New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை


Guru

Status: Offline
Posts: 24769
Date:
திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை
Permalink  
 


திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை

திருக்குறள் 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்கு 10 பாடல் என 1330 பாடல் கொண்டது. மெய்யியல் மரபின் வாழ்வியல் உறுதிப் பொருட்களான அறம், பொருள் & இன்பம் எனப் பிரித்து என முப்பால் என்ற பெயரிலே தமிழ் மொழி நன்கு நெகிழ்ச்சி அடைந்த இடைக்காலத்தில் குறள் வெண்பா அமைப்பில் இயற்றப்பட்டது.

குறள் வைப்பு முறை
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.
கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத, வீடுபேறு தரும் இறைவன் திருவடி பற்றும் வழியில் செல்வர்/
மெய்யுணர்தல் அதிகாரத்தில் பரிமேலழகர் வைப்பில் ஆறாவது மணக்குடவர் 8வது காளிங்கர் 5வது என பழமையான ஓலைச் சுவடிகளில் அமைந்துள்ளது

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. குறள் 1146: அலரறிவுறுத்தல். கற்பியல்
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ராகு கேது எனும் பாம்புகள் சந்திரனை ஒருநாள் பிடித்தால் நிகழும் கிரகணம் பற்றி பலநாள் பேசுவது போலே ஊர் முழுக்கப் பரவி விட்டதே!.
அலரறிவுறுத்தல் அதிகாரத்தில் பரிமேலழகர் மற்றும் காளிங்கர் வைப்பில் ஆறாவது; பரிதியார் ஏழாவது; மணக்குடவர் முதல் குறள். அலரறிவுறுத்தல்.

“அகர முதல..என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ”வில் ஆரம்பித்து, 1330ஆம் குறளாகிய, ஊடுதல் … கூடி முயங்கப்பெறின்” என்று கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார், என இணையத்தில் உள்ள கட்டுரைகள் உண்மையல்ல
குறள் 1330: ஊடலுவகை-அதிகாரத்தில் பரிமேலழகர் வைப்பில் பத்தாவது 6-வது மணக்குடவர் ஐந்தாவது காளிங்கர் நான்காவது என பழமையான ஓலைச் சுவடிகளில் அமைந்துள்ளது

இன்றைய குறள் எண் என்பது பரிமேலழகர் வைத்த அமைப்பு. அவருக்கு முந்தைய உரையாசிரியர்கள் வைப்பு சில பல மாறுபடுகிறது. தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட உரைக் களஞ்சியம் தொகுப்பு ஒவ்வொரு அதிகாரத்திலும் பழமையான உரையாசிரியர்கள் எப்படி அமைத்து இருந்தனர் என்பதை கொடுத்த முறையான ஆய்வு நூலாகும்.

இயல் பிரிப்பு அமைப்புகள்
அறத்துப்பால் - தமிழ் பதிப்புகளில் இன்று பயன்படுத்தப் படும் இயல் பிரிப்புகள் முவ பதிப்பு தொடர்ந்து அடிப்படையில் பாயிரம் - இல்லறவியல் துறவறவியல் ஊழியல் எனும் அமைப்பு பண்டைய உரை ஆசிரியர் அனைவரும் பயன் படுத்தியமையும், வள்ளுவ மாலை உறுதி செய்பவை ஆகும்
பாயிர நான்கில் இல்லறம் இருபான் பன்மூன்றே
தூய துறவறம் ஒன் றூழாக - வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
அறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து. 25. எறிச்சலூர் மலாடனார்

மணக்குடவர் இல்லறவியலில் -வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை பரிமேலழகர் துறவறவியல் உள்ள அதிகாரங்களை வைத்துள்ளார்
மணக்குடவர் துறவறவியலில் இனியவை கூறல், அடக்கமுடைமை, அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை ஆகிய 5 அதிகாரங்களை கள்ளாமை பரிமேலழகர் இல்லறவியலுள் வைத்துள்ளார். இன்றுள்ள அதிகார அமைப்பு பரிமேலழகர் வைப்பு முறை ஆகும்

பொருட்பால்: தமிழ் பதிப்புகளில் இன்று ஏழாகப் - அரசியல், அமைச்சியல், அரணியல், பொருளியல், படையியல், நட்பியல் & குடியியல், என . வள்ளுவ மாலை உறுதி செய்பவை
அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை. 26. போக்கியார்
இயல் மணக்குடவர் & பரிப்பெருமாள் அமைப்பு காலிங்கர் அமைப்பு பரிமேலழகர் அமைப்பு
அரசியல் 39 முதல் 63 முடிய அரசியல் - 38 முதல் 63 அரசியல்- 39 முதல் 63 முடிய
அமைச்சியல்
64 முதல் 73 முடிய அமைச்சியல் - 64 முதல் 108 அமைச்சியல் (அங்கவியல்) 64 முதல் 95 முடிய
பொருளியல் 74 முதல் 78 முடிய ஒழிபியல் -96 முதல் 108 முடிய
நட்பியல் 79 முதல் 83 முடிய
துன்பவியல் 84 முதல் 95 முடிய
குடியியல் 96 முதல் 108 முடிய

காமத்துப்பால் தமிழ் பதிப்புகளில் இன்று கற்பியல் 18 களவியல் 7, என பெரிதும் பின்பற்றப் படுகின்றது. இவை பரிமேலழகர் பகுப்பினை பின்பற்றுவதே ஆகும்
மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர்.
காலிங்கரும் ஆண்பால் கூற்று -7, 2.பெண்பால் கூற்று-12 & 3.இருபால் கூற்று-6 அதிகாரங்கள் என காமத்துப்பாலின் இயல்களைப் பிரிக்கின்றனர். வள்ளுவ மாலை உறுதி செய்பவை ஆகும்

ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு. 27. மோசிகீரனார்

அதிகாரத் தலைப்புகள்
மக்கட் பேறு என இல்லறவியலில் உள்ள ம் அதிகாரம் மணக்குடவரில் புதல்வரைப் பெறுதல் என உள்ளது. மற்றபடி அனைத்து தொன்மை ஆசிரியர்கள் இன்றைய பெயரிலே தான் பயன்படுத்தி உள்ளனர். குறிப்பறிதல் எனும் அதிகாரம் பொருட்பாலிலும், தலைவன் - தலைவி மனதினுள் உள்ளதை அறிய என காமத்துப் பாலிலும் (காலிங்கர் 'குறிப்புணர்தல்')ஒரே பெயரில் உள்ளது.

கடவுள் வாழ்த்து: அனைத்து அதிகாரங்களிலும் தலைப்பில் வரும் சொல் அல்லது எதிர்மறையானது உள்ளது, ஆனால் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் கடவுள் எனும் சொல் இல்லை.
வள்ளுவர் ஒரு முழுமையான ஆத்திகர் - கற்றதின் பயன் இறைவன் திருவடியைத் தொழுவதற்கே, அறிவின் பயனே மீண்டும் பிறவாமை எனும் வீடுபேறு அடைய இறைவனை தேடிப் பற்றவே என்ற்பார், இறைவனை வணங்காதார் தலையில் உள்ள உறுப்புகள் பணி செய்யாதவை என்பார். மெய்யறிவை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.ஒரு பயனும் இல்லை.
இறைவன் என்ற சொல்லை அரசன் தலைவன் என்ற பொருளில் பொருட்பாலில் பயன்படுத்தி உள்ளார். இறை என்ற சொல்லை கை மணிக்கட்டு எனும் பொருளிலும் உள்ளதால் உலகைப் படைத்த பரம்பொருள் வணக்கம் பயன் கூறும் அதிகாரத்திற்கு வள்ளுவரே கடவுள் வாழ்த்து என வள்ளுவரே பெயர் கொடுத்துள்ளார் என அறிஞர்கள் ஏற்கின்றனர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard