New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)

Guru

Status: Offline
Posts: 24800
Date:
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
Permalink  
 
ஆதி பகவன் முதற்றே உலகு, இறைவனிடம் இவ்வுலகம் தொடங்குகிறது, என முழுமுதற் கடவுளை வாழ்த்தியபடி தான் குறள் அமைந்துள்ளது.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் ௰)

இறைவனுடைய திருவடிகளைப் பற்றி இணைந்தவர் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
பிறவிப் பெருங் கடல் என்பது மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் வாழ்க்கையை குறிப்பது என்ற தமிழர் மரபினை, ஏற்க பல அன்னிய மதவாத நுகர்ச்சி வழியின் தாக்கத்தால் சிலர் மறுக்கின்றனர்.

திருக்குறளை வள்ளுவர் மனம் அறிந்து வள்ளுவர் உள்ளத்தின் நோக்கில் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை
மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)
மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
உயிர்கள் சாவதும் பிறப்பதும் தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள்
உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக்கொண்டே இருப்பதில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன.

மனிதன் பூவுலகில் உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் அமைவது போல உயிருக்கு (ஆத்மாவிற்கு) சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

நிலையாமை அதிகாரம் துறவரவியலில் உள்ளது எனப் பார்த்தால், வள்ளுவர் பாயிரம் (முகவுரை) நான்காம் அதிகாரமாய் அறன் வலியுறுத்தலே நூலின் அடிப்படை என உள்ள அதிகாரப் பாடல்கள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38)
பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.  இது வீடு தருமென்றது.

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:36)
பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.  இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். குறள் 1315: புலவி நுணுக்கம்.
மணக்குடவர் உரை: இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
மு. வரதராசன் உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. குறள் 904:பெண்வழிச்சேறல்
மணக்குடவர் உரை:மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.
மு. வரதராசன் உரை: மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்கு அஞ்சுபவன் மறுமை இழந்தவன்', 'தன் மனைவியை அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவன்', 'மனைவிக்கு அஞ்சி அடங்குகின்ற மறுமைப் பயனும் இல்லாதவன்', 'மனையாளை அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாதான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனையாளை அஞ்சி நடக்கின்ற புகழ் இல்லாதான் என்பது இப்பகுதியின் பொருள்.

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
 இறைவன் வணக்கம் என்பதை திருவடி பற்றி கொள்வது என்றும், இறைவனை வணங்காத தலை (மனித பிறவி) பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல உணர்வில்லாதவை என்கிறார். உலகைப் படைத்த இறைவனை முழுமையாய் உணர்ந்து பற்றிக் கொள்வதே கல்வியின் பயன், திருவடி கொண்டால் மட்டுமே என மிகத் தெளிவாய் இறை வணக்கத்தை வலியுறுத்துகிறார்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.          (குறள்-9 )
கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.        (குறள்-8 )
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (குறள்-7 )
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.      (குறள்-6)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.(குறள்-2) 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்(குறள்-10)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. குறள் 377: ஊழ்.
மணக்குடவர் உரை:விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
சாலமன் பாப்பையா உரை: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் 350: துறவு
மணக்குடவர் உரை:பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். குறள் 1062:இரவச்சம்.
மணக்குடவர் உரை:துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.
மு. வரதராசன் உரை: உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக!

-- Edited by Admin on Thursday 18th of June 2020 07:16:20 PM

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
பண்டைத் தமிழ் மக்களுக்கு நீதி நூல்களைக் கற்று அதன் வழி அறத்தோடு வாழ்ந்து, இறைவனை அடையும் பணியில் ஈடுபட்டு, மக்களுக்கும் அரசனிற்கும் அற வழிகாட்டியாக தொடர்ந்து வரும் அறிவு/அறக் குடியாக தொடர்பவர்கள் தமிழின் மூத்த தொல்குடியான பார்ப்பனர்/அந்தணர் என்பதை சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் இரட்டைக் காப்பியங்கள் எனும் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களில் கூறுகிறது.

முப்பாலும் - சங்க இலக்கியமும்
பத்துப் பாட்டு & எட்டுத்தொகை நூல்கள் வெகு ஜன இலக்கியமாக காதல்- வீரத்தை மையப்படுத்தி அகம்-புறம் என இஅய்ற்றப்பட்டன.
திருக்குறள் தத்துவ (மெய்யியல்) ஞான மரபில் தர்ம-அர்த்த-காம என முப்பால் அக்க இயற்றப்பட்டது. திரிவர்க்கம் எனும் இந்த அமைப்பு நாற்பால் ஆக வீடு எனத் தனியாக ஆகுமுன் எழுந்தது ஆகும்.
பிறவிப் பெருங்கடல் கடக்கும் வீடுபேறு அடைவதே கற்று ஈண்டு மெய்பொருள் காண்பதன் அடிப்படை என வள்ளுவம் வலியுறுத்துகிறது.

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் எனத் தெளிவாய் காட்டுகின்றனர்

இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
என்று மணக்குடவர் விளக்குகிறார்.
அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்:
உலகத்து மக்கட்கு உறுதி பயத்தல் காரணமாகப் பல வகைப்பட்ட சமய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துரைத்த அறம் பொருள் இன்பம் வீடு நான்கினையும் அருங்கினமுகத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் வீடாவது அறஞ்செய்தாரது பயனாதலின் அவ்வீடு பேற்றை அறத்தினுள் அடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றார்.
பரிமேலழகர்
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.
தேவாரம் ஞானசம்பந்தர்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே - 575/3,4
தேவாரம் அப்பர்
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு
அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் - 2747/3

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் - நாலாயி:2716/1
ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64
அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64
ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர் = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு

தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, நாம் இங்கே பிறந்து பிறந்து இறக்கிறோம்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு - குறள் 349

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10 -கடவுள் வாழ்த்து

மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
வீடுபேறு எனும் மோக்ஷம், பிறவியில்லா நிலையை அடைதலே திருக்குறளின் அடிப்படை.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

மனித வாழ்க்கையின் உறுதிப் பொருட்களை 'திரிவர்க்கம்' என தர்ம-அர்த்த-காம என்றே இந்திய ஞான மரபு பிரித்தது; வாழ்வில் குடும்ப வாழ்வில் இன்பம் அனுபவிக்க பொருள் ஈட்ட (அறத்தோடு)வேண்டும்.
மனித உயிர் நிலையானது, குறள்- 339 தூங்குவது போல மரணம்; தூங்கி எழுந்திருப்பது போலே பிறப்பு.
குறள்-121இந்தப் பிறவியில் அறம் (புண்ணியம்) செய்தால் சொர்கம் (அமரருள்) பாவம் செய்தால் நீங்கா இருள் கொண்ட நரகம். இதையே குறள் 50ம் வாழ்வாங்கு வாழ்ந்தவன் தேவர்கள் வாழும் வானுலகம் செல்வான் என்கிறது. நடுகற்களில் பொதுநலனிற்கு உயிர் தந்தவர் சிவலோகம் செல்லும் 3 நிலை நடுகற்களில் காணலாம்.
மனிதன் வினைப்பயன் முடிய சொர்க/ நரக வாழ்வு பின்னர் மீண்டும் பிறந்து- இறந்து மீண்டும் எனத் தொடர்வதால் பிறவிப் பெருங்கடல். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை.
சனாதன தர்மம் என்றான நிலையான இந்த உயிர் வீடுபேறு பெற- மற்று ஈண்டு பிறவாமல் இருக்க (குறள்-356)கடைபிடிக்க வேண்டிய அறங்கள்.
திரிவர்க்கம் - நான்கு எனத் தனியாக மோட்சம் தனி பாலாக வைத்து எழுதும் வழக்கம் மிகப் பிற்காலத்தது

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து.
மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவி பெருங்கடலை இந்த உலகைப் படைத்த கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்த மாட்டார்.

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள்346 :துறவு )
'நான்', 'என்னுடையது' என்னும் இந்த பிறப்பின் செருக்கு ஒழிப்பவன் தேவர்கள் வாழும் வானுலகை காட்டிலும் மேலாகிய உலகத்தை அடைவான் என்பது இக்குறட்கருத்து.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்.
மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறன் வலியுடைத்தென்று

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். காஞ்சித் திணை அகத்திணையாகிய பெருந்திணைக்குப் புறத்திணையாகும். மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் நிலையில் இருந்து சிறப்பு என்பது மீண்டும் பிறப்பு இல்லாத முக்தி எனும் வீடு தானெ என நச்சினார்க்
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (புறத்திணையில்,18)
கஅ (அ) பாங்கருஞ் சிறப்பிற் பல்லாந் நானு: நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) பாங்கருஞ் சிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும்-அறம்பொருள் இன்ப டாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக் கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்துக் காஞ்சி என்றவாறு."
எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்குதுணை.
உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட் பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்
1. பாங்கு அருஞ்சிறப்பு-தனக்கு ஒப்பில்லாத விட்டின்பம் பாங்கு-ஒப்பு" அருமை-இன் மை. ஒருவர் பெறு தற்குரிய பேறுகள் எல்லாவற்றினும் வீட்டின் வம் சிறந்தமையால் சிறப்பு என் தும் பெயர்த்தாயிற்று. சிறப்பின் எ ன் புழி இன்னுருபு ஏதுப்பொருளிற் பயின்றது.
பல் ஆற்றானும் நில்லா உலகம்-உயிர், யாக்கை, இளமை, செல்வம் முதலிய பல வழிகளாலும் நிலைபேறில்லாத உலகம். இதனாற் காணப்படும் இவ்வுலகினது நில்லா இயல்பினைத் தொல்காப்பியனார் புலப்படுத்தினமை காணலாம். புல்லு தல்-பொருந்துதல்.
றத்திணையியல் நூற்பா கஅ 色历上五、
மையிற் பல்லாற்றானுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங் காற் கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்றார். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றானு மென்றதனாற் சில்லாற்றானும் வீடேது வாகலின்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாதலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப் பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்.
உதாரணம் :மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக வியங்கிய விருசுடர் கண்னெனப் பெரிய வளியிடை வழங்கா வழக் கருநீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாசத்துப் பொன்னத் திகிரி முன்சமத் துருட்டிப் 'பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் விலை நலப் பெண்டிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா னிைலமக எழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே '
(புறம்-சுடு) இதனுள் உண்டென உரைப்பரால் உணர்ந்தோ ரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார் நில்லா உலகம் புல்லிய தாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பலவேறு நிலை யாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம்.
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
- தொல். பொருள். கற்பியல் (சூத்திரம் 51)

ஒருவனுக்கு கல்வி எதற்கு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், ஆகிய பயன் என்ன?
மனிதன் நல்லகாரியங்கள் மரங்கள் எதற்காக செய்வது
தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. குறள் 353: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை:மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.
மெய்மையை ஏற்காதவர்கள் புலன் அடக்கத்தினாலும் பயனில்லை
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354: மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
வள்ளுவர் தன் ஆயிரத்தில் அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தின் முதல் குறளக தெளிவாக உரைப்பது
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்.
மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.
திருக்குறள் இயற்றி அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் எழுதிய மணக்குடவர் உரை சிறப்பு என்பதற்கு மோக்ஷம் என்ற பொருளை எடுத்துக் கொண்டுள்ளார் ஆனால் தமிழ் மரபை ஏற்காது புகழ் என்ற ஒரு பொருளை வரவழைத்துக் கொள்கின்றனர் . இது தமிழ் மரபின்படி சரியா என்பதை காண்போம்.
தொல்காப்பியம் காஞ்சித்திணை பற்றி கூறுகையில் மனித வாழ்வின் நிலையாமையை சுட்டிக்காட்டி
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (புறத்திணையில்,18)
பாங்கருஞ் சிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும்-அறம்பொருள் இன்ப டாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக் கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்துக் காஞ்சி என்றவாறு."
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
- தொல். பொருள். கற்பியல் (சூத்திரம் 51)
சிறந்தது பயிற்றல் என்பது – இல்லறத்தின் வாயிலாக, நிலையாதவற்றைத் துறத்தல் என்பது பொருளாகும்.
திருக்குறள் முப்பால் என அறம் பொருள் இன்பம் என்ற மெய்யியல் மரபில் எழுந்தாலும் அதில் வீடு எனும் பேரின்பம் கூறப்படவில்லை என்பது என்போர் பார்வைக்கு இந்த குறளை வைக்கிறோம்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். குறள் 173: வெஃகாமை.
மணக்குடவர் உரை: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அறம், பொருள், இன்பம் - மூன்றோடு உயிர் அச்சம் - மனிதப்பிறவியின் காலம் என்பது உறங்கி விழித்தல் போலே என கூறிய வள்ளுவர் இங்கு உயிர் அச்சம் என்பது உறுதிப் பொருளான வீடுபேறை அடைய அறவழியையே கூறுவார்

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் என மணக்குடவர் தெளிவாய் காட்டுவார்.

மணக்குடவர் உரை: புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
வள்ளுவர் பார்வையில் பிறப்பு

ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. குறள் 357. மெய்யுணர்தல்
ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால்,
அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
மீண்டும் பிறப்பு இல்லாத வீடு நிலை அடைவதே வள்ளுவம்
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361. அவாவறுத்தல்
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362. அவாவறுத்தல்
பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:
இளமையில் உள்ளவர் பின்னர் அறத்தைச் செய்யலாம் என்றிடாமல் உடனே அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்திலும் அழியாத் துணையாகும்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. குறள் 358. மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறப்பு எனும் அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்.
ஒருபோதும் தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே எப்போதும் மாறாதிருக்கும் (மீண்டும் பிறப்பு இல்லாத பேரா இயற்கை பேரின்ப) வாழ்வைத் தரும்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. குறள் 122: அடக்கமுடைமை.
மணக்குடவர் உரை:ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
மு. வரதராசன் உரை: அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. குறள் 231: புகழ்.
மணக்குடவர் உரை: புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.
மு. வரதராசன் உரை: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. குறள் 244: அருளுடைமை.
மணக்குடவர் உரை: நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.
பரிமேலழகர் உரை: மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.).
மு. வரதராசன் உரை :தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
மு. கருணாநிதி உரை: எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை: நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
Translation: Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel.
Explanation: (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.

ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357. மெய்யுணர்தல்
ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. 358. மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறப்பு எனும் அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து. 361. அவாவறுத்தல்
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அறம், பொருள், இன்பம் - மூன்றோடு உயிர் அச்சம் எனச் சொல்லும் வள்ளுவரே - இந்த உயிரின் காலம் என்பதை
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
உயிர் அச்சம் என்பது உறுதிப் பொருளான வீடுபேறை அடைய அறவழியையே கூறுவார்

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
உடம்பு என்பது வெறும் எலும்பு தோல் போர்த்தியது, அது வெறும் மனிதனின் ஆன்மா உயிர் தங்கும் கூடு தான், இதில் மனித வாழ்க்கை எனும் பிறப்பு, நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதே இயல்பு.
உறஙுவது போலே இறப்பு, உறங்கி விழித்தல் போலே பிறப்பு, அதாவது பல லட்சம் ஆண்டு உள்ள உலகில் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.
அந்தப் பிறவிக் கடலை கடப்பதே மனித அறவாழ்வின் அடிப்படை
பொருள் அல்லாத வற்றை பொருள் எனக் கொண்டு, மீண்டும் மீண்டும் பிறக்கும் பேதைமை நீங்கிட இறைவன் திருவடி பற்றி பிறவா நிலை அடைதலே வள்ளுவம் காட்டும் வழி
திருக்குறளிற்கு உரை தேடுபவர்கள் தமிழரின் பண்பாடு - பழமை சிறப்பை மறுக்கும் திராவிஷ நாசியர் உரைகளை குப்பை என ஒதுக்கி பல ஆண்டுகள் ஆயிற்று
வள்ளுவர் சொன்னதை விட்டு சொல்லாத வார்த்தைகளை சேர்த்து நீங்களாக கொள்ளும் பொருள் வள்ளுவர் கூறுவது இல்லை. வள்ளுவர் கூறியதை தான் என் முன்னோரும் இன்றும் மெய்ப் பொருள் தேடும் அறிஞர்கள் ஏற்பர்
பிறவிப் பெருங்கடல் கடப்பதே மனிதனின் அறச் செயல்களின் எல்லை என்பதே வள்ளுவம்
சாதாரணமாக அறம் செய்தால் வானுலகம் கிடைக்கும் பாவம் செய்தால் பாதாளம் நரகம் கிட்டும், வினை முடிந்த பின் மீண்டும் பிறப்பு.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை:இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
வள்ளுவரின் உள்ளத்தை பாராமல், தமிழர் பண்பாட்டோடு பார்க்காமல் தன்னிச்சையாய் என்னவேணுமானாலும் நீங்கள் பொருள் கொள்ளலாம், வள்ளுவர் உள்ளம் என்ன என்பதே முக்கியம்

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் -10)
மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.
மனிதன் இவ்வுலகில் ஒரு பிறவியில் வாழும் காலம் என்பதை வள்ளுவர் மிகத் தெளிவாக
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை
மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)
மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
உயிர்கள் சாவதும் பிறப்பதும் தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள்
உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக் கொண்டே இருப்பதில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன.
மு. வரதராசன் உரை:இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா:உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (அறன் வலியுறுத்தல்:38)
பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (அறன் வலியுறுத்தல் :36)
பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.
இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
மு. வரதராசன் உரை: இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:31)
பொழிப்பு (மு வரதராசன்): அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.
இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:247)
பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
மணக்குடவர் உரை: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.
இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (அதிகாரம்:துறவு குறள் எண்:346)
பொழிப்பு (மு வரதராசன்): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான் நணியது உடைத்து. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:353
பொழிப்பு (மு வரதராசன்): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
மணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து.
துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:361)
பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர்.
இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. குறள் 34: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
மணக்குடவர் உரை: வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும்.
இது பிறவாமையும் இதனாலே வருமென்றது
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. குறள் 24: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை
மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, நாம் இங்கே பிறந்து பிறந்து இறக்கிறோம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10 -கடவுள் வாழ்த்து
மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
வீடுபேறு எனும் மோக்ஷம், பிறவியில்லா நிலையை அடைதலே திருக்குறளின் அடிப்படை.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. குறள் 24: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
357. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. மெய்யுணர்தல்
ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.
மு. வரதராசன் உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மு. வரதராசன் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
மணக்குடவர் உரை: பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340: நிலையாமை.
மணக்குடவர் உரை:தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். குறள் 346:
மு. வரதராசன் உரை:உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
மணக்குடவர் உரை:யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. தெரிந்துவினையாடல். குறள் 513
மணக்குடவர் உரை:அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான்மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
ஐயுணர்வுஎய்தியக்கண்ணும்பயமின்றே
மெய்யுணர்வுஇல்லாதவர்க்கு. குறள் 354:
மணக்குடவர்:மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்த விடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.
மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை.
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. துறவு:343
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. துறவு:345
மு. வரதராசன் உரை:பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?
மு. கருணாநிதி உரை:பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?
சாலமன் பாப்பையா உரை:இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள் 35: அறன்வலியுறுத்தல்
மணக்குடவர் உரை:மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:360)
பதவுரை: காமம்-பெருவிருப்பம், ஆசை, விழைவு; வெகுளி-வெறுப்பு, சினம்; மயக்கம்-அறியாமை, அறிவு மயக்கம்; இவை-இப்பொருள்கள்; மூன்றன்-மூன்றினுடைய; நாமம்-பெயர்; கெட-அழிய; கெடும்-உளவாகா; நோய்-துன்பம்.
பொழிப்பு (மு வரதராசன்): விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வாராமற் கெடும்.
மணக்குடவர் உரை: ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம்.
வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.
சி இலக்குவனார் உரை: பெரு விருப்பம், வெறுப்பு, மயக்கம் என்று சொல்லப்படும் இவை மூன்றனுடைய தொடர்பு அற்றுப்போவதால் துன்பம் நீங்கும்
தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அறம், பொருள், இன்பம் - மூன்றோடு உயிர் அச்சம் எனச் சொல்லும் வள்ளுவரே - இந்த உயிரின் காலம் என்பதை

இருள்நீங்கிஇன்பம்பயக்கும்மருள்நீங்கி
மாசறுகாட்சியவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல்.மணக்குடவர் உரை:
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது. சாலமன் பாப்பையா உரை:மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். குறள் 349: துறவு.
மணக்குடவர் உரை: ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.
பரிமேலழகர் உரை: பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).
மு. வரதராசன் உரை: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
மு. கருணாநிதி உரை:பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
Translation: When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability.
Explanation: At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் 350: துறவு.
மணக்குடவர் உரை:பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை: பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு. (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
மு. கருணாநிதி உரை:எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.
Translation: Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.
Explanation: Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.

தமிழர் சமயத்தில் வீடுபேறு
திருவள்ளுவர் மனித வாழ்வின் உறுதியான தேவை என்பது மீண்டும் பிறவா நிலையை அடைதல் என்பதை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து.
உலகைப் படைத்த இறைவனுடைய திருவடிகளைப்பற்றிக் கொண்டவர்களால் தான் பிற்ந்து இறந்து பிறந்து எனத் தொடரும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும்; மற்றவர் நீந்த முடியாது.

இம்மை மறுமை வீடு
ஒவ்வோர் உயிர்க்கும் மூன்று வகையான வாழ்க்கை நிலைகள் உள்ளன. ஆகும். அவை இம்மை , மறுமை, பிறப்பறு நிலை என்பன இம்மை என்பது இந்தப் பிறப்பில் உள்ள நிலையைக் குறிக்கும்; ‘“ மறுமை ” என்பது அடுத்து வரும் பிறப்பில் நிகழ இருக்கும் நிலையைக் குறிக்கும்; “ பிறப்பு அறு நிலை ” என்பது பிறவிக்கு வராத பெருநிலையைக் குறிக்கும்-.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும
இம்மையும் இன்பம் தரும் - குறள் 98: இனியவைகூறல்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இந்தப் பிறப்பிம் அறச் செயல்கள் வரும் ம்று பிறப்பிலும் பயன் தரும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. குறள் 459: சிற்றினஞ்சேராமை.
ஒருவனுக்கு மனநலத்தால் அவருக்கு வரும் அடுத்த பிறவிகளிலும் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
மனிதனின் ஒரு பிறப்பிற்கும் மற்றொரு பிறவிக்கும் இடையில் அந்தந்த பிறவிகளின் செய்த வினை அடிப்படையில் சொர்கம் அல்லது நரகம் சொல்வர் என வள்ளுவர் தெளிவாகக் கூறுகிறார்.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 255

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். குறள் 243: அருளுடைமை.

இம்மை இந்த உலக வாழ்வு; மறுமை என்பது இந்த உலக வாழ்வுக்குப் பிறகு அமையும் வாழ்வு. அந்த வாழ்வு சொர்க்க இன்ப வாழ்வாகவும் இருக்கலாம்; நரகத் துன்ப வாழ்வாகவும் இருக்கலாம். அதன்பின் மீண்டும் இங்கே வந்து உயிர் பிறக்கும்; வீடு என்பது மீண்டும் பிறப்பு இறப்புக்களில் அகப் படாமல் என்றும் மாறாமல் உள்ள இன்ப வாழ்வு. இதையே மோட்சமென்றும் முக்தியென்றும் சொல்வார்கள். இவ்வுலகில் நல்வினை செய்தவர்கள் தேவ லோகத்தில் சொர்க்க இன்பம் பெற்று நல்வினைப் பயன் முடிந்தபின் வீடு பெறுவார்கள்.
மீண்டும் மீண்டும் எழும் பிறவிகள்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - (126)
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு "..
எழுமையும் ஏமாப் புடைத்து (398)
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல் (538)
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. குறள் 835:
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

என்று வரும் குறள்களில் ஒரு பிறப்பில் செய்த செயல் (வினைகள்) விளைவு தொடர்ந்து எழும் பிறப்புக்களில் வந்து கூடும் என்ற மெய்யியல் கருத்து இருக்கிறது. பிறவிகளும் அவற்றிற் செய்த வினைப்பயன்களும் தொடர்ந்து வரும் என்னும் மெய்யியல் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை இந்தக் குறள்கள்

குறுகிய மனித வாழ்க்கை
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு - குறள் 349: நிலையாமை
அன்றாடம் உறங்குவது போல தான் இந்த உலகில் மனிதன் இறப்பது; இரவு தூங்கி மறுநாள் விழிப்பது போல் தான் வாழ்க்கை இந்த பிரபஞ்சம் என்பது பல கோடி ஆண்டுகள் இதில் மனிதப்பிறவி மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு வாழும் பெரிய கடல் என்பதை மிக எளிமையாக வள்ளுவர் காட்டியுள்ளார்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, கூடு தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
கூட்டில் உள்ளே இருக்கும் காலத்தைவிட பறவை பலகாலம் அதன் உடம்பில் இருக்கும் அது போல இந்தப் பிறவியை தாண்டி மீண்டும் மீண்டும் வேறு உடலை எடுத்து பலகாலம் உயிர் வாழ்கிறது என்பது இதன் பொருள்

வீடுபேறு, பிறவியில்லா நிலையை அடைதலே திருக்குறளின் அடிப்படை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10 -கடவுள் வாழ்த்து
பிறவியாகிய மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து குறள்:24 நீத்தார் பெருமை
திண்மை என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். - குறள் 346 துறவு.
'நான்', 'என்னுடையது' என்னும் இந்த பிறப்பின் செருக்கு ஒழிப்பவன் தேவர்கள் வாழும் வானுலகை காட்டிலும் மேலாகிய உலகத்தை அடைவான்
“வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள்.

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
மனிதன் அறிவு எதற்காக?
இந்த உலகியல் மெய்மையை பிறப்பு எனும் அறியாமைலிருந்து வெளியேறவே என மிகத் தெளிவாக உரைக்கிறார்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:
மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
ஒருவனுக்கு கல்வி எதற்கு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், ஆகிய பயன் என்ன?
மனிதன் நல்லகாரியங்கள் மரங்கள் எதற்காக செய்வது
தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356. மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. குறள் 353: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை:மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.
மெய்மையை ஏற்காதவர்கள் புலன் அடக்கத்தினாலும் பயனில்லை
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354: மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
வள்ளுவர் தன் ஆயிரத்தில் அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தின் முதல் குறளக தெளிவாக உரைப்பது
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்.
மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.
திருக்குறள் இயற்றி அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் எழுதிய மணக்குடவர் உரை சிறப்பு என்பதற்கு மோக்ஷம் என்ற பொருளை எடுத்துக் கொண்டுள்ளார் ஆனால் தமிழ் மரபை ஏற்காது புகழ் என்ற ஒரு பொருளை வரவழைத்துக் கொள்கின்றனர் . இது தமிழ் மரபின்படி சரியா என்பதை காண்போம்.
தொல்காப்பியம் காஞ்சித்திணை பற்றி கூறுகையில் மனித வாழ்வின் நிலையாமையை சுட்டிக்காட்டி
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (புறத்திணையில்,18)
பாங்கருஞ் சிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும்-அறம்பொருள் இன்ப டாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக் கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்துக் காஞ்சி என்றவாறு."
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
- தொல். பொருள். கற்பியல் (சூத்திரம் 51)
சிறந்தது பயிற்றல் என்பது – இல்லறத்தின் வாயிலாக, நிலையாதவற்றைத் துறத்தல் என்பது பொருளாகும்.
திருக்குறள் முப்பால் என அறம் பொருள் இன்பம் என்ற மெய்யியல் மரபில் எழுந்தாலும் அதில் வீடு எனும் பேரின்பம் கூறப்படவில்லை என்பது என்போர் பார்வைக்கு இந்த குறளை வைக்கிறோம்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். குறள் 173: வெஃகாமை.
மணக்குடவர் உரை: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அறம், பொருள், இன்பம் - மூன்றோடு உயிர் அச்சம் - மனிதப்பிறவியின் காலம் என்பது உறங்கி விழித்தல் போலே என கூறிய வள்ளுவர் இங்கு உயிர் அச்சம் என்பது உறுதிப் பொருளான வீடுபேறை அடைய அறவழியையே கூறுவார்

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. குறள் 513: தெரிந்துவினையாடல்.
ஒரு செயலை செய்ய அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா(தவறு செய்யத் தூண்டி மீண்டும் பிறப்பைத் தரும்) இல்லாமை ஆகிய இந்ர்க நான்கு பண்புகளையும் உடையவனையே தேர்வு செய்வதே நலம்.

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் என மணக்குடவர் தெளிவாய் காட்டுவார்.

மணக்குடவர் உரை: புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...

அறம் பொருள் இன்பம் வீடு ஔவையார் விளக்கம்
அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64

ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்;தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்.எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர் = காதலர் இருவர்; கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்); ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்; பரனை நினைந்து = இறைவனை நினைத்து’ இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து); விட்டதே பேரின்ப வீடு. - விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
வள்ளுவர் பார்வையில் பிறப்பு
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. குறள் 357. மெய்யுணர்தல்
ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால்,
அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
மீண்டும் பிறப்பு இல்லாத வீடு நிலை அடைவதே வள்ளுவம்
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361. அவாவறுத்தல்
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362. அவாவறுத்தல்
பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:
இளமையில் உள்ளவர் பின்னர் அறத்தைச் செய்யலாம் என்றிடாமல் உடனே அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்திலும் அழியாத் துணையாகும்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. குறள் 358. மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறப்பு எனும் அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்.
ஒருபோதும் தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே எப்போதும் மாறாதிருக்கும் (மீண்டும் பிறப்பு இல்லாத பேரா இயற்கை பேரின்ப) வாழ்வைத் தரும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. குறள் 37: அறன்வலியுறுத்தல்.
நீதி நூல்கள் காட்டும் அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை.பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் முற்பிறவியில் செய்த புண்ணிய பயனை அறியலாம்.

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். குறள் 330: கொல்லாமை.
நிறைய நோய் உடம்புடனும், வறுமையால், இழிந்த வாழ்க்கையை வாழ்பவர்கள், முற்பிறப்பில் பல உயிர்களை கொலை செய்தவர் என்று அறநூல் வழி சான்றோர் கூறுவர்.

" எல்லாப் பொருளினும் சிறந்தது ஆகலின், “வீடு சிறப்பு

எனப்பட்டது '' என்று பரிமேலழகர் கூறியிருப்பது இங்குக் கருத்தில் கொள்ளத் தக்கது.

வீடுபேற்றைச் * சிறப்பு' எனவும், ' சிறந்தது' எனவும் தொல்காப்பியரும் வழங்கியுள்ளார் என்பது நச்சினார்க்கினியர் கருத்து ஆகும். இதனை,

"காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கரும் சிறப்பில் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே '

என்னும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - சூத்திரம் 76 கூறு கிறது. இதில் வரும் “பாங்கரும் சிறப்பு ” என்னும் தொடருக்குத் “தனக்குத் துணை இல்லாத வீட்டு இன்பம் ” என்று நச்சினார்க் கினயர் பொருள் கூறுகிறார்.

* அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
என்னும் தொல்காப்பியம் - பொருள் அதிகாரம் - சூத்திரம் 190-ல் வரும் பகுதிக்கு, நச்சினார்க்கினியர், "அறம் பொருள் இன்பத்தில் சிறந்த வீட்டின்பம் பெறுவதற்கு" என்று பொருள் கூறியிருக்கிறார். இதிலிருந்து, திருக்குறளில் இடம்பெறும் சிறப்பு என்னும் சொல், குறள் எண், 31-லும், 358-லும் “வீடுபேறு” என்னும் பொருளையே குறிக்கிறது என்பது பெறப்படும். படவே, திரு வள்ளுவர் தமது நூலில் சமயக் கருத்தைக் குறித்துப் பேசவில்லை என்று கூறுவது போலி உரை என்பது பெறப்படும்.

மெய்யியல் ஞானமரபில் மனித வாழ்க்கையை இம்மை மறுமை வீடு என மூன்று நிலைகளாக காட்டுவர்.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். குறள் 1315: புலவி நுணுக்கம்.
இப்பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்றிட காதலி இனிவரும் பிறவியில் பிரிவோமா என நினைத்து கண் நிறைய கண்ணீர் வடித்தாள்.
மனிதன் இவ்வாறு அடுத்து அடுத்து மீண்டும் பிறந்து வாழ்கிறான் என வள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. குறள் 1: கடவுள் வாழ்த்து.
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என்கணவனை
யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை : 49)
இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவன் நான்தான் உன் மனைவி
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் - இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டு மின்றி ஓர் செம்மையில் நிற்பதும் செப்பு
மின்நீயிர் - இம்மை யின்பமும் மறுமை யின்பமுமாய இரண்டு மின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தூயதாய் அழிவில்லாது நிற்கும் இன்பமுமாகிய பொருள்களை நீவிர் கூறுமின்,
, சிலப்பதிகாரம் 11. காடுகாண் காதை
பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. . (58)
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413)
செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’
நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்ருது புத்தேள் உலகு (234) என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. குறள் 247: அருளுடைமை
மணக்குடவர் உரை: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் - இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டு மின்றி ஓர் செம்மையில் நிற்பதும் செப்பு
மின்நீயிர் - இம்மை யின்பமும் மறுமை யின்பமுமாய இரண்டு மின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தூயதாய் அழிவில்லாது நிற்கும் இன்பமுமாகிய பொருள்களை நீவிர் கூறுமின்,
, சிலப்பதிகாரம் 11. காடுகாண் காதை

1.நமக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு.
2.நமக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.
3.நமக்கும் நம் உடம்புக்கும் உள்ள தொடர்பு.
4.நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு.
இதை அறிந்தாலை பக்குவ நிலை அடையலாம்...

பாலில் துளி தயிர் விட்டால் பால் தயிராகிறது. பூமி சுழல்வதால் புவி ஈர்ப்பு விசை உண்டாகிறது. நீரும் வளி மண்டலமும் உயிரினங்களும் பிறவும் பூமியின் மேல் மேவியிருக்கின்றன. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் பகலென்றும் இரவென்றும் உண்டாயிற்று. நிலவு சுழன்று தனக்கென ஒரு ஆகர்ஷணத்தை ஏற்படுத்திக் கொண்டு பூமியின் மேல் மோதாமல் இருக்கிறது. அதன் ஈர்ப்பால் கடல் உப்பித் தணிகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருவதால் பூமியில் இருக்கும் நமக்குப் பருவ நிலைகள் மாறுகின்றன. Cause and Effect! காரணமும் காரியமும்! ஒரு காரணத்தால் ஒரு காரியம், ஒரு விளைவு உண்டாகிறது. இது இயற்கை நியதி. இந்த நியதியை மாற்ற நம் யாராலும் முடியாது. இந்த நியதி எப்போது ஏற்பட்டது? இது ஏற்பட்டது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டுமே! அந்தக் காரணத்தைக் கடவுள் என்று நம்புவோர் உண்டு. அந்த இடத்துக்குப் போக விரும்பாதவரும் உண்டு. எது எப்படியோ, காரணத்துக்குக் காரியம் என்ற இயற்கையின் இயல்பை மாற்றவே முடியாத ஒரு கூட்டுக்குள் நாம் இருக்கிறோம் என்பதை நாம் யாருமே மறுக்கமுடியாது. தீ எப்போதுமே சுடும். நான் சுடாது என்று சொன்னால் அதன் இயல்பு மாறிவிடப் போவதில்லை. (தவவலிமை உள்ளோர் அதையும் செய்திருக்கிறார்கள். செய்யும் தவத்துக்கும் விளைவு இருக்குமே!)
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
என்ற வள்ளுவன் வாக்கு இந்த Cause and Effect, அதாவது ‘காரணம்-விளைவு’ நியதியைத் தான் சுட்டுகிறது. இந்த நியதி இந்த சூரிய குடும்பமும் அதைத் தாண்டிய அண்டப் பெருவெளியும் தோன்றிய காலம் தொட்டு இருக்கும் ஒன்று. சுருங்கச் சொன்னால், இந்த நியதி எப்போதுமே இருப்பது. நான் ஒரு நூறு பேரைச் சேர்த்துக் கொண்டு என்னை வணங்காதவர்களை வெட்டிப் போடுங்கள், என்று சும்மா சொல்லி இந்த நியதியை காலத்துக்கும் மாற்ற முடியாது. நம் எல்லாரையும் விட இந்த நியதி பெரியது. இந்த தர்மம் எப்போதுமே இருப்பது. இந்த தர்மத்தைப் புரிந்து கொண்டால்
'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்'
என்ற குறட்பாவின் பொருளும் விளங்கும். Cause and Effect, அவ்வளவே! இந்த நியதி, இந்த தர்மம் தான் எப்போதும் இருக்கும் தர்மம். எப்போதும் இருக்கும் தர்மத்துக்கு சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு, ‘சனாதன தர்மம்’. நாம் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நாம் சிறைபட்டிருக்கும் இந்த வாழ்க்கைக்கான நெறியாக இருப்பது இந்த தர்மமே. பாரத மண்ணில் தோன்றிய இந்து, புத்த, ஜைன, சீக்கிய மதங்கள் இந்த நெறியைப் புரிந்து கொண்டவை.
-- ஷோபனா ரவி

திருக்குறளின் அடிப்படை கல்வி - மெய்மை ஏற்கும் அறிவு ஆகும்.

கற்றதனால்

நாம் பெருத்த முயற்சியில் கல்வி கற்று இந்த உலகம் படைத்த பரம்பொருள் பற்றிய - மெய் அறிவைக் காண்பதே இந்த உலகில் நாம் மீண்டும் பிறந்து வாழ வேண்டியதைத் தடுக்கவே.

கற்று ஈண்டு

திருக்குறளில்

படைப்புக் கொள்கை,
முற்பிறவி,
மறுபிறவி,
பாவமன்னிப்பு,
அதிர்ஷ்டம்,
முக்தி,
கைத்தொழல்,
மண்டியிடல்,
மன்றாடல்,
வேண்டிக் கொள்தல்,
வரம் பெறுதல்,
சரணடைதல் என்பனவாகிய சமயக் கருத்துகள் எதுவும் காணப் பெறாமை ஈண்டு நினைவு கூறல் வேண்டும்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. குறள் 9:
எண் குணங்களுக்கு உறைவிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், பயன் இல்லாதவையே.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல்.
இவ்வுலகின் மெய்மையை உணர்ந்து ஏற்காதவர்களுக்கு தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் எந்தப் பயனும் இல்லை.

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
1

339:உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி 

விழிப்பது போலும் பிறப்பு.                                                                                மரணம் எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றதுபிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

2

38:வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 

வாழ்நாள் வழியடைக்கும் கல்.                                                                  வீணாகும் நாளே இல்லை என எல்லா நாளும் ஒருவன் செய்வான் ஆயின்அது அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

3

358:பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் 

செம்பொருள் காண்பது அறிவு.                                         பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

4

356:கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 

மற்றீண்டு வாரா நெறி.                              

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.

5

361:அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.      

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற  மீண்டும்  மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து ஆசை.

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
6

362   வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது                                                         வேண்டாமை வேண்ட வரும்.    ஒருவன் ஒன்றை விரும்புவதனால் மீண்டும்  மீண்டும் பிறக்கும்படி இல்லாது பிறவா நிலைமையை விரும்ப வேண்டும்அது  ஆசை அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்

7

370:ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.                                                                                                                                  ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால்அதுவே ஒருவனுக்கு பிறவா நிலையில் வாழும் இயல்பைக் கொடுக்கும்.

8

357:ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.                                                                             ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால்அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

9

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                             குறள் 10 -கடவுள் வாழ்த்து

மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின்  திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமேமற்றவரால் இயலாது.

10

501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.

அறவழியில் உறுதியானவனாகவும்பொருள் வகையில் நாணயமானவனாகவும்இன்பம் தேடி மயங்காதவனாகவும்தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

__________________

Guru

Status: Offline
Posts: 24800
Date:
Permalink  
 
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் எனத் தெளிவாய் காட்டுகின்றனர்
 
 இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
என்று மணக்குடவர் விளக்குகிறார்.
அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்:
உலகத்து மக்கட்கு உறுதி பயத்தல் காரணமாகப் பல வகைப்பட்ட சமய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துரைத்த அறம் பொருள் இன்பம் வீடு நான்கினையும் அருங்கினமுகத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் வீடாவது அறஞ்செய்தாரது பயனாதலின் அவ்வீடு பேற்றை அறத்தினுள் அடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றார்.
 பரிமேலழகர் 
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.
தேவாரம் ஞானசம்பந்தர்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
  மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே - 575/3,4

                                          தேவாரம் அப்பர்

 அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு
அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் -   2747/3

                                               நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
 மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் - நாலாயி:2716/1
                                               ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64
 அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.
            
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.                        -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64

ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள்  = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர்  = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு  பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு
 
தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.               குறள் 38:  (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, நாம் இங்கே பிறந்து பிறந்து இறக்கிறோம்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு -                          குறள் 349

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                             குறள் 10 -கடவுள் வாழ்த்து

மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின்  திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.
வீடுபேறு எனும் மோக்ஷம், பிறவியில்லா நிலையை அடைதலே திருக்குறளின் அடிப்படை.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.  
356.                       மெய்யுணர்தல்

கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard