New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது - பெரியார்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது - பெரியார்
Permalink  
 


கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது - பெரியார்

// நம் நாட்டிலேயே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்;நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம்,இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே..அந்த சாதிக்குள் கூட சாதி போவதில்லையே? அதிலும் பலசாதிகளாக்குகிறோம்.அவர்களும் மேல்சாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்?

பட்டிக்காட்டு தாசிகள் சாதி பார்த்துதான் புழங்குகிறார்கள்.இதனால் கலப்பு மணத்தால் சாதி போய்விட்டதென்று கூறமுடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்புமணம் செய்துள்ளேன்.தோழர் சாமி சிதம்பரனார்,தோழர் சா.குருசாமி,தோழர் எஸ்.இராமநாதன் முதலியவர்களுக்குத்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறார்கள்.அதனால் சாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் எங்களுக்கு குழந்தைகள் இருந்து அவர்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானால் அப்போது தகராறுதான்.'கலப்புச் சாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு சாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் செய்துகொள்ளுவார்கள்.//

#பெரியார் (22-2-1952 விடுதலை)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது - பெரியார்
Permalink  
 


மலையாளிகளிலே பெரும்பாலும் பார்ப்பானுடைய தேவடியாள் மகன்தான்,அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை,திருட்டுத்தனமல்ல.அவனே பெருமைப்பட்டுக் கொள்வான்- 'நான் யார் தெரியுமா? நான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன் அந்த பிராமணனுக்கு பிறந்தேன்! என்பான்.காசு கொடுத்து போவான்.

இப்போது அவனுக்கும் உணர்ச்சி வந்துவிட்டது எங்களோடு சேர்ந்து பேசுகிறான்.நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறான்.தெலுங்கனும் இருக்கிறான் கன்னடியனும் வருவான்.அப்போதுதான் அடுத்தவன் வரமுடியும்.  #பெரியார் 19/12/1973 டி-நகர் சொற்பொழிவு



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல - ஈவெரா

---------------------------------------------------------------------------------

03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் ஈவெரா உரையாற்றினார்.

என்ன தெரியுமா?

இந்தப் பெண்டாட்டி போனால், இன்னொன்றைத் தேடிக் கொள்ளலாம் என்று ஆண் கருதுவது போல பெண்களும் கருத வேண்டும்.

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல.

நம்மவன் காதலைப் பெரிதுபடுத்தி விட்டான். என்ன காதல் வெங்காயம். அவன் பெரிய பக்தன், அவன் மேல் சாமி இருக்கிறது. அவன் சொன்னால் பலிக்கும் என்று சொன்னால், கேட்கிறவனுக்கு நடுக்கம் தோன்றுவது போல் இருக்கும். அதுபோலத் தான் காதலும். அன்பு என்பது ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வரை தான்.

ஒருவர் மாறினால், மற்றவரும் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

விடுதலை" -06.08.1968



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Ananthakrishnan Pakshirajan 

தமிழகத்தின் ஊடகவியலாளர்களில் பலர் திராவிட இயக்கத்திற்கு விலை போய் பல நாட்கள் ஆகி விட்டன என்பது வெளிப்படையான உண்மை. காரணங்கள் இரண்டு. ஒன்று அறிவுச் சோம்பேறித்தனத்திற்கு (intellectual laziness) ஆகாரம் இடுவது திராவிட இயக்கம். இரண்டாவது அடிப்படையான பெரியாரிய நாசி இனவெறி. இரண்டையும் மறைத்துக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல போர்வைகள் கிடைக்கின்றன. தங்களை கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொள்பவர்களும் பெரியாரைப் பிடித்துத் தொங்குவதற்கு பார்ப்பனீயம் என்ற ஈயம் வசதியாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு சிறிதளவாவது அறவுணர்வு இருக்குமானால் தரகு முதலாளித்துவத்தின் இலக்கணமாக விளங்கும் பெருந்தலைகளைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அருகில் கூடச் செல்ல மாட்டார்கள். சாதிக் குப்பைகளை திராவிடர்கள் பெருக்கித் தள்ள கம்யூனிஸ்டு இயக்கம் உதவுகிறது என்று தங்களைக் தாங்களே ஏமாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
ஊடகவியலாளர்கள் திராவிட ஊதுகுழலாக மாறியதின் பயனாக பெரியார், அண்ணா, கருணாநிதி பற்றி புளுகு மூட்டைகள் தொடர்ந்து அவிழ்த்து விடப்படுகின்றன. என்னவோ இவர்கள் தமிழகத்தை சொர்க்கபூமி ஆக்கிவிட்டது போல கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. சமூகநீதி என்ற பெயரில் அப்பட்டமான இடைச்சாதி அதிகாரம் நிலைநாட்டப்படுகிறது. அதைப் பற்றிப் பேசினால் பெரியார் மண், வாயிலே புண் போன்ற வசனங்கள் வீசப்படுகின்றன. அரையணா அறிஞர்களும், பொரிகடலைப் பொருளாதார வல்லுனர்களும் ஏதோ உலகத் தரத்தில் கருத்துகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மையைப் பேசுபவர்கள் மறுக்கப்படுகிறார்கள். அல்லது ஒதுக்கப்படுகிறார்கள்.

இதற்கு நேர் எதிராக இந்துத்துவ இயக்கம் செயல்படுகின்றது. அதில் இயங்குகிறவர்கள் திராவிட வெறியர்களுக்கும் மேம்பட்ட வெறியர்கள். இவர்கள் ஒன்று சொன்னால் அவர்கள் பத்து சொல்லக் கூடியவர்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கூச்சல் போடுவதில் திராவிடர்களை மிஞ்சியவர்கள். இவர்களைப் போலவே அவர்களும் வன்முறை வேண்டாம் என்று தங்கள் வசதிக்கேற்பச் சொல்லிக் கொள்வார்கள். உண்மை இரண்டு வெறித்தனங்களுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறது.

கொரோனா வட்டம் போல உண்மையின் வட்டமும் இவர்களால் தமிழ் ஊடகத்தில் மிகவும் சுருங்கிப் போய் விட்டது. இப்போது கொரோனா வட்டம் விரிவடைவது போல உண்மையின் வட்டமும் விரிவடைந்தால் நன்றாக இருக்கும். உண்மையின் வட்டம் விரிவடைய வேண்டுமென்றால் திராவிட இயக்கத்திற்கு விலை போன ஊடகவியலாளர்களின் பிடி தளர வேண்டும். இந்துத்துவத்திற்கு எதிராக, இந்தியாவிற்குத் துணையாக, மதச்சார்பின்மைக்கு ஆதரவாக, சாதியின் துணைக் கொண்டு நிற்காமல், திராவிட, பெரியாரிய நாசி இனவெறியை பசையறத் துடைத்து விட்டு இயங்கக் கூடிய ஊடகவியலாளர்கள் வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

02.03. 1969ல் பெரியார் ஒரு கட்டுரை எழுதினார். அதிலிருந்து சில வரிகள்:
"ஆண்கள் இருப்பிடமாக வருவாய்க்கேற்ப லைன் - வீடுகளில் இரண்டு அறை, அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படியே தான் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறுவதை இரண்டுக்கு மேல் இல்லாமல் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை சர்க்கார் கொடுத்து விடுகிறார்கள். பணம் கையில் மீதி இருக்குமானால் பாங்கியில் போட்டு விட வேண்டும். காதலனிடத்தில் காதலுக்கு ஆக பணம் பெறக் கூடாது. தமது இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த வேண்டும் ஆணை.
இந்த நிலையை 1932-ல் நான் மேல் நாடுகள் பலவற்றில் நேரில் பார்த்தேன். அதாவது பலருக்கு பாஸ்போர்ட் லவ்வர் - லவ்லேடி தான். குடும்பத்துடன் இருப்பவர்களும் உணவு விடுதியில் உணவு கொள்ளுவதையும், வாடகை அறைகளில் தனித்தனியாக வாழ்வதையும் பார்த்தேன்."
"ஆகவே, திருமணம் என்பது ஒரு பெண்ணைச் சுவாதீனமற்ற அடிமையாக்குவது மாத்திரமல்லாமல், ஓர் ஆணும் இல்லற முறைக்கு - கவலைக்கு அடிமையாகிறான், தன்னைப் பலி கொடுத்து விடுகிறான்."
"இதனால் மனித வளர்ச்சி, உலக வளர்ச்சி பெருமளவிற்குத் தடைப்பட்டு விடுகிறது. ஜீவனும், துக்க சாகரத்தில் அழுந்திக் கிடக்க நேரிடுகிறது.
நான் சொல்லுகிறேன், இந்தச் சுதந்திரத்திற்குப் பெண்கள் இசைய மாட்டார்கள். அவர்களுக்கு ஓர் எஜமான் இல்லாவிட்டால் ஆடை நழுவுவது போன்ற உணர்ச்சி இருக்கும்.
ஆனால், ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.
ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்."
இவர் காட்டும் உலகில் பெண்கள் "சுகம் கொடுப்பதும், சுகம் பெறுவதும்" படிப்பையும் வருவாயையும் பொறுத்திருக்கிறது! பெண்ணைப் போகப் பொருளாகவும் பணத்திற்காக (காதலுக்காக பணம் கேட்கக் கூடாது, ஆனால் குழந்தை வளர்ப்பிற்காக, பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கேட்கலாம்!) உடலைக் கொடுக்கும் இயந்திரமாகவும் எஜமானனை விரும்புபவளாகவும் காட்டும் இவர்தான் பெண் விடுதலைக்கு அடையாளம்!
தமிழ்நாட்டின் அரையணா அறிஞர்களும் அரசியல்வாதிகளும் பெரியாரைப் படிக்காதவர்கள் என்பது தெளிவு. எனவே திருமாவளவன் மனுவைத் தடை செய்யச் சொல்லும் அதே சமயத்தில் சுகம் கொடுத்து சுகம் பெறும் இயந்திரமாகப் பெண்ணை நினைக்கும் பெரியாரின் எழுத்துககளையும் தடை செய்யச் சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர் செய்யாவிட்டால் தமிழ்ப் பெண்கள் தாங்கள் சுகம் கொடுத்து சுகம் பெறும் இயந்திரங்களாக இருக்க விரும்பாவிட்டால் பெரியாரின் எழுத்துகளை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard