New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
Permalink  
 


வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்

July 28, 2018
By ஜடாயு

இந்தப் போஸ்டரைப் பாருங்கள். மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? பண்பாட்டின் ஆணிவேராகிய மதமே மாறிவிட்டபிறகு என்ன ***க்கு வன்னியன் என்ற குலப்பெயர்? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நீலகிரி படுகர் சமுதாயத்தினர் கூட, சில வருடங்களுக்கு முன் அங்கு கிறிஸ்தவ மதமாற்றம் உள்நுழைந்தபோது ‘கிறிஸ்தவ படுகர்” என்ற பெயர் மதமாற்றிகளால் பயன்படுத்தப் பட்டதை எதிர்த்து கலெக்டர் அலுவலகம் முன் மாபெரும் போராட்டம் நடத்தி அதை நீக்கவைத்தார்கள். ஏமாற்றி மதமாற்றப் பட்டவர்களும் தாய்மதம் திரும்பினார்கள். அவர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சுயமரியாதை கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையும் அரசியலதிகாரமும் சமூக ஒருங்கிணைப்பும் கொண்ட வன்னியர் சமுதாயத்தினரிடம் இல்லையா? கொடுமை.

கிறிஸ்தவம் என்ற வைரஸ் உங்கள் சமுதாயத்திற்குள் ஊடுருவி அதன் வேரையே அரித்துத் தின்பதற்கு முன் விழித்துக் கொள்ளுங்கள்.

****

தமிழ்நாட்டில் எங்கு எந்த சாதியினர் மதமாற்றப் பட்டாலும் அதற்கு எதிராகக் குரல்கொடுப்பதும் கவனப்படுத்துவதும் இந்து இயக்கங்கள் மட்டும் தான். அந்த உண்மையை மறந்து கூசாமல் // இந்துக்களுக்காக என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் // என்று பேசுவது நியாயமல்ல. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்கள் மதத்திற்கு ஒரு பிரசினை என்றால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கட்சி பேதம் மறந்து ஒன்று சேர்வார்கள். ஆனால் இந்துமதம் சார்ந்த பிரசினை என்றால் அது நடக்காது என்பது மட்டுமல்ல, இந்து இயக்கங்கள் களத்தில் நேரடியாக இறங்கினால் , உடனடியாக அது அரசியலாக்கப் பட்டு பாஜக/மோதி “ஊடுருவலாக” பார்க்கப் படும் அவலநிலை உள்ளது. ஆனால், குறிப்பிட்ட சாதி அமைப்புகள் களத்தில் இறங்கினால் அந்தப் பிரசினை வராது. அது மட்டுமல்ல, எந்த சாதியின்/குலத்தின் பெயரால் அந்த அமைப்புகள் உள்ளனவோ அதன் அடிப்படையான பண்பாட்டு அடையாளமே தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் அரசியல் சுயநலத்திற்காக மானங்கெட்டுப் போய் ஒன்றும் செய்யாமல் இருப்போம் என்று அந்த சாதி அமைப்புகள் சும்மா இருந்தால் அந்தக் குலத்திற்கே அது அழிவுகாலம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

// அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை. வன்னிய சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து சொல்லியுள்ளேன். அவர்களும் பெரிதாக எடுத்துகொள்வதிலை // என்று நண்பர் Rajiv Bhaskaran கூறுவது வேதனையான விஷயம்.

// எங்களுக்கு இந்த விஷயமே உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்கும்போதுதான் தெரிய வந்தது.என் உறவினருக்கு வந்த ஜாதகத்தில் 60% வன்னிய கிறிஸ்தவர் என்றுதான் இருந்தது // என்று அவர் மேலும் கூறுகிறார். இது மிகப்பெரிய அபாய எச்சரிக்கை என்பதை வன்னியர் சமுதாயம் உணரவேண்டும்.

மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான். இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்துவிட்டபிறகாவது அந்த சாதி அமைப்புகள் கிறிஸ்தவத்துடன் குலாவும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும்.

உங்களுக்கு நினைவிருந்தால், 1980களில் வட மாவட்டங்களில் இதேபோல கிறிஸ்தவ மதமாற்றப் பிரசாரம் பெருக ஆரம்பித்தபோது தான் அதற்கு எதிர்ச்சக்தியாக ஓம் சக்தி பங்காரு அடிகளார் எழுந்து வந்தார். ஆரம்பகாலத்தில் அந்தப் பீடத்தின் வளர்ச்சியிலும் அது பிரபலமானதிலும் பெரும்பங்கு ஆற்றியது இந்துமுன்னணி / ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தான் என்பது பீடத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும். பீடம் பெரிதாக வளர்ந்து பல இடங்களில் பிரபலமாகி விட்டது.ஆனால் வடமாவட்டங்களில் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இம்முறை இவற்றை வேரொடு அழிக்காவிட்டால் மீண்டும் இப்பிரசினை தொடரும். கன்னியாகுமரியிடமிருந்து வட மாவட்டங்கள் பாடம் கற்க வேண்டும்.

ஓம் சக்தி.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
Permalink  
 


  1. vedamgopal on August 4, 2018 at 8:49 pm

    மத சுதந்திர சட்டத்தின் ஓட்டைகள்

    1) (Subject to public order, morality) மேலே சொன்ன நமது சட்டத்தின் படி பொதுஜனங்கள் யாராக இருந்தாலும் அவர்களது பண்பாடு, ஒற்றுமை, சுகாதாரம் சீர்குலையும் பொழுது மாநில அரசாங்கம் அதைத் தடை செய்யலாம். (Practice) நடத்தை – சுதந்திரமாக பழகிக் கொள்ளலாம் (Profess) தொழில் – சுதந்திரமாக தங்கள் மத போதனைகளை பின்பற்றலாம். இதற்குத் தமிழ் வர்த்தமானன் அகராதியில் – போலியாக நட – இல்லாததை உள்ளதாய் பாசாங்கு செய் என்ற அர்த்தமும் உண்டு. (propagate) போதித்தல் என்பது தான் உண்மையான அர்த்தம். ஆனால் பரப்புதலில் என்று ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை பொதுஜன ஒற்றுமையும், பண்பாடும் சீர்குலைந்து வந்திருக்கின்றது என்பது குருடனுக்கும் தெரியும். இப்பொழுது சில மாநிலங்களில் மத மாற்றுத்தடை சட்டங்கள் அமுலில் உள்ளன இருந்தும் அவர்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சட்டம் 25 திருத்தப்படவேண்டும். .

    2) ( propagate ) என்பதை மதத்தைப் பரப்புதல், இனவிருத்தி செய்தல், மத மாற்றும் உரிமை (Right to Convert) மத கடமைகளில் மதம் மாற்றுவது ஒரு முக்கிய கடமை என்றெல்லாம் வாதிட்டு நிறைய வழக்குகள் நடந்தது. உச்ச நீதி மன்றமே ( propagate ) என்றால் ( Right to Convert ) மதம் மாற்றும் உரிமை என்று பொருள்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு சொல்லியுள்ளது. எனவே இந்த ( propagate ) என்ற வார்த்தையைச் சட்டத்திலிருந்து கட்டாயம் நீக்கிவிடவேண்டும்.

    3) மத மாற்றங்களில் 90 சதவிகிதம் செயற்கையாக பணம், பதவி, கல்வி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் எனப் பல ரூபங்களில் ஈர்க்கப்பட்டு மதம் மாற்றப்படுகிறார்களே அன்றி மனமுவந்து மதம் மாறுபவர்கள் சொற்ப எண்ணிக்கையே. இப்படி லஞ்சத்தால் சமூகபணி செய்கிறேன் என்று சமயபணி செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இவை காவல் துறையால் பிடிபட்டு பல நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து இதனால் ஏற்பட்ட கலவரங்களால் உயிர்ச் சேதம் உண்டாகி விசாரணை கமிஷன்கள் அமைத்து (நியோகி கமிஷன் வேணுகோபால் கமிஷன்) இத்தனையும் தொடர்ந்து நடந்தாலும் இதுவரை யாரும் தண்டனை பெற்றதாகவோ அல்லது நீதி மன்றம் விசாரணை கமிஷன் சொன்ன பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தினதாகவோ எதுவும் இன்று வரை நடக்கவில்லை.

    4) மனமுவந்து மதம் மாறியவர்கள் ஒரு நீதிபதிமுன் வாக்குமூலம் அல்லது சத்தியப் பிரமாணம் சொல்லி, சாட்சியங்களுடன் ஒரு பத்திரத்தில் (affidavit) கையொப்பம் இட்டு அதை அரசாங்க கசட்டில் வெளியிடவேண்டும் என்று சில மாநிலங்கள் கொண்டு வந்த சட்டமும் சிறுபான்மை மதத்தினர் வழக்காடியதால் நீதிமன்றமும் இதை ஏற்கவில்லை

    cont…..

     
  2. vedamgopal on August 4, 2018 at 8:50 pm

    5) இதில் கொடுமை என்ன வென்றால், கிருஸ்துவராக மதம் மாறியவர் தனது ஹிந்து பெயரை மாற்றிக்கொள்ளாமல் ஹிந்துக்களின் இடஒதிக்கீடு சலுகைகளைப் பெற்று எல்லா உயர் பதவிகளிலும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. இப்படி தில்லுமுல்லு செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிவரை உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டும் இதுவரை யாரையும் சிறையில் தள்ளிய நிகழ்வு நடக்கவில்லை. இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மையா ? இதில் இன்னமும் கொடுமை என்னவென்றால் மதம்மாறிய சிலர் ஹிந்து பெயருடன் கிருஸ்துவ பெயரையும் சேர்த்து வைத்துக்கொண்டு எந்த இடத்தில் சலுகை அதிகமோ அங்கே ஒட்டிக்கொள்கிறார்கள். இதையும் இன்றுவரை தடுப்பதாக தெரியவில்லை. ஜாதி கொடுமையால் மதம் மாறியவர் ஜாதி நிழல்போல் பின்னால் வருவதை நிறுத்த அதாவது மதம் மாறியவரும், மதம் மாற்றியவரும், அரசாங்கமும் எந்த அக்கரையும் காட்டுவதில்லை. மதமாற்றத்தை அங்கீகரிக்கும் சமுதாயமும், அரசாங்கமும் ஏன் ஒருவனது ஜாதி மாறுவதையோ அல்லது ஜாதி மாற்றிக் கொள்வதையோ ஏற்க முடிவதில்லை ?

    6) (Healing services) நன்றாய் இருப்பவரை அழைத்து வந்து நாடகம் நடத்தி வியாதிகளையும், இயற்கையாக ஏற்பட்ட உடற் குறைபாடுகளை நிவர்த்திக்கிறோம் என்று, ஏசு ஜபம் சொல்லி பொது மக்களை ஏமாற்றி, போதை மாத்திரைகளைக் கொடுத்து ஆடவைப்பது, மருத்துவ பட்டம் எதுவும் வாங்காமல் மாத்திரைகளை வினியோகிப்பதும் தண்டனைக்குரிய ஒரு கிரிமினல் குற்றம். அதற்காக யாரையும் இதுவரை தண்டித்ததில்லை ! ஏன் ? அதுதான் மதச்சார்பின்மை !!!

    7) (Religious hatred) பெருபான்மை மதத்தினரின் அமைதி குலையும் விதத்தில் அவர்கள் வழிபாட்டுத் தலங்களில் அருகில் அவர்கள் வழிபடும் தெய்வங்களை பற்றித் தரக்குறைவாக சொற் பொழிவாற்றுவது, தரக்குறைவாக எழுதி புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றை வினியோகிப்பது. இதைத் தடுப்பதும், இவர்களைத் தண்டிப்பதும் மதச்சார்பின்மைக்கு எதிரானது அல்லவா !! ?

     
  3. vedamgopal on August 4, 2018 at 8:51 pm

    8) (Inculturation) – கலாச்சார திருட்டு – ரோஷம், சூடு, சொரணை, வெட்கம், என்று எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுவிட்டு, ஹிந்து மத கலாச்சார பழக்கங்களை காப்பியடித்து, பாமரமக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வது. . இதுவும் பெருபான்மையினரின் மனம் புண்படுவதோடு அவர்கள் பண்பாடு அரைகுறையாக மற்ற மதத்தாவர் பின்பற்றுவதால் தாழ்வுறுகிறது.

    9) (Restricting Religious symbols – religious teachings in schools ) சிறுபான்மை பள்ளிகளில் ஹிந்து சிறுவர்கள் தங்கள் மதசின்னமான பொட்டு, திலகம், பூ, வளையல், ரஷ்சைகயிறு இவற்றை அணிந்து வரத் தடுக்கப்படுவதோடு அவர்கள் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் மாற்று மதபாடல்களையும், போதனைகளையும், பாட, கேட்க கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். இதுவும் சட்டப்படி குற்றம். இதை தட்டிகேட்பது சிறுபான்மையினரைப் புண்படுத்துவதாகும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மதச்சார்பின்மை !!!! பள்ளி சீருடை என்பது எல்லோருக்கும் பொது என்றாலும் இஸ்லாமியர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை ? ஏன் என்று கேட்க நாதி இல்லை ?

    10) இந்திய வெளிநாட்டினர் சட்டம் வெளிநாட்டின் மத போதகர்கள் இங்கே வந்து உள்ளுர் மதங்களை விமரிசனம் செய்வதால் அமைதி குலைகிறது என்பதால் அவர்களுக்கு விசா அளிப்பதில்லை ஆனால் அவர்கள் சுற்றுலா விசாவை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் இங்குத் தங்கி மத போதனைகளில் ஈடுபடுவதும் அவர்கள் பிடிபட்டு வெளியேற்றப்படுவதும் ஒரு தொடர்கதை. இவர்களுக்கு உதவ நமது அல்லிராணி சோனியாவின் தூண்டுதலால் மிசின(ந)ரி விசா என்ற ஒன்றை ஏற்படுத்தியது சட்டப்படி தவறு, மேலும் இங்கே உள்ள கிருத்துவ பிஷப்புகள் வாடிகனின் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் குற்றம் செய்தால் இந்திய சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

    cont…..

     
  4. vedamgopal on August 4, 2018 at 8:53 pm

    11) இப்படிப் பட்ட மதங்களை இந்தநாட்டில் பிறந்து, இங்கேயே உப்பைத் தின்று வளர்ந்தவர்கள் ஏன்தான் பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை ? எந்த ஒரு இஸ்லாமிய நாடோ, கிருஸ்துவ நாடோ இந்த மதம் மாறியவர்களுக்கு அந்த நாட்டின் பிரஜா உரிமையை அளித்து, வேலையும் கொடுப்பார்கள் என்பது நிச்சயம் பூஜ்ஜியம்தான். பின்பு எதற்கு இந்த உலக இஸ்லாமிய, கிருஸ்துவ சகோதர பாசம். நாக்கை வழிக்கவா ? மடத்தனமான எண்ணம் தானே !! ஒருபொழுதும் பிறவி கிருஸ்துவனும், இஸ்லாமியனும் தங்கள் மதத்திற்கு மாறியவர்களைச் சகோதரனாக பாவிக்கமாட்டான் என்பது உண்மை.

    12) ஹிந்து பண்டிகையான போகிக் கொளுத்துவது, தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது முதலியவற்றைக் காற்று மாசு படுகிறது என்று கட்டுப்படுத்துவது ஆனால் ஒரு நாளைக்கு ஐந்து முறை காதுசெவிடாகும் அளவிற்கு ( சவுண்டு பொல்யூஷன்) மசூதிகளில் அதுவும் அல்லா ஒருவர்தான் கடவுள் மற்றெல்லாம் போலி என்று உரக்கக் கூப்பாடு போடுவது என்மாதிரியான மத சுதந்திரம், மதச்சார்பின்மை என்று யாருக்கும் விளங்கவில்லை !!! ???? அடிக்கடி நடுவீதிகளில் கூட்டமாக கூடி நமாஸ் செய்வதும், அலுவலக நேரங்களில் அடிக்கடி தொழுகை என்று ஆட்கள் காணாமல் போவதும், நீதிபதிகூட பாதி விசாரணையை நிறுத்திவிட்டு தொழுகைக்கு செல்வதும் மேலே சொன்ன சுத்தமான (அக்மார்க்) மதச்சார்பின்மை அடையாளம் ஆகும். நடு வீதியில் கேட்பாரின்றி தொழுகைச் செய்வது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதிகள் வழியாகச் செல்வது அவர்கள் தொழுகைக்கு தடை ஏற்படுத்தும் என்று அவ்வழியாக ஊர்வலம் செல்வதை தடுத்தல் மேலே சொன்ன அக்மார்க் வகையைச் சேர்ந்ததே !! ??

    cont…….

     
  5. vedamgopal on August 4, 2018 at 8:56 pm

    12) ஹிந்து பண்டிகையான போகிக் கொளுத்துவது, தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது முதலியவற்றைக் காற்று மாசு படுகிறது என்று கட்டுப்படுத்துவது ஆனால் ஒரு நாளைக்கு ஐந்து முறை காதுசெவிடாகும் அளவிற்கு ( சவுண்டு பொல்யூஷன்) மசூதிகளில் அதுவும் அல்லா ஒருவர்தான் கடவுள் மற்றெல்லாம் போலி என்று உரக்கக் கூப்பாடு போடுவது என்மாதிரியான மத சுதந்திரம், மதச்சார்பின்மை என்று யாருக்கும் விளங்கவில்லை !!! ???? அடிக்கடி நடுவீதிகளில் கூட்டமாக கூடி நமாஸ் செய்வதும், அலுவலக நேரங்களில் அடிக்கடி தொழுகை என்று ஆட்கள் காணாமல் போவதும், நீதிபதிகூட பாதி விசாரணையை நிறுத்திவிட்டு தொழுகைக்கு செல்வதும் மேலே சொன்ன சுத்தமான (அக்மார்க்) மதச்சார்பின்மை அடையாளம் ஆகும். நடு வீதியில் கேட்பாரின்றி தொழுகைச் செய்வது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதிகள் வழியாகச் செல்வது அவர்கள் தொழுகைக்கு தடை ஏற்படுத்தும் என்று அவ்வழியாக ஊர்வலம் செல்வதை தடுத்தல் மேலே சொன்ன அக்மார்க் வகையைச் சேர்ந்ததே !! ??

    cont…..

     
  6. vedamgopal on August 4, 2018 at 8:57 pm

    13) முஸ்லீம்களுக்கு மட்டுமான சலுகைகள் – அளக்க முடியாத பட்டியலில் சிலவற்றைப் பார்ப்போம் – இஸ்லாமிய வங்கிகள் – முஸ்லீம் தனி மாவட்டங்கள் – அஜ் புனித யாத்திரைக்கான மானிய தொகை – மதராசாகள் ஏற்படுத்த, நடத்தத் தனி தொகை ஒதுக்கீடு – உருது பல்கலைக்கழகங்கள் – – ஷாதி கானா – இப்தார் விருந்துகளுக்கான செலவினங்கள் அளித்தல் – இமாம், முல்லா, முல்விகளுக்கு சம்பளம் அளித்தல் – நான்கு பெண்கள் வரை மணம் செய்துகொள்ளும் உரிமை – அப்படி அலைந்து மணந்த மனைவிகளை நினைத்த மாத்திரத்தில் வேண்டாம் என்றால் மூன்று முறை தலாக் என்று சொல்லி விவாக ரத்து செய்யும் உரிமை – ஷரியா நீதி மன்றங்கள் – அன்னிய நாடான பாக்கிஸ்தான், பங்ளாதேசம், பர்மா விலிருந்த சட்டத்தை மீறி வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துத் தங்கும் வசதியிலிருந்து, குடியிருப்பு உரிமை பெறாமலேயே ஓட்டு, ரேஷன் என்று சகலத்தையும் செய்து கொடுக்கும் உரிமை. மசூதிகள் கட்ட, மதராசாகள், தர்காக்கள், பெட்டிக் கடைகள் ஏற்படுத்தத் தங்குதடையின்றி பொதுசொத்தை, நடைபாதையை, பொதுபாதைகள் சங்கமிக்கும் இடங்களை ஆக்கிரமிக்கும் கேட்பார் இல்லா உரிமை – ஹிந்து பெண்களை காதல்வலையில் விழச்செய்து மணம்செய்து மதமாற்றுவது – கடத்திச் சென்று விபசாரத்தில் தள்ளுவது போன்ற குற்றச்செயல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உரிமை – தீவிரவாத கைதிகளுக்கு சிறையில் விஷேச தனிப்பட்ட சலுகைகள் – இதைத் தவிர The all India Muslim personal Law Board ( பல சமயங்களில் உச்ச நீதி மன்றம் இவர்களது அறிவுரைப்படிதான் முஸ்லீம் வழக்கில் தீர்ப்பு சொல்லும் ). Muslim woman protection act 1986 . விவாக ரத்து வழக்கில் ஜீவனாம்சம் கணவன் கொடுக்கவில்லை என்றால் அதை வக்கப்பு வாரியம் அளிக்கும்.

    cont…….

     
  7. vedamgopal on August 4, 2018 at 8:59 pm

    14) ( Right to Education Act 2009/10) இந்தச் சட்டத்தின் படி எல்லாப் பள்ளிகளிலும் (சிறுபான்மையினர் நடித்ததும் பள்ளிகள் உட்பட) 6 முதல் 14 வயது வரை உள்ள மத வேறுபாடு இன்றி எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும் 25 சதவிகிதம் இடம் ஒதுக்கவேண்டும். இதற்கும் சிறுபான்மையினர்கள் நீதி மன்றம் சென்றதால் அரசு நிதி பெறாத சிறுபான்மை பள்ளிகளில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பு அளித்தார்கள். (அரசு நிதி பெறாத சிறுபான்மை பள்ளிகள் விரல்விட்டு எண்ணும் அளவே) இப்படி இருந்தும் ஹிந்து ஏழைப் பள்ளி சிறுவர்களை அனாதை போல்பாவித்து இஸ்லாமிய, கிருஸ்துவ ஏழைபள்ளி சிறுவர்களுக்குத் தனிச்சலுகைகள் (சீராரது பெற்றோற் பணக்காரன் என்றாலும் வெறும் வாய் வார்த்தையால் தாங்கள் ஏழை என்று சொன்னால் போதும்) –

    15) இப்படி சட்டத்தை மீறிப் பல உரிமைகளைப் பெறுவதோடு இந்திய குடிமக்களுக்கான பொது கடமைகள் சட்டம் 51 ஏ இல் சொல்லியுள்ள (மாதிரிக்கு – தேசியத்தைக் காக்க வேண்டும், தேசியக் கொடி, பாடல்களுக்கு மரியாதை செய்ய வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க வேண்டும் போன்ற பலவற்றை மீறும் உரிமை)

    cont….



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

  1.  
    1. vedamgopal on August 9, 2018 at 3:52 pm

      16) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சந்தேகங்களுக்கு இடமின்றி தீர்மானமாக எந்த ஒரு மத ஸ்தாபனத்திற்கும் தனிப்பட்ட முறையில் நிதி ஒதுக்கவோ, மானியம் வழங்கவோ, செலவுகள் செய்யவோ சட்டம் போடக்கூடாது. மேலும் ஆர்டிகல் 15, 16, 26 மற்றும் 30 தின் படி எந்த ஒரு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ சிறுபான்மையினருக்கு மட்டும் செலவினங்களுக்காக சட்டம் ஏற்ற முடியாது. இருந்தாலும் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேல் அடிப்படை சட்டங்களை மீறி அபரிமிதமான சலுகைகளை எல்லா ரூபங்களிலும் சிறுபான்மையினருக்கு அளித்து வருகிறார்கள். இது பெரும்பான்மை ஹிந்துக்களைப் பழிவாங்கும், ஏமாற்றும் பச்சை துரோகம். ஹிந்து பின்தங்கிய வகுப்பினரில் (OBC) 50 சதவிகித முஸ்லீம்களும் கிருஸ்துவர்களும் நேஷனல் கமிடிபார் பாக்வர்டு கிளாஸ் (NCBC) யால் சேர்க்கப்பட்டு அவர்களது சதவிகித உரிமைகளைக் கபளீகரம் செய்துள்ளார்கள். இதே கதைதான் மதம் மாறிய (SC/ST) களிலும் நடக்கிறது.

      17) நமது அரசியல் சட்டத்தில் மத சிறுபான்மையினருக்கு பொதுவில் எந்த இடஒதிக்கீடும் கிடையாது. ஏன் எனில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் ஜாதிகள் கிடையாது மற்றும் அவர்களுக்கென்று தனி கல்விக்கூடங்கள் ஏற்படுத்தி அரசு தலையீடு இன்றி நிர்வகிக்க அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பொறுக்க மத்திய, மாநில அரசுகள் குறுக்கு வழியில் பல சட்டங்கள் ஏற்படுத்தி பெருன்பான்மையினரின் இடஒதுகீட்டை பங்கு போட்டுக் கொடுத்துள்ளார்கள். (90 சதவிகித இஸ்லாமியரும் கிருஸ்துவர்களும் இதில் அடங்கும்) நன்றாக உட்காரவைத்து மொட்டைப் போட்டுள்ளார்கள் என்பதைப் பின் தங்கிய ஹிந்துக்கள் பலர் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.

      cont…

       
    2. vedamgopal on August 9, 2018 at 3:54 pm

      18) இந்தச் சிறுபான்மையினருக்கு அவர்கள் மொத்த படிக்கும் மாணவர்கள் தேவைகளை மீறி கணக்கில் அடங்கா பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க இடம் அளித்து, மானியமும் வழங்குவது ஹிந்து கல்வி ஸ்தாபனங்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும். இதனால் அந்தப் பள்ளி, கல்லூரிகளில் ஹிந்து மாணவர்களும் ஹிந்து ஆசிரியர்களும், பேராசிரியர்களுமே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இல்லை என்றால் அவர்கள் அந்த அந்த நிறுவனங்களை நடத்தமுடியாது. இங்கே ஹிந்து மாணவர்களுக்கு எந்த உதவித் தொகையும் கிடையாது சொல்ல போனால் மற்ற கல்வி நிறுவனங்களைவிட அதிக தொகையே வசூலிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் அதிக சன்மானம் அளிக்கப் படுவதால் சிறந்து ஆசிரியர்கள் அங்கே சென்றுவிடுகிறார்கள். ஆனால் பதவி உயர்வு என்று வரும் போது அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதையும் உணரவேண்டும். இது ஹிந்துக்களாகிய நாம் செய்யும் பெரும் தவறாகும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

      19) ஆர்டிகில் 25 இன்படி பொது ஒழுக்கத்திற்கு உட்பட்டு, பண்பாடு, சுகாதாரகேடு இல்லாமல் மதசம்பந்தமான பொருளாதாரம், பணப் புழக்கம், அரசியல் சார்பு, மதச்சார்பற்ற செய்கை போன்றவற்றை ஒழுங்கு படுத்த மத்திய அரசியல் சாசன சட்டங்களை மீறாமல் மேலே சொன்னவற்றை சரிவரக் கடைப்பிடிப்பதில்லை என்பது நிறுபணமானால் மாநிலங்கள் சட்டம் இயற்றலாம் என்று சொல்லிவிட்டு ஆர்டிகில் 26 இல் மத விஷயங்களைச் சுதந்திரமாக நிர்வகிக்கும் உரிமை என்று – மதஸ்தாபனங்களை நிறுவிப் பராமரித்து, தொண்டு புரிந்து, சொந்த விவகாரங்களை நிர்வகித்து, அசையும், அசையா சொத்துக்களை வாங்க, விற்கச் சுதந்திரம் அளிக்கபபபட்டுள்ளது. இது என்மாதிரியான சுதந்திரம் என்று சட்டம் தான் சொல்ல வேண்டும் ?

      cont….

       
    3. vedamgopal on August 9, 2018 at 3:55 pm

      20) எனவே மாநிலத்திற்கு மதஸ்தாபனங்களை முறைப்படுத்த மட்டும்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது (அதற்கு உள் பிரிவுகள் படி 3 முதல் 5 வருடத்திற்குள் சரி செய்துவிட்டு விலகிக்கொள்ள வேண்டும்) ஆனால் கோவிலையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது ஆர்டிகில் 26 இல் சொல்லியுள்ள அத்தினை உரிமைகளையும் மறுப்பதற்குச் சமமாகும். அரசு தன்கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர முடியாது என்கின்றபோது, கோவில் மத சம்பந்தமான ஆகம, வைதீக விஷயங்களில் மூக்கைகூட நுழைக்கக்கூடாது என்பதுதான் சட்டம். ஆனால் தமிழகத்தின் ஹிந்து சமய அறக்கட்டளைத் துறை சட்டம் 1959 இல் உள்ள 90 சதவிகித பிரிவுகள் சட்ட விரோதமானது. ஒரு வழக்கில் உச்சநீதிமன்றமே தமிழக அறக்கட்டளை சட்டங்கள் பல அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்று பரிந்துரைத்துள்ளது இந்தியாவிலேயே அதிகமாகக் கொள்ளை போகும் துறை தமிழக அறநிலை (அலிபாபா துறையாகத்தான்) இருக்கும். கோவிலின் புனிதத்தை எல்லா ரூபங்களிலும் கெடுத்து வருவது இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுமையைவிட அதிகமானதாகும்

      21) (The Honorable Supreme Court agreed with the Honorable Madras High Court that many of the sections of the 1951 HR & CE Act were ultra vireos the constitution.) It also clearly observed that while the legislature could seek to regulate the administration , it must always leave the administration to the denomination. The Advocate General of Madras agreed with the Court and said he could not defend those sections.

      22) மதசுதந்திர சட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் சிறுபான்மை மதத்தினருக்கும் பொருந்தும். சுதந்திரம் பெற்று இன்று வரை எந்தக் காரணங்களுக்காகவும் சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்கள் ஒன்றைக்கூட அரசு தலையிட்டு முறைப்படுத்த முயன்றதாகத் தெரியவில்லை. ஏன் இந்தப் பாரபட்சம் ஹிந்துக்கள் காதில் பூவைச் சுற்றி இன்றுவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

      cont…..

       
    4. vedamgopal on August 10, 2018 at 4:00 pm

      23) The Place of worship (Special provisions) Bill 1991 இந்த சட்டத்தில் எவை எல்லாம் வழிபாட்டுத் தலங்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது ( கோவில், மசூதி, சர்ச், குருத்துவாரா, மடாலயம் மற்றும் அவற்றை சார்ந்த அல்லது போன்ற வழிபாட்டுத் தலங்கள்) 1947 வருடம் வரை பின்பற்றி வந்த சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகளை, வழிபாட்டு இடங்களை வேறு மதத்திற்கு மாற்றும் உரிமை அரசிற்கு கிடையாது என்பதை உறுதிசெய்துள்ளது. ஆனால் இந்தச் சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்குப் பொருந்தாது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இது பொருந்தும். ஆனால் (ஆர்கலாஜிகல்) தொல்பொருள் இடங்கள், (இஸ்டாரிகல் மான்யூமென்ட்) சரித்திர பழமைவாய்ந்த இடங்கள் இவற்றிற்கும் பொருந்தாது. அதிமுக்கியமான மதச்சார்பற்ற ஒன்றான ராமஜன்மபூமி வழக்கிற்கு இது செல்லுபடி ஆகாது. நீதிமன்ற தீர்புவரும் என்று பொறுமைகாத்த ஹிந்துக்களை எரிச்சல் அடையச்செய்த பல காரணங்களில் இதுவும் சேர்ந்து பாபர் கும்முட்டம் 1992 இடித்துதள்ளும் அளவிற்குத் தூண்டிவிட்டது.

      24) காலம் காலமாக மன்னர்கள் கோவில்களைக் கட்டி, தான் கட்டினேன் என்ற ஒரு சுவடும் இல்லாமல் கணக்கற்ற நிலங்களையும், செல்வங்களையும் தானமாக அளித்தார்கள். அங்கே வழிபாட்டை தவிர கல்விக்கூடங்கள், பாடசாலைகள் நடத்தப்பட்டன. , பரதமும், கிராமிய நடனங்கள், சிற்ப்பகூடங்கள் என்று பல கலைகள் நடைபெற்று வந்தன. இடைவிடாமல் அன்னதானமும் நடைபெற்று வந்தது. என்று கோவில் அறநிலைத்துறை கட்டப்பாட்டில் வந்ததோ அன்றிலிருந்து இன்று வரை வேலியே பயிரை மேயும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பொது சொத்தாகக் கருதி மாற்று மதத்தினருக்கும் செலவுகள் செய்கிறார்கள். 15 சதவிகித வருமானமே கோவிலுக்கு செலவு செய்யப்படுகிறது மற்றவை சுருட்டப்படுகிறது. அறநிலை துறை மந்திரிக்கு கார் வாங்குவது போன்ற பல அல்பதனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

      cont….

       
    5. vedamgopal on August 10, 2018 at 4:02 pm

      25) மேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் சில அட்டூழியங்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரைக் கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. சினிமா சூட்டிங் நடத்தப்படும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல். கோவில் கோபுரதரிசனம் செய்யமுடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளைக் கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழுக்கி விழும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல். கோவில் சிலைகள், சித்திரங்கள், செதுக்கி வைத்துள்ள சரித்திர, சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூதாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களைத் தொடர்ந்து செய்து மொத்தமாகத் தமிழனின் அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

      26) ஹிந்து என்றும் ஹிந்து ஆத்திகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிர மற்ற இந்தியர்களுக்கு அர்ச்சகர், பூசாரி பற்றி கேள்விகேட்கும் உரிமை முதலில் கிடையாது. மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்திகர்களின் உரிமையைப் பறித்த படுபாதகசெயல் ஆகும். அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து கோவில்களை விடுவிக்கக் குரல் கொடுப்பதுதான் உண்மையான செக்யூலர்களின் கடமையாகும்.

      cont….

       
    6. vedamgopal on August 10, 2018 at 4:04 pm

      27) ஹிந்து ஆத்திகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்திகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும், நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தைப் பெருக்குவதற்கும் இன்று பல ஹிந்து இயக்கங்கள் ஆக்கப்பூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைப்போல் ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் பூஜாரி ஆகவோ, அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட, வைதீகமட குருகுலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிரத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிரத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்க வேண்டும். இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. அரசாங்கம் இரண்டு கழுதை வயதைத் தாண்டிய ஆடவர்களை அர்ச்சகர் பூசாரிக்கு பயிலவிக்கிறோம் என்பது ஒரு வடிகட்டிய முட்டாள் தனமான அணுகு முறையாகும். இதில் அரசு தலையிடுவதே அதிகபிரசங்கிதனம்.
      cont…

       
    7. vedamgopal on August 10, 2018 at 4:05 pm

      28) இந்த நாட்டுச் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்ற துலுக்கர்கள் விட்டுசென்ற சொத்துக்கள் அல்லாவின் சொத்தாம். அதை முஸ்லீம்களுக்கு மட்டும் பொதுதொண்டு புரியச் செலவு செய்யலாம். இதற்கென்றே மத்திய மந்திரியின் மேற்பார்வையில் இதுவரை 30 இடங்களுக்கு மேல் இந்திய மாநிலங்களில் துலுக்கர் சொத்துக்களைப் பாதுகாக்க வஃகபு (Wakf ) வாரியங்களை அமைக்கப்பட்டு, தனிச்சட்டங்கள் மாநிலம் வாரிய ஏற்றபடுத்தப் பட்டுள்ளது.. இங்கே அரசாங்கம் ஹிந்து அறநிலை துறையைப்போல் வேலியையும் போட்டு, மேயும் வேலையையும் செய்வது முடியாத காரியம். இதன் கீழ்தான் தர்கா, மசூதிகள், மதராசாகள் வருகின்றன. எனவே வேலியை அமைத்து கூர்க்கா வேலை செய்வது, வாரிய செலவினங்களை எதிர்கொள்வது, காஜி, இமாம் போன்றவர்களுக்கு சம்பளம் தருவது. அஜ் பயண பட்டியலை அவர்கள் விரும்பியபடி பெற்று அங்குச் செல்வதற்கு பணம் மற்றும் அங்கே தங்க விடுதிகள் கட்டிதர செலவு செய்வது. ஆசிரியர்கள் பள்ளி சிறுவர்களுக்குச் சொல்லுவதுபோல் துலுக்கர்கள் சொல்லுவதை எல்லாம் செய்து கொடுக்கும் துறைதான் அல்லாவின் சொத்தான வஃகபு வாரியம். ( Wakf – A wakf is an unconditional and permanent dedication of property with implied detention of God – Allah )

      cont…..

       
    8. vedamgopal on August 10, 2018 at 4:07 pm

      29) ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்களின் சொத்து ஒரு ஏகபோக சொத்து, அது கடவுள் சொத்தல்ல, எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் ? மதச்சார்பின்மை பேசும் மாக்கள் எல்லாம் இதற்காகச் சிறிதளவேனும் கூச்சமோ, வெட்கப் படுவதோ இல்லை என்பதுதான் கொடுமை !!! நாம் வெட்கம் கெட்ட ஹிந்துக்களாக இருக்கிறோம் என்பது பெரும் வேதனை ? வழக்குகளைச் சந்தித்த நீதி மன்றங்களே பல சமயங்களில் கண்களை மூடிக் கொண்டுவிடுகிறது.

      30) இவை இப்படி என்றால் சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு அவர்களின் திருச்சபை சொத்துக்களை முறைப்படுத்த இன்றுவரை பாரதத்தில் எந்தச் சட்டமும் போடவில்லை, போட அவர்கள் விடுவதும் இல்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதே பல கோடிகள் பெறுமானமுள்ள நிலங்களை மறைமுகமாக சரசுக்கு எழுதிவைத்துச் சென்றுள்ளார்கள். அரசாங்கத்தை அடுத்து அதிகப்படியான சொத்துக்கள் இந்த மிஷிநரிகளிடம் உள்ளது. இதைக் கண்காணிப்பவர் (dioceses ) கிருஸ்துவ திருச்சபை பிஷப். இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை தணிக்கை செய்வதோ, முறைகேடுகளுக்காகத் தண்டனை அளிப்பதோ பாரத அரசால் முடியாது ? ஏன் என்றால் இந்த பிஷப் வாடிகன் குடிமகன் ஆவார் !!!????? ( dioceses – A district under the pastoral care of a bishop in the Christain church ) இப்படி கேவலமான அடிப்படை சட்டம் ஆர்டிகில் 14 இல் 15 (1) இல் சொல்லியுள்ள – மத, மொழி, இன மற்ற பல காரணங்களுக்காகப் பாகுபாடுகள் (Equal treatment is the foundation of Article 14 of the constitution and state can not discriminate.) காட்டக்கூடாது என்பதை மீறி நடப்பதுதான் இந்திய மதச்சார்பின்மை !!!!

       
    9. vedamgopal on August 10, 2018 at 4:10 pm

      29) ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்களின் சொத்து ஒரு ஏகபோக சொத்து, அது கடவுள் சொத்தல்ல, எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் ? மதச்சார்பின்மை பேசும் மாக்கள் எல்லாம் இதற்காகச் சிறிதளவேனும் கூச்சமோ, வெட்கப் படுவதோ இல்லை என்பதுதான் கொடுமை !!! நாம் வெட்கம் கெட்ட ஹிந்துக்களாக இருக்கிறோம் என்பது பெரும் வேதனை ? வழக்குகளைச் சந்தித்த நீதி மன்றங்களே பல சமயங்களில் கண்களை மூடிக் கொண்டுவிடுகிறது.

      30) இவை இப்படி என்றால் சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு அவர்களின் திருச்சபை சொத்துக்களை முறைப்படுத்த இன்றுவரை பாரதத்தில் எந்தச் சட்டமும் போடவில்லை, போட அவர்கள் விடுவதும் இல்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதே பல கோடிகள் பெறுமானமுள்ள நிலங்களை மறைமுகமாக சரசுக்கு எழுதிவைத்துச் சென்றுள்ளார்கள். அரசாங்கத்தை அடுத்து அதிகப்படியான சொத்துக்கள் இந்த மிஷிநரிகளிடம் உள்ளது. இதைக் கண்காணிப்பவர் (dioceses ) கிருஸ்துவ திருச்சபை பிஷப். இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை தணிக்கை செய்வதோ, முறைகேடுகளுக்காகத் தண்டனை அளிப்பதோ பாரத அரசால் முடியாது ? ஏன் என்றால் இந்த பிஷப் வாடிகன் குடிமகன் ஆவார் !!!????? ( dioceses – A district under the pastoral care of a bishop in the Christain church ) இப்படி கேவலமான அடிப்படை சட்டம் ஆர்டிகில் 14 இல் 15 (1) இல் சொல்லியுள்ள – மத, மொழி, இன மற்ற பல காரணங்களுக்காகப் பாகுபாடுகள் (Equal treatment is the foundation of Article 14 of the constitution and state can not discriminate.) காட்டக்கூடாது என்பதை மீறி நடப்பதுதான் இந்திய மதச்சார்பின்மை !!!!

      மற்றும் ஆர்டிகிள் 25 உள்ள (propagate) – பரப்புதல் என்ற வார்த்தை கட்டாயம் நீக்கப்படவேண்டும். மத ஸ்தாபனங்களை முறைப்படுத்த மாநிலங்களுக்கு அளித்துள்ள சட்டம் ஏற்றும் உரிமையை நீக்க வேண்டும்.

      முடிந்தால் இதை ஒரு தனி கட்டுரையாக வெளியிட ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard