New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

ஹூணர்களால் பௌத்தம் அழிந்தது (478-637): பிறகு ஹூணர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது என்ற கருதுகோள் வருகிறது. மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் ஹூணர்களைப் பற்றி கூறுவதாவது: ஹூணர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடிமக்கள். பைஜான்டின் எழுத்தாளர்கள் அவர்களை “ஹெப்தாலைட்டுகள்” – வெள்ளைநிறத்தவர் – வெள்ளை ஹூணர்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் துருக்கிய-மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவீன எழுத்தாளர்கள் அட்டிலாவைச் சேர்ந்த ஹூணர்களுக்கும் இந்த ஹூணர்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஏனெனில் இவர்கள் இரானிய இனத்தைச் சார்ந்தவர்கள். கிரேக்கர்கள்,
சாகர்கள் மற்றும் குஷானர்களைப் போல, அவர்களும் மலைகள், சமவெளிகள் கடந்து இந்தியாவைத் தாக்க வந்தவர்கள் எனத் தெரிகிறது. ஹூணர்களுடன் போரிட்டு குமாரகுப்தனே இறந்ததாக “குப்த சரித்திரம்” கூறுகிறது. 500 க்கு மேலே மேற்கு இந்தியாவை அவர்கள் முழுவதுமாக பிடித்துவிட்டதால், அவர்கள் ஆட்சி புரியவும் தொடங்கி விட்டனர். தோரமானன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன் இருவருமே அரசர்களாக ஆட்சி புரிந்தனர். ஹூணர்களின் படையெடுப்பால் “குப்த பேரரசு” மறைந்ததாக சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990. ப.67-69.

Tang Emperor Wuzong

சைன அரசனது அடக்கு முறைகளால், மங்கோலியாவிலிருந்த ஹூணர்கள் வெளியேறி மற்றவர்களைத் தாக்கினார்களா?: உண்மையில், சைனர்களின் அடக்குமுறைகளால் அவர்கள், இந்தியாவிற்கு வர நேர்ந்தது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் எனத்தெரிகிறது. ஆகவே அத்தகைய அடக்குமுறை, பௌத்ததிற்கு சாதகமாக இருந்த சைனாவில், திடீரென்று வந்திருக்கமுடியாது. எனவே இந்தியாவிற்கு வந்தவர்கள் ஹூணர்களா, பௌத்தர்களா அல்லது வேறு மதத்தினரா என்று நோக்கத் தக்கது. ஏனெனில், “ஹுணர்கள்’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவில் நுழைந்ததாக சொல்லப்படும் அவர்கள் பின்பற்றிய மதம் இந்துமதம் தான், ஏனெனில் அவர்கள் சூரியன், சிவன் முதலியவர்களை வணங்கியதாக அவர்களது கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன (Gwalior Stone Inscription of Mihirakula (ca. early 6th century CE). மேலும் விவரங்களுக்கு, கீழே காணவும்.

Toramana coin

ஜைனர்கள் இந்தியா முழுவதும் பலமாக இருந்த நிலையில், ஹூணர்கள் எப்படி பௌத்தர்களை மட்டும் தாக்கியிருக்க முடியும்?: ஹூணர்கள், பௌத்தர்களைத் தாக்கி அழித்தார்கள் என்பதில், பல கேள்விகள் எழுகின்றன:

*மேலும், அதேகாலத்தில், மேற்கு இந்தியாவில் இருந்த பலமான மதம் ஜைனம் ஆகும். பிறகு எப்படி, ஹூணர்கள் ஜைனர்களை விடுத்து, பௌத்தர்களை  மட்டும் குறிவைத்திருக்க முடியும்?

*“ஹிந்துத்வா-அரசர்கள்” குப்தர்களைத் தாக்கி அவர்களது பேரரசையே
மறையச்செய்திருக்க முடியும்?
*ஒருவேளை அவர்கள் ஜைனர்களாக இருப்பார்களோ? ஏனனில், அவர்களது செயல்கள் ஜைனத்திற்குத்தான் ஆதரவாக உள்ளது.

*ஒருவேளை, ஹூணர்களும், ஜைனர்களும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திகொண்டு, இந்தியாவைத் தாக்கியிருக்கக் கூடுமோ?

* 712ல் அரேபிய படையெடுப்புத் தொடங்குகின்றது. அவர்களும் ஜைனர்களை விட்டு வைத்திருக்க முடியாது.

* பிறகு வரும் “ஆதிசங்கரரும்” ஜைனர்களை கண்டுகொள்ளாமல், பௌத்தத்தின் மீதுதான் குறியாக இருக்கிறார்!

இதென்ன வேடிக்கை? எப்படி எல்லோருமே ஜைன-அபிமானிகளாக உள்ளார்கள்?
நிச்சயமாக இங்கு ஒரு “சரித்திர புதிர்” உள்ளது. அதாவது, சரித்திர ஆசிரியர்கள் செய்துள்ள புரட்டு வேலைத் தெரிகிறது.

Kanishka, Huvishka coins

தோராமானன்மிஹிரகுலன் தேதிகளை ஆங்கிலேயர் மாற்றியது: தோரமானன், மிஹிரகுலன் என்ற பெயர்கள் ஐரோப்பியர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது தெரிகின்றது. ஏனெனில், ஹூணர்கள் என்றாலே அவர்களுக்கு பயம், அதிலும் அட்டிலா என்பவனுடைய பெயரைக் கேட்டால், ஐரோப்பிய குழந்தைகள் சிறுநீர் விட ஆரம்பித்துவிடும் (Count Dracula in Bram Stoker’s novel Dracula claims to be descended from Attila: “What devil or what witch was ever so great as Attila, whose blood is in these veins?”). அவர்களது நாகரிகத்தை அழித்தவர்கள் என்று ஹூணர்கள் (Huns) மற்றும் வாண்டல்கள் (Vandals) என்று இரு மக்கட்பிரிவுகளைக் குறிப்பிடுகின்றனர் (vandal, vandalize, vandalism என்றால் தெரிந்திருக்கும்). ஐரோப்பா, மத்தியதரைகடல் நாடுகள் அவர்களால் பாதிக்கப் பட்டதால், இந்தியாவும் அதே காலத்தில் பாதிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆகவே, எப்படியாவது ஹூணர்களை இந்திய சரித்திரத்தில் நுழைக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய காலத்தையும் குறைக்கவேண்டும் என்று ஆங்கிலேய பண்டிதர்கள் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ராஜதரங்கிணியில் அத்தகைய பெயர்கள் வருவது அவர்களுக்கு வியப்பாகியது.

Rajatarangini Kalhana
ஆனால்கல்ஹணரின்படிஅவர்களதுதேதிகள் இவ்வாறு இருந்தன: ராஜதரங்கினியின் படி, அரசனின் பெயர்,        ஆண்ட காலம்,        காஷ்மீர சகாப்தத்தின்படி      மற்றும்  நடப்பு சகாப்தத்தின்படி இவ்வாறு இருக்கின்றன:

ஆண்ட அரசன்ஆண்டுகள்கல்ஹணர் தேதிஇக்காலத்தவர் கொடுக்கும் தேதி
அசோகன்481628-16761448-1400
ஜலௌகன்561675-17321400-1344
தாமோதர-II501732-17821344-1294
ஹுஸ்க, ஜுஸ்க, கனிஸ்க601782-18421294-1234
அபிமன்யு521842-18941234-1182
கோநந்த-III351894-19291182-1147
விபீஷண54½1929-1983½1147-1092½
இந்திரஜித்35½1983½-20191092½-1057
ராவண302019-20491057-1027
விபீஷண-II35½2049-2084½1057-991½
கின்னர/நர32084½-2124991½-952
சித்த692124-2184952-892
உட்பலக்ஸ30½2184-2214892-861½
ஹிரண்யாக்ஸ37½2214-2252861½-824
ஹிரண்யகுல602252-2312824-764
வசுகுல602312-2372764-704
மிஹிரகுல702372-2442704-634
பக402442-2482634-591
கஹிதிநம்தன302482-2512591-564

*அசோகன் வருகிறான், ஆனால் பௌத்தன் அல்ல, ஜைனன்!
* அவனது தேதியோ 1448-1400 BCE!
*மிஹிரகுலன் உள்ளான் ஆனால், அவனின் தந்தை பெயர் தோரமானன் அல்ல!
*அவனது தேதியோ 704-634 BCE!
பிறகு எப்படி மாற்றுவது, தமது இச்சைக்கேற்றவாறு கணக்கை சரிகட்டுவது, தேதிகளை திருத்துவது, சரித்திரத்தைப் புரட்டுவது?

Hultzsch and Cunningham

ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் தேதிகளை மாற்றியமைத்தது: இதோ, திருவாளர் இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch), ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A. Cunningham), பேராசிரியர் வில்சன் (H. H. Wilson), டா. ஃபிலீட் (John Faithful Fleet) முதலியோரின் குழுமம் எப்படி வேலை செய்தது என்று விளக்குகிறார். ராஜதாரங்கிணியைப் பற்றி இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) எழுதும்போது, இந்த விவரங்களைத் தருகிறார், “ராஜதரங்கிணியில் கல்ஹணரின் காலக்கணக்கியலை மாற்றியமைப்பதைப் பற்றி, பேராசிரியர் வில்சன் (H. H. Wilson) கருதியபோது தனது கருத்துகளை சுருக்கக்குறிப்பாக இணைத்திருந்தார். ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A.Cunningham) 1843ல் தனது, “காஷ்மீரத்தின் பழங்காசுகள்” என்ற கட்டுரையில் அதனை பயன்படுத்தினார் (நாணயவியல் கால அட்டவணை, பகுதி.6, ப.1-38; Numismatic Chronicle, Vol.VI, pp.1-38) இருப்பினும் முந்தைய காலத்திற்கு திருப்திகரமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு மிஹிரகுலனைப் பொருத்தவரையிலும் அத்தகைய முடிவுகள் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ராஜதரங்கிணியின்படி பெற்ற தேதி 2397 கலியுக சம்வத்ர ஆண்டு அல்லது B.C. 704; மற்றும் அவனது ஆட்சி காலம் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு முடிகின்றது. பேராசிரியர் எச். எச். வில்சன் இந்த தேதியை 200 B. Cக்குக் குறைத்து கொண்டார்.  (loc.cit, p.81). ஆனால் சர். ஏ. கன்னிங்ஹாம் A.D 163 ல் வரவேண்டும் என்று முடிவெடுத்தார் (loc.cit, p. 18). “இருப்பினும் புதியதாக கண்டுபிடித்த கல்வெட்டுகளின் மூலம், டா. ஃபிலீட் (John Faithful Fleet) உண்மையான தேதி ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பித்தால்தான் வரும் எனக் கொண்டு, அவனது ஆட்சியின் ஆரம்பத்தை A. D 515ல் வைத்து, 530 A.Dல் முடியவேண்டும் எனத் தீர்மானித்தார். ஏனெனில் அந்த வருடத்தில்தான் அவன் அதிகாரம் இழந்து காஷ்மீரத்திற்கு சென்று அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். “இது கல்ஹணரின் முன்பு குறிப்பிட்ட விவரங்களில் எப்படி மாறுதல்களை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுயதுடன் ஒத்துப்போகிறது. அதுதான் நமக்கு குறிப்பிட்ட திட்டத்தைக் கொடுப்பதால், அதிலிருந்து தேதிகளை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதே மாதிரி கல்ஹணர், கனிஸ்கனுடைய காலத்தைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நோக்கத் தக்கது. தரங்கம்-I, வரி.18ன் படி, துரக்ஸ அரசனான கனிஸ்கன், கோநந்தன்-III, அரசாட்சிற்கு வருவதற்கு முன்பு B.C 1182ல் இருந்ததாக கல்ஹணரின் கூற்றுப்படி வருகின்றது. ஆனால், இது நமது கணக்கின்படி, உள்ள சாத்தியக்கூறுகளின்படி 77 A.Dக்கு வரவேண்டும். அதே மாதிரி அசோகனுடைய தேதியும் கல்ஹணரின்படி (தரங்கம்-I, வரி.191) முன்னதாக உள்ளது. ஆனால், கன்னிங்ஹாமின் படி, அந்த தேதி இப்பொழுது B.C 260க்கு வருகின்றது (Corp.Inscr.Indica, Vol.I, Preface, p.VII).

H H Wilson and J F Fleet

இப்பொழுது அத்தகைய தேதிகளை ஏன் மாற்றியமைக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில்:. காஷ்மீர அரசர்களின் வம்சாவளியில் குறிப்பிட்டவர்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்ததாக பெயர்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம், மூதாதையர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் அரசாளவில்லை. ஆகவே, நமது கணக்கின்படி சில அரசர்களை எடுத்துக்கொண்டாலும், விட்டாலும், நடுவிலே குறை ஏற்பட்டாலும் அத்தகைய அத்தியாவசம் உள்ளதால், அவர்களை வம்சாளி பட்டியிலிருந்து நீக்கவேண்டும்”.

மேலே இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) கொடுத்த வாக்குமூலம் படி, நாம் தெளிவாக அறிவதவது யாதென்றால்:

  1. மோஹிலோகுலோ” “மிஹிரகுலன்” ஆனது: ராஜதரங்கிணியின் மிஹிரகுலன் ஐரோப்பிய மனதுக்கு மிகவும் ஒத்துப்போகிறது. ஏனெனில், ராஜதரங்கிணியில், அவனைப் பற்றிய கதை, “அடில்லாவை/டிராகுலாவை” ஒத்துபோகிறது! ஒருபெரிய கல்லை, ஒரு மிகவும் கற்புள்ள பெண்தான் நகர்த்தமுடியும் என்றபோது, “சந்திரவதி” என்ற பெண் நகர்த்துகிறாள், ஆனால் மற்ற பெண்களால் முடியவில்லை. இதனால் எல்லா பெண்களையும் அவர்களது கணவன்மார்கள், சகோதரர்கள், உறவினர்களுடன் கொன்றுக் குவிக்கிறான்! [இதைத் தவிர பல கொடுமைகளைப் புரிகிறான். விவரங்களுக்கு ராஜதரங்கிணியைப் படிக்கவும்] ஆகவே “மோ-ஹி-லோ-கு-லோ” யுவான் சுவாங் குறிப்பிட்டப்படி ஒரு “மிஹிரகுலன்” கிடைத்துவிட்டான்! அதுவும் ஹூணரைப்போல கொடுங்கோலனாக இருக்கிறான்!
  1. தேதிகளை மாற்றியதுதேதிகள் உதைக்கிறது: எனவே  தேதிகளை மாற்ற முடிவு செய்கிறார்கள், மாற்றவும் செய்தார்கள். தேதிககளை எங்களுடைய வச்திக்காகக் குறைக்கிறோம் என்று எவ்வளவு நாஜுக்காக சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
  1. அரசர்களையே வம்சாளியிலிருந்து எடுத்து மறைத்தது: பல அரசர்கள் இடையில் பிரச்சினை செய்கிறார்கள்! அதாவது அவ்வாறு காலத்தைக் குறைக்கும்போது, இடையில் அரசாட்சி செய்த அரசர்களை என்ன செய்வது? ஒரே வழி, அந்த அரசர்கள் இல்லவே இல்லை என்று சொல்வது! எனவே பல அரசர்கள் இந்திய சரித்ததரத்திலிருந்து மறைந்து விட்டார்கள்!
  1. ஜைனஅசோகனை பௌத்தஅசோகனாக்கியது: பௌத்தமதமே “அசோகனின்”மீது ஆதரமாக உள்ளது. ஆனால், ராஜதரங்கிணியின் அசோகனோ ஒரு ஜைன மதத்தவனாக விஹாரங்களைக் கட்டியதாக உள்ளது. அதிலும் காஷ்மீர அரசனாக உள்ளான், மௌரியன் அல்லன்! ஆகவே, அந்த அசோகனையே மறைத்துவிடுவது! எனவே, ஒரு புதிய அசோகன், பௌத்தமத காவலனாக “ஒரு அசோகன்” உருவாக்கப்படுகிறான். கல்வெட்டுகள் கிடைக்கவேண்டுமே? உள்ளவையெல்லாம் “தேவநாம்பியாதிஸ்ஸா / தேவநாம்பிரிய” என்றுதான் உள்ளது. எங்குமே “அசோகன்” என்ற பெயர் இல்லை! 1915 வரை இக்கல்வெட்டுகள் எல்லாம் அசோகனுடைது என்று உறுதியாகத் தெரியாது. 1915ல்தான் மஸ்கி கலவெட்டு கண்டுபிடிக்கப்படுகிறது, அதில் “தேவநா பியா” கூட “அசோக” என்ற வார்த்தையும் உள்ளது. வித்தியாசத்தை நன்றாக கவனிக்கவும். மேலும், இக்கல்வெட்டு மகதத்தில் அல்லது மௌரிய பேரரசு எங்கு வலுவாக இருந்ததோ அங்கு கிடைக்காமல், ஜைனம் ஆதிக்கம் செய்த பகுதியில் கிடைத்திருப்பது நோக்கத்தக்கது.
  1. 700 வருட “கொள்ளுகொல்லு” தாத்தாவை மகனாக்கியது!; இனி “தோரமானன்” என்பவனைக் கவனிப்போம். ராஜதரங்கிணியின்படி, 81வது அரசன் ப்ரவர்சேன / ஸ்ரேஸ்டஸேன / துஞ்ஞீனா என்பவன் ஆவன். இவனது இரண்டு மகன்கள் ஹிரண்யா மற்றும் தோரமான. ஹிரண்யா தோரமானனை சிறையில் அடைக்கிறான், அவன் சிறையிலேயே இறக்கிறான். அவன் வாழ்ந்த காலம் 16 BCE முதல் 14 CE வரை. ஆகவே, இவனுக்கு காலத்தால் 700 வருடங்களுக்கு முன்பு மிஹிரகுலன் (704-634 BCE) இருக்கிறான்! இருப்பினும் அவனை, இவனுக்கு மகனாக்குகிறார்கள்! என்னே சரித்திரத்தின் கோலம்?

Mihirakula - Vishnubakta 502-530 CE

  1. சௌரன்விஷ்ணு பக்தனாகிசிவபக்தனாகியது: பௌத்தர்களுக்கு எதிராக இருக்கவேண்டும் என்றால் ஒருவன் சைவனாக இருக்கவேண்டும். எனவே அடுத்தது, இந்த “மிஹிரகுலனை” சைவனாக்கும் படலம் ஆரம்பிக்கிறது. இதற்கு குவாலியர் கல்வெட்டை உபயோகப்படுத்துகின்றனர். அதில்  வரும் தோரமானன், மிஹிரகுல என்ற பெயரோடு ஆண்டதாக உள்ளது. மேலும் அவன் வழி வந்த மகன், பெயரன் முதலியோர்களின் பெயர்கள் மாத்ரிதல, மாத்ரிதாஸ, மாத்ரிசேத என்றுள்ளன. மேலும் அவன் சூரியவழிபாடு செய்வதுபோல உள்ளது. ஒரு பதக்கத்தில் ஒரு மிஹிரன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணுவை கும்பிடும் மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது (Sardonyx seal representing Vishnu with a worshipper, Afghanistan or Pakistan, 4th-6th century CE. The inscription in cursive Bactrian reads: “Mihira, Vishnu and Shiva”. British Museum). என்ன செய்வது, எப்படியாவது சரிகட்டவேண்டுமே? “தோரமானன் என்பவன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்பதனை “தோரமானனின் மகன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்று மொழிபெயர்த்து, மிஹிரகுலனை தோரமானனுக்கு மகனாக்குகிறார்கள்! அதாவது, சூரியபக்தன், விஷ்ணு பக்தனாகி, பிறகு சிவபக்தனாகி விடுகிறான்!
  1. ஹூணனான இந்தியனும்ஹூணமாகிய இந்திய சரித்திரமும்: ஹூணன் என்றால் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் இல்லையென்றால் ஈரானிலிருந்து வந்திருக்க வேண்டும் (மேலே விளக்கப்பட்டுள்ளது). “மிஹிர் / மிஹிர / மெஹர்” (= சூரியன்) என்ற பெயர் இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய ஜோடனை செய்யப்பட்டது. ஆனால் பாவம் காஷ்மீரத்திலேயே கல்ஹணருக்கு முன்பு “பத்மமிஹிர” (தரங்கம்.1-18) என்பவர் இருந்ததை கவனிக்கவில்லை! இருந்தாலும், அவரை எடுத்துவிட்டால் போயிற்று, என்பார்கள்! [முன்பு வராஹமிஹிரரையும் ஈரானிலிருந்துதான் வந்தார் என்றார்கள்] ஒரு இந்திய அரசனை, அதிலும் காஷ்மீரத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து சரித்திர-ரீதியாக இருந்த அரசனை மறைத்து இல்லாத ஒரு மிஹிரகுலனை உண்டாக்கி, அவனை “ஹூணனாக்கி”, ஹூணனாக இந்தியாவில் புகுந்து, தோற்றபிறகு காஷ்மீரத்திற்கு அனுப்பி வைக்கப் படும் ஒரு நிலையை இந்திய சரித்திரத்தில்தான் காணலாம்.

Devanampiya Tissa Asoka and Lanka

சித்தாந்தம் போன்ற காரணிகளால் இந்திய சரித்திரம் பாதிக்கப்படுகிறதா?: ஆராய்ச்சி என்று மாய்ந்து-மாய்ந்து இவ்வாறு சரித்திரத்தை புரட்டுகிறார்கள் தலைகீழ் மாற்றங்கள் செய்கிறார்கள், ஆனால், இத்தகைய மோசடிகளை எந்த பிரபல (eminent), முற்போக்குள்ள (progressive), பரந்த-விரிந்த மனதுள்ள (broad-minded), செக்யூலரிஸ (secular), மார்க்ஸிஸ (Marxist) மற்றும் எந்த சரித்திர ஆசிரியருக்கும் தெரியவில்லை! இத்தகைய மோசடிகளுடன், இந்திய சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. இருப்பினும், சில சரித்திர ஆசிரியர்கள், உண்மைகளை அங்கங்கு சொல்லியிருக்கிறார்கள்: “யசோதர்மன் மந்டசோர் கல்வெட்டில் மிஹிரகுல மற்றும் ஹூணர்கள் இருவரையும் குறிப்பிட்டாலும், இருவருன் தனி என்பதனை அறியும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” (ப,197).
R. C. Majumdar and A. S. Pusalkar, A History of the Indian People, Lahore, 1946, p.197, 196 etc.

“மிஹிரகுலன் ஒரு ஹூணன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” (ப.196).

இப்பொழுது, கே.டி. சேத்னா என்பவரும், இந்த விவரங்களைத் தருகிறார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi,
2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese
chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial
Guptas.
இவர் எடுத்துக்காட்டுவதாவது, மிஹிரகுலனின் காலம் 540 CE இல்லை, BCEல்தான் வரும், யுவான் சூவாங் காலத்தில் குப்தர்கள் இருந்திருக்க முடியாது;

அசோகனின் தேதி மாற்றப்பட்டது: அசோகனது காலம் சுமார்.1000 BCE வரை செல்லும்;
K. D. Sethna, Ancient Indian in New Light, Aditya Prakashan, New
Delhi, 1997. ஆங்கிலேயர்களின் காலக்கணக்கியலில் பல முரண்பாடுகள் உள்ளதை
எடுத்துக்காட்டி, இதில் இவர் கொடுக்கும் தேதிகள்:
950-914 BCE – reign of Asoka, thus Pushyamitra came after him.
221-181 BCE – Kumaragupta
181-169 BCE- Skandagupta
140 BCE – Toramana invaded Malva from Kashmir
137 BCE – Toramana died
100 BCE- Mihirakula came to power

இவை இந்திய பாரம்பரிய காலக்கணக்கியல் மற்றும் மேனாட்டு காலக்கணக்கியல், இரண்டிற்கும் மாறுபட்டதாகும். குப்தவசத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனை விடுத்து மௌரியவம்சத்தின் சந்திரகுப்தனை, அலெக்ஸ்சாந்திரன் காலத்துடன் வைத்ததில்தான் இந்திய சரித்திரத்தில் பல குளறுபடிகள் நேர்ந்தன. இதனால் 800 முதல் 1200 வருடங்கள் வரை பல முக்கிய தேதிகளில் வித்தியாசம் வந்துகொண்டே இருக்கும். மேலும், இந்த தேதிகள் எல்லாம் 70 முதல் 150 வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலிலேயர்கள் தோராயமாக என்று வைத்துக்கொண்டு circa என்று குறிப்பிட்டு வந்தனர். ஆனால், circaவை விட்டுவிட்டு, நிலைநிறுத்திய தேதிகளைப் போல, பிறகு உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கிருஷ்ணமாச்சாரியார் தமது “இந்திய சமஸ்கிருத வரலாறு” என்ற நூலில் எவ்வாறு ஆங்லிலேயர் தேதிகளைக் குறைத்தர்கள் என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஆனால், இவை ஆராய்ச்சிசெய்யும் மாணவர்கள் மற்றும் சிலருக்குத் தான் தெரிய வாய்ப்புள்ளது. தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவதில்லை.
M. Krishnamachariar, History of Classical Sanskrit Literature, Motilal Banarasidas, New Delhi, 1993.
D. S. Triveda, Indian Chronoloy, Bharatiya Vidhya Bhawan, Bombay, 1958.
கோட்டா வெங்கடாசலம் என்பவர் ஆங்கிலேயர்களின் பல சரித்திர குளறுபடிகளை, திரிபுகளை, ஏன் கள்ள ஆவணங்கள் தயாரித்தது முதலியவற்றை எடுத்துக் காட்டி பல புத்தகங்களை 1950களுள் வெளியிட்டார். இவர் R. C. Majumdar, K. D. Sethna முதலியோருடன் இதைப் பற்றி கடித ததடர்பும் கொண்டிருந்தார். பிறகு, பொள்ளாச்சி மஹாலிங்கத்தின் ஆரார்ச்சி நிறுவனமும் அதன் அடிப்படையிலேயே
சென்று, வானவியல் ரீதியாக தேதிகளை நிறுவ முயற்ச்சி செய்தது.

வேதபிராகாஷ்
29-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

12-05-2017

Gwalior inscription of Mihirakula

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard