பண்டைத் தமிழ் மக்களைப் பற்றிய செய்திகள் விபரங்களை காட்டும் காலக் கண்ணாடியாக நம்ம்டிஅம் உள்ளதே சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் ஆகும். இவை மக்கள் வாழ்வை வெகு ஜனப் பார்வையாக 'அகம்'- த்லைவன் & தலைவி காதல், இல்வாழ்க்கை பற்றி வீட்டின் உள்ளே எனவும்; 'புறம்' என்பது அரசு, போர் என வீட்டிற்கு வெளியே என்ற அமைப்பில் இயற்றப்பட்டது ஆகும்.
பாட்டுத் தொகை நூல் பாடல்களில் அகம்- புறம் அமைப்பிலும் தமிழர் வாழ்வில் இறை நம்பிக்கை, தத்துவம், கோவில் அமைப்புகள் பற்றிய செய்திகள் நிறையவே உள்ளது
சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அரசர்கள் பெயரில் ஆன கல்வெட்டு, அரசர்கள் வெளியிட்ட காசுகள் போன்றவை மட்டுமே தெளிவாக சங்க காலத்தைக் வரலாற்று ரீதியில் குறிக்க இயலும்.
தமிழ் பிராமி கல்வெட்டில் சங்க கால சேர அரசர்கள் பெயர்
கரூர் மாவட்டத்தில் புகளூர் -வேலாயுதம்பாளையம் ஆறு நாட்டார் மலையில் உள்ள பழமையான கல்வெட்டுகள் சேர மன்னர்கள் சமண முனிவருக்குச் குகைப் படுக்கை செய்து தந்தது கூறப்பட்டு உள்ளது.
கரூர் மாவட்டத்தில் புகளூர் -வேலாயுதம்பாளையம் ஆறு நாட்டார் மலையில் உள்ள பழமையான கல்வெட்டுகள் சேர மன்னர்கள் சமண முனிவருக்குச் குகைப் படுக்கை செய்து தந்தது கூறப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டு கொண்டு தான் சங்க காலம் குறிக்க வேண்டும் எனப் பல அறிஞர்கள் வலியுறுத்தினர்.
புகழூர் கல்வெட்டு :
மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்
கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்
இக்கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டுள்ள சேர மன்னர்கள், கோ ஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பவர்க ளாவர். இவர்களில் கோ ஆதன் சேரல் இரும்பொறையின் மகனே பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ பெருங்கடுங்கோவின் மகன். இக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.
இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக தமிழ் அறிஞர்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது. புகழூர் கல்வெட்டின் காலம் பொஆ.200ஐ ஒட்டியது என 1968 2ம் உலக தம்ழி மாநாட்டில் கட்டுரையில் கூறி உள்ளது.
முதல் இரண்டு காசுகளின் எழுத்துரு புகழூர் கல்வெட்டு ஒட்டி பொஆ. 2ம் நூற்றாண்டு பிற்பகுதி எனவும், மாக்கொதை 3ம் நூற்றாண்டு மேலும் குட்டுவன் கோதை 4ம் நூற்றாண்டு என அறிஞர்கள் குறித்து உள்ளனர்.
புகழூர் கல்வெட்டு கொண்டும், பதிற்றுப் பத்து மற்றும் புறநானூறு பாடல்களில் உள்ள சேர மன்னர்கள் வரிசைப்படி சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188- 243 என ஆகிறது. செங்குட்டுவன் பிறகு 10 தலைமுறை மன்னர்கள் வாழ்ந்தனர் என அறிஞர்கள் கருத்து படியே சேர அரசு பொஆ 5ம் நூற்றாண்டு பிற்பகுதி வரை ஆட்சி இருந்ததும், இந்தக் காசுகள் அந்த மன்னர்களால் வெளியிட்டதும் தொல்லியல் உறுதி செய்கிறது.
பத்துப்பாட்டு பாடல்களில் 7 நூல்களின் பாட்டுத் தலைவர் அரசர்கள் செங்குட்டுவனிற்கு சமகாலம், பின்னர் ஆட்சி செய்தவர்கள். அதில் சிறுபாணாற்றுப்படை மூவேந்தர் ஆட்சிகள் மறைந்து ஓரிரு தலைமுறை பின்னர் புலவர் பாடியதாக அமைந்து உள்ளது, அதாவது பத்துப் பாட்டு பொஆ 250 முதல் 550 வரை வாழ்ந்த மன்னர் பற்றியது ஆகும். புறநானூறு இதே அரசர்களைக் கூறுவதால் இதற்குப் பிறகு தொகுத்த நூல் ஆகும்.
எட்டுத் தொகை நூல்களில் பரிபாடல் மற்றும் கலித்தொகை மொழிநடை, யாப்பு வளர்ச்சி, அதிகமான புராண சம்பவங்கள் பற்றிய குறிப்புகள் கொண்டும், எந்த அரசர் பெயரும் இல்லாதமையால் இவை 7ம் நூற்றாண்டு பிற்பகுதியை ஒட்டியது எனப் பல அறிஞர் குறித்தனர். பரிபாடல் 11ம் பாடலில் புதுப்புனல் வந்த பௌர்ணமி நாள் பற்றிய பஞ்சாங்கக் குறிப்புகள் கொண்டு எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை அதை பொஆ.634 ஜூன்.17 எனக் குறித்தது, தமிழியல் யாப்பு அடிப்படையிலும் சரியாக உறுதி ஆகும்
பாட்டுத் தொகை நூல்களுள் பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படை 6ம் நூற்றாண்டு இறுதி அல்லது அதற்கு பிந்தையவை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் மொழியியல் மாற்றங்களை பேராசிரியர் அகத்தியலிங்கம் 5 நூல் தொகுப்பாக விவரித்துள்ளது.
அதன் முடிபுகளில் காலம் குறிப்பிடவில்லை, ஆனால் பரிபாடல்- 7, அதன் பின்னர் கலித்தொகை, பின்னர் திருக்குறள், அதன் பின்னர் திருக்குறள் மணிமேகலை என்ற வரிசை வருகிறது, இந்த முடிபிற்கான ஆதாரங்களே இந்நூல் தொகுப்பு.
வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா இவை ஏதும் பாட்டுத் தொகையின் முந்தைய நூல்களில் இல்லை, இவை எழுந்த பின்னரே தொல்காப்பியம் இயற்றி இருக்க முடியும்;
ஆயிரம் முகத்தான் ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்று -என்பது நன்னூல்;தொகை நூல்களின் பாயிர கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் 9/10ம் நூற்றாண்டில் இணைத்தது. ஆனால் தொல்காப்பியத்திற்கு பாயிரம் உள்ளது. திருக்குறளில் வள்ளுவர் இயற்றிய பாயிரம் 4 அதிகாரம் கொண்டது