாகும். முயற்சியினால் விளையவிருக்கும்
நல்லவற்றின் மேல் நம்பிக்கை வைத்து மேற்கொள்ளும் உயர்வானச் செயல்களால்
தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்திக்காட்டி வாழ்வதே வாழ்வு.
அதுவே அறிவுடைமை ஆகும். அது முயற்சிpயினால் மட்டுமே முடியும் என்கிறார்
வள்ளுவர். ஆக, ஆக்க சக்திகளுக்கு அடிப்படைக்காரணம் எண்ணமே, எண்ணமே
செயலுக்கு வித்தாகிறது. ஒருவர் உயர்வான எண்ணங்களைக் கொண்டாரேயானால்
அதுவே அவரை உயர்த்தும், அதுவே அவர் தம் முன்னேற்றத்திற்கு ஆணிவேராக
அமையும்.
அதுவன்றி வாழ்வில் எல்லாமே விதிப்படியே நடக்கும். அதற்கு காரணம் நாம்
முற்பிறவியில் செய்த வினையின் பயன் என்று நம்புவது வீண். மரக்கிளையின்
நுனிவரை ஏறிச் சென்றவர் மேலும் கடக்க முயல்வது அழிவில் தான் முடியும்..
உயர்ந்த இலட்சியத்தை அடைந்தே தீருவது எனும் குறிக்கோளுடன் மனிதன்
முறன்றால் முடியாததது ஒன்றும் இல்லை, நெறி பிறழாத செயலே அதற்குத் துணை.
ஒருவர் ஈட்டும் புகழுக்கும் அமைத்துக்கொள்ளும் சிறப்பான வாழ்க்கை
நிலைக்கும் காரணம் அவர்கள் மேற்கொள்ளும் செயலை திறமையுடன் செய்து
முடிப்பதில் உறுதியுடையவராக இருத்தலே காரணம் என்கிறார் வள்ளுவர்
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்” (குறள்:666)
எனும் குறளின் வாயிலாக. அதுபோல் புகழுக்கு எதிரான பழிநிலைக்கும் அவன்
செய்யும் மேன்மையிலாச் செயலே காரணமாகும். விதியோ, வினைப் பயனோ அதற்கு
பொறுப்பாகாது என்பதை
“பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” (குறள் 505)
எனும் குறளில் வலியுறுத்துகிறார். தம்மைத் தாம் அறியாமல், தமக்குள்
மறைந்திருக்கும் திறனை அளவிடாமல் பொழுதையெல்லாம் வீணே
கழித்துக்கொண்டிருந்தால் அதன் விளைவு தான் என்ன? இல்லாமை அல்லவா
இல்லத்தில் விளையும் - நிறையும். இயற்கையின் ஆற்றலைக் கண்டு அதிசயிக்கும்
நாம் நமக்குள் உறைந்திருக்கும் ஆற்றலை அறியாமல் இருப்பது ஏன்?
வாழ்வில் வெற்றியும் தோல்வியும் கலந்தே நிகழ்கிறது. வெற்றிகொள்ளத்
தேவையான அதீத ஆற்றலையும், தோல்வியிலிருந்து மீளும் நம் அனுபவங்களையும்
எவ்வாறு பெறுவது என ஆராய்வதே உண்மையறிவு. எதையும் ஆராயாது
நம்பிக்கையினையும், இலட்சியத்தையும் தொலைத்து விட்டால் வாழ்வு ஏது?
சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் தன் செயல்திறனால் இயல்பு வாழ்க்கைக்கு
எதிராக அமையும் எந்த சூழலையும் எதிர் கொள்ள முடியும். கடின உழைப்போடு
அறிவின் துணையோடு தாம் அடைய விரும்பிய இலக்கினை அடைய முடியும் எனும்
நம்பிக்கையோடு முனைப்புடன் முயன்றால் உலகில் முடியாதது ஏதுமில்லை. அதைத்
தான் அறிவுடைமை எனும் அதிகாரத்தில் “அழிவு வராமல் காக்கும் பயனுறு கருவி
அறிவு” என்றும் அறிவுடையவர் பின்னே வருபவற்றை முன்னே அறிந்து செயல் படுவர்
என்றும் இயம்புகிறார். அவ்வாறு முயற்சியின்றி ஒருவர் துன்ப நிலைக்கு ஆட்படும்
போது அத்துன்பத்திலிருந்து மீளும் வழியை அவர் தேடுவதும், அவருக்கு உதவ
மற்றவர் முன்வருவதும் உலக இயற்கை. உதவும் உள்ளம் கொண்டோர் தானாக
முனவந்து அப்படிபட்டவர்க்கு இன்றும் உதவி வருகின்றனர். அதுவே உலக
இயல்பாக இன்றளவிலும் இருந்து வருகியது. தக்க சமயத்தில் நல்லுள்ளம்
கொண்டவர்களால் உதவி பெற்று, அந்த உதவியை அவர்கள் உணர்ந்தவர்களாய்,
பொறுப்பான எண்ணத்தாலும் , உடல் உழைப்பாலும் பிறர் போற்றும் வண்ணம்
வாழ்ந்து காட்டியதை நாம் மறக்கவும் மறுக்கவும் இயலாது.
இங்கு விதியின், ஊழ்வினை நிலைப்பாடுதான் என்ன? வறுமையில்
சிக்கித்தவிப்பவனைப் பார்த்து சிறிதும் மனம் உருகாது. அந்நிலையில் அவன்
தவிக்க அவன் செய்த முன்வினையே காரணம். அவன் குறித்து ஏது செய்யினும்
அது பயனிலாது போகும் என்று பொருள் உடையவர்கள் நினைத்துவிட்டால் இந்த
உலகம் என்னவாகும்? பொருள் உள்ளோரெல்லாம் ஊழ்வினை மீது அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்தவராய் பொருளில்லாது துன்பப்படுபவரைப் பற்றி கவலை
கொள்ளாது தன்னை மட்டும் காத்துக்கொள்வாராயின் இந்த உலகம் எப்படி இயங்கும்?
ஊழ் எனும் கூற்றை வள்ளுவர் ஏற்றுக்கொண்டிருந்தால், எல்லாவற்றிற்கும் பழ
வினையே காரணம் என்பதை அவர் நம்பி இருப்பாராயின் ஈகை எனும் அதிகாரத்தில்
ஈகையின் பொதுத்தன்மையை, உயர்வினை விளக்கியதோடு நல்லோரைப் பொருள்
உள்ளோரைப் பார்த்து உலகில் சிலர் ஊழ்வினை காரணமாக உழல்வர்.
அவர்களையும் பொருளுதவி செய்து காத்தருள்க என்றல்லவா உரைத்திருப்பார்.
அப்படி ஒரு ஐயம் அணுஅளவும் எழக்கூடாது என்பதற்காகவே ஈகைக்குரிய
பொதுவான உலக வழக்கு இது என்றல்லவா வகைப்படுத்துகிறார். மாற்றம் காணும்
உலகில் வறியவரும் இருப்பர். அவர்க்கு ஈதலே செல்வந்தர்க்கு புகழ் என்றே
போற்றுகிறார். அவ்வறியவரும் தளராத ஊக்கமுடையவராக இருந்தால் செல்வம்
அவரிடம் தானாக வந்து சேரும் என்பதனை
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை (குறள்: 594)
எனும் குறளின் மூலம் அறிவுறுத்துகிறார். அதுமட்டுமின்றி ஊக்கங் கொள்ளாது
இரந்து வாழ்தலை
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டாது இல் (குறள்:1063)
என கடுமையாக சாடுகிறார்.
ஆக, முற்பிறவியில் செய்த ஊழ்வினையின் காரணமாகவே நீ இன்று
அல்லற்படுகிறாய் என்பதை ஏற்காது ஊக்கமுடன் உழைத்து மற்றவர்க்கு துன்பம்
இழைக்காமல் வாழ்தலே இன்பம் பயக்கும் என்கிறார்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்
எனும் குறளின் வாயிலாக பிழைபொருத்து வருந்தி என்ன பயன். இனியேனும்
நல்லன ஆற்று என்றே தேற்றுகின்றார்.
அடுத்து,
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள்:319)
“நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர்” (குறள்:320)
எனும் இவ்விரு குறட்பாக்களின் வழியாக ஒருவர் மற்றவர்க்கு இழைக்கும் தீங்கிற்கான
பலன் வெகுவிரைவில் அவரை வந்நடையும். இக்காலத்தில் இச்சூழலில்
ஒவ்வொருவரும் தலையிட்டு செய்யும் காரியங்களின் பலனை மனிதன் ஏற்க
வேண்டியதாய் அமையும்.
மேலும், தீவனை அச்சம் எனும் அதிகாரத்தில்
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று சுடும்” (குறள்:207)
எனும் குறளின் வாயிலாகவும், வெஃகாமை எனும் அதிகாரத்தில்
“நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடியொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்” (குறள்:171)
எனும் குறளின் வாயிலாகவும் குற்றம் செய்தவனையும், அவனது குடியையும் அவன்
செய்த குற்றத்தின் விளைவானது நிழல் போலத் தொடர்ந்து கெடுக்கும் என்றே
உரைக்கிறார். இங்கு முன் வினையோ பழ வினையோ கையாளப்படவில்லை.
அவ்வாறு இயல்பு வழுவி ஒருவர் தீமை செய்தாலும், வலி அறிந்து அவர்
நாணும் படி நன்மையைச் செய்வதே அவர் பெற்ற அறிவின் பயன் என பொது
அறத்தின் மேன்மையினை நிலைநிறுத்தி, மனிதனின் எண்ணம் அதன் வழிபட்ட செயல்
ஆகியவற்றின் பதிவுகளுக்கே ஊழ் என்று பொருள் உரைக்கின்றார். குழப்பமில்லா
இன்ப வாழ்வுக்கு வழிகாட்டுகின்றார். மக்கள் மனதிலே நிறைந்திருக்கும் மடமை
எனும் இருளகற்ற ஞான ஒளி ஏற்றி வைத்த வள்ளுவரின் எண்ணப்படி ஊழ் என்பது
உலக இயங்கு சக்தியினால் அமையப்பெறும் நன்மை தீமை என்னும் இயற்கை
நிலையே. நன்மையை அனுபவிப்பதும் தீமையை நன்மையாக்குவதும் மனிதனின்
மேலாண்மையே.
9. முடிவுரை
வள்ளுவருக்கு முன் வாழ்ந்த நம் நாட்டு சிந்தனையாளர்களும், அயல் நாட்டு
சிந்தனையாளர்களும் பழமைக்கு முதலிடம் கொடுத்து ஊழை முன்னிறுத்தி ஏற்றுக்
கொண்டிருக்கின்றனர்.
வள்ளுவருக்கு பின் வந்த வெளி நாட்டு, உள் நாட்டு அறிஞர்கள் பகுத்தறிவுக்
கண் கொண்டு ஊழை ஆராய்ந்து மனித முயற்சியால் ஊழை வெல்லலாம் என்பதில்
கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதிலிருந்து வள்ளுவர் ஊழை மனித
முயற்சியால் வெல்லலாம் என்று சொன்ன பிறகே மற்றவர்களுக்கும் அக்கருத்தில் ஒரு
நிலைப்பாடு ஏற்பட்டுயிருக்கியது. என்று நாம் கருதுவதில் எவ்வித ஜயப்பாடும்
தோன்றவில்லை. எனவே, வள்ளுவர் கூறும் ஊழ் மனித முன்னேற்றத்திற்கு எந்த
வகையிலும் தடையளிக்கவில்லை. நாம் ஊழையும் உப்பக்கம் கண்டு உலைவின்றித்தாழாது உஞன்று வாழ்வில் முன்னேறுவோம.;
கட்டுரை ஆய்விற்கு பெரிதும் டு;வ்கு;துணைபுரிந்த்த நூல்க்கள ;
1. திருக்குறள் மூலமும் பரிமேலளகர் உரையும் - கோ.வடிவேலு செட்டியர்,மதுரைப் பல்கலைக் கழகம்
2. பதினென் கீழ்க்கணக்கு நாலடியார் உரை – தி.சு.பாலசுந்தரம் பிள்ளை (இளவழகனார்)
3. புறநானூறு மூலமும் உரையும் - அ. மாணிக்கனார்
4. திருக்குறள் உரைக் கொத்து - மதுரகவி தா.ம.வெள்ளைவாரணம்
5. தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை தொகுதி 2 – தவத்திரு
பொன்னம்பல அடிகளார்.
6. வள்ளுவம் - வ.சுப.மாணிக்கனார்.
7. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் - டாக்டர். மு.வ.
8. வள்ளுவர் வழியில் …. ஊழ் - மதுரை இளங்குமாரனார்
9. திருக்குறளும் பரிமேலழகரும் - புலவர் குழந்தை
10. சிந்தனையாளர் இங்கர்சால் - இராதாமணாளன்
11. சிந்தனையாளர் கன்ப+சியஸ் - கோமேதக வேலு
12. சிந்தனையாளர் வால்டேர் – கே. சாவித்திரி
13. திருக்குறளின் உண்மைப்பொருள் - கு.ச.ஆனந்தன்
14. திருக்குறள் ஆய்வு – ஆ.இரத்தினம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard