குறிஞ்சிப்பாட்டு – Kurinjippāttu
Translation by Vaidehi Herbert
Copyright © All Rights Reserved
பாடியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 261
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
குறிஞ்சிப்பாட்டு என்ற பெயர் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல். குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை. நச்சினார்க்கினியர் கூற்று, “இதற்குக் குறிஞ்சி என்று பெயர் கூறினார். இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழுவின் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின், அன்றியும் முதலானும் கருவாலும் குறிஞ்சிக்குரியாகவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்”.
இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.
அகத்திணையில் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகியவர்கள் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு, தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தல் ஆகும்.
This poem has 261 lines in Āsiriyappā/Akaval meter and was written by Kapilar for the Aryan king Pirahathan (Brahadathan) to inform him of the Tamil love and marriage traditions, according to the colophon. It describes the mountain country and its fauna and flora. A chief of a mountain falls in love with a young woman and the love is reciprocated by her. The young woman’s friend assists the lovers to meet. The family finds changes in their daughter. They worry and bring diviners to find out the reason for her illness. However, the wise friend helps the young woman by talking to the foster mother so that a marriage can be arranged.
தோழி செவிலியை அணுகி வேண்டுதல்
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், 5
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி! (1-8)
The heroine’s friend talks to the foster mother
Mother, may you live long!
I plead for you to listen to me!
You are sad, unaware and confused,
because of the illness that has
caused her jewels to slip down,
my friend with a shining forehead
and thick, soft hair.
You tried to find the reason for her
harsh illness from the diviners in town.
You prayed to god in different forms,
with offerings of flowers, fragrant smoke
and aromatic substances, to rid her
illness that is difficult to cure.
Notes: வேறு பல் உருவில் கடவுள் பேணி (6) – நச்சினார்க்கினியர் உரை – வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலவாகிய ஒன்றனை ஒன்றொவ்வாது வேறுபட்ட வடிவங்களில் எல்லாம் உள்ளுறையும் இறைவன். அன்னை வருந்துதல்: அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே. அகநானூறு 48 -அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி, நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை.
Meanings: அன்னாய் வாழி – May you live long, mother, வேண்டு அன்னை – I request you to listen, ஒண்ணுதல் – bright forehead, ஒலி மென் கூந்தல் – thick soft hair, என் தோழி மேனி – my friend’s body, விறல் இழை – perfect jewels, நெகிழ்த்த – caused loosening, caused slipping down, வீவு அரும் கடு நோய் – harsh illness that is difficult to ruin, harsh disease that is difficult to cure, அகலுள் – inside (in town), ஆங்கண்- there, அறியுநர் – those who foresee, diviners, soothsayers, வினாயும் – asking the reason, பரவியும் – praising, தொழுதும் – praying, விரவு மலர் தூயும் – throwing all kinds of flowers, வேறு பல் உருவில் – in different forms, கடவுள் பேணி – worshipped god, worshipped various gods, நறையும் – with fragrant smoke, விரையும் – with aromatic things, ஓச்சியும் – using, performing, அலவுற்று – get confused, எய்யா – in ignorance, மையலை – you are confused, you are bewildered, நீயும் வருந்துதி – you are sad
தோழியின் சொல் வன்மை
நல் கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,
புள் பி்றர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும், 10
உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின், (9-12)
Words of the Eloquent Friend
My friend’s fine beauty is ruined.
Her fragrant shoulders have thinned.
Others witness her bangles slipping down.
Unable to deal with this painful affliction
that is difficult to bear, she
hides it from everybody and suffers alone.
At my pressure and urging, she said,
Notes: உய்யா அரும் படர் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் கொண்டு பிழைத்தற்கரிய நோய், C. ஜெகந்நாதாசார்யார் உரை – பிரிவு ஆற்றாளாகிய தலைமகள் தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலாலாகிய நினைவு.
Meanings: நல் கவின் தொலையவும் – fine beauty to be spoilt, நறும் தோள் நெகிழவும் – fragrant shoulders to become thin, புள் – bangles (her bangles slipped down), பிறர் அறியவும் – for others to be aware (of this disease), புலம்பு வந்து அலைப்பவும் – worry alone in sorrow, உள் கரந்து உறையும் – what’s hiding/residing in her mind, உய்யா அரும் படர் – difficult disease that is unable to bear, thinking constantly about her sorrow, செப்பல் – to tell, வன்மையின் – with ability, செறித்தியான் கடவலின் – since I pressed and urged her (செறித்தியான் – குற்றியலிகரம், செறித்து யான்)
தலைவியின் துன்பம்
முத்தினும், மணியினும், பொன்னினும், அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் 15
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்;
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப,
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி, 20
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கென
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று 25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும். (13-26)
The heroine’s Sorrow
“If jewels that are well crafted with
perfect proportions of pearls, gems
and gold are ruined, they can be fixed.
If qualities like wisdom, pride and
character diminish, the wise will not
say that it is easy to remove blemishes
and restore them to their original state
with flourishing fame, even by those
who are great.
Ruining both – the desire of my
parents to choose a husband for me,
and my naivete, the two of us united
in secret love, escaping the strict
guard of my father owning a huge
chariot. Will there be blame for this?
Even if my parents don’t agree to me
marrying him in this birth, I desire
to be with him in the next one.”
My friend who is afflicted with love
is confused and distressed,
her bewildered looks like that of a deer.
Notes: ஆய்ந்த மன்றல் (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானும் தலைவனுமே தேர்ந்துகொண்ட களவு மணம், நச்சினார்க்கினியர் உரை – இந்த மணம் தலைவனும் யானும் பெருமையும் உரனும் அச்சமும் நாணும் நுணுகிய நிலையால் பிறந்த கந்தருவ மணமென்று.
Meanings: முத்தினாலும் மணியினும் பொன்னினும் – with pearls and gems and gold, அத்துணை நேர்வரும் – all those joined together and well crafted, குரைய – அசைச்சொல், an expletive, கலங்கெடின் – if the jewels get ruined, புணரும் – they can be put together, they can be fixed, சால்பும் – and wisdom, வியப்பும் – and pride, இயல்பும் – and discipline, குன்றின் – if they diminish, மாசறக் கழீஇய – washed without blemish (கழீஇ – சொல்லிசை அளபெடை), வயங்கு புகழ் – flourishing fame, அந்நிலை – like in the past, நிறுத்தல் – making it exist, ஆசு அறு காட்சி – faultless intelligence, ஐயர்க்கும் – even for the wise, even for elders, அந்நிலை எளிய என்னார் – they will not say that is easy to attain that, தொல் மருங்கு – ancient texts, அறிஞர் – scholars, those who are learned, மாதரும் – and parents, மடனும் – and my naïve nature, and my delicate nature (மடன் – மடம் என்பதன் போலி), ஓராங்கு – together, தணப்ப – to be ruined, நெடுந்தேர் எந்தை – my father with a big chariot, அருங்கடி – tight protection, நீவி – going past, இருவேம் ஆய்ந்த – both chose, both united because our pride and strength and fear and shyness were all reduced, மன்றல் – களவு மணம், secret love union, இது என – that it is, நாம் அறி உறாலின் – if we insist, பழியும் உண்டோ – will there be blame, ஆற்றின் – even after advising, வாரார் ஆயினும் – even if they do not agree and come, ஆற்ற – to wait, to tolerate, to bear, ஏனை உலகத்தும் – in the next birth, இயைவது ஆல் நமக்கென – that she could be with him (ஆல் – அசை நிலை), மான் அமர் நோக்கம் – deer-like delicate looks, looks desired by deer, கலங்கிக் கையற்று – worried and helpless, ஆனா – endless, without getting reduced, சிறுமையள் – she who is afflicted with love disease, இவளும் – my friend, தேம்பும் – she is distressed
தன்னிலை கூறும் தோழி
இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடியானும் ஆற்றலேன். (27-29)
Friend who explains her position
Unable to bear my pain and
despite fearing you and my friend,
I am working with both of you,
like wise men who work with two
great kings fighting with each other.
Notes: அறத்தொடு நிற்கும் காலத்தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12).
Meanings: இகல் மீக் கடவும் – attacking with enmity, இரு பெரு வேந்தர் – two great kings, வினையிடை நின்ற – standing between them trying to bring them together, சான்றோர் போல – like the elders, இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன் – I am unable to bear my sorrow fearing the both of you (அச்சமோடியானும் – குற்றியலிகரம், அச்சமோடு யானும்)
மாதர் சினம் தணிய தலைவியின் மனம் கூறும் தோழி
கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும், 30
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ! (30-34)
She Reveals her Friend’s Mind
When parents give their daughter
in marriage, they make sure that
everything is perfect, and that his
family is of good nature and equal
to them in status.
Without thinking about all that,
we conducted a rare marriage boldly
and with protection. I want you to
understand it well. I will tell you how
it happened. So please do not get
angry!
Notes: பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 25). சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).
Meanings: கொடுப்பின் – when giving (one’s daughter in marriage), நன்கு உடைமையும் – that everything will be perfect, குடி நிரல் உடைமையும் – that there is equal family status, வண்ணமும் – their character, துணையும் – his family, பொரீஇ – comparing (சொல்லிசை அளபெடை), எண்ணாது – without thinking, எமியேம் – alone, we, துணிந்த – boldly, with courage, ஏமம் சால் – with great protection, அரு வினை – a rare act (marriage), நிகழ்ந்த வண்ணம் – like it happened, நீ நனி உணர – for you to understand it well, செப்பல் ஆன்றிசின் – I will tell you (ஆன்றிசின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person), சினவாதீமோ – please do not get angry (ஈ, ஓ – முன்னிலையசைகள், expletives of the second person)