நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – பதிற்றுப்பத்து 24)
வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார். மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை) பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில் வேதம்பிராமணர்களை தான் குறிக்கிறது. ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5 ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை - சிலப்பதிகாரம் 15-70 ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25 ஓத்து இலாப் பார்ப்பான் உரை இன்னா நாற்பது 21
வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து) அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை) இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர் நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை துறவி எனும் பொருளில் வள்ளுவர் ஆண்டுள்ளதை, அந்தணர் குல மரபை ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர். அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ, வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
..............அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும் திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், நீத்தார் பெருமை துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்
திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும். வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.