New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவன்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
இறைவன்
Permalink  
 


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
 குறள் 167: அழுக்காறாமை.

மணக்குடவர் உரை:அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.).
மு. வரதராசன் உரை:பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
மு. கருணாநிதி உரை:செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை:பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

*உலகியற்றியான் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்


செய்யாள் (இலக்குமி) 167 செய்யாள், 84தாமரையினாள், 617
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். குறள் 168: அழுக்காறாமை.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. குறள் 179: வெஃகாமை.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். குறள் 167: அழுக்காறாமை.
அடியளந்தான்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. குறள் 610:
தாமரையினாள், 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். குறள் 617: ஆள்வினையுடைமை.
தவ்வை,167 /முகடி, 617
இந்திரன்,25/ வேந்தன்,899
காமன்,1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். குறள் 1197:
நிலமென்னும் நல்லாள்
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். குறள் 1040: உழவு.
அணங்கு
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு - குறள் 92:8
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1
*தென் புலத்தார் (பித்ருக்கள்) 43
அமரர், அவியுணவின் ஆன்றோர், தேவர், புத்தேளிர், வானத்தவர்,
வானோர், விசும்புளார்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 13:1


புறங்கூறாமை.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

1 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
நாமக்கல் கவிஞர் : எல்லா எழுத்துக்களுக்கும் -அ என்ற எழுத்து மூலமாக இருப்பது போல இந்த உலகுக்கும் இதில் காணப்படும் எல்லாப் பொருள்களுக்கும் ஒரு மூலம் இருக்க வேண்டும். அந்த மூலத்தைத்தான் பகவான் அல்லது கடவுள் என்கிறோம்.
திருக்குறளார் வீ.முனிசாமி:உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஓலிவடிவான அகர மாகிய முதலை உடையன, அதுபோலஉலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.
மு.வரதராசனார் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
மு. கருணாநிதி: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
G.U.Pope :As the letter A is the first of all letters,so the eternal God is first in the world.

2 றத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅா் எனின்.
நாமக்கல் கவிஞர் :நன்றாகப் படித்தவர்களாக இருந்தும் அறிவுக் கெல்லாம் அறிவாக இருக்கின்ற பகவானுக்கு வணக்கம் செலுத்த மறுக்கின்றவர்களும் இருக்கிறார்களே அவர்கள் படித்த படிப்பு என்ன படிப்பு
திருக்குறளார் வீ.முனிசாமி : எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால், தூய அறிவினன் மெய்யுணர்வினன்-ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.
மு.வரதராசனார்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
சாலமன் பாப்பையா: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
மு. கருணாநிதி: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவா் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
G.U.Pope : what profit have those derived from learning. who worship not the good feet of him who is possessed of pure knowledge?.

3 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
மலா்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
நாமக்கல் கவிஞர் : அந்த பகவானை வேறெங்கும் தேடவேண்டிய தில்லை, அவன் நம்முடைய மனதில் நம் கூடவே பிறந்தவன், மனச்சாட்சியாக விளங்கும், அவனிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் உலகத்தில் சுகமாக வாழ்வார்கள்.
திருக்குறளார் வீ.முனிசாமி : உள்ளக் கமலத்தில்-மனத்தில்-சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சிமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள், உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.
மு.வரதராசனார் :அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா :மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
மு. கருணாநிதி : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
G.U.Pope : They who are united to the glorious feet of him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

4 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
நாமக்கல் கவிஞர் : வேண்டியவன் வேண்டாதவன் என்று வேற்றுமை பாராட்டாமல், தன்னைச் சரணமென்று அடைந்தவர்கள் எல்லாருக்கும் அருள் செய்பவனாகிய பகவானை, வணங்குகிறவர்களை எந்தக் காலத்திலும் துன்பம் பாதிக்காது.
திருக்குறளார் வீ.முனிசாமி : விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.
மு.வரதராசனார் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா :எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
மு. கருணாநிதி :விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றி திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவா்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
G.U.Pope : To those who meditate the feet of him who is void of desire or aversion,evil shall never come.

5 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
நாமக்கல் கவிஞர் : இறைவன் எல்லா உயிர்களுக்கும் தந்தை, அதனால் வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் எல்லாரையும் சமமாகக் கருதிக் காக்கிறான், அந்த பெரும் புகழை உணர்ந்து, அவனை வணங்குகிறவர்களை அஞ்ஞானத்தால் வருகிற நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் தொடரமாட்டா.
திருக்குறளார் வீ.முனிசாமி : அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
மு.வரதராசனார் :கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
மு. கருணாநிதி : இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவா்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
G.U.Pope : The two fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of god.

6 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்தவினை பொய்தீா் ஒழுக்க
நெறிநின்றார் நிடுவாழ் வார்.
நாமக்கல் கவிஞர்: பஞ்சேந்திரிய ஆசைகள் என்பதே இல்லாத இயல்பினன் பகவான். பொய்த்தல் இல்லாத அந்த இயல்பை உணர்ந்து அதற்கான நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நடக்கின்றவர்கள். அந்த இயல்பின் பரிபூரண அருளுக்குப் பாத்திரர் ஆவார்கள்.
திருக்குறளார் வீ.முனிசாமி :மெய், வாய், கண் மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள். எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
மு.வரதராசனார் :ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
மு. கருணாநிதி :மெய், வாய், கண் மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவா்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
G.U.Pope: Those shall long proposer who abide in the faultless way of him who has destroyed the five desires of the senses.

7 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
தனக்குவமை இல்லாதான் தாள்சோ்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
நாமக்கல் கவிஞர்: எல்லாம் வல்ல தன்மையினால் தனக்கு நிகரானவர் வேறு எவருமில்லாதவனாகிய இறைவனிடத்தில் சரண் புகுந்தவர்கள் தாம் தங்களுக்கு வந்த மனக் கவலையைப் போக்கிக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு முடியாது.
திருக்குறளார் வீ.முனிசாமி : தனக்கு ஈடாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்கள் நீக்க முடியாது.
மு.வரதராசனார் : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
சாலமன் பாப்பையா: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
மு. கருணாநிதி : ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
G.U.Pope : Anxiety of mind cannot be removed,except from those who are united to the feet of him who is incomparable.

8 அறத்துப்பால் 1.பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
அறவாழி அந்தணன் தாள்சோ்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
நாமக்கல் கவிஞர்
தர்மங்கள் நிறைந்த சமுத்திரம் போன்று சாந்தமயமாக இருக்கிற இறைவனிடத்தில் சரணாகதி அடைகிறவர்களைத் தவிர மற்றவர்கள் அதர்மம் நிறைந்த சமுத்திரம் போல் இருக்கிற உலக துன்பக் கவலைகளை நீந்தி நிம்மதி அடைய முடியாது.
திருக்குறளார் வீ.முனிசாமி: அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.
மு.வரதராசனார் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
மு. கருணாநிதி : அந்தணா் என்பவதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவா்கேயன்றி, மற்றவா்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் ந்ப்பது என்பது எளிதான காரியமல்ல.
G.U.Pope : None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious being who is a sea of virtue.

9. அறத்துப்பால் 1.பாயிரவியல் 1. கடவுள் வாழ்த்து
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
நாமக்கல் கவிஞர் : எண்ணத்தகுந்த சகல நற்குணங்களும் அடங்கினவாகிய எட்டு குணங்களும் ஒருமிக்க உடையவனான கடவுளின் பாதங்களை வணங்காத தலைகள், தாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய முடியாத மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து புலன்களைப் போலவே செய்ய வேண்டிய வேலையைச் செய்யச் சக்தியில்லாதவை.
திருக்குறளார் வீ.முனிசாமி : தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுதலுடையன அல்லவாம்.
மு.வரதராசனார் : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாலமன் பாப்பையா : எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
மு. கருணாநிதி : உடல், கண், காது மூக்கு வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
G.U.Pope : The head that worships not the feet of him who is possessed of eight attributes,is as useless as a sense without the power of sensation.

10, அறத்துப்பால் 1.பாயிரவியல் 1.
பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
நாமக்கல் கவிஞர் : பிறவி என்பது பெரிய சமுத்திரம், மனிதர்கள் எல்லாம் அதில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருக்கிறவர்கள். அவர்களுள் பகவானை நினைத்து அவனுக்குள் அடைக்கலம் புகுகின்றவர்கள், அவனுடைய அருளாகிய தெப்பத்தைப் பிடித்துக்கொண்டு நீந்திக் கரையேறுவார்கள்.மற்றவர்கள் கரையறியமாட்டாமல் மீண்டும் மீண்டும் முழுகி முழுகி தத்தளித்துக் கொண்டே இருப்பார்கள்.
திருக்குறளார் வீ.முனிசாமி : இறைவன் அடிகள் எனும் தெப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் நீந்த மாட்டார்கள், அதனுள் அழுந்துவார்கள்.
மு.வரதராசனார் : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
மு. கருணாநிதி : வாழ்க்கை எனும் பெருங்கடலை நிந்திக் கடக்க முனைவோர், தலைவானவனாக இருப்பவனின் அடி தொடா்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
G.U.Pope: The head that worships not the feet of him who is possessed of eight attributes,is as useless as a sense without the power of sensation.1 அறத்துப்பால் 1. பாயிரவியல் 1. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard