New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன?
Permalink  
 


சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன?

வைதீகம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்று எந்த நிறுவனத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாத முறையில் உள்ளவை.
நாட்டார் தெய்வங்கள் நிறுவனம் சாராதவை. வட்டார அளவில் கூட நிறுவன அமைப்பு இல்லாதவை.

நிறுவன சமயம் என்றாலே அதிகாரத் தொடர்புடையது. மேலானது கீழானது என்ற கற்பிதம் கொண்டது. அதற்கென புனித நூலோ, விதிகளுடன் கூடிய பூசை முறையோ, எல்லோரும் ஓரிடத்திற்குச் செல்லும் புனித இடங்களோ, கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் புரோகிதர்களோ இருக்கும். ஆனால் இவையேதும் இல்லாமல் முற்றிலும் தனித்து நிற்கிறது நாட்டார் தெய்வங்கள்.

பெருந்தெய்வங்களைப் போல அனைத்து இடங்களிலும் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல. சென்னை முதல் குமரி வரை வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபாடு கொண்டவை.

சென்னை வட்டாரத்தில் காளன் வழிபாடு, ஆற்காடு பகுதியில் பொன்னியம்மன் வழிபாடு, திருவண்ணாமலை வேலூரில் போத்திராஜா வழிபாடு, கொங்குப்பகுதியில் அண்ணன்மார் வழிபாடு, திருச்சியில் காத்தவராயன் வழிபாடு, புதுக்கோட்டையில் நாடியம்மன் வழிபாடு, மதுரை,சிவகங்கை, இராமநாதபுரத்தில் கருப்பசாமி வழிபாடு, நெல்லை, தூத்துக்குடி,குமரியில் சுடலைமாடன் வழிபாடு என பன்மைத் தன்மை கொண்டதாக உள்ளது.

ஆங்காங்கே நாட்டார் தெய்வங்களுக்கு ஒரு சில சிறப்பிடங்கள் மட்டுமே உண்டு. சமயபுரம் மாரியம்மன், கோவை பண்ணாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வண்டியூர் மாரியம்மன் போன்ற சிறப்பிடங்கள். காசி, மெக்கா, பெத்லகேம், கைலாசமெல்லாம் நாட்டார் தெய்வங்களுக்குக் கிடையாது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் நாட்டார் வழிபாட்டில் பெண் தெய்வங்களே அதிகம். இங்கு பெண்கள் சாமியாடவும், பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும், திருநீறு கொடுக்கவும் உரிமை உண்டு. பெருந்தெய்வக் கோவில்களில் மட்டுமல்லாது எல்லா மதங்களிலும் பெண்கள் வழிபாடு நடத்துவதில் முற்றிலும் விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டார் தெய்வங்களின் மையமான பணியே மக்களைக் காவல் காப்பது தான். பெருந்தெய்வங்களைப் போல வரம் கொடுப்பதோ, அழிக்கும் தன்மை கொண்டதோ அல்ல. ஊர் எல்லையில் உறங்காமல் நின்று பாதுகாக்கும். பெருந்தெய்வங்கள் நுகர்வு சார்ந்தவை. சிறு தெய்வங்கள் உற்பத்தியோடு தொடர்புடையவை. கொடுக்கும் தன்மை கொண்டவை. இதனால் யார் நுகர்வது, யார் பெறுவது என்பது புரியும்.
எத்தகைய நோக்கத்தோடு இவை உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் புரியும்.

நாட்டார் தெய்வ உருவாக்கம் மக்களைக் காக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டது. பெருந்தெய்வங்கள் அனைத்தும் மதங்களைக் காக்கும் நோக்கம் மட்டுமே கொண்டவை.

நாட்டார் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களுக்கு சமயபுரமும், வேளாங்கண்ணியும், நாகூரும் ஒன்றாகவே தெரியும். அவைகள் வேறுவேறாகத் தெரியாது. அவர்களுக்கு நம்பிக்கை ஒன்று தான். நாடும் வீடும் நலமுடன் இருக்க வேண்டும். நாம் மட்டுமே நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டோரே இம்மக்களை சடங்குகளுக்குள் இழுத்துவர படாதபாடுபடுகிறார்கள்.

நாட்டார் வழிபாடு என்றவுடன் பலியிடுதலும், அதையொட்டிய ரத்த ஓட்டங்களும் அருவருப்பு சார்ந்ததான கண்ணோட்டம் உருவாக்கப்படுகிறது. பெருந்தெய்வக் கோவில்களில் பலிபீடம் எதற்கு உருவானது என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அதை முகர்ந்து பாருங்கள். லோகாயதவாதிகளின் ரத்தம் உறைந்திருக்கும்.

நாட்டார் தெய்வங்களின் வேர் வலிமையானது. பெருந்தெய்வங்கள் புராணங்களுடன் மட்டுமே தொடர்புடையது. அதை ஆராய்ந்தால் அதன் வலிமையே போய்விடும். ஆனால் நாட்டார் தெய்வங்கள் நிலத்திலிருந்து எழுந்தது. மனித உயிர்ப்புடன் தொடர்புள்ளது.

நாட்டார் தெய்வங்களின் மற்றொரு சிறப்பான அம்சம் யாதெனில் மக்களைக் காக்க ஆயுதமேந்தி போராடும். வாழ்விற்கான போராட்ட வழியைக் கற்றுக் கொடுக்கிறது. அவை உருவானதும் ஆதிக்க எதிர்ப்பில் மரண முற்றவை தான். நாட்டார் தெய்வப் பாடல்கள் வெறுமனே பாடி மகிழ்வதற்கோ பொழுது போக்குவதற்கோ உரியன அல்ல. அந்தப் பாடல்களில் சமூக எதிர்ப்பு இருக்கு. அடித்தள மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கு.

சில வேலைகளில் இந்த அடித்தள மக்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாத சூழ்நிலையில் அதற்கான கதைகள், பாடல்கள், வசவுகள், பழமொழிகள் ஆகிய வடிவங்களைப் பயன்படுத்தி இருக்காங்க. இந்த மாதிரி எதிர் குரல்களை இதன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டின் உண்மையான சமூக வரலாற்றை எழுத முக்கிய சான்றுகளாக இந்த நாட்டார் வழக்காறுகளைப் பயன்படுத்த முடியும். வைதீகம் சார்ந்த பெண்களிடம் இரண்டு பாடல்களை மட்டுமே பெற முடியும். தாலாட்டும்,ஒப்பாரியும் தான். ஏனெனில் உழைப்போடு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்பதால் தான்.

பெர்சிமாசிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒரு நோட்டுப் புத்தகத்தில் நிறைய நாட்டுப்புறப் பாட்டுகளைச் சேகரித்து எழுதி வைத்திருந்தார். அதை அவர் இங்கிலாந்து போகும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொடுத்தார். அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்துக்குக் கொடுத்தார்கள்.

சரஸ்வதி மகால் நூல் நிலையம் கலைமகள் இதழின் ஆசிரியர் கி. வா. ஜெகநாதனை பதிப்பிக்கச் சொன்னார்கள். அந்தப் புத்தக முன்னுரையில் இடக்கர டக்கரான சொற்களை நீக்கி விட்டேன் என்று கி. வா. ஜா. எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்களின் உள்ள ஆபாசம், நல்லது எது, கெட்டது எது என்று முடிவு பண்ணி தொகுத்து இருக்கிறார். அந்த நூலுக்குக் கொடுத்த தலைப்பு மலையருவி. மலையில் இருந்து கொட்டும் அருவி காற்றாட்டு வெள்ளம் போல் கட்டுக்கடங்காமல் இந்தப் பாடல்கள் செல்கிறது என்ற அர்த்தத்தில் தலைப்பு வைத்தார்கள்.

பிற்படுத்தப்பட்ட சாதியினரும், ஒடுக்கப்பட்டவர்களும் தான் உடல் உழைப்பு செய்வார்கள். நாட்டார் பாடல்களில் உழைக்கும் மக்களின் பிரதிபலிப்பு அதிகமாக இருப்பதைக் காணலாம். பொதுவா கதை சொல்கிற போக்கு குழந்தைகளைத் தூங்க செய்வதற்கும் சாப்பாடு ஊட்டுவதற்கு உயர்சாதி அமைப்பினர் பயன்படுத்துவார்கள். உழைக்கும் மக்கள் தொழில் களத்தில் கதை சொல்லும் போக்கு இருக்கிறது. வேலை செய்துவிட்டு சாப்பிட்ட பிறகு ஓய்வு எடுக்கும் போது கதை சொல்கிற பழக்கம் இருக்கும். நடவு நேரத்திலே கதை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் வேலை நடக்காது. களை எடுக்கும் போது களத்து மேட்டிலேயும் கதை சொல்கிற போக்கு இருக்கும்.

நாட்டார் தெய்வங்கள் சாதியோடு இணைந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். சாதி உருவான பிறகு அது சாதியோடு இணைந்திருக்கிறது. இது சமூக அதிகாரம் மட்டுமே. பண்பாட்டு அதிகாரம் அல்ல.பிடிமண் என்பது கூட இடம்பெயர்ந்தவர்கள் உருவாக்கிக் கொண்ட பண்பாட்டு பாதுகாப்பு தான். மும்பையின் தாராவியில் நாட்டார் தெய்வக் கோவில்கள் எல்லாச் சாதியினரிடத்திலும் இருப்பதைப் பார்க்கலாம். சாதிக்கான வேர்கள் எங்கிருந்து உருவானது? பெருந்தெய்வங்களை நிலைப்படுத்துவோரிடம் இருந்துதான்.

எந்தச் சாதியைச் சேர்ந்த சராசரி கிராமத்துச் சனங்களும், திருமணத்தில் முதல் வெற்றிலைப்பாக்கு குலதெய்வத்துக்கு தான் வைக்கிறார்கள். குடும்பத்தில் நல்ல விஷயத்துக்கு குல தெய்வத்துக்காகப் பொங்கல் வைப்பார்கள். திருமணமான ஆணும், பெண்ணும் முதல்ல குல தெய்வ கோவிலுக்குதான் போவார்கள். அவங்க திருப்பதி வெங்கடாஜலபதியையோ அல்லது திருத்தணி முருகனையோ வணங்கலாம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது கட்டாயச் சடங்காக இருக்கிறது.

இது வாழ்க்கையோடு இணைந்த ஒன்று.காஞ்சி சங்கராச்சாரியார், இராம. கோபாலன் செல்வாக்குக்கு ஆட்பட்டு இங்கு உயிர் பலி தடைச்சட்டத்தை கொண்டு வந்தார்கள். போராட்டங்கள் வெடித்த பிறகு அந்தச் சட்டத்தை நீக்கினார்கள். ஒரு அரசு அமைப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிரானதாக எது இருக்கிறது என்று தெரியும் அளவுக்கு தாக்கத்தை இந்த வழிபாட்டுமுறை ஏற்படுத்துகிறது. உழைக்கும் மக்களுக்கான வழிபாட்டு முறை என்ற பார்வையிலிருந்து இதை அணுக வேண்டும்.

ஆதிக்க வர்க்கம் தங்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த நாட்டார் தெய்வங்களை நிறுவன தெய்வங்களின் அம்சங்கள், அவதாரங்கள் என்று கற்பிதம் செய்து ஆரியவலையின் பெருமுடிச்சுக்குள் சிக்க வைக்க முயற்சிக்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் கிடா எங்கே என்று கருப்பு கேட்கும் கேள்விக்கான பதிலை அவர்களால் கொடுக்க முடியவில்லை என்பதில் தான் சிக்கி நிற்கிறது. கருப்பு கேட்கும் கேள்விகளுக்குள் எப்போதும் உழைக்கும் மக்களின் கோபமே அடங்கியிருக்கிறது.

காவிரியின் வடகரையிலிருந்து அடுத்து தென்கரைப்பகுதியில் சற்று பயணமாவோம். திருப்பத்தூர் என்றால் பௌத்தம் இருந்த காலத்தில் இருந்த பத்து ஊர்களின் தலைமை இடம் தான்.
திருவாரூர் ஆறு ஊர்களின் தலைமையிடம் என்கிறார்கள். அது யாருக்கான ஆரூர். அது திருவாரூர் என்று ஏன் ஆனது?

காவிரிப்பயணம் தொடரும்...
-Surya Xavier அவர்களின் பதிவு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன?
Permalink  
 


மதம்

உங்கள் கருத்தில் மதம் என்றால் என்ன?

இக்கேள்வியை நிறையப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் கேள்வி-பதில் முறையில் இதைச் சொல்ல முனைந்தேன்.
மதம் என்பதற்குப் பிடிவாதமான, அசைக்கமுடியாத நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Dogma என்று சொல்வதற்கு ஒப்பானது இது. அதனால்தான் வள்ளலார் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார். பல இடங்களிலும் இவ்வாறு மதத்தைச் சாடியிருக்கிறார்.
இன்றுள்ள எல்லா மதங்களும் வெறும் Faith என்று சொல்லக்கூடிய விசுவாசமாக மட்டும் இல்லை. அவை ‘டாக்மா’க்களாகத்தான் இருக்கின்றன. இதற்கு இந்து மதம் பற்றி வடமாநிலங்களில் நிலவும் மனப்பான்மையே நல்ல உதாரணம்.
வடமொழியிலும் இந்தியிலும் மதம் என்பதைக் குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைக் கையாள்கிறார்கள். தர்மம் என்பதற்குத் தமிழில் நாம் கொள்ளும் அர்த்தப்படி நோக்கினால் இந்து தர்மம் என்று சொல்வது தவறு. மதத்துக்கும் அறத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என் சான்றிதழில் என் மதம் இந்து என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும், நான் இந்து அல்ல. எனக்கு மதம் கிடையாது, சமயம் என்ற ஒன்று கிடையாது என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். இன்றைய இந்து மதம் செல்லும் போக்கில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை. கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவை ‘டாக்மேடிக்’ மதங்கள். அதாவது பிடிவாதமான மதங்கள். திருமணம் செய்தாலும் கூட நீங்கள் தான் கிறித்துவராகவோ முஸ்லிமாகவோ ஆகவேண்டுமே தவிர அவர்கள் இந்துவாக மாட்டார்கள். அதனால்தான் ‘டாக்மேடிக்’ என்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதம் தளர்ச்சியான, ‘எந்தச் சாமியையும் நீ கும்பிடலாம்’, ‘கும்பிடாமல் நாத்திகனாகவும் இருக்கலாம்’ என்று சொல்கின்ற மதமாகத்தான் அது இருந்திருக்கிறது. இப்போது வடநாட்டு ‘டாக்மேடிக்’ தன்மையை இங்கு புகுத்தப் பார்க்கிறார்கள். கூடவே சமஸ்கிருதத்தையும், இந்தியையும். இதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.
நான் கோயிலுக்குச் செல்வதில்லை. கடவுளைக் கும்பிடுவது என்ற செயல் ஒருபக்கம் பிடிக்காதிருந்தாலும், அங்கு நிகழும் சுரண்டலும், பார்ப்பனிய மேலாண்மையும், பணத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும் தன்மையும் எனக்குச் சற்றும் ஒவ்வாதவை. மிக இளமையிலிருந்தே இந்த மனப்பான்மை எனக்கு வருவதற்கு என் தந்தையும் என் சித்தப்பாக்களும்தான் காரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வணங்குதல்

வணங்குதல் பற்றி உங்கள் கருத்தென்ன?

1. கடவுளை வணங்குபவர்கள் எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். உதாரணமாகக் கிறித்தவர்கள், ஒவ்வொரு உணவின்போதும் “இன்றைய உணவை எங்களுக்கு அளித்த பிதாவே உங்களுக்கு நன்றி” என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இதையே முஸ்லிம்களும், நிறைய இந்துக்களும் செய்வதை-அதாவது இறைவனுக்கு நன்றி பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

நாம் இளமையில் நம் அப்பாவின் ஊதியத்தில்தான் சாப்பிட்டு, உடைகள், பிற வசதிகள் போன்றவற்றைப் பெற்று, கல்வியும் பெற்றோம். ஒவ்வொருமுறை வீட்டிலும் சாப்பிடும்போதும், “நீங்கள் சம்பாதித்த பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், உங்களுக்கு நன்றி” என்று கூறுவோமா? கூறியிருந்தால் அவர்களுக்கும்தான் எப்படி இருந்திருக்கும்? அதுபோல கடவுளைப் பிதா, அதாவது தந்தை, அதாவது அப்பா என்று உண்மையில் நினைத்தால், ஏன் நன்றி கூற வேண்டும்? நமக்குத் தந்தையும் தாயும் செய்வனவற்றைக் கடமை என்றல்லவா நினைக்கிறோம்? அதுபோல ஏன் கடவுளுக்கும் நினைக்கலாகாது?

2. வணங்குதல் என்றால் ‘பணிவாக இருத்தல்’,’ கீழ்ப்படிந்து நடத்தல்’ (ஒபீடியன்ஸ்) என்றுதான் நேரான அர்த்தம். Pray என்ற அர்த்தம் இல்லை. கிராமத்தில் கடையில் பையனைப் போட்டால், சில நாட்கள் கழித்து, “பையன் வணங்கி நடந்து கொள்கிறானா, வணக்கமாக இருக்கிறானா” என்று கேட்பார்கள். அதாவது கீழ்ப்படிந்து, அடக்கமாக என்று பொருள். கடவுளுக்கும் நீ கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தம். உண்மையில் கடவுளை நம்புபவர்கள் யாரும் கடவுளின் போதனையாகச் சொல்லப்படும், வேதநூல்களில் கூறப்படும் எந்தக் கருத்தையும் ஏற்று நடப்பதில்லை. உதாரணமாக “ஒட்டகத்தின் காதில் ஊசி நுழைந்தாலும் ஒரு செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்று கிறித்துவம் கூறுகிறது. ஆனால் உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கிறித்துவர்கள்தானே? “திருடாதே, பொய் சொல்லாதே” என்றெல்லாம் மதங்கள் போதிக்கின்றன. யார்தான் கீழ்ப்படிந்து இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்? சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் திருடுகிறோம், நமக்குத் தேவை என்று நினைத்தால் பொய் சொல்கிறோம். அப்படிச் செய்யாதவர்களுக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பெயரும் சூட்டுகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Karpman Triangle

The most popular model of interpersonal, family relationships is Karpman Triangle. It was first proposed in 1968 by Steven Karpman, a classical scholar of transactional analysis. 

Within such a triangle of relationships, there can be two, three or more people. But there will always be 3 distinct roles present: a victim, a persecutor, and a rescuer, and the roles of the participants may often overlap or become switched. Despite such fluctuations, one thing remains unchanged – all participants are manipulators, and end up bringing pain and suffering to themselves and others.

The Victim

For someone with the victim role, life has become an unyielding cycle of misery. They believe that everyone treats them unjustly, and constantly feel too exhausted to cope with life’s challenges. Victims often feel offended, afraid or ashamed, and tend to become jealous or envious far too easily. They usually only expect bad things to come of life, and often lack the will, power or time to change their situation for the better.

The Persecutor

For someone with the persecutor role, life is seen as an opponent, which is the source of all woe. They are often angry, tense, irritated or scared, and find it difficult to let go of past quarrels. Persecutors also often tend to constantly predict future problems, and frequently criticize and attempt to control those around them. They typically feel that they bear an unreasonably heavy load, and often end up completely drained of energy and willpower.

The Rescuer

The rescuer is the role that ties the other two roles together, since they display anger towards the persecutor, while feeling pity for the victim. Rescuers usually feel that they are more important than others, and are proud of their seemingly important role. However, this self-perception of importance is merely an illusion, since they only end up interfering where they aren’t needed, and often end up aggravating negative situations. A rescuer’s only goal is to achieve self-affirmation, and are typically offended when their ‘help’ goes unapprised or unrewarded.

Persecutors find it hard to leave a victim alone, and often criticize and drill them. The victim then tries hard, but end up becoming exhausted, and begin to complain. Rescuers then give some advice to the victims, and offer them comfort and a shoulder to cry on.

This cycle can go on for many years, with many of the participants changing roles from time to time, often without even realizing what’s taking place. They may even believe that everything is as it should be. This is because the persecutor gets the opportunity to release their frustration, the rescuer rejoices in their role as a hero, and the victim gets comfort from the rescuer’s effort.

They all depend on each other to ease the burden of their responsibilities, and end up manipulating each other to fulfill their own needs. Such a relationship can never be called loving, since it is all about the desire to dominate, without any thought for nurturing real support, love or happiness.

What’s more, living within a Karpman triangle has a highly destructive influence on the future of any children involved. Most probably, such kids will end up suffering from self-confidence issues, and will find it very difficult to make rational choices throughout their lives.

How to Escape the Triangle

1. Advice For Victims
• Stop complaining, and start searching for constructive ways to improve your situation.
• Stop waiting for salvation, and accept once and for all that nobody owes you anything and that the world is constantly changing.
• Stop making excuses, and don’t feel bad if you fail to live up to somebody else’s expectations.
• Start taking responsibility for your own choices, and be more assertive when making a decision.

2. Advice for Persecutors
• Try to resolve disputes without aggression or anger.
• Stop blaming other people and circumstances for your struggles.
• Stop asserting dominance over those who appear to be weaker than you.
• Stop expecting people to act based on your feelings and beliefs, and accept that everyone is different in their own way.

3. Advice for Rescuers
• If nobody asks for your advice, then don’t give it.
• Stop thinking that you know how to deal with life’s problems better than everyone else.
• Help because you want to, and not because you want to be praised or rewarded.
• Before doing ‘good deeds’ you should ask yourself if your involvement is really required.

Transforming the Triangle

To change a negative pattern into a positive one, you’ll first need to identify what role you are currently occupying. Then, simply follow the advice above, and you should see a new pattern begin to emerge:

 

1. A victim can turn into a hero. Instead of complaining, a hero will face life’s challenges with enthusiasm and will end up feeling stronger and more confident after each challenge they overcome.
2. A persecutor can turn into a philosopher. Watching a hero’s actions as a bystander, a philosopher is ready to accept any result since they know that everything will work itself out in the end.
3. A rescuer can turn into a motivator. They stimulate the hero for showing courage, and help inspire them to do even greater things in the future.

 
The Perfect Model
With enough willpower and love, the positive pattern shown above can become even greater, and may eventually turn into the perfect triangle:

1. A hero may become a winner. They perform actions not to be praised, but to apply their creative urges in a constructive manner. Winners don’t need approval from others, but enjoy the process of creation, and the change to change their environment in a positive way.
2. A philosopher may become a contemplator. They see connections that others can’t, and create new ideas, while acting on opportunities.
3. motivator may become a strategist. They provide the contemplator with constructive advice and encouragement, which will help to bring their dreams to life.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard