New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் குடி - லலிதா சுந்த்தரம்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
திருக்குறளில் குடி - லலிதா சுந்த்தரம்
Permalink  
 


திருக்குறளில் குடி - லலிதா சுந்த்தரம்
தோரணவாயில் : “தித்திக்கும் தேனமுது, தெவிட்டாத புத்தமுது” என்ற உலகப் பொதுமுறையில் குடி, குடிமக்கள், குலம் பற்றித் திருவள்ளுவர் கூறியவை வாழ்வியலுக்கு எவ்வாறு பொருந்தி அமைகின்றன என்பதை இக்கட்டுரையின் கண் வரைவான் புகுகின்றேன்.
மேலைச் சிந்த்தனையார்களின் கொள்i;கைகள்:;:;:
ரூசோ:பிரான்சிய அறிஞரான ரூசோவின் கோட்பாடு 1762இல் அவர் வெளியிட்ட சமுக ஒப்பந்தம் என்ற நூலில் அடங்கியுள்ளது. அவர் இறையின் முழுமையான அதிகாரம் குடிமக்களின் முழுமையான சுதந்திரம் என்ற இரண்டையும் இணைக்கமுற்ப்பட்டார்.
லாஸ்க்கி குடியுரிமை: ஒவ்வோர் அரசின் எல்லைகளுக்குள்ளும் ஆயரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் குடிமக்கள் அல்லர்.
முற்காலத்தில் நகர அரசுகள் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்த போது நகரத்தில் வாழ்ந்தவர்கள் சிட்டிசன் என அழைக்கப்பட்டனர். அச்சொல்லே பின்னர் குடிமக்களைக் குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. குடிமகனாக இருக்கும் உரிமை குடியுரிமை எனப்படுகிறது.
குடியுரிமை: குடியுரிமை என்பது வெறும் சட்டாதீ pயான உரிமைமட்டுமன்று.
அச்சொல் ஒவ்வொரு குடிமகனின் எண்ணத்திலும், செயலிலும் தாக்கத்தை ஏற்ப்படுத்த வேண்டும். இந்நாட்டின் குடிமகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதுடன் தனது நாட்டின் மேம்பாட்டிற்காகச் செயல்பட ஒவ்வொரு குடிமகனும் தயாராக இருக்க வேண்டும். குடிமகனுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும். குடியுரிமை நாட்டு ஒற்றுமையை வளர்க்கிறது. நாட்டின் மேம்பாட்டிற்கு வகை செய்கிறது. ஒரு நாட்டின் குடிமக்கள் எத்தகையவர்களாக இருக்கிறார்களோ, அதே போன்று தான் நாடு அமையும். ஒரு குடிமகன் குடியுரிமைக் கட்டுப்பாட்டை நிறைவேற்றும் கல்வியறிவு பெற்றவனாக விளங்க வேண்டும் என வாஸ்கி கூறுகிறார்.
இத்தகைய கல்வி அறிவு பெறுவதற்கு திருக்குறளில் திருவள்ளுவர் குடியியலை அமைத்துள்ளார். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் அதிகாரம் 96 முதல் 108 வரை உள்ள 13 அதிகாரங்களை ஒழிபியல் எனப் பகுத்துள்ளனர். ஆனால் மணக்குடவர் குடியியல் என வகுத்துள்ளார். அதிகாரம் 61 குடும்பம், சிறந்து விளங்க சோம்பலின்றி இருக்க “மடிஇன்மை இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
மணககு;கு;குடவர்:- அரசர், அமைச்சர், வீரரல்லாத மக்கள், தம் இயல்பு கூறுதல். முற்படக் குடிப்பிறந்தார் இலக்கணம் கூறுகிறார்.
பரிமேலழகர்:- உயர்ந்த குடிப்பிறந்தாரது தன்மை, குடிப்பிறப்பு நால்வகை வருணத்தாருக்கும் இன்றியமையாதது என்று கூறுகிறார்.
திருக்கு;குறள் முனுசாமி:- உயர்ந்த நற்குடியில் பிறந்தாரது தன்மைகளை ஒழிபு இயலில் கூறியுள்ளார்.
குடி என்ற்றசொல்: நமது சமுதாயத்தில் குடும்பத்திற்கு அடுத்து அமைவது குடி. சங்கத் தொகைப் பாடல்களில் குடி என்ற சொல் இருப்பிடம், குடியிருப்போர், குடிமக்கள், குடும்பம், உழவர், கால்வழி என்னும் பொருள்களில் கூறப்பட்டுள்ளது.
திருமதி.ச.திலகவதி: குடும்பம் என்பது உறவு, மனை, வடுP , சம்சாரம், உறவினர் இனத்தார், குடி, குலம், ஒருகுடியில் உள்ளார் என்பதை குறிக்கின்றது என்கிறார்.
குடும்பமானது ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம் ஆகும். நடைமுறை வாழ்க்கையில் ஒரு வீட்டில் வசிக்கும் இரத்த உறவினை உடைய உறவினர்கள் அனைவரையும் ‘சுட்ட’ குடும்பம் என்று கூறுகிறோம். ஓர் ஆண் அவனோடு நிலையான பிணைப்பு கொண்ட ஒரு பெண், அவர்களின் குழந்தைகள் ஆகிய உறுப்பினர்களைக் கொண்டது குடும்பம், எனக்கருதலாம் என்று கூறுகிறார்.
குறிக்N;கோள்:;:;: குடியிற் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாம் மேற்கொண்டு நடக்க வேண்டிய விதிமுறைகளை, மேற்கோள்கள் பற்பல உள்ளன. ஒவ்வொரு குடியும் தாம் வாழும், சூழ்நிலை, நிலைமைக் கேற்ப குறிக்கோள்கள், நோக்கங்கள், இலக்குகள் மாறுபடும்.
குடியின் தாழ்வுகள் (பழிகள்) குடிப்பெருமையை பாதுகாத்தல்
நீக்கல் (நிலை நிறுத்துதல்)
குடிப்பெருமையை உயர்த்துதல்
மேம்படுத்துதல்
ஒருவர் தாம் பிறந்த குடியை உயரச் செய்வதற்கு மேற்கூறிய மூன்று முறைகளைப்
பின்பற்றி தம்மால் இயன்ற வழிகளில் பேணிக் காக்க வேண்டும்.
1. முதற்காரணமாக தாழ்வுகள், (பழிகள்) வருவதற்கு அடிப்படையாக அமைவது.
மடியுடைமை (சோம்பல்) நற்பண்புகள் இன்மை உட்பகை
601, 603, 604 964, 658, 976, 978, 979, 980, 999, 10003
887, 888
குடியின் தாழ்வு;வுகளை நீகீகீ ;க்கல்:;: இதற்கு அடிப்படைக் காரணமாக அமைவன
மடியுடைமை, சோம்பல், மனச் சோர்வு, உளச்சோர்வு உடல்சோர்வு ஆகியன
அமைகிறது. நல்ல வழி வந்த குடும்பம், அல்லது குலத்தில் பிறந்திருந்தாலும் ‘மடி’ என்ற நோய் வந்தால் குற்றங்கள் ஏற்பட வழி வகுக்கும். ஆணிவேரினை அரித்தால் பெரிய மரம் சாய்வது போல, மனதில், செயலில் உண்டாகும் குற்றங்கள் குடிப்பெருமை என்னும் ஆணிவேரை அரித்து விடும்.
“குடிஎன்னும் குன்றா விளக்கும் மடிஎண்ணும்
மாசுஊர மாய்ந்து கெடும"; (குறள்: 601)
மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும் எனக் கூறுகின்றார் (ப.மே): ஒருவன் தன் மடியாளும் என்னும் குறளில் குடி என்று சொல்லப்படுகின்ற
(ம.கு) : குறைவில்லாத ஒளி மடியாருளம் தன்மையை ஒழிக்கவே அவன் குடியுள்ளும்,ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும் என்றார். குடும்பம் என்ற அணையா
விளக்கினுள் சோம்பல் என்ற தூசி படிந்தால் அவ்விளக்கு அணைந்துவிடும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். கோவலன் குலத்தொழிலை, தன் கடமையை மறந்து
கலைத் தொழிலைப் போற்றி, மாதவி வீட்டிலே இருந்ததினால் அவனுடைய குடி என்னும் விளக்கு அணைய அவனே காரணமாகிறான். பொருள் அனைத்தும் இழந்து
நாடு விட்டு நாடு கடந்து மதுரையிலே தன் வாழ்வில் ஆளாகிறான் முடிவினை அடைகிறான். (கொலைக்கு ஆளாகிறான்).
பேராசிரியர் ஜி.வரதராசன.;.;. பேராசிரியர் தி.முருகரத்த்தினம ; இருவரும் எணண் pய
காரியத்தைச் செய்து முடிப்பதற்குத் ஊக்கமாகிய மன எழுச்சி இருந்தும் சோம்பல்
தடுத்து விடுமானால் அவன் செயலை மேற்கொள்ளமாட்டான் என்று கூறுகின்றனர்.
ரிச்ச்சர்ட்:;:(மடி உடையவனுக்கு) “சோம்பேறிக்கு எல்லாம் கடினமாகத் தோன்றும்.
ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாம் எளிதாய்த் தோன்றும்” என்கிறார்.
கார்ல்ம்மார்க்ஸ்ஸ்ஸ் :- பழமையிலிருந்து விலகி புது உலகம் படைக்க முயல்கிறார்.
சோஷிலிச அடிபப் டையில ; உலக ஒருமைப்பாடு தோனறு; மானால் ‘இல்i;லை’
என்ற சொல் இல்லாமற் போகும் என்கிறார்.
“யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (குறள்: 346) என்ற குறளில் நான், எனது என்ற
ஆணவத்தை விட்டபோது மேலான புகழ் உலகம் அடைகிறார் என்று திருவள்ளுவர் கூறுகிறார். எனது என்னும் உடைமைப் பற்றினால், யான்என்னும் உடற்பற்று தோன்றுகிறது. இதுவே சோஷிலிச சித்தாந்தம் ஆகும் என்று (கா.மா.) கூறுகிறார்.
“புத்தேள் ஒலகத்தும் ஈண்டுமு; பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற” (குறள்: 213)
பிறருக்காக வாழ்வதைப் போன்ற நல்ல செயலை, இந்த உலகத்திலும், வேறு எந்ந உலகத்திலும் காணமுடியாது. இந்தப் பண்பு உயர்ந்த பண்பு ஆகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
தாமசுஃபுல்ல்லர்:- “யான் இல்லாத ஏழை” என்று கேட்கும் முன்னேயே, அவன் பிறரிடம் கேட்காதவண்ணம் கொடுத்துதவி அவன் முன்னேற வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்.
“இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலம் உடையான் கண்ணே உள” (குறள்: 223)
தான் ஏழையாக இருந்தாலும், மற்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவுவது நல்லகுடிப்பிறந்தார் பண்புகள் ஆகும் என்று கூறுகிறார்.
(கா.மா.) பழமையிலிருந்து விலகி புதுஉலகம் படைக்க முயல்கிறார். சோஷிலிச அடிப்படையில் உலக ஒருமைப்பாடு தோன்றுமானால் இல்லை என்ற சொல் இல்லாமற் போகும் என்கிறார். இது (கா.மா) ஆல் போதிக்கப்பட்ட விஞ்ஞான சோஷிலிசம் என்று நாம் உணரலாம். இந்தச் சோஷிலிச சமுதாயத்தையே புறநானூறு பாடல் 191
உணர்த்துகின்றது. பாண்டியன் அறிவுடைய நம்பிக்கு பிசிராந்தையார் நரை தோன்றாதற்கு காரணம் தன் நாட்டில் சான்றோர்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்கள் கவலை இன்றி வாழ்கின்றார்கள். ஆகையால் எனக்கு நரை தோன்றவில்லை என்கிறார்.
“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆசியர் என வினவுதின் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்”
“மனைவி மக்களோ அறிவு நிரம்பியவர் ஏவலரோ
யான் காண்பது போன்று எதனையும் காணுவர்
சான்றோர் பவர் வாழ்கின்ற தாளே” (புறம் 191)
(கா.மா.) “மனிதா உன்குடியாக வேண்டுமானால் மடியைமடியாகக் கருது என உபதேசிக்கிறார்”
“மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும தன்னினும் முந்து” (குறள்: 603)
என்ற குறளில் (ம.கு)” நெஞ்சத்தும் மடியினாலே வினையின் கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்த்த குடி தனக்கு முன்பே கெட்டுவிடும் என்று கூறுகின்றார்.
(ப.மே): விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி அவன் தன்னினும் முந்துற அழியும் என்று கூறுகிறார்.
“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும”; (புறம ; 183)
ஒரு குடியில் பலர் இருந்தாலும் அவருள்ளும் அறிவுடையோனையே வருக என்று அரசனும் அழைக்கின்றான்.
இங்க்கர்சால்:;: “அறிவிற்கு எப்போதும் வையகம் தன் வணக்கத்தைச் செலுத்தும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

திறமைக்கு ஆதரவு தரும் தூய உள்ளத்தை வரவேற்கும் என்கிறார்”
“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றில வர்க்கு” (குறள்: 604)
(ம.கு.): முயற்சி இல்லாதவர்க்கு குடியும் கெட்டு குற்றமும் மிகும் என்கிறார்.
(ப.மே.): மடியின் கண்ணே வழீ ;தகுலால் திருந்திய முயற்சி இலராயினார்க்கு குடியும் மடிந்து குற்றமும் பல்கும் என்கிறார்.
பேராசிரியர் தி.முருகரத்த்தினம் :- குறள் கூறும் இறைமாட்சி என்ற நூலில் ‘மடி’ என்பது ஊக்கமுடைமைக்கு எதிர்மறை ஆனது என்கிறார்.
“குடியாண்மையுள்ள வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்” (குறள்: 609)
என்னும் குறளில் சோம்பலெனும் தீராத வியாதியை ஒழிக்க வேண்டும்.
ஒருவன் தன் மடியாளும் தன்மையை ஒழிக்கவே அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். இதனைக் தான்
“தாளிலான் குடியே போல் தமியவே தேயுமால்” (கலித்தொகை 149:9) என்று கலித்தொகை கூறுகின்றது.
எமர்சன:;:; “மடி” – சோம்பேறி என்பவன் ஒரு நோய்ப்பிடித்த பேர்வழி அவனை அரசாங்கம் வியாதியஸ்தர்களை நடத்துவது போலவே நடத்த வேண்டும் என்று கூறுகிறார். இயற்கையையும் வாழ்க்கையையும் மகிழ்ச்சியுள்ளதாக ஆக்கும் மனிதனேமனிதன் என்ற கருத்துரைக்கிறார்.
நறப்ப்பண்பு;புகள் இன்i;மை: நமது தலையில ; உளள் முடியினை, தலையில ; இருக்கும் வரை எண்ணெயிட்டு, (1) தலை வாரி, அழகாகப் பாதுகாக்கிறோம். முடி தலையினின்று உதிர்ந்து விட்டால் மதிப்பதில்லை. குடிக்குரிய பண்புகளில், குணாதிசயங்களில் இருந்து தவறவிட்டால் மற்றுள்ளோர் அவரை இகழ்ந்து, விலக்குவர். இதனையே திருவள்ளுவர்.
“தலையின் இழிந்த மயிரனையர், மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை” (குறள்: 964)
என்னும் குறளில்
(ம.கு.) : தலையினின்று இரங்கிய மயிரைப்போல இகழப்படுவர். மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகினவிடத்து என்றார்.
(ப.மே.) : குடிப்பிறந்த மாந்தர், தம் உயர்ந்த நிலையை விட்டு அதனின்றும் தாழ்ந்த வழி தலையைவிட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர் என்றார்.
குடியின் பெருமை அழிதல்:;:;: குடிக்குரிய சிறந்த பண்புகள் இல்லையாயின் அவர் பிறந்த குடியையே ஐயுறும் நிலை (சந்தேகப்படும்) ஏற்படுகிறது.
“கடிந்தகடிந்து ஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்” (குறள்: 658)
என்ற குறளுக்கு
(ம.கு.): நலN; லாரால ; கடியபப் டட் வறi; றக ; கடிந்து நீகக் hது செய்யுமவர் அவ்வினைகள் தாம் கருதியவற்றான் முடிந்தபின்பும் பீடையைத் தரும் என்றார். தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கேற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும்
“தொல்வரவும் தோலுங் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நகை” (குறள்: 1043) என்னும் குறளில்
தன்னால் பற்றப்பட்டாருடைய பழையகுடி வரவினையும் அதற்கேற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும் என்றவாறு நல்குரவையே நசையாக்கி அக்குடியில் தொல்லோர்க்கு இழிதொழில்களை, இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டையும் ஒருங்கே கெடுக்கும்.
(ம.கு.): தொன்று தொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வழிவழகினையும் ஒருங்கு கெடுக்கும், இதனை சொல்லப்படுகின்ற ஆசைப்பாடு என்பது குலத்தினையும்,
அழகையும் கெடுக்கும், இதனை
“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணைவிடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசி;பிணி என்னும் பாவி” - (மணி 11: 76 – 80) என்று மணிமேகலை பாத்திரம் பெற்ற காதையில் கூறப்பட்டுள்ளது.
“குடிபுறந்தருகுவை யாயின் நின்
அடிபுறந்தருகுவர் அடங்கா தோரே” – என்று வெள்ளைக்குடி நாகனார் உணர்த்துகிறார். (புறம் 35:33-34)
சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கு “உழவர் குடியினை முதலில் காத்து அதனால் ஏனயை குடிமகளையும் பசியின்றிக் காத்தல் முக்கியமானது அதனால் நின் ஆணைக்கு அடங்காதவர்களும் நின்னைப் பணிவர் என அறிவுரை கூறுகிறார்.
பெரியாரைப் பேணாமை:
“சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம் என்னும் நோக்கு” (குறள்: 976)
என்னும் குறளில் (ம.கு.): பெருமையுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வோம் என்னும் கருத்து சிறுமையுடையார் உணர்வின் கண் இல்லை பெரியாரைப் பெறுதல் பெருமை என்கிறார்.
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர்குட் டுண்ட் புகழ்கால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகாது சிறப்பின் தோன்றி” (மதுரை 761-65)
நெடுஞ்செழியன் நல்ல சான்றோர் பெருமக்களின் துணை கொண்டதினால் மாங்குடி மருதனார் அவரது குலச்சிறப்பாக மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார். பெரியாரை வழிபட்டு அவரியல்பினையாம் கோடும், மற்றைச் சிறியராயினார் மனத்தின் கண் உளதாகாது என்றார்.
வரீரீ மாமுனிவர்: பெரியவர்களுக்குக் குறை செய்யாமல் இருப்பதே பெரியவர்களைப் பேணும் முறையாகும்.
பெருமையும் சிறுமையும்:;:
“அற்றல் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்” (குறள் 980) என்ற குறள்வழி
“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் குணம், குற்றம் இரண்டும் இருக்கும் ஒருவரிடம் உள்ள குணங்களை மறைத்து, குற்றங்களைப் பெரிதாக்கி மற்றவரிடம் திரித்துக் கூறுதல் கூடாது” என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
(ம.கு.): பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் கொள்ளும், சிறுமை குற்றத்தையே சொல்லும் என்கிறார்.
(ப.மே): பெருமை உடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையா நிற்பர். சிறுமை பிறர் உடையார் குணத்தை மறைத்து குற்றத்தைக் கூறுவர். கு 978,
979. குறள்களில் பெருமயுடையவர், சிறுமையுடையவர் செயல்களை ஒருங்கே வேறுபடுத்திக் காட்டியுள்ளார் திருவள்ளுவர் உள்ள் த்N;தோடு கூடி மகிழாமை: “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும”;
என்பது பழமொழி
“நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டு அன்று இருள்” (குறள்: 999)
என்னும் குறளில் “வாழ்வில் சிரித்து வாழத் தெரியாதவனுக்கு ஒளி வீசுகின்ற பகல் கூட இரவாக இருக்கும் என்று கூறுகின்றார்”
(ப.மே.): பண்பின்மையால் ஒருவரோடும் கலந்து உளமிகழ்தல் மாட்டாதார்க்கு, பகற்பொழுதும் இருளாகும்
(கா): மக்கட்பண்பு இல்லாதவர்க்கு உலகநீதியாகவும் இருண்டே கிடக்கும் என்கிறார்.
பிறர்ககு;கு; ப் பயன்ப்பட வாழாமை:
“பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமையால் திரிந்து அற்று” (குறள்: 1000)
(ப.மே): பண்பு இலாதவன் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல ஆன்பால் ஏற்றகலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கேட்டாற்போலும் என்றார்.
(ப.பெ): குணமில்லாதவன் பெற்ற பெரிய செல்வம் நல்ல பால் கலத்தின் தீமையால் கெட்டாற்போலத் தனக்கும், பிறர்க்கும் இன்பம் பயவாது கெடும். அச்செல்வத்தினால் நற்பயன் விளையும் செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார்.
உட்ப்பகை: ஒரு குடியில் பிறந்தவர்கள் தனக்குள்ளேயே மாறுபட்டு சண்டையிடுவது கூடாது.
“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை அற்ற குடி” (குறள்: 887)
“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி” (குறள்: 888)
என்ற இரு குறள்களிலும் ஒரு குடியிலுள்ளோர் மனம்வேறுபட்டு சண்டையிட்டால் குடியின் பெருமை குன்றும், குடி அழியும் என்கிறார் திருவள்ளுவர். ஒரு குடிக்குள் தோன்றி உட்பகை ஆனாலும் குடிக்குத் தாழ்வு உறுதியாகும்.
(ப.மே.) (ம.கு.) : உட்பகை, கொண்ட செப்பும் மூடியும் பொருந்தினாற்போலப் பொருந்தினவாயினும், பொருத்தமிலலாவாம் என்றனர். உட்பகை உண்டானகுடி அரத்தினில் பொரப்பட்ட இரும்பு போல வலி தேயும். இதனை “ஒருவீர் தோற்பினும், தோற்பதும் குடியே” (புறம் :45) என்று கூறுகிறது.
க.மோகனராசு: உட்பகையினால் குடும்ப அமைதி குலைகிறது. குடியின் கட்டமைப்பு குலைகிறது சமுதாயச் சீர்மை சாய்க்கப்படுகிறது என்று தி.கு.உ.பொ.வில் கூறுகிறார்.
குடிக்கு;கு வரும் பழி: ஒரு குடிக்கு வரும் பழியைத்தம்மால் மட்டும் காத்துக்க் கொள்வது போதாது, பிறராலும் தம் குடிக்குப் பழிவரும் என அஞ்சி நாண வேண்டும்.
குடிப்பெருமை, தம்குடி உயரவேண்டும் என்ற ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர், “இடும்பைக்கே கொள்கலமாக விளங்குவது உலக இயற்கை ஆகும்” என்பதனை
“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு” (கு 1029) என்ற குறள் வழி நிறுவுகிறார்.
(ம.கு.): சுற்றத்தார் மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுபவன் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாகும் என (ம.கு.) கூறுகிறார். இதனைத்தான்
“உறைப்பெயல் ஓலைபோல மறைக்குவன்
பெரும நிற்குறித்து வருவேலே” – (புறம் 290) என்று புறநானூற்றுப் பாடல் கூறுகின்றது.
குடிக்குப்ப்பழிவராது காத்த்தல்:;:
“பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு” (கு 1015) என்ற குறளுக்கு
(ப.மே.) : பிறர்பழியையும் தம்பழியாகக் கொண்டு அஞ்சுபவரே நாணம் என்னும் குணத்திற்கு உறைவிடமாவர். குடியின் பெருமையைக் காக்க உயிர்நீப்பர் குடிக்கு இழிவு வரக்கூடாது என எண்ணுபவர்
“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா னெ;னார்
உயிர்காப்பர் மானம் வரின்” (குறள்: 969)
தன் உடலினின்று மயிர் கீழே விழுந்தால் உயர்நீத்து விடும். சேரன் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர் புரிந்து சேரனை சிறையிட்ட பின் காவலிடம் நீர் கேட்டபொழுது அவர்கள் தாமதமாக கொணர்ந்ததனால் நாவுக்கு நீர் இன்றி இறப்பினும் இரந்து உண்ணேன் என்று கூறி மானத்திலும் உறுதிபொருள் இல்லை என்று உயிரை நீத்தார்.
சாக்ர்ரட்டீ;டீஸ்:;:;: நற்பேறான செயல்களினால் தான் புகழ் என்கிறார்.
தாமசுஃபுல்ல்லர் :- புகழ் என்பது நம்முடைய செயல்களின் எதிர் ஒளி என்கிறார்.
இதற்கு இரும்பொறை சேரமான் தன் குடியின் பெருமையை காக்க கராரணமாக நிற்கிறான் என்பதற்கு ஏற்பச் சேரன் குலப்பெருமையை நாட்டிப் புகழ் நிறுவினார்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள் பவர்” (குறள்: 1017) என்ற குறள்வழி குடிக்குப்பழி வரக்கூடாது என எண்ணுபவர்கள் உயிரை வேண்டுமானாலும் துறப்பர், நாணத்தைத் துறக்கமாட்டார். இழிவுவரின் வாழாத மானம் உடையவரை
உலகம் பழிக்காது. குடிக்குப்பழிவராமல் காப்பர்.
“புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்: பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்”
“தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” உண்டாலம்ம இவ்வுலகம் (புறம் 182)
இச்சான்றுகளால் குடியைப் பற்றிய விளக்கம் சங்க இலக்கியங்களில் விரவி இருப்பதைக் காண முடிகின்றது.
குடிப்n;பெருமையைப் பாதுகாத்த்தல்:;:;: முன்னோர்கள் நல்லெண்ணம், நற்செயல்கள், நற்சொல், நன்னடத்தை ஆகியவற்றால் அவரவர் குடிக்குப் பெருமை என்னும் சொத்தை, நல்முத்துக்களை சேர்த்து வைத்து உலக வாழ்விற்கு அத்திவாரமாகவும், அத்தாணி மண்டபமாகவும், மகுடமாகவும் திகழ்கின்றனர். ஆகையால் குடிப்பெருமையைக் காக்க வேண்டியது. பாதுகாப்பது அக்குடியில் பிறந்தவர்களின் இன்றியமையாத கடமையாகும் குடிப்பெருமையைக் காக்க பின்வருனவற்றை நாம் முறைப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு வேண்டியவை.
இயல்பாகவே அமைவன கடைப்பிடிக்க வேண்டுவன நீக்கவேண்டுவன 951, 952, 953
1. இயல்பாக அமைவன:
“இல்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு” (குறள்: 951) என்ற குறளில்
(ப.மே.) : உயர்குடிப் பிறந்தாரிடம் மட்டும் செப்பமும், நாணமும் ஒருங்கே காணப்படும் என்று கூறுகின்றார்.
(ம.கு) : நடுவுநிலைமையும், பழிநாணுதலும் ஒருங்கே உயர்குடிப்பிறந்தார் அல்லாத பிறரிடம் காணமுடியாது என்கிறார். ஆயினும் உலகமக்கள் எவர்க்கும் இக்குணம் இன்றியமையாதது என்பது பொது விதி. ஒருவர் எக்குடியில் பிறந்தாரோ அக்குடியின் பண்புகள் பல இயல்பாகவே அவரிடம் அமைந்திருக்கும் என்பது உண்மை.
“தந்தையர் ஒப்பர் மக்கள”; (தொல் 1093 : 23) எனற் தும ; இகக் ருதN; த ஆகும.; தாயைப் போலப் பிள்ளை என்பதும் பழமொழி.
“ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கா குடிப் பிறந்தார்” (குறள்: 952)
என்ற குறளுக்கு
(ம.கு.) : ஒழுக்கமுடைமை, மெய்ம்மை கூறுதல் அற்றம் மறைத்தல், நாணமுடைமை மூன்றும் உயர்குடிபிபிறந்தரிடம் தப்பாது என்கிறார்.
(ப.மே.) : கல்வியானன்றித் தாமாகவே இம்மூன்றும் பெற்று வாழ்வார் என்கிறார். நற்குடி உறுப்புகள்: நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்கும் வகை என்ப வாய்மைக் குடிக்கு
(ம.கு.) (ப.மே.) : முகமலர்ச்சி, கொடை, இனியவை கூறல், இகழாமை, குலத்திலுள்ளோர்க்கு அங்கமாகும் என்று கூறுகின்றனர்.
“தொல்லோர் மாயந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கு அறத்தழீஇ” (புறம் 58)
குடிப்பெருமை வழி வழியாக வரும் சந்ததியினர்க்கு பெருமைதரக் கூடியது. அது காக்கப்பட வேண்டிய ஒன்று. குடும்பத்தைக் காக்கும் பொறுப்புடன், குடிப்பெருமையையும் காக்கும் பொறுப்பு தலைவனுக்கு உண்டு, தடுமாற்றம் இல்லாமல் நடத்திச் சென்றதைப் புறநானூறு 58-வது பாடல் கூறுகிறது.
பெருமை:
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (குறள் 972) என்ற குறளுக்கு
(ம.கு.): எல்லா உயிர்கட்கும் பிறப்பால் வேறுபாடில்லை ஆயினும் தான் செய் தொழிலினது சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது என்கிறார். எனவே இது பெருமையாவது குலத்தினால் அறியப்படாது என்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
(ப.மே.): எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே எனினும், பெருமை, சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா, அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான் என்கிறார்.
“மேல்இருந்தும் மேல்அல்லர் மேல்அல்லர்: கீழ்இருந்தும்
கீழ்அல் லார் கீழ்அல் லவர்” (குறள்: 973) என்ற குறளில்
(ம.கு.): மேலான இடத்திலிருந்தாலும் மேன்மையில்லாதார் மேன்மக்களாகார் கீழான இடத்திலிருந்தாலும், கீழ்மையில்லாதார் கீழ் மக்காளகார் என்றார்.
(ம.மே.): செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியர் ஆகார் அன்றிப்பெரியர் தாழ்ந்த வறுநிலத்து இருந்தார் ஆயினும் சிறியராகார் என்றார்.
(கா): மனையும், மாடும், பொருளும், பூமியும் முதலியவற்றில் மேலாயினாரும், தம் குலமும், ஒழுக்கமும், குணமும் நாணமும் முதலியவற்றால், மேம்பாடுடையர் அல்லாதார் யாவர். அவர் எஞ்ஞான்றும் சாலச் சிறியரே. இனி இவற்றில் மனை, மாடு முதலியவற்றால் கீழ்ப்பட்டிருந்தும். குலமும், ஒழுக்கமும் முதலியவற்றில் சிறிதும் கீழ்மைப்பாடு உடையரல்லாதார் யாவர் அவரே சாலப் பெருமையர் என்பது பொருளாயிற்று
தூண்க்கள்:;:
“அன்பு, நான் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண”; (குறள:; 983) என்ற குறளில்
(ம.கு) (ப.மே): அன்புiடைமை, பழி நாணுதல், ஒப்புரவுடைமை, கண்ணோட்டம, மெய்யுரை என்ற ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்களாகும் என்று கூறுகின்றனர்.
திரு. முருகரத்த்தினம்:;:;: குறள் கூறும் இறைமாட்சி என்ற நூலில் “ஊக்கமுடைமை உள்ளம் பற்றியது. ஆள்வினை உடைமை உடல்பற்றியது என்று கூறுவது கருதத்தக்கது ஒரு காரியத்தை அந்த காரியம் குறையாமல் முடித்தல் என்பது பொதுவாக மெய்ம் முயற்சிக்குப் பொருள் கொள்ளலாம்”.
“சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர்” (குறள்: 962) பெருஞ்சிறப்பும் பேராண்மையும் வேண்டுபவர் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
(கா): சூரிய செல்வம் பெரிது உய்ப்பினும், சரீ ல்லனவற்றைச் செய்யக்கருதாரே, தம் குடிமையாகிய சீர்மைப்பாட்டோடு பெரிய அண்மைப்பாடும் விரும்புவார் என்றவாறு.
நற்கு;குடிப்ப்பிறந்த்தார் கடைப்ப்பிடிக்க்க வேண்டி;டியவை: குடிப்பெருமையை காக்க நினைப்பவர் முன்னோர் கடைப்பிடித்த மன ஊக்கத்தை விட அதிகமாக மன ஊக்கம் உடையவராய் விளங்க வேண்டும். ஒரு கட்டத்திற்கு அத்திவாரம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளது முக்கியம், மன ஊக்கமே ஆகும். ஒரு செயலின்
ஆக்கத்திற்கு அது அடிப்படை என்றாலும் அதனுடன் செயலிலும் உறுதி குலையாத மனத்தின்மை வேண்டும்.
“சான்றோர் கடன் நிலை குன்றாலும் இவர்” என்று நற்றினை கூறுகின்றது.
மன உறுதியும், ஊக்கமும், திடமும்கொண்டு ஒரு செயலில் ஈடுபடும் பொழுது செய்யத்தகாத செயல்கள் செய்யும் சூழ்நிலை ஏற்படுமானால், அவற்றிற்கு நாணும் உயர்வான இயல்பான பண்பு தோன்ற வேண்டும். அவ்வமயத்தில் பிறரால் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்து முடிப்பேன் என்று கருதுவதே அவர் குடிக்கு பெருமை சேர்க்கும், காக்கும், அவ்வாறு செயலைச் செய்து முடிக்கும் பொழுது செருக்கு கொள்ளக் கூடாது.
குடிப்ப்பிறந்த்தாருடன் கூடுதல் :
“கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார், தம்மோடு
கூடுவது கோடி பெறும்” என்று நான்கு கோடிப் பாடல் கூறுகின்றது.
“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்து யாக்க நட்பு” (குறள்: 793)
என்ற குறளில் தனக்கு பழிவரும் என வெட்கப்படுவனை நல்ல குடியில் பிறந்தவனை, பிறரால் பழிக்கப்படக் கூடாது என அஞ்சுபவனன் நட்பாக்கிக் கொள்ள வேண்டும். நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் பழிக்கு அஞ்சுபவனோடு நட்பு கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

கன்பு;பூசியசு: “நேர்மையும் உண்மையும் உள்ள மனிதனுடன் நட்புக் கொள்வது நல்ல நட்பாகும்” அனுபவம் வாய்ந்த மனிதனை நண்பனாகப் பெறுதல் நல்ல நட்பாகும்
என்கிறார்.
“குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” (குறள்: 794)
என்ற குறளில் ஒருவரை நட்பாக்கிக் கொள்ளும் பொழுது அவனது குணம், குடிப்பிறப்பு, குறைகள், அவன் சார்ந்த இனம் அறிந்து, தன்மீது பழிவராமல் பாதுகாப்பவனை நட்பாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.
(ம.கு.) (ப.மே.) : உயர்குடிப்பிறந்து, தன் மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது என்கின்றனர்.
நல்ல்ல சுறற்ம் அமையவழி:
“குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு” (குறள்: 1025) என்ற குறளில்
(ம.கு) : குற்றப்பட ஒழுகுதல் இல்லாமல் தன்குடியை ஓம்பி ஒழுகுவானை உலகத்தார் எல்லாம் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவருவர்
குடியின் பெருமைப் பண்பு;பு;:;:
“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல”; (குறள:; 954)
என்ற குறளுக்கு
(ப.மே): நிலத்தின் இயல்பை அதில் முளைத்த முளை காட்டுவது போல குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் என்றார்.
(ம.கு.): வித்து நிலத்தில் மறைந்து கிடந்தாலும், அதன் முளை மறைந்து கிடந்த தன்மையை அறிவிக்கும் என்றார். குடியின் பெருமையைக் காக்க விரும்புவோர் தூய்மையாகத் திகழ வேண்டும். மண்ணினின்று வெளிப்படும் பயிருக்கும், வாயினின்று வெளிப்படும் சொல்லுக்கும் ஒற்றுமை உண்டு. மண்ணின் வளத்திற்குத்தக்க பயிர்கள் விளைவது போல மக்களின் மனம் போல, வளத்துக்கு ஏற்ப சொற்கள் வெளிவருகின்றன.
“தீர்வை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்” (புறம் 391 : 9)
“பழங்குடி நிறைந்த பழநகரிலே” சென்று கேட்டேன் என்று (புறம் 335:8) என்று குடியின் பெருமைப்பண்பினனை புறநானூறு பகர்கின்றது.
நல்கு;குடியில்ப்பிறந்த்தார்:
“நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி பகைஉள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு” (குறள்: 995)
என்ற குறளில் பிறரை எக்காரணத்தாலும், விளையாட்டாகக் கூட இகழ மாட்டார்கள் பண்பாளர்கள். பகைவரிடத்தும் பண்பான சொற்களையே பேசுவார்கள்.
“கொல்லா நலத்தது நோன்மை: பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு” (குறள்: 984)
என்ற குறளில் பிறர் நமக்குத் தீங்கு செய்யினும், அதனைப்பிறரிடம் எடுத்துக் கூறி மற்றவர்கள் அவரைத் தவறாக எண்ணுமாறும், தம்மீது பரிவு கொள்ளுமாறும் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கார் என்றார்.
ஒருவரிடம் குணம், குற்றம் இரண்டும் இருக்கும் எது அவரிடம் மிகுதியாக இருக்கிறதோ, அதை வைத்து மதிப்பதே அறம், ஒருவரிடம் உள்ள குணங்களை மறைத்து, குற்றங்களைப் பெரிதாக்கி, மற்றவரிடம திரித்துக் கூறுதல் கூடாது.
மார்கஸ் அரேலியஸ்:;: ரோம் நாட்டு;டு மன்ன்னன் “என்னைப் பொறுத்தவரை உலக
இயற்கை எதனை எனக்கு அளிக்கிறதோ அதனைப் பணிவுடன் ஏற்றுக் கொள்வதே
என் வேலை. தீங்கு செய்கின்றவன் தான் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்”
என்று கூறுகிறார். இதனை (கு 987) உணர்த்துகின்றது.
தள்ள்ளத்த்தக்க்கன: குடிக்கு தாழ்வு ஏற்படுத்தக் கூடாது. கோடி, கோடியாகக்
கிடைப்பதாயினும் நல்ல குடியில் பிறந்தர், தனிநலம், பயன் கருதி குடிக்குத் தாழ்வு
வரும் செயல்களைச் செய்தல் கூடாது.
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்” (குறள்: 954) என்ற குறளுக்கு
(ப.மே.): பல கோடிப் பொருள்களைப் பெற்றாலும் தம் குடிக்கு தாழ்வான
செயல்களைச் செய்யக்கூடாது என்கின்றார். குடிக்குப் பழி வரக்கூடாது என
எண்ணுபவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். உயிர் பெரியதா? நாணம்
பெரியதா? என்ற நிலை ஏற்படும் போது உயிருக்காக நாணத்தைத்துறத்தல் கூடாது.
“நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண் ஆள்பவர்” (குறள்: 1017) என்ற குறள் வழி திருவள்ளுவர்
கூறுகிறார்.
குடிஉயரச ; செய்த்தல:;:; வ.சுப.மா : அறிவும் ஆள்வினையுமே குடிசெயல் வள்ளுவம் ஆகும். சமூகப் பழக்க வழக்கம், சட்டதிட்டங்கள், கொள்கைகள் ஆகும்.
முயற்சி செலவு குறித்து மடிமையூட்டும் எதனையும் உதறுமின்! அறிவோட்டம் தடுத்து இருட்படுத்தும் எதனையும் ஓட்டுமின்! அகத்தூய்மை குறைந்து வஞ்சனை பெருக்கும் எதனையும் அகற்றுமின்! முயற்சி, அறிவு, தூய்மை இவைகட்கு இடைய+ராதனவற்றைக் களையுமின்! அவற்றிற்கு உறுதுணையானவற்றைப் பற்றுமின்! இதுவே வாழ்வியல் ஆகும் எனக் குடி உயர வழிகள் கூறியுள்ளார்.
கெலாயசு: பணமும் , பதவியும் , குருட்டு விதியினுடைய பரிசாக இருக்கலாம். அதனால் நல்ல குணங்கள், ஒருவனுடைய முயற்சியைப் பொறுத்து இருக்கிறது என்கிறார்.
“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையால் நீளும் குடி” (கு 1022)
ஆள்வினை என்பது இயற்கை அறிவு, செயற்கை அறிவோடு கூடி நிரம்புதலாகும். (ம.கு), (ப.மே):- இருவரும் முயற்சியும், நிறைந்த அறிவும் இரண்டினாலும் குடி உயரும் என்கின்றனர்.
ஐன்ஸ்ஸ்டீ;டீன்:;:;: உலகம் மிகப்பரந்தது. அதில. மக்கள் முயற்சியைப்பொருத்தும், திறமையைப் பொருத்துமே முன்னேறுகிறார்கள் என்கிறார்
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்” (குறள்: 1023)
(ம.கு), (ப.மே):- இருவரும் தன் குடியை உயரச் செய்வேன் என்று கருதி அதற்கேற்ற வினைகளினால் முயலும் ஒருவனுக்கு தெய்வம் ஆடையைச் சுற்றிக்கொண்டு தான் முந்துற்று நிற்கும் என்றார்.
கதே: எல்லாவற்றையும் பற்றியும் ஏங்கி, ஏங்கி மனம் வெறுத்துப் போக வேண்டாம். எல்லாவற்றிலும் நம்பிக்கை கொண்டு முயற்சி செய்யுங்கள் முன்னேறுங்கள் என்கிறார்.
ஆற்ற்றல்:;:;: பிறரால் பழிக்கப்படாமல் வாழ்வதே குடிமக்களுக்குச் சிறந்த ஆற்றல் என்கிறார்.
அரிசுடாட்டி;டில்:;:;: செயலுக்குரியவனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல குடியில் பிறந்து நீங்கி பழிபாவங்களைச் செய்ய அச்சமும் நாணமும் கொள்ளும் நல்லவனையே ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.
“ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை (குறள்: 291)
என்னும் குறளில்” பிறரால் பழிக்கப்படாமல் வாழ்வதே கெட்ட பெயர் வராமல் பாதுகாத்துக் கொண்டு வாழ்வது ஆற்றல் ஆகும். ஒவ்வொருகுடிமகனும் அவ்வாறு வாழ்ந்தால் நாடு சிறக்கும். மக்கள் துன்பமின்றி, பயமின்றி வாழலாம்.
பெட்ர்ரண்ட்ர்ரஃசல்:;:- கடின உழைப்பின் மூலம் பெறப்பட்ட வெற்றியால் தான் மேன்மேலும் செய்ய வேண்டிய முயற்சியைத் தூண்டக்கூடிய ஆற்றல் இருக்கிறது
என்கிறார். முயற்ச்சிக்குத் துண்டுகோல் ஆற்றலாகும்.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றா மினசயா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம் 314)
என்று ஒளவையார் வல்லாண்மை உடைய ஆடவரின் பெருந்தன்மையால் குடிவிளக்கம் பெறும் தன்மையைத் தெரிவிக்கிறார்.
குடியில் பிறந்த ஒருவர் அக்குடியின் பெருமையைக் காத்தல் போலவே பெருமையை மேலும் உயர்த்துவதற்கும் பாடுபட வேண்டும். அதனை அவர் தம் வாழ்நாளின் சிறந்த கொள்கையாகக் , குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். குடிப் பெருமையை உயர்த்துவது எளிதல்ல. அரிய செயலாகும். முயற்சி மேற்கொள்ளும் போது பற்பல இடைய+றுகள் வரும், குறிக்கோளை, இலக்கினை அடைய அதனை நோக்கமாகக் கொண்டு முன்னேற எண்ணியதை எண்ணியவாறு முடிக்க வேண்டும்.
பண்பு;புடைமை:
“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு” (குறள்: 992)
(ப.மே): பிறர்மேல் அன்புடையனாதலும், உலகத்தோடமைந்த குடியின் கண் பிறத்தலும் ஆகிய இரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி என்கிறார்.
(கா): யாவா மாட்டும் பரிவுடைமை, நெறி அமைந்த தம் குடிப்பிறப்பு என்னும் இவை இரண்டும் ஒருவர்க்கு உளது ஆயின் பண்புடைமை என்னும் முறைமை ஆம் என்கிறார்.
“ஆற்றுதல் என்பது ஒன்றலர்ந்தவர்க் குதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்” (நெற்தற்கலி 16) என்று அறவாழ்வின் இன்றியாமையாத பண்பாக நெய்தற்கலியில் பண்புடைமை போற்றப்படுகிறது.
“குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நான்இன்மை நின்றக் கடை” (குறள்: 1091)
(ம.கு): ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச்சுடும். அதுபோல
நாணின்மை தமது நலத்தினைச் சுடும் என்றார்.
(ப.மே): ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைக்கு அவன் குடிப்பிறப்பொன்றினையும் கெடுக்கும். ஒருவன், மாட்டு நாணின்மை நின்ற வழி அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும் என்றார். ஒழுக்கமின்மையே இன்று வரும் எய்ட்ஸ் நோய்க்கு முக்கிய காரணமாகும். இதனை அன்றே திருவள்ளுவர் கூறி எச்சரிக்கிறார்.
“கருமம்செய் ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்” (குறள்: 1021)
(ப.மே) (ம.கு): இருவரும் தன் குடி உயர கருமஞ் செய்ததற்கு ஒழியேன் என்று சொல்லுகின்ற பெருமை போல பீடுடையது இல்லை என்கிறார்.
காலம் அறிந்து;து செய்த்தல்:;:
“குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும” (குறள்: 1028)
(ம.கு): குடியோம்புபவருக்கு பருவம் இல்லை. தம் குடும்பத்தின் நிறையை நினைத்து குடிகெடும். குடிசெய்வார் இன்ப நுகர்ச்சியை விரும்பார் என்றார்.
(ப.மே): தம் குடியினை உயரச் செய்பவர், அச்செயலை நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து மானத்தைக் கருதுவாராயின் குடிகெடும். ஆதலால் அவர்களுக்குக் கால நியதி இல்லை என்றார்.
குடிப்பெருமையை உயர்த்n;த்த மேற்n;கொள்ளு;ளும் பணிகள்:;: குடிப் பெருமையை உயர்த்த தம்மால் ஆனதைச் செய்வோம். மற்றவர்களைப் பற்றிக் கவலை இல்லை எனக் கொண்டால் தம் குடிக்கு பெருமை வரினும் பிறரால் வரும் பெருமை பயன்தராது போதலும் உண்டு. தம்மால் குடிக்கு வரும் பெருமை – பிறரால் குடிக்கு வரும்பழி ஸ்ரீ பயனின்மை
ஜவஹர்லால் நேரு: தனிமனிதனுக்குள் வலிமையை விட அந்தச் சமுதாயத்திற்கே அதிக வலிமையுள்ளது இதை உணர்ந்தே செயல்பட வேண்டும் என வல்லாண்மை பற்றிக் கூறிகிறார்.
“நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல’; (குறள:; 1026)
தாம் பிறந்த குடியை ஆளும் தன்மை இயல்பாக விளங்க வேண்டும். குடிப்பெருமை என்பது ஆலமரம் போன்றது. அதனைத் தாங்கும் விழுதுகளாக குடியில் பிறந்த ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். ஒரு பொருளின் புவி ஈர்ப்பு விசை போல குடியில் பிறந்த ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும்.
(ம.கு): ஒருவனுக்கு மிக்க ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை, மனதின் கண் போக்கிக் கோடல் - இதுவே குடியோம்புதல் ஆகும் என்கிறார்
(ப.மே): ஒருவருக்கு நல்ல ஆண்மை என்பது. தான் பிறந்த குடியினை, ஆளுந்தன்மையைத் தனக்கு உளதாக்கிக் கோடல், குடியிலுள்றோரை உயரச் செய்து தன் வழிப்படுத்துதல் என்கிறார்.
தனிமனிதனும் சுற்ற்றமும் : சூரியனைச் சுற்றிச் சுழலும் கோள்கள் போல் ஒருவரின் உறவுகள் உறவு கொள்வர். விருந்தினரும், நண்பரும் சுற்றத்தினர் ஆவர்.
சுற்ற்றம்:;:
ஒக்கல், கேளிர், தமர், துன்னியர் என்று கூறுவர்.
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தஊன்றம் தூண்” (குறள்: 615)
தன் இன்பத்தை விரும்பாமல் தான் எடுத்த செயலை முடிக்க விரும்புபவன், தன் உறவினரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான் என்கிறார்.
“ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்”
“அரசுவரின் தாங்கும் வல்லா வின்னே” (புறம் 327, 5, 7)
அவனைச் சார்ந்த சுற்றத்தார் பசியால் வாடாது காக்கும் பொருட்டு, தனக்கு தர வேண்டிய வரகின் அளவினைக் கடலாகப் பெற்று சுற்றத்தாரைக் காக்கும் பண்பினைச் சுட்டுகின்றனது. இப்பாடலால் சுற்றத்தினரைக் காத்தல், தன்மான உணர்ச்சி பற்றி அறியலாம்.
“ஒருவன் ஆட்டும் புல்வாய்போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா” (புறம் 193)
என்று சுற்றத்தோடு கூடி வாழ்த்தலைப் புறநானூறு கூறுகின்றது.
நிறைவுரை:
காணிங்:;:;: சமூகத்தின் அமைப்பும் வளர்ச்சியும் தனி மனிதரின் பண்பில் இருக்கிறது என்று கூறுகிறார். இதனையே குறள் 992 குறிப்பிடுகின்றது. சுக்க்கல:P:P இந்த உலகத்தில் நல்ல முறையில் வளர்க்கக் கூடிய ஒரு சிறிய பகுதி கட்டாயம் இருக்கிறது அந்தச் சிறிய பகுதி தான் நீங்கள் என்று குடிமக்களைப் பார்த்துக் கூறுகிறார்.
லாக்சு;சு: மனிதர்களின் செயல்களே அவர்களின் எண்ணங்களின் விளக்கமாகும் என்கிறார்.
கெர்பார்ட்N;கேசன்:;:;: நீங்கள் எப்படிப்பட்டவர்? உங்களுக்கு என்ன தெரியும்?
உங்களால் என்ன செய்ய முடியும்? என்பவைகளைப் பொறுத்தே உங்களுடைய வாழ்க்கை அமையும் “ஒரு நல்ல குடி மகனாக சாதிக்க வேண்டியவற்றை சாதிக்கலாம்” என்கிறார்.
அரிசுடாட்டி; ல்:;:;:;: தொலை நோக்கும், செயல்திறனும் வெற்றிப்படிகள் ஆகும் என்கிறார்.
“நலன்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு” (குறள்: 960) என்னும்
(ப.மே) (ம.கு): இருவரும் நலம் வேண்டுமானால் நான் உடைமை வேண்டும். குலம் வேண்டுமானால் பணிவு வேண்டும் என்கின்றனர்.
“குடியும் மன்னுந்தானே, கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தாகை;குச்
சிறையும் தானே – தன் இறைவிழு – முனினே” (புறம் 314)
என்ற புறநானூற்றுப் பாடல் குடும்பம் புகழ் மிகுந்து மனைக்கு விளக்கமாகத் திகழ்கின்றவனே” என்று கூறுகிறது. திருக்குறளில் கூறியுள்ள குடி, குலம், குடிமை, குடும்பம் பற்றிய செய்திகள் சங்கத்தொகை நூல்களிலும் பரவிக்கிடந்தமையை நாம் அறிகின்றோம்.
மேற்N;கோள ; நூல்க்கள:;:;
1. திருக்குறளார் வீ. முனுசாமி திருக்குறள் உரை விளக்கம் 193 திருமகள் நிலையம், சென்னை – 1.
2. ஆசி அம்பலவாணர் அரசறிவியல் மூலத்தத்துவங்கள் மாவட்டப் பொது நலம் நூலகம், சென்னை – 7.
3. அரசியல் கோட்பாடுள் மாவட்டப் பொது நலம் நூலகம், சென்னை – 7.
4. ஒப்பீட்டரசியல் மாவட்டப் பொது நூலகம், சென்னை – 7.
5. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை திருக்குறள் உரை 1999 வர்த்தமானன் பதிப்பகம்
6. புலியூhக்கேசிகள் புறநானூறு தெளிவுரை 1958 பாரி நிலையம், சென்னை 108.
7. கோ. வடிவேலு செட்டியா மணக்குடவர் உரை 1925 நோபில அச்சியந்திரச்சாலை
8. டாக்டர் கு. மோகனராசு திருவள்ளுவரின் குறிக்கோளியலும் உலகப்பொதுமறையிலும் சென்னைப் பல்பலைக்கழகம், 1983.
9. புலவர் க. சனீ pவாசன ; திருககு; றள ; பரிமேலழகர் உரை 1997 கேலகஸ் p கம்யூட்டர் சிஸ்டம், செ-24
10. பதிப்பாசிரியர்:அர. சிவப்பிரகாசம் திருக்குறள் உரைக்கொத்து 1990 ஸ்ரீ குமரகுருபரர்அச்சகம்.
11. அ.வெ.இராமாசாமி திருவள்ளுவரும், பன்னாட்டு அறிஞர்களும் 1999 திருவள்ளுவர் பதிப்பகம்-621 012.
12. திரு.சு.அ.இராமசாமிப்புலவர் புறநானூற்றுக் கதைகள் ஸ்ரீ காசிமடம் திருப்பனந்தாள் 1953 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 1.
13. புறநானூற்றுச் சொற்பொழிவுகள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை–1.
சுருக்க்க விளக்க்கம்
1. மணக்குடவர் (ம.கு)
2. பரிமேலழகர் (ப.மே)
3. பரிப்பெருமாள் (ப.பெ)
4. காலிங்கர் (கா)
5. கார்ல்மார்க்ஸ் (காமா)
6. திருக்குறள் உலகப்பொதுமையிலும் குறிக்கோளும் (தி.உ.பொ.கு)
7. வ.சுப. மாணிக்கனார் (வ.சுப)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard