New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளிற்கு பொருள் காணும் முறை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
Permalink  
 


திருக்குறளிற்கு பொருள் காணும் முறை

1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.
2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.
3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.
4.வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும்
5.கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே
6.திருக்குறள் சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று.
7.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும்.
8.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபற்றை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை  1200 வருடம் முன்பான வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது.
 
நாம் எளிமையாக முதல் அதிகாரத்தில் உள்ள "முதல்" சொல்லை எப்படி எல்லாம் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் எனப் பார்ப்போம்
 
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - குறள் 1  கடவுள் வாழ்த்து
நாம் முதல் குறளில் வரும் முதல என்பதை தொடக்கம், இந்த உலகம் இறைவனிடம் இருந்து தொடங்கியது, பிரம்மம் எனும் இறைமை இவ்வுலகைப் படைத்தார்
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை வியாபாரத்தில் போடும் மூலதனம் என பயன்படுத்தி உள்ளார்.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 449  பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் - குறள் 463 தெரிந்துசெயல்வகை
 
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை. நோய் வரும் காரணம் என்ன எனும் பொருளில் பயன்படுத்தி உள்ளார்.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 948 மருந்து
 
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-கொடியில் அடியிலே என செடியின்  தொடக்கம் எனும் பொருளில் 
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 1304 புலவி
 
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-முதலான எண்ணப்பட்ட மூன்றும் எனும் பொருளில்
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 - மருந்து
 
திருக்குறள் இயற்றி ஒரு நூறு ஆண்டிற்குள் எழுந்த உரை தமிழ் சமணர் மணக்குடவர் உரை, அதை தொடந்து மேலும் பல உரைகள். ஆனால் 19ம் நூற்றாண்டிற்குபின் காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமையாக தமிழ் மெய்யியலை ஏற்காத கயமை புலவர் உரைகள் எல்லாம் மறையக் காரணம் வள்ளுவம் சொல்வதை சிறுமைப் படுத்தலே
   
திருக்குறள் முழுமையான ஆஸ்திக நூல்
வள்ளுவர் இந்த உலகமே இவனால் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை அகரமுதல என்று அதிலும் அறிவுபூர்வமாக விளக்குவார்.
 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மனிதனின் அறிவை மேம்படுத்துவது கல்வி. கருவியின் மூலம் இறைவனை காட்டும் வழி. மனிதன் இந்த உலகில் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இறந்து ஏனோ வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி கடக்க தன்னிகர் இல்லாத படைத்த கடவுளை பற்றி கொள்ள வேண்டும் என்கிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
திருவள்ளுவர் அறிவை சாதாரணமான அறிவு, ஐயறிவு, தெளிவு பெற்ற மெய்யறிவு மிகத் தெளிவாக உரைக்கிறார். மெய்யறிவு கண்டோர் மீண்டும் இப்பிறவியில் இப்பூமியில் பிறக்கும் நிலையை தவிர்க்கவே முயல்வர் என்கிறார்.
 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)
இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.    குறள் 358:மெய்யுணர்தல்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.      குறள் 38:அறன்வலியுறுத்தல்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 36:அறன்வலியுறுத்தல் 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.           குறள் 356: மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   குறள் 351: மெய்யுணர்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.  குறள் 361:  அவாவறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.  குறள் 362: அவாவறுத்தல்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.          குறள் 370:அவாவறுத்தல்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.     குறள் 331:நிலையாமை
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.       குறள் 338:நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.      குறள் 339:நிலையாமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.      குறள் 140:  ஒழுக்கமுடைமை
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.     குறள் 850:     புல்லறிவாண்மை
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   குறள் 31: அறன்வலியுறுத்தல் 
மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
கயமையின் உச்சம்.
முழுமையான ஆஸ்திகராய் வைதீக மெய்யியல் மரபைப் போற்றும் வள்ளுவத்தை நாத்திகம் என்றோ, ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே என யாரும் பொருள் செய்கிறேன் என்பது கயமையின் உச்சம்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.  குறள் 671: வினைசெயல்வகை.

மு. கருணாநிதி உரை: ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.
சாலமன் பாப்பையா உரை: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   குறள் 935: சூது.

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். குறள் 936:

மு. வரதராசன் உரை:சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.


பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.  குறள் 937:

சாலமன் பாப்பையா உரை:சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725:  அவையஞ்சாமை. 

மு. வரதராசன் உரை:அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
மு. கருணாநிதி உரை:அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை: பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.  குறள் 477: வலியறிதல்.

மு. வரதராசன் உரை:தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.
மு. கருணாநிதி உரை:வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கத் தரும்.    குறள் 183: புறங்கூறாமை.

சாலமன் பாப்பையா உரை: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம் சூழம் சூழ்ந்தவன் கேடு.  குறள் 204: தீவினையச்சம். 

சாலமன் பாப்பையா உரை: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. குறள் 130: அடக்கமுடைமை. 

கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறக்கடவுளே அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.  குறள் 50: இல்வாழ்க்கை. 
மணக்குடவர் உரை:இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
பரிமேலழகர் உரை:வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்).
மு. வரதராசன் உரை:உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.
கலைஞர் உரை:தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.                குறள் 121: அடக்கமுடைமை.
மணக்குடவர் உரை:மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
பரிமேலழகர் உரை:அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.).
மு. வரதராசன் உரை:அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
மு. கருணாநிதி உரை:அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல். 
மணக்குடவர் உரை:வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.
பரிமேலழகர் உரை:செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
மு. கருணாநிதி உரை:வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. குறள் 58: வாழ்க்கைத் துணைநலம். 
மணக்குடவர் உரை: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை:பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
கலைஞர் உரை:நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திருக்குறள் ஆய்வில் பொய்யன ஊகங்களை திணிக்கும் கயமை புலவர்கள்
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிடம் தொடங்குகிறது(படைத்தார்) - அடுத்த குறளிலேயே

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:கடவுள் வாழ்த்து
முழுமையான அறிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
உலகு என வள்ளுவர் தொடங்குவது- பெரிய புராணம் "உலகெல்லாம் உணர்ந்து" எனவும் கம்ப இராமாயணம் "உலகம் யாவையும் எனத் தொடக்கம்" போலவே தான்.
இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் முடியாது என்கிறார்.
மனிதனின் அறிவு எதற்கு??

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி குறள் 356: மெய்யுணர்தல்
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்

திருவள்ளுவர் தான் கூறவேண்டிய அறத்தை, பொருளை விளக்க இரண்டு உத்தியைப் பரவலாக கையாள்வார்- அது முன்னோர் நூல் மேல் ஏற்றியும், உலகின் மேலிட்டு உரைப்பது - இதன் பொருள் என்ன எனில் வள்ளுவர் தனக்கு முன்பாக வாழ்ந்த மெய் ஞான மரபை அப்படியே வழி மொழிகிறார் எனப் பொருள்
திருக்குறளுக்கு உரை காணுதல், ஆய்வு செய்ய வேண்டிய முறை
தமிழின் மிகத் தொன்மையான் இலக்கியங்கள் பத்துப் பாட்டு- எட்டுத் தொகை எனும் சங்க இலக்கியங்கள்; இவை பெருமளவில் பொமு200 பொமு750 இடையே இயற்றப் பட்டும்; பின்னர் 9ம் நூற்றாண்டு இறுதியில் கடவுள் வாழ்த்து இணைத்தும் சிலபல பாடல்கள் சேர்த்து தொகுக்கப்பட்டது.
தொல்காப்பியம் 8ம் நூற்றாண்டிலும், திருக்குறள் அதற்கு அடுத்த பொஆ 9ம் நூற்றாண்டில் எழுந்தது ஆகும், முதல் உரை தமிழ் சமணர் மணக்குடவருடையது, இவரை ஒட்டியே பெரும்பாலன உரைகள் எழுந்தன.
இரட்டைக் காப்பியங்கள் எனும் சிலப்பதிகாரம்- மணிமேகலை குறளிற்கு பின்பானது.
வள்ளுவத்தில் உள்ள குறளை ஆய்வு செய்வோர், அந்த அதிகாரம் மற்றும் வள்ளுவம் மொத்த அமைப்பினோடே பொருத்தி காணவேண்டும். அதே நேரத்தில் சங்க இலக்கியம் முதலாய் இரட்டை காப்பியம் வரையாக பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் எந்த ஒரு சொல்லைப் போட்டபோது போட்டிருப்பார், எனவே வலிந்து வள்ளுவர் பயன்படுத்திய சொற்களை ஆய்வு -உரை செய்ய பயன்படும் உத்திகள் பன்னாட்டு/பல்கலைக் கழக அறிஞர் இடையே எடுபடாது
மொழி வெறி -இனவாதம் வள்ளுவர் ஏற்காதது.
திருவள்ளுவர் தன் முதல் குறளில் ஆதி பகவன் என வடசொல்லை பயன்படுத்தியவர்; மேலும் 1330 குறளில் எங்கும் தமிழ் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. நாடு குறள் 735:

செங்கோன்மையில் அரசனின் செங்கோல் அந்தணர் வேதங்கள் –தர்ம சாஸ்திரங்களிற்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் எனவும், மோசமான ஆட்சியில் அந்தணர் வேதம் மறப்பர் எனவும் கூறுவதால் வள்ளுவர் பாரத தத்துவ ஞானமரபின் வேர்களான வேத மரபைப் போற்றுபவர் எனத் தெளிவாக்குவார் -- இந்த நடைமுறை நாம் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சி எனவும் அறியலாம்.

வள்ளுவர் அறத்துப் பாலில் பாயிரம் என நான்கு அதிகாரம்; இதில் முதலாவது கடவுள் வாழ்த்து, பின் வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என அமைத்திருப்பார். இந்த அமைப்பினை வள்ளுவர் தமிழ் மெய்யியல் மரபில் வான் சிறப்பை கருதல் அளவை எனவும் அமைந்துள்ளது.

வள்ளுவர் தன் நோக்கமே மனிதன் வாழ்வின் ஒவ்வொருசெயலிலும் அறம் என்றிடவே பாயிர முடிவில் அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வைத்தார்.
திருவள்ளுவரும் வர்ணமும், ஜாதியும்
தனி மனித வாழ்வில் நட்பு மிக முக்கியம், நண்பரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்

அரசர் தன் நிர்வாகப் பணிக்காய், தூதராய் சரியானவரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் கூறும் அறிவுரை

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. தெரிந்துதெளிதல் குறள் 502:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது

தொல்காப்பியம் பிறப்பே குடிமை, ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்ற அதே நடைமுறையை தான் வள்ளுவர் கூறுகிறார். உயர்ந்த குடி பிறந்தவரிடம் மட்டுமே நற்பண்பு இருக்கும் எனவும் பல குறட்பாக்கள் உள்ளன.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. குறள் 124: அடக்கமுடைமை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

மு.வரதராசனார் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
மு.வரதராசனார் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

வைசிய- வாணிகர்/உழவர் பற்றியதானது
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை

ஷத்திரிய பற்றியதானது

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை
மு.வ உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல்
மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது குறள் 1075: கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். குறள் 1076:கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். குறள் 1078:கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். குறள் 1079 கயமை

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992 பண்புடைமை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard