New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது,  தேய்ந்தது ஏன்? (2)

வெளிகாரணிகள்:

1.        ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

2.        ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.

3.        இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.

4.        ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.

5.        ராஜபுத்தரர்களின் வளர்ச்சி

6.        ஹூனர்களின் படையெடுப்பு

7.        முகமதியரின் அழிப்பு

இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.

Mahavira and Buddha

ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.

* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.

* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!

* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!

ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?

Asoka - Buddhism
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]

Chandragupta, Bindusara, Asoka

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்.
http://www.safarmer.com/washstate.pdf

அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?,  in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.

ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே.
http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

வேதபிரகாஷ்
15-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Chandragupta Maurya - a Jain

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard