New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் போற்றும் சனாதன அறம்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
திருக்குறள் போற்றும் சனாதன அறம்
Permalink  
 


திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்

சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள். தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.சனாதன தர்மம் என்றால் நிலையான (எப்போதும் கடை பிடிக்க வேண்டிய) அறச் செயல்கள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல்;. இந்து மதம் என்பது எளிதான பெயர்.
இது உலகில் பிறந்த உயிரானது என்றும் உள்ளது, இந்தப் பிறவி எனும் குறுகிய காலம் பின்பு உன் செயல்/ வினைக்கு ஏற்ப சொர்கம் அல்லது நரகம் சென்று மீண்டும் பிறப்பு என பிறவிப் பெருங்கடல். சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339:நிலையாமை.
மனித வாழ்வு என்பது தூங்குவது போன்றது மரணம்; தூங்கிய பின் விழித்து எழுந்திருப்பது போன்றது பிறப்பு. இது மீண்டும் மீண்டும் நடப்பதால் பிறவிப் பெருங்கடல்
இந்த உயிர் இறந்த பின்பும் நல்வினை(புண்ணியத்தின் பயன் நம் மரணத்திற்குப் பின்பும் நம் ஆன்மாவோடு(உயிர்) தொடரும். மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூறுவார். இதையே வள்ளுவரும்
உடம்பு என்பது வெறும் எலும்பு தோல் போர்த்தியது, அது வெறும் மனிதனின் ஆன்மா உயிர் தங்கும் கூடு தான், இதில் மனித வாழ்க்கை எனும் பிறப்பு, நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதே இயல்பு.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335: நிலையாமை.
நாக்கு இழுக்க‌ விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36: அறன்வலியுறுத்தல்.
இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழிந்து மரணத்திற்குப் பின்பும் காலத்தில் அழியாத் துணையாகும்.
நிலையான மனித உயிர்- ஆன்மா இறைவனை அடைய அற்ம் செய்து கொண்டே இருக்க வேண்டும், அது மரணத்திற்குப் பின்பும் தொடரும்.
ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் நற் செயல்களை வலியுறுத்துவதே சனாதன தர்மம் எனலாம். இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் மீண்டும் பிறந்து இறந்து எனும் தொடர்சியான பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
நற் செயல்கள் உடன் உலகைப் படைத்த இறைவன் மீதான நம்பிக்கையை வள்ளுவம் வலியுறுத்துகிறது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள்:10 -கடவுள் வாழ்த்து
பிறவி- பிறந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து என வாழும் பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.


பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். குறள் 349:துறவு. 

ஒருவன் ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் இந்த பூமியில் பிறப்பு இறப்பு மிண்டும் Pஈறப்பு எனத் தொடரும் நிலையில்லாத  பிறப்புத் தொடர்ச்சி அறுபடும்;  பற்றோடே வாழ்ந்தால் நிலையற்றபடி பிறப்புகள் மீண்டும் மீண்டும் வரும்,



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள். தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.

சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல்;. இந்து மதம் என்பது எளிதான பெயர்.

திருவள்ளுவர் இயற்றிய குறட்பா வழியிலேயே பார்ப்போம்

மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூறுவார்

இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு தூங்குவது போன்றது, பிறப்பு எனப் படுவது தூக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.

இந்த நிலையான பிறப்பு ஏற்படக் காரணம் அறியாமை எனும் மயக்கம், மீண்டும் பிறவாத நிலை அடைவதே மனித அறிவின் செயலாக இருக்க வேண்டும்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. குறள் 358. மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறப்பு எனும் அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

நிலையான மனித உயிர்- ஆன்மா இறைவனை அடைய அற்ம் செய்து கொண்டே இருக்க வேண்டும், அது மரணத்திற்குப் பின்பும் தொடரும்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36: அறன்வலியுறுத்தல்.
என்றும் நிலைப்பெற்று வாழும் உயிர் முக்தி பெற்று மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் விலக செய்யும் அறம் அடுத்து பிறக்கும் போது உதவும்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்.
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

அறிவு - கல்வியே மனிதனை மேன்மைக்கு கொண்டு செல்லும் கருவி ஆகும். அறிவு என்பது கொண்டு இந்த

மெய்ப்பொருள் காண்பது அறிவு - 355
செம் பொருள் காண்பது அறிவு - 358
நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 424
கற்று அனைத்து ஊறும் அறிவு - குறள் 396
நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 422
உலகத்தொடு அவ்வது உறைவது அறிவு - குறள் 426
ன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு - குறள் 513

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 452



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஸநாதனதர்மமும் திருக்குறளும் – 1 ஸனாதன தர்மம்
ஸனாதன தர்மம் என்ற பாரம்பரிய பெயர் கொண்டது ஹிந்து மதம். மதம் என்றால் கருத்து, கொள்கை, அபிப்ராயம் என்று பொருள். ஜீவஸ்வரூபம், ஜகத்ஸ்வரூபம், ஈச்வரஸ்வரூபம், பந்தஸ்ரூபம், மோக்ஷஸ்வரூபம், ஸாதனஸ்வரூபம் ஆகிய ஆறு அம்சங்களைப் பற்றிய தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கையே மதம் ஆகின்றது. மதத்திற்கு மதம் இக்கொள்கைகள் வேறுபடுகின்றன. ஆகவே அவை தனி மதங்களாக - சித்தாந்தங்களாக - கருதப்படுகின்றன.

ச்ருதிகள் எனப்படும் நான்கு வேதங்கள், ஸ்மிருதிகள் எனப்படும் வேதத்தில் உள்ள கருத்துக்களை விரித்தும் தொகுத்தும் சொல்லும் தர்ம சாஸ்திரங்கள், அவற்றின் விளக்கங்களான புராண இதிகாசங்கள் இவையே ஹிந்து மதத்திற்கு ஆதாரங்களாக இருப்பவை.

வேதங்களை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு அதோடு தர்க்கம் என்ற யுக்திபூர்வமான அறிவாராய்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டவை ஆஸ்திக மதங்கள் எனப்படுகின்றன.
வேதத்தை ஏற்காமல் தர்க்கத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டவை நாஸ்திக மதங்கள். நமது பாரத தேசத்தில் தோன்றிய மதங்களில் இந்த வரையறையை நாம் தெளிவாகக் காணலாம். அவை தர்சனங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

வேதத்தை முக்ய ஆதாரமாகக் கொண்டும் அதற்கு ஒட்டிய தர்க்கத்தைக் கொண்டும் வேதங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும், அதை வாழ்க்கைபடுத்துவதும், வேதத்தில் சொல்லிய கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக்கொண்டும், வேதத்திற்கு முரணான கருத்துக்களை விலக்கியும் வாழ்வதே ஸனாதன தர்ம வாழ்க்கையாகும்.

ஸனாதன தர்மம் காட்டும் வாழ்க்கைச் சித்திரம்

ஸநாதனதர்மமும் திருக்குறளும் -2 - March 01, 2020
முதல் இலக்கு - அறம்

ஸனாதன தர்மம் என்ற நமது ஹிந்து தர்மம் அறத்தை ஆதாரமாகக் கொண்டது. அனாதியானது. என்றென்றைக்கும் மனித இனம் பின்பற்றவேண்டிய தனிமனித, சமுதாய ஒழுக்கங்களை உபதேசித்து தனிமனிதனையும் சமுதாயத்தையும் காப்பது. அதனால்தான் நமது வேதங்களுக்கு சாஸ்திரம் என்று பெயர். வேதங்கள் கடவுளால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டவை. எதன் அடிப்படையில் உலகங்களும் உயிர்களும் படைக்கப்பட்டு இயங்+குகின்றனவோ அந்த அடிப்படை விதிகளை எடுத்துச் சொல்வன வேதங்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று வரையறுத்துச் சொல்வன வேதங்கள். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று திருவள்ளுவர் சொன்னது போல தீயவற்றை விலக்கி நல்லனவற்றைச் செய்வதற்கான அறிவை தரும் அறிவு நூல்களே வேதங்கள். மனிதனால் விரும்பப்படும் வாழ்க்கை இலக்குகளை - புருஷார்த்தங்கள் என - அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்காக சொல்லியிருக்கின்றன அறநூல்கள். இந்த நாற்பயன்களையும் அடைய வழிகாட்டுபவை வேதங்கள்.

அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு !
எதற்காக வாழவேண்டும்? எப்படி வாழவேண்டும்? என்றறிந்து, அதன்படி திட்டமிட்டு வாழ்வதே மனிதப்பிறவியின் மாண்பு. எதற்காக வாழவேண்டும் என்ற வாழ்க்கை இலக்குகளில் முதலாவது இருப்பது அறம். அறமே உயிர்களுக்கு நிலைத்த செல்வத்தை ஆக்கித் தருவது. செல்வம் இன்பத்தை தருகின்றது. அன்பு, அறிவு, கல்வி, நற்பண்புகள், நல்உறவுகள், உடைமைகள், புண்ணியம், மோக்ஷம் என அனைத்தும் செல்வமே. இவை அனைத்தையும் ஒரு மனிதன் பெறுவதற்கும் தொடர்ந்து அனுபவிப்பதற்கும் ஆதாரமாய் இருப்பது அறம், அறவாழ்க்கை. மாறாக அனைத்தையும் அழிக்கவல்லது அறமின்மை.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (திருக்குறள் 32)

அறத்தான் வருவதே இன்பம்
அறத்தின் பயன் புண்ணியம் ஆகின்றது. புண்ணியமே ஒரு ஜீவன் வாழ்வில் இன்பத்தை அனுபவிப்பதற்காக நற்சூழலை உண்டு பண்ணுகிறது. புண்ணியம் இல்லை எனில் எவ்வளவு வாழ்க்கை வசதிகள் இருந்தாலும் அவை இன்பத்தைத் தரா. புண்ணியம் மன அமைதியை - ஸத்வகுணத்தைத் - தருகின்றது. தெளிந்த நீர் நிலையில் சூரியனின் பிரதிபிம்பம் தெளிவாகத் தெரிவது போல், அடங்கிய மனதில் ஆத்மானந்தம் வெளிப்படுகின்றது. அதுவே உண்மையான ஆனந்தம். தூய்மையான இன்பமே எல்லா உயிர்களின் விருப்பமும். அந்த இன்பம் அறத்தின் பலனாய் வருகிறது.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. (திருக்குறள் 39)

செயற்பாலதோரும் அறனே
செய்யத்தக்கது அறமே. அறம் செய்ய வேண்டுமெனில் - அறத்தின்படி நம் வாழ்வு நல்வாழ்வாக அமைய வேண்டுமெனில் - முதலில் எது அறம் என நாம் அறியவேண்டும். நற்பண்புகள் - பண்பாடு, சடங்குகள் - பண்டிகைகள் , உறவுகள், பாவனை - உயர்ந்த மனோபாவம் போன்றவை அறம் எனப்படுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நாம் ஒழுக வேண்டிய நியதிகளை சொல்லித்தருவன அறநூல்கள். வாழ்வின் நோக்கத்தையும் வாழும் வகையையும் கற்றுத் தருவன அற நூல்கள். அவற்றை முறையாகக் கற்று செயற்பால தோரும் அறனே.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. (திருக்குறள் 40)

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
மனதில் கோபம் முதலான தீய குணங்களை அடக்கி, நற்குணங்களை வளர்த்து, கற்க வேண்டிய நூல்களை முறையாகக் கற்று அதன்படி தன்னுடைய புலன்களையும் மனதை கட்டுப்படுத்தி யார் வாழ்கிறார்களோ அவர்கள் இருக்குமிடம் தேடிவரும் அறதேவதை.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள் 130).
வேதங்கள் அனைத்தும் அறத்தின் மூலங்கள் - வேர்கள். வேதவிருக்ஷத்தின் விழுதுகளே அறநூல்கள் (18 தர்ம சாஸ்திரங்கள் மற்றும் தமிழ் நீதிஇலக்கியங்கள்). இந்த அறநூல்கள் சொல்லும்படி வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை நமக்கு.


ஸநாதனதர்மமும் திருக்குறளும் – 3 - March 04, 2020
இரண்டாம் இலக்கு - பொருள்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
பொருள் என்னும் பணம் இவ்வுலக வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. பொருளே அனைத்து பொருள்களையும் பெறுவதற்கு முதற்பொருள். வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவைகளைப் பெறுவதற்கு பொருள் தேவை. இன்று அடிப்படைத் தேவைகளாக இவை மட்டும் இல்லை.
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்ற ஔவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையானது! பொருள் இன்மையே பல சமூகக் குற்றங்களுக்கு முதற் காரணமாக இருக்கின்றது. பொருளின்மையைப் போல துன்பம் தரத்தக்கது வேறு எதுவும் இல்லை.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (திருக்குறள் 1041)

பொருளென்னும் பொய்யா விளக்கம்
இன்று சமூகத்தில் பொருளால் ஆகாதது ஒன்றும் இல்லை. கல்வி, மருத்துவம், உணவு அனைத்தும் வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்ட சமூகத்தில் பொருளின்றி வாழ்க்கை இல்லை. பொருள் இருந்தால் ஒரு பொருளாக மதிக்காத மனிதரும் மதிப்பு உடையவராக ஆகி விடுகின்றார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அன்றே சொல்லியிருக்கிறார்கள். பொருளை வெளிநாடு சென்றாவது நாம் சேர்த்து நம் துன்பத்தை போக்கி கொள்ளல்வேண்டும்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் (திருக்குறள் 751)

பொருளென்னும் பொய்யா விளக்கம்
இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று (திருக்குறள் 753)

அறன்ஈனும் இன்பமும் ஈனும்
பொருளுள்ளவர்கள் நல்லவர்களாகவும் இருக்கும் பொழுது அந்தப் பொருள் அனைவருக்கும் பயன்தரத்தக்க ஒரு ஊருணி போல் இருக்கின்றது. தீயவர்களிடம் சேர்கின்ற பொருள் நச்சு மரம் போல் ஆகின்றது.
ஆகவேதான் வாழ்வின் குறிக்கோளைச் சொல்லுகின்ற பொழுது அறத்தை முதலிலும் பொருளை இரண்டாவதாகவும் சொல்லியிருக்கிறது வேதம்.

நல்வழியில் பொருளீட்டுகின்ற பொழுதே அதை அச்சமின்றி வெளிப்படையாக அனுபவிக்க முடிகின்றது. அறச்செயல்களுக்கும் பயன்படுத்த முடிகின்றது. பிறருக்கு கெடுதல் இன்றி முறையாக ஈட்டிய பொருளே புண்ணியத்தையும் உண்மையான இன்பத்தையும் தருகின்றது.
பொருளைக் கொண்டே அறத்தையும் இன்பத்தையும் எளிதாக பெறமுடியும். அருளென்னும் அன்பின் குழந்தையும் பொருளாலேயே வளர்கின்றது.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (திருக்குறள் 754)

செய்க பொருளை!
பொருளீட்டல் என்பது ஒரு கலை. ஓவியம் போல சிற்பம் போல இசை போல பொருளீட்டுதல் என்பதும் ஒரு கலை. அது அனைவருக்கும் வருவது இல்லை. யார் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்களோ அதன் நுட்பங்களை நுணுகி கற்றுக்கொள்கிறார்களோ அவர்களே பொருளைச் செய்யும் வல்லவர்கள் ஆகிறார்கள்.
பொருளே எதிரிகளை அழிக்கும் கூறிய வாளாகவும் அமைகின்றது. பொருள் உள்ளவரையே சமூகம் மதிக்கின்றது.
ஆகவே பொருள் செய்யும் வித்தையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். (திருக்குறள் 759)


ஸநாதனதர்மமும் திருக்குறளும் – 4 - March 05, 2020
மூன்றாம் இலக்கு - இன்பம்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை
பாபத்தை தருகின்ற தீச்செயல்களைக் குறைத்து, புண்ணியத்தை தருகின்ற நற்செயல்களைப் பெருக்கி இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையை, இன்பத்தைத் தேடிக் கொள்வதற்கே இல்லறம் - இல்வாழ்க்கை.

காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்கிறார் ஔவையார்.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்போடு கூடிவாழ்வது இல்வாழ்வு. கணவன் மனைவியாக கற்பொழுக்கத்தோடு இல்லத்தில் இருந்து அறநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்ற தர்மங்களை செய்து வாழ்வது இல்வாழ்வின் கடன் ஆகும். அனைத்து உறவுகளோடும் கூடி அன்பு கொண்டு வாழ்வது இல்வாழ்வின் இன்பம் ஆகும். மற்றவரையும் அறநெறியில் வாழச் செய்து தானும் அறம் தவறாது வாழ்வது இல்வாழ்வின் அறம் ஆகும். பல்வேறு நற்செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டுவது இல்வாழ்வின் பயன் ஆகும்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை. (திருக்குறள் 49)
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை (திருக்குறள் 48)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (திருக்குறள் 45)

அறிவறிந்த மக்கட்பேறு
மக்களைப் பெற்று மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; சொல் கேட்டல் செவிக்கு இன்பம்.
அவர்களை அறிவும் பண்பும் உடையவர்களாக வளர்த்து, சான்றோனாக்கி அவையத்து முந்தி இருப்பச் செய்து, மட்டற்ற மகிழ்ச்சி அடைதல் ஈன்றபொழுதினும் பேரின்பம்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (திருக்குறள் 68)

நல்லாற்றின் நின்ற துணை
ஹிந்து மதம் வாழ்க்கையை நான்காக பிரித்து அமைக்கின்றது. பிரம்மசரியம் என்ற மாணவப்பருவம், க்ருஹஸ்தம் என்ற இல்வாழ்க்கை, வானப்பிரஸ்தம் என்ற வன வாழ்க்கை, ஸந்யாஸம் என்ற துறவு வாழ்க்கை. பிரம்மச்சரியத்தின் தொடங்குகின்ற மனித வாழ்க்கை துறவில் நிறைவடைகின்றது.

எதற்காக வாழ வேண்டும் ? எப்படி வாழவேண்டும் ? என்பதை அறிந்து கொள்வதற்கான கற்கும் பருவம் பிரம்மசர்யம். குருவிடமிருந்து கல்விகற்று அறிவைப் பெற்று, பெற்ற அறிவால் பொருளைச் சேர்த்து, பொருளால் இல்வாழ்வின் இன்பத்தை அநுபவித்து, அறம் பலசெய்து வீடுபேற்றிற்கான தகுதியைப் - விவேகம் வைராக்யம் - பெற்று ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கின்ற ஸத்குருவைச் சரணடைந்து பகவத்கீதை, உபநிஷத் ஆகிய தத்துவ சாஸ்திரங்களை முறையாகக் கேட்டு, ஆத்மஞானத்தால் வீடுபேற்றை பெறுதலே மனித வாழ்க்கையின் முறைமையாகும்.

பிரம்மசாரியும் துறவியும் பிக்ஷை ஏற்று ஜீவனம் நடத்த வேண்டும். மற்ற மூன்று வர்ணத்தவரும் அவரவர் தர்மத்தை முறையாகக் செய்வதற்கு தேவையான உணவு முதலானவற்றை செய்து கொடுப்பது இல்லறத்தில் இருப்பவர்கள் கடமையாகும்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. (திருக்குறள் 41)

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
ஸனாதன தர்மம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஐந்து வித கடமைகளை வலியுறுத்துகின்றது. அவை தேவயஜ்ஞம் என்ற தெய்வ வழிபாடு, பித்ரு யஜ்ஞம் என்ற முன்னோர் வழிபாடு, பிரம்மயஜ்ஞம் என்ற அறிவுநூல்களைக் கற்றல், மனுஷ்ய யஜ்ஞம் என்ற விருந்தோம்பல், பூதயஜ்ஞம் என்ற பல்லுயிர் ஓம்புதல்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (திருக்குறள் 43)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (திருக்குறள் 322)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 ஸநாதந தர்மமும் திருக்குறளும் – 5 - March 08, 2020

நான்காம் இலக்கு – வீடுபேறு- ஜீவஸ்வரூபம் - ஜீவன் யார்?

உடலும் உயிரும்
ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று உடல்கள் இருக்கின்றன. 1.ஸ்தூல உடல் (பருவுடல்) 2.ஸூக்ஷ்ம உடல் (நுண்ணுடல்) 3.காரண உடல்

ஸ்தூல உடல் ஸ்தூல பஞ்ச பூதங்களால் ஆனது. ஸூக்ஷ்ம உடல் ஸூக்ஷ்ம பஞ்ச பூதங்களால் ஆனது. காரண உடல் மேற்கண்ட இரண்டு உடல்களுக்கும் காரணமாக இருக்கின்ற அஜ்ஞானம்.

உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதால் ஜடமானது. உடலுக்கு ஆதாரமாக இருப்பதும் உடல் இயங்க காரணமாக இருப்பதும் உடலிற்கு வேறான ஆத்மா. உடல் நிலையில்லாதது, ஆத்மா நிலையானது. ஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது, பூர்ணமானது, அறிவே வடிவானது, இரண்டற்ற ஒன்றானது. உடலும் ஆத்மாவும் சேர்ந்ததே ஜீவாத்மா என்ற ஜீவன். இந்த உடலில் பஞ்ச ஞான இந்திரியங்களும் (ஐந்து அறிவு கருவிகள்) பஞ்ச கர்ம இந்திரியங்களும் (ஐந்து செயற் கருவிகள்) அந்தக்கரணம் என்ற மனம் ஒன்றும் இருக்கின்றன. இவை நுண்ணுடலில் இருக்கின்றன.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (திருக்குறள் 24)

ஓரைந்தும் = பொறிகள் ஐந்தும் மனமும்

பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். (திருக்குறள் 271)
(உடல் பஞ்ச பூதங்களால் ஆனது)

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346)

உடம்பொடு உயிரிடை நட்பு (திருக்குறள் 338)

துச்சில் இருந்த உயிர்க்கு (திருக்குறள் 340)

( உயிர் = நுண்ணுடல். உடலுக்கு வேறாக உயிர் இருக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவு)

ஜகத் ஸ்வரூபம் - உலகம் யாது?

பூதங்கள் ஐந்து
இந்த உலகமும் பஞ்சபூதங்களால் ஆனது. ஐந்து அறிவுக்கருவிகளுக்கான ஐந்து விஷயங்களை - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் - உடையது. ஜீவர்கள் செய்த புண்ணிய பாவத்திற்கு ஏற்றார்போல் சுகதுக்கங்களை தரவல்லது.

பூதங்கள் ஐந்தும் (திருக்குறள் 271)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (திருக்குறள் 27)

பஞ்சபூதங்களாலான இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்டது.

ஆதிபகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 01)

இவ்வுலகம் நிலையில்லாத தன்மை உடையது.

நில்லாத வற்றை (திருக்குறள் 331)

ஊழிக்காலத்தில் நில்லாமல் அழிந்து போக கூடியது.

ஊழி பெயரினும் (திருக்குறள் 989)

ஸநாதநதர்மமும் திருக்குறளும் – 6 - March 10, 2020
ஈஸ்வர ஸ்வரூபம் - கடவுள் யார்?

ஆதிபகவன் - அபின்ன நிமித்த விவர்த்த உபாதான காரணம்
அனைத்திற்கும் முதலாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் இருப்பவர் கடவுள். உலகம் இறைவனைக் காரணமாக கொண்டது. ஒவ்வொரு பொருளும் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நிமித்தகாரணம். இன்னொன்று உபாதானகாரணம். உபாதானகாரணம் என்பது மூலப்பொருள். நிமித்தகாரணம் என்பது அறிவுப்பொருள். கடவுள் உலகத்திற்கு இரண்டுமாக இருப்பவர். அதனால் ஆதிபகவன்.

ஆதிபகவன் முதற்றே உலகு ( திருக்குறள் 1)

வாலறிவன் - ஸர்வஜ்ஞன்
அவர் முற்றறிவு படைத்தவர் - அனைத்தையும் அறிந்தவர் - தான் படைத்த அனைத்தைப் பற்றியும் முழுமையான அறிவு படைத்தவர். அறிவே வடிவானவர்.

வாலறிவன் (திருக்குறள் 2)

மலர்மிசை ஏகினான் - கூடஸ்தன் - அந்தர்யாமி
எல்லா உயிர்களுடைய இதயத்திலும் சாக்ஷியாக - அந்தர்யாமியாக - கூடஸ்தராக - விளங்கிக் கொண்டிருப்பவர். அனைத்தையும் விளக்குபவராக, அனைத்திக்கும் வேறானவராக, அனைத்தையும் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவராக, தன் நிலையிலிருந்து மாறாதவராக இருப்பவர்.

மலர்மிசை ஏகினான் (திருக்குறள் 3)

வேண்டுதல் வேண்டாமை இலான்
இறைவன் பூர்ணமானவர். ஆதலால் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். இரும்புத் துகள்கள் காந்தத்தின்முன் அசைவதுபோல சைதந்ய ஸ்வரூபமான இறைவன்முன் ஜடமான மனமும் உடலும் இயக்கம் பெற்று இயங்குகின்றன. சூரியன் பூமியிலுள்ள அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருந்தாலும் நேரடியாக எவ்வித செயலையும் செய்வது இல்லை. இறைவன் முன்னிலையில் அனைத்துச் செயல்களும் நடந்தாலும் இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவராக இருக்கின்றார். ஜீவர்களுடைய அறிவு மற்றும் மனப்பக்குவத்திற்கு ஏற்றார்போல இறைவனுடைய அருளைப் பெறுவதிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. தாவரங்கள் அதனுதனுடைய சக்திக்கு ஏற்றவாறு சூரிய ஒளியை கிரகித்துக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்வது போல, ஜீவர்கள் தங்கள் புண்ணிய பாவத்திற்கு ஏற்றார்போல இறையருளை கிரகித்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்கின்றனர்.

வேண்டுதல் வேண்டாமை இலான் (திருக்குறள் 4)

இருவினையும் சேரா இறைவன் - அகர்த்தா அபோக்தா
கொடிய பிறவிக்குக் காரணமான புண்ணிய பாபங்கள் இறைவனுக்கு இல்லை. இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய பஞ்சகிருத்தியங்களை செய்பவராக இருந்தாலும் ஜீவர்களுக்கு புண்ணியபாவங்கள் ஏற்படுவதுபோல இறைவனுக்கு இல்லை. இறைவனின் சந்நிதி மாத்திரத்தில் மாயையினால் இவைகள் நடக்கின்றன.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் ( திருக்குறள் 5)

பொறிவாயில் ஐந்தவித்தான் - ஈச்வரன்
இறைவன் தன்னுடைய மாயையை தன் வசத்தில் வைத்திருப்பவர். ஜீவன் மாயையின் வசத்தில் இருப்பவன். ஆகவே இறைவன் தன் மாயையோடுகூடி உருவம் கொண்டிருந்தாலும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்துபொறிகளையும் வென்றவர் ஆக இருக்கின்றார். அனைத்தையும் - தன்னையும் உலகையும் - ஆள்பவராக இருக்கின்றார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் ( திருக்குறள் 6)

அறவாழி அந்தணன்
இறைவன் ஒருவனே. தனக்கு சமமாகவோ மேலாகவோ இன்னொரு சக்தி இல்லாதவர். அவரே எல்லா சக்திகளுக்கும் மேலான இருப்பிடம் - சர்வசக்திமான். இயற்கை எண்ணற்ற விதிகளை ஒழுங்குகளை கொண்டிருக்கின்றது. எல்லா விதிகளையும் ஏற்படுத்தி நடத்துபவர் இறைவன் - நியந்தா. அறத்தின் வடிவமாக - அறக்கடலாக விளங்குபவர். வேதத்தின் முடிவான வேதாந்தத்தின் வாயிலாக அறியப்படுபவர்.

தனக்குவமை இல்லாதவன் (திருக்குறள் 7)
அறவாழி அந்தணன் ( திருக்குறள் 8)

எண்குணத்தான்
இறைவன் எண்ணற்ற குணங்களை உடையவர்; எண்ணுதற்கரிய குணங்களை உடையவர்; எல்லா குணங்களுக்கும் ஆதாரமான நிர்குணன்.

எண்குணத்தான் (திருக்குறள் 9)

இறைவன் - ஸர்வவ்யாபி
எங்கும் நிறைந்த பரம்பொருள். காலத்தாலும் இடத்தாலும் வரையறுக்க படாமல் எங்கும் நீக்கமற இ(நி)றைந்திருக்கின்றவர், ஆதலால் இறைவன்.

இறைவன் ( திருக்குறள் 5,10)




__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஸநாதனதர்மமும் திருக்குறளும் – 7 - March 17, 2020
பந்தஸ்வரூபம் - பிறப்பு எப்படி?

புல்லறிவாண்மை
அழியாத ஆத்மாவாக இருக்கின்ற ஜீவர்கள் அறியாமையினால் மூடப்பட்டு, உடல் அபிமானம் கொண்டு தான் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டதாக கருதுகிறார்கள். நிலையில்லாத உடலையும் உலகையும் நிலையானதாகக் கருதுகிறார்கள்.

எல்லாப் பொருள்களுள்ளும் மாறாத இருப்பாக இருப்பவர் இறைவன். ஆகவே அவர் மெய்ப்பொருள் எனப்படுகின்றார். மற்ற எல்லாப் பொருள்களும் மெய்ப்பொருளான இறைவன் மேல் நாம ரூபங்களாக - பெயர்வடிவங்களாக - மாயையினால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நாமரூபங்களில் மயங்குகின்ற ஜீவர்கள் நிலையில்லாத தோற்றமாத்திரமான உலகத்தினை உண்மை என்று நினைக்கும் கீழான அறிவை அடைகிறார்கள்.

நில்லாதவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (திருக்குறள் 331)

மருளானாம் மாணாப் பிறப்பு
உயிர்களுக்கு ஒரு பிறவி அல்ல. பல பிறவிகள் உண்டு அப்படி பிறவிகள் தோன்றுவதற்கு காரணம் மருள் என்ற மயக்கம் - அறியாமை. மெய்ப்பொருளை அறியாது பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று கருதி வாழ்க்கையை நடத்துவதே மருள். இந்த அறியாமையே பிறவிக்கு காரணமாக இருக்கின்றது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (திருக்குறள் 351)

வகுத்தான் வகுத்த வகையல்லால்
மனிதன்கள் மனதில் உள்ள விருப்பு - வெறுப்புகளால் தூண்டப்பட்டு உடலிலுள்ள பொறிகளின் வழியாக உலக விஷயங்களைத் தொடர்புகொண்டு இன்பதுன்பங்களை அனுபவிக்கிறார்கள். உடலின் இன்ப துன்பங்களை தன்னுடையதாக கருதுகிறார்கள். இன்பங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் துன்பங்களை போக்கிக் கொள்வதற்காகவும் பல விதமான வினைகளை தர்மமாகவோ அதர்மமாகவோ செய்கிறார்கள். அவ்வாறு செய்கின்ற வினைகளுக்கு த்ருஷ்டபலனோடு அதிர்ஷ்டமாக புண்ணியபாப பலனும் ஏற்படுகின்றது. இந்த புண்ணிய பாபங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின்னர் ஈச்வரனால் இன்ப துன்பங்களாகக் கொடுக்கப்படுகின்றன. திருக்குறளில் ஊழ் அதிகாரம் அதையே காட்டுகின்றது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது (திருக்குறள் 377)

பிறப்பீனும் வித்து
ஒரு பிறவியில் அனுபவித்து முடியாத புண்ணிய பாப பலன்கள் அடுத்த பிறவிக்குக் காரணமாக அமைகின்றன. அடுத்த மனிதப்பிறவியில் மீண்டும் ஜீவனால் அறியாமையினாலும் ஆசையினாலும் புதிய வினைகள் செய்யப்பட்டு புண்ணிய பாபங்கள் சேர்க்கப்படுகின்றன. இப்படி பிறவி தொடர்கின்றது முடிவில்லாமல்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. (திருக்குறள் 361)

ஸநாதன தர்மமும் திருக்குறளும் -8 - April 07, 2020
ஸாதநஸ்வரூபம் - வீடுபெறும்வழி

தலைப்பட்டார் தீரத் துறந்தார்
சார் தரும் நோய் சார்தரா!
இந்த உலகப்பொருள்கள் எல்லாம் மெய்ப்பொருளான பரம்பொருளை சார்ந்து இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு உலகப்பொருள்களின் மேல் இருக்கும் சார்பை - பற்றை - விடுத்து பரம்பொருளை சார்ந்து வாழுகின்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டால், துன்பத்தைத் தருகின்ற பிறவியில் இருந்து விடுவித்து பிறவாத நிலையை அருளுவார் இறைவன்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய்.
(திருக்குறள் 359)

பற்றுக பற்றற்றான் பற்றினை
உலகப்பற்றுகள் நம்மை இன்ப துன்பங்களில் ஆழ்த்துகின்றன; பிறப்பு இறப்புகளில் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொண்டு உலகப் பற்று களிலிருந்து விடுபடுவதற்கு பற்றற்ற இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனை அடைவதற்கு சாதனங்களான கர்மயோகம், உபாஸந(தியான)யோகம் ஞானயோகம் ஆகியவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள் 350)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் (திருக்குறள் 10)

ஞானயோகம்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
விவேகம் உடைய மனிதர்கள் உலகின் நிலையற்ற தன்மையை அறிந்து கொண்டு நிலையான பொருள் எது என்று தேடி நிலையான பொருளை பற்றி பேசுகின்ற தத்துவநூல்களை குரு வாயிலாக முறையாக பயின்று மெய்யறிவைப் பெறுகிறார்கள். மெய்யறிவின் வாயிலாக மெய்ப்பொருளை காண்கிறார்கள்.

நம்முடைய பிறவிக்குக் காரணம் அறியாமையே என்று முன்பு சொல்லப்பட்டது. அப்படி அறியாமை நீங்குவதற்கு ஒவ்வொரு பொருளினினுடைய தன்மையையும் ஆராய்ந்து எல்லா பொருள்களிலும் மெய்ப்பொருளாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொள்வதே மெய்யறிவு. ஆத்மஞானம் அல்லது ப்ரஹ்மஞானம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருக்குறள் 355)
ஸனாதன தர்மமும் திருக்குறளும் – 9 - April 08, 2020
மோக்ஷஸ்வரூபம் - வீடு எது?

இருள்நீங்கி இன்பம் பயக்கும்
வேதாந்த நூல்களைக் குருவாயிலாகக் கேட்டு, பரம்பொருள் ஒன்றே மெய்பொருள்; அந்த பரம்பொருளே அனைத்துமாக இருக்கின்றது; உலகவேறுபாடுகள் எல்லாம் வெறும் தோற்றமாத்திரம் என்று புரிந்து கொள்வதுடன் - இந்த உண்மை நம் இதுநாள்வரையிலான அனுபவத்திற்கு மாறாக இருப்பதால் - இதில் ஏற்படுகின்ற சகலசந்தேகங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும். தெளிவை ஏற்படுத்திக் கொண்டபின் அந்த அறிவிலேயே மனதை நிலைநிறுத்தினால் விடுதலையானது உடனே சித்திக்கும். இந்த உலக இன்பங்களைவிட மேலான ஆனந்தம் நமக்கு இங்கேயே இப்பொழுதே கிடைக்கும். இது ஜீவன்முக்தி.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. (திருக்குறள் 353)

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு. (திருக்குறள் 352)

மற்றீண்டு வாரா நெறி
மெய்யுணர்ந்து அவாஅறுத்து ஜீவன் முக்தரானவர் எல்லாவிதமான மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவராய், புண்ணிய பாவம் அழிந்து போனவராய் ஆகிறார். இவர் ப்ரஹ்மநிஷ்டர். இவர் பிறவிக்குக் காரணமான அஜ்ஞானமும் புண்ணிய பாபமும் இல்லாமல் போவதால் பிறவாத நிலையை அடைகிறார். இது விதேகமுக்தி.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (திருக்குறள் 356)

வானோர்க்கு உயர்ந்த உலகம்
குளிர், வெப்பம், இன்பம், துன்பம் இவை வந்து போகக்கூடியவை, நிலையில்லாதவை; இறைவனால் நடத்தப்படுபவை. இந்த உடல், உலகம், உயிர்வாழ்க்கை, உறவுகள், செல்வம், அனைத்தும் இறைவனால் அருளப் பட்டவை; இறைவன் அருளில்லாமல் எனது அறிவு, திறமை இல்லை; என்னுடையது என்றும் எதுவும் இல்லை; எல்லாம் அவன் செயல் என்று நினைந்து எப்பொழுதும் இறைவனையே சிந்தித்துக் கொண்டிருப்பவன் உபாஸகன். உலக சுகபோகங்களில் பற்றின்றி இறைவனை அடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எப்பொழுதும் தியானித்து கொண்டிருக்கின்ற அவன் வானோர்க்கும் உயர்ந்த உலகை - ப்ரஹ்மலோகத்தை - அடைவான். அவன் திரும்பி வருவதில்லை. இது கிரமமுக்தி.

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346).

இறுதியாக…

இந்தக்கட்டுரையில் திருக்குறளிலிருந்து மட்டுமே மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. அறம் பொருள் இன்பம் வீடு, இல்லறம் துறவறம், புண்ணியம் பாபமுமாகிய வினைப்பயனின் விளைவாக பல பிறவிகள், அஜ்ஞானத்தினால் பிறவியும் ஞானத்தினால் மோக்ஷமும், அருவமும் உருவமாய் உள்ள இறைதத்துவம் போன்ற அனைத்தும் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே ஹிந்துதர்ம சாஸ்திரங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்படவில்லை.

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
(மாங்குடி மருதனார் - திருவள்ளுவமாலை)

வேதங்களுக்கு மறை என்றொரு பெயருண்டு. திருக்குறளுக்கு தமிழ்மறை என்றொரு பெயருண்டு. மறையின் பொருளை எளிய தமிழில் சொன்னதால்தான் அப்பெயர் வந்தது. திருக்குறள் வேதப் பொருளாய் விளங்குகின்றது என்பதை தீதற்றோர் நன்கறிவர். ஹிந்துத்தமிழர்களாகிய நாமும் திருக்குறளையும் வேதநெறியையும் கசடறக் கற்றறிந்து நிற்போம் அதற்குத் தக!

தமிழர்மதமும் ஹிந்துமதமும் வேறுவேறென்று தவறாக அரசியல் செய்துவருகிறார்கள். ராமாயணத்தை தமிழில் படைத்த கம்பரும் பாரதத்தை தமிழில் செய்த வில்லிபுத்தூராரும் நல்லாப்பிள்ளையும் ஹிந்துத்தமிழர் தானே! விநாயகர் அகவல் செய்த அவ்வையாரும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் திருமுறை பாடிய நாயன்மார்களும் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களும் ஹிந்துத்தமிழர்கள் தானே!

தமிழர் மதமும் இந்து மதமும் ஒன்று தான். சங்க இலக்கியம் தொட்டு பாரதியார் வரை பக்தியுள்ள பண்பாடுள்ள அனைத்து தமிழரறிஞர்களும் ஹிந்துக்களே!
திருக்குறள் வேததர்மத்தைத் தமிழில் சொன்ன நீதி இலக்கியங்களும் தலையாயது ஆகும்.
முற்றும்



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஸநாதனத்தின் குரலே திருக்குறள் -1

 

     திருக்குறள் உலகப்பொதுமறை அதனை ஹிந்துமதத்துக்கு மட்டும் சொந்தமான நூல் என்று சொல்லக் கூடாது என்றும், அது தமிழர்களின்  நூல் ,குறிப்பாக ஸனாதன தர்மத்துக்கு எதிரான நூல் என்றும் பேசும் தமிழ் இனமான காப்பாளர்கள் உண்டு.

 

     திருக்குறள் ஜைன நூல் என்றும் பௌத்த நூல் என்றும் பொதுவுடமை வாதிகள் பல வருஷங்களாக சொல்லிவருகிறார்கள். இடையே திருவள்ளுவர் திருக்குறள் எழுத தாமஸ் என்னும் கிருஸ்துவருடன் நடந்த சந்திப்புத்தான் காரணம் அந்த சந்திப்பு மட்டும் நடக்கவில்லையென்றால் திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருக்கமுடியாது என்றும், திருக்குறள் ஒரு கிருஸ்துவ நூல் என்றும், இல்லவேயில்லை ,திருக்குறள் இஸ்லாமிய நூல் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.

 

     ஆனால் திருக்குறளை தங்கள் மத நூல் என்று சொல்லும் அந்நிய நாட்டிலிருந்து வந்த மதங்கள் தங்களது ஒரே புனித நூலுக்கு இணையாக திருக்குறளை எங்கும் ஏற்கவில்லை என்பதே அவர்களது வாதத்துக்கு எதிராக அமைகிறது. மறுபிறவி மற்றும் உருவ வழிபாடு பற்றி கூறும் திருக்குறளை அந்நிய நாட்டிலிருந்து வந்த மதங்கள் தங்கள் மதநூல் என்று சொல்லுவது அவர்களது மத அடிப்படைக்கே முரண்.

 

     பாரத தேசத்தில் தோன்றிய மதங்களான பௌத்த ஜைன மதங்களின் கருத்துக்களுடன் அல்லது விதேசி மதங்களின் கடவுள்களைப் பற்றிய குறிப்பு  திருக்குறளில் காணப்படவேயில்லை.

 
திருவள்ளுவமாலை 11 ஆம் நூற்றாண்டு நூல் என்றும் இதில் உள்ள புலவர்கள் சிலர் சங்கப் புலவர்கள் பெயரினை வைத்துக்கொண்டு எழுதியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் சொல்லுவதுண்டு.அப்படியே எடுத்துக்கொண்டாலும்” 11 ஆம் நூற்றாண்டுவரை எந்த தமிழ் புலவர்களாவது தனியாகவோ, குழுவாகவோ திருக்குறள் சமண நூல் என்றோ பௌத்த நூல் என்றோ பாடி அது நூலாக உள்ளதா? என்பதே நமது கேள்வி.

   அப்படி திருக்குறள் ஜைன அல்லது பௌத்த நூல் என்று புலவர்கள் பாடவில்லை அப்படி நூலும் இல்லை. கால ஆராய்சிக்கு அப்பாற்பட்டு புலவர்கள் பெயர் ஆராய்சிக்கு அப்பாற்பட்டு 11 நூற்றாண்டுவரை திருக்குறள் சனாதன மதக்கருத்து கொண்டதுதான் என்பதற்கு சான்றுதான் திருவள்ளுவமாலை    

 

     சரி, இவர்களின் ஆய்வுகளை தள்ளிவிட்டு திருக்குறள் குறித்த  புலவர்கள் (ஆய்வு) என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போமா?.. 

       

 

வைகாசி அனுஷத்துதித்தோன் வாழியே 

 

 

     

திருக்குறளின் பெருமையை கூறும் நூல் திருவள்ளுவமாலை
, பல புலவர்கள் வள்ளுவர் குறித்தும் அவரது திருக்குறள் குறித்தும் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவமாலை.

 

     பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியின் காலத்தில்தான் திருக்குறள் அரங்கேறியது என்று சொல்வதுண்டு. அந்த மன்னன் திருவள்ளுவரை பாடும் பாடலில் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் தனது உருவத்தினை மறைத்து திருவள்ளுவராகத் தோன்றி நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை முப்பாலாகப் பாடினான் அந்த திருக்குறளை நமது தலையால் பணிவுடன் வணங்கவேண்டும்,வாய் வாழ்த்தவேண்டும், நல்ல நெஞ்சம் சிந்திக்கவேண்டும் செவி கேட்கவேண்டும் என்று பாடுகிறார்.

 

     நான்மறையின் மெய்பொருளை முபொருளா நான் முகத்தோன்

     தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை

     வந்திக்க சென்னி! வாய்வாழ்த்துக! நன்னெஞ்சம்

     சிந்திக்க! கேட்க செவி!  

 

     இந்த பாடலில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுடன்தான் திருக்குறள் ஒப்பிடப்படுகிறதே அன்றி ஜைன, பௌத்த சமயங்கள் கூறும் புனித நூல்களுடனோ ,இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்கள் கூறும் அந்த மதங்களின் புனித நூல்களுடன் திருக்குறளை ஒப்பிடவில்லை என்பதை குறித்துக்கொள்ளவேண்டும்.  


     பரணர், திருக்குறளையும், வள்ளுவரைப் பற்றி அவர் சொல்லுகிறார். திருமால் வாமன அவதாரம் எடுத்து தனது இரண்டு திருவடியால் மூவுலகையும் அளந்தார். அதைப்போல வள்ளுவர் இரண்டடி குறள் வெண்பாவால் உலக மக்கள் நினைக்கும் அனைத்தையும் அளந்துவிட்டார் என்கிறார். இங்கு குள்ளமான வாமன அவதார எடுத்துவந்த திருமால் திரிவிக்ரமனாக வடிவெடுத்ததைப்  திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் ஒப்புமைகாட்டுகிறார்.வேறு மத தெய்வங்களை அல்ல.  

 

     மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்

     ஞாலம் முழுவதும் நயந்தளத்தான் – வாலறிவின்

     வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்

     உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து.

 

இவரைப் போன்றே பொன்முடியார் வாமன அவதாரத்தை ஒப்பிட்டு திருக்குறளை புகழ்கிறார்

 

     கானின்ற தொங்கலாய்!காசிபனார் தந்ததுமுன்

     கூநின் றளந்தகுறளென்ப- நூல்முறையால்

     வானின்று மண்ணின் றளந்தே வள்ளுவனார்

     தாநின் றளந்த குறள்      

 

     

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

கல்லாடர் என்னும் புலவர்  வள்ளுவ(ம்)ர் குறித்து..

 

     ஒன்றே பொருளெனின் வேறென்‌ப வேறெனின்

     அன்றென்ப ஆறு சமயத்தார்- நன்றென

     எப்பா லவரும்இயைபவே வள்ளுவனார்

     முப்பால் மொழிந்த மொழி

 

      நல்லாந்துவானார் என்னும் புலவர், அருமறை என்று புகழ்படும் வேதங்கள் என்றும் நிலைத்திருக்கும் அறிய கருத்துக்களை சொல்லுகின்றன. அந்த வேதங்கள் கூறும் அறிய உண்மைகளை தெளிவாக எடுத்து சொல்லுகிறது முப்பால் என்னும் திருக்குறள். அதனைத் தந்த திருவள்ளுவர் முதன்மையான புலவர் என்று பாடி வேதத்தின் கருத்துகளை சொல்லுவது திருக்குறள் என்கிறார்.  வேறு எந்த மத நூல்களின் கருத்துக்களையும் திருவள்ளுவர் தனது திருக்குறளில் சொல்லுவதாக சொல்லவில்லை.

 

     பிணக்கற அறுவகைச் சமயமும் என்று திருவாய்மொழி 1-3-5 பாசுரமும் குறிப்பிடுகிறது. அந்த ஆறு சமயங்களும் வேதத்தினை ஏற்காத வேதத்துக்கு புறம்பான ஆறுவகை சமயங்கள் சாக்யம் (பௌத்தம்), உலூக்யம்(வைஸேஷிகம்), அக்ஷபாத மதம்(நையாயிகம்), க்ஷபணக (சமண மதம்), கபில (ஸாங்க்ய) மதம், பதஞ்சலி (யோக) மதம் என்னும் ஆறு மதங்கள். இப்படி வேத மார்க்கதத்துக்கு புறம்பான ஆறுமாதங்கள் கூட திருக்குறளை ஏற்கிறது என்கிறார் கலித்தொகை கவி.

 

     வீடுபேறு பற்றி வள்ளுவத்தில் இல்லையே என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லுகிறார்  கீரந்தையார் அறம், பொருள். இன்பம் ஆகிய முப்பாலையும் கற்று அதற்குத் தக நிற்பவர்கள் வீட்டைப்பற்றி (வீடுபேறு) கவலைபடவேண்டியதில்லை என்கிறார்.

 

     தப்பா முதற்பாவால் தாமாண்ட பாடலினான்

     முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் எப்பாலும்

     வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழ

     தெய்வத் திருவள்ளுவர்    

 

     வீடுபேறு பற்றி வள்ளுவ(ர்)ம் சொல்லவில்லை என்று யார் சொன்னது? என்று வம்புக்கு வருகிறார் சிறுமேதாவியார் என்னும் புலவர்.. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் அதிகாரங்கள் கூறும் கருத்துக்களின் வழிநின்றால் வீடுபேறு நிச்சயம் .துறவியலில் 13 அதிகாரங்கள் ஊழ் பற்றி ஒரு அதிகாரம் உள்ளதே இவை வீடுபேறு பற்றிதானே பேசுகின்றன என்பது மேதாவியார் வாதம்.

 

     தொடித்தலை விழுத்தண்டினார் என்னும்  புலவர் “ நாளும் மொழிந்த பெரு நாவலரே! “அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்கினையும் முப்பாலில் தந்துள்ளார் பெருநாவலர் என்கிறார்.  

    

     நல்கூர் வேள்வியார் என்னும் புலவர் திருக்குறளை ஸ்ரீமத் பகவத் கீதையுடன் ஒப்பிடுகிறார். மதுரைக்காரரான மாதானுபங்கி என்பது திருவள்ளுவரின் பெயர், அதன் பொருள் செம்மையான மொழிகளைப் போதிக்கும் நாவையுடையவர் அதனால்தான் “செந்நாப்போதார்”. 

 

     வட மதுரையில் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதை கொடுத்தான். தென்மதுரையில் அவதரித்த வள்ளுவன் திருக்குறள் தந்தான் .

     உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்

     உத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்

     மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

     போதார் புனற்கூடற் கச்சு     


 
 வெள்ளி வீதியார் , வேதம் எவரும் இயற்றாத செய்யாமொழி , திருக்குறள் பொய்யாமொழி இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் என்கிறார். “செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழிக்கும் பொருளொன்றே”

     
  மாங்குடி மருதனார் வேதங்களின் பொருளாக. “வேதப் பொருளாய் மிகவிளங்கி” திருக்குறள் இருக்கிறது என்கிறார்.    

 

     காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும்  பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சொல்லியது போன்றே பிரம்மன்தான் திருவள்ளுவராகப் பிறந்து திருக்குறளை அளித்தான் என்கிறார்

 

      ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமா

     மெய்யாய வேதப் பொருள்விளங்கப்- பொய்யாது

     தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி

     அந்தா மரைமேல் அயல்    .    

 

      புலவர் நரிவெரூஉத்தலயார் வேதங்கள் முற்காலத்தில் அறம் பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் உரைத்தன. வேதத்தினை ஓதி உணர்தல் கடினம். ஆனால் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் எல்லா மக்களும் அறியும் வண்ணம் எளிமையாக திருக்குறளில் கூறியுள்ளார் என்கிறார். வீடு பற்றி வள்ளுவர் கூறியுளார் என்கிறார், மேலும் வேதம் சொன்னதை வள்ளுவமும் சொல்கிறது என்கிறார்.

 

 

     இன்பம் பொருளறம்வீடென்னும் இந்நான்கும்

     முன்பறியச் சொன்ன முதுமொழியால் மன்பதைகட்(கு)

     உள்ள அறிதென் றவைவள் ளுவருலகங்

     கொள்ள மொழிந்தார் குறள்

 

     கவிசாகரப் பெருந்தேவனார் என்னும் புலவர் எது எதில் எது சிறந்தது? என்று பட்டியல் இடுகிறார். மலர்களில் சிறந்தது தாமரை. நான்குவகை பொன்னில் சிறந்தந்து சாம்புநதம், பசுக்களில் சிறந்தது காமதேனு,யானைகளில் சிறந்தது ஐராவதம், தெய்வத்தில் சிறந்தவர் திருமால், பாவில் சிறந்தது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்.
  
    பூவிற்குத் தாமரையே பொண்ணுக்குச் சாம்புநதம்

  ஆவிற்(கு) அருமுனியா ஆனைக்(கு)-அமரரும்பல்

  தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே

  பாவிற்கு வள்ளுவர்வெண் பா 
      வேதத்து பொருளனைத்தையும் உலக மக்கள் அனைவரும் ஓதி எளிதில் உணரும் வகையில் தமிழில் விரிவாக சொல்லியுள்ளார் வள்ளுவர் என்று வேதக்கருத்தைத்தான் வள்ளுவர் சொல்லியுள்ளார் என்று பாடுகிறார் செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் என்னும் புலவர்.

 

     வேதப் பொருளை விரகால் விரித்துல கோர்

     ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்

     உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப

     வள்ளுவர் வாய்மொழி மாட்டு

 

     இப்படி வடமொழி வேதக்கருத்துக்களை திருக்குறள் கூறுவதால் வடமொழி உயர்ந்ததா தமிழ் உயர்ந்ததா என்று கூறமுடியாது என்கிறார் வண்ணக்கஞ் சாத்தனார் என்னும் புலவர்.

 

     ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது

     சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்

     வேதம் உடைத்து தமிழ்த் திருவள்ளுவனார்

     ஒது குறட்பா உடைத்து      

 

     திருவள்ளுவமாலையில் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பாடிய எந்தப் புலவரும் திருக்குறள் ஜைன,பௌத்த,இஸ்லாமிய,கிறிஸ்துவ மதக் கருத்துக்கள் கொண்டது என்று எங்கும் கூறவில்லை திருவள்ளுவரையும் அந்த மதங்களுடன் தொடர்புபடுத்தவில்லை. ரிக் யஜூர் ஸாம, அதர்வண  வேதக்கருத்துக்களை சொல்லுபவர் திருவள்ளுவர் என்றும் , அவர் ஸ்ரீமன் நாரயணனால் படைக்கப்பட்டட பிரம்மாவின் அவதாரம் என்றும் கூறியுள்ளார்கள். எனவே ஸநாதான தர்மத்தின் குரலே திருக்குறள் என்று தெளிவாகிறது

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஸநாதனத்தின் குரலே திருக்குறள் - 2

    

     ஸநாதனத்தினை எதிர்க்கிறோம் என்று குரல் கொடுக்கும் அறிவு சீவிகள் 100% அக்மார்க் முத்திரையுடன் ஏற்கும் நூல் திருக்குறள்.  

 ஸனாதன நூல்களின் கருத்துக்களை திருக்குறளில் பார்ப்போமா. .ஆம்! திருக்குறளே ஒரு ஸநாதன நூல்தான்.  

 

மனு ஸ்ம்ருதியும் திருக்குறளும்

 

ஒழுக்கத்தினை விட்ட பிராமணனுக்கு வேதத்திற் சொல்லிய பலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்கு சகல பலனும் குறைவின்றி கிடைக்கும். (மனு அத்தியாயம் 1 ஸ்லோகம் 109)

 

          மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான்

         பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள் 134)

 

     பார்ப்பான் தான் கற்ற வேதத்தினை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கதிலிருந்து தாழ்ந்தால், பிராமணன் என்கிற நிலையிலிருந்து தாழ்ந்தவன் ஆவான். 

 

மனுவின் 1-109 ஸ்லோகத்தை திருக்குறள் 134 ஐ அப்படியே வழிமொழிகிறது

 

     ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்

     இழிந்த பிறப்பாய் விடும்

 

     என்னும் ஒழுக்கம் உடைமை அதிகார  மூன்றாவது குறள் சொல்கிறது ஒழுக்கம் உயர்ந்த குடியின் தன்மை, ஒழுக்கம் இல்லாமை தாழ்ந்த குடியின் இயல்பு என்ற மனுஸ்ம்ருதியை எதிரொலிக்கிறது.  

 

 





    அடுத்த ஸ்லோகம் 110லும் சொல்கிறார்  முனிவர்கள் ஒழுக்கத்தினாலே தருமத்தின் பலனையறிந்து எல்லா தவத்திற்கும் ஒழுக்கத்தினையே முதற்காரணமாகச் சொல்லுகிறார்கள்   என்கிறார்.

 

     எவனுக்கு வாக்கும் மனமும் பொய் சொல்லாமல் உள்ளதோ அதாவது சொல்வதும் செய்வதும் ஒன்றாக உள்ளதோ அவன் வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லியுள்ள எல்லா பலன்களையும் அடைகிறான் ( மனு ஸ்மிருதி 2-160)

 

     இங்கும் திருக்குறள் அப்படியே மனுவுடன் ஒத்துப்போகிறது. திருக்குறள் வாய்மை அதிகாரம் 6,7 குறள் மனு ஸ்மிருதி என்ன சொல்கிறதோ அதை அப்படியே சொல்லுகிறது.

 

     பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை

     எல்லா அறமும் தரும்.

 

பொய் சொல்லாதிருப்பது புகழ், அது எல்லா அறங்களையும் தரும்.

 

 

 

 

     பொய்யாமை, பொய்யாமை ஆற்றின், ஆறம்பிற

     செய்யாமை செய்யாமை நன்று”.

 

பொய் சொல்லாமல் வாழ்ந்தால், பிற தருமங்களை செய்யாவிடினும் நன்மை உண்டாகும்.     

 

       ஒருவன் துன்பத்தினை அடைந்திருந்தாலும் அந்நியனை பார்த்து துன்பம் வரும்படி பேசக்கூடாது. செய்கையாலும் மனதாலும் ஒருவனுக்கும் துரோகம் செய்யக்கூடாது. கொடுமையான அமங்கலமான வார்த்தைகளை சொன்னால் சுவர்க்காதி புண்ணிய லோகங்களை அடையமாட்டான். (மனுஸ்ம்ருதி 2-161)

 

     அழுக்காறு அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம்”.

 

     அறன் வலி உறுத்தல் அதிகாரத்தின் 5 ஆவது குறள் அப்படியே மனு ஸ்மிருதி வாக்குடன் ஒத்திருக்கிறதே..

 

     பிராமணன் தனக்கு அயலான் செய்கின்ற மரியாதையை விஷத்தினை போல நினைத்து அஞ்சவேண்டும். அவமானத்தினை அம்ருதம் போல் விரும்பவேண்டும். (மனு ஸ்ம்ருதி 2-162)

 

      



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

இதோ இங்கும் திருக்குறள் பொறைஉடைமை அதிகாரத்தின் சில குறள்கள் அப்படியே ஒன்றாக ஒத்துப்போகிறது மனுவுடன்

 

     அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை

     இகழ்வார்ப் பொறுத்தல் தலை” (பொறை உடைமை -1)

 

     துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார் வாய்

     இன்னாச்சொல் நோற்கிற்பவர்

 

கெட்டவர்களின் கொடுஞ்சொற்களை பொறுப்பவர் துறவிகளை போன்று பரிசுத்தமானவர்கள் ஆவார்கள்

 

 

     உண்ணாட்டு நோற்பார் பெரியர், பிரற்சொல்லும்

     இன்னாச்சொல் நோற்பாரின் பின்”. (பொறை உடைமை -10)

 

பசியை பொறுக்கும் தவசிகளைவிட பிறர் பேசும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர் பெரியவர்.

   

   

    திருக்குறளில் ஸந்தியாவந்தன மந்திரம்

  

    காலை மதியம் மாலை சூரிய உதயம் சூரியன் உச்சியில் சூரியன் மறையும் வேளை என்று மூன்று வேளைகளிலும் செய்யப்படவேண்டியது ஸந்தியாவந்தனம். இது பிராமணர்களுக்கு மட்டும் உள்ளதல்ல.

 

    .பஞ்ச பூதங்களான நீர் , நிலம்(பூமி) , காற்று (வாயு), அக்னி,  , ஆகாயம் இதில்தான் மனித வாழ்க்கை துவங்கி, ஓடி, முடிகிறது. 

 திருக்குறள் இரண்டாம் அதிகாரம் வான்சிறப்பு
, கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பை வைத்துள்ளார் வள்ளுவர்

 

    மழையின் முக்கியத்துவத்தை பத்து குறள் மூலம் சொல்லுகிறார் வள்ளுவர். மழைதான் இவ்வுலுலகத்துக்கு உணவு, உணவை உண்டாக்குவதும் உணவாக இருப்பதும் , மழை இல்லையேல் இவ்வுலகை பசி நோய் துன்புறுத்தும், மழை பெய்யாவிட்டால் உழவுத்தொழில் நடைபெறாது, மழை பெய்யாவிட்டால் கெடுதல் , கெட்டவர்கள் உயர மழைதான் உதவும், மழை இல்லாவிட்டால் புல் கூட வளராது, மழை பெய்யாவிட்டால் கடல் வளம் குறையும், கடவுளுக்கான பூஜை ,தவம், தானம் நடைபெறாது , மழை இல்லையேல் ஒழுக்கமே குறையும்.

  

    சுருக்கமாக நீர் இன்று அமையாது உலகு அதாவது நீர் இல்லாவிட்டால் உலகம் இயங்காது என்கிறார் வான் சிறப்பின் பத்தாவது குறளில் வள்ளுவர் , நீருக்கான யுத்தமே மூன்றாவது உலக யுத்தமாக இருக்கும் என்றார் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ அப்துல் கலாம்.

     ஸந்தியாவந்தன மந்திர கருத்துக்கள் நீர் இன்றி அமையாது உலகு என்பதை விளக்குவதுடன் வான்சிறப்பு அதிகாரத்தில் சொல்லியுள்ள கருத்துக்களைச் சொல்லுகிறது. 

 ஹே ஆப: மயோபுவ: ஸ்தா ஹி:தா:ந:மஹேரணாய என்னும் சந்தியாவந்தன மந்திரம் தண்ணீரே (ஜலங்களே!) நீங்கள் சுகத்துக்கு காரணமாக ஆகிறீர்கள் அல்லவா, அந்த நீங்கள் எங்களுக்கு பெரிதாயும் அழகாயும் இருக்கிற இந்திரியங்களுக்காக (புலங்களுக்காக) உணவை (அன்னத்தை) கொடுங்கள். நீங்களே எங்களுக்குத் தாய் எங்களுக்கு பிறப்பை கொடுப்பது நீங்கள்தான்.

     ஜிஷ்ணோ அச்வஸ்ய வாஜிந: ததி க்ராவிண்ண அகாரிஷம் ந: என்னும் மந்திரம் ஓ தண்ணீரே! (ஜலங்களே!) நீங்கள்தான் எங்களுக்கு சுகத்தினை அளிக்கிறீர்கள் காரணமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு அதிகமாகவும் நல்லதாகவும் உள்ள உணவை (அன்னத்தினை) கொடுங்கள். அன்னத்தினை கொடுப்பதால் தண்ணீரே நீங்கள் எங்களுக்குத் தாய் (மாதர இல) எங்களுக்கு உயிர் கொடுப்பது நீங்கள்தான் (எங்களை பிறந்தவர்களாக செய்யுங்கள் (ஹே ஆப ந: ஜனயதா)

     நாஸ்திகனோ ஆஸ்திகனோ நீரின் தேவையின்றி இருக்க முடியாது. தண்ணீரை குறித்த இந்த ஸந்த்தியாவந்தன மந்திரம் ஸநாதனத்தின் குரல் என்றால் திருக்குறளின் குரளும் ஸநாதனக் குரலே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard