ஸநாதனத்தின் குரலே திருக்குறள் -1 திருக்குறள் உலகப்பொதுமறை அதனை ஹிந்துமதத்துக்கு மட்டும் சொந்தமான நூல் என்று சொல்லக் கூடாது என்றும், அது தமிழர்களின் நூல் ,குறிப்பாக ஸனாதன தர்மத்துக்கு எதிரான நூல் என்றும் பேசும் தமிழ் இனமான காப்பாளர்கள் உண்டு.
திருக்குறள் ஜைன நூல் என்றும் பௌத்த நூல் என்றும் பொதுவுடமை வாதிகள் பல வருஷங்களாக சொல்லிவருகிறார்கள். இடையே திருவள்ளுவர் திருக்குறள் எழுத தாமஸ் என்னும் கிருஸ்துவருடன் நடந்த சந்திப்புத்தான் காரணம் அந்த சந்திப்பு மட்டும் நடக்கவில்லையென்றால் திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருக்கமுடியாது என்றும், திருக்குறள் ஒரு கிருஸ்துவ நூல் என்றும், இல்லவேயில்லை ,திருக்குறள் இஸ்லாமிய நூல் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.
ஆனால் திருக்குறளை தங்கள் மத நூல் என்று சொல்லும் அந்நிய நாட்டிலிருந்து வந்த மதங்கள் தங்களது ஒரே புனித நூலுக்கு இணையாக திருக்குறளை எங்கும் ஏற்கவில்லை என்பதே அவர்களது வாதத்துக்கு எதிராக அமைகிறது. மறுபிறவி மற்றும் உருவ வழிபாடு பற்றி கூறும் திருக்குறளை அந்நிய நாட்டிலிருந்து வந்த மதங்கள் தங்கள் மதநூல் என்று சொல்லுவது அவர்களது மத அடிப்படைக்கே முரண்.
பாரத தேசத்தில் தோன்றிய மதங்களான பௌத்த ஜைன மதங்களின் கருத்துக்களுடன் அல்லது விதேசி மதங்களின் கடவுள்களைப் பற்றிய குறிப்பு திருக்குறளில் காணப்படவேயில்லை.
திருவள்ளுவமாலை 11 ஆம் நூற்றாண்டு நூல் என்றும் இதில் உள்ள புலவர்கள் சிலர் சங்கப் புலவர்கள் பெயரினை வைத்துக்கொண்டு எழுதியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் சொல்லுவதுண்டு.”அப்படியே எடுத்துக்கொண்டாலும்” 11 ஆம் நூற்றாண்டுவரை எந்த தமிழ் புலவர்களாவது தனியாகவோ, குழுவாகவோ திருக்குறள் சமண நூல் என்றோ பௌத்த நூல் என்றோ பாடி அது நூலாக உள்ளதா? என்பதே நமது கேள்வி.
அப்படி திருக்குறள் ஜைன அல்லது பௌத்த நூல் என்று புலவர்கள் பாடவில்லை அப்படி நூலும் இல்லை. கால ஆராய்சிக்கு அப்பாற்பட்டு புலவர்கள் பெயர் ஆராய்சிக்கு அப்பாற்பட்டு 11 நூற்றாண்டுவரை திருக்குறள் சனாதன மதக்கருத்து கொண்டதுதான் என்பதற்கு சான்றுதான் திருவள்ளுவமாலை
சரி, இவர்களின் ஆய்வுகளை தள்ளிவிட்டு திருக்குறள் குறித்த புலவர்கள் (ஆய்வு) என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போமா?..
வைகாசி அனுஷத்துதித்தோன் வாழியே திருக்குறளின் பெருமையை கூறும் நூல் திருவள்ளுவமாலை, பல புலவர்கள் வள்ளுவர் குறித்தும் அவரது திருக்குறள் குறித்தும் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவமாலை.
பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியின் காலத்தில்தான் திருக்குறள் அரங்கேறியது என்று சொல்வதுண்டு. அந்த மன்னன் திருவள்ளுவரை பாடும் பாடலில் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் தனது உருவத்தினை மறைத்து திருவள்ளுவராகத் தோன்றி நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை முப்பாலாகப் பாடினான் அந்த திருக்குறளை நமது தலையால் பணிவுடன் வணங்கவேண்டும்,வாய் வாழ்த்தவேண்டும், நல்ல நெஞ்சம் சிந்திக்கவேண்டும் செவி கேட்கவேண்டும் என்று பாடுகிறார்.
நான்மறையின் மெய்பொருளை முபொருளா நான் முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை வந்திக்க சென்னி! வாய்வாழ்த்துக! நன்னெஞ்சம் சிந்திக்க! கேட்க செவி! இந்த பாடலில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுடன்தான் திருக்குறள் ஒப்பிடப்படுகிறதே அன்றி ஜைன, பௌத்த சமயங்கள் கூறும் புனித நூல்களுடனோ ,இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்கள் கூறும் அந்த மதங்களின் புனித நூல்களுடன் திருக்குறளை ஒப்பிடவில்லை என்பதை குறித்துக்கொள்ளவேண்டும்.
பரணர், திருக்குறளையும், வள்ளுவரைப் பற்றி அவர் சொல்லுகிறார். திருமால் வாமன அவதாரம் எடுத்து தனது இரண்டு திருவடியால் மூவுலகையும் அளந்தார். அதைப்போல வள்ளுவர் இரண்டடி குறள் வெண்பாவால் உலக மக்கள் நினைக்கும் அனைத்தையும் அளந்துவிட்டார் என்கிறார். இங்கு குள்ளமான வாமன அவதார எடுத்துவந்த திருமால் திரிவிக்ரமனாக வடிவெடுத்ததைப் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் ஒப்புமைகாட்டுகிறார்.வேறு மத தெய்வங்களை அல்ல.
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார்- நன்றென எப்பா லவரும்இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி
நல்லாந்துவானார் என்னும் புலவர், அருமறை என்று புகழ்படும் வேதங்கள் என்றும் நிலைத்திருக்கும் அறிய கருத்துக்களை சொல்லுகின்றன. அந்த வேதங்கள் கூறும் அறிய உண்மைகளை தெளிவாக எடுத்து சொல்லுகிறது முப்பால் என்னும் திருக்குறள். அதனைத் தந்த திருவள்ளுவர் முதன்மையான புலவர் என்று பாடி வேதத்தின் கருத்துகளை சொல்லுவது திருக்குறள் என்கிறார். வேறு எந்த மத நூல்களின் கருத்துக்களையும் திருவள்ளுவர் தனது திருக்குறளில் சொல்லுவதாக சொல்லவில்லை.
பிணக்கற அறுவகைச் சமயமும் என்று திருவாய்மொழி 1-3-5 பாசுரமும் குறிப்பிடுகிறது. அந்த ஆறு சமயங்களும் வேதத்தினை ஏற்காத வேதத்துக்கு புறம்பான ஆறுவகை சமயங்கள் சாக்யம் (பௌத்தம்), உலூக்யம்(வைஸேஷிகம்), அக்ஷபாத மதம்(நையாயிகம்), க்ஷபணக (சமண மதம்), கபில (ஸாங்க்ய) மதம், பதஞ்சலி (யோக) மதம் என்னும் ஆறு மதங்கள். இப்படி வேத மார்க்கதத்துக்கு புறம்பான ஆறுமாதங்கள் கூட திருக்குறளை ஏற்கிறது என்கிறார் கலித்தொகை கவி.
வீடுபேறு பற்றி வள்ளுவத்தில் இல்லையே என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லுகிறார் கீரந்தையார் அறம், பொருள். இன்பம் ஆகிய முப்பாலையும் கற்று அதற்குத் தக நிற்பவர்கள் வீட்டைப்பற்றி (வீடுபேறு) கவலைபடவேண்டியதில்லை என்கிறார். தப்பா முதற்பாவால் தாமாண்ட பாடலினான் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் எப்பாலும் வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழ தெய்வத் திருவள்ளுவர்
வீடுபேறு பற்றி வள்ளுவ(ர்)ம் சொல்லவில்லை என்று யார் சொன்னது? என்று வம்புக்கு வருகிறார் சிறுமேதாவியார் என்னும் புலவர்.. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் அதிகாரங்கள் கூறும் கருத்துக்களின் வழிநின்றால் வீடுபேறு நிச்சயம் .துறவியலில் 13 அதிகாரங்கள் ஊழ் பற்றி ஒரு அதிகாரம் உள்ளதே இவை வீடுபேறு பற்றிதானே பேசுகின்றன என்பது மேதாவியார் வாதம்.
தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர் “ நாளும் மொழிந்த பெரு நாவலரே! “அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்கினையும் முப்பாலில் தந்துள்ளார் பெருநாவலர் என்கிறார்.
நல்கூர் வேள்வியார் என்னும் புலவர் திருக்குறளை ஸ்ரீமத் பகவத் கீதையுடன் ஒப்பிடுகிறார். மதுரைக்காரரான மாதானுபங்கி என்பது திருவள்ளுவரின் பெயர், அதன் பொருள் செம்மையான மொழிகளைப் போதிக்கும் நாவையுடையவர் அதனால்தான் “செந்நாப்போதார்”.
வட மதுரையில் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதை கொடுத்தான். தென்மதுரையில் அவதரித்த வள்ளுவன் திருக்குறள் தந்தான் . உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் உத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம் மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு
வெள்ளி வீதியார் , வேதம் எவரும் இயற்றாத செய்யாமொழி , திருக்குறள் பொய்யாமொழி இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் என்கிறார். “செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழிக்கும் பொருளொன்றே”
மாங்குடி மருதனார் வேதங்களின் பொருளாக. “வேதப் பொருளாய் மிகவிளங்கி” திருக்குறள் இருக்கிறது என்கிறார்.
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சொல்லியது போன்றே பிரம்மன்தான் திருவள்ளுவராகப் பிறந்து திருக்குறளை அளித்தான் என்கிறார்
புலவர் நரிவெரூஉத்தலயார் வேதங்கள் முற்காலத்தில் அறம் பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் உரைத்தன. வேதத்தினை ஓதி உணர்தல் கடினம். ஆனால் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் எல்லா மக்களும் அறியும் வண்ணம் எளிமையாக திருக்குறளில் கூறியுள்ளார் என்கிறார். வீடு பற்றி வள்ளுவர் கூறியுளார் என்கிறார், மேலும் வேதம் சொன்னதை வள்ளுவமும் சொல்கிறது என்கிறார். இன்பம் பொருளறம்வீடென்னும் இந்நான்கும் முன்பறியச் சொன்ன முதுமொழியால் மன்பதைகட்(கு) உள்ள அறிதென் றவைவள் ளுவருலகங் கொள்ள மொழிந்தார் குறள்
கவிசாகரப் பெருந்தேவனார் என்னும் புலவர் எது எதில் எது சிறந்தது? என்று பட்டியல் இடுகிறார். மலர்களில் சிறந்தது தாமரை. நான்குவகை பொன்னில் சிறந்தந்து சாம்புநதம், பசுக்களில் சிறந்தது காமதேனு,யானைகளில் சிறந்தது ஐராவதம், தெய்வத்தில் சிறந்தவர் திருமால், பாவில் சிறந்தது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்.
பூவிற்குத் தாமரையே பொண்ணுக்குச் சாம்புநதம் ஆவிற்(கு) அருமுனியா ஆனைக்(கு)-அமரரும்பல் தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா வேதத்து பொருளனைத்தையும் உலக மக்கள் அனைவரும் ஓதி எளிதில் உணரும் வகையில் தமிழில் விரிவாக சொல்லியுள்ளார் வள்ளுவர் என்று வேதக்கருத்தைத்தான் வள்ளுவர் சொல்லியுள்ளார் என்று பாடுகிறார் செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் என்னும் புலவர்.
வேதப் பொருளை விரகால் விரித்துல கோர் ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால் உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு
இப்படி வடமொழி வேதக்கருத்துக்களை திருக்குறள் கூறுவதால் வடமொழி உயர்ந்ததா தமிழ் உயர்ந்ததா என்று கூறமுடியாது என்கிறார் வண்ணக்கஞ் சாத்தனார் என்னும் புலவர்.
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம் வேதம் உடைத்து தமிழ்த் திருவள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து
திருவள்ளுவமாலையில் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பாடிய எந்தப் புலவரும் திருக்குறள் ஜைன,பௌத்த,இஸ்லாமிய,கிறிஸ்துவ மதக் கருத்துக்கள் கொண்டது என்று எங்கும் கூறவில்லை திருவள்ளுவரையும் அந்த மதங்களுடன் தொடர்புபடுத்தவில்லை. ரிக் யஜூர் ஸாம, அதர்வண வேதக்கருத்துக்களை சொல்லுபவர் திருவள்ளுவர் என்றும் , அவர் ஸ்ரீமன் நாரயணனால் படைக்கப்பட்டட பிரம்மாவின் அவதாரம் என்றும் கூறியுள்ளார்கள். எனவே ஸநாதான தர்மத்தின் குரலே திருக்குறள் என்று தெளிவாகிறது ஸநாதனத்தின் குரலே திருக்குறள் - 2
ஸநாதனத்தினை எதிர்க்கிறோம் என்று குரல் கொடுக்கும் அறிவு சீவிகள் 100% அக்மார்க் முத்திரையுடன் ஏற்கும் நூல் திருக்குறள். ஸனாதன நூல்களின் கருத்துக்களை திருக்குறளில் பார்ப்போமா. .ஆம்! திருக்குறளே ஒரு ஸநாதன நூல்தான்.
மனு ஸ்ம்ருதியும் திருக்குறளும்
ஒழுக்கத்தினை விட்ட பிராமணனுக்கு வேதத்திற் சொல்லிய பலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்கு சகல பலனும் குறைவின்றி கிடைக்கும். (மனு அத்தியாயம் 1 ஸ்லோகம் 109)
மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள் 134) பார்ப்பான் தான் கற்ற வேதத்தினை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கதிலிருந்து தாழ்ந்தால், பிராமணன் என்கிற நிலையிலிருந்து தாழ்ந்தவன் ஆவான். மனுவின் 1-109 ஸ்லோகத்தை திருக்குறள் 134 ஐ அப்படியே வழிமொழிகிறது
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்னும் ஒழுக்கம் உடைமை அதிகார மூன்றாவது குறள் சொல்கிறது “ஒழுக்கம் உயர்ந்த குடியின் தன்மை, ஒழுக்கம் இல்லாமை தாழ்ந்த குடியின் இயல்பு” என்ற மனுஸ்ம்ருதியை எதிரொலிக்கிறது.
அடுத்த ஸ்லோகம் 110லும் சொல்கிறார் “ முனிவர்கள் ஒழுக்கத்தினாலே தருமத்தின் பலனையறிந்து எல்லா தவத்திற்கும் ஒழுக்கத்தினையே முதற்காரணமாகச் சொல்லுகிறார்கள் ” என்கிறார்.
எவனுக்கு வாக்கும் மனமும் பொய் சொல்லாமல் உள்ளதோ அதாவது சொல்வதும் செய்வதும் ஒன்றாக உள்ளதோ அவன் வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லியுள்ள எல்லா பலன்களையும் அடைகிறான் ( மனு ஸ்மிருதி 2-160)
இங்கும் திருக்குறள் அப்படியே மனுவுடன் ஒத்துப்போகிறது. திருக்குறள் வாய்மை அதிகாரம் 6,7 குறள் மனு ஸ்மிருதி என்ன சொல்கிறதோ அதை அப்படியே சொல்லுகிறது.
“பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும்.” பொய் சொல்லாதிருப்பது புகழ், அது எல்லா அறங்களையும் தரும்.
“பொய்யாமை, பொய்யாமை ஆற்றின், ஆறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”. பொய் சொல்லாமல் வாழ்ந்தால், பிற தருமங்களை செய்யாவிடினும் நன்மை உண்டாகும்.
பசியை பொறுக்கும் தவசிகளைவிட பிறர் பேசும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர் பெரியவர்.
திருக்குறளில் ஸந்தியாவந்தன மந்திரம்
காலை மதியம் மாலை சூரிய உதயம் சூரியன் உச்சியில் சூரியன் மறையும் வேளை என்று மூன்று வேளைகளிலும் செய்யப்படவேண்டியது ஸந்தியாவந்தனம். இது பிராமணர்களுக்கு மட்டும் உள்ளதல்ல.
. பஞ்ச பூதங்களான நீர் , நிலம்(பூமி) , காற்று (வாயு), அக்னி, , ஆகாயம் இதில்தான் மனித வாழ்க்கை துவங்கி, ஓடி, முடிகிறது.
திருக்குறள் இரண்டாம் அதிகாரம் வான்சிறப்பு, கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பை வைத்துள்ளார் வள்ளுவர்
மழையின் முக்கியத்துவத்தை பத்து குறள் மூலம் சொல்லுகிறார் வள்ளுவர். மழைதான் இவ்வுலுலகத்துக்கு உணவு, உணவை உண்டாக்குவதும் உணவாக இருப்பதும் , மழை இல்லையேல் இவ்வுலகை பசி நோய் துன்புறுத்தும், மழை பெய்யாவிட்டால் உழவுத்தொழில் நடைபெறாது, மழை பெய்யாவிட்டால் கெடுதல் , கெட்டவர்கள் உயர மழைதான் உதவும், மழை இல்லாவிட்டால் புல் கூட வளராது, மழை பெய்யாவிட்டால் கடல் வளம் குறையும், கடவுளுக்கான பூஜை ,தவம், தானம் நடைபெறாது , மழை இல்லையேல் ஒழுக்கமே குறையும்.
சுருக்கமாக நீர் இன்று அமையாது உலகு அதாவது நீர் இல்லாவிட்டால் உலகம் இயங்காது என்கிறார் வான் சிறப்பின் பத்தாவது குறளில் வள்ளுவர் , நீருக்கான யுத்தமே மூன்றாவது உலக யுத்தமாக இருக்கும் என்றார் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ அப்துல் கலாம்.
ஸந்தியாவந்தன மந்திர கருத்துக்கள் நீர் இன்றி அமையாது உலகு என்பதை விளக்குவதுடன் வான்சிறப்பு அதிகாரத்தில் சொல்லியுள்ள கருத்துக்களைச் சொல்லுகிறது.
ஹே ஆப: மயோபுவ: ஸ்தா ஹி:தா:ந:மஹேரணாய என்னும் சந்தியாவந்தன மந்திரம் தண்ணீரே (ஜலங்களே!) நீங்கள் சுகத்துக்கு காரணமாக ஆகிறீர்கள் அல்லவா, அந்த நீங்கள் எங்களுக்கு பெரிதாயும் அழகாயும் இருக்கிற இந்திரியங்களுக்காக (புலங்களுக்காக) உணவை (அன்னத்தை) கொடுங்கள். நீங்களே எங்களுக்குத் தாய் எங்களுக்கு பிறப்பை கொடுப்பது நீங்கள்தான்.
ஜிஷ்ணோ அச்வஸ்ய வாஜிந: ததி க்ராவிண்ண அகாரிஷம் ந: என்னும் மந்திரம் ஓ தண்ணீரே! (ஜலங்களே!) நீங்கள்தான் எங்களுக்கு சுகத்தினை அளிக்கிறீர்கள் காரணமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு அதிகமாகவும் நல்லதாகவும் உள்ள உணவை (அன்னத்தினை) கொடுங்கள். அன்னத்தினை கொடுப்பதால் தண்ணீரே நீங்கள் எங்களுக்குத் தாய் (மாதர இல) எங்களுக்கு உயிர் கொடுப்பது நீங்கள்தான் (எங்களை பிறந்தவர்களாக செய்யுங்கள் (ஹே ஆப ந: ஜனயதா)
நாஸ்திகனோ ஆஸ்திகனோ நீரின் தேவையின்றி இருக்க முடியாது. தண்ணீரை குறித்த இந்த ஸந்த்தியாவந்தன மந்திரம் ஸநாதனத்தின் குரல் என்றால் திருக்குறளின் குரளும்
என்ற வியாஹ்ருதிகளை சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து சிரஸை சுற்றிக் கொள்ளவும்.
பொழிப்புரை:
ஓம் ஸ்ரீ கேசவனுக்கு நமஸ்காரம்.
ஜல தேவதைகளாகிய நீங்கள் உயர்ந்த சுகத்துக்கு காரணமாக இருக்கிறீர்கள் என்பது பிரசித்தம். அப்படிப்பட்ட நீங்கள் எங்களுக்கு மகிமை பொருந்தியதும் ரமநீயமானதுமான ஞான திரிஷ்டியின் பொருட்டு போஷனையை அளியுங்கள். உங்களிடம் எந்த பரம மங்களமான பேரின்ப ரசம் உள்ளதோ அதற்கு இங்கேயே எங்களை நீங்கள், அன்பு சுரக்கும் அன்னையை போல் உரியவர்களாக்குங்கள். எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகிரீர்களோ அந்த ரசத்திற்காக உங்களை மிகவும் ஆர்வத்துடன் நாடுகின்றோம். ஜல தேவதைகளாகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனிதமான புனர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக.
ஹே ஆப: மயோபுவ: ஸ்தா ஹி:தா:ந:மஹேரணாய என்னும் சந்தியாவந்தன மந்திரம் தண்ணீரே (ஜலங்களே!) நீங்கள் சுகத்துக்கு காரணமாக ஆகிறீர்கள் அல்லவா, அந்த நீங்கள் எங்களுக்கு பெரிதாயும் அழகாயும் இருக்கிற இந்திரியங்களுக்காக (புலங்களுக்காக) உணவை (அன்னத்தை) கொடுங்கள். நீங்களே எங்களுக்குத் தாய் எங்களுக்கு பிறப்பை கொடுப்பது நீங்கள்தான்.
ஜிஷ்ணோ அச்வஸ்ய வாஜிந: ததி க்ராவிண்ண அகாரிஷம் ந: என்னும் மந்திரம் ஓ தண்ணீரே! (ஜலங்களே!) நீங்கள்தான் எங்களுக்கு சுகத்தினை அளிக்கிறீர்கள் காரணமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு அதிகமாகவும் நல்லதாகவும் உள்ள உணவை (அன்னத்தினை) கொடுங்கள். அன்னத்தினை கொடுப்பதால் தண்ணீரே நீங்கள் எங்களுக்குத் தாய் (மாதர இல) எங்களுக்கு உயிர் கொடுப்பது நீங்கள்தான் (எங்களை பிறந்தவர்களாக செய்யுங்கள் (ஹே ஆப ந: ஜனயதா)
நாஸ்திகனோ ஆஸ்திகனோ நீரின் தேவையின்றி இருக்க முடியாது. தண்ணீரை குறித்த இந்த ஸந்த்தியாவந்தன மந்திரம் ஸநாதனத்தின் குரல் என்றால் திருக்குறளின் குரளும்