New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

Mahavira and Buddha.looking alike

ஜைன-பௌத்த சந்திப்புகள், உரையாடல்கள் மற்றும் எதிர்ப்புகள்: ஜைனம் பௌத்தத்திற்கு முற்பட்டது என்பதில் சரித்திர ரீதியாக எந்த ஐயமும் இல்லை, ஆனால் சரித்திர ஆதாரம் தான் இல்லை, அதாவது ஜைன காலத்தைச் சேர்ந்த எழுதபட்ட ஆவணங்கள் / கல்வெட்டுகள்தாம் இல்லை. எனவே, மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள், ஜைனத்தின் தொன்மை மற்றும் சரித்திரத்தை மறைத்து விட்டனர். பாவம், ஜைனர்களும் எழுத்தறிவு இல்லாமலேயே பலதுறைகளிலும் வல்லவர்களாக இருந்தனர்! அது எப்படி என்பதைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கும் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மட்டுமன்றி, அவர்களது மதத்தலைவர்களான மஹாவீரர் மற்றும் புத்தர் இவர்களின் உருவ சிலைகளிலும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமல் சிரமமாகவே இருந்தது.

Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932, p.286-287.

எழுத்தறிவு இல்லாமல் எப்படி சிற்பங்கள் செதுக்கப்பட்டன?: எப்படி ஜைன சிற்பங்கள் பௌத்த சிற்பங்கள் என்று அடையாளங்காணப்பட்டு, ஜைனத்தின் கலை மற்றும் அதன் தொன்மையினையும் மறைத்தனர். சிற்பக்கலை இந்தியாவில் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கவில்லை என்றால், சிற்பிகள் அத்தகைய உயிரோட்டமுள்ள மஹாவீரர்- புத்தர் சிலைகளை வடித்திருக்க முடியாது. அது மட்டுமல்லாது, இந்திய எழுத்துமுறை அசோகன் காலத்தில்தான் திடீரென்று பிறந்தது என்ற வாதத்தை வைத்துக் கொண்டு, இம்மாதிரி காலகக்கணக்கீட்டைக் குறைத்து சரித்திரத்தையும் குறைக்கின்றனர்.

* கல்வேலை தெரிந்தவர்களுக்கு, சிற்பங்களை வடிப்பவர்களுக்கு எழுததெரியாமலா போய்விடும்?

* கணிதம், வடிவக்கணிதம், வடிவமைப்பியல், பாறையியல், உலோகவியல், நுணுக்கமான கருவிகளை உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றை அறிந்தவர்கள் எழுத்தெரியாத மண்டுகளாக மண்டுகளாக இருந்துள்ளனர் என்பது சரித்திர புதிரே!

9வது-7வது BCE நூற்றாண்டுகளில் ஜைன கலை-கட்டிடங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை!

இருப்பினும், ஜைன பண்டிதர்கள் ஜைனத்தின் கலை-கட்டிடங்களின் தொன்மை சிந்துசமவெளி நாகரிகத்திற்கு செல்கிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
“பசுபதி” எனப்படுகின்றவர்தாம், ரிஷபதேவராகிய முதல் தீர்த்தங்கரர். ஜோஸப் காம்பெல், ஜான் கொல்லர் முதலியோரும் அத்தகையக் கருத்தை வைத்துள்ளனர்.
Joseph Campbell, Oriental Mythology, The Viking Press, New York, 1962, pp.219-220.
John Koller, The Indian Way, MacMillan Publishing Co., New York, 1982, p.113.

இதன்படி பார்த்தால், ஜைனத்தின் தொன்மை 2250-1950 BCE காலத்திற்கு செல்கிறது. ஆகவே, அது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்தியதரை நாடுகளில் பரவியது சாத்தியமே. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்.
Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

Greek philosophers

மேனாட்டவர் ஜைனத்தின் தொன்மையினை மறைத்தது, பௌத்தத்தின் காலத்தைக் குறைத்தது: இ. ஜே. தாமஸ் தமது “புத்தரின் வாழ்க்கை” என்ற நூலில் (1927 வருட பத்திப்பு), கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        இந்தியாவில் “ஜிம்னோஃபிஸ்டுகள்” அல்லது திறந்தமேனி சாமியார்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் பௌத்தர்கள் இல்லை (முன்னுரை, ப.XIV).

•        மனிதனுக்கு வேண்டிய தத்துவங்கள் எல்லாம், அந்த திகம்பர இந்தியர்களிடம் இருந்தன (ப.104).

•        ஸ்டிராபோ, “சர்மன்”களை “ஜெர்மன்”கள் என்றும், பர்பைரியஸ் சுமரியன்கள் என்றும் குறிப்பிட்டனர். அந்த சாமியார்கள், ஜைனம் அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் (ப.105).

•        அலெக்ஸ்சாந்தர் தக்ஸசீலத்தில், இத்தகைய நிர்வாண துறவியர்களைப் பார்க்க நேரிட்டது. அவர்களைப் பிடித்தபோது, அவர்களுள் டௌலானஸ் என்ற வயாதானவர் அலெக்ஸ்சாந்தருடன் செல்ல மறுத்ததுடன், மற்றவரையும் அவனுடன் செல்ல தடுத்தார். பிறகு கலானஸ் என்பவனை வெற்றிக் கொண்டு பிடித்துச் சென்றதாகத் தெரிகிறது (ப.115).

•        “சாக்ரடீஸ் ஆத்மாவானது, எவ்வாறு ஒரு பறவை கூண்டில் அடைப்பட்டிருக்கிறதோ, அது மாதிரி, உடலில் சிறையிடப்பட்டுள்ளது என்கிறார். இது பைதகோரஸின் தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது. பைத்தாகோரஸ்
இந்தியாவிற்கு சென்றிருந்ததால், அத்தகைய தத்துவம் இந்தியாவினின்று பெறப்பட்டது என நம்பப்படுகிறது” (ப.122).

Alexander meeting gymnophists -medieval period

ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் “விஞ்ஞான ரீதியில் மதங்களின் ஒப்புமை” என்ற தமது நூலில், கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        “திபெத்தியர், மங்கோலியர் மற்றும் சீனர்களின் கோதமர் ஒரு ஜைனராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் 10-11 BCE நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். திபெத்தியர் அவர் 916ல் பிறந்து, 881ல் புத்தனாகி தனது 35வது வயது வரை போதனை செய்து 851 BCEல் இறந்ததாக குறிப்பிடுகின்றனர். இது பார்ஸவ முனிவரின் காலத்தை ஒட்டிவருகின்றது” (முன்னுரை, ப.XIX). [இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர தேதிகளை ஒத்துபோகவில்லை என்பது நோக்கத்தக்கது].

•        “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது” (ப.2).

•        “அசோகனும் ஜைனர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டவில்லை, ஏனெனில் தனது ஆட்சிகாலத்தில் 12ம் வருடத்தில் தான் தனது மதநம்பிக்கையை பிரகடனப் படுத்திக் கொள்கிறான். ஆகையால் அவனது கல்வெட்டு சாஸனங்கள் எல்லாம் ஒரு ஜைன ஆட்சியாளரையேக் காட்டிகிறது” (ப.20).

•        அப்துல் ஃபஸலின் “ஐனி-அக்பரி” என்ற நூலின்படி, தனது பிரதிநிதி உஜ்ஜயினியில் 260 BCEல் இருக்கும்போது, தந்தை பிந்துசாரர் மற்றும் தாத்தா சந்திரகுப்தர் மகத பேரரசை ஆண்டு கொண்டிருந்தபோதும், அசோகன் காஷ்மீரத்தில் ஜைனத்தை ஆதரித்தான் என்பதாகும். புத்தன் இறந்து நூறு ஆண்டுகள் கழிந்தும், பௌத்தத்தைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை, ஏனெனில், அது ஜைனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. அசோகன் அவர்களிடையேதான் தனது மென்மையான-மிருதுவான ஜைனத்தை வாழ்க்கையின் புனிதத்துவம், அமைதி, தர்மம், சகோதரத்துவம் முதலிய கொள்கைகளுடன் பரப்பி வந்தான். அதுமட்டுமல்லாது, தனது கல்வெட்டுகளில் ஜைனர்களுக்குப் பிரியமான, “தேவநாம் பியா திஸ்ஸா” (கடவுளுக்கு/தேவனுக்குப் பிரியமான திஸ்ஸா) என்றுதான் தன்னை அழைத்துக் குறிப்பிட்டுக் கொண்டான் (ப.29). [“அசோகனது கல்வெட்டுகள்” தேவநாம் பியா திஸ்ஸா மற்றும் அசோகன் என்ற இருவரது கல்வெட்டுகள் ஆகும். முன்னவர் ஜைன மதத்தைச் சேர்ந்த அசோகன் (கல்ஹனர் குறிப்பிட்டது), பின்னவர், பௌத்தத்தைச் சேர்ந்த அசோகன். ஆனால் வின்சென்டு ஸ்மித் வலுக்கட்டாயமாக இருவரும் ஒருவரே என்று வாதிட்டு, முன்னவரை மறைத்து விட்டான்].

Alexander meeting gymnophists 1470-80 CE

•        பிறகுதான், கௌதம சாக்கியமுனி போதிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஜைன-புத்த மதம் சித்தாந்தங்களுடனும், வழிமுறைகளுடனும் இந்தியாவில் பரவியிருந்தது வந்தது ………… நிச்சயமாக அது பார்ஸ்வ மற்றும் மஹாவீரருக்கு முன்பு இருந்தது………….. 7ம் நூற்றாண்டு BCEலிருந்து இந்தியா, அம்மதத்தின் மையமாக இருந்தது. இமாலயத்திற்கு அப்பால், ஓக்ஸியானா, பாக்டிரீயா, காஸ்பியானா முதலிய பகுதிகளில் – அதே மாதிரியான கருத்துகள் மற்றும் பழக்க-வழக்கங்கள் பரவ ஆரம்பிக்கும் நிலை இருந்தது. கீழ்திசை உலகத்தில் தமது சந்நியாசிகளை 7ம் நூற்றாண்டிற்கு BCE முன்பே உலாவர செய்தனர் என்று சரித்திர ரீதியில் தெரிகின்றது. சீனாவிலிருந்து காஸ்பியன் வரை ஜைன-பௌத்தம் போதிக்கப்பட்டது என்பதனை காரணங்களுடன் நாம் நம்பலாம்…………அது மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓக்ஸியானா மற்றும் இமாலயத்தின் வடக்கில் இருந்தது” (ப.29). [மஹாவீரர் காலம் 599-529 BCE, ஆகவே மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனும்போது 2600 BCEல் / 4600 YBPல் அத்தகைய மதம் அங்கு இருந்தது என்ன என்பது ஆய்விற்குறியது].

•        ஆகையால்தான், நாம் ஜெல்மோக்ஸிஸ், பைத்தோகோரஸ் முதலியோர் 7வது-6வது BCE நூற்றாண்டுகளில் ஜைனர்கள்-பௌத்தர்களின் குருவான “புத்தர் போதித்தது” போன்று போதித்து வந்தனர் என்பதைக் காணமுடிகின்றது (p.32).

•        ஸ்டிராபோ, குறிப்பிடுவதாவது, “த்ரகியன் என்ற குழுமம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர். மாசி எனப்படுகின்ற அவர்களது சகோதரர்கள் உயிருள்ள எதையும் உண்ணாமல் இருந்தனர்.” (p.32)

•        7ம் நூற்றாண்டில் BCE, ஹோமர் சொல்வதாவது, “அவர்களுள் பெரும்பாலோர் ……….. பாலைக்குடித்தே உயிர்வாழ்கின்றனர்……..பணத்திற்கு ஆசைபடுவதில்லை…….. ஜான் பாப்திஸ்து, ஏசு மற்றும் அவர்களது சீடர்கள் முதலியோர் அத்தகைய எஸ்ஸென் எனப்படுகின்ற ஆசியர்களைப் போன்றவர்களே (ஆசியாவைச் சார்ந்தவர்கள்)” (p.32).

•        ஜோஸஃபஸ் சொல்வதாவது, “இந்த எஸ்ஸென் சகோதரர் பழங்கால தேஸே மக்களைப் போன்று, அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை, மது அருந்துவதில்லை, வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை, தனியாக வாழ்கிறார்கள், பலி-சடங்குகள் செய்வதில்லை, ஆனால் ஜைனர்களைப் போன்று ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதிக்கின்றனர்” (ப.32).

•        ஜெல்மோக்ஸிஸ் ஜைனர்களை விட அதிகமாகவே ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதித்துள்ளார் (ப.35).

•        அவர், “இந்திய வாழ்க்கைச் சுழற்ச்சி……. உடலை விட்டு உடல் செல்லும் ஆத்மா……..மனிதனைப் போன்று விலங்குகளும் ஆத்மாக்களைக் கொண்டுள்ளதால் அவற்றைத் துன்புறுத்தக்கூடாது……..” என்றெல்லாம் போதித்தார் (ப.36).

•        கெலே-சிரியாவைச் சேர்ந்த யூதர்கள், இந்தியர்களே ஆவர். அவர்கள் கிழக்கு
கலானி மற்றும் இக்ஷ்வாகு / கரும்பு-மக்கள் (இந்தியாவிலிருந்து வந்த) ஆவர். ஜூதேயாவில் வாழ்ந்த யூதர்கள், எஸ்ஸென்களே ஆவர், அவர்கள் இந்திய தத்துவ ஞானிகளிடமிருந்து உறுதியான மனப்பாங்கு, உணவு மற்றும் மனசாட்சி முதலியவை வாழ்க்கையில் தேவை என்பதனைப் பெற்றனர். கிரேக்கர்கள் அவர்களை சிரியர்கள் என்று தவறாக அடையாளங்கொண்டாலும், அவர்கள் ஜைன-பௌத்தர்களே ஆவர்
(ப.46).

•        202-193 BCEல், ஹான் வம்சம் சீனாவில் வலுப்பெற்றது. நூல்களை தொகுப்பவர், சூய் 600 CE காலம் வரை சீனா பௌத்தத்தை அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே அதற்கு முன்பு 200 BCEக்கு – முன்பு இருந்தது ஜைன-பௌத்தமே ஆகும் (ப.67).

Black Buddha - 1

மேற்கண்ட விவரங்களிலிருந்து அறிவதாவது, பௌத்தம் தோன்றி தனி மதமாக அடையாளங்காணும் முன்பே அத்தகைய ஒரு மதம் பாரதம் மட்டுமல்லாது, மத்தியதரைகடல் நாடுகள், மத்திய ஆசியா, சீனா முதலிய பகுதிகளிலும் இருந்தது தெரிகிறது. சில மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் அதனை எடுத்துக் காட்டியும், ஆதிக்க வர்க்க-ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் சரித்திர புத்தக ஆசிரியர்கள் அந்த விஷயங்களை மறைத்து எழுதினர் எனத்தெரிகிறது. அவ்வாறு பௌத்தம், புத்தம் போன்ற மதம், ஜைன-பௌத்தம், ஜைனம் முதலியவை உலகம் முழுவதும் பரவியிருந்தபொது, அமைதியான நிலை இருந்தது காட்டுகிறது.

ஆகவே ஜைனத்தை மறைத்து தவிர்த்து, தனியாக எந்தவித பௌத்தமும் எழுந்திருக்க முடியாது. நிச்சயமாக ஜைனத்திலிருந்து, பௌத்தம் அஹிம்சாவாதத்தில் வேறுபட்டு தன்னை நீர்த்துக் கொண்டது, அத்தகைய மக்களை கவரவே அவ்வாறு சமரசம் செய்து கொண்டது எனத்தெரிகிறது. அதனால் தான் புத்தர் புலால் உண்பதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை. 81வது வயதில் பன்றிக்கறி / மாமிசம் உண்டு, குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் எனத் தெரிகிறது. பௌத்தர்களும் சரியான மாமிச உணவு உண்பவரே. எனவே அவர்களது அஹிம்சை மற்ற உயிர்களை வதைக்காதே போன்ற கொள்கைகள் செல்லுபடியாகாது.

வேதபிரகாஷ்
17-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Was Buddha a black - some sculptures with curled hair etc- more

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard