எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (குறள் 62) பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு (குறள் 107) தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.
ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 126) ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 398) ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (குறள் 538) பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அன்று (குறள் 835) முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து முடிக்க வல்லவன்!
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார் மற்றீண்டு வாரா நெறி (குறள் 356) கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.
வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள் 38) ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339) உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன. எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!
பிறப்பு என்பது துன்பம். எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (குறள் 362)
பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் (குறள் 10)
இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர முடியும். இல்லையேல் இல்லை தான்! பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார். முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை (குறள் 345) பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் (குறள் 349) ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.
பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு (குறள் 351) மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால் தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (குறள் 357) உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.
பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது? இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு என்னும் வித்து (குறள் 361) எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்
முத்தான ஒன்பது குறள்கள்!
பிறப்பிற்குக் காரணம் அவா. அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு. அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி! மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது. இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும். பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான். பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும். இந்த உலகில் நீ ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு! ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!
களவென்னும் காரறிவாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல்
இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது. ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு. அடுத்து பேரறிவு (குறள் 215)
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.
ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.
வால் அறிவு (குறள் 2) கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.
ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.
பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா? பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.
எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55) தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.
கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!
வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)
3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318) தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)
சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.
இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.
மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்? கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள் 260) கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?
ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று சூழினும் தான் முந்துறும் (குறள் 380) விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.
விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398) இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.
ஆதி பகவன் முதற்றே உலகு, இறைவனிடம் இவ்வுலகம் தொடங்குகிறது, என முழுமுதற் கடவுளை வாழ்த்தியபடி தான் குறள் அமைந்துள்ளது.
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் ௰)
இறைவனுடைய திருவடிகளைப் பற்றி இணைந்தவர் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. பிறவிப் பெருங் கடல் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் வாழ்க்கையை குறிப்பது என்ற தமிழர் மரபினை, ஏற்க பல அன்னிய மதவாத நுகர்ச்சி வழியின் தாக்கத்தால் சிலர் மறுக்கின்றனர்.
திருக்குறளை வள்ளுவர் மனம் அறிந்து வள்ளுவர் உள்ளத்தின் நோக்கில் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339) மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று. உயிர்கள் சாவதும் பிறப்பதும் தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள் உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக்கொண்டே இருப்பதில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38) பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:36) பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
பிறவிப் பெருங் கடல் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் வாழ்க்கையை குறிப்பது என்ற தமிழர் மரபினை, ஏற்க பல அன்னிய மதவாத நுகர்ச்சி வழியின் தாக்கத்தால் சிலர் மறுக்கின்றனர். திருக்குறளை வள்ளுவர் மனம் அறிந்து வள்ளுவர் உள்ளத்தின் நோக்கில் நாம் பொருள் கொள்ள வேண்டும். மனிதன் இந்த உலகில் (இப்பிறவியில் வாழும் காலம் என்பதை நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. எனவும் மீண்டும் உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339) மனிதன் பூவுலகில் உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் அமைவது போல உயிருக்கு (ஆத்மாவிற்கு) சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன. எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்! என்கையில் பிறவிப் பெருங் கடல் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் வாழ்க்கையை குறிப்பது வள்ளுவர் என்பது தெள்ளத் தெளிவாகும்.
நிலையாமை அதிகாரம் துறவரவியலில் உள்ளது எனப் பார்த்தால், வள்ளுவர் பாயிரம் (முகவுரை) நான்காம் அதிகாரமாய் அறன் வலியுறுத்தலே நூலின் அடிப்படை என உள்ள அதிகாரப் பாடல்கள்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38) பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:36) பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
திருக்குறள் ஆதிபகவன் முதற்றே உலகு இன கடவுள் தான் இந்த உலகைப் படைத்தார் எனத் தொடங்குகிறது. இந்த உலகில் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பெருங்கடலை நீந்திக் கடக்க இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமெ முடியும் என்பார். அசனாலும் ஒரு சில குறட்பாக்களை கொண்டு வள்ளுவரை உலகாயுதர் - அல்லது நாத்திகத்தை ஏற்றவர் எனச் சிலர் வரட்டு வாதம் செய்வதை ஆராய்வோம்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619) மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.
நாம் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் -இறைவன்- தெய்வம் என்ற சொற்கள்; இறைவன், வாழ்வாங்கு வாழ்ந்தவர், வீரர்கள், விதி, ஊழ், இயற்கை நியதி எனப் பல பொருளில் ஆளப்பட்டிருக்கும்.
அதிகாரம் - ஆள்வினையுடைமை என தளர்வற்ற சுய முயற்சியை வலியுறுத்தும் அதிகாரம். இந்தக் குறளின் தெய்வம் என்ற சொல் விதி அல்லது இயற்கை நியதி என வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இதற்கு அடுத்த குறளில் ஊழின் வலைமையையும் முயற்சியால் வெல்லலாம் என்கையில் மிகத் தெளிவாய் இங்கு விதி அல்லது இயற்கை நியதி என வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். குறள் 1062: இரவச்சம் மு.வரதராசனார் உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக. மணக்குடவர் உரை: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது. இது ஒரு கவிஞனாய் வள்ளுவம் இவ்வுலகில் சிலர் பிச்சை எடுக்கும் நிலையை கண்டிக்கிறார், இந்த குறளைக் கொண்டு வள்ளுவர் உலகாயுதர் என்பதோ நாத்தீகர் என்பதோ அபத்தம்
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். குறள் 214:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து மு. வரதராசன் உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல் மு. வரதராசன் உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மு. வரதராசன் உரை: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மு. வரதராசன் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. குறள் 841: புல்லறிவாண்மை மு. வரதராசன் உரை: அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். குறள் 850 புல்லறிவாண்மை மு. வரதராசன் உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். குறள் 834:பேதைமை மு. வரதராசன் உரை: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452:சிற்றினஞ்சேராமை மு. வரதராசன் உரை:சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.குறள் 454: மு. வரதராசன் உரை:ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். குறள் 455: மு. வரதராசன் உரை:மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. குறள் 459: சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். குறள் 460: சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794:நட்பாராய்தல் மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும். மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. குறள் 1019: நாணுடைமை மு. வரதராசன் உரை: ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும். சாலமன் பாப்பையா உரை: ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. குறள் 1012 மு. வரதராசன் உரை: உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும். மு. கருணாநிதி உரை:உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான். சாலமன் பாப்பையா உரை:உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. குறள் 815:தீ நட்பு மு. கருணாநிதி உரை:கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. குறள் 819: மு. வரதராசன் உரை:செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். குறள் 822: மணக்குடவர் உரை:நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது பரிமேலழகர் உரை: இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.).
உடம்பு என்பது வெறும் எலும்பு தோல் போர்த்தியது, அது வெறும் மனிதனின் ஆன்மா உயிர் தங்கும் கூடு தான், இதில் மனித வாழ்க்கை எனும் பிறப்பு, நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதே இயல்பு. உறஙுவது போலே இறப்பு, உறங்கி விழித்தல் போலே பிறப்பு, அதாவது பல லட்சம் ஆண்டு உள்ள உலகில் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம். அந்தப் பிறவிக் கடலை கடப்பதே மனித அறவாழ்வின் அடிப்படை பொருள் அல்லாத வற்றை பொருள் எனக் கொண்டு, மீண்டும் மீண்டும் பிறக்கும் பேதைமை நீங்கிட இறைவன் திருவடி பற்றி பிறவா நிலை அடைதலே வள்ளுவம் காட்டும் வழி திருக்குறளிற்கு உரை தேடுபவர்கள் தமிழரின் பண்பாடு - பழமை சிறப்பை மறுக்கும் திராவிஷ நாசியர் உரைகளை குப்பை என ஒதுக்கி பல ஆண்டுகள் ஆயிற்று வள்ளுவர் சொன்னதை விட்டு சொல்லாத வார்த்தைகளை சேர்த்து நீங்களாக கொள்ளும் பொருள் வள்ளுவர் கூறுவது இல்லை. வள்ளுவர் கூறியதை தான் என் முன்னோரும் இன்றும் மெய்ப் பொருள் தேடும் அறிஞர்கள் ஏற்பர் பிறவிப் பெருங்கடல் கடப்பதே மனிதனின் அறச் செயல்களின் எல்லை என்பதே வள்ளுவம் சாதாரணமாக அறம் செய்தால் வானுலகம் கிடைக்கும் பாவம் செய்தால் பாதாளம் நரகம் கிட்டும், வினை முடிந்த பின் மீண்டும் பிறப்பு. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல் மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல் மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல் மணக்குடவர் உரை:இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு. சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர். வள்ளுவரின் உள்ளத்தை பாராமல், தமிழர் பண்பாட்டோடு பார்க்காமல் தன்னிச்சையாய் என்னவேணுமானாலும் நீங்கள் பொருள் கொள்ளலாம், வள்ளுவர் உள்ளம் என்ன என்பதே முக்கியம்
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் -10) மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார். மனிதன் இவ்வுலகில் ஒரு பிறவியில் வாழும் காலம் என்பதை வள்ளுவர் மிகத் தெளிவாக நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று. உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339) மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று. உயிர்கள் சாவதும் பிறப்பதும் தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள் உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக் கொண்டே இருப்பதில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன. மு. வரதராசன் உரை:இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. சாலமன் பாப்பையா:உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (அறன் வலியுறுத்தல்:38) பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது. அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (அறன் வலியுறுத்தல் :36) பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. மு. வரதராசன் உரை: இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:31) பொழிப்பு (மு வரதராசன்): அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது? மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று. அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:247) பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். மணக்குடவர் உரை: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் (அதிகாரம்:துறவு குறள் எண்:346) பொழிப்பு (மு வரதராசன்): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான் நணியது உடைத்து. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:353 பொழிப்பு (மு வரதராசன்): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். மணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது. அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:361) பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர். மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. குறள் 34: அறன்வலியுறுத்தல் மணக்குடவர் உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362) பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். மணக்குடவர் உரை: வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. குறள் 24: நீத்தார் பெருமை. மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து. சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு. கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். சாலமன் பாப்பையா உரை:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான் வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: (அறன்வலியுறுத்தல்) ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும் மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, நாம் இங்கே பிறந்து பிறந்து இறக்கிறோம் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10 -கடவுள் வாழ்த்து மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது. வீடுபேறு எனும் மோக்ஷம், பிறவியில்லா நிலையை அடைதலே திருக்குறளின் அடிப்படை. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல் கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர். உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. குறள் 24: நீத்தார் பெருமை. மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து. சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். 357. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. மெய்யுணர்தல் ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல். மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது. மு. வரதராசன் உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல் மு. வரதராசன் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340: நிலையாமை. மணக்குடவர் உரை:தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். குறள் 346: மு. வரதராசன் உரை:உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மணக்குடவர் உரை:யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும். அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. தெரிந்துவினையாடல். குறள் 513 மணக்குடவர் உரை:அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான்மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு. ஐயுணர்வுஎய்தியக்கண்ணும்பயமின்றே மெய்யுணர்வுஇல்லாதவர்க்கு. குறள் 354: மணக்குடவர்:மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்த விடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு. மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை. மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார். மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு. துறவு:343 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. துறவு:345 மு. வரதராசன் உரை:பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ? மு. கருணாநிதி உரை:பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக? சாலமன் பாப்பையா உரை:இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?