New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முல்லைப்பாட்டு


Guru

Status: Offline
Posts: 24769
Date:
முல்லைப்பாட்டு
Permalink  
 


முல்லைப்பாட்டு

http://sangacholai.in/10-5.html

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி		5
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது		10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர	15
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்		20
பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி	25
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற			30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டென
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி	35
கல்லா இளைஞர் கவளம் கைப்ப
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை		40
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து
வாங்கு வில் அரணம் அரணம் ஆக
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு
குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறு புறத்து	45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்		50
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெரு மூதாளர் ஏமம் சூழ
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்	55
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து		60
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல்
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்		65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய		70
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை			75
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல்
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து	80
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து
பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல		85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அம் செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு	90
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர
செறி இலை காயா அஞ்சனம் மலர
முறி இணர் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ		95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செம் நில பெரு வழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில்	100
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடும் தேர் பூண்ட மாவே


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலைக் குடித்து வலமாக எழுந்து,
மலைகளை(இருப்பிடமாக)க் கொண்டு எழுந்த விரைவான போக்கினையுடைய மேகம்		5
பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி,						10
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க -
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள்
(குளிரால்)நடுங்குகின்ற தோளின் மேல் கட்டின கையளாய் (நின்று), ‘கையிலுள்ள
கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய			15
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால்
நல்லதே, நல்லவர் நற்சொல், பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின்							20
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே', என்று
காட்டியும் காட்டியும் உணராளாய், கலக்கம் மிக்கு,
பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப -
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,		25
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள
இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் -
தழைகளால் வேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,
நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற								30
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
உயர்ந்து நிற்றலையுடைய கரும்புகளுடன் (நெற்)கதிரைச் செறிந்து கட்டிப்போட்ட
வயலில் விளைந்த இனிய (அதிமதுரத்)தழையைத் உண்ணாது, (அவற்றால் தம்)நெற்றியைத் துடைத்து,
கூர்மையான முனையுடைய கொம்புகளில் (வைத்த)தம் துதிக்கையில் கொண்டு நின்றனவாக,
கவைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி,	35
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட -
(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
(தன்)முக்கோலில் (அந்த உடையினை)இட்டுவைத்த தன்மையை ஒக்க, (அறத்தால் பொருகின்ற)நல்ல போரில்
நழுவி விழாத வலிய (ஊன்றப்பட்ட)வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி
கூடமாக(க் கால்களை) நட்டுக் கயிற்றை வலித்துக்கட்டின (கூடாரங்களான)இருப்பின்கண்	40
பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறியீட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து,
(இங்ஙனம்)நாணேற்றப்படும் விற்களைக்கொண்ட அரணே (தங்களுக்கு)அரணாக -
விதம்விதமான, பலவாகிய பெரிய படைக்கு நடுவே, வேறோரிடத்தே,
நெடிய குத்துக்கோலுடன் பண்ணின கண்டத்திரையை வளைத்து, (அரசனுக்குரிய)இடமாகக் கொண்டு,
குறிய தொடியையுடைய முன்கையினையும் கூந்தல் (அசைந்துகிடக்கின்ற)அழகிய சிறிய முதுகினையும்	45
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட -
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்,	50
காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள்
துவலை தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல,
(தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டையிட்ட, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய
மிக்க அனுபவமுடையோர் (மெய்க்காப்பாளராகக்)காவலாகச் சூழ்ந்து திரிய -
பொழுதை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள்					55
(அரசனை)வணங்கியபடி காணும் கையையுடையவராய், விளங்க வாழ்த்தி,
‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே, உனது
சிறிதளவு நீரைக்கொண்ட கடிகைப் பாத்திரம் (காட்டும் நேரம்)இத்துணை' என்று சொல்ல -
கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,							60
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில்,
அழகினையுடைய மாணிக்க மணி விளக்கை எரியவைத்துத், திண்ணிய கயிற்றில்
திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று
உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்)				65
சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக -
உக்கிரமாய்ச் செல்லும் போர்(மீது கொண்ட) விருப்பத்தோடு கண்ணுறக்கம் பெறாமல்,
ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப்
பிடித் திரளை மறந்த வேழத்தையும்; வேழத்தின் -
பாம்பு பதைப்பது போல் (பதைப்பினையுடையவாக) - பரிய கைகள் அற்று விழ			70
தேன் பரக்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கி,
செஞ்சோற்றுக் கடனிறுத்து, இறந்துபோன வீரரையும், நினைத்தும்; சேணங்களை அறுத்துக்
கூரிய முனைகளையுடைய அம்புகள் (வந்து)அழுத்துகையினால் செவி சாய்த்துப்
புல் உண்ணாமல் வருந்தும் குதிரைகளை நினைத்தும்;
ஒரு கையைப் படுக்கையின் மேலே வைத்து, ஒரு கையில்					75
முடியுடன் (மணிக்கட்டிலுள்ள)கங்கணத்தைச் சேரவைத்து, நீண்ட நேரம் சிந்தித்து -
(மறுநாட்போரில்)பகைவரை நோக்கி வாளைப் பிடித்த வலியினையுடைய கையால்,
பொலிவு தங்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை நிலைபெறுத்தி,
பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்
இனிய துயில்கொண்டு தங்குயிருப்பவனைக் காணாளாய், வருத்தமுற்று				80
நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,	
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,
பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய,						85
(எல்லா)இடங்களும் சிறந்து உயர்ந்து நிற்கும் ஏழு நிலையினையுடைய மாடத்தில்,
(சாய்ப்புகள் கூடும்)மூட்டுவாய்களினின்றும் சொரிதலைச் செய்யும் பெரிதாய்த் திரண்ட அருவிகளின்
இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசையைக் கேட்டவளாய்க் கிடந்தோளுடைய
அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன - வென்று, பகையரசரின்
(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,			90
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க - நுண்மணலிடத்திலுள்ள
நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்(போல்) மலர,
தளிரினையும் கொத்தினையுமுடைய கொன்றை நல்ல பொன்னைச் சொரிய,
கோடலின் குவிந்த முகைகள் அகங்கை(போல) விரிய,						95
திரட்சி நிறைந்த தோன்றி உதிரம்(போலப்) பூக்க,
காடு தழைத்த செம்மண் பெருவழியில்,
மழை வேண்டுமளவு பெய்த வளைகின்ற கதிரையுடைய வரகுக்காட்டில்
முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,
(மேலே கருமேகங்கள் நகர, கீழே)எதிராகச் செல்லும் வெண்மேகங்கள் (துவலை)பொழியும் (ஆணித்)திங்கள்(முதல் நாளில்)100
- முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய,
விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்
(தான் எடுத்துக்கொண்ட)வினை (எக்காலமும்)விளங்கும் நெடிதாகிய தேரைப்பூண்ட குதிரை(ஆலின).


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு – Mullaippāttu

Translation by Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

பாடியவர்:  காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்:  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:  முல்லை, பாவகை:  ஆசிரியப்பா, மொத்த அடிகள்:  103

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

ராணி மேரி கல்லூரி பேராசிரியர் முனைவர் அபிராமசுந்தரி அவர்கள் பாடியது.

கேட்டு மகிழுங்கள்.

 

நச்சினார்க்கினியர் உரை – இப்பாட்டிற்கு முல்லை என்று பெயர் கூறினார்.  முல்லை சான்ற கற்புப் பொருந்தியதனால்.  இல்லற நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லற நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்தலென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று.

This song has 103 lines in Āsiriyappā/Akaval meter, and was written by poet Nappoothanār. The king is Thalaiyālankānathu Cheruvendra Neduncheliyan.  This is the shortest of the 10 idylls.  The poem describes the queen waiting patiently for her husband who has gone on a military campaign, the battle camp, Yavanas in the camp, women guards, and elephant trainers who speak in a northern language.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.

‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்று தொல்காப்பியம் கூறுகின்றது (புறத்திணை இயல் 6).  மன்னனின் பாசறை நிகழ்வுகள் மூலம், இந்த முல்லைத் திணைப் பாடலில் உள்ள வஞ்சித் திணைப் பகுதியை நாம் காணலாம்.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – முல்லைத்திணை பொருள்பற்றி வந்த இப்பாட்டின் பொருளுக்கு ஏற்ப முல்லை நிலத்திற்குரிய தெய்வமாகிய திருமாலும், அத்திணைக்குரிய பெரும்பொழுதாகிய கார்ப்பருவமும், சிறு பொழுதாகிய மாலைப் பொழுதும், இவ்வடிகளிலே கூறப்பட்டமை உணர்க. ‘காரும் மாலையும் முல்லை (தொல்காப்பியம், அகத்திணையியல் 6).

மால் போலத் தோன்றும் மழை மேகம்

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)

The Rising Rain Clouds appeared like Towering Thirumāl

Clouds that absorbed water from the roaring,
cold ocean rose up with strength up to the
mountains with great speed, appearing like
Thirumāl who protects the vast earth
bearing a discus and right-twisted conch shell,
when he towered high as water was poured
in his large hands that embraced Thirumakal.

Heavy rains fell during the evening hours of
painful separation.

Notes:  நனந்தலை (1) – அகன்ற இடம், ‘நனவே களனும் அகலமும் செய்யும்’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 78).  வலன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலப் பக்கம்.  முல்லைத் திணைக்குரிய கடவுளான திருமாலும், பெரும்பொழுதாகிய கார்காலமும், சிறுபொழுதாகிய மாலைப் பொழுதும் இவ்வடிகளில் உள்ளன.  நீர் செல நிமிர்ந்த மாஅல் போல (3) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – மாவலி ஓர் அசுரன்.  திருமால் வாமன அவதாரம் எடுத்துச் சென்று ‘மூன்றடி மண் தா’ என்று இரந்து அவன் தாரை வார்த்துக் கொடுக்க, திரிவிக்கிரமனாகி நெடிது வளர்ந்து, பூமியையும் வானுலகையும் இரண்டடியாக அளந்து, மூன்றாவது அடிக்கு அவன் தலையில் காலை வைத்து அவனைத் பாதலத்தில் அழுத்தினான் என்பது புராணகதை.  நேமியொடு வலம்புரி பொறித்த (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச் சங்கு சக்கர குறிகள் உத்தம விலக்கணங்கள் என்ப.  இறைவனாகிய திருமாலின் கைகளிடத்தும் கால்களிடத்தும் இக்குறிகள் உள என்பர்.  நச்சினார்க்கினியர் உரை – ‘நேமியொடு வலம்புரி தாங்கு தடக்கை மா பொறித்த மால்’ எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, ‘சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளையுடைய மால்’ என்றும், ‘திருமார்பிடத்தே திருமகளை வாய்த்த மால்’ என்னும் உரை கூறுவார் நச்சினார்க்கினியர்.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  இலக்கணம்:  நன – அகலம் என பொருள் குறிக்கும் உரிச்சொல்.  வளைஇ – வளை என்பது வினையெச்சப் பொருள்பட வளைஇ என்று அளபெடுத்தது.  தட – உரிச்சொல், பெருமைப்பண்பு குறித்து நின்றது.  தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உறியியல் 22).  மாஅல் – இசைநிறை அளபெடை.  பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முரண்தொடை.

Meanings:   நனந்தலை – wide place, vast place, உலகம் – earth, வளைஇ – surrounded, protects, நேமியோடு – with wheel, discus, வலம்புரி – வலப்பக்கமாகச் சுற்றுக்கள் அமைந்த சங்கு,  right-twisted conch shell, பொறித்த – with the sign, மா – Thirumakal, Lakshmi, தாங்கு – embracing, bearing, தடக்கை – large hands, நீர் செல – as Mahabali Chakravarthi (Asura king) poured water, நிமிர்ந்த – raised, மாஅல் போல – like Thirumal, பாடு இமிழ் – loud sounding, பனிக்கடல் – cold ocean, பருகி – absorbed, drank, வலன் – with strength, on the right side, ஏர்பு – rose up, கோடு கொண்டு எழுந்த – rose up to the mountains, கொடுஞ் செலவு – going fast, எழிலி – clouds பெரும் பெயல் – heavy rains, பொழிந்து – poured, சிறு – slightly, புன் – painful, மாலை – evening

முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது,   10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச், (7-11)

Elderly Women Waited for a Good Omen

Elderly women went near the well protected
ancient town carrying rice paddy and mullai
flowers in their bowls, and prayed with their
palms pressed together, sprinkling newly opened,
fragrant mullai blossoms as swarming bees
hummed like yāl music, and waited for a good omen.

Notes:  மேற்கோள்:  நெடுநல்வாடை 43 – நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 – நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, விரிச்சி (11), நன்மொழி (17), வாய்ப்புள் (18) என்பன ஒரு பொருள் சொற்கள்.  விரிச்சி:  நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப.  இலக்கணம்:  தூஉய் – இன்னிசை அளபெடை.

Meanings:   அருங்கடி – heavy protection, மூதூர் – an ancient town, மருங்கில் – nearby, close to it, போகி – went, யாழ் இசை – yāl music, lute music, இன வண்டு – swarms of bees, ஆர்ப்ப – humming, நெல்லொடு – with rice paddy, நாழி கொண்ட – in measuring bowls, நறு –fragrant, வீ – flowers, முல்லை – jasmine, அரும்பு – buds, அவிழ் – opened, அலரி – blossomed flowers, தூஉய் – sprinkled, கைதொழுது – worshipping with their hands, பெருமுது – very old, பெண்டிர் – women, விரிச்சி நிற்ப – they waited for a good omen



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

முது பெண்டிர் ஆய்மகளின் நற்சொல் கேட்டலும்
தலைவியை ஆற்றுவித்தலும்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர,   15
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின்   20
பருவரல் எவ்வம் களை மாயோய், எனக்
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக், (12 – 23)

Elderly Women listened to the Omen and Consoled the Heroine

A young calf tied to a small rope was in
deep distress.  On seeing that, a herder
woman with arms clasped around her
shoulders said to the calves, “Your mothers
will come soon, nudged behind by herders
with rods with curved ends”.

The elderly women who heard that,
took that as a good omen and said to the
to the queen,
“We’ve heard very good words.  Your
husband will return with tributes from
his enemies, for sure.  His work has ended.
O dark woman!  Get rid of your sorrow”.

Confused, she ignored their constant
consolation, and pearl-like tears dropped
from her kohl-lined, flower-like eyes.

Notes:  கொடுங்கோல் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 – வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு  74, அகநானூறு 195  – வளைந்த கோல்,  அகநானூறு 17 – கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை – முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல்.  கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல்.  இனி வளைந்த கோல் எனினுமாம்.  கோவலன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல்.  தாயர் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாயர் என்று உயர்திணைப் பலர் பால் விகுதியேற்ற சொல்லிற்கேற்ப வருகுவர் எனப் பலர் பால் வினைமுற்றால் கூறப்பட்டது.  தாயர் என்னும் பன்மைக்கு ஏற்பவே கன்றுகளும் பலவென்க.  வாய்ப்புள் (18) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாய்ப்புள்ளாவது ஒருவன் ஒரு வினைமேற் புறப்படும் பொழுது அயலிலுள்ளார் பிறரொடு பேசும் பேச்சின்கண் தனக்கு நலம் விளைதற்குக் குறிப்பாகவாதல், வெளிப்படையானாதல் கூறினாற் போன்ற பொருளுடைய சொற்றொடர் அமைதல்.  இலக்கணம்:  நன்னர் நன்மொழி – ஒருபொருட் பன்மொழி.  ‘நர்’ விகுதிபெற்ற பண்புப்பெயர்.

Meanings:   சிறு தாம்பு – small rope, thin rope, தொடுத்த – tied, பசலைக் கன்றின் – young calf’s, உறு துயர் – sorrow that it attained, நோக்கி – on seeing that, ஆய் மகள் – a herder woman, நடுங்கு – trembling, சுவல் – shoulders, அசைத்த கையள் – her hands placed, கைய கொடுங்கோல் – with shepherd hooks in their hands, with harsh sticks, கோவலர் – cattle herders, பின் நின்று – standing in the back, உய்த்தர – pushing, இன்னே – now, வருகுவர் – they will come, தாயர் – your mothers (cows), என்போள் – the woman who said, நன்னர் நன் மொழி – very good words, கேட்டனம் – we heard, அதனால் – hence, நல்ல – good, நல்லோர் – good people, வாய்ப்புள் – good words, good omen, தெவ்வர் – enemies, முனை கவர்ந்து – seizing land from them, கொண்ட – what was took, திறையர் – he will return with tributes from enemies, வினை – (war) business, முடித்து – finishing, வருதல் – he will come, தலைவர் – husband, the king, வாய்வது – it is true, நீ – you, நின் –your, பருவரல் – confusing sorrow, affliction, எவ்வம் – sorrow, களை – remove it, மாயோய் – O dark colored woman, என – thus, காட்டவும் காட்டவும் – even after letting her know again and again, காணாள் – she ignored it, கலுழ் சிறந்து – with confusion, பூப்போல் – like flowers (blue waterlily – குவளை), உண்கண் – eyes with kohl, collyrium, புலம்பு முத்து – separate tear drops that are like pearls, உறைப்ப – secreting, dropping

பாசறை அமைத்தல்

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி,   25
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி. (24 -28)

Constructing the Military Camp

The army destroyed a gated fort built by hunters
and cleared jasmine bushes bearing flowers
fragrant from afar, and other green bushes,
in the huge thicket surrounded by forest streams.

In its place, they constructed a battle camp,
one as large as the ocean with loud waves, and
surrounded it with thorn fences for protection.

Notes:  படுநீர் (28) – நச்சினார்க்கினியர் உரை – ஒலிக்கும் நீர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உண்டாகின்ற நீர்.  இலக்கணம்:  பைம்புதல் – பண்புத்தொகை.  வளைஇ – வளை என்பது வினையெச்சப் பொருள்பட வளைஇ என்று அளபெடுத்தது.

Meanings:   கான்யாறு – forest stream, தழீஇய – surrounded (சொல்லிசை அளபெடை), அகல் – wide, நெடும் – huge, long, புறவில் – in the mullai land, in the forest with bushes and some trees, சேண் – far, நாறு – fragrant, பிடவமொடு – with wild jasmine, Randia malabarica, பைம் புதல் – small green bushes, எருக்கி – destroyed, வேட்டு – hunters, புழை – small gate, அருப்பம் – fort, மாட்டி – destroyed, காட்ட – in the forest, இடு முள் – dried thorn bushes that are placed, புரிசை – fort wall, ஏமுற – as protection, வளைஇ – surrounded, படுநீர் – loud water, புணரியின் – like the ocean, பரந்த – wide, பாடி – military camp

பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற   30
தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக்   35
கல்லா இளைஞர் கவளம் கைப்பக், (29 – 36)

Description of an Elephant in the Camp

The battle camp with frond roof was in a perfect street,
and in the front yard near the street junction was
a small-eyed guard elephant with sweet musth dripping
from its cheeks.
It refused to eat the bundles of tall sugarcane, rice
paddy from fields and licorice tied together, rubbed them
on its forehead and placed its trunk on its sharp-tipped
tusks.  Its young trainer held a forked rod and fed it
balls of rice with his hand, uttering words in a northern
language used to direct elephants, in which he had no
formal training.

Notes:  கவலை (31) – நச்சினார்க்கினியர் உரை – நாற்சந்தி.  வயல் விளை (33) – பொ. வே. சோமசுந்தரனார் – வயல் விளை கதிர் என மாறுக, நச்சினார்க்கினியர் – வயலிலே விளைந்த நெற்கதிர், வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் (35-36) – வடமொழியை அடியிலே கல்லாத இளைஞர் யானைப் பேச்சான வடமொழிகளைக் கற்று பலகாற் சொல்லி.  மலைபடுகடாம் – 326-327 – உரவுச் சினம் தணித்து பெரு வெளிற் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர்.  இலக்கணம்:  கவுள – குறிப்புப் பெயரெச்சம்.  யாத்த – பலவின்பாற்பெயர், கொண்டென – செய்தன என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  தேம்படு – தேம் தேன் என்றதன் திரிபு.

Meanings:   உவலை – leaves, dried leaves, கூரை – roof, ஒழுகிய தெருவில் – in an orderly street, கவலை – junction, முற்றம் – front yard, காவல் நின்ற – standing as protection, தேம்படு – musth oozing, கவுள – with cheeks, சிறு கண் யானை – a small-eyed elephant, ஓங்கு நிலை – grown tall, கரும்பொடு – with sugarcane, கதிர் – paddy spears, மிடைந்து – densely, closely, யாத்த – that were tied together, வயல்  விளை – raised in a field, இன்குளகு – sweet leaves, licorice, liquorice, உண்ணாது – not eating, நுதல் – forehead, துடைத்து – wiped, அயில் நுனை – sharp tip, மருப்பின் – on the tusks, தம் கையிடை கொண்டென – it placed on its trunk, கவை முள் – forked rod, கருவியின் – with an equipment, வடமொழி – northern language, பயிற்றி – uttering many times, used, கல்லா – untrained in northern languages,  இளைஞர் – a young man, கவளம் – rice balls, கைப்ப – he hand fed

பாசறையில் வீரர்களின் அரண்கள்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றிக்,
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப்   40
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணமாக, (37 -42)

Creating Rooms for Warriors in the Camp

Bows, of warriors who did not show their backs
running away from battles, were planted in the
ground and arrow quivers were hung on them,
and they appeared like the three staves bearing
the ritual clothes of Vaishnava ascetics washed
with red ochre.

In a tent with poles and ropes, soldiers planted
hand spears, their blades adorned with floral
art, and hung rows of shields on them.  The
curved bows provided the protection of a fort.

Notes:  முக்கோல் – (திரிதண்டம்) of Vaishnava ascetics.  Three wooden rods are tied together and carried by ascetics.  The three rods signify controlling ‘thoughts, words and deeds’.  முக்கோல் பகவர் (திரிதண்டி) –  ‘உள்ளம், மெய், நா’ அடக்கியவர்கள்.  கலித்தொகை 9 – உரை சான்ற முக்கோலும் நெறிப்பட சுவல் அசைஇ, கலித்தொகை 126 – முக்கோல் கொள் அந்தணர்.  பட்டினப்பாலை 78 – கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 – காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 – பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 – எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ.

Meanings:   கல் – red ochre (காவிக்கல்), தோய்த்து – dipped (in water with red ochre powder), உடுத்த – wearing, படிவம் – rituals, பார்ப்பான் – Brahmins, முக்கோல் – three wooden rods tied together, அசைநிலை – trait of placing, கடுப்ப – like (உவம உருபு), நல் போர் – good battle, ஓடா – not running away, வல் வில் – strong bow, தூணி – arrow holders, quivers, நாற்றி – hung, கூடம் – tent, குத்தி – stuck (in the ground), கயிறு வாங்கு – tied ropes around it, இருக்கை – the room, பூந்தலை – flower art work on the top part, beautiful top part, குந்தம் – hand spears, குத்தி – stuck, கிடுகு – shields, நிரைத்து – in a row, வாங்கு வில் – curved bows, அரணம் – fence, அரணமாக – as a fort



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 பாசறையில் மன்னனுக்குத் தனி இடம்

வேறு பல் பெரும்படை நாப்பண், வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு (43 – 44)

The King’s Private Room in the Camp

Amidst the different armies, a private chamber
was created for the king by planting a big pole and
creating sections using curtains.

Notes:  கண்டம் (44) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – ஆகுபெயரால், பல நிறத்தால் கூறுபட்ட திரையை உணர்த்திற்று.

Meanings:   வேறு – different, பல் – many, பெரும் படை – big army, நாப்பண் – in the middle, வேறு ஓர் – another place, நெடுங்காழ் – tall pole, tall pillar, கண்டம் கோலி – created sections, அகம் நேர்பு – arrangement

மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்

குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து,   45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, (45 – 49)

Women who Light the Lamps in the Camp

Women tied strong hilted, bright swords
that make nights appear as days, to their
breastcloths with many colors.  Hair cascaded
down their beautiful small backs and small
bangles adorned their forearms.

They poured oil from spouted containers into
the oil wells held by female figurines on their
hands, lit the tall wicks and tended them.

They lit the flames whenever they died down.

Notes:  விரவு (47) – நச்சினார்க்கினியர் உரை – விரவின நிறத்தையுடைய.  நெடுநல்வாடை 101-103 – யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய.  இலக்கணம்: கொளீஇ – சொல்லிசை அளபெடை.

Meanings:   குறுந்தொடி – small bangles, முன் கை – forearms, கூந்தல் அம் சிறுபுறத்து – with hair on their beautiful small backs, with hair on their lovely napes, இரவு பகல் செய்யும் – they make nights appear like days, திண் பிடி – strong handles, ஒள்வாள் – bright swords, விரவு – together, mixed, வரி கச்சின் — on the clothing tied around their upper body (வரிந்து கட்டின கச்சினை), பூண்ட – wearing, மங்கையர் – women, நெய் உமிழ் –  oil pouring, சுரையர் – those using the oil pouring spouted bowls, நெடுந்திரி – long wicks, கொளீஇ – they lit, கை அமை விளக்கம் – lamps with oil wells in hands (பாவை விளக்கு), நந்துதொறும் மாட்ட – they lit the flames whenever they died down (அவியுந்தோறும்)

பாசறையில் காவலாளர்

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்,   50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்குத்,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ, (50 -54)

Description of a Guard in the Camp

Sounds from bright bells with long tongues
ebbed, and the time is midnight. A turbaned,
sleepy old guard wearing a cloak, who protects
responsibly, sways like wild jasmine vines
and small bushes attacked by wind and rain.

Notes:  நிழத்திய (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுணுகுதல், பேரொலியாகாமல் சிறிது ஒலிக்க என்றவாறு.  தொல்காப்பியத்தைக் குறிப்பிடுகின்றார் – ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல் உரி 32).  நச்சினார்க்கினியர் உரை – எறிந்து விட்ட, பாசறையில் படைஞர் இனித் துயில் கொள்க என்பதன் பொருட்டு மணி ஒலிப்பர் என்பது அவர் கருத்து.  இலக்கணம்:  படாஅர் – இசை நிறை அளபெடை.  ஆங்கு – உவம உருபு.  அசைவந்த – பெயரெச்சம்.

Meanings:   நெடு நா – long tongues, ஒண் மணி – bright bells, நிழத்திய – when sounds went down, நடுநாள் – midnight, அதிரல் – wild jasmine, பூத்த – flowering, ஆடுகொடி – swaying vines, படாஅர் – small plants, சிதர்வரல் – comes with water droplets, அசை வளிக்கு – for the moving wind, அசைவந்த ஆங்கு – like how they move, துகில் முடித்து – cloth tied around the head, போர்த்த – covered, cloaked around his body, தூங்கல் – swaying, ஓங்கு நடை – good behavior, dependable, பெருமூதாளர் – a very old man, ஏமம் – protection, சூழ – surrounded

நாழிகைக் கணக்கர்

பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்,   55
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி,
“எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து” என்று இசைப்ப (55 – 58)

The Time-keepers in the Camp

The skilled, unfailing time keepers worship the
king with folded hands, sing his praises, and
announce, “O king who goes to battle to win the
earth surrounded by splashing waters, your
water clock with little water tells us this time”.

Notes:  நீர்க் கடிகாரம் – முல்லைப்பாட்டு 55 – குறு நீர்க் கன்னல், அகநானூறு 43 – குறு நீர்க் கன்னல்.  இலக்கணம்:  எறிநீர் கடலுக்கு, வினைத்தொகை அன்மொழி.

Meanings:   பொழுது அளந்து – calculating time, அறியும் – knowing, பொய்யா மாக்கள் – unfailing men, தொழுது – worships, காண் கையர் – men with hands that can be seen (கூப்பிய கையினர்), தோன்ற வாழ்த்தி – praised greatly, எறிநீர் – ocean with splashing waves, வையகம் – earth, வெலீஇய – to win (சொல்லிசை அளபெடை), செல்வோய் – O one who goes, நின் – your, குறு நீர் கன்னல் – bowl with little water (water clock), இனைத்து – what time it is, என்று இசைப்ப – they utter

மன்னன் இருப்பிடத்தில் யவனர்

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க, வெருவரும் தோற்றத்து,   60
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட, புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி………….. (59 – 63)

The Ionians (Greeks) in the Camp

Harsh Yavanars with fierce appearances, wearing
bulging shirts tightly girdled by horse reins on their
strong bodies, decorate the esteemed king’s quarters
with tiger pendants hung on chains.  The place is well
lit with beautiful, gem-like, bright lamps.

Notes:  திரு மணி விளக்கம் (63) – மாணிக்கமாகிய விளக்கு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாணிக்க மணியாகிய விளக்கு, பளிங்கு விளக்கு என்பாருமுளர்.

Meanings:   மத்திகை – rein, வளைஇய – tied around, circled (சொல்லிசை அளபெடை), மறிந்து – folded, வீங்கு – swollen, செறிவுடை – tightly tied, மெய்ப் பை – body shirt, புக்க – wearing, வெருவரும் – scary, fierce, தோற்றத்து – with the appearance, வலி புணர் – with strength, யாக்கை – bodies, வன்கண் – harsh, யவனர் – Ionians (Greeks), புலித்தொடர் – tiger pendant chains, விட்ட – hung, புனை – decorated, மாண் – proud, esteemed, நல் இல் – fine home, fine quarters, King’s place, திரு மணி விளக்கம் காட்டி – lit beautiful gem-like bright lamps



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்

…………திண் ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்   65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, (63 -66)

The King’s Private Quarters

Strong ropes and curtains have created two rooms
in the bed chamber.
A Milecher guard wearing a shirt, who is unable to
speak, stands nearby.

Notes:  மிலேச்சர் (66) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துருக்கர்.  இவர் பெலிசித்தானத்தினின்றும் வந்தவர் என்றும் பெலூச்சர் என்பதே மிலேச்சர் எனத் திரிந்து வழங்கிற்று என்றும் கூறுப.  இதனால் பண்டைத் தமிழ் மன்னர்கள் யவனர் மிலேச்சர்முதலிய பிற நாட்டினரையும் தம் அரண்மனை அகப்பணி செய்தற்கு அமைத்துக் கொண்டிருந்தமை அறிக.

Meanings:   திண் ஞாண் – strong ropes, எழினி – curtains, வாங்கிய – circled, ஈரறை – two rooms, பள்ளியுள் – in the bedroom, உடம்பின் – with his body, உரைக்கும் – informs, உரையா நாவின் – with a tongue that is unable to speak, படம் புகு – shirt wearing, மிலேச்சர் – Turks or those from Baluchistan, உழையர் ஆக – as one who is nearby

பாசறையில் மன்னனின் மனநிலை

மண்டு அமர் நசையொடு, கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக் கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத்,   70
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்திச்
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒருகை   75
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து, (67 – 76)

The King in his Bedroom

The king who loves battles is unable to sleep, as he
reflects the battle events in his mind, his braceleted
hand resting on his head and the other resting on
the bed.

He thinks about his male elephants in pain,
wounded by piercing spears that made them forget
their females, their fat trunks cut off by lances,
as they writhed like chopped snakes.

He thinks about his loyal soldiers who gave up their
lives after attaining victory befitting the honey-flowing
vanji garlands they wore.

He thinks about his sad horses, hurt by sharp-tipped
arrows that pierced the bridles, and how they tilted
their ears in pain, unable to eat.

Notes:  கண்ணி நல் வலம் திருத்தி (71) – நச்சினார்க்கினியர் உரை – வஞ்சி மாலைக்கு நன்றாகிய வெற்றியை உண்டாக்கி.  பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய (70) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரூஉக்கை பாம்பு பதைப்பன்ன துமிய என மாறுக.  தோல் (72) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – தோலால் இயன்ற பக்கரைக்கு ஆகுபெயர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோல் பரிசை.  இலக்கணம்:  பெறாஅது – இசை நிறை அளபெடை, பரூஉ – இன்னிசை அளபெடை, தேம்பாய் –  தேம் தேன் என்றதன் திரிபு.

Meanings:   மண்டு – abundant, அமர் – battle, நசையொடு – with desire, கண்படை – sleep, பெறாஅது – not obtaining , எடுத்து – took, எறி – thrown, எஃகம் பாய்தலின் – since spears were thrust, புண் கூர்ந்து – lots of wounds, பிடி கணம் – female elephant herds, மறந்த – forgot, வேழம் – male elephants, வேழத்து – of elephants, பாம்பு பதைப்பு அன்ன – like snakes writhing in pain, பரூஉக் கை – fat trunks, துமிய – got cut, தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்தி – creating perfect victory befitting their vanji flower garlands with honey, சோறு – obligations (செஞ்சோற்றுக் கடன்), வாய்த்து – performed without fail, ஒழிந்தோர் உள்ளியும் – thinking about those who died, தோல் – leather saddle, leather bridle that covers part of the face, துமிபு – cut, வை – sharp, நுனை – tips, பகழி – arrows, மூழ்கலின் – since they sunk in, செவி சாய்த்து – tilted their ears, உண்ணாது – not eating, உயங்கும் – are sad, மா – horses, சிந்தித்தும் – thinking about them, ஒரு கை பள்ளி ஒற்றி – placed one hand on the bed, ஒருகை – one hand, முடியொடு – with his crown, with his head hair, கடகம் – கங்கணம், bracelet, சேர்த்தி – joined, placed, நெடிது நினைந்து – he thought for a long time

வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்

பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல்,
நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்த பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் …. …. …. …. …. (77 -80)

King after Victory

After crushing enemy armies with the weapons
he held in his strong hands and winning the battle
befitting his bright vanji garland, and making his
enemy king tremble when his victory drums roared,
the satisfied king is able to sleep sweetly in the camp.

Notesபகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல் (77) – நச்சினார்க்கினியர் உரை – பகைவரைக் கருதி வைத்த வாளைப் பிடித்த வலியினையுடைய கையாலே வெட்டி வென்று.

Meanings:   பகைவர் சுட்டிய – considering his enemies, படை – army, weapons, கொள் – took, rode, நோன் – strong, விரல் – fingers, நகை தாழ்க் கண்ணி – bright vanji flower garland, நல் வலம் திருத்தி – perfect victory achieved, அரசு இருந்து பனிக்கும் – making the enemy king tremble, முரசு – victory drums, முழங்கும் – roar, பாசறை – military camp, இன் துயில் – sweet sleep, வதியுநன் – the one who resides, the one who is there

தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை

………காணாள், துயர் உழந்து,
நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைதபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின …. …. …. ….(80 – 89)

The Queen who is in Pain due to Separation

Unable to see her husband, she is sad.
Trying to calm her painful heart, in privacy,
she thinks about him for a long time.

She’s in a confused state.  She fixes her
slipping bangles and sighs with loud noises.

She trembles like a pea**** struck by an arrow,
in her fine seven-storied mansion lit brightly
by female figurine oil lamps.

She lies down listening to the sweet sounds
of rainwater that gushes down the curved eaves,
crashing on the ground like big waterfalls.
The sounds fill her beautiful ears.

Notes:  அஞ்செவி (89) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – அழகிய காது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகஞ் செவி, நச்சினார்க்கினியர் உரை – அகஞ் செவி.  இலக்கணம்:  பரூஉ – இன்னிசை அளபெடை.

Meanings:   காணாள் – unable to see him, துயர் உழந்து – with sorrow, நெஞ்சு ஆற்றுப்படுத்த – to calm her heart that went to him, நிறைதபு – fullness ruined, புலம்பொடு – with loneliness, with distress, நீடு நினைந்து – thought for a long time, தேற்றியும் – consoling, ஓடு வளை – slipping bangles, திருத்தியும் – fixing them, மையல் கொண்டும் – being in a confused state, ஒய்யென உயிர்த்தும் – taking rapid deep breaths, sighing rapidly ஒய்யென, ஏ – arrow, உறு – stuck, மஞ்ஞையின் – like a pea****, நடுங்கி – trembled, இழை நெகிழ்ந்து – jewels slipped, பாவை விளக்கில் – in a female figurine lamp with the cupped hands as an oil well, பரூஉச்சுடர் – big flame, அழல – burning, இடம் சிறந்து – fine place, உயரிய எழு நிலை – tall seven storied, மாடத்து – in the mansion, முடங்கு – curved, இறை – eaves, சொரிதரும் – falling down, மாத்திரள் அருவி – big full waterfalls, இன் – sweet, பல் – many, இமிழ் இசை – roaring music, ஓர்ப்பனள் – she listened, கிடந்தோள் – she was lying down, அம் செவி நிறைய ஆலின – the sounds filled her beautiful ears

போரில் வெற்றி பெற்றுத் தலைவன் வருதல்

………………….வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந் தானையொடு   90
விசயம் வெல் கொடி உயரி
வயிரும் வளையும் ஆர்ப்ப …. …. ….(89 – 92)

The King’s Return from the Battlefield

After winning the war and seizing desired enemy
land, the king returns with his huge army, his
victory banners raised high, as vayir horns and conch
shells are blown together fitting his victory
celebrations.

Meanings:   வென்று – attaining victory, பிறர் – enemies, வேண்டு புலம் – desired land, land that is desired by enemy kings, கவர்ந்த – seized, ஈண்டு – here, பெருந்தானையொடு – with a huge army, விசயம் – victory, வெல் கொடி – victory flag, உயரி – raised, வலன் – victory, with strength, நேர்பு – suiting, வயிரும் – blowing vayir horns, வளையும் – conch shells, ஆர்ப்ப –as they roar

கார்ப்பருவத்தில் முல்லை நிலம்

………………………………………….அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில், (92 – 100)

Mullai Land in the Rainy Season

In the mullai land’s fine sandy soil, flowers
of many colors have bloomed; kāyā trees
with dense leaves have put out dark flowers
that are like kohl; kondrai trees with tender
shoots and flower clusters have dropped
gold-like flowers on the ground; pointed
kōdal buds have opened their beautiful
finger-like petals and petal-filled thōndri
flowers have blossomed like blood.

The forest with its red earth and wide paths
flourishes in the rains from unfailing skies,
heavy millet grain clusters are bent, and stags
with twisted antlers romp around with their
delicate does,
in this monsoon month when white clouds
float in the sky and come down as rain.

Notes:  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.

Meanings:   அயிர – on fine sand, செறி இலை – dense leaves, thick leaves, காயா – Ironwood Tree Flower, Memecylon edule Roxb, அஞ்சனம் – like ink, மலர – flowering, முறி – tender, இணர் – clusters, bunches, கொன்றை – சரக்கொன்றை, Laburnum, Golden Shower Tree, Cassia sophera, நன் பொன் – fine gold, கால – dropping, கோடல் – வெண்காந்தள், white malabar glory lily, Gloriosa superba, குவி – pointed, முகை – buds, அங்கை – beautiful hands, அவிழ – bloom, open, தோடு – petals, ஆர் – filled, தோன்றி – செங்காந்தள், red malabar lilies, Gloriosa superba, குருதி – red, blood-like, பூப்ப – bloom, கானம் – forest, நந்திய – flourish, செந்நிலம் – red earth, பெருவழி – wide path, வானம் – sky, வாய்த்த – unfailing (rains), வாங்கு – bent (with the weight of the grains), கதிர் –  grain spears, வரகின் – of millet, திரி – twisted, மருப்பு – antlers, இரலையொடு – stags, மடமான் – delicate does, உகள – romp, frolic, எதிர் செல் – going the other side, வெண்மழை பொழியும் – white clouds that fall as rain, திங்களில் – in the month

வந்து கொண்டிருக்கிறது அரசனின் தேர்!

முதிர் காய் வள்ளியங்காடு பிறக்கொழியத்,
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (101 – 103)

The King’s Chariot is on its Way Home

After finishing his battle duties splendidly,
the king rides his tall, fast, horse-driven chariot,
goading his horses, leaving behind the forest
with valli vines filled with mature yams.

Notes:  இலக்கணம்: மாவே – ஏகாரம் அசை நிலை.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:   முதிர் – ripe, காய் – vegetable (yam), வள்ளியங்காடு – forest with valli yam, sweet-potato creepers, பிறக்கு – behind, ஒழிய – lost, துனை – fast, பரி – horse, துரக்கும் – goads, செலவினர் – one who is riding, வினை – battle duties, விளங்கு – splendid, நெடுந்தேர் – tall chariot, பூண்ட மாவே – yoked horses, tied horses



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard