மகாபாரதமும் திருக்குறளும் - நீ உன்னிடம் எப்படி செயல்படுவது போலவே பிற உயிரினங்களிடமும் நட -அறவழியின் முக்கிய விதி ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான்.
இதன்காரணமாக ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
We have all read about the golden rule and its history in almost all world cultures - "Do unto others what you wish to be done to you" or the negation of it "Do not do unto others what you don not wish to be done to you."
But rarely you find the reference to this in ancient Indian tradition. While this sentiment abounds all over in Sanskrit literature small and large, here is an actual reference from Mahabharata that says it exactly as is.
Hence, by self-control and by making dharma (right conduct) your main focus, treat others as you treat yourself.
= तस्माद्धर्मप्रधानेन भवितव्यं यतात्मना । तथा च सर्वभूतेषु वर्तितव्यं यथात्मनि ॥ = tasmād_dharma-pradhānéna bhavitavyam yatātmanā | tathā cha sarva-bhūtéṣhu vartitavyam yathātmani || [Mahābhārata Shānti-Parva 167:9]
Vidura says to the king Yuddhishthira, "Listening to wise scriptures, austerity, sacrifice, respectful faith, social welfare, forgiveness, purity of intent, compassion, truth and self-control - are the ten wealth of character (self). O king aim for these, may you be steadfast in these qualities. These are the basis of prosperity and rightful living. These are highest attainable things. All worlds are balanced on dharma, dharma encompasses ways to prosperity as well. O King, dharma is the best quality to have, wealth the medium and desire (kāma, kAma) the lowest.
Hence, (keeping these in mind), by self-control and by making dharma (right conduct) your main focus, treat others as you treat yourself."
There is no need to explain this self-explanatory, simplest of core values. If only everyone can follow just this one rule, there will be no man-made problems in the world!
And now the language aspects -
tasmād /tasmAt = hence dharma-pradhānéna / dharma-pradhAnena = by keeping dharma as main focus bhavitavyam = is worth becoming, one should become yatātmanā / yatAtmanA = yata + ātmanā /AtmanA = restrained, by self , i.e. by restrained self, controlled self. tathā / tathA = similarly, in that manner cha = and sarva-bhūtéṣhu / sarva-bhUteShu = in all (sarva) beings (bhūta/bhUta) vartitavyam = one should behave yathātmani / yathAtmani = yathā /yathA + ātmani /Atmani = as in oneself.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. குறள் 190: புறங்கூறாமை. மணக்குடவர் உரை: பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது. மு. வரதராசன் உரை: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ? மு. கருணாநிதி உரை:பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். சாலமன் பாப்பையா உரை:புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ? அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. குறள் 315: இன்னாசெய்யாமை. மணக்குடவர் உரை:பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது. மு. வரதராசன் உரை: மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. மு. கருணாநிதி உரை:பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. சாலமன் பாப்பையா உரை:அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். குறள் 319: இன்னாசெய்யாமை மணக்குடவர் உரை:பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது. மு. வரதராசன் உரை:முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும். மு. கருணாநிதி உரை:பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும். சாலமன் பாப்பையா உரை:அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. குறள் 436: குற்றங்கடிதல். மணக்குடவர் உரை:தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம். இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது. மு. வரதராசன் உரை:முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்? மு. கருணாநிதி உரை:முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும். சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. குறள் 1015: நாணுடைமை. மணக்குடவர் உரை:பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது. மு. வரதராசன் உரை:பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும். மு. கருணாநிதி உரை:தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார். சாலமன் பாப்பையா உரை:தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை. மணக்குடவர் உரை:வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம். மு. வரதராசன் உரை:பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். மு. கருணாநிதி உரை:பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.