இந்தக்கட்டுரை, ஜெர்மனியைச்சார்ந்த ஸ்டெர்ன் (STERN) என்கிற ஊடக நிறுவனம் 2003-இல் வெளியிட்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாக்கி எழுதப்பட்டது. இதில் வெளிச்சம் போடப்பட்டுள்ள பல விஷயங்களைக்குறித்து புத்தகங்களும், கார்டியன் முதலான பத்திரிகைகளில் கட்டுரைகள் பலவும், சானல் 4 டாக்குமெண்டரிகளும் வெளிவந்து விட்டன. ஆனால் இன்றுவரை இந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்” (Missionaries of Charity) அமைப்பிடமிருந்து எந்த பதிலும் கிடையாது.
அடைப்புக்குறிக்குள் “மொ.பெ.” என்று குறிக்கப் பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புக்கள்.
இனி கட்டுரை.
ஏழைகளின் தேவதை என்று கருதப்பட்ட மதர் தெரசா சில வருடங்கள் முன்பு காலமானார். வேறு எந்த சேவையமைப்புக்கும் இல்லாத அளவு இன்றும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்” (Missionaries of Chrity) அமைப்புக்கு பணம் வந்து கொட்டுகிறது. ஆனால் நோபல் பரிசு வென்ற இந்த அம்மையார் செல்வத்தை உதறித்தள்ளி வறிய வாழ்க்கையை ஏற்பதாக அறிவித்தவர். அப்படியென்றால், அவரது அமைப்புக்கு வந்த பணமெல்லாம் எங்கே சென்றது?
mothr-teresa-trib-art-web-tசொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அங்கே தெரசா அவர்கள் கட்டாயம் இருப்பார்கள்தான். மதர் தெரசா என்று பிற்காலத்தில் அன்புடன் அழைக்கப்பட்ட மாஸடோனியாவைச்சேர்ந்த ஏக்னஸ் கான்ஷ்வா போஆஷ்யு ஜனவரி 6, 1929-இல் கத்தோலிக்க லொரெட்டோ அமைப்பின் பெண்துறவியாக கல்கத்தா வந்திறங்கிய போது அவருக்கு வயது பதினெட்டு. 68 வருடங்கள் கழித்து அவர் இறந்தபோது, இந்திய அரசு அவருக்குத் தந்த இறுதி மரியாதையில் கலந்துகொள்ளும் பொருட்டு உலகத் தலைவர்கள் பலரும் கல்கத்தாவில் கூடினர். இந்த 68 வருடங்களில் தெரசா கத்தோலிக்க சர்ச்சின் வரலாற்றிலேயே வெற்றிகரமானதொரு அமைப்பை நிறுவி, நோபல் பரிசு பெற்று, சமகாலத்தின் மிகப்புகழ் வாய்ந்த கத்தோலிக்க ஆளுமையாக உருவாகி இருந்தார்.
இப்படி ”நினைவுச்சின்னமாகி” விட்ட ஒருவர்மீது சந்தேகம் வரலாமா என்ன? ஆனால் கல்கத்தா மக்கள் பலரும் அவ்வாறு சந்தேகப்படுகிறார்கள்தாம்.
உதாரணத்திற்கு, பற்களெல்லாம் கொட்டிப்போய் கல்கத்தா சேரியில் வாழ்க்கை நடத்தும் சமிதியை எடுத்துக்கொள்வோம். எந்த நகரின் ஏழைகளுக்காக மதர் தெரசா தன் வாழ்வை அர்ப்பணித்ததாகச்சொல்லப்பட்டாரோ அந்த கல்கத்தாவின் ”ஏழைகளிலும் ஏழை”களில் ஒருவர் சமிதி. சேவை அமைப்பு ஒன்று கொண்டு வந்து தரப்போகும் அரிசி பருப்புக்காக கையில் பிளாஸ்டிக் பையுடன் கல்கத்தாவின் பார்க் தெருவில் ஒரு கிலோமீட்டர் நீள வரிசையில் காத்திருப்பவர். ஆனால் அதைக்கொண்டு வந்து தரப்போவது மதர் தெர்சாவின் அமைப்பு கிடையாது. தினமும் 18000 பேருக்கு உணவளிக்கும் அஸெம்ப்ளி ஆஃப் காட் என்கிற அமெரிக்க கிறித்துவ அமைப்பு அது.
சமிதியிடம் கேட்டால் ”மதர் தெரசாவா? அவர்களிடமிருந்து எங்களுக்கு ஒன்றுமே கிடைத்தது கிடையாதே. அந்த சிஸ்டர்களிடம் இருந்து ஏதாவது எங்களுக்கு எப்போதேனும் வந்திருக்கிறதா என்று இங்குள்ள சேரிகளில் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். அப்படி ஒருவரையுமே நீங்கள் இங்கே பார்க்க முடியாது” என்கிறார்.
பண்ணாலால் மாணிக் அவர்களுக்கும் இந்த ஐயம் உள்ளது. ”உங்களைப்போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்களெல்லாம் இந்தப்பெண்மணியை ஏன் இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப்புரியவில்லை!” என்கிறார். ராம்பகன் சேரியில் ஐம்பத்தாறு வருடங்களுக்கு முன் பிறந்தவர் பண்ணாலால் மாணிக். ராம்பகன் சேரி என்பது முன்னூறு வருடங்களாக இருக்கும் கல்கத்தாவின் ஆகப்பழமையான சேரிப்பகுதியாகும். அங்கே மாணிக் இன்று செய்து காட்டியிருப்பதை ஓர் அதிசயம் என்றே சொல்லலாம்.
மாணிக் அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார்! கட்டிட வேலைக்கு அவசியமான பொருட்களை வாங்க வேண்டி – ஒரு அபார்ட்மெண்டுக்கு பத்தாயிரம் மார்க்குகள் (ஜெர்மானியப்பணம்) ஆனது- அவர் கையேந்தியது இந்து சேவை அமைப்பான ராமகிருஷ்ணமடத்திடம்தான். ராமகிருஷ்ணமடம் அவருக்கு உதவியது. மதர் தெரசாவின் அமைப்பு? “அவரிடம் மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”
கல்கத்தா நகரில் ஏழைகளுக்கு உதவும் 200 சேவை அமைப்புகள் உள்ளன. மதர் தெரசாவின் அமைப்பு இந்த சேவை அமைப்புகளில் பெரிதாக முன்னே நிற்கும் அமைப்பே அல்ல என்பதே உண்மை. ஆனால் இந்த நிதர்சனம் அந்த அமைப்பைப்பற்றி வெளியுலகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பத்துக்கு நேர்எதிராக இருக்கிறது. மதர் தெரசா என்கிற பெயரே கல்கத்தா நகருடன் இறுகப்பிணைந்த பெயரல்லவா. வறுமையை எதிர்த்தபோரில் மும்முரமாய் அவரது அமைப்பு முனைப்பாய் இயங்கும் இடம் கல்கத்தா என்றுதானே நோபல் பரிசு வென்ற இவரது உலகளாவிய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
final_verdict_book_on_mother_teresa”எல்லாம் பொய்” என்கிறார் அரூப் சாட்டர்ஜி. இவர் ஒரு மருத்துவர். கல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். மதர் தெரசா என்கிற பொய்ப்பிம்பத்தைப்பற்றிய புத்தகத்துக்கான ஆய்வில் உள்ள இவர் கல்கத்தா சேரிகளில் உள்ள ஏழைகளிடம் சென்று விசாரித்திருக்கிறார் (இப்போது முடிக்கப் பட்டு விட்டது- The Final Verdict என்று அந்தப் புத்தகத்துக்குப் பெயர் – மொ.பெ) மதர் தெரசாவின் உரைகளை கூர்ந்து ஆராய்ந்த இவர் சொல்கிறார். “எங்கே ஆய்ந்து தேடினாலும் சரி, நான் கண்டதெல்லாம் பொய்களையே- உதாரணத்திற்கு- பள்ளிக்கூடங்கள் பற்றிய பொய்யைப்பார்ப்போம். கல்கத்தாவில் ஐயாயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை நடத்துவதாக மதர் தெரசா அடிக்கடி குறிப்பிடுகிறார். ஐயாயிரம் குழந்தைகள்!- அப்படியென்றால், அது கட்டாயம் பெரிய பள்ளிக்கூடமாகத்தானே இருக்கும், சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள பெரும்பள்ளிக்கூடங்களிலேயே ஒன்றாகக்கூட அது இருக்கும். ஆனால் அந்தப் பள்ளிக்கூடம் எங்கே? நான் அதை எங்குமே காணவில்லை, அது மட்டுமல்ல, அந்தப் பள்ளிக்கூடத்தைப்பார்த்த ஒருவரையும்கூட நான் எங்குமே கண்டதில்லை” என்கிறார் சாட்டர்ஜி.
கல்கத்தாவின் பிற சேவை நிறுவனங்களை விட மதர் தெரசாவின் சேவை நிறுவனங்கள் இருவிதங்களில் வேறுபடுகின்றன: 1) மதர் தெரசாவின் சேவை நிறுவனங்கள் உலகப்புகழ் பெற்றவை, 2) பிற அமைப்புகளைவிட மிக அதிக நிதிஆதாரம் கொண்டவை.
சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத்தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. சேவை அமைப்புகளின் கணக்குகளை சரிபார்க்க வேண்டிய டெல்லி நிதி அமைச்சகம் இந்த அமைப்பின் சரியான கணக்கு வழக்குகளை வைத்துள்ளதா என்று தெரியவில்லை. ”STERN” நிர்வாகம் இந்திய நிதி அமைச்சகத்தை இதுகுறித்து கேட்டதில் இது வெளியிட முடியாத ரகசியத் தகவல் என்று கூறி விவரங்கள் தர மறுத்து விட்டது. (முதன்முறையாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட போது இருந்த நிலை இது. ஆர்வலர்கள் இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் இப்போது இந்திய அரசாங்கத்தை மீண்டும் அணுகிப் பார்க்கலாம் – மொ.பெ).
மதர் தெரசாவின் சேவை அமைப்பிற்கு 6 கிளைகள் ஜெர்மனியில் உள்ளன. அங்கும் நிதி விவகாரங்கள் ரகசிய தகவல்கள்தான். ஜெர்மனி கிளைகளின் செயல் தலைவரான சிஸ்டர் பௌலினிடம் இதுகுறித்து கேட்டபோது, “எங்களிடம் எந்த அளவு பணம் உள்ளது என்பது- அதாவது நான் சொல்ல வந்தது எந்த அளவு குறைவாக எங்களிடம் பணம் உள்ளது என்பது- மற்ற யாரும்தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லை” என்றார். மரியா டிங்கல்ஹாஃப் என்பவர் இந்த அமைப்பில் கணக்கு வழக்குகளை எழுதுபவராக 1981 வரை தாற்காலிக வேலை பார்த்து வந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது வருடத்திற்கு மூன்று மில்லியன் (ஜெர்மானிய மார்க்குகள்) வந்ததாக நினைவு கூர்கிறார். ஆனால் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள மதர் தெரசா வெளியாட்களை முழுதும் நம்பவே இல்லை. ஆகவே, 1981-இலிருந்து சிஸ்டர்களே கணக்கு வழக்குகளைக் கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். “நான் வெளியேறியபின் உண்மையில் எவ்வளவு பணம் வந்ததென்று தெரியாது, ஆனால் மூன்று மில்லியனின் பல மடங்குகளாக அவை இருந்திருக்கும்தான்” என்று கணக்கிடுகிறார். அவ்வகையில் “ஜெர்மனிக்கார்களைப்பொறுத்தவரை மதர் தெரசா மிகவும் மகிழ்வாகவே இருந்தார்” என்கிறார் மரியா.
நியுயார்க்கின் ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள ”புனித ஆவி இல்லம்”தான் மதர் தெரசாவின் கிளைகளிலேயே பணம் கொழிக்கும் கிளையாக ஒருவேளை இருந்திருக்கக்கூடும். சிஸ்டர் விர்ஜினாக இருந்து பின்னர் சுசன் ஷில்ட்ஸ் என்று சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பியவர் ஒன்பதரை வருடங்கள் அங்கே பணியாற்றி இருக்கிறார். “எங்கள் நாளின் பெரும்பகுதியை நன்றிக்கடிதம் எழுதவதற்கும், எங்களுக்கு வந்த செக்குகளை கையாள்வதிலுமே செலவிட்டோம்” என்கிறார். ”ஒவ்வொரு இரவும், நன்கொடை ரசீது தயாரிப்பதற்காகவே 25 சிஸ்டர்கள் பல மணிநேரங்கள் செலவழிப்பார்கள். ஒரு தொழிற்சாலை போல செயல்படுவார்கள்: சிலர் தட்டச்சு அடிப்பார்கள், மற்றவர்கள் தொகைக்கான பட்டியலைத் தயாரிப்பார்கள்; பிறர் கடிதங்களை அதன் கவர்களில் போட்டு மூடுவார்கள்; வேறு பலர் வந்த செக்குகளைப் பிரிப்பார்கள். 5 டாலரில் இருந்து 100 டாலர் வரை செக்குகள் வரும். பல நேரங்களில் நன்கொடையாளர்கள் செக்குகளை வாசல் கதவில் வைத்துவிட்டுபோய் விடுவார்கள். கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினங்களில் நன்கொடை கட்டுக்கடங்காமல் போய்விடும். போஸ்ட்மேன்கள் சாக்குமூட்டைகளில் கடிதங்களைக்கொண்டு வருவார்கள்- 50,000 டாலர் நன்கொடை செக்குகள் வருவதெல்லாம்கூட அதிசயம் கிடையாது” என்கிறார் சிஸ்டர் விர்ஜின். நியுயார்க் பேங்க் அக்கவுண்டில் ஒருவருடத்தில் மட்டும் 50 மில்லியன் டார்கள் இருந்ததை நினைவுகூர்கிறார். ஒரு வருடத்தில் 50மில்லியன் டாலர்கள்!- அதுவும் கத்தோலிக்க பெரும்பான்மை இல்லாத ஒரு நாட்டில்! அப்படியென்றால் ஐரோப்பாவிலும், பிற உலக நாடுகளில் எவ்வளவு வசூல் செய்தார்கள்?
உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள்- இந்த வசூல் பலப்பல வருடங்களாகத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று.
நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசாவின் சேவை அமைப்புகள் அதனளவில் பெரும் நிதியைச் செலவழிக்க முடிவதில்லை. ஸிஸ்டர்கள் ஆதரவில் இயங்கும் சேவை அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை- முக்கியமற்றவை- உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் ”மதர் தெரசா ஹோம்” என்பது சேவைச்செயல்கள் எதுவும் நடைபெறாத, சிஸ்டர்கள் வாழ்வதற்கான ஓர் இருப்பிடமாகவே இருக்கிறது. வெளித்தெரியக்கூடிய அல்லது பயனுள்ளதான உதவிகள் எதுவுமே அவ்விடங்களில் இருந்து தர இயலாது. இந்த அமைப்புகளுக்கு பெரும் நன்கொடைகள் பணமாகவும் பணமற்ற பிற வகையிலும் அடிக்கடி வருகின்றன. உதாரணத்திற்கு, வெளிநாட்டு மருந்துகள் பெட்டி பெட்டியாக இந்திய விமான நிலையங்களில் வந்திறங்குகின்றன. நன்கொடையாக வரும் உணவுப்பொருட்கள், பால் பவுடர், ஆகியவை கல்கத்தா துறைமுகங்களில் கண்டெய்னர்களில் வந்து இறங்குகின்றன. எண்ணிப்பார்க்கவே முடியாத அளவுக்கு ஆடைகளும், உடைகளும் அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நன்கொடைகளாக வருகின்றன. இவ்வாறு வரும் உபயோகப்படுத்தப்பட்ட மேல்நாட்டு உடைகள் கல்கத்தாவின் நடைபாதைக்கடைகளில் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதைக்காணலாம். நடைபாதை வியாபாரிகள் “மதரிடமிருந்து சட்டைகள், மதரிடமிருந்து பேண்டுகள்” என்று கூவி விற்கிறார்கள்.
(கேதரின் பூ எழுதிய Behind the beautiful forever புத்தகத்திலும் இதுதொடர்பான குறிப்பொன்று உள்ளது: மதர் தெரசாவை முன்னிறுத்தும் சிஸ்டர் பௌலெட்டின் அமைப்புக்கு பம்பாய் சேரிக்கென்று வரும் நன்கொடைப்பொருட்கள் சில நாட்களில் பம்பாய் நடைபாதைகளில் விற்கப்படுவதை ஆவணப்படுத்தி இருக்கிறார்.கேதரின் பூ பம்பாய் சேரியில் பல வருடங்கள் வசித்தவர். 2012-இல் அவர் புத்தகம் வெளி வந்தது. அன்றும் சரி இன்றும் சரி சேரி அனாதைகளுக்காக கிறித்துவ அமைப்புகளுக்கு வரும் நன்கொடைப்பொருட்கள் வெளியே விற்கப்படுவது மாற்றமின்றி தொடரும் ஒன்று என்பதையே இது காட்டுகிறது. அவரது புத்தகம் பற்றிய அருணகிரியின் கட்டுரைக்கான இணைப்பு இங்கே – மொ.பெ.)
பிற சேவை அமைப்புகள் போலல்லாமல், தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்” (Missionaries of Charity) அமைப்பு சுய நிர்வாக செலவுக்காக பெரிதாக எதுவும் செலவழிப்பதில்லை, செலவற்ற ஓர் அமைப்பாகவே அது நிர்வகிக்கப்படுகிறது. 150 நாடுகளில் இருக்கும் நான்காயிரம் ஸிஸ்டர்கள், பல மில்லியன் டாலர்கள் கொண்ட இந்த உலகளாவிய சேவை அமைப்பின் வேலையாட்கள். வறுமை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை வாழ்நாள் நெறியாக ஏற்றுக்கொண்டவர்கள் இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. இவர்களுக்கு உதவுவதற்கென்று சாதாரண குடிமக்களில் இருந்து 3 லட்சம் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.
மதர் தெரசா சொல்வதுபடியே பார்த்தால்கூட அவரது அமைப்பு உலகெங்கிலும் 500 இடங்களில் செயல்படுகிறது. ஆனால் அந்த இடங்களை விலைக்கு வாங்கவோ வாடகைக்கு எடுக்கவோ அந்த அமைப்பு தன் வங்கிக்கணக்கை தொடக்கூட வேண்டியதில்லை. ”அதற்கெல்லாம் செலவழிக்கவே வேண்டாம் என்பார் மதர்” என்கிறார் சுனிதா குமார். சுனிதா குமார் கல்கத்தாவின் பெரும்பணக்கார சீமாட்டிகளில் ஒருவர்; மதர் தெரசாவின் அமைப்புக்கு வெளியே அவருக்கு நெருக்கமானவரும் கூட. “மதர் தெரசாவிற்கு வீடு தேவைப்பட்டால், அது அரசாக இருந்தாலும், தனிஆளாக இருந்தாலும், நேரடியாக சொந்தக்காரரை அணுகுவார். அவரிடம் பேசிப்பேசி கடைசியில் இலவசமாகவே அந்த இடத்தைப் பெற்றும் விடுவார்”என்கிறார்.
அவரது இந்த வழிமுறை ஜெர்மனியில் பெரும் வெற்றி பெற்றது. 2003 மார்ச்சில் ஜெர்மனியின் ஹாம்பெர்க்கில் இவ்வாறு பெறப்பட்ட ”பெத்லஹேம் வீடு” வீடற்ற பெண்டிருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 4 சிஸ்டர்கள் அங்கு வேலை செய்தனர். தனித்துவம் வாய்ந்த அமைப்புடைய அந்தக்கட்டிடத்தை முடிக்க அன்றைய தேதியில் 2.5 மில்லியன் ஜெர்மன் மார்க்குகள் செலவாயின. ஆனால், மதர் தெரசாவின் அமைப்பு அந்தக்கட்டிடத்திற்காக தன் நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. அதற்கான பணம் கிறித்துவ அமைப்பு ஒன்றால் ஹாம்பர்கில் சேவை நிதியென்று வசூலிக்கப்பட்டது. குறுகியகாலத்தில் மில்லியன்களைத்திரட்ட மதர் தெரசா என்கிற பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது. (நன்றி-தமிழ்ஹிந்து இணையம்)
எவருக்கும் எதற்காகவும் பணம் தருவதில்லை என்பது கடவுள் தனக்குத்தந்த உரிமையாகவே தெரசா கருதினார். ஒருமுறை லண்டனில் தன் சிஸ்டர்களுக்காக 500 பவுண்டிற்கு உணவு வாங்கினார். ஆனால் அதற்கான பணத்தை தர வேண்டுமென்று உணவு விடுதிக்காரர் கேட்டபோது, மெல்லிய சிறு தேகம் கொண்ட மதர் தெரசா என்ற அந்தப்பெண்மணியின் கோபம் வெடித்துக்கிளம்பியது: “இது கடவுளின் பணிக்காக!” என்று கத்தினார். பெரும் குரலெடுத்து தொடர்ந்து அவர் திட்டத்தொடங்கியதில், உணவு வரிசையில் நின்றுகொண்டிருந்த வேறொருவர் முன் வந்து அந்த செலவுப்பணத்தை ஏற்றுக்கொண்டார்.
Missionary_Position_book_Mother_Teresaமதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991-இல் அவரது அமைப்புக்கு வரவு 5.3மில்லியன் மார்க்குகள். செலவு (சேவை செலவுகள் உட்பட?) வெறும் 360,000 மார்க்குகள்- அதாவது 7% மட்டுமே செலவு. மீதமுள்ள பணம் எங்கே போனது? இங்கிலாந்து அமைப்பின் தலைமைப்பதவி வகிக்கும் சிஸ்டர் தெரசினாவிடம் கேட்டபோது “மன்னிக்கவும், உங்களுக்கு அதைச்சொல்ல முடியாது” என்று தவிர்க்கும் விதமாக பதிலளித்தார். இந்த நிதியில் ஒரு பகுதியை ஒவ்வொரு வருடமும் பிற நாடுகளில் உள்ள இந்த அமைப்பின் கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல் செய்த விவரங்கள் சொல்கின்றன. ஆனால் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு என்கிற விவரம் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம்- அங்குள்ள வட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அதன்பின் அந்த வட்டிகன் கணக்கில் சேர்ந்த பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.
ஒன்று நிச்சயம்- பணக்கார நாடுகளில் இருந்து வரும் பெரும் பணத்தால் ஏழை நாடுகளில் உள்ள மதர் தெர்சாவின் சேவை அமைப்புகள் பலன் பெறுவதே இல்லை. மதர் தெரசாவின் அதிகாரபூர்வ சரிதையாளர் கேத்ரின் ஸ்பிங்க் எழுதுகிறார் “சிஸ்டர்கள் அமைப்பு ஒரு நாட்டில் காலூன்றிய உடனேயே மதர் அந்த அமைப்புக்கான அனைத்து நிதி உதவிகளையும் விலக்கிக்கொண்டு விடுவார்”. மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்.
ஸ்டெர்ன் (STERN), நன்கொடைகள் எங்கெங்கே போகின்றன என்பது குறித்து எழுத்து மூலமாகவும் நேரே சென்று பார்த்தும் கல்கத்தாவிலுள்ள மதர் தெரசாவின் சேவையின் பிரசாரகர்கள் அமைப்பை பல முறை கேட்டுக்கொண்டது. மதர் தெரசாவின் அமைப்பு ஒருமுறையும் பதில் அளிக்கவேயில்லை.
“நியுயார்க்கில் உள்ள ஹவுஸுக்குப்போனால், நன்கொடைகள் எங்கே போகின்றன என்று உங்களுக்கு தெரிய வரலாம்” என்கிறார் இவா கோலோட்ஷியெ என்கிர போலந்துப்பெண்மணி. இவர் தெரசாவின் MIssioanries of charity-இல் 5 வருடங்கள் வேலை பார்த்தவர். அவர் சொல்கிறார்: “வீடற்றவர்களுக்கான அந்த அமைப்பு நடத்தும் நிலவறையில் விலைமதிப்புள்ள பல புத்தகங்கள், நகைகள், தங்கம் ஆகியவை இருக்கின்றன. அவை என ஆகின்றன? மதர் தெரசா அமைப்பின் சிஸ்டர்கள் நன்கொடைகளாக இவற்றை புன்சிரிப்புடன் வாங்கி உள்ளே வைத்துக்கொள்கிறார்கள். இப்படி வந்து சேரும் பெரும்பாலான நன்கொடைகள் அங்கேயே பலகாலமாக எவ்வித பயனுமின்றிக் குவிந்து கிடக்கின்றன”.
பல மில்லியன்களாக வந்து சேரும் நன்கொடைகளுக்கும் இதே கதிதான். சிஸ்டர் விர்ஜின் என்றழைக்கப்பட்ட சூசன் ஷீல்ட்ஸ் சொல்கிறார் “தவறாக உபயோகிக்கப்படுவதில்லை என்று கொண்டாலும்கூட, இப்படி வரும் நன்கொடைகள் பெரும்பாலும் எந்த சேவைக்காகவும் உபயோகிக்கப்படுவதே இல்லை. எத்தியோப்பிய பஞ்சத்தின்போது வந்த பல செக்குகள் எத்தியோப்பியா ஏழைகளுக்காக என்று குறிப்பிடப்பட்டே வந்தன. அப்படி வந்த செக்குகளின் கணக்கைக்கூட்டி அந்தத்தொகையை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி விடட்டுமா என ஒருமுறை கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் சிஸ்டரிடம் கேட்டேன். அவரது சொன்ன பதில் “இல்லை, ஆப்பிரிக்காவிற்கு நாம் பணம் அனுப்புவதில்லை”. ஆனால் பணம் பெற்றுக்கொண்ட தற்கான ரசீதில் மட்டும் தவறாமல் ”எத்தியோப்பியாவிற்காக” என்று எழுதியே நன்கொடை தந்தோருக்கு அனுப்பி வந்தேன்”.
முன்பு இந்த அமைப்பின் சிஸ்டர்களாக இருந்தவர்களைப்பொறுத்தவரை, மதர் தெரசா அமைப்பிற்கு வரும் நிதி என்பது எப்போதுமே ஒருவழிப்பாதைதான். “பிற அமைப்புகளைவிட நமக்கு அதிகமாக நிதி வருகிறது என்பது ஆண்டவன் மதர் தெரசாவை அதிகம் நேசிக்கிறான் என்பதையே காட்டுகிறது என்றே எங்களுக்கு சொல்லப்பட்டது” என்கிறார் சூஸன் ஷீல்ட்ஸ். நன்கொடைகளும் கொழுத்த வங்கிக்கணக்கும் ஆண்டவனின் அன்பின் அடையாளங்கள். ஆக, எடுத்துக்கொள்வது திருப்பித்தருவதை விடப் புனிதமானது.
நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நியுயார்க் பிரான்க்ஸ் நகரில் இந்த அமைப்பின் பெண் துறவிகள் கஞ்சித்தொட்டி நடத்துகிறார்கள்- உண்மையை சொல்லப்போனால், உணவுப்பொருட்கள் வாங்குவது முதல் அத்தனை சேவைகளையும் செய்யும் பிற தன்னார்வலர்களை வைத்து நடத்திக்கொள்கிறார்கள். கஞ்சியை விநியோகிப்பது மட்டும் சிஸ்டர்களாய் இருக்கலாம். ஒருமுறை தன்னார்வலர்கள் ரொட்டி வாங்கிக்கொண்டு வர மறந்து விட்டதால், உணவு வினியோகம் தடைபடும் நிலையில், சுபீரியரிடம் ரொட்டி நாம் வாங்கி விடலாமா என்று கேட்டபோது “அந்தக்கேள்விக்கே இடமில்லை- நமது அமைப்பு வறியதொரு அமைப்பு” என்று அவர் சொன்னதை ஷீல்ட்ஸ் நினைவுபடுத்திக்கூறுகிறார். இதுபோல் எண்ணிலடங்கா பல சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் சொல்கிறார். வெள்ளாடை வாங்க வசதியில்லாத நிலையில் முதல் கம்யுனியனிற்கு ஒரு பெண் வரமுடியாமல் போனபோது. ஷீல்ட்ஸ் (அன்று சிடர் வெர்ஜின்) சுபீரியரிடம் அந்த வெள்ளை ஆடையை நாம் வாங்கித்தரலாமா என்று கேட்க அதை அவர் கடுப்புடன் மறுத்ததைச் சுட்டிக்காட்டுகிறார் ஷீல்ட்ஸ். அந்தப்பெண் கடைசிவரை முதல் கம்யுனியன் பெறவே இல்லை.
அவசியத்தேவைக்கான செலவுகளைக்கூட இப்படி இறுக்கிப்பிடிப்பதால் ஏழைகளிலும் ஏழைகளான இந்தியாவின் ஆதரவற்ற குழதைகள்தான் உண்மையில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றார்கள். டெல்லியில் தெரசாவின் அமைப்பு நடத்தும் ஒரு இல்லத்திலிருந்து வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட அனாதைக்குழந்தைகள் காத்திருக்கிறார்கள். இந்த இல்லத்தை நடத்தும் செலவும் வழக்கம்போல் தெரசாவின் அமைப்பிற்குக் கிடையாது. வெளிநாட்டிலிருக்கும் எதிர்கால தத்து பெற்றோர்கள் செலவில் இந்த இல்லம் நடத்தப்படுகின்றது. ஜெர்மனியில் இப்படிப்பட்ட தத்து குழந்தைகளுக்கான முதற்பெரும் இடை-நிறுவனமாக செயல்படுவது ப்ரோ இன்ஃபண்டெ என்னும் அமைப்பு. அதன் தலைவரும் மதர் தெரசாவின் தனிப்பட்ட நண்பருமான கார்லா விடெகிங் இந்த அமைப்பின் நன்கொடைதாரருக்கும் ஆதரவாளருக்கும் எழுதிய கடிதம் இவ்வாறு பேசுகிறது:
”எனது செப்டம்பர் வருகையின்போது அங்கே இரண்டு மூன்றுகுழந்தைகள் ஒரே கட்டிலில் படுத்துக்கிடப்பதைப் பார்த்தேன். அவை அடைக்கப்பட்டு இருந்த அறை மிகக்குறுகலான அறை. ஒரு சதுர இஞ்ச் கூட விளையாட்டு இடம் குழந்தைகளுக்கு இல்லை. இதனால் எழும் நடத்தை தொடர்பான பிரச்சனைகளை நாம் எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது”. இந்த கடிதத்தின் தொனி, நிதி ஆதாரம் இல்லாத பலவீன நிலையில் இருந்துகொண்டு அந்தக் குழந்தைகளின் தேவைகளுக்காக விடெகிங் நன்கொடைதாரர்களிடம் வேண்டுவதாக உள்ளது. பலவீன நிலையா? அதுவும் யுனிசெஃப்பைவிட மும்மடங்கு இந்தியாவில் மட்டும் செலவழிக்க முடியக்கூடிய அளவுக்கு பில்லியன் அளவு பணச்செழிப்பு உடைய மதர் தெரசாவின் அமைப்பு நிதிஆதார வசதியற்ற அமைப்பா? தெரசாவின் அமைப்பிற்கு கட்டில்கள் வாங்க மட்டுமல்ல, விளையாட்டு மைதானங்களுடன் சேர்த்தே அனாதை இல்லங்களையும் நிறுவக்கூட நிதிவசதி இருக்கிறதுதான்- டெல்லியில் சில இடங்களில் மட்டுமல்ல, டெல்லி, பம்பாய், கல்கத்தா என்று முக்கிய நகரங்கள் அனைத்திலும் அவதிப்படும் ஆயிரக்கணக்கான தெரு அனாதைகளை கைதூக்கி விடும் அளவுக்கு அவர்களிடம் பெரும்பணம் இருக்கிறதுதான்.
ஆனால் மதர் தெரசாவைப்பொறுத்தவரை, சேமித்தல் என்பதே அதனளவில் ஒரு முக்கிய விழுமியமாகும். அதெல்லாம் சரிதான், ஆனால் வறிய அமைப்பாகத்தொடங்கிய அவரது நிறுவனம் கிடுகிடுவென பெரும்நிதிவசதியோடு வளரத்தொடங்கியபோது வந்து சேர்ந்த விலையுயர்ந்த நகைகள், படங்கள், வீடு நிலம் முதலான சொத்துகள், செக்குகள், சூட்கேஸ் நிரம்பி வந்து சேர்ந்த பணக்கற்றைகள் – இவற்றையெல்லாம் என்ன செய்தார்? அவர் நினைத்திருந்தால் இப்படி பெரும் சேமிப்புக்கிடங்கில் தன் செல்வங்களை புதைத்து வைத்திருப்பதைத்தாண்டி, கவனமாகத்திட்டமிட்டு அந்தப்பணத்தைக்கொண்டே தன் சேவைச்செயல்கள் முழுவதையும் செய்திருக்க முடியும். ஆனால் நோபல் பரிசு வென்ற இந்த அம்மையாருக்கு உண்மையில் மக்களுக்கு உதவும் வகையில் திறம்பட நிர்வகிக்கப்படும் ஒழுங்குமிகு நிர்வாகம் என்பது தேவையில்லை. மிஷனரிஸ் ஆஃப் சேரிடி அமைப்பு “உலகிலேயே ஒழுங்கற்ற (disorganized) ஒரு நிறுவனம்” என்று பெருமையுடன் கூறிக்கொண்டார் தெரசா. அவரது நிறுவனத்தில் கம்ப்யூட்டர்கள், நகலெடுக்கும் யந்திரங்கள், நவீன தட்டச்சு இயந்திரங்கள் ஆகிய எவற்றிற்கும் அனுமதி கிடையாது. நன்கொடையாக வந்தாலும், அவற்றை நிறுவவோ உபயோகிக்கவோ அனுமதி கிடையாது. கணக்குகளை எழுத பள்ளி நோட்டுப்புத்தகங்களையே உபயோக்கிக்கிறார்கள். அதில் பென்சில் கொண்டு நுணுக்கி நுணுக்கி கணக்குகளை எழுதுகிறார்கள். இப்படியே இறுக்கி எழுதப்பட்ட கணக்குகளால் இடைவெளி இன்றி எழுதி புத்தகத்தின் பக்கங்களை நிரப்புகிறார்கள். பிறகு அந்தக்கணக்குகளை எல்லாம் ரப்பர் கொண்டு அழிக்கிறார்கள். அழித்து விட்டு அதே பக்கங்களில் மீண்டும் கணக்கெழுதத்தொடங்குகிறார்கள். எதற்கு இதெல்லாம்? சேமிப்பதற்காகவாம்.
நெடுங்கால நோக்கம் கொண்ட சேவை நிறுவனம் என்பது அதன் ஸிஸ்டர்களை செவிலிப்பணிக்கும், ஆசிரியப்பணிக்கும், மேலாண்மைப்பணிக்கும் பயிற்சி தந்து தயார் செய்யும். ஆனால் தெரசாவின் அமைப்பிலுள்ள எந்த ஒரு ஸிஸ்டருக்கும் எந்தப்பயிற்சியும் அளிக்கப்படுவதே கிடையாது.
வருடங்கள் செல்லச்செல்ல ஒழுங்கற்ற நிர்வாகம் என்பதில் பெருமிதம் கொண்ட மதர் தெரசாவின் சில முடிவுகள் மென்மேலும் விசித்திரமாயின. சுஸன் ஷீல்ட்ஸ் சொல்கிறார்: ஒருமுறை அவரது அமைப்பு, நியுயார்க் நகரில் உள்ள வெற்றுக்கட்டிடமொன்றை எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்புக்காக வாங்க முடிவு செய்தது. கட்டிட விலை: 1 டாலர். ஆனால் உடல் ஊனமுற்ற பலர் உபயோகிக்கும் கட்டிடம் என்பதால் நியுயார்க் நகராட்சி அமைப்பு லிஃப்ட் ஒன்றை நிறுவும்படி சொன்னது. ஆனால் லிஃப்ட் நிறுவ மறுத்து விட்டது தெரசாவின் அமைப்பு. மதர் தெரசாவைப்பொறுத்தவரை லிஃப்ட் என்பது செல்வச்செழிப்பின் அடையாளம். இறுதியில் அந்தக்கட்டிடம் நியுயார்க் நகராட்சியிடமே திரும்பத்தரப்பட்டது.
தெரசாவின் சேவையின் பிரசாரகர்கள் அமைப்பு எத்தியோப்பியாவில் பசியால் வாடுபவர்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளை (அதற்காகவென்று நன்கொடைகளைப்பெற்ற பின்னரும்) அனுப்பாமல் போனதும் இந்திய அனாதைக்குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு தராமல் போனதும் ஒருபுறம் இருக்க, இந்த அமைப்பு பெருமை கொள்ளும் ஒழுங்கற்ற நிர்வாகம் என்கிற கோட்பாட்டினால் பாதிக்குள்ளான பிறரும் உள்ளனர்.
மதிப்பு வாய்ந்த லான்ஸெட் என்கிற மருத்துவ இதழின் எடிட்டரான ராபின் ஃபாக்ஸ் என்பவர் 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது: எலும்புருக்கி என்று சொல்லப்படும் டிபி நோய் (எளிதில் தொற்றக் கூடியது – மொ.பெ) வந்தவர்கள்கூட தனியறையில் வைக்கப்படுவதில்லை என்பதையும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கொதிக்கும் நீரில் கிருமி நீக்கம் செய்யப்படாமல் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவப்பட்டு மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்படுவதையும் அவரது கட்டுரை வெளிச்சம் போட்டது. கடுமையான வலியில் துடிதுடிக்கும் நோயாளிகளுக்குக் கூட வலிமரப்புக்கு மாத்திரைகள் தரப்படுவதில்லை- மாத்திரைகள் இல்லாததால் அல்ல, மதர் தெரசாவின் கொள்கையின் காரணமாக. ”கிறிஸ்துவின் வலியில் பங்கு பெறுவதென்பதே ஒருவருக்கு தரப்படும் மிக அழகிய பரிசு ஆகும்” என்றார் மதர் தெரசா. ஒருமுறை வலியில் கதறிக்கொண்டிருந்த நோயாளி ஒருவரிடம் மென்மையாக “நீ வலியில் துடிக்கிறாய் என்றால், ஏசு உன்னை முத்தமிடுகிறார் என்று பொருள்” என்றார். அதைக்கேட்ட நோயாளி “அப்படியென்றால் உங்கள் ஏசுவை என்னை முத்தமிட வேண்டாமென்று சொல்லுங்கள்” என்று கோபத்தில் கத்தினார்.
வாழ்வின் இறுதிநிலையில் உள்ளோருக்கான இல்லத்தில் பணியாற்றிய இங்கிலாந்து டாக்டர் ஜாக் ப்ரெகர் இவ்வாறு சொல்கிறார்: “அன்பும், புரிதலும், அக்கறையும் அளிக்கும் ஒருவர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்துவார். மதர் தெர்சாவின் அமைப்பு ஒருவேளை உலகிலேயே பணக்கார சேவை அமைப்பாக இருக்கும். கறாரான மருத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவரது இல்லங்களில் இறந்து கொண்டிருக்கும் பலரும் உண்மையில் இறக்க வேண்டிய அவசியமே கிடையாது”.
பிரிட்டிஷ் செய்தி இதழான கார்டியன் ”கவனமே இல்லாமல் உதாசீன சேவைசெய்வதற்கான முறைப்படுத்தப்பட்ட அமைப்பு” என்று மதர் தெரசாவின் அமைப்பைக்குறிப்பிடுகின்றது.
இறக்கும் நிலையில் உள்ளோர் கதி இதுவென்றால், அனாதைக்குழந்தைகளுக்கான மருத்துவ கவனிப்பும் எவ்வகையிலும் மேம்பட்டதாக இல்லை. ஜெர்மனியின் ப்ரோ இன்ஃபண்டெ (தத்தெடுக்க உதவும் இடைநிலை அமைப்பு) தலைமை தத்துப்பெற்றோர்களுக்கு இவ்வாறு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது: ”உங்கள் குழந்தைகளுக்கு சரியான தடுப்பூசி தந்திருக்கிறார்களா என்பதைக்கவனியுங்கள். சில கேஸ்களில், பயன்பாடு நாள் முடிந்த பழைய தடுப்பூசி போட்டிருப்பதாகவும், சரியாக பராமரிக்காததால் வீரியமிழந்த தடுப்பு மருத்துகள் உபயோகப்பட்டதாகவும் அனுமானிக்கிறோம்”.
இவையெல்லாமே ஒரு விஷயத்தைத்தான் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன- அதுவும் மதர் தெரசா அடிக்கடி தன் உரைகளில் குறிப்பிட்டதுதான் – இறப்புக்குப்பின் உள்ள வாழ்க்கையைப்பற்றியே அவரது அக்கறை எல்லாம், இவ்வுலக வாழ்க்கையில் அவருக்கு அக்கறை கிடையாது என்பதுதான் அது.
மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்.
மதர் தெரசா உலகை மாற்றவோ, ஏழைகளின் துன்பங்களை ஒழிக்கவோ, வறுமைக்கெதிராக போராடவோ விரும்பினார் என்று நம்புபவர்கள் உண்மையில் தங்களது மன சாந்திக்காகவே அவ்வாறு நினைத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு நம்புபவர்கள் உண்மையில் மதர் தெரசா பேசுவதைக் கவனித்துக்கேட்டதே இல்லை. ஏழையாய் இருப்பதும், துன்பப்படுவதும் அவரைப்பொறுத்தவரை உன்னத லட்சியங்கள் மற்றும் சாதனைகளாகும், அந்த லட்சியக்குறிக்கோளை தன்கீழ் தன் பராமரிப்பில் இருந்த அத்தனை பேர் மீதும் அவர் சுமத்தினார், கிறித்துவின் ஆணையை ஏற்ற அவரது குறிக்கோள் இவ்வுலகல்ல, இறப்புக்குப்பின் உள்ள மறுவுலகே.
பின்னாட்களில் புகழ் ஏற ஏற மதர் தெரசா என்கிற பிம்பம் மீது மக்கள் கொண்டுள்ள தவறான புரிதல் அவருக்கே புரியத்தொடங்கியது. அந்தத்தவறான புரிதலைச் சரிசெய்யும் பொருட்டு, இவ்வாறு வாசகங்களை எழுதி அவரது மதர் இல்லம் கட்டிட முகப்பில் தொங்க விட்டார்:
”அவர்களிடம் சொல்லுங்கள்: சேவைக்காக அல்ல, ஏசுவுக்காகத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று. எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் மதப்பற்றாளர்கள். நாங்கள் சமூக சேவகர்கள் அல்ல, ஆசிரியர்கள் அல்ல, மருத்துவர்கள் அல்ல. நாங்கள் (கிறித்துவின்) பெண்துறவிகள் மட்டுமே”
அப்படியென்றாலும் இறுதியில் ஒரு கேள்வி எஞ்சுகிறது: வெறும் பெண் துறவிகள் மட்டும்தான் நீங்கள் என்றால், உங்களுக்கு எதற்கு இந்த அளவு பணம்?