இஸ்லாத்தில் இசையே ஹராமாச்சே அப்புறம் ரஹ்மான், யுவனெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியும் ?
ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)
நூல் : அஹ்மத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அஹ்மத்
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத்தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம்
இஸ்லாத்தில் ஜகாத் கடமை (??!) இப்போது யுவன் ரஹ்மான் சம்பாதிப்பவை ஹராமானது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். ....அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல் : புகாரி 5590
(1)விபச்சாரம்(2) மது(3) பட்டு க்கு கொடுக்கப்பட்ட தடை போன்றே இசையையும் சேர்த்து முஹம்மது ஹராம் செய்துள்ளார் So ரஹ்மான், யுவன் இசை மூலம் சம்பாதிப்பவை அனைத்தும் ஹராம் ஹராமான பொருளுக்கு ஜகாத் இல்லை அதாவது முஸ்லிம்கள் ஹராமாக சம்பாதிக்க கூடாது எந்த முஸ்லிமும் விபச்சாரம் மூலமோ மது மூலமோ சம்பாதிக்க அனுமதிக்கபடுவதில்லை ஆனால் இசை?
யுவனும் ரஹ்மானும் இசை மூலம் சம்பாதிப்பதால் அவர்களால் ஜகாத் கொடுக்க முடியாது ஒகேவா அதனால் யாரும் யுவனையோ ரஹ்மானையோ முஸ்லிம் என்ற பார்வையில் கலாய்க்க வேண்டாம் என்று ஃபத்வா வழங்கபடுகிறது .