நெடுநல்வாடை – Nedunalvādai
Translation by Vaidehi
© All Rights Reserved
பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 188
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
சென்னை ராணி மேரி கல்லூரி பேராசிரியர் முனைவர் அபிராமசுந்தரி அவர்கள் பாடியது.
கேட்டு மகிழுங்கள்.
மழை பொழிதல்
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென; (1 – 2)
Rains Poured
Unfailing clouds climbed to the right,
circling and chilling the earth and came
down as fresh rains.
Notes: வலன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலப் பக்கம். மழையும் காற்றும் வலஞ் சூழுமாயின் அவை மிகும் என்ப. மதுரைக்காஞ்சி – வல மாதிரத்தான் வளி கொட்க. வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.
Meanings: வையகம் பனிப்ப – causing the earth to get cold, வலன் ஏர்பு – climbed on the right, climbed with strength, வளைஇ – circled (சொல்லிசை அளபெடை), girdled, பொய்யா வானம் – unfailing clouds (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), புதுப்பெயல் பொழிந்தென – since new rains fell
இடையர் நிலை
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்,
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 5
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும் பனி நலியப், பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க; (3 – 8)
Situation of Cattle Herders
Agonized cattle herders weilding rods
with curved ends, hated the floods and
moved with their cattle to new lands
in confusion and sorrow, and water
droplets from their garlands with
long-petaled glory lily blossoms,
dripped on their bodies.
Together, they warmed their hands
in the fires they lit, and hit their cheeks
with them as they trembled in the freezing
cold.
Notes: கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 – வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 74, அகநானூறு 195 – வளைந்த கோல், அகநானூறு 17 – கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை – முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல். கொடுங்கோல் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை- ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். கோவன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல். கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (8) – நச்சினார்க்கினியர் உரை – கையை நெருப்பிலே காய்த்து அதிற்கொண்ட வெம்மையை கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியர் என்றார், கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையவராய் பற்பறை கொட்டி நடுங்கி நிற்ப.
Meanings: ஆர்கலி – floods (மிக்க ஓசையுடையது, வெள்ளம், வினைத்தொகை அன்மொழி), முனைஇய – hating (சொல்லிசை அளபெடை), கொடுங்கோல் கோவலர் – cattle herders with rods that are curved on one end, cattle herders with harsh sticks, ஏறுடை – with bulls, இன நிரை – cattle herds, வேறு புலம் பரப்பி – moved away to other lands, புலம் பெயர் – move away from the land, புலம்பொடு – in loneliness, கலங்கி – distressed, confused, கோடல் – malabar glory lilies, நீடு இதழ் – long petals, கண்ணி – garland, நீரலைக் கலாவ – as water droplets dripped (on them), மெய்க்கொள் – on their bodies, பெரும் பனி நலிய – sad because of the great cold, பலருடன் – with many others, கைக்கொள் கொள்ளியர் – they warmed their hands in lit fires, கவுள் புடையூஉ நடுங்க – they applied the heat hitting by on their cheeks and trembled, their teeth clattered and they trembled (புடையூஉ – இன்னிசை அளபெடை)
கூதிர்க்காலத்தின் தன்மை
மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழக், கறவை 10
கன்று கோள் ஒழியக் கடிய வீசிக்,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்; (9 – 12)
Cold Season
Animals forgot grazing, female monkeys
struggled greatly, birds fell off their tree
perches and cows kicked and chased away
their new-born calves in anger.
Such was the night’s cold that could freeze
a mountain.
Notes: மந்தி கூர (9) – நச்சினார்க்கினியர் உரை – குரங்கு குளிர்ச்சி மிக. குரங்கு குன்னாக்க (குனிய) என்பாரும் உளர்.
Meanings: மா – animals, மேயல் மறப்ப – forgot to graze, மந்தி கூர – female monkeys face the extreme cold, பறவை படிவன வீழ – birds fell off their perches, கறவை – cows that had young calves, கன்று கோள் ஒழிய – pushed away calves that were drinking milk, கடிய – in anger, வீசி – kicked, குன்று குளிர்ப்பன்ன – like chilling mountains, கூதிர்ப் பானாள் – cold season’s midnight
மழைக்காலச் செழிப்பு
புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்,
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்,
பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி, 15
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்,
கயல் அறல் எதிரக், கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப, 20
அங்கண் அகல்வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை,
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு, 25
தெண்ணீர்ப் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க; (13 – 28)
Flourishing Rainy Season
Bushes were covered with delicate
bindweed vines bearing thick white
flowers and sponge gourd vines with
golden yellow flowers.
Opportunistic flocks of green-legged
storks with delicate wings and painted
storks with red stripes, waited on the
wide fine black sand streaked with wet
white sand, and caught carp fish that
swam against the rapids, as the water
flow slowed down, taking whatever they
could.
Billowing white clouds rose to the huge,
wide sky that was clear after the rains,
and learned to rain showering tiny drops
of water.
Due to the heavy rains, in the wide fields,
paddy grasses flourished with abundant
leaves, their heavy spears filled with
mature grains, bent.
Betel palms with thick trunks and
sapphire-colored necks from which thick
fronds branch, were loaded with many
clusters of mature nuts, swollen and bulged
on their sides, with sweet, thick water inside.
In the huge grove on the cold summit, various
flowers blossomed, and colored water droplets
hung from tree branches.
Notes: துவலை கற்ப (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில்கள் தம்பால் மிக்குள்ள நீரைப் போற்றாமல் மிக்குப் பெய்து விட்டுப் பின்னர் பின்னர் நீர் வறண்ட வெண்மேகமாகி இன்னும் மிக்குப் பெய்தல் தவறு என்று அறிந்தனவாய் இனியேனும் சிறிதாகப் பெய்து பழகுவோம் எனக் கருதி அங்ஙனம் பெய்ததற்குப் பயிலுமாறுப் போலத் தூவ என்று ஒரு பொருள் தோன்றக் கற்ப என்றார். ஐங்குறுநூறு 461 – வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே. மதுரைக்காஞ்சி 400 – தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய். நாரை, according to the University of Madras Lexicon is either the Tantalus leucocephalus (old name for painted stork – not used any longer) or the Grus cineren (Common crane). The painted stork (Mycteria leucocephala – current name) has red markings on its wings. குரூஉ (28) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).
Meanings: புன் கொடி – thin vines, delicate vines, முசுண்டை – Leather-berried bindweed, Rivea ornata, பொதிப்புற – thick sides, வான் பூ – white flowers, பொன் போல் பீரமொடு – with gold colored ridge gourd/sponge gourd flowers (பீரமொடு – அம் சாரியை), புதல் புதல் – on all the bushes, மலர – they blossom, பைங்கால் கொக்கின் – green/yellow legged storks’, மென் பறை – delicate wings, தொழுதி – flocks, இருங்களி – black mud, பரந்த – spread, ஈர வெண்மணல் – wet white sand, செவ்வரி நாரையொடு – with painted storks with red stripes, Mycteria leucocephala, with cranes with red stripes, எவ்வாயும் கவர – wherever there are fish, கயல் அறல் எதிர – carp fish swimming opposite the stream flow, Cyprinus fimbriatus, கடும் புனல் – rapidly flowing waters, சாஅய் – slowed down (இசை நிறை அளபெடை), பெயல் உலர்ந்து – rain ended, எழுந்த – rose, பொங்கல் வெண்மழை – abundant white clouds, அகல் இரு விசும்பில் – in the wide huge/dark skies, துவலை – water spray, rain droplets, கற்ப – learned, அங்கண் – there, அகல்வயல் – wide fields, large fields, ஆர் பெயல் – heavy rains, கலித்து – flourished, வண் தோட்டு – with abundant leaves, நெல்லின் – of paddy grass, வருகதிர் வணங்க – mature grain spikes bent down due to the weight, முழு முதற் கமுகின் – of betel nut trees with thick trunks, மணி உறழ் எருத்தின் – on the sapphire-like necks (உறழ் – உவம உருபு), கொழு மடல் – thick fronds, thick leaves, அவிழ்ந்த – opened, குழூஉக் கொள் – thick, rounded (குழூஉ – இன்னிசை அளபெடை), பெருங்குலை – huge bunches, நுண் நீர் – abundant water, tender water, தெவிள வீங்கி – big and swollen, புடை திரண்டு – rounded on the sides, bulging on the sides, தெண் நீர் – clear water, பசுங்காய் – green betel nuts, சேறு கொள முற்ற – have become sweet and mature, நளி கொள்- being cold, சிமைய – at the mountain summit, விரவு மலர் – various kinds of flowers, வியன் கா- wide grove, huge grove, குளிர் கொள் சினைய – on the cool tree branches, குரூஉத் துளி – colored water droplets (குரூஉ – இன்னிசை அளபெடை), தூங்க – were hanging