New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?  – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)

Buddha died eating pork

பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும்: பாலியில் எழுதப்பட்ட நூல்களில் வெளிப்படையாக, எங்குமே மாமிசம் உண்ணுவது தடை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

“பாதிமக்க”வின் விதி, பாசித்தியா 35 மற்றும் வினயபீடக, மஹாவக்க, நூல்களின் சரத்துகளின் படி, மீன் மற்றும் மாமிசம் புசித்தலைப்பற்றிய தடை நிஜமானதோ அல்லது எல்லொருக்கும் பொருந்துவதோ அல்ல. புத்தர் மீன் மற்றும் மாமிசம் புசிப்பதை கீழ்காணும் முன்று விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாக கூறுகிறார்.

“பிக்குகளே, நான் உங்களுக்கு மூன்று நிலைகளில் மீன் மற்றும் மாமிசம் சுத்தமாக இருக்குமேயானால், அவற்றை பரிந்துரைக்கிறேன்: அதாவது, பிக்குகளுக்காகத்தான் அவை கொல்லப்பட்டன, என யாரும் பார்த்திருக்கக்கூடாது, யாரும் கேட்கிருக்கக்கூடாது, அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படவும் கூடாது.”  [மஹாவக்க (வினயபீடக). VI, 31, 14.]

முதலில் புத்தர் சொன்னதாவது, பிச்சையெடுக்கும்போது என்னக் கொடுத்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், பெற்றுப்புசிக்கவேண்டும் என்பதுதான்.

Patrick Olivelle, “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.55.

“புலால் உன்பதைபற்றி” ஜீவக சுத்தத்தில் (வினய பீடக) உள்ள புத்தர்-ஜீவகன் உரையாடல்: ஜீவகன் புத்தனிடம் சொன்னான்: “மக்கள் புத்தர் சாப்பிடுவதற்காக விலங்குகளைக் கொன்றதாகவும், அதனால் செய்யப்பட்ட உணவை புத்தர் உண்ணதாகவும், நான் கேள்வி பட்டேன்”. அத்தகைய மக்கள், உண்மை பேசுபவர்களாகக் கொள்ளலாமா, அவ்வாறு புத்தரை (தொடர்பு படுத்தி பேசுவதால்) பொய்மையுடன் குறைகூறுவதாக இல்லையா, என்றும் கேட்கிறான்.

Anguttara nikaaya - Buddha ate pork - verse

மூன்று நேரங்களில் மாமிசம் புசிக்கக்கூடாது: புத்தர் அதற்கு பதில் சொல்கிறார், “அது உண்மையாகாது. மூன்று நேரங்களில் மாமிசம் புசிக்கக்கூடாது. மாமிசமானது, ஒரு மனிதன் தனக்குத்தான் தயாரிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, கேட்கும்பொது அல்லது அவ்வாறு சந்தேகிக்கும்போது அத்தகைய மாமிசத்தைப் புசிக்கக்கூடாது. ஒரு கிராமத்தில், பிரம்மவிஹாரத்தில் அன்பைக்கடைப்பிடிக்கும் ஒருவன், பௌத்தத்துறவியை வரவேற்று தனது இல்லத்தில் அருமையான சாப்பாடு போட்டால், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வான் எனக்கொள்ளலாம்.  அவன் எந்தவித தயக்கமோ / ஆசையோ, எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்ணலாம்.”. புத்தர், ஜீவகனைப் பார்த்துக் கேட்கிறார், “ஜீவகா, அந்த நிலையில், அந்த பிக்கு தனக்கோ, மற்றவருக்கோ அல்லது இருவருக்குமே தீங்கு விளைவிக்கிறான் என்று நினைக்கின்றானா?”. ஜீவகன் பதிலுரைக்கிறான், “தேவரீர், நிச்சயமாக இல்லை.”

Mahavira ordered for chickem meat for curing bloddy diarrhea

விலங்குகளைக் கொல்வதில் புரியும் ஐந்து குற்றங்கள் – புத்தர் மேலும் விவரிக்கிறார்: “ஜீவகனே, “தூய்மையான ஒன்று” எனக்கருதப்படுகின்ற எனக்காக உயிரெடுக்கும் ஒருவன் ஐந்து குற்றங்களைப் புரிகிறான்.

1.        விலங்குகளைக் கொல்லும் மனப்பாங்கு: “சென்று, அந்த விலங்கை பிடித்துவா”, என ஆணையிடும்போது முதலாக பெருங்குற்றத்தைப் புரிகிறான். ஏனெனில் அந்த விலங்கு பயத்தால் நடு-நடுங்கி, வலியையும், கொடுமையையும் அனுபவிக்கிறது.

2.        விலங்குகளைக் கொல்ல பெறும் நிலை: விலங்கு இழுத்து வரப்படுகிறது. அப்போது, இரண்டாம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

3.        சொந்தமாகிக்கிக் கொண்ட விலங்குகளை கொல்ல ஆணையிடுதல்: “செல், அந்த விலங்கைக் கொல்”, என ஆணையிட்டவுடன், காரணம் அறிந்து, மரணகொடூரம் உணர்ந்து, மரணத்தை நோக்குகிறது. அப்போது, மூன்றாம் முறை
குற்றத்தைப்புரிகிறான்.

4.        விலங்குகளை கொல்லுதல், சமைத்தல்: கொன்று உணவை தயாரிக்கிறான். அப்போது, நான்காம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

5.        சமைத்த உணவை பரிமாறுதல், உண்ணுதல்: தயாரித்த உணமை “தூய்மையான ஒன்று” எனக்கருதப்படுகின்ற எனக்காக பரிமாறுகிறான்”. அப்போது, ஐந்தாம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

ஆகவே, படிப்படியாக அவ்விலங்கு அனுபவிக்கும் மரண அவலம் விவரிக்கமுடியாதது.

DasaVaishalika sutra mentions about preparation of meat without bones etc-Jaina

கொன்று தின்னும் பனப்பாங்கு: மனத்தால் நினைப்பதுதான், இழுத்து வரச்செய்கிறது; இழுத்து வரச்செய்தபின், மனம் இருகும்போது, கொல்லச்செய்கிறது; கொன்றபிறகு, தோலுரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, தசையை எடுப்பது, பதப்படுத்துவது, முதலிய செயல்கள் மனத்தை இருக செய்துவிடுகிறது. ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் மனிதர்கள் தனித்தனியாக இருக்கும்போது, அத்தகய இருகிய மனங்கள் எந்தவித சலனமும் இன்றி வேலைகளை செய்கின்றன. சமைக்கின்றவர்களும், பழகியபிறகு, வித்தியாசம் பார்ப்பதிலை. சாப்பிட ஆரம்பித்தவர்களும், பிறகு எத்தகைய, பாவ உணர்ச்சிகளையும் கொள்வதில்லை. ஆகவே, ஒருகாலகட்டத்தில் மனம் இருகி-சமைத்து விடுகிறது. அந்நிலையில், விலங்குகளைக் கொள்வது பாவம், மாமிசம் தின்பது பாவம் என்றெல்லம் போதித்தால் மனதில் ஏறாது. உண்ணாவிரதத்தைக் கடைபிடிக்கும் மக்களை கேலிசெய்யும், கேவலப்படுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் “உண்ணும் நோன்பு” கடைபிடித்து, அதிலும், மாமிசம்-வகையறா வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராகவே உண்ணும் “மனப்பாங்க்ய்ம்” இத்தகையதே.

Did Buddha die of eating pork - Arthur Waley

புத்தர் புலால் உண்டது பற்றிய குறிப்புகள்: புத்தரே புலால் உண்பது பற்றி சில குறிப்புகள் காணப்படுகின்றன:

1. சிஹா என்ற ஒரு ஜைன படைத்தளபதி, கௌதம புத்தருக்கு மாமிசத்தை பரிமாரியதாகவும், புத்தர் அதனை உண்டதாகவும் குறிப்பு உள்ளது [ஜைனர்கள் புலாலை அறவே ஒதுக்குவதால், அவ்வாறு ஒரு ஜைனமதத்தவன், புத்தருக்கு மாமிச உணவு கொடுத்திருப்பானா என்று நோக்கத்தக்கது. அல்லது, இது ஜைன-பௌத்த சர்ச்சைகளுள் ஒன்றாகவும் கருத வேண்டியுள்ளது. அதாவது, ஒன்று ஜைனன் தனது நம்பிக்கையிலிருந்து பிறழ்ந்து புலாலைத் தொடுகிறான். இரண்டு, அஹிம்சை போதிக்கும் புத்தர் புலாலை உண்ணும் மாதிரி சித்தரிக்கப்படுகிறது]. – மஜ்ஜிம் நிகாய மஹா சிஹா சுத்த1.2,2.

2. தேவதத்தன், புத்தரிடம் சொல்கிறான். “வாழ்நாள் முழுவதிலும் யார் மீன் மற்றும் மாமிசத்தைப் புசிக்காமல் இருக்கிறானோ அவன்தான் சங்கத்தில் அனுமதிக்கப்படவேண்டும்”. புத்தர் பதில் சொல்கிறார், “நான் யாருமே பார்க்காத, கேட்காத இது வரையிலும் தயாரிக்கப்படாத தூய்மையான மாமிசத்திற்கு விண்ணப்பித்துள்ளேன்” [இதுவும் தத்துவ ரீதியில் யதார்த்தமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஒன்று, அவ்வாறு வாழ்நாள் முழுவதிலும் யார் மீன் மற்றும் மாமிசத்தைப் புசிக்காமல் இருக்கிறார்கள் என்றால் தாவர உணவை மட்டு உண்பவர்கள்தாம். புத்தர் சொல்வதோ தான் ஏற்படுத்திய கட்டுப்பாட்டின்படியாருமே பார்க்காத, கேட்காத இது வரையிலும் தயாரிக்கப்படாத தூய்மையான மாமிசம் கிடைக்காது என்பதனால், அத்தகைய 100% புலால் மறுக்கும் நம்பிக்கையாளர்களை மட்டும் தேடிபிடித்து சங்கத்தில் சேர்த்துக் கொள்ளமுடியாது ]. – தேவதத்த வித்ரோஹ, சுல்ல வக்க.7

3. இங்கு சுண்ட என்ற கொல்லனிடமிருந்து, புத்தர் “சுக்ர மத்தவ” என்ற உணவை வாங்கிப் புசித்ததாகவும், அதனால், அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பிறகு குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிடப்படுகிறது. இங்கு “சுக்ர மத்தவ” என்பது பலவிதமாக மொழிபெயர்க்கப்படுகிறது:

1.        பன்றியின் மாமிசம்.
2.        மிருதுவான மாமிசம்.
3.        மிருதுவான ஒரு தாவர உணவு.
4.        பாலில் வேகவைத்த அரிசியால் செய்யப்பட்ட உணவு.

மஹாபரிநிப்பான (புத்தர் தனது மரணப்படுக்கையில் அளித்த உபதேசம்) சுத்த.
2.3.
ஜனவசப சுத்த (புத்தரின் இறப்பிற்கு பிறகு பிம்பிசரனுடைய விஜயம்)
சரிபுத்த சுத்த (சரிபுத்தனின் சிங்கத்தின் கர்ஜனை)

Rhys Davids, Dial, Vol.ii, p.137.
J. F. Fleet, JRAS, 1909, p.21.
Edward J. Thomas, The Life of Buddha As Legend and History, Motilal Banarasidas, New Delhi, 1977, p.149.
Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm
Vaidya Bhagwan Dash, in his introduction to the Hoernle’s book, pp.xix- xx.
A. F. Rudolf Hoernle, Studies in the Medicine of Ancient India (Osteology or the Bones of the Human Body), Concept Publishing Company, New Delhi, 1984.
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp. 542-543.

அம்பேத்கர், “some preparation of Sukra-madhva” என்று குறிப்பிட்டாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை, இருப்பினும், “சுன்டா கொடுத்த உணவு புத்தருக்கு ஒத்துப்போகவில்லை” என்று குறிப்பிடுகிறார் (ப.543).

Did Buddha die of eating pork - Roshi Philip Kapleau
புத்தர் மற்றொரு இடத்தில் உபதேசிப்பது: “பிக்குகளே, கீழ்கண்ட வியாபாரங்களில், எந்த சாதாரணமான மனிதனும் ஈடுபடலாகாது:

1.        ஆயுதங்கள்.
2.        உயிரோடு இருக்கும் பிராணிகள்
3.        மாமிசம்.
4.        மது.
5.        விஷம்”
அங்குத்தாரா நிகாய.5.177

இதன்படி பார்த்தால், உயிரோடு இருக்கும் பிராணிகளை யாரும் விற்கவோ, வாங்குவதோ கூடாது. இறந்த பிறகு அவ்வாறு செய்யலாமா என்பதற்கு, மாமிசம் விற்கலாகாது என்பது தடையாக உள்ளது. ஆகவே அத்தகைய நிலையில், மாமிசம் சமைத்து, அதிலும் “அஹிம்சை” போதிக்கும் பிக்குகளுக்கு தானமாகக் போடுகிறார்கள் என்பது உண்மைக்குப்புரம்பாக உள்ளது. புத்தர் போதித்தபடி, 100% இத்தொழில்களில், வியாபாரங்களில் யாருமே ஈடுப்டவில்லை என்றால், நிச்சயமாக புலால் உண்பது சமூகத்திலிருந்து மறைந்திருக்கும்.

Cunda preparing pork a Chinese pork

கேட்காதே, கொடுத்தால் சாப்பிடு: புலால் உண்பது சமுக்கத்தில் 100% அமூல் படுத்த்முடியாது, ஏனெனில், அது ஒருவரின் உணவுபழக்கத்தைப் பொருத்து இருந்து வந்துள்ளது. ஆகவே, பிக்குகளுக்கு என்று இல்லாமல், மற்றவர்களுக்காகவோ அல்லது பொதுவாகவோ விலங்குகள் கொல்லப்பட்டு, தோலிரித்து, மாமிசத்தைப் பதப்படுத்தி, சமைத்து பரிமாரினால், பிச்சையிட்டால் எந்த கேள்விகளும் கேட்காமல், பெற்றுப்புசிக்கலாம், புசித்திருக்கக்கூடும்.

ஆகையால், புலால் உண்ணுவது பௌத்தத்தில் ஒரு பெரியபிரச்சினையாகக் கொள்வதில்லை. ஆனால், அஹிம்சை, உயிர்வதைக்கூடாது, என்றெல்லாம் போதிக்கும் புத்தர் அல்லது பௌத்தர்கள் புலால் உண்டுகொண்டே போதித்தால் என்னாவது? மேலும் அசோகனுடைய கல்வெட்டு ஆணைகளுக்கும் இது எதிராக இருப்பதைக் காணலாம்.

சாந்தம், அமைதி, நிர்வாணம் பேசும் பௌத்தர்கள் புலால் உண்ணுவது முன்னுக்கு முரணானது. சாத்விக உணவு விடுத்து, புலால் உண்டு அத்தகைய நிலையை அடையலாம் என்பதும் மனச்சிக்கல் உருவாக்குவதே. இந்த பெரிய முரண்பாடு, நிச்சயமாக பௌத்தம் எதிர்கொண்டுள்ளது.

Cunda preparing pork a Chinese pork- illustrative

மேற்கத்தைய மதங்களுடன் ஒத்துப்போவது: கிழக்கத்திய மதங்களுள் பௌத்தம் இந்த விஷயத்தில் மேற்கத்தைய மதங்களுடன் (யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் / இஸ்லாம்) ஒத்துப்போகிறது. புலால் உண்ணும் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் / இஸ்லாம் மதங்கள் என்றுமே இவ்விஷயத்தில் “அஹிம்சை” பேசுவது இல்லை. “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்ற பானியில் தான் அவை உள்ளன. முகமதிய புலால் உண்ணும் விதிகள் பௌத்தத்தை ஒத்துப்போவதைக் காணலாம்.

வேதபிரகாஷ்
22-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Devotee offered food

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard