வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை. மணக்குடவர் உரை:இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு. பரிமேலழகர் உரை:வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்). மு. வரதராசன் உரை: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான். கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். சாலமன் பாப்பையா உரை: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான். யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். - குறள் 346 துறவு. 'நான்', 'என்னுடையது' என்னும் இந்த பிறப்பின் செருக்கு ஒழிப்பவன் தேவர்கள் வாழும் வானுலகை காட்டிலும் மேலாகிய உலகத்தை அடைவான் “வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள்.
மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும். பரிமேலழகர் உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும். (மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும்யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மு. கருணாநிதி உரை: யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான். சாலமன் பாப்பையா உரை: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான். Translation: Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine. Explanation: He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain. Manusmriti 12:90 Translation: Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed. Explanation: He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven. Sanskrit text, Unicode transliteration and English translation by Ganganath Jha: प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् । निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥ ९० ॥ pravṛttaṃ karma saṃsevyaṃ devānāmeti sāmyatām | nivṛttaṃ sevamānastu bhūtānyatyeti pañca vai || 90 || He who devotes himself to the ‘active’ side, attains equality to the gods; while he who devotes himself to the ‘passive’ section, passes beyond the five material substances.—(90) Medhātithi’s commentary (manubhāṣya): (A) “It has been said that the ‘active’ act is that which brings about desirable rewards; and among actions leading to desirable rewards, some securing for the agent Heaven or some such results, while some bring about only visible results. There is none that is known to bring any such desirable result as ‘equality to the gods.’ Why then should it be said that the man ‘attains equality to the gods’? Those actions also in connection with which no particular rewards are mentioned,—such for instance, as the Viśvajit and other sacrifices,—have been held to have their reward in the attaining of Heaven. Thus we do not know what those acts are of which the reward consists in attaining ‘equality to the gods.’—It will not be right to argue in this connection that—‘Those actions that have been laid down as bringing a particular reward, when done by men who have no desire for that reward, bring about the said equality to the gods.’—as this would involve the rejecting of what is directly asserted and thus assuming of that which is nowhere asserted. In fact what is spoken of in the Veda as the ‘reward’ of actions is something that is desired, such as village, Heaven and so forth, and not the taking of poison and such things. Under the circumstances, to say that ‘equality to gods’ is attained (as the result of acts) and yet it is not ‘desired,’ would be a contradiction in terms.—‘How is it then that under Prohibitions, such results are mentioned as not desired?’—It is in the very nature of the prohibited act that its results should be undesirable; what is evil cannot be desired [and the result of the prohibited act can only be evil]. If it be held that ‘equality to gods’ is the result of the compulsory acts, then that would deprive these acts of their ‘compulsory’ character;—a character that has been understood to belong to them on the basis of the declaration that they are to be performed ‘as long as one is alive.’ If it be absolutely necessary to assume some reward in the case of these acts also, we may assume it to consist in ‘escaping from sin;’ as such a reward, if assumed, would not be inconsistent with the compulsory character of the acts.”
(B) “As regards the latter part of the verse—‘passes beyond the five material substances’— we do not understand how ‘atyeti’ can mean ‘passes beyond’ or ‘becomes freed from.’ As a matter of fact, ‘atyaya’ is used in the sense of ‘laya,’ ‘becoming resolved into’; and certainly it is not meant that the soul ever becomes ‘resolved into’ the material substances; what is meant is that ‘it becomes one with Brahman.’ Others also have explained the passage to mean that ‘the man goes beyond (atikrāmati) the five material substances,’—i.e., ‘his body is no longer made up of the five substances, it becomes purely luminous.’ But this also is nothing; as ‘Liberation’ means not being fettered with a body; so that whether the body is take to be constituted of five substances, or of only one (Light), it is all the same so far as the metempsychic bondage of the Soul is concerned.” “For these reasons some other explanation, has to be found for this verse.” The answer to the above is as follows:— (A) The question has been asked—“What action is that of which equality to gods is the reward? The compulsory acts have no reward, while those that are done for the purpose of obtaining a reward, have distinct rewards mentioned along with them.” Our answer to this is, that the reward spoken of in the text is not one that is held to follow from all Vedic Acts; what is meant is that if a man does an act of the ‘passive’ kind, but with a distinct desire for its result (in the shape of Liberation), and somehow fails to attain it, then the reward that he obtains is equality to the. gods. The purport of it all is that, of all that is laid down in the Ritualistic Section of the Veda, the culminating point of the reward is the attainment of equality to the gods, and not Liberation. As for the acts prescribed in the Esoteric Section of the Veda, which leads to the result that the man never again returns to metempsychic existence,—if the Agent happens to be desirous of obtaining a reward, he becomes tainted by that hankering, and that act of his turns out, on account of that taint, to be a cause of bondage. It is in the very nature of actions that they prompt the Agent, to undertake them for the purpose of bringing to him a definite reward. Thus the compulsory acts also, if left undone, become sources of sin; and as such these also tend to invest the Agent with a material body (for the experiencing of the fruits of that omission).—“If one performs the compulsory acts, and does not perform those that are conducive to rewards, or those that are forbidden, there being no acts that would bring about a material body for him, the man would naturally attain Liberation;—where then would there be any use for the ‘knowledge of self’? This is what has been declared in such passages as—‘With a view to avoid sin, one should perforin the compulsory and occasional acts; it is only when one is unfit for Liberation that he undertakes such as are either forbidden or conducive to desirable results.’”—This has been explained already: Knowledge is necessary for the destruction of Ignorance; until Ignorance has been destroyed by Knowledge,—it is not possible for one to become one with Brahman. It is with a view to this that action done without desires has been spoken of as ‘done with knowledge’ (Verse 89);—and also ‘selfishness is not commended’ (2.2).—When two persons act similarly, they gain equal prosperity; this is what is meant by the ‘equality’ (of gods);—the meaning being that he attains the same condition as that of the gods. (B) As regards the objections against the declaration that the man ‘passes beyond the five material substances,’ and the confusion that is made regarding its real signification,—that also is not right. Because ‘atyaya’ may mean disappearance also; so that what the text means is that the whole phenomenal world, consisting of material substances, disappears for the man. If we read ‘abhyeti’ for ‘atyeti,’ it would mean that the man becomes freed form the shackles of the body.—(90)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை. பரிமேலழகர் உரை:அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். (அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை:அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும். மு. கருணாநிதி உரை: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். சாலமன் பாப்பையா உரை: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே. Translation: Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king. Explanation: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல். மணக்குடவர் உரை:அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. பரிமேலழகர் உரை:அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறன்அறிந்து தேர்ந்து கொளல். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.). மு. வரதராசன் உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். மு. கருணாநிதி உரை: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை:அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக. Translation: As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care. Explanation:Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.
Manusmriti Verse 2.6 Sanskrit text, Unicode transliteration and English translation by Ganganath Jha: वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् । आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ ६ ॥ vedo'khilo dharmamūlaṃ smṛtiśīle ca tadvidām | ācāraścaiva sādhūnāmātmanastuṣṭireva ca || 6 || The entire Veda is the root-source of Dharma; also the Conscientious Recollection of righteous persons versed in the Veda, the Practice of Good (and learned) Men, and their self-satisfaction
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது. மணக்குடவர் உரை: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை. பரிமேலழகர் உரை: அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.). மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள். மு. கருணாநிதி உரை:அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும். சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர். Translation:Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve. Explanation:The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. குறள் 682: தூது. மணக்குடவர் உரை:அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம். பரிமேலழகர் உரை:அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை:அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும். மு. கருணாநிதி உரை:தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. சாலமன் பாப்பையா உரை:அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன. Translation:Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings. Explanation:Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. குறள் 683: தூது. மணக்குடவர் உரை:எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம். பரிமேலழகர் உரை:வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.). மு. வரதராசன் உரை:அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும். மு. கருணாநிதி உரை: வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும். சாலமன் பாப்பையா உரை: அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும். Translation: Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory. Explanation:To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. குறள் 684:தூது. மணக்குடவர் உரை:அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு. பரிமேலழகர் உரை:அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.). மு. வரதராசன் உரை:இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம். மு. கருணாநிதி உரை:தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். சாலமன் பாப்பையா உரை: இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க. Translation: Sense, goodly grace, and knowledge exquisite. Who hath these three for envoy's task is fit. Explanation: He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning. மனுஸ்ம்ருதி Verse 7.63 [The Ambassador (dūta)] दूतं चैव प्रकुर्वीत सर्वशास्त्रविशारदम् । इङ्गिताकारचेष्टज्ञं शुचिं दक्षं कुलोद्गतम् ॥ ६३ ॥ dūtaṃ caiva prakurvīta sarvaśāstraviśāradam | iṅgitākāraceṣṭajñaṃ śuciṃ dakṣaṃ kulodgatam || 63 || As ambassador he shall appoint one who is well versed in all the sciences, who understands hints, expressions and gestures, who is honest, expert and born of a noble family.—(63) மனுஸ்ம்ருதி Verse 7.64 अनुरक्तः शुचिर्दक्षः स्मृतिमान् देशकालवित् । वपुष्मान् वीतभीर्वाग्मी दूतो राज्ञः प्रशस्यते ॥ ६४ ॥ anuraktaḥ śucirdakṣaḥ smṛtimān deśakālavit | vapuṣmān vītabhīrvāgmī dūto rājñaḥ praśasyate || 64 || That royal ambassador is commended who is loyal, honest, clever, possessed of good memory, conversant with place and time, handsome of body, fearless and eloquent.—(64)