New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்தி” பௌத்தர்களக் கொன்றதுவிஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன்மிஹிரகுலன்சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம்இதோமேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன்புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Saka****a (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களாதங்க நாணயங்களாகர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000
பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard